புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறந்த பின்னும் நாம் உடல்  பயன்பட..... Poll_c10இறந்த பின்னும் நாம் உடல்  பயன்பட..... Poll_m10இறந்த பின்னும் நாம் உடல்  பயன்பட..... Poll_c10 
30 Posts - 86%
வேல்முருகன் காசி
இறந்த பின்னும் நாம் உடல்  பயன்பட..... Poll_c10இறந்த பின்னும் நாம் உடல்  பயன்பட..... Poll_m10இறந்த பின்னும் நாம் உடல்  பயன்பட..... Poll_c10 
2 Posts - 6%
heezulia
இறந்த பின்னும் நாம் உடல்  பயன்பட..... Poll_c10இறந்த பின்னும் நாம் உடல்  பயன்பட..... Poll_m10இறந்த பின்னும் நாம் உடல்  பயன்பட..... Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
இறந்த பின்னும் நாம் உடல்  பயன்பட..... Poll_c10இறந்த பின்னும் நாம் உடல்  பயன்பட..... Poll_m10இறந்த பின்னும் நாம் உடல்  பயன்பட..... Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

இறந்த பின்னும் நாம் உடல் பயன்பட.....


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Thu Nov 27, 2014 7:49 pm

சில வருடங்களுக்கு முன்பு, நண்பர்களின் உதவியோடு மருத்துவக் கல்லூரிக்கு சென்று, தன் உடலை தானமாக எழுதிக் கொடுத்துவிட்டு வந்தார் ஒரு பெரியவர். இந்த விஷயம் அவரது வீட்டில் யாருக்கும் தெரியாது. சமீபத்தில் உடல்நலம் பாதித்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கோமா நிலையில் நினைவு திரும்பாமலேயே இறந்துபோனார். அவரது இறப்பைக் கேள்விப்பட்டு நண்பர்கள், அவரது உறவினர்களுக்குப் பெரியவர் விரும்பி செய்த உடல் தானத்தைப் பற்றி எடுத்துச் சொல்ல, மருத்துவமனைக்கு தகவல் போனது. மருத்துவக் குழுவினர் ஆம்புலன்ஸுடன் அந்த வீட்டுக்கு விரைந்தனர்.

முறைப்படி அந்த பெரியவருக்கு செய்ய வேண்டிய சடங்குகள் ஒவ்வொன்றாக முடியும் வரை பொறுமையோடு காத்திருந்தது அந்தக் குழு. எல்லாம் முடிந்து, உடல் மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படாமல், ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டது. நெகிழவைத்த நிஜ சம்பவம் இது.

மண்ணுக்குப் போகும் உடல் மருத்துவத்துக்குப் பயன்படட்டுமே என்று நினைத்தால், மரணத்தையும் வெல்லலாம். ''உடல் தானம் பற்றி விழிப்புஉணர்வு மக்களிடம் பரவலாக இருந்து வருகிறது என்பதே வரவேற்கத்தக்க விஷயம்தான். இந்தியாவில், அதிலும் தமிழகத்தில் உடல் தானம் செய்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. உடல் தானம் பற்றி விவரங்கள் தேவைப்படுபவர்கள் எப்போது வேண்டுமானாலும், மருத்துவக் கல்லூரியை அணுகி ஆலோசனை பெறலாம்' என்கிறார் சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் டீன் டாக்டர் அழ.மீனாட்சி சுந்தரம்.

உடல் தானம்?

இறந்த பின், உடலை மருத்துவக் கல்லூரியின் மாணவர்களின் படிப்புக்காகவும், மருத்துவ ஆராய்ச்சிக்காகவும் பயன்படும் வகையில், தானமாகக் கொடுப்பதுதான் உடல் தானம். 18 வயது நிரம்பிய யார் வேண்டுமானாலும் உடல் தானம் செய்ய உரிமை உண்டு. நம்முடைய உடல் இறந்த பிறகு வெறுமனே மண்ணுக்குள் போவதைவிட மருத்துவ ஆராய்ச்சிக்குப் பயன்படட்டும் என்கிற எண்ணம் இருக்க வேண்டும்.

உடல் தானம் யாரெல்லாம் செய்யக்கூடாது?

எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு இறந்தவரின் உடலைத் தானமாகப் பெற அனுமதி இல்லை. திரவங்களின் வழியாக, அதுவும் முக்கியமாக உடம்பில் உள்ள திரவங்களின் வழியாக பரவக்கூடிய வைரஸ் தொற்றுநோய் உள்ளவர்கள், தொற்று நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் விபத்தில் இறந்தவர்கள், தற்கொலை செய்துகொண்டவர்கள் உடலை தானமாகப் பெறுவது கிடையாது. அதிலும், உடல் தானத்தில் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய விஷயமே, உடல், போஸ்ட்மார்ட்டம் செய்யப்பட்டோ அல்லது சிதிலமடைந்தோ இருக்கக் கூடாது.

உடல் தானம் செய்ய விதிமுறைகள் என்ன?

உடல் தானம் செய்ய நினைக்கும் ஒருவர், எந்த மருத்துவக் கல்லூரிக்கு வேண்டுமானாலும், தன் உடலை தானமாக எழுதித் தரலாம். அதில், குறிப்பிட்ட மருத்துவமனைக்குதான் தர வேண்டும் என்ற எந்தக் கட்டாயமும் இல்லை. ஒருவர் உயிரோடு இருக்கும்போதே உடல் தானம் செய்ய நினைத்தால், அவர் முதலில், தன் விருப்பத்துக்கான படிவத்தை நிரப்பி, ஒரு நோட்டரி பப்ளிக்கிடம் கையெழுத்து பெற்றிருக்க வேண்டும். மேலும், அதில் நிச்சயம் சட்டப்பூர்வமான வாரிசுகள் கையெழுத்திட்டிருக்க வேண்டும். இவற்றை முழுமையாகச் செய்த பின் அருகில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை முதல்வரிடம் தர வேண்டும். உடல் தானம் செய்பவருக்கு அடையாள அட்டை வழங்கப்படும்.

உடல் தானத்துக்கு சம்மதம் தெரிவித்த ஒருவர் இறந்துபோனால், 'இந்த இறப்பு இயற்கையான காரணத்தினால் ஏற்பட்டது’ என்று ஒரு மருத்துவரின் சான்றிதழ் பெறப்பட்டிருக்க வேண்டும். அதன் பிறகு அவரது உறவினர்களோ அல்லது சட்டப்பூர்வமான வாரிசுகளோ, உடனே அருகில் உள்ள மருத்துவக் கல்லூரியின் உடற்கூறியல் பேராசிரியரிடம் (Anatomy Professor) தெரிவிக்க வேண்டும். பிறகு, அந்த உடல் மருத்துவக் கல்லூரிக்கு எடுத்துச் செல்லப்படும்.

இந்த இடத்தில், சட்டப்பூர்வமான வாரிசுகள் 'இறந்த உடலை மருத்துவக் கல்லூரிக்கு கொடுக்க முடியாது’ என்று சொன்னால், ஒன்றுமே செய்ய முடியாது. ஆகவே இந்த உடல் தான விஷயத்தில் சட்டப்பூர்வமான வாரிசுகளுக்கு அதிக ஆர்வம் இருக்க வேண்டும். இறந்தவுடன் அவர்கள் தெரிவித்தால்தான், மருத்துவக் கல்லூரிக்கு உடல் சென்று சேரும். அதன் பிறகுதான், அந்த உடலை வைத்து படிப்பையும் ஆய்வையும் தொடர முடியும்.

இறந்த உடலை வைத்து என்ன ஆய்வு செய்வார்கள்?

தானமாக பெறப்பட்ட உடலானது மருத்துவக் கல்லூரி மாணவர்களின் படிப்பு மற்றும் ஆராய்ச்சிக்குப் பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு ஆராய்ச்சிக்குப் பயன்படுத்துவதற்கு முன்பு அந்த உடலின் ரத்த நாளங்களுக்குள் ரசாயனங்கள் செலுத்தப்படும். அவ்வாறு செலுத்திய ரசாயனம் உடலில் சென்று உடல் விரைப்பாக இருக்க உதவுகிறது. இதற்கு எம்பால்மிங் (Embalming) என்று பெயர். இந்த நிலைக்கு வந்த உடல் ஒரு வருடம் வரை கெடாமல் இருக்கும். கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்கு, அந்த உடலை வைத்து உடற்கூறு அமைப்பு, உடல் உறுப்புகளின் அமைவிடம் போன்றவற்றை மருத்துவ மாணவர்கள் கற்றுக்கொள்ளலாம். அதே வேளையில், மருத்துவ மாணவர்களுக்கு இறந்த உடலைப் பார்ப்பதால் ஏற்படும் பயம் போகவும் காரணமாக இருக்கிறது. ஆபரேஷனும் மருத்துவமும் உண்மையாகவே செய்ய வேண்டும் என்பதால்தான் மனிதனின் உடலை வைத்து இந்தப் பயிற்சி.

இறந்தவர்களின் உடல் மூலம் ஒரு புதிய விஷயம் கண்டுபிடிக்கப்பட்டால், அது மருத்துவ உலகுக்கே சாதனையான விஷயம். மனிதனின் இறப்புக்குப் பிறகும், புதுப்புது நோய்களின் பிடியிலிருந்து மீட்டு, காப்பாற்றவைப்பதும் அவர்களது உடலே!

உடலுக்கு இல்லை உரிமை!

தானமாகக் கொடுக்கப்பட்ட உடலை உறவினர்கள் வந்து மீ்ண்டும் பார்க்கவோ அல்லது உரிமை கொண்டாடவோ முடியாது.

உடல் தானத்துக்கு எழுதிக் கொடுத்த நபர், வேறு ஓர் ஊரில் இருக்கும்போது இறக்க நேரிட்டால், அருகில் உள்ள மருத்துவக் கல்லூரியின் உடற்கூறியல் பேராசிரியரை அணுகி, தகவல் தரலாம். எழுதிக் கொடுத்த இடத்தில் மட்டும்தான் தர வேண்டும் என்கிற எந்த நிபந்தனையும் இல்லை.

உடல் தானத்தின்போது உறவினர்களோ அல்லது சட்டப்படி வாரிசுகளோ உடலைத் தர மறுக்கிற நேரத்தில், உடலை தானமாகப் பெறுவதில் சிக்கல் ஏற்படலாம்.

இயற்கைக்கு மாறாக ஒருவர் தற்கொலை செய்துகொண்டாலோ அல்லது விபத்தினால் இறந்தாலோ, அவர்கள் உடலை தானமாகக் கொடுக்க முடியாது.

உடல் தானம், மானுட வாழ்வுக்குப் பிரதானம்!

நன்றி:டாக்டர் விகடன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக