ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடப்பது எல்லாம் நன்மைக்கே!

Go down

நடப்பது எல்லாம் நன்மைக்கே! Empty நடப்பது எல்லாம் நன்மைக்கே!

Post by krishnaamma Tue Oct 28, 2014 1:58 pm

நடப்பது எல்லாம் நன்மைக்கே! J2LRMvUBS0CHBWHMqwyA+Tamil_News_large_1101002

பயிற்சிகள் செய்யாத தேகம்
பாழ்பட்டுப் போகிறது
உழைக்காத தேகம்
உலுத்துப் போகிறதுநடக்காத தேகம்
நலிவடைந்து போகிறது.
இதை நாம் அனுமதிக்கலாமா? நமது உடல், நோய்ப்பறவைகளின் வேடந்தாங்கல் ஆகலாமா? கூடவே கூடாது.

'அழகு' என்பது யாது?:

நடை பயிற்சியால் நமது உடலில் ரத்த ஓட்டம் சீராகி திசுக்களை மேம்படுத்துகிறது. உடலில் திசு இறுக்கப் பிடிப்பை உருவாக்கும் 'லேக்டிக்' அமிலம் வெளியேற்றப்படுகிறது. சுறுசுறுப்பு அதிகமாவதுடன், நமது மெட்டபாலிசம், உணவு தன் மயமாதல், ஜீரணம் சிறப்படைகிறது. நடப்பது கால்களுக்கு, உடலுக்கு, மனதுக்கு ஒரு புதுசக்தி, தெம்பை தருகிறது. உடல் நலிவை குறைத்து உடல் வலுவைத் தருகிறது. எல்லோரும் நடக்கலாம். எந்த வயதிலும் நடக்கலாம். எப்போதும் நடக்கலாம். நடை ஓர் உடம்பின் இயல்பான இயக்கம்.

ஆடும் போது மயில் அழகு
ஓடும்போது மான் அழகு
தாவும் போது முயல் அழகு
கூவும்போது குயில் அழகு
மேயும் போது பசு அழகு
பாயும்போது புலி அழகு
நடக்கும்போது தான் மனிதன் அழகு.

நடக்கவும் நேரம் உண்டு:

சாப்பிடும், உறங்கும் நேரம் தவிர அனைத்து நேரமும் நடைக்கான நேரம் தான். அதிகாலை நேரம் சிறப்புடையது. அதிகாலை 4 முதல் 6 மணி வரை 'ஓசோன்' காற்று மிகுந்துள்ள நேரம். காலையில் நடப்பதால் சூரியஒளி உடலில் பரவி 'டி' வைட்டமின் கிடைக்கும். காலையில் தவறினால் மாலை 5 முதல் இரவு 7 மணி வரை நடக்கலாம்; சாப்பிட்ட பின் நடக்கக்கூடாது.

நடைக்கு முன் எளிய பயிற்சி :


நடை பயிற்சிக்கு முன்னதாக சில எளிய பயிற்சிகளை மேற்கொள்ளலாம். கால் விரல்களை மடக்கி நீட்டுதல். கணுக்காலை மேலும் கீழும் மற்றும் பக்கவாட்டில் அசைத்தல். இருபுறமும் சுழற்றுதல். நின்று கொண்டு முழங்காலை இருபுறமும் அசைத்து இயல்பாக சுழற்றுதல். வலதுகாலை மடக்கி வலது கையை நீட்டிப் பிடித்தல். பின், இடது காலை மடக்கி பிடித்தல். (எல்லாமும் 10 முறை). வலது, இடது கைகளை நன்றாக வட்ட மடித்து சுழற்றுதல். (மாறி மாறி 10 முறை). கழுத்தை வலது, இடது மேலும் கீழும் அசைத்தல் (ஐந்து முறை). வட்ட மடித்து இருபுறமும் சுழற்றுதல் (ஐந்து முறை).

நடையில் உடையின் பங்கு :


நடை பயிற்சிக்கு முன் காபி, டீ குடிக்கக்கூடாது. தண்ணீர் 3 டம்ளர் அருந்தலாம். இனிப்பு சேர்க்காத பழச்சாறு அருந்தலாம். கனமான சுமை, பொருட்களுடன் நடக்கக்கூடாது. மொபைல் போன் பேசி கொண்டே நடக்கக்கூடாது. அதிக எடையில்லாத காலணிகளை அணிந்து, எளிய பருத்தி உடைகளுடன் நடக்கலாம். காற்றோட்டம் உள்ள இடம் அல்லது பூங்கா பகுதியில் நடக்கலாம். மற்றவர்களுடன் அரட்டை அடித்துக்கொண்டு நடக்கக்கூடாது.

பிராத்தனையில் மனம் ஒன்றுபடுவது போல் நடை பயிற்சியிலும் மனம் ஒன்று பட வேண்டும்.நன்றாக நிமிர்ந்து நடக்க வேண்டும். தலை, கழுத்து, தோள்பட்டை, இடுப்பு, முழங்கால்கள் நேர்கோட்டில் இருக்குமாறு நடக்க வேண்டும். பாதம் பார்த்து நடப்பதை தவிர்க்க வேண்டும். குதிங்காலை முதலில் வைத்து மற்ற பகுதிகள் பிறகு அழுத்துமாறு பாதம் பதிந்து நடக்க வேண்டும். ராணுவ வீரனை போல் நடக்க வேண்டும். நீளமான அடி எடுத்து நடப்பதை விட, அளவான அடி எடுத்து வைத்து நடந்தால் விரைவில் களைப்பு ஏற்படாது.

எட்டு நடை :

எண் 'எட்டினை' தரையில் வரைந்து அதன் மீது நடந்திடுங்கள். அகலம் 6 முதல் 8 அடிகள் இருக்கலாம். நீளம் 12 முதல் 16 அடி வரை இருக்கலாம். மிக அதிகமான நீள அகலத்தில் 8 போட வேண்டாம். நடக்கும்போது உடம்பை விரைப்பாக வைக்காமல் இலகுவாக வைத்தபடி நடந்திடுங்கள்.'நான்கு' நடை என்பது நமது கால் பாதத்தை நான்கு பிரிவுகளாக்கி, அப்பகுதியில் மட்டுமே ஒரே நேரத்தில் தரையில் படும்படி நடப்பது.

கால் விரல்கள், முன்பாதம் தரையில் படியுமாறு ௧௦ அல்லது 20 அடி துாரம் நடக்கலாம். குதிகால் தரையில் படாமல் நடக்க வேண்டும். பின்பாதம் தரையில் படும்படி 10 அடி முதல் 20 அடி துாரம் வரை நடக்கலாம். இதில் முன் பாத விரல்கள் தரையில் படாது. இருபாதத்தின் வெளிபக்க ஓரங்கள் மட்டும் தரையில்படும்படி தரையில் கவனமாக 10 முதல் 20 அடி துாரம் வரை நடக்கலாம். நிறைவாக முழங்காலை உட்புறமாக பாதங்களை அகற்றி உள்பாதம் ஓரம் தரையில் படும்படியாக நடந்து பழகலாம்.


ஒரு குட்டிக்கதை :

நடை பயிற்சியால் நடப்பதெல்லாம் நன்மைக்கே என்பதை அனுபவம் மூலம் தெரிந்து கொள்ளலாம். ஒரு ராஜா இருந்தார். அவருடைய அமைச்சருக்கு ஒரு பழக்கம் உண்டு. எந்த நிகழ்வு நடந்தாலும் 'நடப்பதெல்லாம் நன்மைக்கே' என்பர். அரசர் ஒரு நாள் பழம் வெட்டி சாப்பிடும்போது சுண்டு விரலை கத்தியால் வெட்டி கொண்டார். ரத்தம் கொட்டியது. அரசு வைத்தியர் விரலுக்கு வைத்தியம் செய்தார். 'நடப்பதெல்லாம் நன்மைக்கே' என்றார் அமைச்சர்.அரசருக்கு கோபம் வந்து விட்டது. அமைச்சரை சிறையில் அடைத்தார். அப்போதும் 'நடப்பதெல்லாம் நன்மைக்கே' என்றார் அமைச்சர். சில மாதங்கள் கழித்து அரசர் தனது பரிவாரங்களுடன் வேட்டைக்கு சென்றார். ஒரு மானை துரத்திக் கொண்டு போன அரசர், அடர்ந்த காட்டுக்குள் தனியாக மாட்டிக் கொண்டார். அரசரை, ஆதிவாசிகள் பிடித்து கொண்டு போய்விட்டனர். அவர்களது தலைவன் முன் நிறுத்தினர். அரசரை நரபலியிட ஏற்பாடு நடந்தது.அப்போது பூஜாரி, 'பலி கொடுக்கும் மனிதனுக்கு உடம்பில் காயம் எதுவும் இருக்கக்கூடாது' என்றார். கைவிரலில் காயத்தழும்பு இருப்பதை பார்த்து அரசரை விட்டு விட்டனர். அரண்மனைக்கு வந்த அரசர், சிறையில் இருந்த அமைச்சரை விடுதலை செய்தார். ''நீங்கள் அன்று சொன்னது சரியானது தான்,'' என்றார் அரசர்.'அதுசரி, உங்களை சிறையில் போட சொன்னபோது அப்பவும் நடப்பதெல்லாம் நன்மைக்கே எனக் கூறியதன் காரணம் ஏன்ன?' என அமைச்சரிடம் கேட்டார்.''நீங்கள் சிறையில் என்னை அடைத்ததால் தான் நான் உங்களுடன் வேட்டைக்கு வரவில்லை. இல்லை என்றால் நானும் வந்திருப்பேன். உங்களுக்கு காயம் இருப்பதால் தப்பித்தீர்கள்; ஆனால் என்னை பலியிட்டிருப்பார்கள். எனவே, தான் அப்படி கூறினேன்,'' என்றார்.இக்குட்டிக்கதை மூலம் 'நட'ப்பதெல்லாம் நன்மைக்கே...! என்பதை புரிந்து நடை பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

- முனைவர் இளசை சுந்தரம்,
வானொலி நிலைய
முன்னாள் இயக்குனர்,
மதுரை.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum