ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிராமத்து திண்ணை,,,

3 posters

Go down

கிராமத்து திண்ணை,,, Empty கிராமத்து திண்ணை,,,

Post by டார்வின் Sat Oct 18, 2014 4:14 pm

கிராமத்து திண்ணை,,, TKBetQMRAqmTjnECCsMT+thinnaiveedu
கிராமத்து திண்ணை
கிராமத்து வீடுகளில் திண்ணையில்லா
வீடு தேடினாலும் கிடைக்காது
பெரிய திண்ணை, சின்ன
திண்ணை ஒட்டுத் திண்ணை.
பெரிய மருது, சின்ன மருதுவாய்
மகுடம் தரிக்காத மகாராஜாக்கள்
ஆண்டு சரித்திரம் படைத்தவை;
ஒன்றா இரண்டா? எடுத்துச் சொல்ல மாளாது;
வெற்றிலைப் பெட்டியும், வெங்கலக்கூஜாவுமாக
திண்ணையில் உட்கார்ந்து
வயல்வரப்பு, மடவாய்ச்சண்டை,
அண்ணன் தம்பி குடும்பச் சண்டை
பாகப்பிரிவினை, பண்ணை ஆட்களுக்கு
பஞ்சாயத்து, கோர்ட்டுக்குப் போகாம
காசு வாங்காத நியாயமான கட்டப்
பஞ்சாயத்து நடக்கும்;
பிள்ளைகள் நிறைந்து ஒரு திண்ணை,
பள்ளிக்கூடமாய் ஆகிவிடும்;
சினா மாமாவீட்டுத் திண்ணையிலே
தினம் தினம் நடக்கும் சிட்டுக்கச்சேரி
சாயங்காலம் வரைக்கும் ஓயாது.
குருக்கள் வீட்டுத் "திண்ணையிலே விபூதி மந்திரிக்க,
தாயத்து, குறிகேட்க வரும் கூட்டம்,
தெருக்குழந்தைகளுடன்,
கட்டம், சோழி பல்லாங்குழி, கல்லாங்காய்,
புளியங்கொட்டை ஆட்டம்
ஆடும் சங்கரி அத்தை திண்ணை,
நாட்டுச்சேதி, வீட்டுச்சேதி
அரசியல் சேதி, அக்குவேறு ஆனி
வேறாக அலச
தெருவே கூடும், நியூஸ்பேப்பர்
மாமா வீட்டுத் திண்ணை.
வீட்டுப் பசங்க ராத்திரி,
திண்ணையிலே படுக்கிறேன்.
காத்துவரலே" "உள்ளே எனச்
சொல்லி, தலையணைமேலே வைத்துவிட்டு
இரண்டாம் பிளே சினிமாவுக்குப்
போக உதவிய திண்ணை.
காற்றாட உட்கார்ந்து களிப்பும்
சிரிப்புமா இயற்கைக்காற்றை
அணு அணுவா ரசித்து,
மகிழ்ந்திருந்த திண்ணை.
அத்தனையும் விட்டுவிட்டு
நாம் பட்டணத்துப்
பகட்டுக்கு ஆசைப்பட்டு ஓடிவந்து,
அலங்காரமாய் நிற்கும்
அடுக்குமாடிக் கட்டடங்களில்
மூடிப்போட்ட ஜாடியாய்
அடைபட்டு மூச்சு முட்ட சாத்திய
கதவுக்குள், காற்றை காசு
கொடுத்து ஃபேன், ஏஸி என வாங்கி
கரண்ட் போய், வியர்வை வெள்ளத்தில்
மூழ்கி, சோபாவில்
உட்கார்ந்தால், ஐயகோ! கூர்முள்ளாய்க்
குத்துது, குஷன் வைத்தசோபா!
கிராமத்துத் திண்ணை நினைவுகளில்
அலைபாயும் நெஞ்சில் ஏக்கம்வடியுது;
இனித் திண்ணையோடு வீடு கிடைக்குமா?
கிடைக்குமா?
facebook
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Back to top Go down

கிராமத்து திண்ணை,,, Empty Re: கிராமத்து திண்ணை,,,

Post by M.M.SENTHIL Sat Oct 18, 2014 5:15 pm

திண்ணைகள் இப்போது
வேண்டாததாகி விட்டது,
பஞ்சாயத்து எல்லாம்
இப்போ காவல் நிலையத்தில்!!

தாயம் விளையாட
ரெடிமேடாய் போர்டு
வந்து விட்டது இப்போது!

பக்கத்து வீட்டுக்காரனின்
பெயர் கூட தெரியாத
வாழ்க்கை நாம் வாழ்கிறோம்,
இதில் எங்கிருங்கு
பல்லாங்குழி ஆடுவது!!

தினசரிகள் எல்லாம்
அலைபேசியில் படிக்கிறோம்,
வீட்டுப் பாடமும்
மடிக்கணினியோடு முடிகிறது!!

கொஞ்சநேரம் ஓய்வெடுக்க
வாட்டர் பெட் இருக்கிறது,
சிரித்து பேசி பொழுதைக் கழிக்க
இங்கே யாருக்கும் நேரமில்லை,
கணவனும், மனைவியும்
வேலைக்குப் போவதால்!!

கூட்டுக் குடும்பம்
சிதைந்த போதே - இந்த
திண்ணைகளின்
இறுதி அத்தியாயம்
துவங்கி விட்டது!!

அறுநூறு சதுரடியில்
அனைத்தும் அடக்கம்,
இதில் திண்ணைக்கு எங்கே
இடம் தேடுவது!!



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

கிராமத்து திண்ணை,,, Empty Re: கிராமத்து திண்ணை,,,

Post by டார்வின் Sat Oct 18, 2014 6:18 pm

கிராமத்து திண்ணை,,, 3838410834 கிராமத்து திண்ணை,,, 3838410834 கிராமத்து திண்ணை,,, 3838410834
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Back to top Go down

கிராமத்து திண்ணை,,, Empty Re: கிராமத்து திண்ணை,,,

Post by krishnaamma Sat Oct 18, 2014 6:23 pm

//இனித் திண்ணையோடு வீடு கிடைக்குமா?
கிடைக்குமா?//


நான் சிறிய வயதில் பார்த்தது...........ஆனால் எனக்கு ரொம்ப பிடிக்கும் ..திண்ணை , முற்றம் ( முத்தம் )....2ம் கட்டு, 3ம் கட்டு, காமிரா உள்.............என்பது போல அந்தக்கால பெரிய வீடு வேண்டும்................ஹும்...........இந்தக்காலத்தில் ..............................இந்த ஜன்மத்தில் என்னால் வாங்க முடியாது............சோகம் அவ்வளவு தான் பிராப்தம் புன்னகை

நல்லா இருக்கு டார்வின் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கிராமத்து திண்ணை,,, Empty Re: கிராமத்து திண்ணை,,,

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum