ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ஆர்., மருத்துவமனையில் அனுமதி- இன்று காலை ம்ரணமடைந்தார்!

+4
ayyasamy ram
T.N.Balasubramanian
மாணிக்கம் நடேசன்
krishnaamma
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ஆர்., மருத்துவமனையில் அனுமதி- இன்று காலை ம்ரணமடைந்தார்! Empty பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ஆர்., மருத்துவமனையில் அனுமதி- இன்று காலை ம்ரணமடைந்தார்!

Post by krishnaamma Thu Oct 23, 2014 6:52 pm

பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ஆர்., மருத்துவமனையில் அனுமதி- இன்று காலை ம்ரணமடைந்தார்! EP2tk8cDRyGjcEbFDKYa+NT_141023160707000000

பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன், உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன். எஸ்.எஸ்.ஆர் என்று செல்லமாக அழைக்கப்படும் இவர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அறிமுகமான, ''பராசக்தி'' படத்தில் தான் அறிமுகமானார். தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து முன்னணி நடிகராக உயர்ந்தார். பூம்புகார், மறக்க முடியுமா போன்ற படங்கள் காலத்தால் அழிக்க முடியாத திரைக்காவியங்கள். தனது எழுச்சி மிகு நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த இவருக்கு லட்சிய நடிகர் என்று பட்டமும் கொடுக்கப்பட்டது. நடிகராக மட்டுமல்லாது எம்.எல்.ஏ., மற்றும் எம்பி-யாகவும் இருந்துள்ளார்.

தற்போது 86 வயதாகும் எஸ்.எஸ்.ஆர்., கடந்த இரண்டு மாதங்களாக உடல்நலம் சரியில்லாமல் இருந்து வந்தார். இந்நிலையில், கடந்த இருதினங்ளாக அவரது உடல்நிலை மிகவும் மோசமானது. இதனையடுத்து, அவர் இன்று(அக்., 23ம் தேதி) சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எஸ்.எஸ்.ஆரின் உடலை பரிசோதித்த டாக்டர்கள், அவருக்கு நுரையீரல் தொற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும், இன்னும் 24 மணிநேரத்திற்கு பிறகே எதுவும் சொல்ல முடியும் என்று தெரிவித்துள்ளனர். தொடர்ந்து டாக்டர்கள், எஸ்.எஸ்.ஆரை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். எஸ்.எஸ்.ஆர். மனைவி தாமரைச்செல்வி, மகன் கண்ணன் மற்றும் மகள் லட்சுமி ஆகியோர் அவரை உடன் இருந்து கவனித்து வருகின்றனர்.

தினமலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ஆர்., மருத்துவமனையில் அனுமதி- இன்று காலை ம்ரணமடைந்தார்! Empty Re: பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ஆர்., மருத்துவமனையில் அனுமதி- இன்று காலை ம்ரணமடைந்தார்!

Post by krishnaamma Thu Oct 23, 2014 7:00 pm

நல்ல நடிகர், அவர் சீக்கிரம் உடல் தேறி வர இறைவனை வேண்டுகிறேன் புன்னகை

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ஆர்., மருத்துவமனையில் அனுமதி- இன்று காலை ம்ரணமடைந்தார்! I9Hi9KOZSQK4OVEZBQFR+download(1)

.
.
.
ஆமாம் அவர் மனைவி நடிகை விஜய குமாரி இல்லையா? ஒன்னும் புரியல

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ஆர்., மருத்துவமனையில் அனுமதி- இன்று காலை ம்ரணமடைந்தார்! Empty Re: பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ஆர்., மருத்துவமனையில் அனுமதி- இன்று காலை ம்ரணமடைந்தார்!

Post by மாணிக்கம் நடேசன் Fri Oct 24, 2014 10:33 am

விரைவில் முழு சுகமடைய ஆண்டவனை வேண்டுவோம்.

ஒரு கேள்வி, அவரது மனைவி விஜயகுமாரி இல்லையா?
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ஆர்., மருத்துவமனையில் அனுமதி- இன்று காலை ம்ரணமடைந்தார்! Empty Re: பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ஆர்., மருத்துவமனையில் அனுமதி- இன்று காலை ம்ரணமடைந்தார்!

Post by T.N.Balasubramanian Fri Oct 24, 2014 11:24 am

விஜயகுமாரியும் அவரது மனைவியே . பங்கஜம் முதல் மனைவி . விஜயகுமாரிக்கு பிறகு தமிழ்செல்வி   

SSR காலமானதாக இப்போது செய்தி வரக் கண்டேன் .

அவரது ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன் .

ரமணியன்

Last edited by T.N.Balasubramanian on Fri Oct 24, 2014 11:29 am; edited 2 times in total (Reason for editing : addnl.words.)

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ஆர்., மருத்துவமனையில் அனுமதி- இன்று காலை ம்ரணமடைந்தார்! Empty Re: பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ஆர்., மருத்துவமனையில் அனுமதி- இன்று காலை ம்ரணமடைந்தார்!

Post by ayyasamy ram Fri Oct 24, 2014 11:34 am

சுமார், முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர்
விஜயகுமாரியை விட்டு பிரிந்து தாமரை செல்வியை
மணந்தார் பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன்,
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ஆர்., மருத்துவமனையில் அனுமதி- இன்று காலை ம்ரணமடைந்தார்! Empty Re: பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ஆர்., மருத்துவமனையில் அனுமதி- இன்று காலை ம்ரணமடைந்தார்!

Post by krishnaamma Fri Oct 24, 2014 1:29 pm

T.N.Balasubramanian wrote:விஜயகுமாரியும் அவரது மனைவியே . பங்கஜம் முதல் மனைவி . விஜயகுமாரிக்கு பிறகு தமிழ்செல்வி   

SSR காலமானதாக இப்போது செய்தி வரக் கண்டேன் .

அவரது ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1098914

அடாடா.................அப்படியா? சோகம் .................அவரது ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன் ! :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ஆர்., மருத்துவமனையில் அனுமதி- இன்று காலை ம்ரணமடைந்தார்! Empty Re: பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ஆர்., மருத்துவமனையில் அனுமதி- இன்று காலை ம்ரணமடைந்தார்!

Post by krishnaamma Fri Oct 24, 2014 1:33 pm

சென்னை

நடிகர் எஸ்.எஸ். ராஜேந் திரன்   உடல் நலக் குறைவால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். டாக்டர்கள் தீவிர சிகிசசை அளிக்கபட்டு வந்த்து சிகிச்சை பலனின்றி ராஜேந்திரன் இன்று காலை ம்ரணமடைந்தார்.

பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ஆர்., மருத்துவமனையில் அனுமதி- இன்று காலை ம்ரணமடைந்தார்! HGFLRgPvQ5C2ZthizW6o+201410241213440640_eteran-actor-SS-Rajendra-dies_SECVPF

பழம் பெரும் நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரன் இவருக்கு  86 வயது ஆகிறது. சென்னை தேனாம்«பட்டை எல்டாம்ஸ் ரோட்டில் உள்ள வீட்டில்  குடும்பத்துடன் வசிக்கிறார்.
எஸ்.எஸ். ராஜேந்திரனுக்கு சில தினங்களுக்கு முன் திடீர் உடல்   நலக் குறைவு ஏற்பட்டது.  வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை மயிலாப்பூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். டாக்டர்கள் சிகிச்சை அளித்தார்கள். குடலில் நோய் தொற்று மற்றும் சளித்தொல்லைகள் இருந்தன. அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

நேற்று அவரது  உடல் நிலை மோசம் அடைந்தது. அவரச சிகிச்சை  பிரிவில் செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு  தீவிர சிகிச்சை  அளிக்கப்பட்டு வந்தது ஆனாலும்  உடல் நிலை  கவலைக்கிடமாக உள்ளதாக ஆஸ்பத்திரி வட்டாரங்கள்  தெரிவித்தன. இந்த நிலையில் இன்று காலை 11.10 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. அவரது உடல் ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

எஸ்.எஸ். ராஜேந்திரன் ஆரம்பத்தில் நாடக நடிகராக இருந்து பிறகு சினிமாவுக்கு வந்தவர். நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். எம்.ஜி.ஆர். சிவாஜி காலத்தில் முன்னணி கதாநாயகனாக இருந்தார். படங்களில் இவர் பேசிய  தெளிவான வசன உச்சரிப்பு ரசிகர்களை கவர்ந்தது.

பராசக்தி, மனோகரா, ரத்தக்கண்ணீர், குல தெய்வம், முதலாளி, தைபிறந்தால் வழிபிறக்கும், சிவகங்கை சீமை, ராஜா தேசிங்கு, குமுதம், முத்து மண்டாம், ஆலய மணி, காஞ்சித் தலைவன், குங்குமம், பூம்புகார், மணி மகுடம் உள்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். முதலாளி படம் சிறந்த படத்துக்கான  தேசிய விருது பெற்றது.

அரசியலிலும் ஈடுபட் டார். 1962-ல் தி.மு.க. சார்பில் தேனி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்திய நடிகர்களில் முதன் முதலாக எம்.எல்.ஏ. ஆனது எஸ்.எஸ். ராஜேந்திரன்தான். பின்னர் மேல்சபைப  எம்.பி.யாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பிறகு அ.தி.மு.க.வில் இணைந்து  1981-ல் ஆண்டிப்பட்டி  தொகுதியில் போட்டியிட்டு  எம்.எல்.ஏ.ஆனார். அரசு சிறு சேமிப்பு திட்ட துறையில் துணை தலைவராகவும் பணியாற்றினார்.

பெரியார்  மற்றும் அண்ணாவின் சுயமரியாதை கொள்கைகளில் தீவிர  பற்று கொண்டவர். இதனாலேயே இலட்சிய நடிகர் என்ற பட்ட பெயரோடு அழைக்கப் பட்டார்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ஆர்., மருத்துவமனையில் அனுமதி- இன்று காலை ம்ரணமடைந்தார்! Empty Re: பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ஆர்., மருத்துவமனையில் அனுமதி- இன்று காலை ம்ரணமடைந்தார்!

Post by ஜாஹீதாபானு Fri Oct 24, 2014 1:38 pm

ஆழ்ந்த இரங்கல்கள்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ஆர்., மருத்துவமனையில் அனுமதி- இன்று காலை ம்ரணமடைந்தார்! Empty Re: பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ஆர்., மருத்துவமனையில் அனுமதி- இன்று காலை ம்ரணமடைந்தார்!

Post by ராஜா Fri Oct 24, 2014 2:56 pm

பெரியார் மற்றும் அண்ணாவின் சுயமரியாதை கொள்கைகளில் தீவிர பற்று கொண்டவர். இதனாலேயே இலட்சிய நடிகர் என்ற பட்ட பெயரோடு அழைக்கப் பட்டார்.

ஆழ்ந்த இரங்கல்கள்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ஆர்., மருத்துவமனையில் அனுமதி- இன்று காலை ம்ரணமடைந்தார்! Empty Re: பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ஆர்., மருத்துவமனையில் அனுமதி- இன்று காலை ம்ரணமடைந்தார்!

Post by மாணிக்கம் நடேசன் Fri Oct 24, 2014 4:32 pm

அவரது தமிழ் அழகு, அவரது உச்சரிப்பும் அழகு. கணீர் குரலில் கம்பீரமாக வசனம்  பேசுவார்.
நான் எப்பொழுதும் ரசிக்கும் அவரது பாடல் ஒன்று, சிறு வயதில் நாங்கள் பாடி ரசித்த பாடல். அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டுவோம்

https://www.youtube.com/watch?v=KMMgaLHbtP4
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ஆர்., மருத்துவமனையில் அனுமதி- இன்று காலை ம்ரணமடைந்தார்! Empty Re: பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ஆர்., மருத்துவமனையில் அனுமதி- இன்று காலை ம்ரணமடைந்தார்!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum