புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இவர் கவிதைக்கு ராஜா - இன்று கவியரசு கண்ணதாசன் நினைவு நாள் ! Poll_c10இவர் கவிதைக்கு ராஜா - இன்று கவியரசு கண்ணதாசன் நினைவு நாள் ! Poll_m10இவர் கவிதைக்கு ராஜா - இன்று கவியரசு கண்ணதாசன் நினைவு நாள் ! Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram

69 Posts - 38%
T.N.Balasubramanian

9 Posts - 5%
Dr.S.Soundarapandian

7 Posts - 4%
mohamed nizamudeen

5 Posts - 3%
Balaurushya
இவர் கவிதைக்கு ராஜா - இன்று கவியரசு கண்ணதாசன் நினைவு நாள் ! Poll_c10இவர் கவிதைக்கு ராஜா - இன்று கவியரசு கண்ணதாசன் நினைவு நாள் ! Poll_m10இவர் கவிதைக்கு ராஜா - இன்று கவியரசு கண்ணதாசன் நினைவு நாள் ! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel

prajai

Manimegala

Srinivasan23

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இவர் கவிதைக்கு ராஜா - இன்று கவியரசு கண்ணதாசன் நினைவு நாள் ! Poll_c10இவர் கவிதைக்கு ராஜா - இன்று கவியரசு கண்ணதாசன் நினைவு நாள் ! Poll_m10இவர் கவிதைக்கு ராஜா - இன்று கவியரசு கண்ணதாசன் நினைவு நாள் ! Poll_c10 
435 Posts - 47%

320 Posts - 35%

77 Posts - 8%

38 Posts - 4%

30 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

4 Posts - 0%
Ammu Swarnalatha
இவர் கவிதைக்கு ராஜா - இன்று கவியரசு கண்ணதாசன் நினைவு நாள் ! Poll_c10இவர் கவிதைக்கு ராஜா - இன்று கவியரசு கண்ணதாசன் நினைவு நாள் ! Poll_m10இவர் கவிதைக்கு ராஜா - இன்று கவியரசு கண்ணதாசன் நினைவு நாள் ! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இவர் கவிதைக்கு ராஜா - இன்று கவியரசு கண்ணதாசன் நினைவு நாள் !

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Oct 17, 2014 6:39 pm

இவர் கவிதைக்கு ராஜா - இன்று கவியரசு கண்ணதாசன் நினைவு நாள் !

இவர் கவிதைக்கு ராஜா - இன்று கவியரசு கண்ணதாசன் நினைவு நாள் ! AbUnBD10Sh2253fQyJRM+kannathasan4

சிவகங்கை மாவட்டம் சிறுகூடல்பட்டியில் 1927 ஜூன் 24ல் சிறகை விரித்து, சிகாகோ மண்ணில் 1981 அக்.,17ல் வாழ்வை முடித்துக் கொண்டவர். எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்தாலும், பிறருக்கு எட்டாத கருத்துக்களை கொட்டியவர்.

'பத்து வயதானதொரு பாலகன்
உன் சன்னதியில் பாடியதும் நினைவில் இலையோ முத்து என இட்ட பெயர் முத்தாக
வேண்டுமென முறையீடு செய்ததிலையோ! தமிழில் ஒரு கவிமகனை
சிறுகூடல் பட்டிதனில்
தந்த மலையரசித் தாயே'-

என மலையரசி கோயிலில் கவிதை வடித்தவர். அப்போது அவரது வயது பத்து. அவர் கவிஞர் கண்ணதாசன். வேலை கேட்டு ஒரு பத்திரிகை அலுவலகம் சென்றவரிடம், 'ஏதாவது இதழ்களில் எழுதி இருக்கிறீர்களா' என கேட்க, 'ஆமாம்' என்றார் கவிஞர். 'என்ன பெயரில் எழுதுகிறீர்கள்' என சட்டென கேட்க, கொஞ்சமும் தயக்கமின்றி, 'கண்ணதாசன் என்ற பெயரில்...' என்றார். இப்படித்தான் பெயரும், எழுத்தும் அவர் வசப்பட்டது.

படைப்பாற்றல் : பெண்மையை போற்றி 'மாங்கனி' என்ற சிறு காப்பியம் படைத்தார். சங்கரர் வட மொழியில் எழுதிய கனகதாரா ஸ்தோத்திரத்தை தமிழில், 'பொன்மழை' யாகத் தந்தார். பஜகோவிந்தத்தை எளிய நடையில் மொழி பெயர்த்தார். பகவத்கீதைக்கு உரை விளக்கம் தந்தார்.
1944 - 1981க்கு இடையே அவர் 4ஆயிரம் கவிதைகள், 5 ஆயிரத்துக்கும் மேல் சினிமா பாடல்கள் எழுதியுள்ளார். தனது அனுபவங்களை கவிதையாக்கியவர். உதாரணமாக கண்ணதாசன்,
காங்கிரசில் இருந்து விலகினார். மீண்டும் அவரை காங்கிரசில் சேர்க்க தூதுவர் ஒருவரை
அனுப்பினார் காமராஜர். காமராஜரே நேரில் பேசாமல் தூது அனுப்பியது, கவிஞருக்கு வருத்தத்தை தந்தது. தனது ஆதங்கத்தை அப்போது 'பட்டணத்தில் பூதம்' என்ற படத்தில் வரும் பாடலில் தெரிவித்தார்... இப்படி:

'அந்த சிவகாமி மகனிடம்
சேதி சொல்லடி
எனை சேரும் நாள் பார்க்கச்
சொல்லடி
வேறு யாரோடும் நான்
பேச வார்த்தை ஏதடி
வேலன் இல்லாமல் தோகை ஏதடி'

என எழுதினார். சிவகாமி என்பது காமராஜரின் அன்னை பெயர்.
தத்துவங்களை எளிமையாக்கி பாமரரும் புரியும் வண்ணம் பாடல்களில் புகுத்திய சாதனை கவிஞருக்கே உரியது. அவரது 'அர்த்தமுள்ள இந்து மதத்தை' அவரது குரலிலேயே, தம்புரா இசைப் பின்னணியில் கேட்டுப்பாருங்கள். உலகமே உங்கள் வசப்பட்டதாய் உணர்வீர்கள். 270 நூல்களை எழுதியிருக்கிறார். அதில் வனவாசம் 30 பதிப்பு, மனவாசம் 20 பதிப்பையும் கண்டு சாதனை நிகழ்த்தி இருக்கிறது.

அரசவை கவிஞர்

'சாண்டோ சின்னப்பா தேவரின் 'தெய்வம்' படத்தில்

'மருதமலை மாமணியே முருகையா, தேவரின் குலம் காக்கும் வேலையா'

என்ற பாடலை எழுதினார். இசைக்கருவிகளும் பாடலும் போட்டிபோட்டு ஒலித்த இந்தப் பாடலுக்கு இரண்டு அர்த்தம் கொள்ளலாம். சின்னப்பா தேவருக்கு இப்பாடல் மிகவும் பிடித்துப் போயிற்று. நிரப்பாத செக்கை கொடுத்து கவிஞரை பாராட்டினார்.
ஒரு கவியரங்கில் கவிதை வாசித்த பத்து பேருக்கு கரவொலி கிடைக்கவில்லை. காரணம், கவிஞர் கவிதை வாசிக்க வேண்டும் எனக் கூட்டம் காத்திருந்ததுதான். கடைசியில் கவிஞர் கவிதை வாசித்தார். கைதட்டல் அடங்க நேரமாயிற்று.கவிஞர் சொன்னார், 'யார் கவிதை வாசித்தபோது நீங்கள் கூச்சலிட்டீர்களோ அவர் எழுதிய கவிதைதான் இது. புகழ்பெற்றவர் என்பதற்காக கைதட்டல் என்பது நல்ல மரபல்ல. நீங்கள் கவிதையை ரசிக்கவில்லை. வாசித்த நபரின் புகழைப் பார்க்கிறீர்கள். இது நல்ல பண்பல்ல', என்றார். கவிஞரின் தமிழாற்றலை உணர்ந்தவர்
எம்.ஜி.ஆர்., அதனால்தான் அவர் முதல்வராக இருந்தபோது, கவிஞர் கண்ணதாசனை அரசவை
கவிஞராக்கினார்.மதுவிலக்கு அமலில் இருந்தபோது மதுகுடிப்பதற்கான பெர்மிட் பெற, அமைச்சர் கக்கனை சந்தித்தார். 'எனது பெர்மிட் என்ன ஆனது' என்ற அவரது குரலில் கோபம் கொப்பளித்தது. அமைச்சர் கக்கன், 'சற்று அமருங்கள். தமிழ் நீண்ட காலம் வாழ வேண்டும் என்பதற்காகவே பெர்மிட்டில் கையெழுத்திடாமல் வைத்திருக்கிறேன்' எனச் சொல்ல, கவிஞரின் முகத்தில் புன்முறுவல் பூத்தது.ஏசுகாவியம் எழுதுவதற்காக குற்றாலத்தில் பாதிரியார் தம்புராஜூடன் இருந்தார். தினமும் காலையில் குளித்து, நெற்றி நிறைய விபூதி பூசிய பின்பு, பகல் முழுவதும் ஏசுகாவிய எழுத்துப்பணி.அவர் மதுஅருந்துவார் என்பதை உணர்ந்த பாதிரியார், 'தேவையெனில் மாலையில் மதுஅருந்தி ஓய்வெடுங்கள்' என்றார்.
கவிஞரோ 'இப்பணி முடியும் வரை மது அருந்தமாட்டேன். இது உலக மக்களின் உயர்ந்த நூல் என்பதை என்மனம் சொல்கிறது' என்றார்.

கண்ணே கலைமானே
கேள்விகளுக்கு மதிநுட்பத்தோடு பதில் சொல்வார்.
'அரசியல் மேடைக்கும்,
இலக்கிய மேடைக்கும் என்ன வித்தியாசம்'

என்றதற்கு, 'அரசியல் மேடை மனிதனை முட்டாளாக்குவதற்காகப் போடப்படுவது, இலக்கிய மேடை முட்டாள்தனத்தை தெளிய வைப்பதற்காக போடப்படுவது' என்றார்.
'உங்கள் புத்தகத்தை படிப்போருக்கு நீங்கள் சொல்லும் புத்திமதி' என்ன என்றதற்கு,
'புத்தகத்தில் உள்ள கருத்துக்களை பின்பற்றுங்கள். அதன் ஆசிரியரை பின்பற்றாதீர்கள்' என போட்டு உடைத்தார் இதற்கும் ஒருபடி மேலே சென்று, 'எப்படி வாழக்கூடாது என்பதற்கு எனது வாழ்க்கையின் முற்பகுதியையும், எப்படி வாழ வேண்டும் என்பதற்கு காந்தியடிகளின் சுயசரிதையும் உங்களுக்கு வழிகாட்டும்' என்று வனவாசத்தில் சொன்னவர் கவியரசர்.
சினிமா உலகில் கால்பதிக்க அவர் கடந்து வந்த பாதை அவ்வளவு எளிதானதாக இல்லை. 'கலங்காதிரு மனமே' என்ற பாடலுடன் துவங்கி, 'கண்ணே கலைமானே' என்ற பாடலுடன் நிறைவானார். 'சாத்தப்பனுக்கு மகனாக பிறந்தான். ஆனால் இவன்தான் சினிமா பாடல்கள் மூலம் எல்லா வாசல்களையும் திறந்தான்' என்கிறார் கவிஞரைப் பற்றி நெல்லை ஜெயந்தா.
'கண்ணதாசன் முறையாக தமிழ் படித்தவரில்லை' என, சில தமிழறிஞர்கள் சொன்னபோது, 'அதனாலென்ன, தமிழுக்கு கண்ணதாசனைத்தான் தெரிகிறது' என பதிலடி கொடுத்தவர் எழுத்தாளர் ஜெயகாந்தன். 'காட்டுக்கு ராஜா சிங்கம்.

கவிதைக்கு ராஜா கண்ணதாசன்' என காமராஜர் பாராட்டினார் என்றால், அர்த்தமில்லாமலா இருக்கும்?

-ரா.சொக்கலிங்கம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Fri Oct 17, 2014 6:50 pm

நிரந்தரமானவருக்கு இன்று நினைவு நாள்!

இவர் கவிதைக்கு ராஜா - இன்று கவியரசு கண்ணதாசன் நினைவு நாள் ! Kannathasan01

'நான் நிரந்தரமானவன் அழிவதில்லை... எந்த நிலையிலும் எனக்கு மரணம் இல்லை' என்ற கவிஞர் கண்ணதாசனுக்கு இன்று நினைவு நாள்... அதையொட்டி, பழ நெடுமாறன் எழுதிய ‘கவியரசர் என் காவலர்’ எனும் நூலில் இருந்து சில தகவல்கள்...

பெருந்தலைவருக்குச் சிலை!

பெருந்தலைவர் காமராஜர் மறைந்து முதலாம் ஆண்டு நினைவு நாள் நெருங்கும்போது, சென்னை, திருவல்லிக்கேணியில் சிலர் காமராஜருக்கு சிலை வைப்பதற்கான முயற்சியில் இருந்தனர். அது தொடர்பாக என்னையும் கவிஞரையும் (கண்ணதாசன்) சந்தித்தார்கள். அவர்கள் நிறுவவிருந்த மார்பளவு உருவச் சிலைத் திட்டத்தை அடியோடு மாற்றி தலைவர் காமராஜரின் முழு உருவச் சிலையை கடற்கரையில் நிறுவுவது என்று தீர்மானித்து, அதற்கு ஒரு குழுவும் அமைக்கப்பட்டது. அந்தக் குழுவில் நானும் இருந்தேன்.
இவர் கவிதைக்கு ராஜா - இன்று கவியரசு கண்ணதாசன் நினைவு நாள் ! Anna%20statue
அது சாதாரண உருவச்சிலையாக இருக்கக் கூடாது என்றும், அது வித்தியாசமானதாக இருக்க வேண்டும் என்றும் நாங்கள் தீர்மானித்தோம். ஏழைக் குழந்தைகளின் கல்விக் கண்களைத் திறந்து, அவர்களின் வயிற்றுப் பசியையும் போக்கிய தலைவரின் பெருமையை உலகுக்கு உணர்த்தும் வகையில் அமைய வேண்டும் எனறு தீர்மானித்தோம். ஒரு சிறுவனையும், சிறுமியையும் இரு கரங்களில் அரவணைத்தபடி கம்பீரத்துடன் தலைவர் நிற்பது போல அந்தச் சிலையை வடிக்க முடிவு செய்தோம்.

சிலை தயாராகிவிட்டது. திறப்பு விழாவுக்கான வேலைகள் நடந்து கொண்டு இருக்கும்போது... காமராஜர் சிலையின் பீடத்தில் பொறிக்க கம்பரின் கவிதை வரிகளை கண்ணதாசன் எடுத்துக் கொடுத்து இந்த வரிகள் பொருத்தமாக இருக்கும் என்று சொன்னார்.

தசரதன் இறந்த துயரத்தை பதிவு செய்யும் அந்த வரிகள்...

‘நந்தா விளக்கு அணையா நாயகனே! நாநிலத்தார்
நந்தாய்! தனி அறத்தின் தாயே, தயாநிதியே!
எந்தாய்! இகல் வேந்தர் ஏந்தே! இறந்தனயே!
அந்தோ! இனி வாய்மைக்கு ஆர்உளரே மற்றுலகில்

உங்கள் கவிதையையும் எழுதிக் கொடுங்கள் அதையும் சேர்த்து பொறித்து விடலாம் என்றேன் நான். அந்த அற்புதமான வரிகளை உடன் எழுதித் தந்தார் கவிஞர் அது...

வாரா விடுதலைஅயை வரவழைத்தாய்; வளரறிவில்
தேரா இளைஞர் நலம் தேர்வித்தாய்: எஞ்ஞான்றும்
ஊரார் நலம் காக்க உடல் நலத்தைத் தானிழந்தாய்
சீராரும் தலைவா! நின் திருமேனி தொழுகின்றோம்!

கவிச்சக்கரவர்த்தி, கவியரசர் இருவரின் பொன்னெழுத்துக்களுடன் சிற்பி நாகப்பா ஜெயராமன் வடிவமைத்த அந்தச் சிலைதான் கடற்கரையில் காட்சியளிக்கிறது.

வாரியாரும், கவிஞரும்...

வாரியாரின் மீது மிகுந்த நேசமும் அவரது சொற்பொழிவின் மீது ஈடுபாடும் கொண்டவர் கவிஞர். கந்தன் கருணை படத்தை தயாரித்தபோது சென்னை, தி.நகர் உஸ்மான் சாலையில் உள்ள தருமபுர ஆதின மண்டபத்தில் வாரியாரின் கந்த புராண சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்த கவிஞர், அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள திரையுலகப் பிரபலங்களுக்கு அழைப்பு கொடுத்தார். வாரியாரின் முருகனின் புகழ்பாடும் அற்புதமான சொற்பொழிவை அப்படியே பதிவு செய்து கந்தன் கருணை திரைப்படத்தில் இணைத்து விட்டார். படத்தில் இடம் பெற்ற அந்தக் காட்சி மிகவும் யதார்த்தமாக அமைந்தது வாரியாருக்கு மேலும் பெருமை சேர்த்தது.

கவிஞரின் ஞாபகமறதி...

கவிஞர் ஒரு முறை அறிஞர் அண்ணாவைப் பார்க்க அவரது வீட்டுக்கு சென்றிருந்தார். அண்ணா ரொம்பவும் சுமாரான சட்டையை அணிந்திருந்தார். அதை பார்த்த கவிஞர் அண்ணாவிடம் அந்த சட்டையை உடனே கழற்றித் தரும்படிக் கேட்டார். அண்ணாவும் கழற்றித் தர, கவிஞர் "நான் இதை அளவுக்காக எடுத்துச் செல்கிறேன் ஜப்பான் சில்க்கில் ஒரு டஜன் சட்டை தைத்து எடுத்து வருகிறேன்" என்று சொல்லிவிட்டு தன் வீட்டுக்கு போய் விட்டார். அத்தோடு அந்த விஷயத்தை கவிஞர் மறந்தும் விட்டார்.

அதன் பிறகு சில வாரங்கள் கழித்து மீண்டும் அண்ணாவைப் பார்க்க அவரது வீட்டுக்கு வந்தார் கவிஞர். அந்த நேரம் பார்த்து அண்ணா மேல் சட்டை எதுவும் அணியாமல் உட்கார்ந்து எதையோ எழுதிக் கொண்டு இருந்தார். ''என்ன அண்ணா வெற்றுடம்போடு இருக்கிறீர்கள்?'' என்று கேட்க, அண்ணாவோ, ''ஆமாப்பா போட்டிருந்த சட்டையையும் நீ பிடுங்கிக் கொண்டு போய் விட்டாய்... என்ன செய்வது?'' என்றார் குறும்புடன். கவிஞருக்கு அப்போதுதான் உரைத்தது. முதல் வேலையாக கடைக்குப் போய் ஒரு டஜன் ஜப்பான் சில்க் சட்டைகளை தைத்து கொண்டு வந்தார்.

பாட்டதிபரும், பட அதிபரும்...

கவிஞர் 'வசந்த மாளிகை' படத்துக்கு விஜயா ஸ்டூடியோவில் பாட்டெழுத உட்கார்ந்திருந்தார். அங்கிருந்த கட்டிலில் படுத்துக் கொண்டு கவிஞர் யோசிக்க, அந்தப் படத்தின் அதிபர் ராமா நாயுடு மற்றும் இசை கலைஞர்களும் கீழே உட்கார்ந்து கவிஞரது பாடல் வரிகளுக்காக ஆர்வத்துடன் காத்திருந்தார்கள். அப்போது அந்த வழியாகச் சென்ற விஜயா ஸ்டூடியோவின் உரிமையாளர் நாகிரெட்டி கோபம் அடைந்தார். ஆனாலும் ஒன்றும் சொல்லாமல் தனது அறைக்குப் போய்விட்டார். அதன்பின்னர் ராமா நாயுடுவை அழைத்து தனது கோபத்தை வெளிப்படுத்தினார். ‘‘தொழில் செய்கிற இடத்தில் பயபக்தி வேண்டாமா? இதென்ன படுத்துக் கொண்டு பாடெழுதும் பழக்கம்'' என்று கடிந்து கொண்டார்.

அதற்கு ராமா நாயுடு, கவிஞரைப் பற்றி சொல்லி நாகி ரெட்டியை சமாதானப்படுத்தினார். நாகி ரெட்டி, ‘‘நல்லது நாயுடு... அவர் பாட்டை முடித்த பிறகு என்னிடம் கொண்டு வந்து காட்டுங்க’’ என்று சொல்லி நாயுடுவை அனுப்பி வைத்தார். மறுநாள் அந்தப் பாட்டை நாகிரெட்டியிடம் கொண்டுபோய்க் காட்டினார் ராமா நாயுடு. அதைப் படித்த நாகி ரெட்டி அந்த தாளை அப்படியே பயபக்தியுடன் கண்களில் ஒற்றிக் கொண்டார். மறுநாள் அதே அறைக்கு கவிஞர் வந்தபோது புதிய மெத்தை, தலையணை, திண்டு போடப்பட்டிருந்ததைக் கண்டு கவிஞர் திகைத்தார்.

தயாரிப்பாளரான கவிஞர்...

திரைஉலகில் எல்லோருக்கும் வரும் ஆசை கவிஞருக்கும் வந்தது. சரத் சந்தரின் கதையைத் தழுவி மாலையிட்ட மங்கை படத்தைத் தயாரிக்கத் திட்டமிட்டார் . அதற்கு கதாநாயகான நடிக்க டி.ஆர்.மாகாலிங்கத்தைத் தேர்வு செய்தார் கவிஞர். அவரது திரைஉலக நண்பர்கள் திகைப்படைந்தனர். டி.ஆர்.மகாலிங்கத்தின் புகழ் மங்கி இருந்த காலம் அது. அவரை வைத்துப் படம் எடுத்தால் ஓடுமா? என்ற சந்தேகத்தை கிளப்பினர். கவிஞர் தான் எடுத்த முடிவில் இருந்து பின் வாங்கவில்லை.

தனது பாடல்களை பாடி நடிக்க சிறந்த நடிகர் டி.ஆர்.மகாலிங்கம் ஒருவரே என்று கவிஞர் நம்பினார். படத்தில் மொத்தம் பதினேழு பாடல்கள். இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி. படம் மகத்தான வெற்றி பெற்றது. டி.ஆர்.மகாலிங்கத்துக்கு புது வாழ்வைக் கொடுத்தது. இப்படத்தின் வெற்றிக்காக அவருக்கு புதிய செவர்லெட் காரை கவிஞர் பரிசாகக் கொடுத்தார்.

விகடன்.காம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82744
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Oct 17, 2014 8:07 pm

இவர் கவிதைக்கு ராஜா - இன்று கவியரசு கண்ணதாசன் நினைவு நாள் ! 103459460
-
கவிஞர் கண்ணதாசன் தயாரித்த "மாலையிட்ட மங்கை''
படத்தின் மூலம், தமிழ்த் திரை உலகுக்கு மனோரமா
அறிமுகமானார்.
--

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Oct 17, 2014 9:22 pm

என்றும் அவர் புகழ் இம்மண்ணில் நீடுடி நிற்கும்...

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Oct 17, 2014 9:59 pm

அர்த்தமிகு கருத்துகளின் அழியா பொக்கிஷ பெட்டகம்

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Oct 17, 2014 11:08 pm

இவருக்கு இணை யாருமில்லை. நன்றி நன்றி

இவர் கவிதைக்கு ராஜா - இன்று கவியரசு கண்ணதாசன் நினைவு நாள் ! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇவர் கவிதைக்கு ராஜா - இன்று கவியரசு கண்ணதாசன் நினைவு நாள் ! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இவர் கவிதைக்கு ராஜா - இன்று கவியரசு கண்ணதாசன் நினைவு நாள் ! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Oct 18, 2014 11:17 am

'நான் நிரந்தரமானவன் அழிவதில்லை... எந்த நிலையிலும் எனக்கு மரணம் இல்லை'

இதற்கு மேல் என்ன சொல்லிவிட முடியும் , தமிழ் இருக்கும் வரையிலும் இருக்கும் இவரின் புகழ்
ராஜா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Sat Oct 18, 2014 11:36 am

முத்தையா அவர்கள் முத்தான தமிழ் பாடல்களால் ஜொலித்தார்..
என்றும் அவர் புகழ் நிலைத்து நிற்கும்...

கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

இவர் கவிதைக்கு ராஜா - இன்று கவியரசு கண்ணதாசன் நினைவு நாள் ! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக