புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆப்பிள் போன் அதிர்ச்சி!  Poll_c10ஆப்பிள் போன் அதிர்ச்சி!  Poll_m10ஆப்பிள் போன் அதிர்ச்சி!  Poll_c10 
6 Posts - 67%
heezulia
ஆப்பிள் போன் அதிர்ச்சி!  Poll_c10ஆப்பிள் போன் அதிர்ச்சி!  Poll_m10ஆப்பிள் போன் அதிர்ச்சி!  Poll_c10 
2 Posts - 22%
வேல்முருகன் காசி
ஆப்பிள் போன் அதிர்ச்சி!  Poll_c10ஆப்பிள் போன் அதிர்ச்சி!  Poll_m10ஆப்பிள் போன் அதிர்ச்சி!  Poll_c10 
1 Post - 11%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆப்பிள் போன் அதிர்ச்சி!  Poll_c10ஆப்பிள் போன் அதிர்ச்சி!  Poll_m10ஆப்பிள் போன் அதிர்ச்சி!  Poll_c10 
1 Post - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆப்பிள் போன் அதிர்ச்சி!


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Fri Oct 24, 2014 7:46 pm

ஆப்பிள் போன் அதிர்ச்சி!
அண்டன் பிரகாஷ்


நியூட்டன்’... இந்தப் பெயரை வாசித்ததும் புவியீர்ப்பு விசையைக் கண்டறிந்த சர் ஐசக் நியூட்டன் மட்டுமே உங்கள் நினைவுக்கு வந்தால், 'ஆப்பிள்’ நிறுவனத்தின் மெகா தோல்வி பற்றி அறியாதவர் நீங்கள்! 90-களின் ஆரம்பத்தில் ஆப்பிள் நிறுவனம் தயாரித்து வெளியிட்ட மொபைல் சாதனம் 'நியூட்டன்’. அலைபேசி, டிஜிட்டல் இசைப் பேழை என்பது எல்லாம் என்னவென்றே அறியாத அந்த நாட்களில் Personal Digital Assistant, சுருக்கமாக 'PDA’ என்ற வகையறாவை அறிமுகப்படுத்தியதே ஆப்பிள்தான். 20 வருடங்களுக்கு முன் இருந்த கணினி தொழில்நுட்பங்களுடன் ஒப்பிடும்போது அற்புதமான சாதனம் நியூட்டன். பிரத்யேகத் தகவல்களைச் சேகரிக்கும் பேழையாக மட்டும் இல்லாமல், திரை மீது எழுதப்படும் கையெழுத்தைப் புரிந்துகொள்ளும் மென்பொருள், ஃபேக்ஸ் அனுப்பும் வசதி என அப்போது அது அதிநவீனம். அந்த நாட்களில் கவர்ச்சிகரமான தனது மேக்கிண்டோஸ் கணினிகளால் மதிக்கப்பட்டிருந்த ஆப்பிள், சந்தையின் கவனத்தையும் நியூட்டனுக்கு ஈர்த்தது. ஆனால், சாதனத் தயாரிப்பில் இருந்து, என்ன வகையான மென்பொருட்கள் இருக்க வேண்டும் என்பது வரை நியூட்டன் சம்பந்தப்பட்ட அனைத்திலும் ஆரம்பத்தில் இருந்தே சொதப்பியது ஆப்பிள்.

90-களின் கடைசியில் ஆப்பிளின் தலைமைப் பொறுப்பை ஸ்டீவ் ஜாப்ஸ் மீண்டும் ஏற்றுக்கொண்டதும் செய்த முதல் வேலை நியூட்டனை இழுத்து மூடியதுதான். 'நியூட்டன்’ அனுபவத்தில் இருந்து தெளிவான பாடங்கள் கற்றுக்கொண்டு, 2000-ம் ஆண்டின் தொடக்கத்தில் ஆப்பிள் வெளியிட்ட ஐ-பாட், அதைத் தொடர்ந்து தீர்க்கமான திட்டங்களுடன் சீரான இடைவேளையில் ஒன்றன் பின் ஒன்றாக ஆப்பிள் வெளியிட்ட மொபைல் சாதனங்கள், மனித இயந்திர இடையீடு (human machine interaction) என்பதில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கிவைத்தது.

முன்னோட்டம் முடிந்தது. இனி நிகழ்காலம்...


ஆப்பிள் போன் அதிர்ச்சி!  P32

கடந்த வாரம் ஆப்பிளின் புதிய 'ஐபோன் மாடல் 6’ இந்தியா, சீனா மற்றும் பல ஆசிய நாடுகளில் வெளியிடப்பட்டிருக்கிறது. ஆப்பிளின் வாழ்க்கையை 'ஸ்டீவ் ஜாப்ஸுக்கு முன்’, 'ஸ்டீவ் ஜாப்ஸுக்குப் பின்’ என எண்ணிப்பார்ப்பதைத் தவிர்க்க முடியவில்லை. காரணம், ஜாப்ஸ் தலைமையில் இருந்தவரை குறிப்பிடத்தக்க புதுமையாக்கங்களை, சிலிர்க்கவைக்கும் பயனீட்டு அனுபவங்களை ஆப்பிள் சாதனங்களில் நிரப்பிக்கொடுக்கும் வித்தகராக இருந்தார்.

ஆனால், கடந்த இரண்டு வருடங்களாக ஆப்பிளின் மொபைல் சாதன வெளியீடுகளைப் பார்க்கும்போது விரக்தியே மிஞ்சுகிறது. ஏற்கெனவே இருக்கும் சாதனங்களில், மிகச் சிறிய மேம்பாடுகளைக் கொண்டுவந்து, அவற்றைச் சந்தைப்படுத்தி, பணம் ஈட்டுவதில் மட்டுமே ஆப்பிள் லயிப்புடன் இருக்கிறதோ என்ற சலிப்பு தோன்றுகிறது.

மிகப் பெரிய அளவில் இருக்கும் இந்த 'iPhone 6 Plus’ சாதனத்தை பாக்கெட்டில் வைத்து அமர்ந்தால் வளைந்துவிடுகிறது என எழுந்த பயனீட்டாளர் புகார்களுக்குப் பல நாட்களுக்குப் பின்னரும் எந்தப் பதிலும் கொடுக்கவில்லை ஆப்பிள். சென்ற வாரத்தில், 'அப்படியெல்லாம் வளைவது அரிதிலும் அரிது’ எனத் தட்டையான ஸ்டேட்மென்ட் விட்டிருக்கிறது ஆப்பிள். இந்த நேரத்தில் 'ஐபோன் 4’ வெளியான சமயம் நடந்த ஒரு சம்பவத்தை நினைவுபடுத்துவது பொருத்தமாக இருக்கும்.

'ஐபோன் 4’ சாதனத்தைப் பயன்படுத்தி பேசும்போது சிக்னல் துண்டிக்கப்பட்டுவிடுகிறது என்ற புகார், அந்த அலைபேசி வெளியான அடுத்த சில நாட்களில் முணுமுணுக்கப்பட்டது. குடும்பத்துடன் விடுமுறையில் சென்றிருந்த ஜாப்ஸ், உடனடியாக கலிஃபோர்னியா வந்து பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்தார். அதில், 'எல்லா போன்களையும் போலவே ஐபோனிலும் சிக்னல் ட்ராப் ஆகலாம்’ என்பதை செய்முறை விளக்கமாகப் புரியவைத்ததுடன், 'அலைபேசியின் மீது அணிந்துகொள்ளும் வகையில் ஆன்டனா ஒன்றை ஆப்பிள் இலவசமாகக் கொடுக்கும்’ எனவும் அறிவித்தார். ஆப்பிளின் அந்த 'ஆட்டிட்யூட்’ இப்போது எங்கே?

இதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். ஆப்பிள் ஐபோன்கள் தொடர்பான மிக முக்கியமான சர்ச்சை இது.

முதல் தலைமுறை ஐபோன் வெளியாகி ஏழு வருடங்கள் ஆகின்றன. ஆப்பிள் சாதனங்கள் வலுவாகக் கட்டமைக்கப்படுவதால் பல வருடங்களுக்கு முன்பு இருந்த சாதனங்கள் உடைந்துவிடாமல் உறுதியான வடிவிலேயே இருக்கின்றன. ஆனால், ஆப்பிள் தொடர்ந்து வெளியிடும் iOS இயங்கு மென்பொருள் பழைய சாதனங்களின் இயக்கத்தை வெகுவாகப் பாதித்து, முயல் வேகத்தில் இருக்கும் அலைபேசி செயல்பாட்டை ஆமை வேகத்துக்குக் கொண்டுவந்துவிடுகிறது. புதுமையாக்கலில் பெரிய மாற்றங்களை புதிய சாதனங்களில் கொண்டுவந்தபடி இருந்தால், பயனீட்டாளர்கள் இயல்பாகவே புதிய சாதனங்களுக்குச் செல்வார்கள். மிகச் சில மேம்பாடுகள் மட்டுமே இருந்தால், அவர்கள் தங்களது பழைய சாதனங்களைத்தானே தொடர்ந்து பயன்படுத்துவார்கள்? ஆனால், பழைய சாதனங்களை மாற்றான்தாய் மனப்பான்மையுடன் நடத்தும் ஆப்பிள், அதை 'எக்ஸ்சேஞ்ச்’ முறையில் பெற்றுக்கொண்டு புது சாதனங்களை விற்பதிலேயே முனைப்பாக இருக்கிறது.

இந்த மனப்பான்மை ஆப்பிள் நிறுவனத்தை எங்கே கொண்டுசென்று நிறுத்தும்?


ஆப்பிள் தனது கணக்கில் பில்லியன்களை இடுக்கிவைத்திருக்கிறது. அதன் பொருட்கள் இன்றும் விரும்பியே வாங்கப்படுகின்றன. ஆனால், புதுமையாக்கலில் அடுத்தபடிக்குச் செல்ல முடியவில்லை என்றால், 'ஆப்பிள் என்று ஒரு நிறுவனம் இருந்தது’ என இன்றைய சந்ததியினர், இனி வரும் சந்ததியினருக்கு சொல்லும் நிலையை நோக்கியே செல்லும்!

என்ன பிரச்னை ஆப்பிள் போன்களில்?


ஆப்பிள் ஐபோன் வாங்கி என்னதான் முறையாகப் பராமரித்தாலும், ஒன்று இரண்டு வருடங்களில் காரணமே இல்லாமல் பிரச்னை செய்ய ஆரம்பிக்கும். அலைபேசி அடிக்கடி ஹேங் ஆகும். ஆரம்பத்தில் கில்லியாகத் துள்ளிய அப்ளிகேஷன்கள், நாளடைவில் மிக மெதுவாகத் திறக்கும். சில அப்ளிகேஷன்கள் வேலையே செய்யாது. ஆப்பிள் போன்களை சர்வீஸ் செய்ய முடியாது. புதிய போன்தான் வாங்க வேண்டும். காரணம், ஆப்பிளின் லேட்டஸ்ட் மென்பொருட்கள் பழைய போன்களுக்கு செட் ஆகாது.

ஆப்பிளின் லேட்டஸ்ட் இயங்குமென்பொருள் ஐ.ஓ.எஸ்-8. இதை ஆப்பிள் 3 மற்றும் ஆப்பிள் 4 மாடல் போன் வைத்திருப்பவர்கள் அப்டேட் செய்ய முடியாது. ஆப்பிள் 4-எஸ் மற்றும் அதற்கு மேற்பட்ட மாடல்களை வைத்திருப்பவர்கள்தான் அப்டேட் செய்ய முடியும். அதனால், ஆப்பிள் 3 மற்றும் ஆப்பிள் 4 மாடல் போன் வைத்திருப்பவர்கள் வேறு வழியே இல்லாமல், ஆப்பிள் 4-எஸ் மற்றும் அதற்கு மேற்பட்ட மாடல்களைத்தான் வாங்க வேண்டும். ஆக, இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆப்பிள் வாடிக்கையாளர்கள் புதிய ஐபோன்களுக்கு மாற வேண்டிய கட்டாயத்தை ஆப்பிள் உண்டாக்குகிறது.

ஆப்பிள் ஐபோன்கள் புதிதாக விலைக்கு வரும்போது குறைந்தபட்ச விலை ரூபாய் 40 ஆயிரம். இரண்டு ஆண்டுகள் கழித்து அந்த போனின் விலை 15 ஆயிரம் ரூபாய்க்கும் கீழ் குறைந்துவிடும். ஆனால், ஐ.ஓ.எஸ்-8 இயங்கு மென்பொருளே அலைபேசியில் 5 ஜி.பி-க்கு மேற்பட்ட இடத்தை ஆக்கிரமிக்கும் என்பதால், நீங்கள் குறைந்தபட்சம் 16 ஜி.பி நினைவுத்திறன்கொண்ட போன்களைத்தான் வாங்க வேண்டி வரும். அதற்கு மீண்டும் 50 ஆயிரம் ரூபாய் வரை செலவழிக்க வேண்டியிருக்கும்!

விகடன்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Oct 24, 2014 7:55 pm

ஆப்பிள் ஐபோன்கள் புதிதாக விலைக்கு வரும்போது குறைந்தபட்ச விலை ரூபாய் 40 ஆயிரம். இரண்டு ஆண்டுகள் கழித்து அந்த போனின் விலை 15 ஆயிரம் ரூபாய்க்கும் கீழ் குறைந்துவிடும். ஆனால், ஐ.ஓ.எஸ்-8 இயங்கு மென்பொருளே அலைபேசியில் 5 ஜி.பி-க்கு மேற்பட்ட இடத்தை ஆக்கிரமிக்கும் என்பதால், நீங்கள் குறைந்தபட்சம் 16 ஜி.பி நினைவுத்திறன்கொண்ட போன்களைத்தான் வாங்க வேண்டி வரும். அதற்கு மீண்டும் 50 ஆயிரம் ரூபாய் வரை செலவழிக்க வேண்டியிருக்கும்!

பயம் பயம் பயம் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Fri Oct 24, 2014 8:20 pm

krishnaamma wrote:ஆப்பிள் ஐபோன்கள் புதிதாக விலைக்கு வரும்போது குறைந்தபட்ச விலை ரூபாய் 40 ஆயிரம். இரண்டு ஆண்டுகள் கழித்து அந்த போனின் விலை 15 ஆயிரம் ரூபாய்க்கும் கீழ் குறைந்துவிடும். ஆனால், ஐ.ஓ.எஸ்-8 இயங்கு மென்பொருளே அலைபேசியில் 5 ஜி.பி-க்கு மேற்பட்ட இடத்தை ஆக்கிரமிக்கும் என்பதால், நீங்கள் குறைந்தபட்சம் 16 ஜி.பி நினைவுத்திறன்கொண்ட போன்களைத்தான் வாங்க வேண்டி வரும். அதற்கு மீண்டும் 50 ஆயிரம் ரூபாய் வரை செலவழிக்க வேண்டியிருக்கும்!

பயம் பயம் பயம் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1099156

ஆப்பிள் பெயருக்கேற்ற போன்..ஆப்பிள் பழமும் ஆப்பிள் போனும் பணம் வைத்துக்கொண்டு என்ன செய்வதென்று தெரியாதவர்கள்தாம் வாங்கமுடியும் போல...நமக்கெல்லாம் ச்சீ..சீ...இந்த பழம் புளிக்கும் கதைதான்..ஆனால் இப்போது ஆப்பிள் வாங்குபவர்களுக்கே புளித்துவிடும் போலிருக்கிறது...
எல்லாம் வியாபார அரசியல்... புன்னகை

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Fri Oct 24, 2014 8:26 pm

ஆன்ட்ராய்ட் போனின் வெற்றிகளுளுக்கு ஆப்பிளின் இந்த கொடூர வியாபார புத்தியும் ஒரு காரணம்...சாம்சங் மீது வழக்கு போடும் அளவுக்கு அவர்களை தள்ளியது..சாம்சங்கின் வெற்றிதான்..
ஆப்பிளின் மாயை கலைத்த ஆன்ட்ராய்டுக்கு ஒரு சல்யூட்...

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Oct 25, 2014 2:29 am

முட்டாள்தனமான ஒரு கட்டுரை அதுவும் விகடன் பதிப்பகத்தில் இருந்து...... புன்னகை
ஒரு திரைப்படத்தை பார்க்காமலேயே விமர்சனத்தை படித்துவிட்டு விமர்சனம் செய்பவர்களை போல உள்ளது.
ஆப்பிள் தயாரிப்புகளை பயன்படுத்துபவர்கள் யாருமே இல்லையா விகடன் நிறுவனத்தில்

பன்றி குட்டி போடுவதை போல சிறிய சிறிய மாற்றங்களை வைத்து பல மாடல்களை ஒரே நேரத்தில் விற்று முடிந்தவரை பணத்தை சம்பாதிக்கவேண்டுமென்ற நோக்கத்துடன் செயல்படும் samsung நிறுவனத்தை , சிங்ககுட்டி போல ஒன்று என்றாலும் அதிரடியாக உலகமே ஆச்சரியத்துடன் பார்க்கும் ஆப்பிள் நிறுவனத்துடன் compare செய்கிறார்கள்.

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sat Oct 25, 2014 2:47 am

ஆப்பிளில் உள்ள ஒரே நல்ல விஷயம் ஆண்டி வைரஸ் தேவை இல்லை என்பது தான்.

Rs.10000 க்குக் கீழே, சிறந்த போனை வாங்குபவரே புத்திசாலி. எப்போது வேண்டுமானாலும், என்னசெய்தாலும், தயக்கமின்றி வீசி எறிந்து விட்டு, புதிய மாடல் போன் ஒன்றை வாங்கிக்கொள்ளலாம். ஆனால், 50 ஆயிரம், இப்போது 80 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கும் போனை அப்படி வீச மனம் வருமா?

இந்த மனப்பான்மை ஆப்பிள் நிறுவனத்தை எங்கே கொண்டுசென்று நிறுத்தும்?

நோக்கியா மாதிரி அழியும்

N 97 ன்னு ஒரு உருப்படாத போனை 2007ல் கொண்டு வந்தானுங்க 35000 ரூ விலை . அது 3000கு கூட பெறாத போன், அன்னைக்கு கிடைச்சுது சாபம் , நோகியா அழிவும் ஆரம்பம்.

ஆனால், பெரும்பாலும் இந்த போன் வைத்திருப்பவர்கள், 2 வருஷங்களுக்கு ஒருமுறை போன் மாற்றும் வசதி கொண்டவர்களாகத்தான் இருக்கிறார்கள்!
புன்னகை புன்னகை புன்னகை

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sat Oct 25, 2014 3:09 am



அந்த வரிகளை நீக்கிவிட்டேன் அண்ணா...தேவை இல்லை என்றே தோன்றுகிறது.. புன்னகை

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Sat Oct 25, 2014 6:21 am

தமிழ்நேசன்1981 wrote:ஆப்பிள் பெயருக்கேற்ற போன்..ஆப்பிள் பழமும் ஆப்பிள் போனும் பணம் வைத்துக்கொண்டு என்ன செய்வதென்று தெரியாதவர்கள்தாம் வாங்கமுடியும் போல...நமக்கெல்லாம் ச்சீ..சீ...இந்த பழம் புளிக்கும் கதைதான்..ஆனால் இப்போது ஆப்பிள் வாங்குபவர்களுக்கே புளித்துவிடும் போலிருக்கிறது...

எல்லாம் வியாபார அரசியல்... புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1099166

ஆப்பிள் நிறுவனத்தின் பல ரகசியங்களை திருடி பணம் சம்பாதித்தது சாம்சுங் இதை யாரும் மறுக்க முடியாது .அதற்க்கு நஷ்ட ஈடாக பெருந்தொகையை சாம்சுங் ஆப்பிள் நிறுவனத்திற்கு அளித்தது இது கூட நினைவிருக்கலாம்.

ஆப்பிள் போன் வாங்குபவர்கள் யாரும் அதை பயன் படுத்த தெரியாதவர்கள் அல்ல ..அதை வாங்குவபர்கள் எல்லோருமே வாலிப வயது உடையவர்கள் தான்.

ஆப்பிள் போன் வாங்கி புளித்து போய் விட்டது என்று யாரும் சொல்லி நான் கேட்டது இல்லை



......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Sat Oct 25, 2014 6:32 am

தமிழ்நேசன்1981 wrote:ஆப்பிளில் உள்ள ஒரே நல்ல விஷயம் ஆண்டி வைரஸ் தேவை இல்லை என்பது தான்.

பயன்படுத்தியவர்களிடம் கேட்டுப் பாருங்கள் அதன் nall விஷயங்கள் வேறு எவ்வளவு இருக்கிறது என்று

Rs.10000 க்குக் கீழே, சிறந்த போனை வாங்குபவரே புத்திசாலி. எப்போது வேண்டுமானாலும், என்னசெய்தாலும், தயக்கமின்றி வீசி எறிந்து விட்டு, புதிய மாடல் போன் ஒன்றை வாங்கிக்கொள்ளலாம். ஆனால், 50 ஆயிரம், இப்போது 80 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கும் போனை அப்படி வீச மனம் வருமா?

80 ஆயிரம் ரூபாய்க்கு போன் வாகுவபனுக்கு அதற்கேற்ற வருமானமும் இருக்கும்.இன்றும் பலர் 5000 கீழே தான் போன் வாங்குகிறார்கள் .அவர்களுக்கு 1000 பெரிய தொகை

அவரவர் தேவைகேற்ப வருமானத்திற்கேற்ப பயன்பாடுகளும் மாறும்.

நோக்கியா மாதிரி அழியும்

N 97 ன்னு ஒரு உருப்படாத போனை 2007ல் கொண்டு வந்தானுங்க 35000 ரூ விலை . அது 3000கு கூட பெறாத போன், அன்னைக்கு கிடைச்சுது சாபம் , நோகியா அழிவும் ஆரம்பம்.

அன்று கூட எத்தனை பேர் நோக்கியா N97 வாங்கினார்கள் ..எத்தனை புதிய விஷயங்கள் அதில் இருந்தன

ஆனால், பெரும்பாலும் இந்த போன் வைத்திருப்பவர்கள், 2 வருஷங்களுக்கு ஒருமுறை போன் மாற்றும் வசதி கொண்டவர்களாகத்தான் இருக்கிறார்கள்![/b] புன்னகை புன்னகை புன்னகை

பெரும்பாலும் எல்லோருமே 2 வருடத்திற்க்கு ஒருமுறை தங்கள் பழைய போனை மாற்றி விட்டு புதிய போனைத் தான் வாங்குகிறார்கள்



......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sat Oct 25, 2014 7:08 am

SajeevJino wrote:
தமிழ்நேசன்1981 wrote:ஆப்பிளில் உள்ள ஒரே நல்ல விஷயம் ஆண்டி வைரஸ் தேவை இல்லை என்பது தான்.

பயன்படுத்தியவர்களிடம் கேட்டுப் பாருங்கள் அதன் nall விஷயங்கள் வேறு எவ்வளவு இருக்கிறது என்று

Rs.10000 க்குக் கீழே, சிறந்த போனை வாங்குபவரே புத்திசாலி. எப்போது வேண்டுமானாலும், என்னசெய்தாலும், தயக்கமின்றி வீசி எறிந்து விட்டு, புதிய மாடல் போன் ஒன்றை வாங்கிக்கொள்ளலாம். ஆனால், 50 ஆயிரம், இப்போது 80 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கும் போனை அப்படி வீச மனம் வருமா?

80 ஆயிரம் ரூபாய்க்கு போன் வாகுவபனுக்கு அதற்கேற்ற வருமானமும் இருக்கும்.இன்றும் பலர் 5000 கீழே தான் போன் வாங்குகிறார்கள் .அவர்களுக்கு 1000 பெரிய தொகை

அவரவர் தேவைகேற்ப வருமானத்திற்கேற்ப பயன்பாடுகளும் மாறும்.

நோக்கியா மாதிரி அழியும்

N 97 ன்னு ஒரு உருப்படாத போனை 2007ல் கொண்டு வந்தானுங்க 35000 ரூ விலை . அது 3000கு கூட பெறாத போன், அன்னைக்கு கிடைச்சுது சாபம் , நோகியா அழிவும் ஆரம்பம்.

அன்று கூட எத்தனை பேர் நோக்கியா N97 வாங்கினார்கள் ..எத்தனை புதிய விஷயங்கள் அதில் இருந்தன

ஆனால், பெரும்பாலும் இந்த போன் வைத்திருப்பவர்கள், 2 வருஷங்களுக்கு ஒருமுறை போன் மாற்றும் வசதி கொண்டவர்களாகத்தான் இருக்கிறார்கள்![/b] புன்னகை புன்னகை புன்னகை

பெரும்பாலும் எல்லோருமே 2 வருடத்திற்க்கு ஒருமுறை தங்கள் பழைய போனை மாற்றி விட்டு புதிய போனைத் தான் வாங்குகிறார்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1099225

புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக