புதிய பதிவுகள்
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆப்பிள் போன் அதிர்ச்சி!
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
ஆப்பிள் போன் அதிர்ச்சி!
அண்டன் பிரகாஷ்
நியூட்டன்’... இந்தப் பெயரை வாசித்ததும் புவியீர்ப்பு விசையைக் கண்டறிந்த சர் ஐசக் நியூட்டன் மட்டுமே உங்கள் நினைவுக்கு வந்தால், 'ஆப்பிள்’ நிறுவனத்தின் மெகா தோல்வி பற்றி அறியாதவர் நீங்கள்! 90-களின் ஆரம்பத்தில் ஆப்பிள் நிறுவனம் தயாரித்து வெளியிட்ட மொபைல் சாதனம் 'நியூட்டன்’. அலைபேசி, டிஜிட்டல் இசைப் பேழை என்பது எல்லாம் என்னவென்றே அறியாத அந்த நாட்களில் Personal Digital Assistant, சுருக்கமாக 'PDA’ என்ற வகையறாவை அறிமுகப்படுத்தியதே ஆப்பிள்தான். 20 வருடங்களுக்கு முன் இருந்த கணினி தொழில்நுட்பங்களுடன் ஒப்பிடும்போது அற்புதமான சாதனம் நியூட்டன். பிரத்யேகத் தகவல்களைச் சேகரிக்கும் பேழையாக மட்டும் இல்லாமல், திரை மீது எழுதப்படும் கையெழுத்தைப் புரிந்துகொள்ளும் மென்பொருள், ஃபேக்ஸ் அனுப்பும் வசதி என அப்போது அது அதிநவீனம். அந்த நாட்களில் கவர்ச்சிகரமான தனது மேக்கிண்டோஸ் கணினிகளால் மதிக்கப்பட்டிருந்த ஆப்பிள், சந்தையின் கவனத்தையும் நியூட்டனுக்கு ஈர்த்தது. ஆனால், சாதனத் தயாரிப்பில் இருந்து, என்ன வகையான மென்பொருட்கள் இருக்க வேண்டும் என்பது வரை நியூட்டன் சம்பந்தப்பட்ட அனைத்திலும் ஆரம்பத்தில் இருந்தே சொதப்பியது ஆப்பிள்.
90-களின் கடைசியில் ஆப்பிளின் தலைமைப் பொறுப்பை ஸ்டீவ் ஜாப்ஸ் மீண்டும் ஏற்றுக்கொண்டதும் செய்த முதல் வேலை நியூட்டனை இழுத்து மூடியதுதான். 'நியூட்டன்’ அனுபவத்தில் இருந்து தெளிவான பாடங்கள் கற்றுக்கொண்டு, 2000-ம் ஆண்டின் தொடக்கத்தில் ஆப்பிள் வெளியிட்ட ஐ-பாட், அதைத் தொடர்ந்து தீர்க்கமான திட்டங்களுடன் சீரான இடைவேளையில் ஒன்றன் பின் ஒன்றாக ஆப்பிள் வெளியிட்ட மொபைல் சாதனங்கள், மனித இயந்திர இடையீடு (human machine interaction) என்பதில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கிவைத்தது.
முன்னோட்டம் முடிந்தது. இனி நிகழ்காலம்...
கடந்த வாரம் ஆப்பிளின் புதிய 'ஐபோன் மாடல் 6’ இந்தியா, சீனா மற்றும் பல ஆசிய நாடுகளில் வெளியிடப்பட்டிருக்கிறது. ஆப்பிளின் வாழ்க்கையை 'ஸ்டீவ் ஜாப்ஸுக்கு முன்’, 'ஸ்டீவ் ஜாப்ஸுக்குப் பின்’ என எண்ணிப்பார்ப்பதைத் தவிர்க்க முடியவில்லை. காரணம், ஜாப்ஸ் தலைமையில் இருந்தவரை குறிப்பிடத்தக்க புதுமையாக்கங்களை, சிலிர்க்கவைக்கும் பயனீட்டு அனுபவங்களை ஆப்பிள் சாதனங்களில் நிரப்பிக்கொடுக்கும் வித்தகராக இருந்தார்.
ஆனால், கடந்த இரண்டு வருடங்களாக ஆப்பிளின் மொபைல் சாதன வெளியீடுகளைப் பார்க்கும்போது விரக்தியே மிஞ்சுகிறது. ஏற்கெனவே இருக்கும் சாதனங்களில், மிகச் சிறிய மேம்பாடுகளைக் கொண்டுவந்து, அவற்றைச் சந்தைப்படுத்தி, பணம் ஈட்டுவதில் மட்டுமே ஆப்பிள் லயிப்புடன் இருக்கிறதோ என்ற சலிப்பு தோன்றுகிறது.
மிகப் பெரிய அளவில் இருக்கும் இந்த 'iPhone 6 Plus’ சாதனத்தை பாக்கெட்டில் வைத்து அமர்ந்தால் வளைந்துவிடுகிறது என எழுந்த பயனீட்டாளர் புகார்களுக்குப் பல நாட்களுக்குப் பின்னரும் எந்தப் பதிலும் கொடுக்கவில்லை ஆப்பிள். சென்ற வாரத்தில், 'அப்படியெல்லாம் வளைவது அரிதிலும் அரிது’ எனத் தட்டையான ஸ்டேட்மென்ட் விட்டிருக்கிறது ஆப்பிள். இந்த நேரத்தில் 'ஐபோன் 4’ வெளியான சமயம் நடந்த ஒரு சம்பவத்தை நினைவுபடுத்துவது பொருத்தமாக இருக்கும்.
'ஐபோன் 4’ சாதனத்தைப் பயன்படுத்தி பேசும்போது சிக்னல் துண்டிக்கப்பட்டுவிடுகிறது என்ற புகார், அந்த அலைபேசி வெளியான அடுத்த சில நாட்களில் முணுமுணுக்கப்பட்டது. குடும்பத்துடன் விடுமுறையில் சென்றிருந்த ஜாப்ஸ், உடனடியாக கலிஃபோர்னியா வந்து பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்தார். அதில், 'எல்லா போன்களையும் போலவே ஐபோனிலும் சிக்னல் ட்ராப் ஆகலாம்’ என்பதை செய்முறை விளக்கமாகப் புரியவைத்ததுடன், 'அலைபேசியின் மீது அணிந்துகொள்ளும் வகையில் ஆன்டனா ஒன்றை ஆப்பிள் இலவசமாகக் கொடுக்கும்’ எனவும் அறிவித்தார். ஆப்பிளின் அந்த 'ஆட்டிட்யூட்’ இப்போது எங்கே?
இதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். ஆப்பிள் ஐபோன்கள் தொடர்பான மிக முக்கியமான சர்ச்சை இது.
முதல் தலைமுறை ஐபோன் வெளியாகி ஏழு வருடங்கள் ஆகின்றன. ஆப்பிள் சாதனங்கள் வலுவாகக் கட்டமைக்கப்படுவதால் பல வருடங்களுக்கு முன்பு இருந்த சாதனங்கள் உடைந்துவிடாமல் உறுதியான வடிவிலேயே இருக்கின்றன. ஆனால், ஆப்பிள் தொடர்ந்து வெளியிடும் iOS இயங்கு மென்பொருள் பழைய சாதனங்களின் இயக்கத்தை வெகுவாகப் பாதித்து, முயல் வேகத்தில் இருக்கும் அலைபேசி செயல்பாட்டை ஆமை வேகத்துக்குக் கொண்டுவந்துவிடுகிறது. புதுமையாக்கலில் பெரிய மாற்றங்களை புதிய சாதனங்களில் கொண்டுவந்தபடி இருந்தால், பயனீட்டாளர்கள் இயல்பாகவே புதிய சாதனங்களுக்குச் செல்வார்கள். மிகச் சில மேம்பாடுகள் மட்டுமே இருந்தால், அவர்கள் தங்களது பழைய சாதனங்களைத்தானே தொடர்ந்து பயன்படுத்துவார்கள்? ஆனால், பழைய சாதனங்களை மாற்றான்தாய் மனப்பான்மையுடன் நடத்தும் ஆப்பிள், அதை 'எக்ஸ்சேஞ்ச்’ முறையில் பெற்றுக்கொண்டு புது சாதனங்களை விற்பதிலேயே முனைப்பாக இருக்கிறது.
இந்த மனப்பான்மை ஆப்பிள் நிறுவனத்தை எங்கே கொண்டுசென்று நிறுத்தும்?
ஆப்பிள் தனது கணக்கில் பில்லியன்களை இடுக்கிவைத்திருக்கிறது. அதன் பொருட்கள் இன்றும் விரும்பியே வாங்கப்படுகின்றன. ஆனால், புதுமையாக்கலில் அடுத்தபடிக்குச் செல்ல முடியவில்லை என்றால், 'ஆப்பிள் என்று ஒரு நிறுவனம் இருந்தது’ என இன்றைய சந்ததியினர், இனி வரும் சந்ததியினருக்கு சொல்லும் நிலையை நோக்கியே செல்லும்!
என்ன பிரச்னை ஆப்பிள் போன்களில்?
ஆப்பிள் ஐபோன் வாங்கி என்னதான் முறையாகப் பராமரித்தாலும், ஒன்று இரண்டு வருடங்களில் காரணமே இல்லாமல் பிரச்னை செய்ய ஆரம்பிக்கும். அலைபேசி அடிக்கடி ஹேங் ஆகும். ஆரம்பத்தில் கில்லியாகத் துள்ளிய அப்ளிகேஷன்கள், நாளடைவில் மிக மெதுவாகத் திறக்கும். சில அப்ளிகேஷன்கள் வேலையே செய்யாது. ஆப்பிள் போன்களை சர்வீஸ் செய்ய முடியாது. புதிய போன்தான் வாங்க வேண்டும். காரணம், ஆப்பிளின் லேட்டஸ்ட் மென்பொருட்கள் பழைய போன்களுக்கு செட் ஆகாது.
ஆப்பிளின் லேட்டஸ்ட் இயங்குமென்பொருள் ஐ.ஓ.எஸ்-8. இதை ஆப்பிள் 3 மற்றும் ஆப்பிள் 4 மாடல் போன் வைத்திருப்பவர்கள் அப்டேட் செய்ய முடியாது. ஆப்பிள் 4-எஸ் மற்றும் அதற்கு மேற்பட்ட மாடல்களை வைத்திருப்பவர்கள்தான் அப்டேட் செய்ய முடியும். அதனால், ஆப்பிள் 3 மற்றும் ஆப்பிள் 4 மாடல் போன் வைத்திருப்பவர்கள் வேறு வழியே இல்லாமல், ஆப்பிள் 4-எஸ் மற்றும் அதற்கு மேற்பட்ட மாடல்களைத்தான் வாங்க வேண்டும். ஆக, இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆப்பிள் வாடிக்கையாளர்கள் புதிய ஐபோன்களுக்கு மாற வேண்டிய கட்டாயத்தை ஆப்பிள் உண்டாக்குகிறது.
ஆப்பிள் ஐபோன்கள் புதிதாக விலைக்கு வரும்போது குறைந்தபட்ச விலை ரூபாய் 40 ஆயிரம். இரண்டு ஆண்டுகள் கழித்து அந்த போனின் விலை 15 ஆயிரம் ரூபாய்க்கும் கீழ் குறைந்துவிடும். ஆனால், ஐ.ஓ.எஸ்-8 இயங்கு மென்பொருளே அலைபேசியில் 5 ஜி.பி-க்கு மேற்பட்ட இடத்தை ஆக்கிரமிக்கும் என்பதால், நீங்கள் குறைந்தபட்சம் 16 ஜி.பி நினைவுத்திறன்கொண்ட போன்களைத்தான் வாங்க வேண்டி வரும். அதற்கு மீண்டும் 50 ஆயிரம் ரூபாய் வரை செலவழிக்க வேண்டியிருக்கும்!
விகடன்

- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஆப்பிள் ஐபோன்கள் புதிதாக விலைக்கு வரும்போது குறைந்தபட்ச விலை ரூபாய் 40 ஆயிரம். இரண்டு ஆண்டுகள் கழித்து அந்த போனின் விலை 15 ஆயிரம் ரூபாய்க்கும் கீழ் குறைந்துவிடும். ஆனால், ஐ.ஓ.எஸ்-8 இயங்கு மென்பொருளே அலைபேசியில் 5 ஜி.பி-க்கு மேற்பட்ட இடத்தை ஆக்கிரமிக்கும் என்பதால், நீங்கள் குறைந்தபட்சம் 16 ஜி.பி நினைவுத்திறன்கொண்ட போன்களைத்தான் வாங்க வேண்டி வரும். அதற்கு மீண்டும் 50 ஆயிரம் ரூபாய் வரை செலவழிக்க வேண்டியிருக்கும்!
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
மேற்கோள் செய்த பதிவு: 1099156krishnaamma wrote:ஆப்பிள் ஐபோன்கள் புதிதாக விலைக்கு வரும்போது குறைந்தபட்ச விலை ரூபாய் 40 ஆயிரம். இரண்டு ஆண்டுகள் கழித்து அந்த போனின் விலை 15 ஆயிரம் ரூபாய்க்கும் கீழ் குறைந்துவிடும். ஆனால், ஐ.ஓ.எஸ்-8 இயங்கு மென்பொருளே அலைபேசியில் 5 ஜி.பி-க்கு மேற்பட்ட இடத்தை ஆக்கிரமிக்கும் என்பதால், நீங்கள் குறைந்தபட்சம் 16 ஜி.பி நினைவுத்திறன்கொண்ட போன்களைத்தான் வாங்க வேண்டி வரும். அதற்கு மீண்டும் 50 ஆயிரம் ரூபாய் வரை செலவழிக்க வேண்டியிருக்கும்!
ஆப்பிள் பெயருக்கேற்ற போன்..ஆப்பிள் பழமும் ஆப்பிள் போனும் பணம் வைத்துக்கொண்டு என்ன செய்வதென்று தெரியாதவர்கள்தாம் வாங்கமுடியும் போல...நமக்கெல்லாம் ச்சீ..சீ...இந்த பழம் புளிக்கும் கதைதான்..ஆனால் இப்போது ஆப்பிள் வாங்குபவர்களுக்கே புளித்துவிடும் போலிருக்கிறது...
எல்லாம் வியாபார அரசியல்...
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
ஆன்ட்ராய்ட் போனின் வெற்றிகளுளுக்கு ஆப்பிளின் இந்த கொடூர வியாபார புத்தியும் ஒரு காரணம்...சாம்சங் மீது வழக்கு போடும் அளவுக்கு அவர்களை தள்ளியது..சாம்சங்கின் வெற்றிதான்..
ஆப்பிளின் மாயை கலைத்த ஆன்ட்ராய்டுக்கு ஒரு சல்யூட்...

முட்டாள்தனமான ஒரு கட்டுரை அதுவும் விகடன் பதிப்பகத்தில் இருந்து......
ஒரு திரைப்படத்தை பார்க்காமலேயே விமர்சனத்தை படித்துவிட்டு விமர்சனம் செய்பவர்களை போல உள்ளது.
ஆப்பிள் தயாரிப்புகளை பயன்படுத்துபவர்கள் யாருமே இல்லையா விகடன் நிறுவனத்தில்
பன்றி குட்டி போடுவதை போல சிறிய சிறிய மாற்றங்களை வைத்து பல மாடல்களை ஒரே நேரத்தில் விற்று முடிந்தவரை பணத்தை சம்பாதிக்கவேண்டுமென்ற நோக்கத்துடன் செயல்படும் samsung நிறுவனத்தை , சிங்ககுட்டி போல ஒன்று என்றாலும் அதிரடியாக உலகமே ஆச்சரியத்துடன் பார்க்கும் ஆப்பிள் நிறுவனத்துடன் compare செய்கிறார்கள்.
ஒரு திரைப்படத்தை பார்க்காமலேயே விமர்சனத்தை படித்துவிட்டு விமர்சனம் செய்பவர்களை போல உள்ளது.
ஆப்பிள் தயாரிப்புகளை பயன்படுத்துபவர்கள் யாருமே இல்லையா விகடன் நிறுவனத்தில்
பன்றி குட்டி போடுவதை போல சிறிய சிறிய மாற்றங்களை வைத்து பல மாடல்களை ஒரே நேரத்தில் விற்று முடிந்தவரை பணத்தை சம்பாதிக்கவேண்டுமென்ற நோக்கத்துடன் செயல்படும் samsung நிறுவனத்தை , சிங்ககுட்டி போல ஒன்று என்றாலும் அதிரடியாக உலகமே ஆச்சரியத்துடன் பார்க்கும் ஆப்பிள் நிறுவனத்துடன் compare செய்கிறார்கள்.
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
ஆப்பிளில் உள்ள ஒரே நல்ல விஷயம் ஆண்டி வைரஸ் தேவை இல்லை என்பது தான்.
Rs.10000 க்குக் கீழே, சிறந்த போனை வாங்குபவரே புத்திசாலி. எப்போது வேண்டுமானாலும், என்னசெய்தாலும், தயக்கமின்றி வீசி எறிந்து விட்டு, புதிய மாடல் போன் ஒன்றை வாங்கிக்கொள்ளலாம். ஆனால், 50 ஆயிரம், இப்போது 80 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கும் போனை அப்படி வீச மனம் வருமா?
இந்த மனப்பான்மை ஆப்பிள் நிறுவனத்தை எங்கே கொண்டுசென்று நிறுத்தும்?
நோக்கியா மாதிரி அழியும்
N 97 ன்னு ஒரு உருப்படாத போனை 2007ல் கொண்டு வந்தானுங்க 35000 ரூ விலை . அது 3000கு கூட பெறாத போன், அன்னைக்கு கிடைச்சுது சாபம் , நோகியா அழிவும் ஆரம்பம்.
ஆனால், பெரும்பாலும் இந்த போன் வைத்திருப்பவர்கள், 2 வருஷங்களுக்கு ஒருமுறை போன் மாற்றும் வசதி கொண்டவர்களாகத்தான் இருக்கிறார்கள்!

அந்த வரிகளை நீக்கிவிட்டேன் அண்ணா...தேவை இல்லை என்றே தோன்றுகிறது..
மேற்கோள் செய்த பதிவு: 1099166தமிழ்நேசன்1981 wrote:ஆப்பிள் பெயருக்கேற்ற போன்..ஆப்பிள் பழமும் ஆப்பிள் போனும் பணம் வைத்துக்கொண்டு என்ன செய்வதென்று தெரியாதவர்கள்தாம் வாங்கமுடியும் போல...நமக்கெல்லாம் ச்சீ..சீ...இந்த பழம் புளிக்கும் கதைதான்..ஆனால் இப்போது ஆப்பிள் வாங்குபவர்களுக்கே புளித்துவிடும் போலிருக்கிறது...
எல்லாம் வியாபார அரசியல்...
ஆப்பிள் நிறுவனத்தின் பல ரகசியங்களை திருடி பணம் சம்பாதித்தது சாம்சுங் இதை யாரும் மறுக்க முடியாது .அதற்க்கு நஷ்ட ஈடாக பெருந்தொகையை சாம்சுங் ஆப்பிள் நிறுவனத்திற்கு அளித்தது இது கூட நினைவிருக்கலாம்.
ஆப்பிள் போன் வாங்குபவர்கள் யாரும் அதை பயன் படுத்த தெரியாதவர்கள் அல்ல ..அதை வாங்குவபர்கள் எல்லோருமே வாலிப வயது உடையவர்கள் தான்.
ஆப்பிள் போன் வாங்கி புளித்து போய் விட்டது என்று யாரும் சொல்லி நான் கேட்டது இல்லை
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
தமிழ்நேசன்1981 wrote:ஆப்பிளில் உள்ள ஒரே நல்ல விஷயம் ஆண்டி வைரஸ் தேவை இல்லை என்பது தான்.
பயன்படுத்தியவர்களிடம் கேட்டுப் பாருங்கள் அதன் nall விஷயங்கள் வேறு எவ்வளவு இருக்கிறது என்று
Rs.10000 க்குக் கீழே, சிறந்த போனை வாங்குபவரே புத்திசாலி. எப்போது வேண்டுமானாலும், என்னசெய்தாலும், தயக்கமின்றி வீசி எறிந்து விட்டு, புதிய மாடல் போன் ஒன்றை வாங்கிக்கொள்ளலாம். ஆனால், 50 ஆயிரம், இப்போது 80 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கும் போனை அப்படி வீச மனம் வருமா?
80 ஆயிரம் ரூபாய்க்கு போன் வாகுவபனுக்கு அதற்கேற்ற வருமானமும் இருக்கும்.இன்றும் பலர் 5000 கீழே தான் போன் வாங்குகிறார்கள் .அவர்களுக்கு 1000 பெரிய தொகை
அவரவர் தேவைகேற்ப வருமானத்திற்கேற்ப பயன்பாடுகளும் மாறும்.
நோக்கியா மாதிரி அழியும்
N 97 ன்னு ஒரு உருப்படாத போனை 2007ல் கொண்டு வந்தானுங்க 35000 ரூ விலை . அது 3000கு கூட பெறாத போன், அன்னைக்கு கிடைச்சுது சாபம் , நோகியா அழிவும் ஆரம்பம்.
அன்று கூட எத்தனை பேர் நோக்கியா N97 வாங்கினார்கள் ..எத்தனை புதிய விஷயங்கள் அதில் இருந்தன
ஆனால், பெரும்பாலும் இந்த போன் வைத்திருப்பவர்கள், 2 வருஷங்களுக்கு ஒருமுறை போன் மாற்றும் வசதி கொண்டவர்களாகத்தான் இருக்கிறார்கள்![/b]
பெரும்பாலும் எல்லோருமே 2 வருடத்திற்க்கு ஒருமுறை தங்கள் பழைய போனை மாற்றி விட்டு புதிய போனைத் தான் வாங்குகிறார்கள்
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
மேற்கோள் செய்த பதிவு: 1099225SajeevJino wrote:தமிழ்நேசன்1981 wrote:ஆப்பிளில் உள்ள ஒரே நல்ல விஷயம் ஆண்டி வைரஸ் தேவை இல்லை என்பது தான்.
பயன்படுத்தியவர்களிடம் கேட்டுப் பாருங்கள் அதன் nall விஷயங்கள் வேறு எவ்வளவு இருக்கிறது என்றுRs.10000 க்குக் கீழே, சிறந்த போனை வாங்குபவரே புத்திசாலி. எப்போது வேண்டுமானாலும், என்னசெய்தாலும், தயக்கமின்றி வீசி எறிந்து விட்டு, புதிய மாடல் போன் ஒன்றை வாங்கிக்கொள்ளலாம். ஆனால், 50 ஆயிரம், இப்போது 80 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கும் போனை அப்படி வீச மனம் வருமா?
80 ஆயிரம் ரூபாய்க்கு போன் வாகுவபனுக்கு அதற்கேற்ற வருமானமும் இருக்கும்.இன்றும் பலர் 5000 கீழே தான் போன் வாங்குகிறார்கள் .அவர்களுக்கு 1000 பெரிய தொகை
அவரவர் தேவைகேற்ப வருமானத்திற்கேற்ப பயன்பாடுகளும் மாறும்.
நோக்கியா மாதிரி அழியும்
N 97 ன்னு ஒரு உருப்படாத போனை 2007ல் கொண்டு வந்தானுங்க 35000 ரூ விலை . அது 3000கு கூட பெறாத போன், அன்னைக்கு கிடைச்சுது சாபம் , நோகியா அழிவும் ஆரம்பம்.
அன்று கூட எத்தனை பேர் நோக்கியா N97 வாங்கினார்கள் ..எத்தனை புதிய விஷயங்கள் அதில் இருந்தனஆனால், பெரும்பாலும் இந்த போன் வைத்திருப்பவர்கள், 2 வருஷங்களுக்கு ஒருமுறை போன் மாற்றும் வசதி கொண்டவர்களாகத்தான் இருக்கிறார்கள்![/b]
பெரும்பாலும் எல்லோருமே 2 வருடத்திற்க்கு ஒருமுறை தங்கள் பழைய போனை மாற்றி விட்டு புதிய போனைத் தான் வாங்குகிறார்கள்
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» ப்ரெஷ் ஆப்பிள்?! -ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்
» பிணமாக கிடந்தவர் ஆப்பிள் ஜூஸ் கேட்டதால் அதிர்ச்சி
» 'சீன எல்லைக்குள் அருணாசலப் பிரதேசம்'-அதிர்ச்சி தரும் ஆப்பிள்
» போன் பேசிக் கொண்டே 2 டோஸ் தடுப்பூசி போட்ட நர்ஸ்! – உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி!
» ஆப்பிள் மொபைல்களுக்கு பதிலாக ஆப்பிள் பழங்களை வாங்கி ஏமாந்த பெண்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3