ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» 10 மில்லியன் டாலர் மதிப்பிலான சாமி சிலைகள் கடத்தல்: இந்தியாவிடம் ஒப்படைத்த அமெரிக்கா
by ayyasamy ram Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரயில் கொள்ளை ஜாக்கிரதை!

Go down

ரயில் கொள்ளை ஜாக்கிரதை! Empty ரயில் கொள்ளை ஜாக்கிரதை!

Post by தமிழ்நேசன்1981 Sat Oct 18, 2014 7:14 pm

ரயில் கொள்ளை ஜாக்கிரதை! P6

'இது பிரீமியம் சிறப்பு ரயில். முன்பதிவு நேரத்தில் கட்டணம் அதிகமாகும்’ - இப்படி, கண்ணுக்குத் தெரியாத சின்ன எழுத்துகளில் ஆங்கிலத்தில் எழுதி ஒரு ஸ்டார் குறியீடு வைக்கப்பட்டிருக்கிறது ரயில்வே ஆன்லைன் முன்பதிவு வெப்சைட்டான ஐ.ஆர்.சி.டி.சி-யில். 'அட... தீபாவளிக்கு முதல் நாள் டிக்கெட் நிறைய இருக்கே...’ என்ற சந்தோஷத்துடன் நீங்கள் முன்பதிவு செய்தால்... விமானத்தில் செல்வதைவிட கூடுதலான பணம் உங்கள் கிரெடிட் கார்டில் இருந்து பறிக்கப்படும். மத்திய பி.ஜே.பி அரசால் அறிமுகப்படுத்தப் பட்டிருக்கிறது இந்தப் புதிய திட்டம்!


வழக்கமாக, பண்டிகை காலங்களில் பயணிகள் நெரிசலை சமாளிக்க சிறப்பு ரயில்களை வழக்கமான கட்டணத்தில் இயக்குவார்கள். இந்தமுறை அந்த சிஸ்டத்தை மாற்றிவிட்டு 'பிரீமியம் ரயில்கள்’ என்கிற பெயரில் கூடுதல் கட்டணத்தில் 96 ரயில்களை இயக்குவதாக அறிவித்துள்ளது ரயில்வே துறை. இவற்றில் ஐந்து ரயில்கள் தமிழகத்தில் இயக்கப்படுகின்றன. இதுதவிர இனி எப்போதும் பிரீமியம் ரயில்கள் ஒவ்வொரு வழித்தடத்திலும் இயக்கப்படும் என்றும் மத்திய ரயில்வே அமைச்சர் சொல்கிறார்

ரயில் கொள்ளை ஜாக்கிரதை! P7a

சேலத்தைச் சேர்ந்த ரயில் பயணி குப்புராஜ், ''ஆயுத பூஜைக்கு முந்தின நாள் எனது நண்பர் ஒருவர் வந்தார். நெல்லை டு சென்னைக்கு மூன்றடுக்கு ஏ.சி-யில் டிக்கெட் புக்கிங் செய்யச் சொன்னார். பிரீமியம் ரயிலில் மட்டும் இடம் இருந்ததால் நான் அதில் புக்கிங் செய்தேன். டிக்கெட் புக்கிங் செய்யும்போது ஒரு டிக்கெட் கட்டணமாக விலை 1,250 ரூபாய் என காட்டியது. நான் இரண்டு டிக்கெட் போட்டேன். இரண்டுக்கும் சேர்த்து 2,500 ரூபாய்தான் எடுத்திருக்க வேண்டும். ஆனால், 6,600 ரூபாய் எடுக்கப்பட்டு இருந்தது. இதைப் பார்த்ததும் ஷாக் ஆகிவிட்டது. உடனே ரயில்வே துறைக்கு போன் செய்து கேட்டேன். 'நீங்க ரூல்ஸை படிக்கவில்லையா? அதில் தெளிவாகப் போட்டிருக்கோமே... போட்டது போட்டதுதான். இந்த டிக்கெட்டை கேன்சல் செய்யவும் முடியாது’ என்று சொன்னார்கள். இது பகல் கொள்ளையாக இருக்கிறதே என்று அவர்களிடம் சத்தம் போட்டேன். 'இதையெல்லாம் பிரதமர் மோடியிடம் சொல்லுங்கள். நாங்கள் சாதாரண ஊழியர்கள்தான். ஏதோ நாங்க உங்க பணத்தை வீட்டுக்கு எடுத்துட்டுப் போற மாதிரி பேசுறீங்க...’ என்றார். இதை நான் டிக்கெட் போடச் சொன்ன நண்பரிடம் சொன்னபோது, சண்டைக்கு வந்துவிட்டார். அவரிடம் எவ்வளவோ சொல்லியும், 'ரெண்டு டிக்கெட்டுக்கும் ரெண்டாயிரம் ரூபாய்க்கு மேல தர முடியாது’ என்று சொல்லிவிட்டார். என்ன செய்யுறது சொல்லுங்க...?'' என்று வேதனையோடு கேட்கிறார்.

பிரீமியம் ரயில் கட்டண உயர்வு பற்றி எஸ்.ஆர்.எம்.யூ பொதுச் செயலாளர் என்.கண்ணையாவிடம் பேசினோம். ''தீபாவளி சமயத்தில் சில ஆம்னி பஸ்காரங்கதான் இப்படி செய்வாங்க. அவங்களையே மிஞ்சும் வகையில் ரயில்வே இந்த பிரீமியம் ரயில் திட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறது. ரயில் கிளம்பும் நேரத்தையும் பயணிகளின் தேவையையும், காலியிடங்களையும் அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்ட புரோகிராம் உதவியுடன் கம்ப்யூட்டரே கட்டணத்தை நிர்ணயம் செய்யும். இதற்கு, 'டைனமிக் கட்டணம் சிஸ்டம்’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். தட்டுப்பாடுக்கு தகுந்தாற்போல் இந்தக் கட்டணம் 200 சதவிகிதம் வரை உயருமாம். இதுமட்டுமல்ல... ஏற்கெனவே ஒவ்வொரு ரயிலிலும் உள்ள மொத்த பயணிகளின் இருக்கைகளில் 50 சதவிகித இருக்கைகள் தட்கல் என்கிற பெயரில் கூடுதல் கட்டணத்தில் விற்கப்படுகின்றன. தீபாவளி நேரத்தில் தட்கல் டிக்கெட்டிலும் பாதியை பிரீமியம் தட்கல் என்று விற்கிறார்கள். இதிலும் பிரீமியம் ரயிலைப்போல டிக்கெட் தட்டுப்பாடுக்கு ஏற்ப கட்டணம் உயரும். இப்படியே போனால் எதிர்காலத்தில் சாதாரண மக்களுக்கு ரயில் பயணம் என்பதே கனவாகிவிடும்'' என்று சொன்னார்.

ராஜ்யசபா எம்.பி-யான திருச்சி சிவா, ''அரசின் சேவை துறைகள் என்கிற வரிசையில் ரயில்வே வருகிறது. ஏழை, எளிய நடுத்தர மக்கள் வசதி, பாதுகாப்பையும் தாண்டி, செலவு குறைவானது என்பதால்தான் ரயிலைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால், ஒரு முக்கியமான சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி பல மடங்கு கூடுதல் கட்டணம் என்கிற வகையில் ஏழை மக்களின் வயிற்றில் அடிப்பது தவறு. அரசைப் பொறுத்தவரையில், லாபம் ஈட்ட எத்தனையோ வழிகள் இருக்கின்றன. இந்த கட்டண உயர்வை உடனே வாபஸ்பெற வேண்டும். இதுபற்றி மத்திய அரசிடம் நிச்சயமாகப் பேசுவேன்'' என்றார்.

தமிழகத்தில் அ.தி.மு.க எம்.பி-க்கள் இருவர், மத்திய ரயில்வே நிலைக்குழுவில் உறுப்பினர்கள். ஒருவர், மத்திய சென்னை நாடாளுமன்ற எம்.பி-யான எஸ்.ஆர். விஜயகுமார். இன்னொருவர், திருச்சியைச் சேர்ந்த ராஜ்யசபா எம்.பி-யான ரத்தினவேலு. இருவரிடமும் நாம் பேசினோம். இருவரும் சொன்ன பதில் இதுதான்: ''ரயில்வே போர்டு மீட்டிங் டெல்லியில் நடக்கிறது. பிரீமியம் ரயில் கட்டண உயர்வு விஷயத்தில் தமிழக மக்களின் கடும் அதிருப்தியை நாங்கள் எடுத்துச் சொல்ல இருக்கிறோம். நிச்சயம் நல்ல தீர்வு கிடைக்கும்!''

வாழ்க்கையில் போரடிக்காத விஷயங்களில் ரயில் பயணமும் ஒன்று என்பார்கள். அதை திகிலடிக்கும் பயணமாக மத்திய அரசு மாற்றிவிடக் கூடாது!

விகடன்

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» ஹலோ ஜாக்கிரதை.... போலி சாமியார் ஜாக்கிரதை...
» திருப்பதி ரெயிலில் பயணிகளிடம் 50 சவரன் நகை கொள்ளை; கத்திமுனையில் கொள்ளை கும்பல் அட்டூழியம்
» பீகாரில் கொள்ளை கும்பல் அட்டூழியம் துப்பாக்கியால் சுட்டு பயணிகளிடம் கொள்ளை மோதலில் 25 பேர் படுகாயம்
» காதில் ஹெட் போனுடன் ரயில் தண்டவாளத்தில் நடந்து போனவர் ரயில் மோதி பலி!
» புறநகர் மின்சார ரயில் சேவையைத் தொடங்க ரயில் பயணிகள் சங்கத்தினர் வலியுறுத்தல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum