ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெள்ளாடு வளர்ப்பு – சில பயனுள்ள குறிப்புகள்

Go down

வெள்ளாடு வளர்ப்பு – சில பயனுள்ள குறிப்புகள் Empty வெள்ளாடு வளர்ப்பு – சில பயனுள்ள குறிப்புகள்

Post by drsasikumarr Mon Nov 03, 2014 4:25 pm


வெள்ளாடு வளர்ப்பு – சில பயனுள்ள குறிப்புகள்
thaliseri aadu
தலைசேரி, சேலம் கருப்பு ரக வெள்ளாடுகள் லாபம் கொடுக்கக்கூடியதாகும். தலைச்சேரி ஆடுகளின் பெயர்காரணம் – இது கேரள மாநிலத்திலுள்ள தலைச்சேரியை பூர்வீகமாக்கொண்டதால் இந்த பெயர் பெற்றது. இந்த ரக ஆடுகள் தேவைப்படுவோர் கேரள விவசாயிகளிடம் இருந்து நேரடியாக பெற முடியும். நம் தமிழிகத்தில் ஒரு சில கால்நடைப் பண்ணைகளில் இந்த ரக ஆடுகள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. இந்த தலைச்சேரி ரக ஆடுகளை பெற இந்த கால்நடைப் பண்ணைகளில் முன் பதிவு செய்து காத்திருக்க வேண்டும். உடனடியாக வேண்டுவோர் கேராளவிற்கு சென்று உடனே இந்த ரக ஆடுகளை வாங்கலாம். சேலம் கருப்பு ரகத்தை சார்ந்த ஆடுகளை தமிழகமெங்கும் எந்த பகுதிகளில் வளர்க்ககூடிய வகையைச் சார்ந்தது. சேலம் மாவட்டத்தில் மேச்சேரி, கொளத்தூர், மேட்டூர், வெப்பூர் ஆகிய ஊர்களில் இந்த ஆடுகள் விலைக்கு கிடைக்கும்.

ஆட்டுப்பண்ணைகள் வைக்க விரும்புபவர்கள் முதலில் அதற்கான முறையான பயிற்சி பெற வேண்டும். அதற்கு உங்களுக்கு அருகில் உள்ள கால்நடைமருத்துவ ஆராய்ச்சி நிலையங்களில் நடத்தப்படும் வெள்ளாடு வளர்ப்பு பயிற்சியில் கலந்துகொண்டு, அங்கே கிடைக்கும் பயிற்சியின் வாயிலாக நீங்கள் ஒரு சிறந்த வெள்ளாடு வளர்ப்பாளராக பரிமளிக்க முடியும்.

thaliseri aadu
ஆட்டுப்பண்ணை வைக்க தற்போதைய சூழலில் 10 ஆடுகள் கொண்ட பண்ணையை அமைப்பதற்கு சுமார் 1 லட்சம் முதல் ஒன்றரை லட்சம் ரூபாய் செலவாகும்.

thaliseri aadu
வகைப்படுத்தப்பட்டு தனியாக பட்டியில் அடைத்து வைக்கப்பட்ட ஆடுகள்.
ஆடு வளர்ப்பது என்று நீங்கள் முடிவெடுத்துவிட்டால் அதற்கான மேய்ச்சல் நிலம் மற்றும் தீவன வகைகளை பண்ணை ஆரம்பிப்பதற்கு முன்பே தயார் செய்ய வேண்டும். ஆடுகளை வாங்குவதற்கு முன்பு அதற்குத் அடிப்படைத் தேவையான தீவனத்தை முதலில் தயார் செய்து கொள்ளவேண்டும். தீவன வகைகளை என்று எடுத்துக்கொண்டால் சுபா புல், அகத்தி, கல்யாண முருங்கை, கிளைரிசிடியா, வேம்பு என ஐந்து மரங்களாவது குறைந்த பட்சமாக இருக்கவேண்டும்.
thaliseri aadu
தலைசேரி இன குட்டிகளுக்கென தனிப்பட்ட கொட்டகை..
இத்தீவன வகை மரங்களின் வளர்காலம் சுமார் இரண்டு ஆண்டுகள். வெள்ளாடுகளைப் பற்றிச் சொல்லித் தெரிய வேண்டாம். அது பலசுவை விரும்பிகள், பல்வேறு புற்களையும், இலைதழைகளையும் தின்று வளர்பவை.. எனவே தொடர்ந்து ஒரே வகையான தீவனத்தை கொடுப்பதற்கு மாற்றாக சில வகைகளை தீவனங்களை மாற்றி மாற்றி கொடுத்தால் அதற்கும் வயிறு நிரம்பிய திருப்தி இருக்கும். எனவே முதலில் இதை நீங்கள் உங்கள் நிலத்தில் வளர்த்துக்கொண்டு பிறகு ஆடுகளையும், பண்ணையையும் தயார் செய்யலாம்.
thaliseri aadu
தீவன வகைகள்
இன்றைய கால கட்டத்தில் விற்கும் விலைவாசியில், எதுவும் விலைகொடுத்து வாங்கினால் அது இலாபத்தை தராது. எனவே முடிந்தளவு ஆடு வளர்ப்புக்குத் தேவையான தீவனங்களை நாமே உற்பத்தி செய்து கொடுத்தால் அதில் லாபம் பார்க்க முடியும்.



thaliseri aadu
தீவன வகைகள்
ஆடு வளர்ப்பது என்று முடிவாகிவிட்டது. எப்படித் தொடங்குவது?

இதற்கு அரசும், அரசு சார்ந்த நிதி நிறுவனங்களும் வங்கிக் கடன் கொடுக்கிறது. வங்கிக் கடன் கொடுக்க முதலில் திட்ட அறிக்கை கேட்பார்கள்.. ஆடு வளர்ப்பிற்கான திட்ட அறிக்கையை, நீங்கள் நான் முன்பே கூறியபடி உங்கள் அருகாமையிலுள்ள கால்நடை ஆராய்ச்சி நிலையத்தை அணுகி, திட்ட அறிக்கையைப் பெற முடியும். ஆடு வளர்ப்பிற்கான பயிற்சியையும் அவர்களிடமே பெற்று , வேண்டிய விபரங்களையும், உதவிகளை பெற முடியும்.

thaliseri aadu
இந்த கால்நடை ஆராய்ச்சி நிலையத்தால் நடத்தப்படும் வெள்ளாடு பயிற்சியில் கலந்துகொண்டு அவர்கள் கொடுக்கும் சான்றிதழ்களையும், மாதிரி திட்ட அறிக்கையும் உங்களுக்கு வங்கிக்கடன் வாங்க உதவியாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்: ஆடு வளர்ப்பில் முதலிடம் பெறுவது ஈரோடு மாவட்டம். இரண்டாம் திருநெல்வேலி. மூன்றாம் இடத்தில் சேலம் மாவட்டமும் இருக்கிறது. இதைத் தொடர்ந்து தூத்துக்குடி, சிவகங்கை என பத்து மாவட்டங்களில் சிறப்பாக ஆடு வளர்ப்பு தொழில் நடந்துவருகிறது.

மேய்ச்சல் நிலங்கள் ரியல் எஸ்ட்டேட் போன்ற தொழில்களால் அருகி வருவதால் ஆடு வளர்ப்போர் , வேறு தொழில்களுக்கு மாற வேண்டிய கட்டாய சூழ்நிலையில் இதுபோன்றதொரு பண்ணை அமைத்து ஆடுவளர்ப்பதன் மூலம் தங்களின் தொழில்களைத் தொடரவும், வருவாயை இழக்காமலும் பார்த்துக்கொள்ளலாம்.

தமிழ்நாட்டில் பெரிய ஆட்டுச் சந்தைகள் : மேச்சேரி, மோர்பாளையம், திருச்செங்கோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஆத்தூர், திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம், தூத்துக்குடி மாவட்டம் சீவலப்பேரி, மணியாச்சி

மேற்கண்ட இடங்கள் அனைத்தும் அதிகளவு ஆடுகள் விற்பனை செய்யப்படுகிற பிரபலமான ஆட்டுச் சந்தைகளாகும்.

நாமக்கல் மாவட்டத்திற்கான வேளாண்மை விரிவாக்க மற்றும் கால்நடை மருத்துவக் கல்லூரியின் முகவரி:-

திட்ட ஒருங்கிணைப்பாளர்
வேளாண் அறிவியல் மையம்
கால்நடைக் கல்லூரி & ஆராய்ச்சி நிறுவனம்

எஸ்.கரடு (அஞ்சல்)
நாமக்கல் – 637001
தமிழ்நாடு
போன் : 04286 – 266345 / 231626
ஃபேக்ஸ்: 04286 – 266345 / 266484
ஈமெயில் : namakkalkvk@hotmail.com

சேலம் மாவட்டத்திற்கான வேளான் அறிவியல் மையத்திற்கான முகவரி:-

திட்ட ஒருங்கிணைப்பாளர்
வேளாண் அறிவியல் மையம்
சந்தியூர் – 636204
சேலம் மாவட்டம்
தமிழ்நாடு
போன்: 0427 – 2422550
ஃபேக்ஸ் : 04268 – 2422269

மேலும் விபரம் வேண்டுவோர்.. உங்கள் அருகாமையில் மாவட்ட கால்நடை ஆராய்ச்சி நிலையத்தை அணுகுங்கள். நன்றி.!!
drsasikumarr
drsasikumarr
பண்பாளர்


பதிவுகள் : 139
இணைந்தது : 29/10/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum