Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நிலக்கடலை உண்போம்... நீடித்து வாழ்வோம் !
+5
krishnaamma
கோ. செந்தில்குமார்
M.M.SENTHIL
paiyaan
தமிழ்நேசன்1981
9 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
நிலக்கடலை உண்போம்... நீடித்து வாழ்வோம் !
நிலக்கடலை... கடலை, மல்லாக்கொட்டை, மணிலாக் கொட்டை என பல்வேறு பெயர்களில் தமிழகத்தில் அழைக்கப்படும் உணவுப் பொருள். இதை தொடர்ச்சியாக உண்பதால் வாழ்நாள் நீடிக்கும் என்பது பலரும் அறியாத ஒன்று.
மாறிவிட்ட வாழ்க்கை முறையால், பன்னாட்டு உணவுக் கம்பெனிகளின் கடைவிரிப்பால் நம் மரபுசார்ந்த உணவுப் பொருளான நிலக்கடலையைக் கைவிட்டவர்கள் நம்மில் அதிகம் என்றால் அது மிகை இல்லை. குறிப்பாக நிலக்கடலை எண்ணையை முற்றிலும் புறக்கணித்து விட்டோம் என்றே சொல்லலாம். சமையல் எல்லாமே ரீபைண்ட் ஆயில்தானே!
பாதாம், பிஸ்தா, முந்திரிப்பருப்புகளில்தான் சத்து அதிகம் உள்ளது என்று கருதுகிறோம். அது தவறு. நிலக்கடலையில்தான் இவற்றை எல்லாம் விட அளவுக்கதிகமான சத்துக்கள் உள்ளன என்பது ஆய்வுகள் தரும் முடிவு. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஆற்றலும் நிலக்கடலைக்குத்தான் உண்டு.
நிலக்கடலையில் போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால் இனப்பெருக்கம் விரைவாக நடக்கிறது. எனவே நிலக் கடலையை தொடர்ந்து சாப்பிடும் பெண்களின் கர்ப்பப்பை சீராக செயல்படும்.மேலும், கர்ப்பப்பைக் கட்டிகள், நீர்க் கட்டிகள் ஏற்படாதது மட்டுமல்லாது குழந்தைப் பேற்றில் தடை இருக்காது. .
நிலக்கடலையில் மாங்கனீஸ் சத்து நிறைய உள்ளது. இது, மாவுச்சத்து மற்றும் கொழுப்புகள் மாற்றத்தில் முக்கிய பங்காற்றுகிறது. நாம் உண்ணும் உணவில் இருந்து கால்சியம் நமது உடலுக்கு கிடைக்கவும் பயன்படுகிறது. குறிப்பாக பெண்கள் நிலக்கடலையைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்புத்துளை நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம் என்பது மருத்துவ ஆய்வின் மகத்தான முடிவு.
தினசரி நிலக்கடலையை 30 கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் உருவாவதைத் தடுக்க முடியும் என்பது 20 வருடம் தொடர்ந்து நிலக்கடலையை உண்போரிடையே நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
பொதுவாக, நிலக் கடலை சாப்பிட்டால் எடை போடும் என்பது நம்மிடையே உள்ள எண்ணம். ஆனால் அது உண்மையல்ல. ஒரு மூட நம்பிக்கையே. மாறாக உடல் எடையை சம நிலையில் வைத்திருக்கும் சக்தி நிலக் கடலைக்கு உண்டு. எனவே தாரளமாக நிலக்கடலையைச் சாப்பிடலாம். நிலக்கடலையில் ரெஸ்வரெட்ரால் என்ற சத்து நிறைந்துள்ளது. இது இதய வால்வுகளை பாதுகாக்கிறது. இதய நோய்கள் வருவதையும் தடுக்கிறது. இதுவே மிகச் சிறந்த ஆண்டி ஆக்சிடென்டாக திகழ்கிறது. இளமையைப் பராமரிக்கவும் பயன்படுகிறது.
மனிதனுக்கு நன்மை செய்யும் கொழுப்புதான் நிலக்கடலையில்உள்ளது. நிலக்கடலையில் உள்ள தாமிரம் மற்றும் துத்தநாக சத்தானது நமது உடலின் தீமை செய்யும் கொழுப்பை குறைத்து நன்மை செய்யும் கொழுப்பை அதிகமாக்குகிறது. 100 கிராம் நிலக்கடலையில் 24 கிராம் மோனோஅன் சாச்சுரேட்டேட் வகை கொழுப்பு உள்ளது. பாலிஅன் சாச்சுரேட்டேடு 16 கிராம் உள்ளது.
இந்த இருவகை கொழுப்புமே நமது உடம்புக்கு நன்மை செய்யும் கொழுப்பாகும். பாதாமை விட நிலக்கடலையில் நன்மை செய்யும் கொழுப்பு அதிகமாக உள்ளது. நிலக்கடலையில் உள்ள ஒமேகா-3 சத்தானது நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
கடந்த 20 வருடமாக இந்தியாவில் நிலக்கடலையின் விலையில் பெரியமாற்றம் ஏதும் இல்லாமல் விற்பனை செய்யப்படுகிறது என்பது கவனிக்கத்தக்கது. ஆனால் இதே கால கட்டத்தில் அமெரிக்கர்களின் உணவில் நிலக்கடலையின் பங்கு 15 மடங்கு கூடி இருப்பதுடன் விலையும் கூடிஇருக்கிறது. இந்தியர்கள் அனைவரும் நிலக்கடலை சாப்பிட ஆரம்பித்தால் அமெரிக்கர்கள் நிலக்கடலை அதிகம் விலை கொடுத்து சாப்பிட வேண்டும் என்று கருதிதான் இந்தியர்களிடம் நிலக்கடலை குறித்து தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளது என்பதே உண்மை.
100 கிராம் நிலக்கடலையில் நிறைந்துள்ள சத்துக்கள்:
கார்போஹைட்ரேட்- 21 மி.கி.
நார்சத்து- 9 மி.கி.
கரையும் கொழுப்பு – 40 மி.கி.
புரதம்- 25 மி.கி.
ட்ரிப்டோபான்- 0.24 கி.
திரியோனின் – 0.85 கி
ஐசோலூசின் – 0.85 மி.கி.
லூசின் – 1.625 மி.கி.
லைசின் – 0.901 கி
குலுட்டாமிக் ஆசிட்- 5 கி
கிளைசின்- 1.512 கி
விட்டமின் -பி1, பி2, பி3, பி1, பி2, பி3, பி5, பி6, சி
கால்சியம் (சுண்ணாம்புச்சத்து) – 93.00 மி.கி.
காப்பர் – 11.44 மி.கி.
இரும்புச்சத்து – 4.58 மி.கி.
மெக்னீசியம் – 168.00 மி.கி.
மேங்கனீஸ் – 1.934 மி.கி.
பாஸ்பரஸ் – 376.00 மி.கி.
பொட்டாசியம் – 705.00 மி.கி.
சோடியம் – 18.00 மி.கி.
துத்த நாகச்சத்து – 3.27 மி.கி.
தண்ணீர்ச் சத்து – 6.50 கிராம்.
எனவே நமது மரபு சார்ந்த நிலக்கடலை உணவு உண்பதை வழக்கத்திற்குக் கொண்டு வரலாமே!!
- தேவராஜன்
தமிழ்நேசன்1981- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
Re: நிலக்கடலை உண்போம்... நீடித்து வாழ்வோம் !
"இந்தியர்கள் அனைவரும் நிலக்கடலை சாப்பிட ஆரம்பித்தால் அமெரிக்கர்கள் நிலக்கடலை அதிகம் விலை கொடுத்து சாப்பிட வேண்டும் என்று கருதிதான் இந்தியர்களிடம் நிலக்கடலை குறித்து தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளது என்பதே உண்மை."
இப்படியும் ஒரு உண்மை இருக்கா?. அருமையான பதிவு. நன்றி தமிழ்நேசன் அவர்களே
இப்படியும் ஒரு உண்மை இருக்கா?. அருமையான பதிவு. நன்றி தமிழ்நேசன் அவர்களே
paiyaan- பண்பாளர்
- பதிவுகள் : 69
இணைந்தது : 04/08/2014
Re: நிலக்கடலை உண்போம்... நீடித்து வாழ்வோம் !
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: நிலக்கடலை உண்போம்... நீடித்து வாழ்வோம் !
ஏழைகளின் முந்திரி பருப்பு --- நிலக்கடலை. இது எத்தனை பேருக்கு தெரியும். முந்திரி பருப்பில் இருக்கும் சத்துக்கள் நிலக்கடலையிலும் உள்ளன.
Re: நிலக்கடலை உண்போம்... நீடித்து வாழ்வோம் !
எனக்கு......எங்களுக்கு ரொம்ப பிடிக்கும் வேர்கடலை................எந்த ஊரில் வீடு பார்த்தாலும் முதலில் பக்கத்தில் வேர்கடலை வறுக்கும் கடை இருக்கா என்று முதலில் பார்ப்போம்................ ....இப்போவெல்லாம் கஷ்டம்.............எனவே, பச்சையாக , வீட்டிலேயே வறுத்து, வேகவைத்து என்று சாப்பிடுவோம்....................கடலை எண்ணெய் வாசமும் ரொம்ப பிடிக்கும்..............பருப்பு பொடி சாதத்துக்கு நல்லெண்ணையை விட இது ரொம்ப அருமையாக இருக்கும்.....................அதற்காகவே வாசனை உள்ள கடலை எண்ணெய் தனியாக வாங்கி வைத்துக்கொள்வோம்......................
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: நிலக்கடலை உண்போம்... நீடித்து வாழ்வோம் !
இது நாள் வரை இதன் மதிப்பு தெரியாமல் இருந்தவிட்டேன். இனி தினமும் இந்த வேர்க்கடலைதான்.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: நிலக்கடலை உண்போம்... நீடித்து வாழ்வோம் !
மேற்கோள் செய்த பதிவு: 1100023மாணிக்கம் நடேசன் wrote:இது நாள் வரை இதன் மதிப்பு தெரியாமல் இருந்தவிட்டேன். இனி தினமும் இந்த வேர்க்கடலைதான்.
அதுனால தான் நம்ம காந்தி தாத்தா வேர்கடலையும் ஆட்டுப்பாலும் குடித்தார்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: நிலக்கடலை உண்போம்... நீடித்து வாழ்வோம் !
பயனுள்ள தகவல் நன்றீ தமிழ்
எனக்கு மிகவும் பிடிக்கும். பச்சையாக வாங்கி வந்து அவிச்சு சாப்பிடுவோம்...
எனக்கு மிகவும் பிடிக்கும். பச்சையாக வாங்கி வந்து அவிச்சு சாப்பிடுவோம்...
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: நிலக்கடலை உண்போம்... நீடித்து வாழ்வோம் !
மேற்கோள் செய்த பதிவு: 1100034krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1100023மாணிக்கம் நடேசன் wrote:இது நாள் வரை இதன் மதிப்பு தெரியாமல் இருந்தவிட்டேன். இனி தினமும் இந்த வேர்க்கடலைதான்.
அதுனால தான் நம்ம காந்தி தாத்தா வேர்கடலையும் ஆட்டுப்பாலும் குடித்தார்
முன்ன ஜெயில்ல கைதிகளுக்கு வேர்க்கடலையும், வெல்லமும் தினமும் சாயந்திரம் குடுப்பாங்களாம். எங்கம்மா சொல்வாங்க.இதை வாங்கி சாப்பிட இதுக்காகவே எங்க தாத்தாவைப் பார்க்க போறேனு சொல்லி எங்கம்மா, அவுங்க தம்பி எல்லோரும் கெளம்பி ஜெயிலுக்கு போவாங்களாம்.
பின்குறிப்பு : (எங்க தாத்தா கைதி இல்ல. போலிஸ்)
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: நிலக்கடலை உண்போம்... நீடித்து வாழ்வோம் !
நான் இதுவரை ரீபெண்ட் ஆயிலை வாங்கியதே கிடையாது. இனியும் வாங்கப்போவது இல்லை சமையலுக்கு கடலை எண்ணெய்தான் உபயோகம் . மணிலா பயிறும் நிறைய உபயோகிக்கிறோம்.
சத்தான சங்கதியை பிறர் அறிய பதிவு செய்து, நலமுடன் வாழ வழிகாட்டிய தமிழ்நேசன் அவர்க்கு மிக்க நன்றி....
சத்தான சங்கதியை பிறர் அறிய பதிவு செய்து, நலமுடன் வாழ வழிகாட்டிய தமிழ்நேசன் அவர்க்கு மிக்க நன்றி....
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Page 1 of 2 • 1, 2
Similar topics
» அகத்தி உண்போம் நோய் இன்றி வாழ்வோம்
» சிறு தானியத்தை உண்போம் வளமாய் வாழ்வோம்.!!
» "தமிழோடு வாழ்வோம் தமிழனாய் வாழ்வோம்!"
» விதைத்து உண்போம்
» நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நிலக்கடலை…!
» சிறு தானியத்தை உண்போம் வளமாய் வாழ்வோம்.!!
» "தமிழோடு வாழ்வோம் தமிழனாய் வாழ்வோம்!"
» விதைத்து உண்போம்
» நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நிலக்கடலை…!
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum