ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

Top posting users this week
ayyasamy ram
கிரக  அமைப்பினால்   ஏற்படும்  பலன்கள்.. - Page 2 Poll_c10கிரக  அமைப்பினால்   ஏற்படும்  பலன்கள்.. - Page 2 Poll_m10கிரக  அமைப்பினால்   ஏற்படும்  பலன்கள்.. - Page 2 Poll_c10 
Dr.S.Soundarapandian
கிரக  அமைப்பினால்   ஏற்படும்  பலன்கள்.. - Page 2 Poll_c10கிரக  அமைப்பினால்   ஏற்படும்  பலன்கள்.. - Page 2 Poll_m10கிரக  அமைப்பினால்   ஏற்படும்  பலன்கள்.. - Page 2 Poll_c10 
heezulia
கிரக  அமைப்பினால்   ஏற்படும்  பலன்கள்.. - Page 2 Poll_c10கிரக  அமைப்பினால்   ஏற்படும்  பலன்கள்.. - Page 2 Poll_m10கிரக  அமைப்பினால்   ஏற்படும்  பலன்கள்.. - Page 2 Poll_c10 
i6appar
கிரக  அமைப்பினால்   ஏற்படும்  பலன்கள்.. - Page 2 Poll_c10கிரக  அமைப்பினால்   ஏற்படும்  பலன்கள்.. - Page 2 Poll_m10கிரக  அமைப்பினால்   ஏற்படும்  பலன்கள்.. - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிரக அமைப்பினால் ஏற்படும் பலன்கள்..

+5
krishnaamma
M.M.SENTHIL
தமிழ்நேசன்1981
T.N.Balasubramanian
சிவனாசான்
9 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

கிரக  அமைப்பினால்   ஏற்படும்  பலன்கள்.. - Page 2 Empty கிரக அமைப்பினால் ஏற்படும் பலன்கள்..

Post by சிவனாசான் Sat Oct 25, 2014 7:31 pm

First topic message reminder :

ஜோதிட சாஸ்திரத்தை  பலமுனிவர்கள் எழுதி உள்ளனர். அவர்கள் எல்லோரும்  தமது கருத்துகளை  கூறி முடிக்கும்போது  இறுதியாக ஜோதிடர்கள் பலன்களை எல்லாம் பார்த்தறிந்த  பின்பும் நன்கு அறிந்து  நிதானித்து  பலன்களை  கூறவேண்டும் என்று  எச்சரிக்கை செய்துள்ளனர்.   இவ்வாறு ஏன்  எச்சரிக்க வேண்டு மென்றால் கடல் பார்ப்பதற்கு  ஒரே ஜலமாகத்தான் தெரியும். ஆனால்  அதற்குள்  பல பொருள்கள் கிடைக்கின்றது.அவைகள் எல்லாம்  எல்லா இடத்திலும் கிடைப்பதில்லை.குறிப்பிட்ட சில இடங்களில் தான் கிடைக்கின்றது. இதேபோல் ஜோதிடசாஸ்த்திரத்திலும் பொதுவாக இன்னின்ன  கிரகங்கள்  இன்ன முறையில்  இருந்தால்  இன்னின்ன பலன்கள்  நடக்கும்  என்று கூறியுள்ளனர். அதனால்தான்  ராசிகளில்  கிரகங்கள் நின்றதற்கு  தனியாக பலன்கள்  கூறியுள்ளனர்.   அவற்றின் சில வற்றை   மதுரை   தொ.வே.இராகவன் அவர்கள் மக்கள் அறியும் பொருட்டு  1972ம் ஆண்டு  ஓர் இதழில்  அளித்துள்ள வற்றை அன்னாருக்கு   நன்றி  தெரிவித்து   இங்கு  அதனை  ஈகரையினர் அறியும்  பொருட்டு...  பதிவு செய்கின்றேன்.
 
                      1.  சந்திரனுக்கு  7ல்சனி இருக்க  பிறந்த ஜாதகன்  மாதா பிதாவுக்கு தோஷம்.

                      2.  செவ்வாய்  ஆட்சியாகி  சனி லக்கினத்திற்கு  3ல் இருந்தால் ஜாதகன்குள்ளனாக இருப்பான்.

                      3.  குரு புதன் 2க்குடையவர் ஆகிய மூவரும்  கேந்திர திரி கோணத்தில் இருந்தால்  வித்தை உண்டு.                
                                 அத்தோடு புதன்  உச்சமாய்   இருந்தால்  அதிக வித்தை உண்டு.

                      4.  2ல்  செவ்வாய்  இருந்தால்  மாதா பிதாவுக்கு  அடங்காதவன்  (அ) பிடிக்காதவன்.அதி கோபி,  துர் விநியோக செலவு  துர்போதனையுடையவன்   சுப காரியங்களில்  அடிக்கடிஈடுபடுவான்.பிதுர் சொத்து சேரும் பூமிலாபமுண்டு ( 6-8-12க்குடையவனாகிய செவ்வாய் 2-ல் இருந்தால் பூமி லாபம் பிதுர் சொத்து நில்லாது.)

                      5.லக்கினத்திற்கு 2-7-9க்கு அதிபர்கள் ஆறு ராசிக்குமேல் மூன்று ராசிக்குள் இருந்து  6-க்கதிபன் கெட்டிருந்தால் ஜாதகன் ஊமையாவான்.

                                                                            (தொடரும்)
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down


கிரக  அமைப்பினால்   ஏற்படும்  பலன்கள்.. - Page 2 Empty Re: கிரக அமைப்பினால் ஏற்படும் பலன்கள்..

Post by ayyasamy ram Thu Oct 30, 2014 6:51 am

கிரக  அமைப்பினால்   ஏற்படும்  பலன்கள்.. - Page 2 103459460
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கிரக  அமைப்பினால்   ஏற்படும்  பலன்கள்.. - Page 2 Empty Re: கிரக அமைப்பினால் ஏற்படும் பலன்கள்..

Post by சிவனாசான் Fri Oct 31, 2014 5:52 am

56. சுக்கிரன் 3ல் நிற்க 8க்குடையவன் பார்த்தால் சகோதர தோஷம்.

57. சுக்கிரன் தனியாக நிற்க சுபர் பார்த்தாதால் ஏக களத்திரம்.

58. சந்திரன்நின்ற ராசிக்கு 7ல் சுக்கிரன் நிற்க ஏக களத்திரம்.

59. 9ல் சனி இருக்க 3ல வியாழன் இருக்க சந்திரன் 7ல் அல்லது 8லிருந்தால்
அவனுடைய இருகைகளும் துண்டிக்கப்படும்.

60. குருவும் சந்திரனும் தனித்தனியாக நீச்ச மடைந்து சுக்கிரன் மறைந்திருந்தால்
களத்திர தோஷம் விவாகம் இல்லை என்றும்கூறலாம்.

61. சுக்கிரன்நின்ற ராசியாதிபதி 6-8-12ல் இருந்தால் களத்திரத்தால் கஷ்டம். சுகம் இராது.

62. சூரியனும் குருவும் சேர்ந்து 7ஆம் இடத்திலாவது லக்கினத்திலாவது பார்த்தால்
களத்திரம் வந்த போதிருந்து ஜாதகனுக்கு சிரமங்கள் ஏற்படும். பெண் ஜாதகத்தில்
இப்படி இருந்தால் கனவன் வந்த போதிலிருந்து சிரமங்கள் ஏற்படும்.

63. 8க்குடையவன் 6-8-12ல் இருக்க அவனுடன் செவ்வாய் சேர்ந்தோ அல்லது தனித்
திருந்தோ இருக்கும் போது செவ்வாயை சனிபார்த்தால் விபத்துக்களால் கண்டம்.

64. 1-8ல் கிரகமிருக்க 2-7-11க்குடையவன் தசையோ அல்லது மேற்படி மாரக ஸ்தானத்தில்
இருக்கும் கிரக தசையோ நடந்தால் மாரகத்திற்கு ஒப்பான கண்டங்களைக்கொடுக்கும்.

65. 1-4-9க்கு உடையவர்கள் 8ல் இருந்தால் தரித்திர யோகம் உடையவன்.

66. சூரியன் சந்திரன் சேர்ந்து ஒரேராசியில் இருந்தால் ஜாதகன் பல தொழில்கள் செய்வான்.
அல்லது பல சரக்குகள் நிறைந்த தொழிலில் இருப்பான்.

67. சூரியனுக்கு 7ல் சந்திரனிருக்க பிறந்தவன் இயற்கையில் எந்த தொழில் வந்தமையுதோ
அந்த தொழில் செய்வதே நல்லது. மாற்றி வேறு தொழில் செய்வோம் என்றெண்ணி
இருக்கும் தொழிலை விட்டு வேறு தொழில் செய்தால் அதனால் கஷ்டமே ஏற்படும்.

68. வளர் பிறையில் பிறந்தவர்கள் உண்மை பேசி வாழ்ந்தால்தான் பலன் தரும். தேய்பிறை
யில் பிறந்தவர்கள் கள்ள மனதுடன் பொய்யும் மெய்யும் கலந்தே பேசி வாழ்ந்தால்தான்
பலன் தரும். ( குறிப்பு.. மனதைத்தான் கூறியிருக்கிறேன் அதற்காக பாவ வழியில் பணம்
தேட முயற்சி செய்ய வேண்டாம் )

69. சந்திரனுக்கு 6-7-8ல் பாபக்கிரகம் இல்லாது புதன் சுக்கிரன் வியாழன் மட்டும் இருந்தால்
ஜாதகன் அரசனாகவோ அரசனுக்கு சமானமான எல்லாவித ஐசுவரியங்களோடு இருப்பான்.
இதனை அதியோகம் என்று காளி தாசர் கூறுகிறார்.

70. 2-5-9-11ம் வீட்டின் அதிபர்கள் ஒருவரோடு ஒருவர் சம்பந்தம் பெற்று பல்ம் பெற்றவர்
களாக இருப்பின் லட்சாதிபதி ஆவான். மேற்படி வீட்டின் அதிபர்கள் துர்ஸ்தானம்
பெற்றால்ஜாதகனின் தனம் நாசம் அடையும் என்கிறார் காளிதாசர். (தொடரும்..)
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

கிரக  அமைப்பினால்   ஏற்படும்  பலன்கள்.. - Page 2 Empty Re: கிரக அமைப்பினால் ஏற்படும் பலன்கள்..

Post by ராஜா Fri Oct 31, 2014 9:17 pm

எதோ சொல்லுறீங்க ஆனா ஒண்ணுமே புரிய மாட்டேங்குது...

உதாரணத்திற்கு :- 6 இல் நிற்கிறான் , 7 ஐ பார்க்கிறான் , 8 ஐ 3 பார்க்கிறான் இவைகளை எப்படி ஜாதகத்தில் பார்ப்பது , எதாவது examples கொடுங்க அப்பவாது புரியுதா என்று பார்க்கிறேன் புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கிரக  அமைப்பினால்   ஏற்படும்  பலன்கள்.. - Page 2 Empty Re: கிரக அமைப்பினால் ஏற்படும் பலன்கள்..

Post by T.N.Balasubramanian Sat Nov 01, 2014 2:18 pm

ஜோதிடம் மிகவும் துல்லியமான கலை , ராஜா .
12 ராசிகள் 9 கிரகங்கள்  
ஒவ்வொரு ராசிக்கும்(வீட்டிற்கும் ) ஒரு ராசி நாயகன் .ஒரு ராசிநயகன் , மற்றொரு வீட்டிற்கு போகும் போது ஏற்படும் நல்ல /கெட்ட பலன்கள். 
27 நக்ஷத்திரங்கள் ஒவ்வொரு நக்ஷத்திரதிற்கும் தனிப்பட்ட குணங்கள் மேலும் கூறவேண்டுமானால் ஒவ்வொரு நக்ஷத்திரதிற்கும் 4 பாதங்கள் ஒவ்வொரு பாதத்திற்கும்  தனிப்பட்ட குணங்கள் .
பிறக்கும் நேரத்திற்கும் தகுந்த மாதிரி , பிறந்த லக்னம் மாறுபடும் .
இவை யாவையும் ஒரு பெர்முடஷன் கம்புடேஷன் முறையில் பாருங்கள் . எவ்வளவு துல்லியமாக இவைகளை யாவற்றையும் மனதில் கொண்டு கணித்தால் தான் சரியான பலன் கண்டுபிடிக்கமுடியும் .அதற்கு தகுந்த பாண்டியத்துவம் வேண்டும் . 
அடிப்படை அறிவு இல்லாமல் ,ராஜன் அவர்கள் , மறுபதிவை , பார்த்தால் , நமக்கு ஒன்றுமே புரியாது .

அவருடைய மறுபதிவை படிப்பவர்கள் மிக குறைவாகவே இருக்கும் . மேலெழுந்தவாரியாக படிப்பதால் ஒன்றுமே புரியாது . எவ்வளவு பேர் இதனால் பலனடைவார்கள் என்பது ஒரு சந்தேக குறியே !

மனதில் பட்டதை கூறுகிறேன் . ராஜன் அவர்கள் தவறாக நினைக்க  கூடாது .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கிரக  அமைப்பினால்   ஏற்படும்  பலன்கள்.. - Page 2 Empty Re: கிரக அமைப்பினால் ஏற்படும் பலன்கள்..

Post by ராஜா Sat Nov 01, 2014 2:28 pm

T.N.Balasubramanian wrote:ஜோதிடம் மிகவும் துல்லியமான கலை , ராஜா .
12 ராசிகள் 9 கிரகங்கள்  
ஒவ்வொரு ராசிக்கும்(வீட்டிற்கும் ) ஒரு ராசி நாயகன் .ஒரு ராசிநயகன் , மற்றொரு வீட்டிற்கு போகும் போது ஏற்படும் நல்ல /கெட்ட பலன்கள். 
27 நக்ஷத்திரங்கள் ஒவ்வொரு நக்ஷத்திரதிற்கும் தனிப்பட்ட குணங்கள் மேலும் கூறவேண்டுமானால் ஒவ்வொரு நக்ஷத்திரதிற்கும் 4 பாதங்கள் ஒவ்வொரு பாதத்திற்கும்  தனிப்பட்ட குணங்கள் .
பிறக்கும் நேரத்திற்கும் தகுந்த மாதிரி , பிறந்த லக்னம் மாறுபடும் .
இவை யாவையும் ஒரு பெர்முடஷன் கம்புடேஷன் முறையில் பாருங்கள் . எவ்வளவு துல்லியமாக இவைகளை யாவற்றையும் மனதில் கொண்டு கணித்தால் தான் சரியான பலன் கண்டுபிடிக்கமுடியும் .அதற்கு தகுந்த பாண்டியத்துவம் வேண்டும் . 
அடிப்படை அறிவு இல்லாமல் ,ராஜன் அவர்கள் , மறுபதிவை , பார்த்தால் , நமக்கு ஒன்றுமே புரியாது .

அவருடைய மறுபதிவை படிப்பவர்கள் மிக குறைவாகவே இருக்கும் . மேலெழுந்தவாரியாக படிப்பதால் ஒன்றுமே புரியாது . எவ்வளவு பேர் இதனால் பலனடைவார்கள் என்பது ஒரு சந்தேக குறியே !

மனதில் பட்டதை கூறுகிறேன் . ராஜன் அவர்கள் தவறாக நினைக்க  கூடாது .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1100892நன்றி ஐயா ,
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கிரக  அமைப்பினால்   ஏற்படும்  பலன்கள்.. - Page 2 Empty Re: கிரக அமைப்பினால் ஏற்படும் பலன்கள்..

Post by சிவனாசான் Wed Nov 05, 2014 9:05 pm

நண்பர்ராஜா அவர்களே கொஞ்சமாவது ஜோதிட அறிவு பெற்றவர்களுக்கே இவைகள் புரியும். அதாவது ஒருவர் பிறந்த நேரம் லக்கினம், நட்சத்திரம் நின்ற இடம் இராசி ஆகும். இடம்இடம் என்பது பிறந்த லக்கினவீடு முதல் கணக்கிடுவது . 12 லக்கினம். @மேஷம் முதல் மீனம் வரை. ஒருவர் மேஷ லக்கினத்தில் பிறந்த வரானால்.. 4ல் சுக்கிரன் என்றால் மேஷம்1, ரிஷபம்,2 மிதுனம்3,கடகம்4.என்று கணக்கிடவேண்டும்.

இதேபோல் 12 லக்கினங்களுக்கிம் அந்த அந்த லக்கினம் முதல் எண்ணி வருவதே இடமாகும். தற்கால பலனைபார்க்க ராசியை முதலாக வைத்து எண்ணி பார்க்க வேண்டும். ஜோதிடம் கற்க ஆவலாய் இருந்தால் ஜோதிட அறிச்சுவடிபுக் கிடைத்தால் படித்து அறிந்து கொள்ளலாம்...
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

கிரக  அமைப்பினால்   ஏற்படும்  பலன்கள்.. - Page 2 Empty Re: கிரக அமைப்பினால் ஏற்படும் பலன்கள்..

Post by சிவனாசான் Thu Nov 06, 2014 5:56 am

ஒவ்வோர் கிரகம் நின்ற இடத்திலிருந்து எண்ணுவது அக்கிரகத்திற்கு அவ்வீடு முதல் எண்ணுவதாகும்.
( உ.ம் ) குருவுக்கு 5ல் என்றால் குரு நின்ற வீட்டி (லக்கினம்/ ராசி..) லிருந்து எண்ணுவது.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

கிரக  அமைப்பினால்   ஏற்படும்  பலன்கள்.. - Page 2 Empty Re: கிரக அமைப்பினால் ஏற்படும் பலன்கள்..

Post by சிவனாசான் Thu Nov 06, 2014 6:24 am

71. எல்லா கிரகங்களும் 1-4-7-10ல் இருந்தாலும் அல்லது 2-5-8-11ல் இருந்தாலும்
ஜாதகன் யோகவான்.

72. ஒரு ஜாதகன் நடு பகலுக்குப்பின் அல்லது நடு இரவுக்குப்பின் 2நாழிகைக்குள் ஜனன
மானால் நல்ல யோகமுடையவனாவான் ( ஆதாரம் காளிதாசர் ) இந்த ஜாதகனின்
ஜன்ம லக்கினத்திற்கு 2ம் இடத்தில் ஓர் உச்ச கிரகமிருந்து மற்றொரு உச்ச கிரகம்
பார்த்தால் ஜாதகன் கோட்டீஸ்வரன் ஆவான். இவர்களுக்கு ஆட்சியில் உள்ள கிரகம்
ஒன்று பார்த்து விட்டால் லட்சாதிபதி ஆவான்.

73. சனி செவ்வாய் சூரியன் சர நவாம்சத்திலும் குரு சுக்கிரன் ஸ்திர நவாம்சத்திலும்
புதன் ராகு கேது சந்திரன் உபய நவாம்சத்திலும் இருந்தால் ஜாதகன் நல்ல யோகத்
துடன் தனது வாழ் நாளை கழிப்பான். ( ஹோராசாரர் )

74. சூரியன் சந்திரன் ராகு இம் மூவரும் எந்த ராசியில் கூடி இருந்தாலும் ஜாதகனுக்கு
28 வயது ஆயுள் எனலாம். இதில் குரு 12ல் இருந்தால் நிச்சயம் 28 வயதில் மாரகம்.

75. லக்கினம் சர ராசியாகி அதில் சூரியன் செவ்வாய் நிற்க குரு 10லும் சந்திரன் 5 அல்லது
9ல் நிற்க பிறந்தவன் 20 வயது இருப்பான் ( ஹோரா சாரர் )

76. லக்கினாதி பதியும் ராசியாதி பதியும் இவ் இருவர் அம்சத்தில் நின்ற வீட்டுக்குடையவரும்
ராசியில் அஸ்தமனம் அடைந்திருந்தால் அந்த குழந்தை சில நாட்கள் இருந்து மரிக்கும்.

77. எல்லா கிரகங்களும் 3-6-8-12ல் இருந்தால் அந்த குழந்தையயின் வயது இரண்டு அல்லது
6 மாதமாகும் ( ஹோரா சாரம் )

78. ஜனனகாலத்தில் செவ்வாயும் சூரியனும் சந்திரனுக்கு 7ல் இருந்து லக்கினத்தில் ராகு இருப்பின்
அந்த குழந்தை 10நாளில் குறைந்து போகும். ( ஹோராசாரம் )

79. லக்கின கேந்திரத்தில் சந்திரனும் 8க்கு உடையவனும் கூடி இருக்க அதனுடன் 8ல் ஓர் பாவி
இருக்க குழந்தை ஜனித்துடன் மரணம். ( ஹோரா சாரம் )

80. இருகிரகம் சேர்ந்திருந்தால் அந்தகிரகங்கள் நட்பாக இருந்து லக்கினாதி பதிக்கு அவ்விருவரும்
பகைவர்களாக இருந்தால் அவ்விருவரும் எந்தராசியில் சேர்ந்திருக்கின்றதோ அந்தராசியாதி
யின் தசாபுத்திகளில் யோகம்கொடுக்கும். ( தொடரும் )



81. சூரியனுக்கு 5 அல்லது 9ல் சந்திரன் இருந்தால் அரச தரிசனத்தால் குற்றவாளி விடுதலை
அடைவதுபோல் அதிஷ்டம் நாசமடையும்.

82. 4 க்குடையவன் நின்ற நவாம்சாதிபதியின் தசையிலாவது அல்லது 4 ம் அதிபதியின் தசை
யிலாவது தகப்பனுக்கு கண்டம் அல்லது அந்த ராசியில் உள்ள கிரகத்தின் தசையில் கண்டம்.

83. ஜன்ம ராசியாதி பதிக்கும் லக்கினாதிபதிக்கும் சத்துருவான கிரகத்தின் தசையில் சஞ்சாரமும்
அவமானமும் சத்துருவினிடம் அடைக்கலம் புகுந்து அவனால் அவமானம் அடைதலும் உண்டாகும்.

84. 8 க்குடையவன் கேந்திரத்தில் இருப்பின் அவனுடைய தசை யோகத்தைக் கொடுக்கும். ஆனால்
சூரியன் ராகு சேர்க்கை பார்வை இருக்கக்கூடாது.

85. கும்பத்தில் சந்திரனும் கடகத்தில் செவ்வாயும் இருக்க பிறந்தவனுக்கு அன்னம் சிரமத்தின் பேரில்
கிடைக்கும்.

86. சூரிய சந்திர புடங்களைக் கூட்டி வந்த ராசியிலாவது அதற்கு கேந்திர ராசியிலாவது அல்லது
9வது ராசியிலாவது ஒருபாபி இருப்பின் ஜலகண்டம் அல்லது விஷ பயம் உண்டு.

87. 4 க்குடையவனும் சுக்கிரனும் கூடி சூரியனுக்கு 10 ல் நின்றால் செல்வந்தன்.

88. சூரியன் சனி செவ்வாய் 9ல் இருந்தால் துவேசபிள்ளை பிறக்கும்.

89. சுக்கிரன் சந்திரன் செவ்வாய் 9ல் இருந்தால் தாயை பழிப்பான்.

90. 10 க்குடையவன் இருந்த ராசியாதிபதி 10ல் நட்பாய் நின்றால் வறுமை இல்லாதவன்.
(தொடர்ச்சி...)















சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

கிரக  அமைப்பினால்   ஏற்படும்  பலன்கள்.. - Page 2 Empty Re: கிரக அமைப்பினால் ஏற்படும் பலன்கள்..

Post by ராஜா Thu Nov 06, 2014 10:47 am

P.S.T.Rajan wrote:நண்பர்ராஜா அவர்களே கொஞ்சமாவது ஜோதிட அறிவு பெற்றவர்களுக்கே இவைகள் புரியும். அதாவது ஒருவர் பிறந்த நேரம் லக்கினம், நட்சத்திரம் நின்ற இடம் இராசி ஆகும். இடம்இடம் என்பது பிறந்த லக்கினவீடு முதல் கணக்கிடுவது . 12 லக்கினம். @மேஷம் முதல் மீனம் வரை. ஒருவர் மேஷ லக்கினத்தில் பிறந்த வரானால்.. 4ல் சுக்கிரன் என்றால் மேஷம்1, ரிஷபம்,2 மிதுனம்3,கடகம்4.என்று கணக்கிடவேண்டும்.

இதேபோல் 12 லக்கினங்களுக்கிம் அந்த அந்த லக்கினம் முதல் எண்ணி வருவதே இடமாகும். தற்கால பலனைபார்க்க ராசியை முதலாக வைத்து எண்ணி பார்க்க வேண்டும். ஜோதிடம் கற்க ஆவலாய் இருந்தால் ஜோதிட அறிச்சுவடிபுக் கிடைத்தால் படித்து அறிந்து கொள்ளலாம்...
புன்னகை நன்றி ஐயா
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கிரக  அமைப்பினால்   ஏற்படும்  பலன்கள்.. - Page 2 Empty Re: கிரக அமைப்பினால் ஏற்படும் பலன்கள்..

Post by சிவனாசான் Thu Nov 06, 2014 7:31 pm

91. லக்கினாதிபதியும் சுக்கிரனும் 4க்குடையவரும் லக்கினத்தில் நின்றால் நல்ல யோகம்.

92. சுக்கிரனுடைய ஸ்புடமும் 4க்குடையவர் ஸ்புடம்ம் சேர்த்து 12 ராசிக்கு மேல் இருந்தால்
12ஐ கழிக்க மீதம் எத்தனை ராசி பாகை கலையோ அந்தராசியில் குரு வரும்போது பூமி லாபம்
அல்லது பொருள் லாபம் அல்லது கீர்த்தி பதவி லாபம்கிடைக்கும்.

93. லக்கினாதிபதி இருந்த ராசியாதிபதி ஆட்சி உச்சம் பெற்று செவ்வாய்க்கு திரிகோணம்
அடைந்தால் அதிகார யோகம் உண்டு.

94. சுக்கிரனுக்கு இரு புறத்திலும் பாபிகள் இருந்தால் அல்லது சுக்கிரனுக்கு 4-8ல் பாபிகள்
இருந்தால் மனைவி அகாலமரணமோ அல்லது கண்டமோ ஏற்படும்.

95. பெண் ஜாதகத்தில் 2-7-9ல் சுபர்கள் ஆட்சி அல்லது சுபர்கள் இருந்தால் மகனின் பேரன்
பேத்திகளை கண்டபின் சுமங்கலியாய் தன் வாழ்நாளை முடித்து மடிவாள்.

96. 5க்குடையவன் 7ல் இருந்தால் மானமுள்ளவன் தர்மங்கள் அறிந்தவனாகவும் உன்னதமான
சரீரமுடையவனாகவும் பக்திமானாகவும் இருப்பான்.

97. 3க்குடையவன் 8லோ 7லோ இருந்தால் அரசாங்கத்தினால் தொல்லை பால்ய வயதில்
திருட்டுகுணம் ஆயுள்முழுவதும் கஷ்டம் காமப்பிரியன்.

98. 8க்குடையவன் 2லோ 7லோ இருந்தால் இருமனைவிகள் உடையவன். ஈஸ்வர துரோகி.

99. 4க்குடையவன் 7லோ 1லோ இருந்தால் அநேக வித்தை அறிவான். பிதுர் சொத்து
இழப்பான். சபையில் ஊமைபோல் இருப்பான்.

100. 6க்குடையவன் 7லோ 11லோ 1லோ இருந்தால் கீர்த்தி மானாகவும் தனவானாகவும்
குணசீலனாகவும் புத்திரன்இலுலாத வனாகவும் இருப்பான்.

நிறைவு பெற்றது சுபம்.























சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

கிரக  அமைப்பினால்   ஏற்படும்  பலன்கள்.. - Page 2 Empty Re: கிரக அமைப்பினால் ஏற்படும் பலன்கள்..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum