புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 6:19 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:03 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 5:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:32 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Today at 1:47 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Today at 1:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:36 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 12:04 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Today at 12:01 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 4:35 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 4:11 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:04 am

» கருத்துப்படம் 07/11/2024
by mohamed nizamudeen Today at 2:37 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:49 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Yesterday at 10:21 am

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Yesterday at 3:37 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Yesterday at 3:34 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 9:23 am

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 9:19 am

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 9:16 am

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:54 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:54 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 6:09 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 5:56 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 5:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 4:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:14 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 3:45 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 3:29 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 2:30 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 2:24 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 2:21 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 2:20 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 2:19 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 2:19 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 2:18 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 2:16 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 1:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:08 am

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 6:02 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 4:16 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 4:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்! Poll_c10சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்! Poll_m10சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்! Poll_c10 
79 Posts - 68%
heezulia
சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்! Poll_c10சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்! Poll_m10சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்! Poll_c10 
20 Posts - 17%
mohamed nizamudeen
சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்! Poll_c10சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்! Poll_m10சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்! Poll_c10சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்! Poll_m10சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்! Poll_c10 
3 Posts - 3%
prajai
சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்! Poll_c10சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்! Poll_m10சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்! Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்! Poll_c10சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்! Poll_m10சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்! Poll_c10 
2 Posts - 2%
Barushree
சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்! Poll_c10சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்! Poll_m10சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்! Poll_c10 
2 Posts - 2%
Tamilmozhi09
சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்! Poll_c10சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்! Poll_m10சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்! Poll_c10சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்! Poll_m10சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்! Poll_c10 
1 Post - 1%
nahoor
சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்! Poll_c10சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்! Poll_m10சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்! Poll_c10சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்! Poll_m10சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்! Poll_c10 
133 Posts - 75%
heezulia
சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்! Poll_c10சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்! Poll_m10சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்! Poll_c10 
20 Posts - 11%
mohamed nizamudeen
சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்! Poll_c10சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்! Poll_m10சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்! Poll_c10 
7 Posts - 4%
prajai
சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்! Poll_c10சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்! Poll_m10சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்! Poll_c10 
5 Posts - 3%
ஜாஹீதாபானு
சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்! Poll_c10சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்! Poll_m10சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்! Poll_c10 
3 Posts - 2%

2 Posts - 1%
kavithasankar

Karthikakulanthaivel
சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்! Poll_c10சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்! Poll_m10சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Oct 28, 2014 2:29 pm

ஒரு காலத்தில் ஓட்டை சைக்கிளில் பயணித்த ஊருக்குள் காரில் போகும்போது குமாரின் மனதில் இனமறியாத சந்தோஷம். அருகில் ஆசை மனைவியும் இருந்ததால் மகிழ்ச்சி இரட்டிப்பானது. நீண்ட நாள்களுக்குப்பின் அவனது நண்பனின் மகனுடைய திருமணத்தில் கலந்து கொள்ள சொந்த ஊருக்கு வந்திருக்கின்றான்.

நண்பன் இறந்து பத்து வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஆண்டுகள் பல கடந்தாலும் நினைவில் வைத்திருந்து அழைப்பிதழ் அனுப்பியிருந்தாள் நண்பனின் மனைவி.

பல வருடங்களுக்குப்பின் ஊருக்கு வந்த போது குமாருக்கு எல்லாமே வித்தியாசமா இருந்தது. முப்போகம் நெல் விளைந்த வயல்வெளி வீடுகளாக மாறியிருந்தது. புதிது புதிதாகக் கல்யாண மண்டபங்கள் முளைத்திருந்தன. முன் இருந்த பழைய கடைகள் எல்லாம் புதுப் பொலிவுடன் காணப்பட்டன. டாக்ஸி ஸ்டாண்ட், ஆட்டோ ஸ்டான்ட், ஏடிஎம் என்று அமர்க்களப்பட்டது. தனது ஊர் திடீரென்று பெரிதாகி விட்டது போன்ற உணர்வு குமாருக்கு ஏற்பட்டது.

கல்யாணம் சிறப்பாக நடைபெற்றது. பழைய நண்பர்களைக் கண்டபோது குமாருக்கு மகிழ்ச்சி கரை புரண்டோடியது. நண்பர்கள் தோற்றத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காலத்தின் ஓட்டத்தை உணர்த்தியது. ஒரு காலத்தில் குமார் சைட் அடித்த பெண்கள் எல்லாம் ஆண்டிகளாகப் பட்டுப்புடவை கட்டிக் கல்யாணத்திற்கு வந்திருந்தார்கள். குமாரை அடையாளர் கண்டபோது நினைவலைகள் பின்னோக்கிச் செல்ல நாணத்தால் முகம் சிவந்தனர்.

காலை டிபன் முடிந்த உடனேயே மதியம் விருந்து சாப்பிட்டுவிட்டுத் தான் செல்ல வேண்டும் என்று அன்புக் கட்டளை இட்டு விட்டனர். காலை பத்து மணி கூட ஆகவில்லை. உழக்கரிசி பிள்ளையார் கோயிலுக்குப் போக எண்ணி குமாரும் மனைவியும் கிளம்பினர். குமார் வேலையில்லாப் பட்டதாரியாக இருந்த போது தினமும் உழக்கரிசி பிள்ளையார் கோயிலுக்குச் செல்வது வழக்கம். அவன் மனதிலே சஞ்சலம் ஏற்பட்டபோதெல்லாம் இளைப்பாறுதல் தந்ததால் அந்தப் பிள்ளையாரிடம் குமாருக்குப் பக்தி அதிகம். சினிமா தியேட்டரைத் தாண்டிச் செல்லும்போது குமார் திடீரென்று காரை இடது பக்கம் திருப்பினான்.

"என்னங்க? கோவிலுக்கு நேரா இல்ல போகணும். எங்க போறீங்க?' குமாரின் மனைவி கேட்டாள்.
"அருணாச்சலம் சார் வீட்டுக்குப்போய் அவரை பார்த்திட்டு அப்புறம் கோயிலுக்குப் போகலாம்'.
முன்பு வந்து போன இடமாக இருந்தாலும் குமாருக்கு அருணாச்சலம் சார் வீட்டை அடையாளம் காண்பது சற்றுச் சிரமமாகவே இருந்தது. ரோட்டின் ஓரத்தில் சில இளைஞர்கள் நின்று பேசிக் கொண்டிருந்தார்கள். அங்கு குமார் காரை நிறுத்தினான்.

"இங்க ரயில்வேயில் வேலை பார்த்த அருணாச்சலம் சார் வீடு எங்க இருக்கு?' குமார் கேட்டான்.
"நேரா போய் வடக்கால திரும்புனீங்கன்னா மூணாவது வீடு. அங்க போனா உங்களுக்குத் தெரியும். ஆட்களெல்லாம் நிறைய கூடிநிப்பாங்க' ஓர் இளைஞன் கூறினான்.

"ஆட்கள் நிறைய நிப்பாங்களா? அங்க என்ன விசேஷம்?' ஒன்றும் புரியாமல் குமார் கேட்டான்.
"அப்ப உங்களுக்கு விபரம் தெரியாதா? நேத்து ராத்திரி அவர் மாரடைப்பால் இறந்து போயிட்டார். இன்னைக்கு மதியம் இரண்டு மணிக்கு எடுப்பாங்க. அந்தா பாருங்க அவருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடிச்சு ஒட்டியிக்கோம்.'

காரை விட்டுக் குமாரும் மனைவியும் வேகமாக இறங்கினார்கள். போஸ்டரில் ரயில்வே யூனிபாமில் கம்பீரமாகச் சிரித்துக் கொண்டிருந்தார் அருணாச்சலம் சார். பட்டு வேஷ்டி, பட்டுச் சேலை சகிதம் குமாரும் மனைவியும் நிற்பதைக் கண்ட போது தான் அந்த இளைஞர்களுக்கும் உண்மை விளங்கியது!

"பாவம்டா இவங்க! அவர் இறந்தது கூடத் தெரியாமல் அவரைப் பார்க்க வந்திருக்காங்க?' ஒருவன் கூறினான்.
"இதைத்தான் கொடுப்பினைன்னு சொல்றது. அவரு மேல உள்ள பாசம்தான் கரெக்டா இன்னைக்கு இவங்களை இங்க கொண்டுவந்து சேர்த்திருக்கு' தத்துவார்த்தமான வார்த்தைகளை உதிர்த்தான் வேறு ஓர் இளைஞன்.

காரை அங்கேயே நிறுத்திவிட்டுக் குமாரும் மனைவியும் நடந்தே போனார்கள். வீட்டு முன்னே கூட்டம் கூடி நின்றிருந்தது. நடுக்கூடத்தில் கண்ணாடிப் பெட்டியில் கண்ணயர்ந்துக் கொண்டிருந்தார் அருணாச்சலம் சார். அவர் கண்களைத் தானம் செய்திருந்ததால், கண் மருத்துவமனையிலிருந்து வந்து கண்களை எடத்துச் சென்றிருந்தனர். கண்கள் இருந்த இடத்தில் சந்தனம் வைக்கப்பட்டிருந்தது. இறந்தும் இறவா வரம் பெற்ற மனிதர். அவரது கண்கள் மூலம் இரண்டு பேர் இந்த உலகத்தைக் காணப் போகிறார்கள்.
அப்பாவின் தலைமாட்டில் இருந்து அழுது கொண்டிருந்த மகள் வளர்மதி அப்பொழுது தான் குமாரைக் கவனித்தாள்.

"எப்படிண்ணே அப்பா இறந்தது தெரிங்சு வந்தீங்க'

மீண்டும் மீண்டும் அதே கேள்வியைக் கேட்டாள் வளர்மதி. அந்தக் கேள்விக்குப் பதில் குமாருக்குத் தெரியவில்லையே!

வாய் நிறைய புன்னகையுடன் எடுப்பான தோற்றத்துடன் சுறுசுறுப்பாக வலம் வந்த அருணாச்சலம் சாரின் உருவம் குமாரின் மனக்கண் முன்னே நிழலாடியது. குருமலை என்கிற சிறிய ரயில் நிலையத்தில் உதவி ஸ்டேஷன் மாஸ்டராக அவர் இயங்கியது நினைவிற்கு வந்தது. அங்கு ஸ்டேஷனில் இரண்டு பக்கங்களிலிருந்து ஒரு நாளைக்கு ஆறு ரயில்கள் ஒரு நிமிடம் நின்று போகும். சுற்று வட்டார கிராம மக்கள் ரயிலை மட்டுமே நம்பியிருந்த காலம் அது. எனவே சிறிய ஸ்டேஷன் ஆனாலும் கூட்டம் நிரம்பி வழியும். குமாரின் அப்பா ஸ்டேஷன் மாஸ்டர் ஆனதால் எல்லோரும் பெரியவர் என்றே அவரை அழைப்பார்கள்.

கோவில்பட்டியிலிருந்து தினமும் குருமலைக்கு வந்து போன அருணாச்சலம் சார் தன் ஒரே மகள் வளர்மதியைச் செல்லமாக வளர்த்து வந்தார். ஆண் பிள்ளை இல்லாத காரணத்தினாலோ என்னவோ அருணாச்சலம் சாருக்கு குமார் மீது கொள்ளைப் பிரியம். இரண்டு நாள் தொடர்ந்து ஸ்கூலுக்கு லீவு விட்டாங்கன்னா. அவனைக் கோவில்பட்டிருக்குக் கூட்டிட்டுப் போயிடுவாரு. எல்லாத் தீபாவளிக்கும் அருணாச்சலம் சாரோட பரிசா குமாருக்கும் சட்டையும் டவுசரும் காத்திருக்கும்.அருணாச்சலம் சாருக்கு குமார் அப்பா மீது மிகுந்த மரியாதை உண்டு.

"உங்க அப்பா மாதிரி ஒரு மனிதரைப் பார்ப்பது ரொம்ப அரிது. நானும் எவ்வளவோ பேர் கூட வேலை பார்த்திருக்கேன். ஆனா இப்ப உள்ள திருப்தியும், சந்தோஷமும் எனக்கு எப்பவும் ஏற்பட்டதில்லை. அதுக்குக் காரணம் உங்க அப்பாதான். அவரோட நட்பும், அன்பும் எனக்குப் பெரிய பலம். பெரியவர் பேரை நீ காப்பாத்தணும்' வாஞ்சையோடு குமாரின் தலைமுடியைக் கோதி விட்டுக் கொண்டே அருணாச்சலம் சார் சொல்வார்.

பள்ளிக்குச் சென்ற குமார் ஒருநாள் கிணற்றில் விழுந்த வாளியை எடுக்க நண்பர்களோடு சென்ற போது "துலா' தலையில் இடித்து காயம் அடைந்தான். நான்கு நாள்கள் கோவில்பட்டி பெரிய ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த அவன் அருகில் இருந்து கவனித்துக் கொண்டது அருணாச்சலம் சார்தான்.

"தர்மம் தலைகாக்கும்னு சொல்லுவாங்க. உன் அப்பாவும், அம்மாவும் செய்த தர்மம் உன்னைக் காப்பாற்றும். டிக்கெட் இல்லைன்னு இறக்கி விடப்பட்ட எத்தனை பேருக்கு உன் அப்பாவும் அம்மாவும் சாப்பாடு கொடுத்திருப்பாங்க! அத்துவானக் காட்டில் குடிக்கத் தண்ணீர் கூடக் கிடைக்காத இடத்துல அன்னதானம்னு சொல்றது எவ்வளவு பெரிய தர்மம் தெரியுமா? ஒரு பிடி சாதத்தோட மதிப்பு என்னான்னு பசிக்கிறவனுக்குத்தான் தெரியும். பசின்னு வந்தவங்க யாரும் உங்க வீட்ல ஒர வேளை சாப்பாடு சாப்பிடாம போனதில்லை. அந்த தான, தர்மம் உன் கூட இருக்கும். எதுக்கும் கவலைப்படாதே' அருணாச்சலம் சாரின் ஆறுதல் வார்த்தைகள் குமாருக்கு இதமாக இருந்தன.

வளர்மதிக்குத் திருமணம் நிச்சயம் ஆன போது மணமகன் குமாரின் உற்ற நண்பன் மூர்த்தி தான் என்று அறிந்தபோது குமார் மிக்க மகிழ்ச்சி அடைந்தான். குமாரின் விளையாட்டுத் தோழி வளர்மதி அவனது நண்பனின் மனைவியாகி அவர்கள் சொந்த ஊரான அம்பாசமுத்திரத்திலேயே செட்டில் ஆகிவிட்டாள். அருணாச்சலம் சாரும் ஓய்விற்குப் பிறகு மனைவியுடன் அம்பாசமுத்திரம் வந்து விட்டார். மாலை வேளைகளில் வீட்டிற்கு வந்து குமாரின் அப்பாவோடு பொழுதைக் கழிப்பார். பழைய நினைவுகள் அசைப்போட்டபடி இருவரும் மகிழ்ச்சியாகப் பேசிக் கொண்டிருப்பார்கள்.

குமாருக்கு வேலை கிடைத்து வெளியூர் செல்லும் முன் அருணாச்சலம் சாரிடம் ஆசீர்வாதம் வாங்கிவிட்டுச் சென்றான்."நான் பார்த்து வளர்ந்த பையன். நீ நல்லா வருவ. என் ஆசீர்வாதம் எப்பவும் உனக்கு உண்டு' என்று கட்டிப்பிடித்து ஆசீர்வாதித்து ஒரு புத்தகத்தையும் பரிசாகக் கொடுத்தனுப்பினார்.

நாம் காணுகின்ற எல்லா மனிதர்களும் நம் இதயத்திற்கு நெருக்கமானவர்கள் ஆகி விடுவதில்லை. சில மனிதர்களைக் கண்டவுடன் பச்சக்கென்று நம் மனதில் சிம்மாசனம் இட்டு அமர்ந்து விடுவார்கள். அருணாச்சலம் சாரும் அப்படித்தான் குமார் மனதில் இடம் பிடித்துவிட்டார். குமாரின் சுக, துக்கங்களில் அருணாச்சலம் சார் எப்போதும் ஒரு பங்காளியாகவே இருந்துள்ளார். அதனால் தான் மரணத்தில் கூட நட்பு விட்டும் போகாமல் அவரைக் காண குமார் ஓடி வந்து விட்டான்
.
உழக்கரிசி பிள்ளையார் கோயிலுக்குப் போய்க் கொண்டிருந்த குமார் திடீரென்று காரை அருணாச்சலம் சார் வீடு இருந்த பக்கம் திரும்பியது எப்படி? அவனை இயக்கிய அந்த அமானுஷ்ய சக்தி எது? இந்தப் பந்தம் ஒரு வேளை பூர்வ ஜென்ம சொந்தத்தின் தொடர்ச்சியா? எது எப்படியோ ஒரு நீண்ட தொடர்கதையின் கடைசி அத்தியாயம் அன்று எழுதி முடிக்கப்பட்டு விட்டது.

அனார்கை காசிநாதன்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக