ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

Top posting users this week
ayyasamy ram
நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! Poll_c10நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! Poll_m10நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! Poll_c10 
heezulia
நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! Poll_c10நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! Poll_m10நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! Poll_c10 
E KUMARAN
நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! Poll_c10நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! Poll_m10நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! Poll_c10 
mohamed nizamudeen
நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! Poll_c10நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! Poll_m10நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு!

4 posters

Go down

நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! Empty நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு!

Post by Powenraj Sun Nov 30, 2014 9:07 am

கங்கைக்கு நிகரான புண்ணிய நதியாக கருதப்படும் காவிரியும், வற்றாத ஜீவ நதியாக தென் தமிழகத்தை வளம் பெறச் செய்யும் தாமிரபரணியும் தமிழக மக்களின் வாழ்வியலில் கலந்து பாய்ந்தோடுகின்றன.

மக்களின் குடிநீர் தேவையையும், மிக நீண்ட பரப்பளவிலான விவசாய நிலங்களை செழிப்பாக்கும் இந்த இரண்டு நதிகளை மட்டுமல்லாமல் குசஸ்தலை, சுவர்ண கங்கை என்றழைக்கப்படும் பொன்முகலியாறு போன்ற நதிகளையும் உருவாக்கியவர் அகத்திய முனிவர் என்று இலக்கியம் மற்றும் புராணங்கள் கூறுகின்றன.

இந்த சான்றுகள் ஒவ்வொன்றின் பின்னணியிலும் ஒரு கதை கூறப்படுகிறது. ஒவ்வொரு கதைக்கு பின்னும் பல சுவாரஸ்யங்கள் அடங்கி இருக்கின்றன.

கவேரர் என்ற முனிவர் தனக்கு ஒரு பெண் குழந்தை வேண்டுமென்று பிரம்மனிடம் வேண்டி தவமிருந்தாராம். அவரது தவத்தை ஏற்ற பிரம்மன், கவேர முனிவரின் முன் தோன்றி அவர் வேண்டியபடியே ஒரு பெண் குழந்தையை அருளினாராம். பிறகு "முன்பு நான் தவம் செய்த போது விஷ்ணு பகவான் அருளால் எனக்கு புத்திரியாக இவள் தோன்றினால். பெண் உருவம், நதி உருவம் என இரண்டு உருவங்கள் கொண்ட இவளை உனக்கு வரமாக தருகிறேன்" என்று கூறி மறைந்தாராம். முனிவர் அவளுக்கு லோபமுத்திரை என்று பெயர் சூட்டி வளர்த்தார்.

சிவ பக்தையாக வளர்ந்த லோபமுத்திரை, சிவனை நோக்கித் தவமிருந்தாள். அவளது தவத்தால் மகிழ்ந்த சிவபெருமான், 'நீ வேண்டும் வரத்தை கேள்” என்றாராம். தான் நதி உருவமாகி பூமியை வளப்படுத்த வேண்டும் என்று தன் ஆசையை அவள் கூறினாள். 'கங்கைக்கு இணையான புனிதமுடையவளாய் காவேரி என்று நீ அழைக்கப்படுவாய். முனிவர்களில் சிறந்தவராகிய அகத்தியரை திருமணம் செய்து வாழ்வாயாக. உனக்கான காலம் வரும் போது நதி வடிவம் எடுப்பாய்' என்று கூறி மறைந்தார். அவர் கூறியபடியே அகத்தியரும் லோபமுத்திரையும் திருமணம் செய்து வாழ்ந்தனர். அகத்தியர் லோபமுத்திரையின் நதி வடிவத்தை தன் கமண்டலத்தில் வசிக்கும்படி செய்தார்.

ஒரு முறை சையமலை என்று அழைக்கப்பட்ட குடகுமலையில் இருவரும் பல நாட்கள் தங்கி சிவ பூசை செய்து மகிழ்ந்தனர். ஒரு நாள் அங்கிருந்த நெல்லி மரத்தடியில் தன் கமண்டலத்தை வைத்துவிட்டு ஆழ்ந்த தியானத்தில் ஈடுபட்டார் அகத்தியர். அப்போது சிவனின் ஆணைப்படி, லோபமுத்திரை காவேரியாக மாறி நதி வடிவம் எடுக்க வேண்டிய காலம் வந்துவிட்டதால் தேவர்கள் அனைவரும் விநாயகரிடம் முறையிட்டனர்.

விநாயகர் காகமாக மாறி, கமண்டலத்தை கவிழ்த்து காவிரியை பெருக்கெடுக்கச் செய்தார். பின் கண் விழித்த அகத்தியர் நடந்ததை உணர்ந்து வருந்தினார். பின் அனைத்தும் இறைவனின் திருவருள் படியே நடைபெறுகிறது என்று உணர்ந்து, காவிரிக்கு வழிகாட்டியவாறு நடந்தார். அவர் நடந்த சென்று பாதைகளில்தான் இன்றைக்கும் காவேரி பாய்கிறது, என்று புராணங்கள் கூறுகின்றன. ஆடி பதினெட்டம் பெருக்கன்று ,காவேரி பெருகி வருவதால் , மக்கள் அன்று காவேரியை சிறப்பாக பூஜித்து மகிழ்கின்றனர்.

அகத்தியர் தந்த மற்றோர் ஆறு தாமிரபரணி. கங்கையின் தங்கை என்று போற்றப்படும் இவள் ,அகத்தியரை வேண்டி அவரது கமண்டலத்தில் தவமிருந்தாள். அப்போது பாண்டிய மன்னன் பஞ்சத்தில் வாடிய தன் நாட்டை வளப்படுத்தமாறு அகத்தியரை வேண்டினான். அகத்தியர் தன் கமண்டலத்தை கவிழ்த்து தமிரபரணியை பாண்டிய நாட்டை வளப்படுத்துமாறு கூறினார். அவள் பொதிகை மலையில் உருவாகி, பல மலைகளைக் கடந்து பாபநாசத்தில் அருவியாக மாறி பாண்டிய நாட்டை வளப்படுத்தியபின், வங்கக் கடலில் கலந்தாள். அகத்தியர் வாழ்ந்ததாகக் கூறப்படும் இந்த பொதிகை மலையானது, மூலிகைகள் நிரம்பப் பெற்றது. இதன் வழியே தாமிரபரணி உருவாகி பாய்வதால், தாமிரபரணி தண்ணீருக்கு மருத்துவ குணம் உள்ளதாக கூறப்படுகிறது.

இதேபோல் ஆந்திர - தமிழக எல்லையை ஒட்டி ஓடும் குசஸ்தலை ஆற்றையும் உருவாக்கியவர், அகத்தியர் தான். இந்த நதிக் கரை நெடுக 108 சிவலிங்கங்களை அமைத்து பூஜித்துள்ளார். பெரும்பாலும் மலைகளை வலம் வந்து தியானத்தில் ஈடுபட்டவர் அகத்தியர். ஆகையால் அவர் மருத்துவத்திலும் சிறந்து விளங்கியவராவார். வியப்பூட்டும் இந்த புராணத் தகவல்களின் மூலம் ஆன்மிகமும் இயற்கையும் கலந்த வாழ்வு நம் முன்னோரின் வாழ்வு என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.

அறிந்து கொண்டால் மட்டுமில்லாது அவர்கள் அமைத்த பாதையை பின்பற்றி நடந்தால் நல்வாழ்வை அடையலாம்.

நன்றி:சக்திவிகடன்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! Empty Re: நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு!

Post by Dr.S.Soundarapandian Sun Nov 30, 2014 9:35 pm

அகத்தியரைப்பற்றி எனது புராண ஆய்வுகளில் தந்துள்ளேன்; பவன்ராஜுக்கு அது உதவலாம் !


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! Empty Re: நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு!

Post by ayyasamy ram Mon Dec 01, 2014 4:58 am

நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! 3838410834 நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! 103459460
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84912
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! Empty Re: நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு!

Post by T.N.Balasubramanian Mon Dec 01, 2014 6:19 am

நல்ல அரிய தகவல்கள் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு! Empty Re: நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum