ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாமியாருக்கு துணை தேடும் மருமகள்கள்

3 posters

Go down

மாமியாருக்கு துணை தேடும் மருமகள்கள் Empty மாமியாருக்கு துணை தேடும் மருமகள்கள்

Post by விமந்தனி Mon Nov 24, 2014 12:54 am

மாமியாருக்கு துணை தேடும் மருமகள்கள் 201411231537212519_Daughtersinlaw-is-looking-for-support-for_SECVPF

இருவரும் இளம் பெண்கள். நேர்த்தியான உடை அலங்காரத்தோடு ‘ஸ்மார்ட்’டாக காணப்பட்டார்கள். ‘எங்கள் மாமியார் விஷயமாக பேச வந்திருக்கிறோம்’ என்றார்கள்.

‘மாமியார்களுக்கும், இளம் மருமகள்களுக்கும் சரியாக ஒத்துப்போவதில்லை என்பது வழக்கமான குற்றச்சாட்டு. அதனால் தொந்தரவு செய்யும் மாமியாரை எப்படி சமாளிப்பது?’ என்று ஆலோசனை கேட்கவே பெரும்பாலான பெண்கள் வருவார்கள். ஆனால் இவர்கள் எடுத்த எடுப்பிலே மாமியாரை புகழத் தொடங்கினார்கள்.

‘‘எங்கள் மாமியாருக்கு இரண்டு மகன்கள். நாங்கள் இருவரும் அவரது மருமகள்கள். எங்கள் கணவர்களுக்கு வெளிநாட்டில் வேலை. அவர்களுடன் நாங்கள் வசிக்கிறோம். எங்களுக்கு திருமணமாகும்போது, ‘எப்படி எல்லாம் இந்த மாமியாரோடு மல்லுக்கட்ட வேண்டியதிருக்கிறதோ’ என்ற பயத்துடன்தான் இருந்தோம். ஆனால் அவர் அவ்வளவு பக்குவமானவராக இருக்கிறார்.

நாங்கள் குடும்பத்தோடு இந்தியாவிற்கு வந்துவிட்டால், எங்களை மகாராணி போல் கவனித்துக்கொள்வார். எங்கள் அம்மாகூட அந்த அளவுக்கு எங்களை தூக்கி வைத்து கொண்டாடமாட்டார்கள். அதனால் இங்கு வந்துவிட்டால், திரும்பி வெளிநாட்டிற்கு போகக்கூட மனம் இருக்காது. அந்த அளவுக்கு எங்கள் மீது நிபந்தனையற்ற அன்பு செலுத்துவார்..’’ என்று மாமியார் மீது பாராட்டு மழை பொழிந்துகொண்டிருந்த அவர்களிடம், ‘மாமனார் பற்றி நீங்கள் ஒரு வார்த்தைகூட சொல்லவில்லையே!’ என்றேன்.

அப்போதுதான் அவர்கள் அந்த நெகிழ்ச்சியான சம்பவத்தை சொன்னார்கள்.

‘‘எங்கள் மாமியாருக்கு 19 வயதில் திருமணமாகியிருக்கிறது. 21 வயதில் முதலில் தாய்மையடைந்திருக்கிறார். அடுத்த வருடமே மீண்டும் கர்ப்பமாகியிருக்கிறார். அந்த குழந்தையை பிரசவிப்பதற்குள் கணவர் இறந்துள்ளார். அதன் பிறகு எந்த சலனத்திற்கும் ஆளாகாமல், மறுமணத்தை பற்றியும் யோசிக்காமல் குழந்தைகளை வளர்ப்பதை மட்டுமே தனது கடமையாக செய்து வந்திருக்கிறார்.

பொதுவாக இளம் வயதிலே கணவரை இழந்த பெண்கள், தனிப்பட்ட வாழ்க்கையில் திருப்தி அடைந்திருக்க மாட்டார்கள் என்றும்– அதனால் மருமகள்கள் ஜோடியுடன் சிரித்து மகிழ்ந்து குடும்பம் நடத்துவது அவர்களுக்கு பிடிக்காது என்றும் எங்கள் தோழிகள் சொன்னார்கள். ஆனால் அப்படி எதுவும் இல்லை. நாங்கள் முழு மகிழ்ச்சியோடு வாழ எல்லா வகையிலும் மாமியார் துணைபுரிகிறார்..’’ என்றார்கள்.

‘சரி.. அந்த நல்ல மாமியாருக்கு இப்போது என்ன பிரச்சினை?’ என்று கேட்டேன்.

‘‘நாங்கள் திகட்ட திகட்ட தாம்பத்ய வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருக்கும் இதே பருவத்தில் அவர் கணவரை இழந்திருக்கிறார். அதோடு அவரது தாம்பத்ய வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி விழுந்துவிட்டது. நாங்கள் வெளிநாட்டில் இருந்து வருடத்திற்கு இருமுறைதான் இங்கு வந்துசெல்கிறோம். மற்ற காலங்களில் அவர் தனிமையில்தான் வாடிக்கொண்டிருக்கிறார். பணம் இருக்கிறது. வாய்ப்பு, வசதி எல்லாம் இருக்கிறது. ஆனால் வாழ்க்கைத்துணை மட்டும் இல்லை. அவரது வயதுக்கும், கடமைகளுக்கும் ஏற்ற ஆண் துணை ஒன்றை அமைத்துக்கொடுக்கலாம் என்று நினைக்கிறோம். வெளிநாடுகளில் அதற்கென்றே தனி அமைப்புகள் இருக்கின்றன. மனம் ஒத்தவர்கள் வாழ்க்கையோடு எந்த வயதிலும் இணைந்துகொள்ளலாம். இங்கு அந்த பேச்சை எடுத்தாலே  நம்மை ஒருமாதிரியாக பார்க்கிறார்கள். கணவரை இழந்தால், வயதாகிவிட்டால், வாழ்க்கை அவ்வளவுதானா?’’ என்று குரலை உயர்த்தி கேட்டார்கள்.

‘உங்கள் மாமியாருக்கு எத்தனை வயது?’

‘‘52..’’

‘உங்கள் நோக்கம் பற்றி உங்கள் கணவர்களிடம் பேசினீர்களா? அவர்கள் என்ன சொன்னார்கள்?’

‘‘அம்மா இங்கு தனிமையில் வாடுகிறார். அம்மா மகிழ்ச்சியாக வாழ என்ன வேண்டுமானாலும் செய்ய தயாராக இருக்கிறோம். ஆனால் இதுபற்றி நீங்களே அம்மாவிடம் பேசுங்கள், என்று கூறி அந்த பொறுப்பை எங்களிடம் ஒப்படைத்துவிட்டார்கள். நாங்கள் அவர்களிடம் இந்த பேச்சை எப்படி ஆரம்பிக்கவேண்டும் என்று கூறுங்கள்..’’ என்றார்.

‘மாமியாரின் தனிமையை போக்க நீங்கள் இந்த அளவுக்கு முயற்சிப்பது பாராட்ட தகுந்த விஷயம். முதுமையில் இணைந்து வாழ்வதென்பது நீங்கள் குறிப்பிடும் வெளிநாடுகளில் சகஜமானது. இங்கு இப்போதுதான் அதுபற்றிய சிந்தனையே வந்திருக்கிறது. அதே நேரத்தில் மகிழ்ச்சி என்பது எதில் இருந்து கிடைக்கும் என்பது பெண்ணுக்கு பெண் மாறுபடும். அவர்களது தனிமையை எது விரட்டும் என்பதும் பெண்ணுக்கு பெண் மாறுபடும். அதனால் உங்கள் மாமியாரின் மனதறிந்து அதற்கான ஏற்பாடுகளை நீங்கள் செய்யுங்கள்.

முதலில் நீங்கள் இருவரும் சேர்ந்து அவர் பார்க்க விரும்பும் ஏதாவது ஒரு சுற்றுலா பகுதிக்கு அவரை அழைத்துசெல்லுங்கள். அங்கு ஜாலியான மனநிலையில் அவர் இருக்கும்போது தனிமை பற்றியும், பிற்காலத்திற்கு தேவையான துணை பற்றியும் வெளிநாடுகளில் இருப்பதை சொல்லுங்கள். இங்கும் அத்தகைய மாற்றம் ஏற்பட்டிருப்பதை உணர்த்துங்கள். அவர் ஆர்வம் காட்டினால் தொடர்ந்து பேசுங்கள். இல்லாவிட்டால் அவர் என்ன விரும்புகிறார் என்பதை தெரிந்துகொள்ளுங்கள். அவர் விருப்பத்திற்கு ஏற்றபடி செயல்படுங்கள்..’ என்றேன்.

நான் சொன்னதை கேட்டுக்கொண்டிருந்த மருமகள்களில் ஒருவர், ‘ஆண் துணை தேவை என்பதை எங்கள் மாமியாருக்கு நன்றாக புரியவைப்போம். அதற்கு அவர் விரும்பாவிட்டால், நான் இந்தியாவிற்கு வந்துவிடுகிறேன். அவர்களது இறுதிக் காலம் வரை என்னோடு வைத்து பார்த்துக்கொள்கிறேன்’ என்றபோது இன்னொரு மருமகள் கண்களில் இருந்து  கண்ணீர் வந்துவிட்டது.

இப்படிப்பட்ட மருமகள்கள் சமூகத்தில் பெருக வேண்டும்.

–விஜயலட்சுமி பந்தையன்.
நன்றி: தினத்தந்தி.


மாமியாருக்கு துணை தேடும் மருமகள்கள் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonமாமியாருக்கு துணை தேடும் மருமகள்கள் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312மாமியாருக்கு துணை தேடும் மருமகள்கள் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

மாமியாருக்கு துணை தேடும் மருமகள்கள் Empty Re: மாமியாருக்கு துணை தேடும் மருமகள்கள்

Post by ayyasamy ram Mon Nov 24, 2014 8:10 am

மாமியாருக்கு துணை தேடும் மருமகள்கள் 103459460
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84090
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மாமியாருக்கு துணை தேடும் மருமகள்கள் Empty Re: மாமியாருக்கு துணை தேடும் மருமகள்கள்

Post by krishnaamma Mon Nov 24, 2014 1:35 pm

இதை மகளிர் கட்டுரைகள் பகுதிக்கு மாற்றுகிறேன் விமந்தனி புன்னகை........................ரொம்ப அருமையான பகிர்வு இது.......அங்கு இருந்தால் நிறைய பேர் பார்க்கலாம்.....சரியா? புன்னகை அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மாமியாருக்கு துணை தேடும் மருமகள்கள் Empty Re: மாமியாருக்கு துணை தேடும் மருமகள்கள்

Post by விமந்தனி Mon Nov 24, 2014 2:31 pm

சரி கிருஷ்ணாம்மா.


மாமியாருக்கு துணை தேடும் மருமகள்கள் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonமாமியாருக்கு துணை தேடும் மருமகள்கள் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312மாமியாருக்கு துணை தேடும் மருமகள்கள் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

மாமியாருக்கு துணை தேடும் மருமகள்கள் Empty Re: மாமியாருக்கு துணை தேடும் மருமகள்கள்

Post by krishnaamma Mon Nov 24, 2014 2:35 pm

விமந்தனி wrote:சரி கிருஷ்ணாம்மா.
மேற்கோள் செய்த பதிவு: 1105841

நன்றி அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மாமியாருக்கு துணை தேடும் மருமகள்கள் Empty Re: மாமியாருக்கு துணை தேடும் மருமகள்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum