புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:09

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:33

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:21

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:18

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:55

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:53

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:29

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:46

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கான்கிரீட் மரங்கள்! Poll_c10கான்கிரீட் மரங்கள்! Poll_m10கான்கிரீட் மரங்கள்! Poll_c10 
113 Posts - 75%
heezulia
கான்கிரீட் மரங்கள்! Poll_c10கான்கிரீட் மரங்கள்! Poll_m10கான்கிரீட் மரங்கள்! Poll_c10 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
கான்கிரீட் மரங்கள்! Poll_c10கான்கிரீட் மரங்கள்! Poll_m10கான்கிரீட் மரங்கள்! Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
கான்கிரீட் மரங்கள்! Poll_c10கான்கிரீட் மரங்கள்! Poll_m10கான்கிரீட் மரங்கள்! Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
கான்கிரீட் மரங்கள்! Poll_c10கான்கிரீட் மரங்கள்! Poll_m10கான்கிரீட் மரங்கள்! Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கான்கிரீட் மரங்கள்! Poll_c10கான்கிரீட் மரங்கள்! Poll_m10கான்கிரீட் மரங்கள்! Poll_c10 
1 Post - 1%
Pampu
கான்கிரீட் மரங்கள்! Poll_c10கான்கிரீட் மரங்கள்! Poll_m10கான்கிரீட் மரங்கள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கான்கிரீட் மரங்கள்! Poll_c10கான்கிரீட் மரங்கள்! Poll_m10கான்கிரீட் மரங்கள்! Poll_c10 
278 Posts - 76%
heezulia
கான்கிரீட் மரங்கள்! Poll_c10கான்கிரீட் மரங்கள்! Poll_m10கான்கிரீட் மரங்கள்! Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
கான்கிரீட் மரங்கள்! Poll_c10கான்கிரீட் மரங்கள்! Poll_m10கான்கிரீட் மரங்கள்! Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
கான்கிரீட் மரங்கள்! Poll_c10கான்கிரீட் மரங்கள்! Poll_m10கான்கிரீட் மரங்கள்! Poll_c10 
8 Posts - 2%
prajai
கான்கிரீட் மரங்கள்! Poll_c10கான்கிரீட் மரங்கள்! Poll_m10கான்கிரீட் மரங்கள்! Poll_c10 
5 Posts - 1%
Balaurushya
கான்கிரீட் மரங்கள்! Poll_c10கான்கிரீட் மரங்கள்! Poll_m10கான்கிரீட் மரங்கள்! Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
கான்கிரீட் மரங்கள்! Poll_c10கான்கிரீட் மரங்கள்! Poll_m10கான்கிரீட் மரங்கள்! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கான்கிரீட் மரங்கள்! Poll_c10கான்கிரீட் மரங்கள்! Poll_m10கான்கிரீட் மரங்கள்! Poll_c10 
3 Posts - 1%
Barushree
கான்கிரீட் மரங்கள்! Poll_c10கான்கிரீட் மரங்கள்! Poll_m10கான்கிரீட் மரங்கள்! Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கான்கிரீட் மரங்கள்! Poll_c10கான்கிரீட் மரங்கள்! Poll_m10கான்கிரீட் மரங்கள்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கான்கிரீட் மரங்கள்!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon 20 Oct 2014 - 0:49

வணக்கம் சார்.''

''அட... அமரு தம்பி... வாங்க... நல்லாயிருக்கீங்களா...''
''நல்லாயிருக்கேன் சார். வீட்ல அம்மா எப்படியிருக்காங்க?''
''எல்லாரும் நல்லா இருக்காங்க,'' என்றவர் வீட்டுக்கு உள்ளே பார்த்து, 'அம்மாடி... நம்ம அமர் தம்பி வந்திருக்குது; காபி கொண்டு வாம்மா,'' என்று குரல் கொடுத்தார்.
''காபி வேண்டாம் சார், மோர் கிடைக்குமா?''

''கண்டிப்பா தம்பி... அமெரிக்காவுக்கு போனாலும், இன்னும் பழசை மறக்கலயே...''என்றார்.
''அது, மனசோட, உடம்போட ஊறிப்போனது சார்,''என்று கூறி, பெருமையாக புன்னகைத்தான் அமர்.
மோர் வருவதற்கான இடைப்பட்ட நேரத்தில், அமரேசன் திரும்பி வாசலில் இருந்த பைக்கை பார்க்க, நண்பன் சிவா கட்டை பையிலிருந்து, ஒரு தட்டில் பழங்களையும், இனிப்பு பெட்டிகளையும் நிரப்பி, அமரேசனிடம் கொடுத்தான். அதை வாங்கி ஊர் தலைவரிடம் நீட்டினான் அமர்.
''சார்... வாங்கிக்குங்க.''
''எதுக்கு தம்பி இதெல்லாம்?''

''தலைவர வெறுங்கையுடன் பாக்கலாமா?'' என்று கூறி தட்டை நீட்ட, மோருடன் வந்த அவரது மனைவி சிரித்துக் கொண்டே, தட்டை பெற்று கொண்டாள். தலைவரை சுற்றியிருந்த நாலைந்து பெரியவர்களுக்கு பழம், இனிப்பு அடங்கிய காகித பைகளை வழங்கினான். அவர்கள், 'தம்பி நம்மை எல்லாம் மறக்கல; எல்லாருக்கும் ரெடியாகத்தான் வாங்கியாந்திருக்கு...' என்று கூறி மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டனர்.
அமர் புன்னகைத்தான். சட்டை நனைய நனைய மோரை வாயில் சரித்து கொண்டான்.
மேலும், ஒரு பத்து நிமிடம் பொதுவாய் பேசிவிட்டு, 'சரி தம்பி... நீங்க தலைவர் கிட்ட பேசிட்டிருங்க; நாங்க கிளம்பறோம்...' என்று ஒவ்வொருத்தராய் நகர்ந்தனர்.

''தம்பி, நீங்க ஏதோ சொல்ல வர்றீங்கன்னு நினைக்கிறேன்...'' என்றார் தலைவர்.
''ஆமாங்க சார்.''
''சரி வாங்க தோட்டத்து பக்கம் போய் நிதானமாக பேசுவோம்.''
செவ்வந்திபுரம் கிராமம்

அரசு உயர்நிலைப் பள்ளியில், பத்தாம் வகுப்பில் பள்ளியில் முதலிடமும், மாவட்டத்தில் இரண்டாம் இடமும் பெற்றான் அமரேசன். அப்பாவுக்கு பொறுப்பற்ற ஊர் சுற்றும் பணி, அம்மாவுக்கு கூலி வேலை. ஆனால், அமரேசனுக்கு கல்வியில் அபார ஆற்றல். காட்டுச் செடியாய், கற்பூர புத்தியாய் கல்வியை பற்றிக் கொண்டான்.

பின், 5 கி.மீ., தூரத்தில் இருந்த அரசு மேல்நிலைபள்ளியில் படித்து, பிளஸ் 2வில் பள்ளி முதலிடம் பெற்றான். கவுன்சிலிங்கில் பி.இ., கணிப்பொறி கிடைத்து, நல்ல மதிப்பெண்ணுடன் முடித்து - எம்.பி.ஏ., வும் முடித்து விட்டான். முடித்த கையோடு அமெரிக்காவில் வேலையும் கிடைக்க, தயங்காமல் ஏற்றுக் கொண்டான். கை நிறைய சம்பளம்; ஆனாலும், பிறந்த மண்ணை மறக்காதவன். அமரேசன், இப்போது சுருக்கமாக அமர் ஆகி விட்டான்.

தோட்டத்து வேப்ப மரத்தடியில், மூன்று நாற்காலிகள் போடப்பட்டு, தலைவர், அமர் அவன் நண்பன் சிவாவும் வசதியாய் அமர்ந்து கொண்டனர்.
''ஏதாவது முக்கியமான விஷயமா தம்பி?'' என்று கேட்டார் தலைவர்.
''ஆமாங்க சார்... நீங்க உதவி செய்தாத்தான் இது முடியும்.''
''என்ன விஷயம்?''

அமர், தன் நண்பனிடமிருந்து, 'லேப் - டாப்'பை வாங்கி உயிர்பித்தான். அதில் தோன்றிய சில இடங்களை காட்டி பேசத் துவங்கினான்.
அமர் பேச பேச, தலைவரின் முகம் மாறத் துவங்கியது.
''இதுல நான் எப்படி...''

''உங்க சப்போர்ட்டும் எனக்கு அவசியம் தேவை; இது மட்டும் நடந்துச்சுன்னா கண்டிப்பா, இதுல உங்களுக்கும் ஒரு பங்கு உண்டு,'' என்றான். இதைக் கேட்டதும் தலைவர் முகம் மலர்ந்தார்.

அடுத்த நாளிலிருந்து அமரும், தலைவரும், தலைவரின் காரில் ஒன்றாக செல்வது அல்லது அமரின் பைக்கில் இருவரும் செல்வது என, செவ்வந்திபுரம் ஊராட்சி மக்களின் கண்களில் அடிக்கடி தென்பட்டனர்.

சென்னை மெயின் ரோட்டிலிருந்து, 2 கி.மீ., உள்ளடங்கியிருந்த செவ்வந்திபுரம் ஊராட்சியில், ஐஸ்வர்யம் பிரமோட்டர்ஸ் மனைப்பிரிவு அலுவலகம் இருந்தது. மூன்று வித மனைப்பிரிவுகள். சில்வர் சிட்டி, கோல்டன் சிட்டி மற்றும் டைமண்ட் சிட்டி என, மூன்றுமே, ஊர் உள்ளே வரும் தார்சாலையை ஒட்டியே அமைந்திருந்தது.
செம்மண் எங்கிருந்தோ கொண்டுவரப்பட்டு கொட்டப்பட்டு மனைகள் கலர்புல்லாக காட்சியளித்தது. அமரும், தலைவரும் அனைத்து பகுதிகளையும் சுற்றி பார்த்தனர்.

தலைவரும், அமரும் ஒன்றாக சுற்றுவது, ஐஸ்வர்யம் பிரமோட்டர்சின் அலுவலகத்துக்கு அடிக்கடி செல்வது என இருப்பதைப் பார்த்த ஊர் மக்கள் மெல்ல கிசுகிசுக்க ஆரம்பித்தனர். அதில், ஒருவன், 'நான் தோட்டத்தில் வேலை செஞ்சுகிட்டிருந்ததை பாக்காமலேயே... தலைவரும், அமரும் இடம் வாங்குறதப் பத்தி பேசிக்கிட்டாங்க. அது மட்டும் நல்லபடியா முடிஞ்சிட்டா தலைவருக்கும், ஒரு பங்கு உண்டுன்னு தம்பி சொன்னத, என் ரெண்டு காதால கேட்டேன்' சாட்சியாகவே மாறினான்.

ஊர் நம்பியது உண்மைதான். சொன்னவனும் பொய்காரன் கிடையாது. அமரேசனும் அமெரிக்க பணத்தை மூட்டை கட்டி வைத்திருப்பான். தலைவரும் அதிகாரத்தை பயன்படுத்தி வேண்டியதை முடித்துக் கொடுத்தால், அவருக்கு ஒருபங்கு உண்டு. லாஜிக் சரியாகத்தான் இருக்கிறது. பார்ப்போம்; எப்படியும் விஷயம் வெளியே வந்துதான் ஆக வேண்டும். தன் சுய லாபத்துக்காக தலைவர், ஒரு சிறுபயலோடு சேர்ந்து சுற்றிக்கொண்டு இருப்பது முறையா?

ஐஸ்வர்யம் பிரமோட்டர்ஸ் அலுவலக அறை.
மேனேஜர் எதிரில், தலைவரும், அமரேசனும் அமர்ந்திருந்தனர்.
''சார், உங்க ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில உங்க ஆளுங்ககிட்டதான் நிலம் வாங்கி பிளாட் போட்டிருக்கோம். அதுக்காக எல்லாத்தையும் திருப்பி கேட்டா எப்படி?'' என்றார் மேனேஜர்.

''நீங்க சும்மா தர வேணாம்; நீங்க எவ்வளவு விலை கொடுத்து வாங்கினீங்களோ அதையும், இடத்தை சீரமைக்க ஆன செலவு, ரெஜிஸ்ட்ரேஷன் செலவுன்னு நீங்க செலவு செஞ்ச பணத்தையும் சேத்து வாங்கிக்குங்க. உங்க எல்லாருடைய உழைப்பும் இதுல இருக்கு. மொத்த தொகையில பத்து பர்சன்ட் கூட தர்றோம்; மொத்த இடத்தையும் கொடுக்கணும்,''என்றான் அமர்.

''என்ன சார்... ரெஜிஸ்ட்ரேஷன் முடிஞ்சி விளம்பரமும் கொடுத்தாச்சு. ஏற்கனவே, பனிரெண்டு பிளாட், போன்லயே, 'புக்' ஆயிடுச்சு. சேர்மன் அடுத்தவாரம், ஐதராபாத்லேர்ந்து வந்துட்டார்னா திறப்பு விழா செய்திடுவோம். இப்ப வந்து இப்படி சொன்னா என்ன செய்றது,'' என்றார் மேனேஜர்.

''இங்க பாருங்க... உங்களுக்கு தமிழகம் முழுக்க இந்த ரியல் எஸ்டேட் பிசினஸ் இருக்கு; தம்பிக்கு இதுதான் சொந்த ஊரு. சரி நாமும், இந்த பிசினஸ் துவங்கி பார்த்தா என்னன்னுதான் மொத்தமா உங்ககிட்ட விலைக்கு கேட்கிறோம். இதனால், உங்களுக்கு ஒண்ணும் நஷ்டமில்ல. தம்பி உங்ககிட்ட எல்லாம் தெளிவா சொல்லிடுச்சில்ல கொடுத்திட்டு போங்க,'' என்றார் நிதானமாக தலைவர்.

த்டரும்.....




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon 20 Oct 2014 - 0:53

'சார்... நான் சேர்மன்கிட்ட பேசணும்.''

''தாராளமா! இன்னொன்னும் சொல்லுறேன். நாளைக்கு நீங்க வேற பார்ட்டிக்கே பிளாட் வித்தாலும், அவன் வீடு கட்டினாலும், கம்பெனி கட்டினாலும், எங்க ஊராட்சிதான் அவனுக்கு, இ.பி., மற்றும், வாட்டர் சப்ளைக்கு அனுமதி கொடுக்கணும்; மக்கள் எதிர்ப்பு தெரிவிச்சா ரொம்ப சிரமமாயிடும். கொஞ்சம் ஞாபகம் வச்சிக்குங்க; ரெண்டு நாள்ல தகவல் சொல்லுங்க; நாங்க கிளம்பறோம்.''

தலைவரும், அமரும் எழுந்தனர்.
மேனேஜர் தெளிவாக எடுத்துச் சொல்லிவிட்டார் சேர்மனிடம்.
''ஆமாம் சார்... ரெஜிஸ்ட்ரேஷன் செலவு, விளம்பர செலவு, நிலத்த லெவல் செய்த செலவு, எல்லாத்தையும் கொடுத்திடறாங்களாம்.''

''இதனால், நமக்கு பெரிய லாபம் இல்லையே!''
''உண்மைதான் சார். பிராக்டிக்கலா பாத்தா, நாம இந்த ஊர் விவசாயிகளிடம் வாங்கின முப்பது ஏக்கர் நிலத்த கூறுபோட்டு வச்சிருக்கோம். பாதி இடம் வேகமா ஓடிடும். மீதி இடம் பிட்டு பிட்டா இழுபறியாதான் போவும். மார்க்கெட் ரேட் வேற டவுன் ஆயிருக்கு.

''பார்ட்டி நம்ம பர்சேஸ் ரேட்டுக்கு கூட, 10 சதவீதம் தர்றதா சொல்றாங்க. அதுவே, ஐம்பது லட்சத்து கிட்ட வந்துடும். லோக்கல் பார்ட்டிங்ககிட்ட பிரச்னை வந்தா நாளைக்கு அடுத்தவங்கள வாங்கவும் விடமாட்டானுங்க.''
''என்ன செய்யலாம்?''

''பெரிய லாபத்துக்கு காத்திருக்கறதை விட, சின்ன லாபத்துக்கு இடத்த தந்துட்டு, அந்த முதலீட சென்னை ஹைவேஸ் பக்கத்துல ஒரு இடம் வருது; அங்க போட்டுரலாம்.''
நிலம் கை மாறியது.ஊரே ஆச்சரியப்பட்டு நின்றது. சில்வர் சிட்டி, கோல்டன் சிட்டி, டைமண்ட் சிட்டி மூன்றுமே, அமரேசன் பேருக்கு மாறியது.

சிலர் பொறாமைப் படவும் செய்தனர். 'சும்மாவா அமெரிக்கா போனான். நல்லா சம்பாதிச்சு, ஊரையே வளைச்சுப் போட்டுட்டான். தலைவருக்கும் ஒரு கமிஷன் போயிருக்கும்; அவர் தான கூடவே சுத்தினாரு...' என்று பேசினர்.
காலை, 8:00 மணி -

தலைவர் வீட்டுக்கு பின்பக்கமுள்ள மாமர தோட்டத்தில், ஐஸ்வர்யம் பிரமோட்டர்சுக்கு நிலத்தை விற்ற பதினெட்டு பேரும் அமர்ந்திருந்தனர். 'எதற்காக தலைவர் அவசரமாக வரச் சொன்னார்... நம்ம நிலத்த அந்த அமரேசன் வாங்கியத பெருமையாக சொல்லப் போறாரா...' என்று, தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.
சிறிது நேரத்தில் தலைவர், அமர் மற்றும் நண்பன் சிவா மூவரும் வந்தனர்.

''எல்லாரும் வந்திட்டீங்களா...ஒரு முக்கியமான விஷயம் பேசத்தான் உங்கள வரச் சொன்னேன்; எல்லாம் உங்க நிலத்த பத்தின விஷயம் தான்,'' என்றார் தலைவர்.

''அமரு தம்பி அந்த பிளாட்டையெல்லாம் மொத்தமா வாங்கியாச்சுன்னு தெரியும். அது ஒரு வகைல சந்தோஷம் தான். யாரோ ஒருத்தன் கையில நம்ம நிலம் இருக்கிறதுக்கு பதிலா, நம்ம ஊர் தம்பிகிட்ட நிலம் இருக்கிறது பரவாயில்லைங்க,''என்றார் ஒருவர்.

''என்ன பிரயோஜனம்... அப்படியும் யாராவது வாங்க தான போறாங்க,''என்றார் இன்னொருவர்.
திடீரென்று, ''உங்க இடம் உங்களுக்கு வேணுமா?''என்று கேட்டான் அமர்.
இதைக் கேட்டதும் எல்லாருடைய முகங்களிலும் பளீரென்று ஒரு மகிழ்ச்சி தென்பட்டது.
''சொல்லுங்கப்பா... வேணும்ன்னாலும் சொல்லுங்க; வேணாம்ன்னாலும் சொல்லுங்க,'' என்றார் தலைவர்.

எல்லாரும் ஆனந்த அதிர்ச்சியோடு, கையை உயர்த்தினர்.
'கொடுங்க தம்பி வாங்கிக்கிறோம்...' என்றனர் கோரசாக.
''தம்பி... இடத்தை கொடுத்திட்டோமே தவிர, அந்த வழியா போறப்ப எல்லாம், நெஞ்சு, 'பகீர்'ன்னு இருக்கும். பச்சையா விளைஞ்ச இடம், இப்ப ப்ளாட் போட்டு காலியா கிடக்கு,'' என்று ஒருவர் கூறினார்.
இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே, 'லேப் - டாப்'பை உயிர்பித்து, மேஜையின் மீது வைத்து அவர்களை பார்க்க சொன்னான் அமர்.

திரையில் - மாந்தோப்பும், தென்னந்தோப்பும்.
'அட... இது, நம்ம ராமநாதன் தோப்பு!'
அடுத்து - வாழையும், நெல்லும்.
'இது முருகேசன் இடம்; படத்துல இன்னும் அழகா இருக்கு...'
வரிசையாக இதே ரீதியில் படத்தை காட்டி, ''இப்ப உங்க இடம் எப்படி இருக்குன்னு பாருங்க?'' என, 'கிளிக்' செய்தான் அமர்.

கலர் கொடிகளுடன் சில்வர் சிட்டி, கோல்டன் சிட்டி, டைமண்ட் சிட்டியின் ப்ளாட்டுகள்.
''இதையெல்லாம் படமா எடுத்து அனுப்பியது என் நண்பன் சிவா. பக்கத்து ஊருல பாலிடெக்னிக் கல்லூரியில விரிவுரையாளரா இருக்கான்.

''அமெரிக்காவில் இருந்து இதை கேள்விப்பட்டு எனக்கு அதிர்ச்சியா இருந்துச்சு. ராமநாதன் அண்ணே... சின்ன வயசுல நாங்கள்லாம் உங்க தோப்புல மாங்கா பறிக்க வருவோம். நீங்க துரத்திட்டு வருவீங்களே ஞாபகம் இருக்கா... முருகேசன் அண்ணன் வாழைத் தோப்பு பம்பு செட்டுல தினமும் குளிப்போம்.

என்னை மாதிரி நிறைய பேருக்கு அன்று அந்த சந்தோஷம் கிடைச்சது. அது, இன்றைய பிள்ளைகளுக்கு கிடைக்காதா அண்ணே... இன்னைக்கு பச்சை பச்சையா உயிர் மரங்கள் இருந்த இடத்துல, பல வருஷம் கழிச்சு, கான்கிரீட் மரங்களா பில்டிங் நிக்கும். ஊரோட அழகு மட்டுமில்ல சுத்தமான காற்றும் போய்டும்ண்ணே,''என்றான் அமர்.

அனைவரும் விக்கித்து அமர்ந்திருக்க, ''நான் எல்லா இடத்தையும் வாங்கினதும், ஏதோ நான் கோடீஸ்வரன்னு நினைச்சுட்டீங்க; அமெரிக்காவிலும் உழைச்சா தான் காசு. என் ஒருத்தனால இதை வாங்கியிருக்க முடியாது,'' என்ற அமர், 'லேப் - டாப்'பில் இரண்டு வெள்ளைக்கார இளைஞர்களின் படங்களை காட்டினான்.

''என் கூட வேலை செய்யுற நண்பர்கள் இவங்க. இயற்கையை நேசிக்குறவங்க; நம்ம ஊரு நிலைமைய படமா காட்டினதும் அதிர்ச்சியாயிட்டாங்க. உதவி செய்ய ஒத்துக்கிட்டாங்க. வட்டியில்லா கடன்; திரும்ப தரணும். அது உங்க கையில தான் இருக்கு.''
'இப்போ... பணம் இல்லையே தம்பி...' என்றனர்.

''இப்போ தரலன்னாலும் பரவாயில்ல. உங்க நிலத்த எடுத்து விவசாயம் செய்ய ஆரம்பிங்க. டவுன்ல விவசாய அதிகாரிங்ககிட்டயும் பேசிட்டேன். அடுத்த வாரம் வருவாங்க. நவீன விவசாய முறைகளை சொல்லி தந்து, அதிக வருமானம் பெற சொல்லி தருவாங்க; ஒரு சில வருஷத்துல நீங்க கடனை அடைச்சிட்ட பிறகு, உங்க நிலம் உங்களுக்கு சொந்தமாகி, பத்திரம் கைக்கு வந்துடும். வாங்கின பணத்தை மட்டும் கொடுத்தா போதும். இடத்தை மீட்க கூடுதலா கொடுத்த கமிஷன், என்னுடைய பங்கா இருக்கட்டும்.

''இதுல தலைவரோட பங்கு மிக முக்கியமானது; அந்த ரியல் எஸ்டேட்காரனை சமாளிக்க, தலைவரோட பலமும், செல்வாக்கும் தேவைப்பட்டது. அவருக்கு நன்றி சொல்லியே ஆகணும்,'' என்றான்.

அப்போதுதான் எல்லாருக்கும் புரிந்தது. தலைவரின் பங்கு எது என்று!
எல்லாரும் நெஞ்சம் நெகிழ்ந்தனர்.
''தம்பி... உங்களுக்கு இன்னொரு வேலையும் இருக்கு,'' என்றார் தலைவர்.
செவ்வந்திபுரம் அரசு உயர்நிலைப் பள்ளி. இறைவணக்க கூட்டம் -

மாணவர்கள் முன்னிலையில் தலைவர், தலைமை ஆசிரியர், அமரேசன் நின்றிருக்க, மாணவர்களின் பின்புறம் பெற்றோர் நின்றிருக்க, தேசியக் கொடி ஏற்ற அமரேசன் பணிக்கப்பட்டான். தேசியக் கொடி ஏற்றப்பட்டு எல்லாரும் கொடி வணக்கம் சொல்ல, புது ரத்தம் பாய்ந்தது போன்று இருந்தது.

''ஐந்நூறுக்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை பெரும் முயற்சியால் ஒருங்கிணைந்த இந்தியாவாக மாற்றிய சர்தார் வல்லபாய் படேல் போல, துண்டு துண்டாக பிரிந்து போக இருந்த நம் நிலங்களை மீட்டுக் கொடுத்த அமரேசன், நம் கிராம வரலாற்றின் நாயகன். இப்பள்ளியின் முன்னாள் முதல் மாணவர்.

யாருமே செய்ய இயலாத காரியத்தை தனியாளாக முடித்துள்ளார். நம் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வோம்,'' என்று தலைமை ஆசிரியர் சொன்னதும், கரகோஷம் விண்ணைப் பிளந்தது.கைதட்டிய விவசாயிகளின் கண்களில், கற்பனையாய் காட்சி விரிந்தது.வண்ண கொடிகள் அகற்றப்பட்டு, விவசாயம் துவங்கி அதில், மா, பலா, வாழை போன்ற மரங்கள் நடப்பட்டு பூத்து குலுங்க துவங்கியது.

ஜார்ஜ் வில்லியம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013

Postவிமந்தனி Mon 20 Oct 2014 - 1:09

சூப்பருங்க சூப்பருங்க



கான்கிரீட் மரங்கள்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகான்கிரீட் மரங்கள்! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கான்கிரீட் மரங்கள்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon 20 Oct 2014 - 1:32

விமந்தனி wrote:சூப்பருங்க சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1097889

ஆமாம் விமந்தினி.....இது போல ஊருக்கு ஒருவர் வேண்டும்................இல்லாவிட்டால் நம் சாப்பாட்டில் மண் விழும் காலம் வெகு தூரத்தில் இல்லை புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Mon 20 Oct 2014 - 9:53

கான்கிரீட் மரங்கள்! 3838410834 கான்கிரீட் மரங்கள்! 3838410834 கான்கிரீட் மரங்கள்! 3838410834

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக