ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

யாழ்ப்பாண பல்கலை மாணவர்கள் 'தினமலர்' நாளிதழுக்கு அளித்த 'பளீச்' பேட்டி!

3 posters

Go down

யாழ்ப்பாண பல்கலை மாணவர்கள்  'தினமலர்' நாளிதழுக்கு அளித்த 'பளீச்'  பேட்டி! Empty யாழ்ப்பாண பல்கலை மாணவர்கள் 'தினமலர்' நாளிதழுக்கு அளித்த 'பளீச்' பேட்டி!

Post by krishnaamma Tue Oct 28, 2014 5:57 pm

சென்னை : 'தமிழக தலைவர்களின் கண்டனங்களும், தீர்மானங்களும், இலங்கையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. இலங்கை அரசை கண்டித்து, தமிழகத்தில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்படும் போது, தங்களுக்கான உரிமைகள் கிடைப்பது தள்ளிப் போவதாகவே, அங்குள்ள தமிழர்கள் கருதுகின்றனர்' என, தமிழகம் வந்துள்ள இலங்கை யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழ் இதழியல் கருத்தரங்குசென்னை பல்கலைக்கழகத்தின் இதழியல் மற்றும் தொடர்பியல் துறையுடன், இலங்கை, யாழ்ப்பாண பல்கலையின் ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி மையம் இணைந்து, கடந்த 20ம் தேதி துவங்கி, வரும் 31ம் தேதி வரையிலான, 12 நாள், தமிழ் இதழியல் கருத்தரங்கை நடத்துகின்றன. அதில், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இருந்து, 25 மாணவர்கள், ஒரு இயக்குனர் பங்கேற்றுள்ளனர்.

யாழ்ப்பாண பல்கலை மாணவர்கள், 'தினமலர்' நாளிதழுக்கு அளித்த பேட்டி:

இந்த கருத்தரங்கில் கலந்து கொள்ள தமிழகம் வருவதாக திட்டமிட்ட போது எப்படி உணர்ந்தீர்கள்?
கயிலைநாதன் கார்த்திக்: தமிழ் இதழியல் பற்றி, அதன் ஆணிவேரான தமிழகத்தில் கள ஆய்வு செய்வதற்கான வாய்ப்பு கிடைத்ததால், அதற்கான ஏற்பாடுகளை செய்யும் போது மனதுக்குள், தமிழகத்தை பற்றிய இனிய கற்பனைகள் விரிந்தன.

இலங்கையில், தற்போது தமிழ் மாணவர்களுக்கு கல்வி மறுக்கப்படும் சூழலோ, இருட்டடிக்கப்படும் சூழலோ உள்ளதா?

செபஸ்தியம்பிள்ளை காளிஸ்தான்: எங்கள், யாழ்ப்பாண பல்கலையை பொறுத்தவரை, அது போன்ற எந்த சூழலும் இல்லை. சில இடங்களில் இருக்கலாம்.அதை பற்றிய புள்ளி விவரங்கள் கிடைக்காத போது, தெளிவாக சொல்ல முடியாது.

வேலைவாய்ப்புகளில் அப்படிப்பட்ட சூழல் இருப்பதாக, பலர் தெரிவித்து உள்ளனர்.

யாழ்ப்பாண பல்கலையில் சிங்கள மாணவர்கள் படிக்கின்றனரா, அவர்களுக்கும் உங்களுக்குமான உறவு எப்படி உள்ளது?

கிருத்திகா: போருக்கு பின் வந்த காலங்களில், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில், சிங்கள மாணவர்களின் வருகை அதிகரித்துள்ளது. அவர்கள், எங்களையோ, நாங்கள் அவர்களையோ வெறுக்கும் சூழல் ஏதும் இல்லை.படிப்பு இயல்பாகவே இருக்கிறது. அவர்களும், எங்களுக்கு தோழர்களாகவே இருக்கின்றனர்.

இலங்கையில், தற்போது தமிழர்கள் பாதுகாப்பாக இருக்கின்றனரா, அவர்களுக்கான உரிமைகள் கிடைக்கிறதா?

சிவரேஸ்வரன் சுமணன்: நாங்கள் இருக்கும் பகுதி யாழ்ப்பாணம். அங்கு, ஓரளவு பாதுகாப்பு கிடைத்திருக்கிறது. மற்ற இடங்களின் நிலை பற்றி எங்களுக்கு தெரியாது.பொதுவாகவே, எல்லா கால கட்டத்திலும் கல்வி, மருத்துவ சேவைகள் மறுக்கப்பட்டதாக எனக்குதெரியவில்லை. முகாம்களில் இருந்து மீள் குடியமர்த்தப்படுவதில் நிறைய இழுபறியும், பல அரசியல் குறுக்கீடுகளும், ஊழல்களும் நிகழ்ந்திருப்பதாக தெரிகிறது. அதில், பல இடங்களில் பெயரளவுக்கே நடத்திருப்பதாகவும் சொல்லலாம்.

தமிழக அரசியல்வாதிகளின் கண்டனங்களுக்கும் தீர்மானங்களுக்கும், இலங்கை அரசிடம் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்துகின்றன. அப்போது, அங்குள்ள தமிழர்களின் நிலைப்பாடு என்ன?
கயிலைநாதன்: தமிழக தலைவர்களின் கண்டனங்களுக்கும், தீர்மானங்களுக்கும், இலங்கையில் எந்த வித மாற்றத்தையும் ஏற்படுத்தியதாக எங்களுக்கு தெரியவில்லை. இலங்கை அரசை கண்டித்து, எப்போதெல்லாம்

தீர்மானம் நிறைவேற்றப்படுகிறதோ, அப்போதெல்லாம் தங்களுக்கான உரிமைகள் கிடைப்பது தள்ளிப்போவதாகவே, அங்குள்ள தமிழர்கள் கருதுகின்றனர்.தமிழக தலைவர்கள் இணைந்து, ஒருமித்த குரலில் எந்த தீர்மானத்தையும் நிறைவேற்றாததால், இந்திய அரசின் அணுகுமுறையில் பெரிய மாற்றங்கள் நிகழ்வதில்லை. எனவே, தீர்மானங்கள், இலங்கை தமிழர்கள் மேல் உள்ள பற்றை காட்டுவதாக அமைகின்றனவே தவிர, உதவுவதாக இல்லை.அறிக்கைகளை விட்டு விட்டு, ஆக்கங்கள் தொடர்ந்தால், தமிழக தலைவர்கள் மீது நம்பிக்கை அதிகரிக்கும்.

தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை ராணுவத்தால் தாக்கப்படுவது பற்றி?

கிருத்திகா: தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது பற்றி, தமிழக ஊடகங்களின் வழியாகத் தான் நாங்கள் அறிந்து கொள்கிறோம்.ஆனாலும், இலங்கை தமிழ் மீனவர்களின் எல்லையில், தமிழக மீனவர்கள், தடை செய்யப்பட்ட மடிவலைகளுடன் வந்து மீன்பிடிப்பதால், இலங்கை தமிழர்களுக்கு வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக அங்கு கூறுகின்றனர். எப்படி இருந்தாலும், மீனவர்கள் தாக்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டும்.

தமிழகத்திற்கு வந்ததில் இருந்து நீங்கள் சந்தித்த இடர்பாடுகள் என்னென்ன?

இயக்குனர் தேவானந்த்: சென்னை விமான நிலையத்தில், நாங்கள் விசாரிக்கப்பட்டோம். எங்கள் மாணவர்கள், இங்குள்ள உளவுத் துறையினரால், துருவித்துருவி விசாரிக்கப்படுவதாக உணர்கிறோம். அதற்கு, ஆதாரம் இல்லை.சென்னை பல்கலையில் தான், நான் உயர்கல்வி முடித்தேன். தமிழகம் போன்ற பரந்துபட்ட மாநிலத்தில், தமிழ் மாணவர்களுடன் இணைந்து யாழ் மாணவர்கள் கருத்தரங்கில் பங்கேற்கும் போது, பண்பாடு, கலை, கலாசாரம், வாழ்வியல், மொழி உள்ளிட்ட கூறுகளை கவனிக்கும் திறன் ஏற்படுகிறது.இங்குள்ள மாணவர்கள், பேராசிரியர்களின் ஒத்துழைப்பு நன்றாக உள்ளது.மேலும், இது போன்ற பல கருத்தரங்குகளை இரு நாடுகளும் நடத்துவதால், மாணவர்களுக்கு இயல்பான புரிந்துணர்வும், உறவும் ஏற்பட வாய்ப்பு ஏற்படும்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

தினமலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

யாழ்ப்பாண பல்கலை மாணவர்கள்  'தினமலர்' நாளிதழுக்கு அளித்த 'பளீச்'  பேட்டி! Empty Re: யாழ்ப்பாண பல்கலை மாணவர்கள் 'தினமலர்' நாளிதழுக்கு அளித்த 'பளீச்' பேட்டி!

Post by krishnaamma Tue Oct 28, 2014 6:05 pm

கிருத்திகா: தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது பற்றி, தமிழக ஊடகங்களின் வழியாகத் தான் நாங்கள் அறிந்து கொள்கிறோம்.ஆனாலும், இலங்கை தமிழ் மீனவர்களின் எல்லையில், தமிழக மீனவர்கள், தடை செய்யப்பட்ட மடிவலைகளுடன் வந்து மீன்பிடிப்பதால், இலங்கை தமிழர்களுக்கு வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக அங்கு கூறுகின்றனர். எப்படி இருந்தாலும், மீனவர்கள் தாக்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டும்.

நம் மீனவர்கள் ஏன் இப்படி செய்யணும் என்று எனக்கு எப்பவுமே தோன்றும் புன்னகை...................அதேபோல நம் கடற்படை ஏன் இவங்களை தடுப்பதில்லை எல்லை தாண்டும்போது?.................எனக்கு நிஜமாகவே புரிவதில்லை..................யாராவது விளக்கினால் நல்லது புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

யாழ்ப்பாண பல்கலை மாணவர்கள்  'தினமலர்' நாளிதழுக்கு அளித்த 'பளீச்'  பேட்டி! Empty Re: யாழ்ப்பாண பல்கலை மாணவர்கள் 'தினமலர்' நாளிதழுக்கு அளித்த 'பளீச்' பேட்டி!

Post by ayyasamy ram Tue Oct 28, 2014 6:28 pm

தடை செய்யப்பட்ட மடிவலைகளுடன் மீன்பிடிப்பதால்
வரும் பிரச்சினைதான் அதிகமாக தெரிகிறது...
-
மீன் பிடிப்படகுகள் பெரிய முதலாளிகளுக்கு சொந்தமானதாக இருக்கும்
-
அப்படகை வாடகைக்கு எடுத்துச் செல்லும் மீனவர்கள்
செலவுகளை சமாளிக்க இப்படிப்பட்ட தவறுகளைச் செய்கிறார்கள்
-
அதனால் மீனவர்கள் மீது அனுதாபம் வருவது படிப்படியாக குறைந்து வருகிறது...
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

யாழ்ப்பாண பல்கலை மாணவர்கள்  'தினமலர்' நாளிதழுக்கு அளித்த 'பளீச்'  பேட்டி! Empty Re: யாழ்ப்பாண பல்கலை மாணவர்கள் 'தினமலர்' நாளிதழுக்கு அளித்த 'பளீச்' பேட்டி!

Post by krishnaamma Tue Oct 28, 2014 6:36 pm

ayyasamy ram wrote:தடை செய்யப்பட்ட மடிவலைகளுடன் மீன்பிடிப்பதால்
வரும் பிரச்சினைதான் அதிகமாக தெரிகிறது...
-
மீன் பிடிப்படகுகள் பெரிய முதலாளிகளுக்கு சொந்தமானதாக இருக்கும்
-
அப்படகை வாடகைக்கு எடுத்துச் செல்லும் மீனவர்கள்
செலவுகளை சமாளிக்க இப்படிப்பட்ட தவறுகளைச் செய்கிறார்கள்
-
அதனால் மீனவர்கள் மீது அனுதாபம் வருவது படிப்படியாக குறைந்து வருகிறது...
-
மேற்கோள் செய்த பதிவு: 1100121

செய்யக் கூடாது என்று சொல்வதை இவர்கள் செய்வார்கள்....................ஆனால் இவர்களை ஒண்ணும் பண்ணக் கூடாதாமா ?.................அடப்பாவிகளா.....................!


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

யாழ்ப்பாண பல்கலை மாணவர்கள்  'தினமலர்' நாளிதழுக்கு அளித்த 'பளீச்'  பேட்டி! Empty Re: யாழ்ப்பாண பல்கலை மாணவர்கள் 'தினமலர்' நாளிதழுக்கு அளித்த 'பளீச்' பேட்டி!

Post by ராஜா Tue Oct 28, 2014 7:05 pm

தினமலர் ஒரு சிறந்த தேசபக்தி செய்தித்தாள் அவர்களின் செய்திகள் அந்த அளவிற்கு தமிழர்களின் நலனை பாதுகாப்பதில் தான் இருக்கும் கோபம் என்ன கொடுமை சார் இது வாயில் எதாவது அசிங்கமா வந்துட போகுது.


இங்க வந்து , சிங்களர்கள் எங்களுக்கு எதிரி என்று சொன்னால் திரும்பவும் இலங்கையில் கால் வைக்க முடியுமா என்ன? அதனால் தான் அழகாக பதிலளித்திருக்கிறார்கள் யாழ் பல்கலை மாணவர்கள். பிழைக்க தெரிந்த பிள்ளைகள் புன்னகை


1983 க்கு பிறகு இலங்கையில் இருந்து உருவாகியுள்ள பொறியியல் & மருத்துவ பட்டதாரிகளில் எத்தனை பேர் தமிழர்கள் என்று கணக்கெடுத்து பார்த்தாஎல் தெரியும். சிங்களர்கள் உங்களை தோழர்களாக மதிக்கிறார்களா இல்லையா என்று....
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

யாழ்ப்பாண பல்கலை மாணவர்கள்  'தினமலர்' நாளிதழுக்கு அளித்த 'பளீச்'  பேட்டி! Empty Re: யாழ்ப்பாண பல்கலை மாணவர்கள் 'தினமலர்' நாளிதழுக்கு அளித்த 'பளீச்' பேட்டி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அண்ணா பல்கலை.யில் குவிந்த இரட்டையர் மாணவர்கள்
» தாத்தா, பாட்டி படிக்காதவர்களா?: சர்டிபிகேட் கேட்கும் அண்ணா பல்கலை.-மாணவர்கள் குழப்பம்
» தோழர்களே எனக்கு ஈழ தமிழ் பெண் ஒருவர் அளித்த பேட்டி வேண்டும் உதவுங்கள்
» அஜீத் ஆனந்த விகடனுக்கு அளித்த பேட்டி
» மதுரை காமராஜர் பல்கலை., மாணவர்கள் மோதல் : 3 பேருக்கு கத்திக்குத்து

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum