ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீதியை மதிக்காத தமிழக நிர்வாகம்!

5 posters

Go down

நீதியை மதிக்காத தமிழக நிர்வாகம்! Empty நீதியை மதிக்காத தமிழக நிர்வாகம்!

Post by தமிழ்நேசன்1981 Sat Oct 18, 2014 7:06 pm

நீதியை மதிக்காத தமிழக நிர்வாகம்!

ஒரு மாநிலத்தின் முதல்வரை ஊழல் வழக்கில் தண்டித்துச் சிறைக்கு அனுப்பியது... நூறு கோடி ரூபாய் அபராதம் விதித்தது... சொத்துகளைப் பறிமுதல் செய்யச் சொன்னது... என்று ஜெயலலிதாவுக்கு எதிராக நீதிபதி குன்ஹா வழங்கிய தீர்ப்பு, ஒட்டுமொத்த இந்தியாவின் கவனத்தை பரப்பன அக்ரஹாரா சிறையின் பக்கம் திருப்பியுள்ளது.

நீதியை மதிக்காத தமிழக நிர்வாகம்! P12

மொத்த தண்டனை எவ்வளவு?

குன்ஹா வழங்கிய தீர்ப்பில் கவனத்துக்கு வராத வேறு பல அம்சங்களும் இருக்கின்றன. நான்கு ஆண்டுகள் சிறையும் 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்தார் நீதிபதி. அந்த அபராதத்தைச் செலுத்தத் தவறினால் கூடுதலாக ஓர் ஆண்டுச் சிறைத் தண்டனையையும் அனுபவிக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். கூட்டுச்சதியில் ஈடுபட்ட குற்றத்துக்காக, கூடுதலாக ஜெயலலிதாவுக்கு 6 மாத சிறைத் தண்டனையும் ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்துள்ளார். அதன்படி பார்த்தால் ஜெயலலிதாவுக்கு இந்த வழக்கில் விதிக்கப்பட்டுள்ள ஒட்டு மொத்த சிறைத் தண்டனை நாலரை ஆண்டுகள். அபராதம் நூறு கோடியே ஒரு லட்சம் ரூபாய். அந்த நூறு கோடி ரூபாய் அபராதத்தைச் செலுத்தத் தவறினால், அதற்கு இன்னும் கூடுதலாக ஓர் ஆண்டு சிறையில் இருக்க வேண்டும். ஒரு லட்சம் ரூபாய் அபராதத்தைச் செலுத்தத் தவறினால், அதற்காகக் கூடுதலாக 6 மாதம் சிறையில் இருக்க வேண்டும். இதுதான் தண்டனையின் மொத்த விவரம்

அதுபோல, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு ஊழல் தடுப்புச் சட்டப்படி நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 10 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த அபராதத்தைக் கட்டத் தவறினால், கூடுதலாக ஆறு மாதச் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார் குன்ஹா. இது தவிர்த்து, கூட்டுச் சதியில் ஈடுபட்ட குற்றத்துக்காக இந்த மூவருக்கும் ஆறு மாதச் சிறைத் தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த அபராதத்தைச் செலுத்தத் தவறினால், அதற்காகக் கூடுதலாக ஆறுமாதங்கள் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

அபராதத் தொகை எப்படிச் செலுத்துவது?
நீதியை மதிக்காத தமிழக நிர்வாகம்! P12a
அபராதம் குறித்து நீதிபதி தனது தீர்ப்பில், ''எந்தெந்த வங்கிகளில் இவர்களுக்கு நிரந்தரக் கணக்கு மற்றும் பணம் கையிருப்பு இருக்கிறதோ அந்த வங்கிகளில் இருந்து எடுத்து அபராதத் தொகைக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். அந்தத் தொகையும் அபராதத்துக்குப் போதவில்லை என்றால், இவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ள தங்கம் மற்றும் வைர ஆபரணங்களை (இவர்களால் கணக்கு காட்ட முடிந்த 7,080 கிராம் தங்கம் மற்றும் வைர ஆபரணங்களைத் தவிர்த்து) ரிசர்வ் வங்கி அல்லது ஸ்டேட் வங்கி அல்லது பொதுமக்களிடம் ஏலம்விட்டு அதில் கிடைக்கும் தொகையையும் அபராதத்துக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

இந்த வழக்கில் இணைக்கப்பட்டுள்ள அசையாச் சொத்துக்களான நிறுவனங்கள் மற்றும் நிலங்களை மாநில அரசாங்கம் எடுத்துக்கொள்ள வேண்டும். அபராதத் தொகை அல்லாமல், தனியாக ரூபாய் ஐந்து கோடியை இந்த வழக்கை நடத்திய கர்நாடக அரசாங்கத்துக்கு வழங்க வேண்டும். மேலும், இந்தத் தீர்ப்பின் நகல், உடனடியாக தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவருக்கும் தமிழக ஆளுநருக்கும் கொடுக்கப்பட வேண்டும். அதை ஃபேக்ஸ், கூரியர் என்று எந்த வகையில் வேண்டுமானாலும் அனுப்பலாம்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

என்ன செய்கிறது லஞ்ச ஒழிப்புத் துறை?

''ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு எதிராக நீதிபதி குன்ஹா வழங்கிய இந்தத் தீர்ப்பில், சிறைத் தண்டனை மட்டும்தான் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதுதவிர்த்து, இவர்களுக்கு விதிக்கப்பட்ட மற்ற தண்டனைகளில் எதுவும் இதுவரை நிறைவேறவில்லை. நிறைவேற்றுவதற்கான வேலைகளை அரசு இயந்திரம் தொடங்கவே இல்லை. அபராதம் இதுவரைக் கட்டப்படவில்லை. அசையாச் சொத்துகளை மாநில அரசாங்கம் இன்னும் கையகப்படுத்தவில்லை'' என்று சிலர் சொல்ல ஆரம்பித்துள்ளார்கள்.

நீதிமன்றம் வழங்கிய உத்தரவை யார் நிறைவேற்ற வேண்டும்? எந்தக் காலத்துக்குள் நிறைவேற்ற வேண்டும்? அதில் இத்தனை தாமதம் ஏன்? என்பது பற்றி மூத்த வழக்கறிஞர் கே.எம்.விஜயனிடம் கேட்டோம்.

''நீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கிவிட்டால், அந்தத் தீர்ப்புத் தானாக நடைமுறைக்கு வந்துவிடாது. சம்பந்தப்பட்டவர்கள்தான் அதை நடைமுறைப்படுத்த வேண்டும். நீதிபதி குன்ஹா வழங்கிய தீர்ப்பில் மிகத் தெளிவாக, அபராதத்துடன் தண்டனை என்றுதான் குறிப்பிட்டுள்ளார். அபராதம் அல்லது சிறை என்று சொல்லவில்லை. ஜெயலலிதா உள்ளிட்ட குற்றவாளிகளுக்கு சிறைத் தண்டனை நிறைவேற்றப்பட்டுவிட்டது. ஆனால், அவர்கள் இன்னும் அபராதத்தைச் செலுத்தவில்லை. தாமதம்செய்து கொண்டிருக்கிறார்கள். அதற்குக் காரணம், எப்படியும் இந்தத் தீர்ப்புக்கு தடை வாங்கிவிடலாம் என்று அவர்கள் நினைக்கலாம்.

தற்போது நடைமுறையில் இருக்கும் ஊழல் தடுப்புச் சட்டத்தின்படி, ஜெயலலிதாவுக்குத் தண்டனை என்று அறிவிக்கப்பட்ட உடனேயே, பதவி பறிபோகும் என்று இருக்கிறது. அது அனைவருக்கும் தெரியும் என்றாலும், அதையொட்டி செய்ய வேண்டிய அரசாங்க நடைமுறைகளை உடனடியாகச் செய்ய வேண்டும். உதாரணத்துக்கு, ஒரு மாணவனின் தேர்வு எண் பட்டியலில் இடம்பெறவில்லை என்றால், அவன் அந்தத் தேர்வில் தோல்வி அடைந்துவிட்டான் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், அதன்பிறகு அவனுக்குக் கொடுக்கப்பட வேண்டிய மதிப்பெண் சான்றிதழ் உள்ளிட்டவற்றை நடைமுறைப்படி கொடுத்துத்தானே ஆக வேண்டும். அதுபோலத்தான் இதுவும். ஜெயலலிதா குற்றவாளி என்று தீர்ப்பு வந்த உடனேயே, சட்டப்பேரவையில் அதை முறையாக அறிவித்து, சட்டப்பேரவைச் செயலாளர் மூலம் தேர்தல் ஆணையம், மாநில ஆளுநர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அனைவருக்கும் முறைப்படி தகவல் அனுப்பியிருக்க வேண்டும். ஆனால், அ.தி.மு.க-வின் ஆட்சி நடப்பதால், அரசு இயந்திரத்தை இயக்கும் அதிகாரிகள், இதில் எந்த நடைமுறையையும் கடைப்பிடிக்காமல் இருக்கிறார்கள். அதுபோலத்தான் இந்த வழக்கில், இணைக்கப்பட்ட சொத்துகளை மாநில அரசாங்கம் கையகப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டு உள்ளார். ஆனால், அதற்காக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. இதுவே, இவர்களுக்கு எதிரானவர்களுக்கு எதிராக இப்படி ஒரு தீர்ப்பு வந்திருந்தால், இந்நேரம் இந்த நடவடிக்கைகள் எவ்வளவு வேகமாக எடுக்கப்பட்டு இருக்கும் என்பதை நாம் புரிந்துகொள்ளலாம்'' என்றார்.

''பணி நீட்டிப்பு பெற்றவர் எப்படி நடவடிக்கை எடுப்பார்?''

''இந்த நடவடிக்கைகள் அனைத்தையும் இந்த வழக்கை தாக்கல்செய்த தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறைதான் செய்ய வேண்டும். அ.தி.மு.க ஆளும் கட்சியாக இருக்கும்போது, அதுவும் ஜெயலலிதாவுக்கு எதிராக எப்படி இத்தகைய நடவடிக்கைகளைச் செய்வார்கள். தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை ஐ.ஜி-யாக இருக்கும் குணசீலன், இதுவரை இந்த வழக்கை மேற்பார்வை செய்து வந்தார். தினமும் பெங்களூரு கோர்ட்டில் இவர்தான் உட்கார்ந்து இருப்பார். இவரது பணிக்காலம் 2013 மே மாதத்துடன் முடிவடைந்துவிட்டது. ஆனாலும் அவருக்கு இரண்டு ஆண்டுகள் பணி நீட்டிப்புக் கொடுத்து இந்தப் பதவியில் வைத்துள்ளார்கள். அப்படிப்பட்டவர் எப்படி நடவடிக்கை எடுப்பார்?'' என்று கேட்கிறார்கள்.

'கர்நாடகாவில் இருந்து தீர்ப்பு வரவில்லை''

சட்டசபை செயலாளர் ஜமாலுதீனிடம் இதுபற்றி விளக்கம் கேட்டோம். ''கர்நாடகா உயர் நீதிமன்றப் பதிவாளர் அனுப்பிய நபர் நேரில் எங்களை வந்து சந்தித்தது உண்மை. ஆனால், அவர் நீதிபதி மைக்கேல் டி.குன்ஹாவின் தீர்ப்பு நகல் எதையும் கொடுக்கவில்லை. மாறாக, உங்கள் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் தண்டனை பெற்றுள்ளார். அதை உங்களுக்குத் தெரியப்படுத்துகிறோம் என்று சொன்னார்கள். இதன் அடிப்படையில், தமிழக சட்டசபை இணையதளம் உள்ளிட்ட அனைத்திலும் அதை நடைமுறைப்படுத்திவிட்டோம். மற்றபடி உரிய தீர்ப்பு நகல் எங்களுக்கு கர்நாடகா நீதிமன்றத்தில் இருந்து வரவில்லை'' என்று முடித்துக்கொண்டார். தமிழக சட்டமன்றச் செயலகம் அனுப்பி வைக்காமலேயே, தேர்தல் ஆணையம் இந்த விஷயத்தை எடுத்து, ஸ்ரீரங்கம் தொகுதி காலி என்று அறிவித்துவிட்டது.
நீதியை மதிக்காத தமிழக நிர்வாகம்! P12b
சொத்துப் பறிப்பு நடவடிக்கைகளை தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை செய்ய வேண்டும். அவர்கள் அந்த நடவடிக்கையை எடுக்கவில்லை.

நீதிபதியின் தீர்ப்பு நகலை கர்நாடக உயர் நீதிமன்றப் பதிவாளர் தமிழக சட்டப்பேரவை செயலாளருக்கு அனுப்பிவிட்டார். ஆனால், வரவில்லை என்கிறார் பதிவாளர்.

ஒரு எம்.எல்.ஏ கைது செய்யப்பட்டால் அனைத்து உறுப்பினர்களுக்கும் அறிவிக்க வேண்டும். அந்தத் தகவல் அறிவிக்கப்படவில்லை.

ஜெயலலிதா வெற்றிபெற்ற ஸ்ரீரங்கம் தொகுதி காலியாக உள்ளது என்று தேர்தல் கமிஷனுக்கு சட்டப்பேரவை செயலகம் சொல்ல வேண்டும். அதிகாரப்பூர்வமாக அப்படி எந்தத் தகவலும் தங்களுக்கு வரவில்லை என்கிறார் தேர்தல் கமிஷனர் பிரவீன்குமார்.

தமிழக சட்டப்பேரவையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஸ்ரீரங்கம் தொகுதியின் எம்.எல்.ஏ-வாக இப்போதும் ஜெயலலிதா இருப்பதாகவே உள்ளது. இணையத்தின் முகப்பு பக்கத்தில் ஜெயலலிதா பதவியேற்பு புகைப்படம் உள்ளது. ஆனால், முதலமைச்சர் என்று ஓ.பன்னீர்செல்வத்தைக் குறிப்பிட்டுள்ளார்கள். தமிழக அரசின் செய்தித் துறை இணையதளத்தில் ஜெயலலிதா பெயர்தான் முதலமைச்சர் என்று உள்ளது.

“தீர்ப்பின் நகலை வாங்க மறுத்தார் சட்டப்பேரவை செயலாளர்”

நீதியை மதிக்காத தமிழக நிர்வாகம்! P12c
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தி.மு.க எம்.எல்.ஏ-வான ஜெ.அன்பழகனிடம் இதுபற்றிக் கேட்டோம்:

''சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்புச் சொன்ன நீதிபதி குன்ஹா தன்னுடைய தீர்ப்பின் இறுதியில், தீர்ப்பின் நகலை ஃபேக்ஸ் அல்லது கூரியர் மூலமாக தமிழக சபாநாயகருக்கும் மாநில ஆளுநருக்கும் அனுப்ப வேண்டும் என்று குறிப்பிட்டு உள்ளார். அதை உடனடியாக நடைமுறைபடுத்திய கர்நாடக உயர் நீதிமன்றப் பதிவாளர், ஓர் ஆளை அனுப்பி தீர்ப்பின் நகலை நேரடியாக சட்டப்பேரவைச் செயலாளரிடம் சேர்த்துவிட்டார். இவர் அதை வாங்கி உள்ளே பூட்டி வைத்துக்கொண்டு தனக்குத் தீர்ப்பின் நகல் வரவில்லை என்று சொல்லிக்கொண்டிருந்தார். இதையடுத்துத்தான் நான் களத்தில் இறங்கினேன். 'சட்டப்பேரவை விதிப்படி ஒரு எம்.எல்.ஏ போலீஸ் நடவடிக்கைக்கு உள்ளானால், அதை முறைப்படியாக அனைத்து எம்.எல்.ஏ-க்களுக்கும் சபாநாயகர் தெரிவிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ வெற்றி பெற்ற தொகுதி காலியாக உள்ளது என்று அறிவிக்க வேண்டும். அதை உடனடியாக செய்ய நடவடிக்கை எடுங்கள்’ என்று அறிவுறுத்தி பதிவுத் தபால் ஒன்றை அனுப்பினேன்.

இதற்கு சட்டப் பேரவைச் செயலாளர் ஜமாலுதீன், 'தனக்கு தீர்ப்பின் நகல் கிடைக்கவில்லை’ என்று பதில் அனுப்பினார். இதையடுத்து நான் எனது வழக்கறிஞரிடம் தீர்ப்பின் நகலை நேரடியாக கொடுத்தனுப்பினேன். அத்துடன் இ மெயிலிலும் தீர்ப்பின் நகலை அனுப்பினேன். என்னுடைய வழக்கறிஞர் பல மணி நேரம் காத்திருந்தும் அவரிடம் இருந்து சட்டப்பேரவைச் செயலாளர் ஜமாலுதீன் தீர்ப்பின் நகலைப் பெற்றுக்கொள்ளவில்லை. அதன்பிறகு, அவருடைய உதவியாளரிடம் கொடுத்துவிட்டு, அவர் பெற்றுக் கொண்டதற்கு அத்தாட்சியாக சீல் போட்டு ஒப்புகை ரசீதும் வாங்கிக்கொண்டோம். ஆனால், அதன்பிறகும் பேரவை விதிமுறைகளை சபாநாயகர் செயல்படுத்தவில்லை. சரி, இவர்கள்தான் இப்படி இருக்கிறார்கள் என்று நினைத்து, தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன்குமாரைத் தொடர்புகொண்டு விவரங்களைச் சொன்னேன். அவர், தனக்கு இந்தியத் தேர்தல் ஆணையத்தில் இருந்து உத்தரவுகள் வரவேண்டும் என்று சொல்லி தட்டிக்கழித்தார். இதையடுத்து தலைமைத் தேர்தல் அதிகாரி, சட்டப்பேரவைச் செயலாளர், சபாநாயகர் என மூன்று பேருக்கும் ஒரு பதிவுத் தபால் அனுப்பி, நீங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், நான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடருவேன் என்று சொல்லி பதிவுத் தபால் அனுப்பினேன்.

அதன்பிறகுதான், பிரவீன்குமார் பத்திரிகையாளர்​களைக் கூட்டி ஸ்ரீரங்கம் தொகுதி ஆறுமாதத்தில் தேர்தல் நடத்தப்படும் என்று அறிவித்தார். ஆனால், சட்டப்​பேரவைச் செயலாளரும் சபாநாயகரும் பேரவை விதிமுறைகளைப் பின்பற்றி இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இன்னும் இவர்கள் தாமதம் செய்தால், விரைவில் இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடருவேன்'' என்றார்.

ஒரு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ஒரு நிர்வாக அமைப்பு, இப்படி அலட்சியப்படுத்தலாமா?

விகடன்
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

நீதியை மதிக்காத தமிழக நிர்வாகம்! Empty Re: நீதியை மதிக்காத தமிழக நிர்வாகம்!

Post by ayyasamy ram Sat Oct 18, 2014 8:29 pm

ஒன்னும் புரியல ஒன்னும் புரியல
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84851
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நீதியை மதிக்காத தமிழக நிர்வாகம்! Empty Re: நீதியை மதிக்காத தமிழக நிர்வாகம்!

Post by krishnaamma Sat Oct 18, 2014 8:44 pm

அநியாயம் அநியாயம் அநியாயம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நீதியை மதிக்காத தமிழக நிர்வாகம்! Empty Re: நீதியை மதிக்காத தமிழக நிர்வாகம்!

Post by M.M.SENTHIL Sat Oct 18, 2014 11:11 pm

அநீதிக்கே நேரம் சரியா இருக்கு, இதுல நீதிய எங்க மதிக்கறது.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

நீதியை மதிக்காத தமிழக நிர்வாகம்! Empty Re: நீதியை மதிக்காத தமிழக நிர்வாகம்!

Post by சிவா Mon Oct 20, 2014 4:37 pm

அனைவருக்கும் அழிவு காலம் நெருங்கிவிட்டது!

மக்கள் நியாயத்திற்குப் போராடமல் அநீதிக்கு துணை போக ஆரம்பித்துவிட்டார்கள், இதுதான் கலியுகத்தில் கடைசிக் காலம் போலும்! இந்த மனித ஜென்மங்கள் முற்றாக அழிந்து மீண்டும் ஆதாம் ஏவாள் பிறக்கட்டும்!


நீதியை மதிக்காத தமிழக நிர்வாகம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நீதியை மதிக்காத தமிழக நிர்வாகம்! Empty Re: நீதியை மதிக்காத தமிழக நிர்வாகம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum