புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:19 am

» நாவல்கள் வேண்டும்
by vista Today at 12:06 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:56 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:32 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 9:03 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:25 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:43 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 4:44 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:25 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Yesterday at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Yesterday at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Yesterday at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:19 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:37 am

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழ்க்கை! Poll_c10வாழ்க்கை! Poll_m10வாழ்க்கை! Poll_c10 
59 Posts - 51%
heezulia
வாழ்க்கை! Poll_c10வாழ்க்கை! Poll_m10வாழ்க்கை! Poll_c10 
45 Posts - 39%
mohamed nizamudeen
வாழ்க்கை! Poll_c10வாழ்க்கை! Poll_m10வாழ்க்கை! Poll_c10 
3 Posts - 3%
Abiraj_26
வாழ்க்கை! Poll_c10வாழ்க்கை! Poll_m10வாழ்க்கை! Poll_c10 
2 Posts - 2%
Rathinavelu
வாழ்க்கை! Poll_c10வாழ்க்கை! Poll_m10வாழ்க்கை! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
வாழ்க்கை! Poll_c10வாழ்க்கை! Poll_m10வாழ்க்கை! Poll_c10 
1 Post - 1%
prajai
வாழ்க்கை! Poll_c10வாழ்க்கை! Poll_m10வாழ்க்கை! Poll_c10 
1 Post - 1%
mini
வாழ்க்கை! Poll_c10வாழ்க்கை! Poll_m10வாழ்க்கை! Poll_c10 
1 Post - 1%
balki1949
வாழ்க்கை! Poll_c10வாழ்க்கை! Poll_m10வாழ்க்கை! Poll_c10 
1 Post - 1%
vista
வாழ்க்கை! Poll_c10வாழ்க்கை! Poll_m10வாழ்க்கை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழ்க்கை! Poll_c10வாழ்க்கை! Poll_m10வாழ்க்கை! Poll_c10 
416 Posts - 58%
heezulia
வாழ்க்கை! Poll_c10வாழ்க்கை! Poll_m10வாழ்க்கை! Poll_c10 
243 Posts - 34%
mohamed nizamudeen
வாழ்க்கை! Poll_c10வாழ்க்கை! Poll_m10வாழ்க்கை! Poll_c10 
22 Posts - 3%
prajai
வாழ்க்கை! Poll_c10வாழ்க்கை! Poll_m10வாழ்க்கை! Poll_c10 
9 Posts - 1%
Abiraj_26
வாழ்க்கை! Poll_c10வாழ்க்கை! Poll_m10வாழ்க்கை! Poll_c10 
5 Posts - 1%
T.N.Balasubramanian
வாழ்க்கை! Poll_c10வாழ்க்கை! Poll_m10வாழ்க்கை! Poll_c10 
5 Posts - 1%
சுகவனேஷ்
வாழ்க்கை! Poll_c10வாழ்க்கை! Poll_m10வாழ்க்கை! Poll_c10 
4 Posts - 1%
mini
வாழ்க்கை! Poll_c10வாழ்க்கை! Poll_m10வாழ்க்கை! Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வாழ்க்கை! Poll_c10வாழ்க்கை! Poll_m10வாழ்க்கை! Poll_c10 
3 Posts - 0%
Guna.D
வாழ்க்கை! Poll_c10வாழ்க்கை! Poll_m10வாழ்க்கை! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ்க்கை!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Oct 19, 2014 11:10 pm

வீடே அமைதியாக இருந்தது. அடுக்களையில், 'உம்'மென்று முகத்தை வைத்துக் கொண்டு, பாத்திரங்களைக் கழுவிக் கொண்டிருந்தாள் சுமதி. செய்தித்தாளை படிக்க முயன்று கொண்டிருந்தான் மூர்த்தி. பரத்தும், கலாவும் பாட புத்தகங்களைக் கையில் வைத்துக் கொண்டிருந்தனர்.

செய்தித்தாளை பார்த்தபடியே, சிந்தனையில் இருந்த மூர்த்திக்கு, பரத்தை பார்க்க பாவமாக இருந்தாலும், இன்னும் கோபமாகத்தான் இருந்தது. காலையில், அவனுடைய மதிப்பெண் பட்டியலைப் பார்த்த மூர்த்தி, கோபத்துடன், 'என்னடா மார்க் வாங்கி இருக்கே... ஒரு சப்ஜெக்ட்ல கூட நூற்றுக்கு எழுபதுக்கு மேல இல்ல. பேசாம படிப்பை நிறுத்திட்டு, மாடு மேய்க்கப் போ. ஒவ்வொரு வேளையும் நல்லா மூக்குப் பிடிக்க சாப்பிடற இல்ல... அப்பறம் என்னடா பிரச்னை, தொண்ணூறுக்கு மேல மார்க் வாங்க...' என்று கத்தி தீர்த்தான்.

அப்பாவின் கத்தலைக் கேட்ட பரத்தின் கண்களில், நீர்த்திவலைகள் வர ஆரம்பிக்க, சுமதி அவன் அருகில் வந்து ஆதரவாக, 'அழாதேடா கண்ணா, நல்லா படிக்கணும் என்ன...' என்று கூறி, மகனை கட்டிக் கொண்டாள்.
மனைவி, மகனைக் கொஞ்சுவதைப் பார்த்த மூர்த்தியின் கோபம், மறுபடியும் விஸ்வரூபம் எடுக்க, எழுந்து மகனை, 'பளார் பளார்' என அறைந்தான்.

இதனால், ஞாயிற்றுக் கிழமையின் காலை வேளை சோகத்தில் புரள, சாப்பிடும் போது ஒருவரும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. சாப்பிட்டு விட்டு பரத்தும், கலாவும் புத்தகத்தை எடுத்து உட்கார, சுமதி அடுக்களையில் நுழைய, செய்தித்தாளை எடுத்துக் கொண்டு உட்கார்ந்த மூர்த்தியால், ஒரு வார்த்தையைக்கூட படிக்க முடியவில்லை.

''சுமதி இங்க வா,'' என்று குரல் கொடுக்க, 'உம்'மென்ற முகத்துடன் இரண்டு நிமிடங்கள் கழித்து வந்தாள் சுமதி. ''இப்படி உட்கார்,'' என்றான். 'என்ன விஷயம்?' என்பது போல் பார்த்தாள்.
''சிட்டிக்குள்ள எங்கேயாவது போயிட்டு வரலாமா... பசங்களுக்குப் பிடிச்ச, சிட்டி சென்டர், ஸ்பென்சர் ப்ளாசா,'' என்றவனை பார்த்து, ''ஏன் திடீர்ன்னு?'' என்று கேட்டாள்.

''ரொம்ப திட்டிட்டேன்; அதோட அடிச்சுட்டேன். அதுதான் மனசு கேட்கல,'' என்றான்.
''மார்க் ரொம்பக் குறைவா தான் வாங்கி இருக்கான். நான் கூட கோபமாகத்தான் கேட்டேன். இருந்தாலும், நீங்க குழந்தைய அடிச்சுருக்க வேண்டாமே,'' என்றாள் வருத்தத்துடன்.

பதில் சொல்லாமல் பரத்தை அழைத்து, ஆதரவாக அவனது முதுகில் தடவிக் கொண்டே, ''அடுத்த முறை நிறைய மார்க் வாங்கணும்; இந்த மாதிரி மார்க் வாங்கினா இன்ஜினியரிங், மெடிக்கல் சீட்டுன்னு கனவு கூடக் காண முடியாது, என்ன தெரிஞ்சுதா,'' என்றான்.

''சரிப்பா,'' என்று தலை ஆட்டிய மகனைப் பார்த்து, ''அப்பா கேட்கறார்டா எங்கேயாவது போயிட்டு வரலாம்ன்னு. எங்கே போகலாம்?'' என்று கேட்டாள் சுமதி. பரத் வாயைத் திறப்பதற்குள், ''சிட்டி சென்டர்மா...'' என்று சொல்லிக் கொண்டே கலா ஓடி வந்து, அம்மாவின் மடியில் அமர்ந்து கொண்டாள். பரத்தும், சரி என சந்தோஷத்தில் சொல்ல, வழக்கமான கலகல ஞாயிற்றுக் கிழமை உதித்தது.

தாம்பரத்தில் இருந்து, மின்சார ரயில் பிடித்து மாம்பலத்தில் இறங்க, பேருந்து நிலையத்தை நோக்கி நடக்கலாயினர். பஸ் நிலையத்தை நோக்கி சென்று கொண்டிருக்கையில் மூர்த்தி திடீரென்று யோசனையில் நிற்க, என்னவென்பது போல் பார்த்தாள் சுமதி.

''என்னோட பெரிய அத்தை பெண் கல்யாணி, இங்கேதானே இருக்கா. போய் பாத்துட்டு வந்துடலாம்ன்னு தோணறது; என்ன சொல்றே?'' என்று கேட்டான். ''அதுக்கென்ன போகலாம்,'' என்றாள்.

நினைவலைகளைக் குடைந்து, கல்யாணியின் பங்களாவை அடைந்து, காலிங் பெல்லை அழுத்த, ஒரு நிமிட நேரம் கழித்து, ஒரு பெண்மணி வந்து கதவைத் திறந்து, ''யாரு வேணும்?'' எனக் கேட்டாள்.
''கல்யாணி...'' என்றுதும், ''அம்மா... உங்களைத் தேடி யாரோ வந்திருக்காங்கம்மா...'' உள்நோக்கிக் குரல் கொடுத்தாள்.

''யாரு...'' என்று கேட்டுக் கொண்டே வந்த கல்யாணி, ''யாரு மூர்த்தியா... என்னடா இது! இந்த வெய்யில் வேளையில, அதுவும் என்னிக்கும் வராதவன் இன்னிக்கு. இப்பத்தான் தூக்கம் கண்ணைச் சொக்க, படுக்கலாம்ன்னு போனேன். நீ காலிங் பெல்லை அடிக்கறே, வா...''

கல்யாணியின் பேச்சைக் கேட்டவன், ''சரி கல்யாணி, அப்ப நாங்க கிளம்பறோம். பாவம் தூங்கறவங்கள தொந்தரவு செய்துட்டோம்,'' என்று சொல்லி, கிளம்ப எத்தனிக்க, ''அட! உங்க அப்பா மாதிரியே, உனக்கும் பொசுக்குன்னு கோபம் வர்றது. என்ன சொல்லிட்டேன் இப்ப... வா...''என்று சொல்லியபடியே உள்ளே சென்றாள். அவளைத் தொடர்ந்து இவர்களும் சென்றனர்.
''என்ன திடீர்ன்னு இந்தப் பக்கம்?''

''எங்கேயாவது போயிட்டு வரலாம்ன்னு கிளம்பினோம்; பஸ் ஸ்டாண்ட் போகயில திடீர்ன்னு ஒரு யோசனை. உன்னைப் பாத்து ரொம்ப வருஷம் ஆச்சே...பாத்துட்டு போகலாம்ன்னு நினைச்சேன். அதுதான் வந்தேன்,'' என்று, அவன் சொல்லி கொண்டிருக்க, அந்த பங்களாவையே பிரமிப்புடன் பார்த்தாள் சுமதி.
''எங்க போகப் போறீங்க?''

''மார்க் குறைவா வாங்கி இருக்கானேன்னு இவனை காலைல கண்டபடி திட்டிட்டேன். அதான் மனசு கேட்கல. சரி பாவம் எங்கேயாவது அழைச்சுட்டுக் போகலாம்ன்னு... சிட்டி சென்டர் போகணுமாம், சுத்திப் பாத்துட்டு, ஓட்டல்ல சாப்பிட்டுட்டு, பசங்க கொஞ்சம் ஜாலியா இருக்கட்டுமே,'' என்றான் மூர்த்தி.

தொடரும்..................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Oct 19, 2014 11:11 pm

'காபி சாப்பிடறியாடா... உன் ஒய்ப் சாப்பிடுவாளா... பாமா ரெண்டு காபி; பசங்களுக்கு, கொஞ்சம் ஹார்லிக்ஸ் கொண்டு வா,'' என்று சொல்லிவிட்டு மூர்த்தியைப் பார்த்த கல்யாணி, ''சமையக்காரி இப்பத்தான் வேலைய முடிச்சுட்டு கிளம்ப இருந்தா.

நீ வந்துட்டே... அப்புறம் சொல்லு என்ன விஷயம்?''
''ஆமாம்... உன் கணவர் எங்கே,'' என்ற கேட்டபடியே சுற்று முற்றும் பார்த்தான் மூர்த்தி.
''யூ எஸ் ல இப்ப நைட் ஆச்சே. தூங்கிட்டு இருப்பார்,'' என்றாள்.
''என்ன! உன் வீட்டுக்காரர் அமெரிக்காவுலயா இருக்காரு?''

''ஆமாம். இங்கே ஒரு லட்சம் சம்பளம் தர்றேன்னான்; சரிதான் போடா நீயும் ஆச்சு, உன் பிச்சாத்து சம்பளமும் ஆச்சுன்னு, யூ எஸ் கிளம்பிட்டார். இந்தியாவ விட பல மடங்கு சம்பளம் அங்கே அதிகம். பின்னே படிச்ச படிப்புக்கு ஏத்த சம்பளம் கிடைக்கற இடத்துக்கு போயிட வேண்டியது தானே. வருஷத்துக்கு ஒரு தடவ வருவார். பதினைஞ்சு நாள் அதிகபட்சம்; லீவு கிடைக்காது. இப்ப அங்கேயும் கூட, அதிக சம்பளம் கேட்டுக்கிட்டு இருக்கறதா சொன்னார்.''

''ஓஹோ...''
சமையற்காரி கொண்டு வந்த காபி, ஹார்லிக்சை பருகி முடித்தனர். ''உன் பையனை எங்கே காணோம்?'' கேட்டான்.
''ஸ்டடி ரூம்ல படிச்சிட்டு இருக்கான்; இந்த வருஷம் டென்த்.''

''வரச் சொல்லேன். பசங்களா... அவன் கூட கொஞ்ச நேரம் விளையாடுங்க போங்க,'' என்று பரத்தையும், கலாவையும் நோக்கி சொல்ல, ''நோ நோ... வேண்டாம் மூர்த்தி, அவனை, 'டிஸ்டர்ப்' செய்யாதே. பத்தாம் வகுப்புல, 99 சதவீதம் எடுத்துதான் ஆவேன்னு கங்கணம் கட்டிக்கிட்டு படிச்சுட்டு இருக்கான். படிக்க உட்கார்ந்துட்டான்னா, விளையாட எல்லாம் வர மாட்டான். பயங்கர கான்சென்ட்ரேஷன். அவன் அப்பாவ விட அதிகம் சம்பாதிச்சுக் காட்டுவேன்னு சேலஞ்ச் செய்திருக்கான்.''

''கேட்க மறந்துட்டேனே... நீயும் ஒரு மல்டி நேஷனல் கம்பெனில வேலை பாத்துட்டு இருந்தல்ல. வேலையை விட்டுட்டியா?'' என்று கேட்டான் மூர்த்தி.

''நல்லா கேட்டே போ... நான் ஏன் வேலைய விடணும்... அந்த கம்பெனியில இருந்து, இது வரைக்கும், நிறைய கம்பெனி தாவிட்டேன். இப்பவும், ஒரு ஜெர்மன் கம்பெனியில இருக்கேன். இன்னிக்கு, ஒரு முக்கியமான சொந்த வேலை; அதான் லீவு போட்டேன். இப்ப வெளியே கிளம்பணும். இதே நீ அடுத்த மாசம் வந்திருந்தேன்னா, நான் இங்க இருந்துருக்க மாட்டேன்,'' என்றாள்.
''ஏன்?''

''எங்க கம்பெனி மூலமா ஸ்பெயின்ல ஒரு புராஜெக்ட்; ஒரு வருஷம் போறியான்னு கேட்டாங்க. சரின்னு சொல்லிட்டேன். கூட சம்பளம் கிடைக்கும்; அலவன்சும் உண்டு...''
''அப்ப உங்க பையன் கதி?'' ஆச்சரியமாகக் கேட்டாள் சுமதி.

''ஒரு சர்வண்ட் மெயிட் இருக்கா, குக் இருக்கா, இல்லேன்னா அவரோட அண்ணா இங்கே வால்மீகி நகர்ல இருக்கார்; அங்கே இருப்பான். அதுவும் இல்லாம நாங்க பெங்களூருக்கு மூவ் செய்யலாம்ன்னு இருக்கோம்,'' என்று சொன்னவளை ஆச்சரியமாகப் பார்த்தான் மூர்த்தி.
''ஏன் கல்யாணி?''

''இந்த வீட்டை வித்துட்டு, பெங்களூர்ல மாடர்னா, வசதியா ஒரு வீடு வாங்கலாம்ன்னு இருக்கோம்.''
''இது வசதியா இல்லையா?'' வாயைப் பிளந்தாள் சுமதி.
''இது பழைய மாடலா இருக்கு,'' என்றாள். மூர்த்தி அமைதியானான். சுமதி, கணவனைப் பார்த்து, ''கிளம்பலாமாங்க?''என்று கேட்டாள்.

''அப்ப, நான் கிளம்பறேன் கல்யாணி. ரொம்ப வருஷம் கழிச்சு உன்ன பாத்ததுல சந்தோஷம். நீ போய் தூங்கு; பாவம் உன் தூக்கத்தைக் கெடுத்துட்டோம்,''என்றான்.
இவர்கள் எழுந்திருக்க, கல்யாணியும் எழுந்தாள். ''தூக்கம் கலைஞ்சது கலைஞ்சதுதான்; வெளியே கிளம்பணும்,'' என்றாள், ''அப்புறம் மூர்த்தி... நீ என்ன வேலையில் இருக்கே... அதே கவர்மென்ட் வேலை தானா...''

''ஆமாம்; இப்ப ஹெட் க்ளார்க்.''
''நீ வேலைக்குப் போறியா?'' என்று சுமதியைப் பார்த்துக் கேட்டாள்.
''இல்ல, ஹவுஸ் ஒய்ப்,''என்றாள் சுமதி.
''உங்க வீடு, அந்த பழைய...''
''அதே பழைய வீடுதான்,''என்று சொல்லி விட்டு, கிளம்பலாயினர்.

குழந்தைகளுக்கு 'ஸ்நாக்ஸ்' வாங்கிக் கொடுத்து, சிட்டி சென்டரை அடைந்து, இரண்டரை மணி நேரம் பொழுதைக் கழித்து விட்டு, ஒரு ஓட்டலில் உணவு உண்டு, அவர்கள் வீடு திரும்பிய போது, மாலை, 6:00 மணி. நண்பர்கள் தெருவில் விளையாடிக் கொண்டிருந்ததைப் பார்த்துக் கொண்டே வந்தனர் பரத்தும், கலாவும்.

காலையில் அப்பாவிடம் திட்டு வாங்கியிருந்த படியால், முகம் கழுவி, படிக்க உட்கார்ந்த பரத் மற்றும் கலாவை அழைத்தான் மூர்த்தி, ''நல்லா படி; முடிஞ்ச அளவு நல்ல மார்க் வாங்கு... இப்ப போய் விளையாடு. நீயும் தான் கலா, உங்க ப்ரண்ட்ஸ் எல்லாரும் விளையாடுறாங்கல்ல, உங்களுக்கு மட்டும் ஆசை இருக்காதா... போங்க,'' அனுப்பி விட்டு கட்டிலில் இளைப்பாறலானான்.

இரண்டு கோப்பைகளில் காப்பியுடன் வந்து, ஒன்றை மூர்த்தியிடம் கொடுத்து விட்டு, மற்றொன்றை தான் எடுத்துக் கொண்டு, ''என்னங்க இது, காலையில நீங்க விட்ட டோஸைப் பார்த்தா... உடனே உட்கார்ந்து படின்னு சொல்வீங்கன்னு நினைச்சேன்... விளையாடப் போக சொல்லிட்டீங்க. முடிஞ்ச அளவு நல்ல மார்க் வாங்குன்னு வேற சொல்றீங்க. என்ன ஆச்சு... 98 சதவீதம் வாங்க வேண்டாமா?''

''வாங்க வேண்டாம்ன்னு சொல்லல சுமதி... ஆனா, கல்யாணி வீட்டுக்குப் போயிட்டு வந்தப்பறம்...'' என்று ஏதோ சொல்ல ஆரம்பிக்கும் முன், ''ஆமாம் என்னங்க இது... அவ்வளவு பெரிய பங்களாவ வசதி இல்லைங்கறா. பெங்களூர்ல இதை விட மாடர்னா ஒரு பங்களா வாங்கப் போறாங்களாம்.

அதுவும் இல்லாம, கணவர் அமெரிக்காவுல ஏன் இருக்கணும்... இங்கே ஒரு லட்ச ரூபாய் சம்பளத்தை, ஏதோ பிச்சைக் காசுங்கற மாதிரி சொல்றாளே... கல்யாணி எதுக்கு ஜெர்மனி போகணும்... பையன் தனியா இருப்பானாம். இல்ல பெரியப்பா வீட்டில இருப்பானாம்... என்னங்க இது, குடும்பம் பீஸ் பீஸா,'' என்றாள் ஆற்றாமையுடன்.

காபிக் கோப்பையைக் கீழே வைத்த மூர்த்தி, ''உன் கேள்விக்கு நீயே பதில் சொல்லிட்டியே... பரத்தும், கலாவும் படிச்சு நல்ல வேலைக்குப் போகட்டும். எல்லாத்துக்கும் மேல அன்பான கணவன், மனைவி, குழந்தைகள்ன்னு எல்லாரும் சேர்ந்து ஒண்ணா வாழற சந்தோஷமான குடும்ப வாழ்க்கை வாழட்டும்; அதுதான் ரொம்ப ரொம்ப முக்கியம்,'' என்றான் மூர்த்தி.

வெ. ராஜாராமன்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக