ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில்

3 posters

Go down

லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் Empty லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில்

Post by விமந்தனி Mon Oct 27, 2014 1:09 pm

நேற்று பரிக்கல் அருள்மிகு லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் சென்று வந்தோம். அந்த கோவிலை பற்றிய தகவல்களை நம் ஈகரை உறவுகளுடன் பகிர்ந்து கொள்ளும் நோக்கமே இந்த பதிவு.
இங்கு நாங்கள் செல்வது இரண்டாவது முறையாகும்.

இந்த கோயில் விழுப்புரத்தில்,  பரிக்கல் என்ற சிற்றூரில் இருக்கிறது. கிட்டத்தட்ட 1000 வருடங்களுக்கு மேற்பட்ட மிகப்பழமையான கோயிலாம். இக்கோயிலின் மூலவர் லக்ஷ்மி நரசிம்மர் மற்றும் கனகவல்லி தாயார்.

லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் STRLv2wbQ0Wf307Bt7uW+T_500_799

பெருமாள் கிழக்கு பார்த்து அமர்ந்துள்ளார். அவரது இடப்பக்கம் தாயார் மடியில் உட்கார்ந்துள்ளார். இங்கு பெருமாளை தாயார் ஆலிங்கனம் செய்துள்ளபடி இருப்பதால் இங்கு பெருமாள் மிகவும் சாந்தசொரூபமாக உள்ளார்.

பொதுவாக நரசிம்மர் கோயிலில் உக்கிர மூர்த்தியான நரசிம்மர் தன் மடியிலுள்ள மகாலட்சுமியை ஆலிங்கனம் செய்திருப்பார். ஆனால் இந்தியாவிலேயே இங்கு மட்டும்தான் நரசிம்மரை லட்சுமி தாயார் தன் வலக்கையாலும், லட்சுமி தாயாரை நரசிம்மரும் ஆலிங்கனம் செய்தபடி இருக்கிறார்கள்.

இதிலிருந்தே நரசிம்மரின் உக்கிரம் முழுதும் தணிந்து வேண்டுவோர்க்கு வேண்டும் அருள் கிடைக்கும் என்பது நிச்சயம். இது இந்த கோயிலின் தனி சிறப்பாகும்.

பெருமாள் பக்கத்திலேயே ஆஞ்சநேயர் இருப்பது மற்றொரு தனிச் சிறப்பு. வீர ஆஞ்சநேயர், பக்த ஆஞ்சநேயர் ஒரு சேர உள்ளது இத்தலத்தின் முக்கிய சிறப்பாகும். தினம் எள் எண்ணெய் தீபம் ஏற்றி நவதானியங்களை இவர்கள் முன் பரப்பி நாம் கோரும் பிரார்த்தனைகளை கையால் எழுத. எல்லா நன்மைகளும் கிடைக்குமாம். நவகிரகங்களினால் ஏற்படும் உபாதைகளும் நீங்குமாம்.


லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonலட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் Empty Re: லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில்

Post by விமந்தனி Mon Oct 27, 2014 1:11 pm

இந்த கோயிலின் தல வரலாறு;

லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் P6A4qKFDR6ywWd9wr9zM+Parikal-Narasimha-Temple-Aippasi-Swathi-utsavam-2014-6(இந்த படம் : இணையத்திலிருந்து)

வசந்தராஜன் என்ற மன்னன் நரசிம்மரின் மீது மிகுந்த பக்தி கொண்டவன். இவன் நரசிம்மருக்கு கோயில் கட்ட எண்ணி, தன் குருவான வாமதேவ ரிஷியை கொண்டு மூன்று இரவுகள் தொடர்ந்து யாகங்கள் செய்ய ஏற்பாடு செய்தான். இதற்காக தன் சிற்றரசர்களுக்கெல்லாம் அழைப்பு அனுப்பினான். வசந்தராஜனின் அழைப்பின் பேரில் குறிப்பிட்ட இடத்திற்கு சிற்றரசர்கள் வந்தனர். யாகம் தொடங்கும் நேரத்தில் பரிகலாசூரன் என்ற அசுரன், யாகத்தை தடுக்க தன் படையுடன் புறப்பட்டான். அசுரன் வருவதை அறிந்த குரு, வசந்த ராஜன் கையில் கங்கணம் கட்டி, "அராக்ஷ்ர அமிர்தாக்ஷ்ர' என்று தொடங்கும் மந்திரத்தை உபதேசத்து, அருகில் உள்ள புதறில் மறைந்து கொள்ள செய்தார். இருந்தாலும் அசுரன், வசந்தராஜனை கோடாரியால் தாக்கினான். இதனால் கோபமடைந்த நரசிம்மர், தன் பக்தனை காப்பாற்ற உக்கிர நரசிம்மராக தோன்றி பரிகலாசூரனை அழித்து வசந்தராஜனுக்கு காட்சி கொடுத்தார். பரிகலாசூரன் என்ற அசுரனை அழித்ததால், இத்தலம் பரிக்கல் எனப்படுகிறது.

சாந்த நரசிம்மர்: தனக்கு தரிசனம் கொடுத்த உக்கிர நரசிம்மரிடம்,""பரந்தாமா! தாங்கள் எப்போதும் இங்கிருந்து உன்னை நாடிவரும் பக்தர்களின் குறைகளை தீர்க்க சாந்த நரசிம்மராக அருள வேண்டும்,''என வேண்டினான். அதன்படி வசந்தராஜன் கட்டிய கோயிலுக்கு தேவசிற்பியான விஸ்வகர்மா லட்சுமி நரசிம்மர் சிலை செய்து கொடுத்தார். அதை குரு வாமதேவ ரிஷி பிரதிஷ்டை செய்தார். நரசிம்மரும் லட்சுமி தாயாருடன் இணைந்து சாந்த நரசிம்மராக இத்தலத்தில் அருள்பாலிக்கிறார். சிலகாலம் இந்த விக்கிரகத்திற்கு சிறப்பான பூஜை செய்யப்பட்டது. காலப்போக்கில் இது சரிவர பராமரிக்கப்படாமல், புற்று மறைத்து விட்டது.

இவ்வூருக்கு அருகில் அக்ரஹாரத்தில் வாழ்ந்த வாய் பேசமுடியாத ஒருவன் கனவில் தோன்றிய பெருமாள், நரசிம்மர் சிலை புற்றில் மறைந்திருப்பதாகவும், அதை மீண்டும் பிரதிஷ்டை செய்யும்படியும் கூறி மறைந்தார். இதை அவன் ஊர்மக்களிடம் தெரிவித்தான். அதன்படி ஊர்மக்களும் லட்சுமி நரசிம்மரை எடுத்து புதிதாக கோயில் கட்டி பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்தார்கள். மூலஸ்தானத்தில் லட்சுமி நரசிம்மரும், தனி சன்னதியில் கனகவல்லி தாயாரும் அருள்பாலிக்கின்றனர்.


லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonலட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் Empty Re: லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில்

Post by விமந்தனி Mon Oct 27, 2014 1:11 pm

பதவி உயர்வு வேண்டுபவர்களும், பதவி இழந்தவர்களும் இங்கு வந்து பிரார்த்தனை செய்தால் அவர்களது வேண்டுதல் கண்டிப்பாக நிறைவேறும் என்பதே இக்கோயிலின் தனிச் சிறப்பு என்று இங்கு வந்து பலனடைந்தவர்கள் கூறுகின்றார்களாம்.

கை கால் ஊனம், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், கல்யாணத் தடை உள்ளவர்கள், வழக்கு வம்புகளில் சிக்கி இருப்பவர்கள், பில்லி சூன்யங்களால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தலத்தில் வந்து வழிபட்டால் தங்கள் பிரச்னைகளிலிருந்து விடுபட்டு நல்ல தீர்வு கிடைக்கப் பெறுவார்கள் என்று நம்பப்படுகிறது.

பிரகாரத்தின் வாயு மூலையில் வாயுமைந்தனான அனுமன், வீர ஆஞ்சநேயராகவும், பக்த ஆஞ்சநேயராகவும் அருள்பாலிக்கிறார். பக்தகர்கள் இவருக்கு முன்னால் நெல்லை கொட்டி அதில் தங்கள் கோரிக்கைகளை எழுதி வழிபாடு செய்கின்றனர். இதனால் தங்கள் கோரிக்கைகள் விரைவில் தீரும் என்பது நம்பிக்கை. பிரகாரத்தில் வடக்கே வரதராஜப்பெருமாள், தென்கிழக்கே விநாயகர் கோயில் எதிரே கருடன் ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் அருளுகின்றனர்.

இக்கோயிலின் தென்கிழக்கே அமைந்துள்ள விநாயகர் கோயில்.

லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் XfE5m8QJTcSKPHk5YIYX+DSCN1894

நம் ஈகரை உறவுகள் அனைவரும் நேரம் கிடைக்கும் போது ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மரை வணங்கி அவர் அருளை பெற்று வாருங்கள்.

ஸுபம்


லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonலட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் Empty Re: லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில்

Post by krishnaamma Mon Oct 27, 2014 1:37 pm

அருமை விமந்தனி .................உங்களால் இன்று ஒரு புண்ணிய ஸ்தலம் பற்றி தெரிந்து கொண்டேன் புன்னகை பகிர்வுக்கு ரொம்ப நன்றி புன்னகை நன்றி அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் Empty Re: லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில்

Post by krishnaamma Mon Oct 27, 2014 7:10 pm

விமந்தனி, இந்த கட்டுரையை 'இந்து' அல்லது 'சுற்றுலாவுக்கு' மாத்திடலாமா? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் Empty Re: லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில்

Post by விமந்தனி Mon Oct 27, 2014 10:18 pm

krishnaamma wrote:விமந்தனி,  இந்த கட்டுரையை 'இந்து' அல்லது  'சுற்றுலாவுக்கு' மாத்திடலாமா? புன்னகை

மாற்றிவிடுங்கள் கிருஷ்ணாம்மா.  அப்படியே இதையும் 'இந்து' பகுதிக்கு மாற்றிவிடுங்கள்.


லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonலட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் Empty Re: லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில்

Post by krishnaamma Mon Oct 27, 2014 10:25 pm

விமந்தனி wrote:
krishnaamma wrote:விமந்தனி,  இந்த கட்டுரையை 'இந்து' அல்லது  'சுற்றுலாவுக்கு' மாத்திடலாமா? புன்னகை

மாற்றிவிடுங்கள் கிருஷ்ணாம்மா.  அப்படியே இதையும் 'இந்து' பகுதிக்கு மாற்றிவிடுங்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1099863

விமந்தனி மாத்தியச்சும்மா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் Empty Re: லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில்

Post by ayyasamy ram Tue Oct 28, 2014 5:52 am

லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் 103459460
-

இக்கோயிலுக்கு ஜெனரேட்டர் வசதி இருந்தும்
அதனை இந்து அறநிலையத் துறை அதிகாரிகள்
சரியாக பராமரிக்காததால் அது இயங்குவதில்லை.

இந்த சூழலைப் பயன்படுத்தி சமூக விரோதிகள்
சிலர் இக்கோயிலின் உண்டியலை உடைத்து திருட்டு
நடவடிக்கையில் ஈடுபடுவதாகக் கூறப்படுகிறது.

எனவே அறநிலையத் துறை அதிகாரிகள் ஜெனரேட்டரை
பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே
பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது.
-
--தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் Empty Re: லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum