புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தீப வழிபாடு வந்த கதை -ஒரு சிறப்பு பார்வை .  I_vote_lcapதீப வழிபாடு வந்த கதை -ஒரு சிறப்பு பார்வை .  I_voting_barதீப வழிபாடு வந்த கதை -ஒரு சிறப்பு பார்வை .  I_vote_rcap 
155 Posts - 79%
heezulia
தீப வழிபாடு வந்த கதை -ஒரு சிறப்பு பார்வை .  I_vote_lcapதீப வழிபாடு வந்த கதை -ஒரு சிறப்பு பார்வை .  I_voting_barதீப வழிபாடு வந்த கதை -ஒரு சிறப்பு பார்வை .  I_vote_rcap 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
தீப வழிபாடு வந்த கதை -ஒரு சிறப்பு பார்வை .  I_vote_lcapதீப வழிபாடு வந்த கதை -ஒரு சிறப்பு பார்வை .  I_voting_barதீப வழிபாடு வந்த கதை -ஒரு சிறப்பு பார்வை .  I_vote_rcap 
8 Posts - 4%
mohamed nizamudeen
தீப வழிபாடு வந்த கதை -ஒரு சிறப்பு பார்வை .  I_vote_lcapதீப வழிபாடு வந்த கதை -ஒரு சிறப்பு பார்வை .  I_voting_barதீப வழிபாடு வந்த கதை -ஒரு சிறப்பு பார்வை .  I_vote_rcap 
5 Posts - 3%
E KUMARAN
தீப வழிபாடு வந்த கதை -ஒரு சிறப்பு பார்வை .  I_vote_lcapதீப வழிபாடு வந்த கதை -ஒரு சிறப்பு பார்வை .  I_voting_barதீப வழிபாடு வந்த கதை -ஒரு சிறப்பு பார்வை .  I_vote_rcap 
4 Posts - 2%
Anthony raj
தீப வழிபாடு வந்த கதை -ஒரு சிறப்பு பார்வை .  I_vote_lcapதீப வழிபாடு வந்த கதை -ஒரு சிறப்பு பார்வை .  I_voting_barதீப வழிபாடு வந்த கதை -ஒரு சிறப்பு பார்வை .  I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தீப வழிபாடு வந்த கதை -ஒரு சிறப்பு பார்வை .  I_vote_lcapதீப வழிபாடு வந்த கதை -ஒரு சிறப்பு பார்வை .  I_voting_barதீப வழிபாடு வந்த கதை -ஒரு சிறப்பு பார்வை .  I_vote_rcap 
1 Post - 1%
Pampu
தீப வழிபாடு வந்த கதை -ஒரு சிறப்பு பார்வை .  I_vote_lcapதீப வழிபாடு வந்த கதை -ஒரு சிறப்பு பார்வை .  I_voting_barதீப வழிபாடு வந்த கதை -ஒரு சிறப்பு பார்வை .  I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தீப வழிபாடு வந்த கதை -ஒரு சிறப்பு பார்வை .  I_vote_lcapதீப வழிபாடு வந்த கதை -ஒரு சிறப்பு பார்வை .  I_voting_barதீப வழிபாடு வந்த கதை -ஒரு சிறப்பு பார்வை .  I_vote_rcap 
320 Posts - 78%
heezulia
தீப வழிபாடு வந்த கதை -ஒரு சிறப்பு பார்வை .  I_vote_lcapதீப வழிபாடு வந்த கதை -ஒரு சிறப்பு பார்வை .  I_voting_barதீப வழிபாடு வந்த கதை -ஒரு சிறப்பு பார்வை .  I_vote_rcap 
46 Posts - 11%
mohamed nizamudeen
தீப வழிபாடு வந்த கதை -ஒரு சிறப்பு பார்வை .  I_vote_lcapதீப வழிபாடு வந்த கதை -ஒரு சிறப்பு பார்வை .  I_voting_barதீப வழிபாடு வந்த கதை -ஒரு சிறப்பு பார்வை .  I_vote_rcap 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
தீப வழிபாடு வந்த கதை -ஒரு சிறப்பு பார்வை .  I_vote_lcapதீப வழிபாடு வந்த கதை -ஒரு சிறப்பு பார்வை .  I_voting_barதீப வழிபாடு வந்த கதை -ஒரு சிறப்பு பார்வை .  I_vote_rcap 
8 Posts - 2%
prajai
தீப வழிபாடு வந்த கதை -ஒரு சிறப்பு பார்வை .  I_vote_lcapதீப வழிபாடு வந்த கதை -ஒரு சிறப்பு பார்வை .  I_voting_barதீப வழிபாடு வந்த கதை -ஒரு சிறப்பு பார்வை .  I_vote_rcap 
5 Posts - 1%
E KUMARAN
தீப வழிபாடு வந்த கதை -ஒரு சிறப்பு பார்வை .  I_vote_lcapதீப வழிபாடு வந்த கதை -ஒரு சிறப்பு பார்வை .  I_voting_barதீப வழிபாடு வந்த கதை -ஒரு சிறப்பு பார்வை .  I_vote_rcap 
4 Posts - 1%
Balaurushya
தீப வழிபாடு வந்த கதை -ஒரு சிறப்பு பார்வை .  I_vote_lcapதீப வழிபாடு வந்த கதை -ஒரு சிறப்பு பார்வை .  I_voting_barதீப வழிபாடு வந்த கதை -ஒரு சிறப்பு பார்வை .  I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
தீப வழிபாடு வந்த கதை -ஒரு சிறப்பு பார்வை .  I_vote_lcapதீப வழிபாடு வந்த கதை -ஒரு சிறப்பு பார்வை .  I_voting_barதீப வழிபாடு வந்த கதை -ஒரு சிறப்பு பார்வை .  I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
தீப வழிபாடு வந்த கதை -ஒரு சிறப்பு பார்வை .  I_vote_lcapதீப வழிபாடு வந்த கதை -ஒரு சிறப்பு பார்வை .  I_voting_barதீப வழிபாடு வந்த கதை -ஒரு சிறப்பு பார்வை .  I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
தீப வழிபாடு வந்த கதை -ஒரு சிறப்பு பார்வை .  I_vote_lcapதீப வழிபாடு வந்த கதை -ஒரு சிறப்பு பார்வை .  I_voting_barதீப வழிபாடு வந்த கதை -ஒரு சிறப்பு பார்வை .  I_vote_rcap 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீப வழிபாடு வந்த கதை -ஒரு சிறப்பு பார்வை .

ORATHANADUKARTH
ORATHANADUKARTH
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1604
இணைந்தது : 24/07/2013
http://orathanadukarthik.blogspot.ae

PostORATHANADUKARTH Tue Oct 21, 2014 8:51 pm

தீப வழிபாடு வந்த கதை -ஒரு சிறப்பு பார்வை .  Naraka1234__1413903417_2.51.113.57

உலக மக்கள் கொண்டாடும் ஒவ்வொரு பண்டிகையும் ஒவ்வொரு சிறப்பை வெளிப்படுத்தும் விதமாக அமைந்ததுதான். அதர்மங்களை
அழித்து தர்மத்தை நிலை நாட்ட இறைவன் அவதரித்து அசுரர்களை அழித்தான் என்று இந்து மத புராண வரலாற்று கதைகள் கூறுகின்றன. அந்த கதைகளை மேலோட்டமாக படிக்கும் பலரும் அந்த கதையில் கூறப்பட்டிருக்கும் உள்ளர்த்தங்களை உணர தலைப்படுவதில்லை.

தீபாவளி பற்றி யாரிடம் கேட்டாலும் கிருஷ்ணர், நரகாசுரனை வதம் செய்த தினம் தீபாவளியாக கொண்டாடப்படுகிறது என்று சொல்லி விடுவார்கள். பக்தி மார்க்கமாக கூறப்படும் கதையும் அதுதான். ஆனால் அந்த கதை மனிதர்களுக்கு எதனை உணர்த்துகிறது என்பதை எவரும் எண்ணி பார்க்கிறார்களா? என்பது தான் கேள்விக்குரியானது. வாருங்கள் கதைக்குள் செல்லலாம்:–

நரகாசுரன் பிறப்பு

அதர்மம் தலை தூக்கும் போதெல்லாம், அதனை அழிப்பதற்காக அவதரிப்பவர் விஷ்ணு பகவான். அவர் ஒருமுறை வராக அவதாரம் எடுத்து, பூமியை கடலுக்கு அடியில் இருந்து மீட்டெடுத்தார். அப்போது அவருக்கும், பூமாதேவிக்கும் பிறந்தவன் நரகாசுரன். நரகாசுரனை பெற்றெடுத்த பூமாதேவி, ‘எனது மகனுக்கு மரணம் ஏற்படக்கூடாது. அதற்கான வரத்தை தந்தருள வேண்டும்’ என்று விஷ்ணுவிடம் வேண்டினார்.

அதற்கு விஷ்ணு, ‘இறவா வரத்தை யாருக்கும் கொடுக்கக் கூடாது. அதனால் பல துன்பங்கள் ஏற்படும். ஆனால் உன் மகனை யாராலும் கொல்ல முடியாது. அவன் என்னாலேயே வீழ்வான். அப்போது நீயும் என்னுடன் இருப்பாய்’ என்றார். நரகாசுரனை கொல்லும்போது நீயும் அருகில் இருப்பாய் என்று விஷ்ணு பகவான் கூறியதற்கு காரணம் இல்லாமலா இருக்கும். அந்த காரணத்திற்காகத் தான் விஷ்ணு, கிருஷ்ணராக அவதாரம் செய்தபோது, பூமாதேவி சத்தியபாமாவாக தோன்றினார்.

பிரம்மதேவரிடம் வரம்

ஒரு முறை பிரம்மதேவரை நோக்கி கடுமையான தவம் இருந்தான் நரகாசுரன். அவனது தவத்தை ஏற்று அங்கு வந்த பிரம்மதேவரிடம், ‘நான் எந்த நிலையிலும் இறக்கக் கூடாது. அந்த வரத்தை தந்தருளுங்கள்’ என்று நரகாசுரன் கேட்டான். ‘உலகில் தோன்றிய அனைத்தும் மறைவது என்பது தவிர்க்க முடியாதது. ஆகையால் வேறு வரம் கேள்!’ என்றார் பிரம்மதேவர்.

சிறிது நேரம் மவுனமாக நின்ற நரகாசுரன், ‘பிரம்மதேவரே! எனது தாயினால்தான் எனக்கு மரணம் சம்பவிக்க வேண்டும் என்ற வரத்தையாவது தாருங்கள்’ என்றான். வரத்தை தந்ததாக கூறி மறைந்தார் பிரம்மதேவர். பெற்ற பிள்ளையை, அதன் தாய் எந்த சூழ்நிலையிலும் கொல்ல துணியமாட்டாள். எனவே நமக்கு மரணமே கிடையாது என்ற எண்ணமே நரகாசுரனை இவ்வாறு வரம் கேட்க வைத்தது.

போருக்கு சென்ற கண்ணன்

வரத்தை பெற்றுக்கொண்ட நரகாசுரன், மூவுலகத்தையும் ஆட்டிப்படைக்க தொடங்கி விட்டான். தேவேந்திரன் முதலான தேவர்களை அடிமைபோல் நடத்தினான். மனிதர்களை துன்புறுத்தினான். நரகாசுரன், அசாம் ராஜ்ஜியத்தில் உள்ள பிரக்ஜோதிஷபுரம் என்ற இடத்தை தலைமையிடமாக கொண்டு ஆட்சி புரிந்தான். நரகாசுரனின் கொடுமையால் சொல்லனா துயரம் அடைந்த தேவர்கள், அந்த கொடுமையில் இருந்து தப்பிக்க கண்ணனின் திருவடிகளில் போய் விழுந்தனர். அசுரனை அழித்து தங்களையும், மக்களையும் காத்தருளும்படி கண்ணீர் வடித்தனர்.

‘நல்லது நடக்கும் நம்பிக்கையோடு புறப்படுங்கள்’ என்று தேவர்களுக்கு உறுதியளித்த கண்ணபிரான், அந்த வாக்குறுதியை காப்பாற்ற சத்தியபாமாவை தேரின் சாரதியாக அமர்த்திக் கொண்டு, நரகாசுரன் ஆட்சி செய்யும் நகரமான பிரக்ஜோதிஷபுரம் நோக்கி சென்றார். நகரின் எல்லையை அடைந்த அவர், அந்த நகரின் பாதுகாவலாக இருந்த கிரி துர்க்கம், அக்னி துர்க்கம், ஜல துர்க்கம், வாயு துர்க்கம் என்னும் கோட்டைகளை அழித்து, அதன் பிறகு நகருக்குள் நுழைந்து போர் தொடங்க அறிகுறியாக சங்கை முழங்கினார்.

அசுரனை அழித்த சத்தியபாமா

சத்தம் கேட்டு அரண்மனையில் இருந்து வெளிப்பட்ட நரகாசுரன், தனது கோட்டைகள் உடைக்கப்பட்டு துகள்களாக கிடப்பதையும், அதற்கு காரணமான கண்ணனையும் கண்டு கடும் சீற்றம் கொண்டான். தனது படைகளை திரட்டிக்கொண்டு கண்ணனுடன் மூர்க்கத்தனமாக போரிட்டான். ஆனால் சாந்தம் தவழ்ந்த முகத்துடன் அம்புகளை தொடுத்த கண்ணன், நரகாசுரனின் படைகள் அனைத்தையும் முற்றிலுமாக அழித்து விட்டான்.

இதனால் மேலும் கடும் கோபத்திற்கு ஆளான நரகாசுரன் ஏவிய அஸ்திரம் ஒன்று தாக்கி கண்ணன் தேரில் சாய்ந்து விட்டான். இல்லை... இல்லை... சாய்ந்தது போல் நடிக்க தொடங்கி விட்டான். அதுவரை தேர் ஓட்டும் சாரதியாக அமைதியாக இருந்த சத்தியபாமா, தனது கணவரின் நிலைகண்டு கொதித்
தெழுந்தாள். அதற்காகத்தானே கண்ணன் தேரில் மூர்ச்சையானதுபோல் விழுந்தான். கோபத்தில் கண்கள் சிவக்க, அம்பு மழை பொழிந்தாள் சத்தியபாமா. அதில் இருந்து தப்பிக்க முடியாமல் நரகாசுரன் வீழ்ந்தான்.

தீமையை விலக்கி...

இனி இந்த கதையில் உள்ள உள் அர்த்தத்தை காணலாம். கதையில் 4 கோட்டைகளை உடைத்தெறிந்து, 5–வது கட்டமாக நரகாசுரனின் நகருக்குள் கண்ணன் நுழைந்தான், பின்னர் கொடியவனான நரகாசுரனை அழித்தான் என்று கூறப்பட்டுள்ளது. இது பஞ்ச பூதங்களால் ஆன நமது உடம்பின் உள்ளே புகுந்து தீயவற்றை விலக்கி, நமக்கு இறைவன் அருள்பாலிப்பதை உணர்த்துகிறது. கதையில் வரும் கோட்டைகளான கிரி துர்க்கம் என்பது நிலத்தையும், அக்னி துர்க்கம் என்பது நெருப்பையும், ஜல துர்க்கம் என்பது தண்ணீரையும், வாயு துர்க்கம் என்பது காற்றையும் எடுத்துரைக்கிறது. பஞ்ச பூதங்களில் 4 இங்கு கூறப்பட்டுள்ளதால் 5–வதான ஆகாயமும் சேர்ந்தே வரும்.

தீமையை அகற்றி நன்மையை அளிக்கும் இறைவனின் உத்தியானது கதையின் ஒரு கருத்தாக அமைந்தாலும், இந்த கதையில் தியாகத்தை உணர்த்தும் உன்னதமான மற்றொரு கருத்தும் புதைந்துள்ளது.

துக்கத்தை மறைத்து

கண்ணனுடன் சேர்ந்து போர் புரிந்து, நரகாசுரனை வதம் செய்த பின்னர் பூமாதேவியின் அம்சமான சத்தியபாமாவுக்கு தனது மகன் இறந்துவிட்டானே என்ற துயரம் ஏற்பட்டது. இருந்தாலும், ‘மகன் இறந்தது என் ஒருத்திக்குதான் துக்கம். ஆனால் அவனால் பல துன்பங்களை அடைந்த தேவர்களுக்கும், மக்களுக்கும் இது நன்மை அளிப்பது’ என்று மனதை ஒருவாறு தேற்றிக்கொண்டாள்.

பின்னர் கண்ணனிடம் இப்படி கூறினாள். ‘என் மகனை இழந்த துக்கம் எனக்கு இருந்தாலும், உலக மக்களுக்கு எவ்வித துக்கமும் இருக்கக்கூடாது. அன்று எல்லோரும் கங்கா ஸ்நானம் செய்து, புத்தாடை உடுத்தி, விருந்து உண்டு, மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். அதற்கு அருள்புரிய வேண்டும்’ என்று வேண்டினாள் என்பதும் கதையின் ஒரு பகுதியாகும்.

தியாகத்தால் சிறப்பிடம்

அசுரனை அழித்ததால் தான் தீபாவளி வந்தது என்றால், இறைவன் பல அவதாரங்கள் எடுத்து பல அசுரர்களை அழித்துள்ளார். அதையெல்லாம் ஒரு பண்டிகையாக அல்லவா கொண்டாட வேண்டும் என்று சிலர் கேள்வி எழுப்புவார்கள். ஆனால் உண்மையை உணர வேண்டியது அவசியம். தனக்கு துயரம் ஏற்பட்டாலும் உலகம் மகிழ்வுற அதனை ஏற்றுக்கொள்ளும் தியாக உணர்வு இங்கு வெளிப்பட்டதன் காரணமாகத்தான் தீபாவளி, இந்து பண்டிகைகளில் சிறப்பிடத்தை பிடித்தது.

மற்றவர்களுக்கு துன்பத்தை ஏற்படுத்தாமலும், நாம் துன்பத்தில் உழன்றாலும் அடுத்தவர்களை மகிழ்வுற வைக்கும் மனப்பாங்கை வளர்த்துக் கொள்வதும் தான் தீபாவளியை கொண்டாடியதற்கான பலனை பெற வழிவகுக்கும்.

தீப வழிபாடு வந்த கதை

நரகாசுரனை அழிப்பதற்காக சத்தியபாமாவுடன், கண்ணன் புறப்பட்டு சென்றபோது, திருமகள் என்று அழைக்கப்படும் லட்சுமிதேவியை கவர்ந்து செல்வதற்காக சில அசுரர்கள் வந்தனர். அசுரர்களின் வருகையை அறிந்துகொண்ட லட்சுமிதேவி, அங்கு எரிந்துகொண்டிருந்த தீபச்சுடரில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டாள். அன்றைய தினமே தீபாவளியாகும். ஐஸ்வரியங்களுக்கு சொந்தக்காரியான லட்சுமிதேவி தீபத்தில் தன்னை நுழைத்துக் கொண்டதால் தீபங்களை வரிசையாக ஏற்றி வைத்து திருமகளை வழிபடும் விதமாக தீபாவளி அன்று தீபம் ஏற்றும் வழக்கம் வந்தது.

வாசகர்கள் அனைவர்க்கும் எனது இதயம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள் .

தீப வழிபாடு வந்த கதை -ஒரு சிறப்பு பார்வை .  12345__1413903268_2.51.113.57

ஏற்றமிகு வாழ்வு அமையப்பெற்று அனைவரினதும்
வாழ்வில் அனைத்து வறுமைகளும் நீங்கி
நிறைவான செல்வத்துடன் , நோய் நோடி இல்லாமல்
நலமுடன் வாழ இத்தீபதிருநாளில் வாழ்த்துகிறேன் .
என்றும் உங்கள் நண்பன் ,

ஒரத்தநாடு கார்த்திக் .

ஒரத்தநாடு கார்த்திக்
http://orathanadukarthik.blogspot.ae
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Oct 21, 2014 8:56 pm

நன்றி கார்த்திக், உங்களுக்கும் என் இதயம் கனிந்த இனிய தீபாவளி நல் வாழ்த்துகள் புன்னகை அன்பு மலர்

.
.
.

தீப வழிபாடு வந்த கதை -ஒரு சிறப்பு பார்வை .  GPHwOlvMQVK2CF9TixYa+105173
சொன்னா நம்பமாடீங்க................நானும்,  நீங்க மேலே போட்ட பதிவைத்தான் போட வந்தேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ORATHANADUKARTH
ORATHANADUKARTH
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1604
இணைந்தது : 24/07/2013
http://orathanadukarthik.blogspot.ae

PostORATHANADUKARTH Tue Oct 21, 2014 9:15 pm

சிறப்பு பார்வை -2 என்று ஒன்னு போட்டு விடுங்க , நல்ல பதிவை எத்தனை முறை கொடுத்தாலும் குற்றமில்லை .

உங்களுக்கு மற்றும் குடும்பத்தில் உள்ள அனைவர்க்கும் எனது தீபாவளி வாழ்த்துக்கள் அம்மா , சந்தோசமாக கொண்டாடுங்கள் .

ஒரத்தநாடு கார்த்திக்
http://orathanadukarthik.blogspot.ae
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Oct 21, 2014 9:17 pm

ORATHANADUKARTH wrote:சிறப்பு பார்வை -2 என்று ஒன்னு போட்டு விடுங்க , நல்ல பதிவை எத்தனை முறை கொடுத்தாலும் குற்றமில்லை .

உங்களுக்கு மற்றும் குடும்பத்தில் உள்ள அனைவர்க்கும் எனது தீபாவளி வாழ்த்துக்கள் அம்மா , சந்தோசமாக கொண்டாடுங்கள் .
மேற்கோள் செய்த பதிவு: 1098480

நன்றி கார்த்தி புன்னகை ................இல்லை நீங்க போட்டதே போறும் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பாலு.ராஜரத்தனம்
பாலு.ராஜரத்தனம்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 1
இணைந்தது : 19/10/2014

Postபாலு.ராஜரத்தனம் Tue Oct 21, 2014 10:54 pm

அண்ணா தாங்கள் மூலமே தீபாவளியின் வரலாறு தெரிந்து கொண்டேன்.தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் கூறுவதுடன் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

ஸ்ரீரங்கா
ஸ்ரீரங்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 320
இணைந்தது : 08/08/2014

Postஸ்ரீரங்கா Tue Oct 21, 2014 11:04 pm

தீப வழிபாடு வந்த கதை -ஒரு சிறப்பு பார்வை .  103459460 தீப வழிபாடு வந்த கதை -ஒரு சிறப்பு பார்வை .  4SJ1XknHRked4XyZEV7e+diwali

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அன்பு எதையும் எதிர்பார்க்காது

என்றும் அன்புடன்

ஸ்ரீரங்கா
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Oct 22, 2014 12:24 am

நல்ல பகிர்வு.

தீபாவளி வாழ்த்துக்கள் கார்த்திக். புன்னகை

தீப வழிபாடு வந்த கதை -ஒரு சிறப்பு பார்வை .  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதீப வழிபாடு வந்த கதை -ஒரு சிறப்பு பார்வை .  L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312தீப வழிபாடு வந்த கதை -ஒரு சிறப்பு பார்வை .  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ORATHANADUKARTH
ORATHANADUKARTH
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1604
இணைந்தது : 24/07/2013
http://orathanadukarthik.blogspot.ae

PostORATHANADUKARTH Wed Oct 22, 2014 9:18 am

விமந்தனி wrote:நல்ல பகிர்வு.

தீபாவளி வாழ்த்துக்கள் கார்த்திக். புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1098505தனம்"]அண்ணா தாங்கள் மூலமே தீபாவளியின் வரலாறு தெரிந்து கொண்டேன்.தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் கூறுவதுடன் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.[/quote] மேற்கோள் செய்த பதிவு: 1098492
ஸ்ரீரங்கா wrote:தீப வழிபாடு வந்த கதை -ஒரு சிறப்பு பார்வை .  103459460 தீப வழிபாடு வந்த கதை -ஒரு சிறப்பு பார்வை .  4SJ1XknHRked4XyZEV7e+diwali
மேற்கோள் செய்த பதிவு: 1098493

வாழ்த்திய அனைவர்க்கும் எனது இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் . சந்தோசமாக தீபாவளியை கொண்டாடுங்கள் .

தீபாவளி பல நினைவுகளை
தீண்டிச் செல்லும்
தித்திக்கும்
திரு நாள்

ஒரத்தநாடு கார்த்திக்
http://orathanadukarthik.blogspot.ae
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக