ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈழத்தில் கண்ட கதை சொல்லும் காங்கிரஸ் எம்.பி, கொன்ற கதை சொல்லாதது ஏன்?

Go down

ஈழத்தில் கண்ட கதை சொல்லும் காங்கிரஸ் எம்.பி, கொன்ற கதை சொல்லாதது ஏன்? Empty ஈழத்தில் கண்ட கதை சொல்லும் காங்கிரஸ் எம்.பி, கொன்ற கதை சொல்லாதது ஏன்?

Post by aarul Sun Nov 08, 2009 7:41 am



ஈழத்தில் கண்ட கதை சொல்லும் காங்கிரஸ் எம்.பி, கொன்ற கதை சொல்லாதது ஏன்? 502589 ஈழத்தில் கண்ட கதை சொல்லும் காங்கிரஸ் எம்.பி, கொன்ற கதை சொல்லாதது ஏன்? 755837 ஈழத்தில் கண்ட கதை சொல்லும் காங்கிரஸ் எம்.பி, கொன்ற கதை சொல்லாதது ஏன்? 56667








var addthis_pub = 'kandsgroup'; 



ஈழத்தில் கண்ட கதை சொல்லும் காங்கிரஸ் எம்.பி, கொன்ற கதை சொல்லாதது ஏன்? Pattiniஅன்மையில்
தமிழகத்திலிருந்து எம்.பிக்கள் குழு இலங்கை சென்று வந்தது தெரிந்ததே.
இக்குழு இலங்கை சென்று வந்தபின், அங்கு தாங்கள் என்ன கண்டோம் என்பது
குறித்து ஒருவர் பத்திரிகையில் கதை எழுதுகின்றார். இன்னொருவர்
பத்திரிகையாளர்களுக்கு கதை சொல்கின்றார்.

இலங்கை முகாம்களை பார்வையிட்டு வந்த காங். நாடாளுமன்ற உறுப்பினர்
கே.எஸ்.அழகிரி அவர்கள் சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த
போது, மிக நீண்ட கதையளக்கின்றார். கதை நேரம் முடிந்தபின்
செய்தியாளர்கள் சரமாரியாகக் கேள்விகள் கேட்கத் தொடங்க மழுப்பலான
பதில்களைக் கூறிவிட்டு, அவசரமாகச் சந்திப்பை முடித்துக் கொள்கின்றார்.
அந்தச் சந்திப்பின் ஒலிப்பதிவு கீழே இணைக்கப்ட்டுள்ளது. அங்கே கண்டதைச்
சொல்லும் நாடாளுமன்ற உறுப்பினர், தமிழ்மக்கள் கொல்லப்பட்டது குறித்து
கேள்வி கேட்க மழுப்பி விட்டுத் தப்பித்துக் கொள்கின்றார்.அழகிரி
ஐயா! விடுதலைப்புலிகளை அழிப்பதற்கு நியாயம் குறி, ஈழத்தமிழர்களை இந்தியா
அழிப்பது இப்போதா தொடங்கியது..? அமைதிப்படையாக அது வந்தபோதே
ஆரம்பித்துவிட்டதே. அப்போதிருந்தே உங்களைப் போன்றவர்கள்
அழிக்கப்படும் தமிழர்கள் பற்றிச் சொல்வதெல்லாம் வெற்றுக்
கதைகளே..சொல்லுங்கள் சொல்லிக் கொண்டேயிருங்கள். ஆனால் உண்மை ஒரு புறம்
ஊமையாக வாழ்ந்து கொண்டிருக்கிறது.நீங்கள் சரியாக இருக்கிறது என்ற
சொன்ன முகாம்களை உலக ஊடவியலாளர்கள் எடுத்த படங்களும், அந்த முகாம்களில்
இருந்த மக்கள் அவர்களிடம் சொன்ன செய்திகள், எதுவும் உங்களுக்குத்
தெரிந்திருக்கவில்லையா..? நல்லது அப்படியே இறுகக் கண்களை மூடிக்
கொள்ளுங்கள். உலகம் இருண்டுவிடும், உங்களுக்கு....அவர்களைப்போல் கண்மூடிக்கொள்ளாது, விழிநீர் சொரிய விழித்திருக்கும், தமிழகத்து உறவுகளே! உங்களுக்காக சில உறவின் கதைகள் கீழே...
உறவைத் தேடி


உறவைத் தேடி மித்திரன் வாரமலர், யுத்தத்தில் தொலைத்தவ்களுக்காகவும்,
தொலைந்தவர்களுக்காகவும், உருவாக்கிய களம். அதில் எழுதப்பட்ட சில
கடிதங்கள் கீழே பேசுகின்றன...
என் உயிர் எங்கே? அவள் வேண்டும்


சின்ன வயதிலிருந்த தெரியும் என் ம. ரயிதாவை அவளைக் காணாது மனம்
துடிக்கின்றது. எப்போது அவளைக் காண்பேனென்று பதைபதைக்கிறேன். அவள்
அம்மாவும் தம்பியும் காயப்பட்டுக் கப்பலில் வந்து முகாமில்
இருக்கின்றார்கள். ஆனால் அவளையும் அப்பாவையும் அவரின் அம்மா
தேடுகிறார்கள். அவளை என் விழிகள் ஒவ்வொரு முகமாய்த் தேடுகிறது. அவள்
இன்னும் என் கண்ணில் படவில்லை. மகேஸ்வரன், ரயிதாவைக் கண்டவர்கள்
அறியத்தரவும். மித்திரனைப் பார்ப்பவர்கள் அவளைத் தெரிந்தால் சொல்லவும்,
கடிதம் போடவும். என் ரயிதாவிடம் பேசணும்போல இருக்கு கடைசியாக அவளைச்
சுகத்திரபுரத்தில் கண்டேன். இந்த இடப் பெயர்வு காரணமாக என் அன்பு
தேவதையைக் காண முடியவில்லை. என் உயிருக்கு என்ன நடந்தது என்று ஒன்றும்
புரியவில்லை. எப்படியெப்படி எல்லாமோ கனவுகண்டுகொண்டு இருந்தோம். இப்படி
ஆகிவிட்டது. அவளை என் மனம் தேடுகின்றது. பள்ளி வாழ்க்கையை மறக்க முடியுமா?
நானும் அவளும் பழகிய நாட்களை வார்த்தைகளால் சொல்ல முடியாது. அவளின்
பேச்சைக் கேட்கணும் போல இருக்கு. அவள் எங்கு இருந்தாலும் மித்திரன்
வாரமலருக்குக் கடிதம் போடவும். என் நண்பியை மறக்க முடியவில்லை. நான் நலம்
நீ நலமா? வரவை எதிர்பார்த்துக் காத்து இருக்கின்றேன். என் உயிரே அவளின்
தொடர்புக்காகக் காத்திருக்கிறது.


எனது பிரண்ட் ஆருந்திரனையும் என் விழி தேடுகின்றது.


டா. அஜந்தன்
அருணாச்சலம் 111 முகாம்
மெனிக் முகாம், வவுனியா.


ஜூலை 26, 2009 அன்று வெளியிடப்பட்ட கடிதங்கள்


மெல்லிய உடல், பிட்டி நெற்றி, ஒற்றைச் சுழி கொண்ட ஒன்றரை வயது மகனைக் கண்டீர்களா?


20.04.2009 அன்று புதுமாத்தளன் வைத்திய சாலையின் அருகில் செல்லில்
படுகாயம் அடைந்த ஞா. செல்வமணி ஆகிய நான், படுகாயத்தின் வேதனையில் இருந்த
வேளை, வீதியால் வந்துகொண்டிருந்த பொதுமக்கள் என்னையும் எனது ஒன்றரை வயது
மகன் ஞா. தஜீவனையும் காப்பாற்றி, காயத்திற்குத் துணியினால் கட்டுப்போட்டு,
வீல்செயாரில் ஏற்றிக்கொண்டுபோய், புதுமாத்தளன் கடற்பரப்பில் விட்டுவிட்டு,
துவாயினால் சுற்றிவைத்திருந்த மகன் ஞா. தஜீவனைக் காப்பாற்றும்
நோக்கத்துடன் கொண்டு சென்று விட்டனர்.


என் பிள்ளையைக்
காப்பாற்றியவர் பெயர், விவரம் எனக்குத் தெரியாது. நான் மரணத்தின் வாசலில்
இருந்தமையால் என் பிள்ளையைக் கொண்டு சென்றிருந்தனர். என்னால் என்
பிள்ளையைப் பிரிந்து வாழ முடியவில்லை. எழுந்து நடக்க முடியாத நிலையிலும்
என் பிள்ளை எங்கேயாவது கண்ணுக்கு எத்துப்படுகிறானா என எதிர்பார்த்து,
ஏலாக்காலுடன் நடந்து அலைகிறேன். என் ஒன்றரை வயது மகன் ஞா. தஜீவனைக்
காப்பாற்றி, பராமரிப்பவர்கள் தாயாரிடம் ஒப்படைக்குமாறு மனவேதனை மேல்
வேதனையாகக் கேட்கிறேன்.


கை மாறிய என் பிள்ளையின் விபரம்:


மெல்லிய உடல், சிறியவாய், சிறிய கண், காது, மூக்கு, சிறுமுகம்; பிட்டி
நெற்றி, ஒற்றைச் சுழி; இவரது வலது அல்லது இடது முழங்காலின் கீழ்ப் பழைய
சிறுகாய அடையாளம் சாதுவாக உள்ளது.


எனது பிள்ளை கடைசியாக
என்னிடம் இருந்து, துவாயினால் சுற்றியபடி கை மாறியது. எனக்கு, என் அருமை
மைந்தனை நினைத்து இரவு, பகல், நித்திரை, சாப்பாடு இன்றி, நிம்மதி இல்லாத
வாழ்வு தனிமையில் வாழ்கிறேன். என் பிள்ளையைப் பெற்று தராவிட்டால், நான்
தனியாக வாழ்ந்து என்ன பயன்? எனக்கு ஒரு மூலையில் அடித்து, தற்கொலை செய்யத்
தோன்றும்.


நான் ஐந்து பேருடன் இருந்து, தற்போது நாட்டின்
தனி மரம்போல் ஆகிவிட்டேன். என் பிள்ளையைப் பராமரிக்கும் அந்தப்
பொதுசனத்தின் உதவியால் என் பிள்ளையைப் படைத்தவன்தான் மீண்டும் தாய்,
பிள்ளையுடன் சேர்த்துவைக்க வேண்டும் எனப் பிரார்த்தனை செய்கிறேன். என்
பிள்ளையை எங்கேயாவது கண்டுபிடித்துத் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.


ஞா. செல்வமணி ஆகிய என்னுடைய தாயார் நா. சிவக்கொழுந்து செல் விழுந்து காயம்
இல்லை. ஆனால் மயக்கத்தில் இருந்து வைத்தியசாலை கொண்டுவந்ததாக அறிந்தேன்.
எந்த வைத்தியசாலையில் என்றும் தெரியாது. விபரம் தெரிந்தவர்கள் தயவுசெய்து
அறியத் தரவும்.


ஞா. செல்வமணி
எஸ். 3ஃ10 நலன்புரி நிலையம்
ஆனந்த குமாரசாமி முகாம், வவுனியா


தங்கையைத் தேடி . . .


எனது சொந்த இடம் இத்தாவில், பளை. தற்காலிக இடம் புளியம் பொக்கணை சந்தி,
பெரியகுளம். எனது தங்கை இராஜன் டயனேஸ்வரி. இவர்16.05.2009 அன்று
முள்ளிவாய்க்கால் பகுதியில் காயப்பட்டு, வட்டுவாகல் பகுதியில் வைத்து
இராணுவத்தால் வைத்தியசாலைக்கு ஏற்றிச் செல்லப்பட்டார். பின்பு எங்கு
நிற்கின்றார் என எதுவும் தெரியவில்லை. இவரைக் கண்டவர்கள் அல்லது எங்களைத்
தெரிந்தவர்கள் இந்த விலாசம் ஊடாகத் தொடர்புகொள்ளவும்.


இராஜன் ராஜ்குமார்
ஆனந்த குமாரசாமி முகாம்
வீட்டிலக்கம் 77ஃ5, வலயம்09, செட்டிகுளம்.


மகன் சாரங்கன் இறந்தது கணவனுக்கு தெரியாது


என் கணவரின் பெயர் சிவன் விமலரூபன். வயது 24, சொந்த முகவரி மாமூலை,
முள்ளியவளை. இவரை முள்ளிவாய்க்காலில் தவறவிட்டுவிட்டோம். இன்று வரைக்கும்
ஒரு தகவலும் அறியவில்லை. சிலர் இவரைக் காயமடைந்த நிலையில் கண்டதாகவும்
சொன்னார்கள். நான் எல்லா இடங்களிலும் விசாரித்தும் அறிவித்தும் ஒரு
தகவலும் கிடைக்கவில்லை. அத்தோடு எங்களது ஒன்றரை வயதுக் குழந்தை வி.
சாரங்கனும் மாத்தளன் வைத்தியசாலையில் நோய் காரணமாக இறந்துவிட்டார். பிள்ளை
இறந்ததுகூட என் கணவருக்குத் தெரியாது. இதனால் நான் மிகவும்
துன்பப்படுகிறேன். எனது நிலையை உணர்ந்து, என் கணவரின் தகவல் தெரிந்தவர்கள்
எனது விலாசத்திற்கு அறியத் தருவார்களென நம்புகிறேன்.


விமலரூபன் யூக்கிருஷா
வீட்டு இலக்கம். 936
வலயம் 11, இராமநாதன் நலன்புரி நிலையம்
செட்டிகுளம்.


மகள் தர்சினி முகாமிலா? வைத்தியசாலையிலா?



கிளிநொச்சி அம்பாள்குளத்தில் வசித்துவந்தோம். போர் அனர்த்தம் காரணமாக
இடம்பெயர்ந்து, கடைசியாக முள்ளிவாய்க்கால் எனும் இடத்தில் இருந்தோம்.
பின்னர் அங்கு இருக்க முடியாத அளவிற்குக் குண்டுகளும் ரவைகளும் அகோரமாக
வந்தமையால் 17.05.2009 அன்று அனைவரும் வவுனியாவுக்கு செல்வதற்காக
வட்டுவாகலூடாக, இராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் வரும்போது, எனது மூத்த
மகளான திருமதி சிவதர்சினி பரமேஸ்வரனும் அவளுடைய ஒன்றரை வயதுப் பெண்
குழந்தையான பரமேஸ்வரன் நிசாந்தி ஆகிய இருவரையும் 17.05.2009 அன்றே பி.ப 2
மணியளவில் சனநெரிசல் காரணமாக மாறவிட்டு விட்டோம்.


அவ்விடத்தில் தேடிப் பார்த்தோம்; காணவில்லை. எப்படியும்
வவுனியாவுக்குத்தானே வருவாள் என்ற எண்ணத்தில், நாங்களும் வவுனியாவுக்கு
வந்து சேர்ந்தோம். எனது மகளும் பேத்தியும் எந்த முகாமில் உள்ளார்களென்று
தெரியாமல் தேடிக்கொண்டிருந்தோம். தற்சமயம் பேத்தி மட்டும் எமக்கருகில்
உள்ள முகாமில் யாரோ ஒரு குடும்பத்தோடு இருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது.
குழந்தையை எங்களுடையதுதான் என்று உறுதிப்படுத்துவதற்காக நேரில் சென்று
பார்த்தோம். அது எங்ளுடைய குழந்தைதான். அக்குடும்பம் வட்டுவாகலூடாக
வரும்போது குழந்தை மட்டும் அழுதுகொண்டிருந்ததாகவும் தாங்கள்
தூக்கிக்கொண்டு வந்ததாகவும் அவர்கள் தெரிவித்தார்கள். குழந்தை தற்போது
எங்களுடன் இருக்கின்றது. எனது பேத்தி தாயிடம் இருந்து எப்படி பிரிந்தது
என்று தெரியாமலுள்ளது. எனது மகளுக்கு என்ன நடந்தது? அல்லது வரும்போது
ஏதாவது வருத்தம் காரணமாக எங்கேயனும் வைத்தியசாலையில் இருக்கின்றாளோ?
இன்னமும் தேடிக்கொண்டுதான் இருக்கின்றோம்.


எனது மகளுடைய
கணவன் இங்கில்லை. அவர் இந்தியாவில்தான் இருக்கிறார். எனது மகளும்
இந்தியாவில்தான் வசித்து வந்தாள். நாங்கள் கிளிநொச்சியில் இருக்கும்போது
எங்களை பார்ப்பதற்காக 02.01.2008ஆம் ஆண்டு கிளிநொச்சிக்கு வந்தாள். போர்ச்
சூழல் காரணமாக இவளால் இந்தியாவிற்கு மீண்டும் திரும்பிச் செல்ல முடியாமல்
எங்களுடனேயே இருந்து போரினால் சொல்ல முடியாத துயரங்களையெல்லாம் அனுபவித்து
வந்தாள்.


இப்பவும் எங்களையும் குழந்தையையும் பிரிந்து
எங்கிருந்து தவித்துக்கொண்டிருக்கிறாளோ தெரியவில்லை. அவள் எங்கிருந்தாலும்
எங்களுடன் வந்துசேர்வாள் என்ற நம்பிக்கையில்
எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம். எனது மகள் பற்றிய தகவல் தெரிந்தவர்கள்
அல்லது கண்டவர்கள் எமக்குத் தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.


சிவபாதம் பார்வதி
இல.எஸ். 4ஃ21
ஆனந்த குமாரசுவாமி நலன்புரி நிலையம்
செட்டிகுளம்.இதுமட்டுமல்ல அன்மையில்
நடந்த 5 ஆண்டு கல்விப் பரீட்சையில், முகாமிலிருந்தவாறே தோற்றி,
அதிக புள்ளிகள் வரிசையில் மூன்றாவது இடத்தைப் பெற்றுக் கொண்ட மாணவன்
தவபாலன் அறிவன் சொல்வதைக் கேளுங்கள்... போரில் அப்பாவை இழந்தேன்,
எனது குடும்பம் எல்லாவற்றையும் இழந்தது வன்னியில் இருந்து உடுத்த
உடுப்போடு வந்தோம்.ஆனாலும் முகாமில் இருந்து படித்து பரீட்சையில் வெற்றி
பெற்றேன் இவ்வாறு தனது பிஞ்சு மனது எதிர்கொண்ட மிகப்பேரழிவு அனுபவத்தை
கூறுகின்றார் கிளிநொச்சி மாவட்டத்தில் 164 புள்ளிகளைப் பெற்று மூன்றாம்
இடம்பெற்ற தவபாலன் அறிவன்.

அவர் மேலும் கூறுகையில்; புலமைப்
பரிசில் பரீட்சைக்காக நாம் முகாமில் இருந்த மின்கம்பத்தின் கீழ்
இருந்துதான் படித்தோம். முகாமில் 50 மீற்றர் தொடக்கம் 100 மீற்றர்
இடைவெளிகளில் மின்கம்பங்களில் மின்குமிழ்கள் பொருத்தப்பட்டிருந்தன. தொண்டு
நிறுவனம் விளக்கு ஒன்றைத் தந்தபோதும் மண்ணெண்ணெயின் விலை 200 ரூபாவாக
இருந்தது. ஆகையால் நாம் தொடர்ந்து மின்கம்பங்களை நாடிச்சென்றே படித்தோம்.
என்றாலும் என்னுடைய அம்மா கஷ்டத்திலும் முகாமில் 200 ரூபா கொடுத்து
ரியூசனுக்கு அனுப்பினார். முகாமிலும் ஆரம்பத்தில் அவர்கள் உணவு
தந்தார்கள். அது எங்களுக்கு ஒத்து வரவில்லை. அதனால் வயிற்றோட்டம்
ஏற்பட்டது.
எங்களுக்கு முகாமில் கற்பித்த ஆசிரியர்கள் கூறுவது
ஒன்றைத்தான் "உடுத்த உடுப்புடன் வந்த எங்களுக்கு கல்வி ஒன்றுதான் அழியாச்
செல்வம்" என்றார்கள். இதுவே எங்களுக்குக்கல்வி கற்க ஊக்கமாக
அமைந்தது.இவ்வாறு குறிப்பிட்டார் கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து தரம் 5
புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றி 164 புள்ளிகளைப் பெற்று மாவட்ட
மட்டத்தில் மூன்றாம் இடம் பெற்ற மாணவன் தவபாலன் அறிவன். அழகிரி எம்.பி. பத்திரிகையாளர் சந்திப்பு ஒலிப்பதிவு: நன்றி 'மனிதம்'
aarul
aarul
தளபதி

தளபதி

பதிவுகள் : 1011
இணைந்தது : 02/10/2009

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum