ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளம்வயதிலேயே பூப்பெய்துவதைத் தடுக்க:-

4 posters

Go down

இளம்வயதிலேயே பூப்பெய்துவதைத் தடுக்க:- Empty இளம்வயதிலேயே பூப்பெய்துவதைத் தடுக்க:-

Post by விமந்தனி Mon Nov 17, 2014 12:45 am

இளம்வயதிலேயே பூப்பெய்துவதைத் தடுக்க:- 522082_734040723348093_4344454486316232232_n

உடல் பருமன் அதிகரிப்பது மட்டுமல்லஸ உடல் உழைப்பு குறைந்து போனதும் கூட இந்தப் பிரச்சனைக் கான காரணம். எனவே, குழந்தைகளை ஒரே இடத் தில் உட்கார்ந்திருக்கச்செய்யாமல் , ஓடியாடி விளையாட உற்சாகப் படுத்த வேண்டும்.

கொழுப்பு மிக்க உணவு வகைகளைத் தவிர்த்து, ஆரோக்கியமான உணவுகளை வீட்டிலேயே சமைத்துச் சாப்பிடக் கொடுக்க‍லாம். இறைச்சிக்காக பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழி களின் எடையை அதிகரிக்க உடல் உறுப்புக்களை உசுப்பி விடும் இரத்தத்தில் இருக்கி ற உட் சுரப்பு நீர் வகை (hormone) மருந்து வகைகள் தரப்படுகின்றன. எனவே இறைச்சிக்காக வளர்க்கப்படும் வகைக் கோழிக் கறி யைத் தவிர்த்து, நாட்டுக்கோழி இறைச்சியைச் சாப்பிடலாம்.

கால்சியம் சத்துக்காக அதிகஅள வில் பால் அருந்துவது தவறு. இயற்கை விவசாயத்தில் விளை விக்கப்பட்ட காய்கறி, பழங்கள், கீரை வகைகளைச் சாப்பிடலாம். இவற்றில் கால்சிய மும் நிறைய உள்ளது.
சின்ன வயசிலேயே..பெரிய மனுஷியாவது…

இந்த பிரட்ச்சனை நம் உணவு (உயிர்) சம்மந்தபட்டது

டீன் ஏஜ் வயதில் துவங்கும் இந்த மாதவிடாய் தற்போது 8 வயதில் 9 வயதில் துவங்க ஆரம்பித்துள்ளது.. சின்ன வயசிலேயே..பெரிய மனுஷியாவது….
ஏனிந்த அவசரம்? எப்படி நிகழ்கிறது இந்த மாற்றம்? என்ற சிந்தனை இன்று பல மருத்துவ ஆய்வாளர்களிடையே வேகமாக எழுந்துள்ளது.

உணவா? வாழ்வியலா? பாரம்பரியமா? சுற்றுச்சூழலில் நிகழும் மாசுக் குவியலா? மன அழுத்தமா? மருந்தா? இன்னும் என்ன காரணத்தால் இந்த அவசரமாக வெகு இளம்வயதில் ஏற்படுகிறது இந்த மாதவிடாய் என்ற ஆய்விற்கு இன்னும் சரியாய் முடிவு கிடைக்கவில்லை..

ஆனால் பல முக்கிய காரணங்கள் முதல் ஆய்வுத் தகவல் அறிக்கைகள் வந்து சேர ஆரம்பித்துவிட்டன.அதில் முதலும் முக்கியமும் மான காரணம் “நம் உணவு ”
1)பிராய்லர் கோழி
2)பால்
3)ஓட்ஸ்

முதலில் பால்:

“அடிக்கடி பால் வேண்டாம்” பால் (என்றால் மாட்டுப்பால்) நான் அடிகடி சொல்வதுண்டு “மாட்டுப்பால் கன்றுகாக தாய்ப்பால் தான் குழந்தைகாக” சமீபமாக பால் மீதான குற்றச்சாட்டுக்கள் வலுப்பெற்றுகொண்டே இருக்கின்றன.

சமீபத்தில் நடந்த ஒரு ஆய்வில் சிறுவயதில் அதிகம் பால் மட்டும் குடிக்கும் குழந்தைகள் சீக்கிரமாக பூப்பெய்துகிறார்கள் என்ற தகவல் வந்துள்ளது. இனி பெண் குழந்தைகளை கூடுதல் பால் கொடுத்து, பாலூட்டி வளர்த்த கிளியாக்க வேண்டாம்..அப்புறம் 4 ம் வகுப்பு படிக்கையிலேயே அதிகம் அவஸ்தைப்பட வைக்கும் அந்த குழந்தையை.

பார்க்க நடப்பு செய்தி
பால் மட்டுமல்ல..பால்பவுடர் கலந்து செய்யப்படும் சாக்லேட்டுகளாலும் இது நிகழக் கூடும். கன்னாபின்னாவென மில்க் சாக்லேட் சாப்பிடும் கூட்டம் இன்று நடுத்தர வர்க்கத்தில் அதிகம்..

என் குழந்தை கண்ட கண்ட மிட்டாய் எல்லாம் சாப்பிடுவது கிடையாது, ஒன்லி மில்க் சாக்லேட்” என்று பெருமைப்படும் அப்பாவி அம்மாவின் குழந்தை ஓவர் வெயிட்டாகத் தான் திரியும். இந்த குட்டி குண்டுக்கள் கூட விரைவில் பூப்படையும் என்கிறது அறிவியல்.

இன்னும் இது போன்ற சிறுவயது குண்டு குழந்தைகள் விரைந்து மிக இளம் வயதில் பூப்படைவது மட்டுமல்லாமல், சரியாக மாத மாதம் இதனைப் பெறுவதில்லை..

சினைப்பையினுள் நீர்க்கட்டிகள் உருவாகி பின்னர் பூப்பும் முழுமையாய் irregular ஆகிவிடும். Polycystic ovarian disease இன்று அதிகம் பெருகி, ஒழுங்கற்ற மாதவிடாய் வருவதற்கும், இளவயது குண்டும், சீக்கிரம் பூப்பெய்துவதும் காரணமாகிவிடும்.

மாடு கூடுதலாகப் பால் பீச்ச RCBGH(recombinant bovine growth hormone) என்ற ஹார்மோன் சேர்ப்பதை மேனாட்டு FDA – வே அங்கீகரித்திருக்கிறது.இந்த RCBGH(recombinant bovine growth hormone) என்ற ஹார்மோன் பாலிலும் தயிரிலும் மில்க் சாக்லேட்டிலும் இருக்கும் பட்சத்தில், அதுவும் குழந்தைகளை விரைவில் பூப்பெய்த வைக்கும்.

அடுத்தது பிராய்லர் கோழி :

“சிக்கனில்லாமல் எம் பொண்ணு சாப்பிடவே மாட்டாளாக்கும்” என்று இனி பெருமை கொள்ள வேண்டாம். அதிலும் தற்போது பயன்படுத்தப்படும் பிராய்லர் கோழிக்கறிகளில் சேர்க்கப்படும் சில ஹார்மோன்கள் 8வயதிற்கு முன்னர் பூப்பெய்துவதற்கானக் காரணமாக கருதுகிறார்கள்.

.”இந்த மேனாட்டு கோழிக்கறி கடைகள் பல இப்போது படு அலங்காரமாக வந்திருக்கிறதே! . அதற்காக சிறு பிள்ளைங்களுக்கு கோழியே காட்ட வேண்டாம் என்றல்ல. நாட்டுக் கோழியை கொடுங்க (காலை இட்லிக்கு கொத்துக்கறி; மத்தியானம் சிக்கன்பிரியாணி, மாலை சிக்கன் லாலிபப் என புகுந்து விளையாடுவதை, “வளர்ற பிள்ளை அதைப்போயி..” என பேசாமல் இருக்க வேண்டாம்.)அதையும் குறைவாகொடுங்க

பிராய்லர் கோழியில் மட்டுமல்ல, பதப்படுத்தபட்டு டின்களில் அடைக்கபட்ட புலாலிறைச்சியில் அதிக எடை கிடைக்க பல ஹார்மோன்கள் சேர்ப்பது, எல்லா விலங்கிறைச்சியிலும் நடக்கிறது.

இதில் சேர்க்கப்படும் ஈஸ்டர்டியால் ஹார்மோன் கொஞ்சம் கூடுதலாக அப்படியே இறைச்சியிலும் இருப்பதுதான் இந்த இளம் வயது பூப்பிற்கு காரணம் என மேல்நாடுகளில் சண்டையே நடந்து வருகிறது. நாம தான் இந்தியாவை உரம் போட்டு வளர்க்க, அத்தனை வெளிநாட்டுக் குப்பையையும் சிகப்புக்கம்பளம் விரித்து கடை விரிக்கிறோமே! நாளை நாமும் இந்த கூக்குரலிட வேண்டியிருக்கலாம்.

அப்புறம் ஓட்ஸ்:

எப்போதும் இல்லாத அளவு இப்போது ஓட்ஸ் வியாபாரம் பெருகிவருகிறது. வணிக உத்திகள் சரியாக இருந்தால் எதையும் எங்கும் கொண்டு செல்ல்லாம் என்ற விதிக்கு தற்போதைய உதாரணம், சத்தியமங்கலம் காடு முதல் சங்கரங்கோயில் முள்ளிக்குளம் வரை அமோகமாக விற்கப்படும் ஓட்ஸ்தான்.

இந்த ஓட்ஸிலும் ஈஸ்ட்ரோஜனை அதிகம் தரும் க்ளூட்டன் சத்து கூடுதலாக உள்ளது. ஐஸோஃப்லாவின்ஸ், லிக்னைன் சத்துக்கள் அதிகமுள்ள எந்த தாவரமும் ஈஸ்ட்ரோஜனை அதிகம் உடலுக்கு தரக் கூடியவை அந்த வரிசையில் எள், உளுந்துக்கு இணையாக ஓட்ஸ்-உம் ஒய்யாரத்தில் உள்ளது. “நாங்க ஒட்ஸ் சாப்பிட்டு ஒல்லியாயிட்டு இருக்கோம்னு,” நினைச்சு ’நாகரீக’ பாட்டிகள் ஒரு டம்ளர் உங்க பேத்திக்கும் இனி அடிக்கடி தர வேண்டாம்.

அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு-என்பதை மறக்க கூடாது. கோழியோ, பாலோ ஓட்ஸோ எப்போதோ சாப்பிடுவது நிச்சயம் கேடு கிடையாது.

விளம்பரம் பார்த்தோ, வசதியாக இருக்கிறதே என்ற சோம்பலிலோ, குழந்தைகள் அடிக்கடி அவற்றைச் சாப்பிடுவதுதான் ஆபத்தாகக் கூடும்.

அட! கொஞ்சம் சீக்கிரம் வயதிற்கு வந்தால் என்ன? என்போருக்கு ஒரு செய்தி…மார்பகபுற்று நோய் வரும் வாய்ப்பு சீக்கிரம் வயதிற்கு வரும் குழந்தைகட்குத்தான் அதிகமாம். அதுவும் தற்போது மார்பகப் புற்றுநோய் மிக அதிகமாக வருவதில் மருத்துவ உலகம் திணறிக்கொண்டிருக்கிறது.

இன்னும் ஒரு கூடுதல் செய்தி.. விரைவாக பூப்பெய்தும் பெண்களின் (மன அழுத்தம் காரணமாக) வாழ்நாள் விகிதம் சரியான வயதில் பூப்பெய்தும் பெண்ணைக்காட்டிலும் குறைவு என மருத்துவப் புள்ளிவிபரங்கள் சொல்கின்றன...

நன்றி: முகநூல்.


இளம்வயதிலேயே பூப்பெய்துவதைத் தடுக்க:- EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇளம்வயதிலேயே பூப்பெய்துவதைத் தடுக்க:- L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இளம்வயதிலேயே பூப்பெய்துவதைத் தடுக்க:- EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

இளம்வயதிலேயே பூப்பெய்துவதைத் தடுக்க:- Empty Re: இளம்வயதிலேயே பூப்பெய்துவதைத் தடுக்க:-

Post by ayyasamy ram Mon Nov 17, 2014 7:37 am

8 வது படிக்கிற வயசுல பொண்ணு வயசுக்கு வரலைன்னா
அக்கம் பக்கம் இருக்கிறவங்களுக்கு பதில் சொல்ல முடியாத
காலம் இது...
-
ஊரோட ஒத்து வாழ வேண்டியதுதான்...!!
-
இளம்வயதிலேயே பூப்பெய்துவதைத் தடுக்க:- 7JSBHXUSzmhEiHYAhfHA+2wzr
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இளம்வயதிலேயே பூப்பெய்துவதைத் தடுக்க:- Empty Re: இளம்வயதிலேயே பூப்பெய்துவதைத் தடுக்க:-

Post by mbalasaravanan Mon Nov 17, 2014 1:33 pm

உண்மை தான் சிக்கன் தான் இருக்கும் பல பிரச்சனைகளுக்கு காரணம் அதில் இதுவும் ஒன்று
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

இளம்வயதிலேயே பூப்பெய்துவதைத் தடுக்க:- Empty Re: இளம்வயதிலேயே பூப்பெய்துவதைத் தடுக்க:-

Post by M.Saranya Mon Nov 17, 2014 2:14 pm

நல்ல தகவலுக்கு நன்றி...


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

இளம்வயதிலேயே பூப்பெய்துவதைத் தடுக்க:- W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

இளம்வயதிலேயே பூப்பெய்துவதைத் தடுக்க:- Empty Re: இளம்வயதிலேயே பூப்பெய்துவதைத் தடுக்க:-

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum