ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

Top posting users this week
ayyasamy ram
எங்கிருந்தோ வந்தான்! Poll_c10எங்கிருந்தோ வந்தான்! Poll_m10எங்கிருந்தோ வந்தான்! Poll_c10 
Barushree
எங்கிருந்தோ வந்தான்! Poll_c10எங்கிருந்தோ வந்தான்! Poll_m10எங்கிருந்தோ வந்தான்! Poll_c10 
kavithasankar
எங்கிருந்தோ வந்தான்! Poll_c10எங்கிருந்தோ வந்தான்! Poll_m10எங்கிருந்தோ வந்தான்! Poll_c10 
mohamed nizamudeen
எங்கிருந்தோ வந்தான்! Poll_c10எங்கிருந்தோ வந்தான்! Poll_m10எங்கிருந்தோ வந்தான்! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்கிருந்தோ வந்தான்!

2 posters

Go down

எங்கிருந்தோ வந்தான்! Empty எங்கிருந்தோ வந்தான்!

Post by krishnaamma Tue Oct 28, 2014 7:25 pm

எங்கிருந்தோ வந்தான்! QEK92xbVQ8Jk9cRucjIN+E_1413886472

இரவு மணி ஒன்பது. மாயா க்ளினிக்கின் ஐ.சி.யூ. பிரிவு. அங்குள்ள பணியாளர்களின் டியூட்டி மாறும் நேரம். ஜன்னலோரக் கட்டிலின் அருகே படுத்திருந்த அந்த மூதாட்டி கமலம்மாவின் அருகே நின்றிருந்த சிஸ்டர், இரவு டியூட்டி சிஸ்டரிடம் அவளைக் காட்டி ஏதோ விளக்கம் தந்து கொண்டிருந்தாள்.

"ஆமா சுகந்தி, ஏற்கெனவே மோசமா இழுத்துக் கிட்டிருந்த கேஸ்தான்! உனக்குத்தான் தெரியுமோ! இன்னிக்கு எட்டு மணிக்கு திடீர்னு சீரியஸ் ஆயிடுச்சு! சீஃப் வந்து பார்த்துட்டுப் போயிட்டாரு. இன்னிக்கு நைட்டு தாங்காதுன்னு சொல்லிட்டுப் போயிட்டாரு. ஆக்ஸிஜன் போட்டிருக்கு. நீ இவங்களை கொஞ்சம் கவனிச்சு பார்த்துக்கிட்டே இரு! ஏதாச்சு நிலைமை மோசமாச்சுன்னா உடனே டியூட்டி டாக்டரைக் கூப்பிட்டுக் காட்டு சரியா?'

"பேஷன்ட் வீட்டுக்குத் தகவல் சொல்லியாச்சா?'
"அப்பவே ரிசப்ஷன்ல தகவல் சொல்லியாச்சு. பேஷன்டோட தம்பியோ, யாரோ, அவரோட செல் ரீச் ஆகமாட்டேங்குதுன்னு ரிசெப்ஷன் கீதா சொல்லிட்டிருந்தா.'
"ஆமா, கிழவி நாலு நாளா தன் பிள்ளையைப் பார்க்கணும்னு பினாத்திக்கிட்டே இருக்காளே! அவன் பார்க்க வரலியா?'

"இல்லை, சுகந்தி! அவன் மிலிட்டரியிலே இருக்கானாம். அவனுக்குத் தகவல் அனுப்பியிருக்காங்க! அவனப் பார்த்துட்டுத்தான் உயிரை விடணும்னு கிழவி துடியாத் துடிக்குது! அவன் இன்னி வரைக்கும் வரலை. எப்போ வருவானோ! எங்கே இருக்கானோ!'
"சரி நீ போ! நான் பார்த்துக்கிறேன்!' என்று சொல்லி நைட் டியூட்டி சிஸ்டர் சுகந்தி அவளுக்கு விடை கொடுத்தாள்.

ஐ.சி.யூ. கொஞ்சம் கொஞ்சமாக ஓய்வு கொண்டிருந்தது. அங்குமிங்குமாக நடந்து கொண்டிருந்தவர்களின் ஷூக்களின் ஓசையும் நின்று போயிற்று.

சுகந்தி தன் டேபிளுக்குச் சென்று, பேஷண்டுகளின் கேஸ் ஃபைல்களைப் பார்த்துக் கொண்டிருந்த சமயம்... யாரோ ஐ.சி.யூ.வில் அனுமதியின்றி உள்ளே நுழைந்து நடக்கும் சப்தம். தலையைத் தூக்கிப் பார்த்த சுகந்தியின் கண்களில். அவன் தென்பட்டான். நல்ல வாட்ட சாட்டமாக, ஆறடி உயரத்திற்கு, இராணுவ உடையணிந்து கம்பீரமாகத் தென்பட்டவன், நேராக கிழவி கமலம்மா படுத்திருந்த கட்டிலை நோக்கி செல்ல.. திடுக்கிட்டு எழுந்த சுகந்தி, "ஹலோ! யார் நீங்க? இது ஐ.சி.யூ' என்றவாறே அவனைத் தடுத்து நிறுத்த முயற்சிக்க...
... சட்டென்று அவன் யாரென்று புரிந்து விட்டது.

"ஹலோ சரியான நேரத்துக்கு வந்துட்டீங்க! உங்களைப் பார்க்கணும்னுதான், உங்க அம்மா உயிரைக் கையிலே பிடிச்சுட்டு இருக்காங்க! இரண்டு நிமிஷம் பார்த்துட்டு வெளியிலே போயிடுங்க!' என்று அவசரப்படுத்தினாள்.

அவள் சொல்வதை சற்றும் கவனிக்காத அந்த வாலிபன், கமலம்மாவின் அருகே சென்று அமர்ந்து, அவள் கைகளைப் பிடித்து கொள்ள.. அரை மயக்கத்திலிருந்த கிழவியின் கண்கள் இலேசாகத் திறந்தன. வியப்பினாலும், மகிழ்ச்சியினாலும், அவளது முகத்தில் பிரகாசம் தோன்றியது.
அவள் முகத்துருகே நெருங்கிக் குனிந்த அவன், அவள் கண்களை நேராகப் பார்த்து "அம்மா! அம்மா! நான் வந்துட்டேம்மா! என்னை பாரு! நான் தான்! என்னைத் தெரியுதா?'
கிழவியின் கண்களில் பிரவாகமாகக் கண்ணீர் ஓட, அவள் தன் கைகளை உயர்த்தி, அவனை தழுவ முயன்றாள்.

"சார்! சார்! அவங்க எமோஷன் ஆயிட்டா ப்ராப்ளம் ஆயிடும். நீங்கள் வெளியே போயிடுங்க! டாக்டர் பார்த்தா திட்டுவார்' என சுகந்திபதறினாள். அதை அவன் பொருட்படுத்தவில்லை.
"அம்மா! இனிமே உன்னை விட்டு போகமாட்டேன், உனக்குப் பிடிக்காத இந்த மிலிட்டரி வேலையை விட்டுடறேன். எப்பவும் உன்கிட்டயே இருப்பேன், இது சத்தியம்!'
கிழவியின் கரங்கள் அவனை இறுக்கப் பிடித்துக் கொள்ள, அவள் உடல் உணர்ச்சிவசப்பட்டு இலேசாகக் குலுங்கியது. அள் உதடுகள் துடித்தன.

"ஐயோ சார்! சொன்னா கேளுங்க! வெளியே போங்க டாக்டர் வந்தார்ன்னா..'
"சுகந்தி, அங்கே என்ன சத்தம்? அது யார் இந்த வேளையிலே?' என்று கேட்டுக்கொண்டே ட்யூட்டி டாக்டர் அங்கு வர, அப்போதும் அவன் எழுந்திருக்கவில்லை.

சுகந்தி அவன் யாரென்று தெரிவிக்க, சற்று யோசித்த டாக்டர், "பேஷண்டுக்கு மல்டி ஆர்கன் ஃபெயிலியர்! பல்ஸ் இறங்கிக்கிட்டே வருது! எந்த நிமிஷமும் கொலாப்ஸ் ஆகலாம். உயிர் போற நேரத்திலே இந்த அம்மாவோட பிள்ளை பக்கத்திலேயே இருக்கட்டும். அதனாலே பரவாயில்லை! மத்த பேஷன்ட் டிஸ்டர்ப் ஆகாமப் பார்த்துக்க!' என்று சொல்லிவிட்டு நகர்ந்தார்.

ஆங்காங்கே சில பேஷன்டுகள் முனகும் ஓசை, சிலர் புரண்டுபடுக்கும் ஓசை தவிர, மற்ற எந்த ஒலியும் கேட்காத அந்த இடத்தில், அவன் கிழவியிடம் சன்னமான குரலில் பேசுவது மட்டும் விசித்திரமாக ஒலித்தது.
அவனது ஒர கை அவளது வலது கையைப் பற்றியிருக்க, மற்றொரு கை அவளை அன்புடன் வருடியது.

அவன் உதடுகள் மட்டும் மெதுவாக அசைந்தன. நிச்சயமாக அவன் பேசுவதும் எதுவும் அவளது காதில் விழுவது சாத்தியமில்லை. அவளால் எதுவும் பேசவும் முடியவில்லை. மிகவும் சிரமப்பட்டு, அவளுடைய இருங்கி, பஞ்சடைந்த கண்கள் அவன் முகத்திலேயே பதிந்திருந்தாலும், அவளால் அவனைத் தெளிவாகப் பார்க்க முடிந்ததா என்றே சந்தேகமாய் இருந்தது. அவளுடைய இதயம் மட்டும் அவனுடன் பேசிக் கொண்டிருந்ததோ என்று தோன்றியது.

சுகந்தி அருகில் ஒரு சேரில் அமர்ந்து அவர்கள் இருவரையுமே கூர்ந்துக் கவனித்துக் கொண்டிருந்தாள். ஐ.சி.யூ.வின் இந்த ஜீவ மரணப் போராட்டங்கள் அவளுக்குப் புதிதில்லை என்றாலும், மரணத்தின் தலைவாயிலில் நின்று கொண்டிருக்கும் மிக வயதான ஒரு தாய்க்கும், மரணத்தை தினமும் போர்க்களத்தில் சந்திக்கும் ஒரு மகனுக்கும் இடையேயான அன்பு பரிமாறல் அவளை நெகிழ வைத்தது.

அந்த சூழ்நிலையின் இறுக்கம் தாளாமல், சுகந்தி மற்ற பேஷன்டுகளின் பக்கம் ஒரு ரவுண்டு போய் விட்டு வரும்போது, திடீரென ஏதோ ஒரு ஒலி கேட்டுத் திரும்ப, கிழவியின் மூச்சு பலமாக இரைப்பதையும், பிறகு மூச்சு அடங்கித் தலை சாய்வதையும் கண்டு, பரப்பரப்புடன் டியூட்டி டாக்டரை அழைத்தாள். அவர் உடனே கமலம்மாவைப் பரிசோதித்த போது எல்லாம் முடிந்திருந்தது.

"ஐ ஆம் சாரி! உங்க அம்மா காலமாகிவிட்டாங்க!' என்ற டாக்டர், அப்போதும் அமைதியாக அமர்ந்திருந்த வாலிபனை பார்த்து, சற்றுத் தயங்கியபின், "சில ஃபார்மாலிடீஸ் பாக்கி இருக்கு.. சில டாக்குமென்ட்ஸ்ல சைன் பண்ணணும். பாடி ரெடி பண்ண கொஞ்ச நேரம் ஆகும்' என்றவர், சுகந்தியை பார்த்து "அக்கவுண்ட்ஸ்ல பில் ரெடி பண்ண சொல்லிடு! என்றவர் மீண்டும் அவனைப் பார்த்து, கொஞ்சம் என் ரூமுக்கு வர்றீங்களா?' என்றார்.

மிகவும் நிதானமாக எழுந்து அந்த வாலிபன் டாக்டரையே சற்று நேரம் உற்றுப் பார்த்தான். பிறகு, மிக மெதுவான குரலில், "டாக்டர் பேஷன்டோட சொந்தக்காரர்களுக்கு தகவல் அனுப்புங்க' என்றான்.

டாக்டர், சுகந்தி இருவருமே திகைத்து நின்றனர்!
"சொந்தக்காரங்களா? நீங்க பேஷண்டோட சொந்த மகன் தானே?'
"இல்லை! நான் இவங்க மகனில்லை!'
"என்ன? நீங்க மகன் இல்லையா? பின்னே நீங்க யாரு?'
"ஸாரி, இவங்க யாருன்னே எனக்குத் தெரியாது'

"எனன விளையாடறீங்களா? மணிக்கணக்கா, அவங்க கிட்ட உட்கார்ந்து சொந்த பிள்ளை மாதிரி உறவு கொண்டாடிட்டு, இப்ப நீங்க யாரோ, அவங்க யாரோன்னு சொல்றீங்களே?'
"அதுதாங்க உண்மை! அவங்க யாருன்னே தெரியாது. அவங்க பிள்ளை யாருன்னும் தெரியாது'
"ஹலோ கொஞ்சம் புரியற மாதிரி பேசுங்க!'

"சொல்றேன்! நான் என் சித்தப்பாவை ஐ.சி.யூவில பார்க்க வந்த போது, அவர் ஜெனரல் வார்டுக்குப் போயிட்டாருன்னு தெரிஞ்சுது. அப்பத்தான் இந்த சிஸ்டரும் இன்னொரு சிஸ்டரும் பேஷன்ட் கமலம்மா பெட் கிட்ட நின்னுப் பேசிக்கிட்டிருந்ததைக் கேட்டேன். இந்த அம்மாவைப் பார்த்தேன். அரை மயக்கத்தில் இருந்தாலும், இவங்க பார்வையிலே ஓர் ஏக்கம், ஒரு தேடல் தெரிஞ்சுது. சாகப்போற தன் கடைசி நேரத்திலே தன் மகனைப் பார்க்கத் துடிக்கிற ஒரு தாயோட பரிதவிப்பு தெரிஞ்சது. உடனே எனக்கு, எங்க அம்மா நினைவு வந்தது.'

சற்றுப் பேச்சை நிறுத்தி, வானை நோக்கிப் பார்த்த அவன், தன் பழைய துயர நினைவுகளில் மிதந்தாள்.
"ஆர்மியிலே, இந்தியா பாகிஸ்தான் பார்டர்ல எனக்கு போஸ்டிங் இருந்தப்போ, என் அம்மா காலமாயிட்டாங்க. நான் ஊருக்கு வர்றதுக்குள்ளேயே எல்லாம் முடிஞ்சு போயிடுச்சு.

சாகறதுக்கு முன்னாடி ஒரு தடவையாவது என்னைப் பார்க்கணும்னு துடிச்ச என் அம்மா சரவணா! சரவணா னு புலம்பிக்கிட்டே உயிரை விட்டாங்கன்னு கேள்விப்பட்டு, என் நெஞ்சே வெடிச்சிடும் போல இருந்தது. அந்திமக் காலத்திலே அவங்க ஆசைய நிறைவேற்றாத பாவியாப் போயிட்டேனேன்னு நெஞ்சு புண்ணாகி, இத்தனை நாள் தவிச்சேன்...'
அவன் குரல் தழுதழுத்தது. தன் கீழ் உதட்டை அழுத்தமாகக் கடித்துக் கொண்டான்.

"இந்த அம்மாவைப் பார்க்கறச்சே., என் அம்மாவைப் பார்க்கிற மாதிரி இருந்தது. என் அம்ாவுக்கு இப்படித்தானே என்று என்னைப் பார்க்கணும்னு துடிச்சிருப்பாங்க.

இன்னிக்கு இங்கேயும் அதே நிலைமைத்தான். இவங்களும் மகனை பார்க்கத் துடிச்சுகிட்டு இருக்காங்க! ஆனா அவன் எப்போ பவருவானோ, என்னமோ? அதான், அவ்ஙக மகனா நடிச்சேன். மிலிட்டரி யூனிஃபார்மிலே இருந்த என்னை, அரை மயக்க நிலையிலே இருந்த இவங்க, என்னை தன் மகனா நினைச்சுட்டாங்க!

அந்த நினைப்புலேயே நிம்மதியாய்ப் போய் சேர்ந்துட்டாங்க! இன்னிக்குத்தான் என் மனசும் நிம்மதி அடைஞ்சுது. இந்த அம்மாவோட ஆத்மாவும் நிச்சயமா சாந்தி அடையும்!'

மீண்டும் ஒருமுறை, மீளாத் துயிலில் ஆழ்ந்திருந்த கமலம்மாவை சற்று நேரம் பார்த்தபின், மிலிட்டரி யூனிஃபார்ம் அணிந்த அந்த வாலிபன் அமைதியாக வெளியே செல்ல, டாக்டரும், சிஸ்டரும் பிரமித்து நின்றனர்.

- லட்சுமி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

எங்கிருந்தோ வந்தான்! Empty Re: எங்கிருந்தோ வந்தான்!

Post by krishnaamma Tue Oct 28, 2014 7:31 pm

ரொம்ப நெகிழ்வான கதை புன்னகை .......எனக்கு ரொம்ப பிடித்து விட்டது !


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

எங்கிருந்தோ வந்தான்! Empty Re: எங்கிருந்தோ வந்தான்!

Post by M.M.SENTHIL Tue Oct 28, 2014 7:35 pm

ராணுவ வீரனிடத்து இரக்கம் இருக்கும் என்றும்... அருமையான கதை அம்மா.....


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

எங்கிருந்தோ வந்தான்! Empty Re: எங்கிருந்தோ வந்தான்!

Post by krishnaamma Tue Oct 28, 2014 7:46 pm

M.M.SENTHIL wrote:ராணுவ வீரனிடத்து இரக்கம் இருக்கும் என்றும்... அருமையான கதை அம்மா.....
மேற்கோள் செய்த பதிவு: 1100147''

நன்றி செந்தில்................உங்க பதில் இல் இருந்த 'ம்' ஐ எடுத்துவிட்டேன்.....................ராணுவ வீரர்களிடம் நம்மைவிட இரக்கம் பாசம் ரொம்ப அதிகமாக இருக்கும் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

எங்கிருந்தோ வந்தான்! Empty Re: எங்கிருந்தோ வந்தான்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum