ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொழுகொழு குண்டுஸ் குழந்தையா -மத்தவங்களோட கிண்டலும் கேலியும் வேண்டாமே !!1

Go down

கொழுகொழு குண்டுஸ் குழந்தையா -மத்தவங்களோட கிண்டலும் கேலியும் வேண்டாமே !!1 Empty கொழுகொழு குண்டுஸ் குழந்தையா -மத்தவங்களோட கிண்டலும் கேலியும் வேண்டாமே !!1

Post by drsasikumarr Wed Nov 05, 2014 4:31 pm


கொழுகொழு குழந்தைதான் ஆரோக்கியம்' என்கிற எண்ணம், காலங்காலமாக அம்மாக்கள் மத்தியில் ஊறிப்போன விஷயம். குழந்தையின் ஆரோக்கியத்தைத் தீர்மானிப்பது அதன் புசுபுசு உடல்வாகில்லை என்பதில் படித்த பெண்களுக்கே இன்றளவும் விழிப்புணர்வு இல்லை. பருமன் என்பது பெரியவர்களுக்கு எந்தளவு ஆபத்தானதோ, அதே போன்றதுதான் குழந்தைகள் விஷயத்திலும்! வயதுக்கு மீறிய வளர்ச்சியுடன் காணப்படுகிற குழந்தைகளை சமீபகாலமாக பரவலாக பல வீடுகளிலும் பார்க்கிறோம். "குழந்தைதானே... வளர வளர சரியாயிடும்" என்கிற சமாதானத்துடன் அதை அலட்சியப்படுத்துகிற பெற்றோரையும் பார்க்கிறோம். "அந்த அலட்சியம் மிகத்தவறானது. குழந்தைப்பருவ பருமனை உடனடியாகக் கவனித்து சரி செய்ய வேண்டும்" என்று எச்சரிக்கிறார் குழந்தைகள் நல மருத்துவர் சங்கர்.

"அதிக எடையும் பருமனும் ஒன்றுக்குள் ஒன்று தொடர்புடையது. குழந்தை சராசரியைவிட கூடுதல் பருமன் இருக்கிறதாக நினைக்கிற பெற்றோர், குழந்தைகள் நல மருத்துவர்கிட்ட காட்டி உயரத்துக்கேற்ற எடை இருக்காங்கிறதை சரி பார்த்துக்கணும்" என்று ஆரம்பிக்கிற டாக்டர், குழந்தைப் பருவ பருமனுக்கான காரணங்களைப் பட்டியலிடுகிறார்.

"பாரம்பரியம் காரணமாக சில குடும்பங்கள்ல பருமன் தொடரலாம். "ஹைப்போ தைராய்டிசம்"னு சொல்ற தைராய்டு குறைவா சுரக்கிறது, நீரிழிவு போன்ற சில வகை நோய்களும் பருமனுக்குக் காரணமாகலாம். பாரம்பரிய உணவுப்பழக்கம் தவிர்க்கப்பட்டு, அதிகக்கொழுப்பு சேர்ந்த பீட்சா போன்ற ஃபாஸ்ட் ஃபுட் கலாசாரம், நடை என்ற விஷயமே மறக்கப்பட்டு, வாகன சுகத்துக்கும் லிஃப்டுக்கும் பழகிப் போனது. உடற்பயிற்சிங்கிற பேச்சுக்கே இடமில்லாம எந்நேரமும் டி.வி., கம்ப்யூட்டர் முன்னாடியே உட்கார்ந்திருக்கிறது.... இதெல்லாம் பிரதான காரணங்கள்" என்கிற டாக்டர் சங்கர், குழந்தைப்பருவ உடல் பருமனுக்கான முதல் வித்து குழந்தை பிறந்த உடனேயே விதைக்கப்படுவதையும் சுட்டிக் காட்டுகிறார்.

"குழந்தை பிறந்ததும், தாய்ப்பால் கொடுக்கிறதைத் தவிர்த்து, ஊட்டச்சத்துள்ள 'டின்' பால் பயன்படுத்தறாங்க பல அம்மாக்கள். அந்தப் பருவத்துலதான் கொழுப்புத் திசுக்கள் அதிகமாக உடம்புல உற்பத்தியாகும். அதிகப்படியான பால் உணவுகள், இந்த கொழுப்புத் திசுக்கள் அதிகரிக்கக்காரணம். இந்தத் திசுக்கள்தான் வருங்காலத்துல குழந்தைகளோட பருமன் நோய் பாதிப்புக்கு காரணமாகுது."

பருமனை சாதாரண பிரச்சினையாக நினைத்து ஏன் அலட்சியப்படுத்தக்கூடாது என்பதற்கான காரணங்களையும் விளக்குகிறார் டாக்டர்.

"குண்டா இருக்கிற குழந்தைகளுக்கு உடல் விகாரமா மாறும். மத்தவங்களோட கிண்டலும் கேலியும் சேர்ந்து, ஒரு கட்டத்துல அந்தக் குழந்தையோட தன்னம்பிக்கை குறைய ஆரம்பிக்கும். சின்னச் சின்ன பயிற்சிகளை செய்யறதுல கூட சிரமத்தை உணர்வாங்க குண்டுக் குழந்தைகள். உதாரணத்துக்கு வகுப்பறை மூணாவது, நாலாவது மாடியில இருக்கலாம். புத்தகப்பை, சாப்பாட்டுப் பைகளைத் தூக்கிட்டு படியேறவே சிரமப்படுவாங்க. சுவாசப்பையில மூச்சுத் திணறல், இதயக்கோளாறு போன்ற பிரச்சினைகளுக்குக் கூட பருமன் காரணமாகலாம்."

கணவன்மனைவி இருவரும் வேலைக்குச் செல்கிற குடும்பங்களில், தனித்து விடப்படுகிற குழந்தைகள் அதிகளவு உண்கிற அபாயம் இருப்பதாகச் சொல்கிற சங்கர், குழந்தைகளின் பருமனைக் குறைக்க எளிய வழிகளைக் காட்டுகிறார்.

* பெரியவங்களுக்கு சொல்ற மாதிரியான அளவு சாப்பாடோ, பத்தியச் சாப்பாடோ, குழந்தைகளுக்குத் தேவையில்லை. குழந்தைகள் ஏங்கிப் போயிடும். தவிர அந்த வயசுல அவங்களுக்குத் தேவையான முழுமையான சத்துகள் கிடைக்காமப் போகும் அபாயமும் உண்டு. உணவுக்கட்டுப்பாட்டுக்குப் பதிலா, உடற்பயிற்சிப் பழக்கத்தைக் கொண்டு வருவதே சிறந்தது.

* இன்னிக்கு பல வீடுகள்ல விளையாட இடம் இருக்கிறதில்லை. இருக்கிற சின்ன இடத்துலயோ, மொட்டை மாடியிலயோ குறுக்கே ஒரு கயிற்றைக் கட்டி, டென்னிகாய்ட் விளையாடச் செய்யலாம். இது சிம்பிளான, அதே சமயம் பலன் தரக்கூடிய உடற்பியிற்சி. பெரியவங்களும் சேர்ந்து விளையாடினா குடும்ப உறவுகளும் பலப்படும்.

* வீட்டுக்குள்ளேயே ஸ்டாட்டிக் சைக்கிள் வாங்கி வச்சு, டி.வி. பார்த்தபடியே குழந்தைகளை உடற்பயிற்சி செய்ய வைக்கலாம்.

* பார்ட்டி, விருந்துகளுக்குப் போறதைத் தவிர்க்கணும்.

* பாரம்பரிய உணவுகள் பக்கம் கவனத்தைத் திருப்பணும். பள்ளிக்கிடம் முடிஞ்சு வர்ற குழந்தைகளுக்கு பாக்கெட் தீனிகளை வாங்கித் தராம, வீட்லயே ஆரோக்கியமான முறைல செய்யக்கூடிய வேர்க்கடலை உருண்டை, பொரிமா உருண்டை, சுண்டல் தரலாம்.

* எல்லாத்தையும் விட முக்கியமா, அளவான உடல்வாகுதான் அழகானது, ஆரோக்கியமானதுங்கிற எண்ணத்தைக் குழந்தைங்க மனசுல பதிய வைக்கணும்.

ஆரோக்கியமான அளவான உணவும், உடற்பயிற்சியுமே குழந்தைப்பருவ பருமனுக்கான தீர்வுகள் என்கிற ஊட்டச்சத்து நிபுணர் புவனேஸ்வரி, பெற்றோருக்கான அறிவுரைகளுடன் தொடர்கிறார்.

"ஒரு வயசுல 9 கிலோ எடை இருந்தாலே போதும். குப்புற விழ வேண்டிய வயசுல குப்புற விழுந்து, தவழ வேண்டியபோது தவழ்ந்து... குழந்தையோட செய்கைகள் சாதாரணமா இருக்கிறதும், அடிக்கடி இன்ஃபெக்ஷன் வராம இருக்கிறதும்தான் முக்கியம். குழந்தைப் பருவத்துல குண்டா இருக்கிறவங்களுக்கு, வளர்ந்ததும் கொழுப்பு செல்கள் 3 மடங்காக அதிகரிக்கிற அபாயம் உண்டு.

"என் குழந்தை காய்கறியே சாப்பிடாது"ன்னு பெருமையா சொல்லிக்கிற அம்மாக்களை நிறைய பார்க்கலாம். குழந்தைகளுக்கு காய்கறி, பழங்களை சாப்பிடப் பழக்க வேண்டியது அம்மாக்கள்தான். அடுத்து, குழந்தை விரும்பி சாப்பிடுதுங்கிறதுக்காக சிப்ஸ், சாக்லெட், ஐஸ்கிரீம் போன்ற அயிட்டங்களை வாங்கிக் கொடுக்கிறதும் கூடாது. குழந்தை வளர்ந்ததும் அவனுக்கு சிகரெட் பிடிக்கும்னா வாங்கித் தருவாங்களா பெற்றோர்? அப்படித்தான் இதுவும். பிறந்த நாளோ, வேறு ஏதாவது கொண்டாட்டமோ, குழந்தைக்கு ஐஸ்கிரீம், சாக்லெட் கொடுக்கிறதுல தப்பில்லை. ஆனா, அளவைக் குறைச்சுத் தரலாம்.

எல்லாத்தையும் விட, இது வளரும் பருவங்கிறதால, குழந்தையை நிறைய விளையாட விடறது, வாக்கிங் போக வைக்கிறது, சைக்கிள் ஓட்டச் சொல்றதுனு உடல் இயக்கத்துக்கு வேலை கொடுத்தாலே போதுமானது."
drsasikumarr
drsasikumarr
பண்பாளர்


பதிவுகள் : 139
இணைந்தது : 29/10/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum