ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவசியமா? அடையாளமா? தமிழை தாழ்வாக நினைக்கும் தமிழர்களுக்காக... -

+4
யினியவன்
M.Saranya
ayyasamy ram
சாமி
8 posters

Go down

அவசியமா? அடையாளமா? தமிழை தாழ்வாக நினைக்கும் தமிழர்களுக்காக... - Empty அவசியமா? அடையாளமா? தமிழை தாழ்வாக நினைக்கும் தமிழர்களுக்காக... -

Post by சாமி Fri Nov 21, 2014 2:55 pm

திருமுருக கிருபானந்தவாரியார் சொற்பொழிவிலிருந்து..

ஆங்கிலம் மட்டுமே போதும் என இன்று பெரும்பான்மையானவர்கள் கருதுகிற நிலையில், தமிழில் என்ன இருக்கிறது? என்ற சிறப்பு அடுத்த சந்ததிக்குத் தெரியாமலே போகிறது. தமிழை தாழ்வாக நினைக்கும் தமிழர்களுக்குத் தமிழின் சிறப்புகளை இங்கே ஒவ்வொரு பகுதியாகச் சுட்டிக் காட்டுகிறோம்.

இன்றைக்கு நம் வீட்டில் நமது குழந்தைகளுடன் சின்னஞ்சிறு வயதிலேயே ஆங்கிலத்தில் பேசத் துவங்குகிறோம். தமிழ் குறித்த அறிவையும் ஞானத்தையும் போதிப்பதை விட்டுவிட்டு, நம் சொந்த அடையாளங்களைத் தொலைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இன்று ஆங்கில மொழி உலக மொழியாக உருவெடுத்துள்ளதால், சமுதாயத்தில் தன்னை தக்க வைத்துக்கொள்ள ஆங்கிலம் தேவை என்றாலும் "அவசியம்' ஒருபோதும் "அடையாளம்' ஆகிவிடாது என்பதை உணர வேண்டும். தமிழை முழுமையாகத் தெரிந்துகொண்டு பின்னர் ஆங்கிலத்தைப் படியுங்கள்.

ஆங்கிலத்தை வளர்த்த தமிழனால் ஏன் தமிழை வளர்க்க முடியவில்லை? காரணம், தமிழ் மீதான ஓர் அருவருப்பு தமிழனுக்குள்ளேயே விதைக்கப்பட்டிருக்கிறது. தமிழுக்காகப் போராட வேண்டாம்; வீட்டில் தமிழில் பேசுங்கள் போதும். அதுதான் தமிழை வளர்க்கும்.

ஆரியம், இங்கிலாந்து என எத்தனையோ படையெடுப்பைத் தாண்டி வாழ்ந்த தமிழ், இன்று தமிழனாலே மாண்டுவிடுமோ? உலகிலேயே ஆங்கிலத்தை மிகச்சரியாக உச்சரிப்பவர்களும் தமிழர்தான், தன் தாய்மொழி குறித்த அடிப்படை அறிவு பெறாதவர்களும் தமிழர்தான். இது பெருமைபடக்கூடிய விடயமா? தமிழின் சிறப்புகளை இங்கே உணர்த்துவதே எமது நோக்கம். தமிழின் சில சிறப்புகளை இங்கே காணலாம்.

தமிழ் மொழிக்கு என்று இயற்கையாகவே சில சிறப்புகள் உண்டு. தமிழ் மொழி மற்ற எல்லா மொழிகளையும்விட மிக எளிமையானது. ஒரு மிகச் சிறந்த இலக்கணத்தைக் கொண்டு கட்டமைக்கப்பட்ட மொழி தமிழ் மொழி. இன்றைக்கு ஆங்கிலத்தைப் பெருமையாக நினைப்பவர்கள் இதைக் கண்டிப்பாக உணர வேண்டும்.

வெறும் 26 எழுத்துகளைக் கொண்ட மொழி, ஒரு செம்மையான இலக்கணம் இல்லாத மொழி, ஒரு ஒழுங்கில்லாத மொழி ஆங்கிலம். ஆனால் தமிழ் அப்படி இல்லை. வாழ்வியல், அறிவியல் என அனைத்துப் பரிமாணங்களையும் உள்ளடக்கி செதுக்கப்பட்டது தமிழ் மொழி. அதற்கு ஒருசில சான்றுகளை இங்கே காணலாம்.

ஆங்கிலத்தில் BOOK என்பதை எவ்வாறு எழுதுகிறீர்கள்? B-பி, o-ஒ, o-ஒ, k-கே. அதாவாது பிஒஒகே என்ற எழுத்துக்கூட்டு புக் என உச்சரிக்கப்படுகிறது. இதன்மூலம் ஆங்கில எழுத்துகளுக்கு நிலையான ஓசை இல்லை என்பதை நாம் உணரலாம். ஆனால் தமிழில் இதையே புக் என எழுத முடியும்.

அடுத்ததாக ARAVIND என்ற சொல்லை அரவிந்த் என்று உச்சரிக்கிறோம். ஆனால், ANGEL என்ற சொல்லை ஏஞ்சல் என்று உச்சரிக்கிறோம். இங்கே A என்ற ஒரே சொல்லே இடத்திற்கேற்ப அ என்றும் ஏ என்றும் வெவ்வேறு ஓசையைக் கொள்கின்றன.

ஆங்கிலத்துல் குறில், நெடில் என்ற பாகுபாடே இல்லை. BEE என்ற சொல்லில் இரு குறில்கள் சேர்ந்து நெடிலாகிறது, அதே சமையம் LARGE என்ற சொல்லில் குறிலே இங்கு நெடிலாக மாறுகிறது. மேலே குறிப்பிட்டுள்ள BOOK என்ற சொல்லில் இரு குறில்கள் வந்தாலும் அது குறிலாகவே நிலைப்பெறுகிறது.

வெறும் 26 எழுத்துகளே பெற்று எழுத்து பற்றாக்குறை கொண்ட மொழி ஆங்கிலம். அதனால்தான் ஒரே எழுத்துக்கு பல உச்சரிப்புகள், ஓசைகள் பெறுகின்றன. ஆங்கில மொழியின் உயிர் எழுத்துகள் வெறும் 5 எழுத்துகளே. A, E, I, O, U. மீதம் உள்ள 21 எழுத்துகளை உயிர்மெய் எழுத்துகள் எனக் கொள்ளலாம். ஆனால், இவை மட்டும் ஒரு மொழியின் தேவையைப் பூர்த்திசெய்து விட முடியாது. ஆங்கிலத்தில் மெய் எழுத்துகளே கிடையாது, ஆனாலும் ஒரு சில நேரங்களில் Consonents என்று சொல்லப்படும் ஆங்கில உயிர்மெய் எழுத்துகள் மெய் எழுத்துகளாகத் தோன்றும். உதாரணமாக PARK என்ற சொல்லை பார்க் என்று உச்சரிக்கும் போது R மற்றும் K என்ற எழுத்துகள் மெய் எழுத்துகளாகத் தோன்றுகின்றன.

ஆக தோழர்களே! இவ்வளவு குழப்பங்களும், குறைபாடுகளும் உள்ள ஆங்கில மொழி உங்களுக்குச் சிறப்பானதா? எளிதானதா? உங்கள் வசதிக்காக ஆதித் தமிழன் பார்த்து பார்த்து செதுக்கிய தமிழ்மொழி எப்படித் தாழ்ந்து போகும்? சிந்தியுங்கள். மீண்டும் கேட்டுக் கொள்கிறோம், அவசியத்திற்கு ஆங்கிலம்; அடையாளமாய்த் தமிழ்! - நன்றி - தினமணி
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

அவசியமா? அடையாளமா? தமிழை தாழ்வாக நினைக்கும் தமிழர்களுக்காக... - Empty Re: அவசியமா? அடையாளமா? தமிழை தாழ்வாக நினைக்கும் தமிழர்களுக்காக... -

Post by ayyasamy ram Fri Nov 21, 2014 3:41 pm

அவசியமா? அடையாளமா? தமிழை தாழ்வாக நினைக்கும் தமிழர்களுக்காக... - 103459460
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82967
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அவசியமா? அடையாளமா? தமிழை தாழ்வாக நினைக்கும் தமிழர்களுக்காக... - Empty Re: அவசியமா? அடையாளமா? தமிழை தாழ்வாக நினைக்கும் தமிழர்களுக்காக... -

Post by M.Saranya Fri Nov 21, 2014 4:30 pm

நல்ல பதிவு ...
நன்றி...


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

அவசியமா? அடையாளமா? தமிழை தாழ்வாக நினைக்கும் தமிழர்களுக்காக... - W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

அவசியமா? அடையாளமா? தமிழை தாழ்வாக நினைக்கும் தமிழர்களுக்காக... - Empty Re: அவசியமா? அடையாளமா? தமிழை தாழ்வாக நினைக்கும் தமிழர்களுக்காக... -

Post by யினியவன் Fri Nov 21, 2014 4:47 pm

நல்ல பகிர்வு சாமி



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அவசியமா? அடையாளமா? தமிழை தாழ்வாக நினைக்கும் தமிழர்களுக்காக... - Empty Re: அவசியமா? அடையாளமா? தமிழை தாழ்வாக நினைக்கும் தமிழர்களுக்காக... -

Post by விமந்தனி Fri Nov 21, 2014 10:02 pm

அவசியமா? அடையாளமா? தமிழை தாழ்வாக நினைக்கும் தமிழர்களுக்காக... - 3838410834 அவசியமா? அடையாளமா? தமிழை தாழ்வாக நினைக்கும் தமிழர்களுக்காக... - 103459460 அவசியமா? அடையாளமா? தமிழை தாழ்வாக நினைக்கும் தமிழர்களுக்காக... - 1571444738


அவசியமா? அடையாளமா? தமிழை தாழ்வாக நினைக்கும் தமிழர்களுக்காக... - EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅவசியமா? அடையாளமா? தமிழை தாழ்வாக நினைக்கும் தமிழர்களுக்காக... - L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அவசியமா? அடையாளமா? தமிழை தாழ்வாக நினைக்கும் தமிழர்களுக்காக... - EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

அவசியமா? அடையாளமா? தமிழை தாழ்வாக நினைக்கும் தமிழர்களுக்காக... - Empty Re: அவசியமா? அடையாளமா? தமிழை தாழ்வாக நினைக்கும் தமிழர்களுக்காக... -

Post by Dr.S.Soundarapandian Fri Nov 21, 2014 10:05 pm

அவசியமா? அடையாளமா? தமிழை தாழ்வாக நினைக்கும் தமிழர்களுக்காக... - 103459460 அவசியமா? அடையாளமா? தமிழை தாழ்வாக நினைக்கும் தமிழர்களுக்காக... - 1571444738


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9791
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

அவசியமா? அடையாளமா? தமிழை தாழ்வாக நினைக்கும் தமிழர்களுக்காக... - Empty Re: அவசியமா? அடையாளமா? தமிழை தாழ்வாக நினைக்கும் தமிழர்களுக்காக... -

Post by அகிலன் Fri Nov 21, 2014 11:19 pm

தமிழ் மொழி இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு ஆதியான மொழி,
சீரான இலக்கண அமைப்பு கொண்ட மொழி,
நிறைய சொற்களைக் கொண்ட மொழி,
இன்றைய தொழில்நுட்ப சாதனங்களில் கூட பயன்படுத்தக் கூடிய மொழி,
இனிமையான மொழி,

ஆனால் தமிழர்கள் இன்று ஆட்சியில் இல்லாததால்
தமிழ் மொழியின் பயன்பாடும் குறைந்து போகிறது.

தமிழர்களுக்கு என்று ஒரு நாடு பிறக்கும் அப்போது தமிழ் பிரகாசிக்கும்.

அவசியமா? அடையாளமா? தமிழை தாழ்வாக நினைக்கும் தமிழர்களுக்காக... - 3838410834 அவசியமா? அடையாளமா? தமிழை தாழ்வாக நினைக்கும் தமிழர்களுக்காக... - 3838410834 அவசியமா? அடையாளமா? தமிழை தாழ்வாக நினைக்கும் தமிழர்களுக்காக... - 3838410834


நேர்மையே பலம்
அவசியமா? அடையாளமா? தமிழை தாழ்வாக நினைக்கும் தமிழர்களுக்காக... - 5no
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

அவசியமா? அடையாளமா? தமிழை தாழ்வாக நினைக்கும் தமிழர்களுக்காக... - Empty Re: அவசியமா? அடையாளமா? தமிழை தாழ்வாக நினைக்கும் தமிழர்களுக்காக... -

Post by ராஜா Sat Nov 22, 2014 11:04 am

அகிலன் wrote:

ஆனால் தமிழர்கள் இன்று ஆட்சியில் இல்லாததால்
தமிழ் மொழியின் பயன்பாடும் குறைந்து போகிறது.

தமிழர்களுக்கு என்று ஒரு நாடு பிறக்கும் அப்போது தமிழ் பிரகாசிக்கும்.

அவசியமா? அடையாளமா? தமிழை தாழ்வாக நினைக்கும் தமிழர்களுக்காக... - 3838410834 அவசியமா? அடையாளமா? தமிழை தாழ்வாக நினைக்கும் தமிழர்களுக்காக... - 3838410834 அவசியமா? அடையாளமா? தமிழை தாழ்வாக நினைக்கும் தமிழர்களுக்காக... - 3838410834
உண்மை ... கண்டிப்பாக இது ஒரு நாள் நடந்தேறும் அது முதல் தமிழன்னைக்கும் தமிழர்களுக்கும் ஏறுமுகம் தான் புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அவசியமா? அடையாளமா? தமிழை தாழ்வாக நினைக்கும் தமிழர்களுக்காக... - Empty Re: அவசியமா? அடையாளமா? தமிழை தாழ்வாக நினைக்கும் தமிழர்களுக்காக... -

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum