Latest topics
» கருத்துப்படம் 08/11/2024by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மிரட்டும் மூட்டு வலி... விரட்டுவது எப்படி?
4 posters
Page 1 of 1
மிரட்டும் மூட்டு வலி... விரட்டுவது எப்படி?
''மூட்டு வலி... இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு, சமீப ஆண்டுகளாக பலரையும் வாட்டுகிறது'' என்கிறார்கள் மருத்துவர்கள்.
இதற்கான காரணம், சிகிச்சை, அதற்கான செலவுகள், மூட்டுவலி வராமல் தவிர்ப்பதற்கான வழிகள் பற்றியெல்லாம் தகவல்கள் வழங்குகிறார், சென்னையைச் சேர்ந்த மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் வேல்முருகன்.
''மூட்டு வலி வயதானவர்களுக்கு வரக்கூடிய பிரச்னை என்பதில்லை. மிக அதிக வேலை, அல்லது மிகக் குறைந்த வேலை என்றிருக்கும் எந்த வயதினரும் மூட்டு வலியை சந்திக்க நேரலாம். பெரும்பாலும் 45 வயதைக் கடந்தவர்களுக்கு மூட்டு எலும்புகள் தேய்மானம் அடைவதால், மூட்டு வலி ஏற்படலாம். மெனோபாஸ் கட்டத்தை தாண்டிய பெண்களுக்கும் இப்பிரச்னை வர அதிக வாய்ப்புள்ளது. மிக அதிக மற்றும் குறைவான வேலை செய்வது, சத்தான உணவும் போதிய உடற்பயிற்சியும் இல்லாமல் இருப்பது என வாழ்க்கை முறையும் இப்பிரச்னைக்கு முக்கியக் காரணமாகிறது.
டி.பி, சர்க்கரை, சொரியாசிஸ், எதிர்ப்புசக்தி குறைவு உள்ளவர்களும் இந்நோய்க்கு இலக்காகலாம். சிலருடைய கால்களில் ஏற்படும் புண்கள் சரிவர கவனிக்கப்படாமல் செப்டிக் ஆகி, அப்பகுதியில் உள்ள மூட்டுப்பகுதி பாதிக்கப்பட்டு பிரச்னை வரவும் வாய்புள்ளது. ஐ.டி நிறுவனங்களில் பணிபுரிவோர்
8 மணி நேரத்துக்கும் மேலாக ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வதால், அவர்களுக்கும் மூட்டுவலி வர அதிக வாய்ப்பிருக்கிறது'' என்று காரணங்களை அடுக்கிய டாக்டர், மூட்டு வலியில் இருந்து தற்காத்துக்கொள்ள செய்ய வேண்டியவற்றைக் குறிப்பிட்டார்.
மூட்டுக்கு அவசியம் மூவ்மென்ட்!
''கிராமத்தில், வாசல் தெளித்துக் கோலம்போட, மாடுகட்ட, வீடுகூட்ட என்று பலதரப்பட்ட வேலைகளைச் செய்யும் பெண்களுக்கும், வயல்களில் தினம் வேலை செய்யும் ஆண்களுக்கும், அத்தனை எலும்புகளையும் இயக்க வைக்கும்விதமாக உடற்பயிற்சியானது கிடைத்துவிடுகிறது. சாப்பிடும் சத்தான உணவும் ஆரோக்கியமாக வைக்கிறது. ஆனால், நகரவாசிகளுக்கு உடல் இயக்கம் குறைந்துவிட்டது. அப்படியே செய்தாலும் டிரெட்மில், அப்டமன் பயிற்சி என உடலின் சில எலும்புகளுக்கு மட்டும் வேலை தரும் பயிற்சிகளையே செய்கிறார்கள். உடலில் உள்ள எலும்புகளுக்கு வேலை கொடுத்துக்கொண்டே இருந்தால்தான் இயக்கம் சீராக இருக்கும். அதேசமயம் வலுவை மீறிய வேலையையும் தரக்கூடாது.
மூட்டு வலிக்கு தீர்வு!
குழந்தைகள் கால் வலிக்கிறது என்றால், சரியான ஓய்வே போதுமானது. 18 வயதைக் கடந்தவர்கள் என்றால், கால்சியம் சத்து மிகுந்த கீரை, பால், முட்டை, மீன் போன்றவற்றை சாப்பிட வேண்டும். தினமும் மிதமான உடல் பயிற்சி செய்ய வேண்டும். வைட்டமின்-டி கிடைக்க, காலை 10 மணி முதல் மதியம் 3 மணிக்குள் தினமும் 30 நிமிடமாவது வெயிலில் உலாவ வேண்டும். சர்க்கரை வியாதிக் காரர்களுக்கு மூட்டு வலி வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதால் தினமும் உடற்பயிற்சி அல்லது நடைபயிற்சி அவசியம்.
அறுவை சிகிச்சை அவசியமா?
மூட்டு வலி பிரச்னை உள்ளவர்கள், காலம் கடத்தாமல் மருத்துவர்களிடம் செல்ல வேண்டும். இதில் 90 சதவிகிதம் பேருக்கு மருந்து, மாத்திரை, உடற்பயிற்சி, உணவு, வாழ்க்கை முறை மாற்றம் உள்ளிட்டவை மூலமாக சரிபடுத்தக்கூடும். சிகிச்சை அளிக்க முடியாதபடி மூட்டு தேய்மானத்தால் எலும்பு கோணலாகி இன்னும் பலவித பாதிப்புகளோடு இயக்கமும் குறைந்து, சரிபடுத்தக்கூடிய கட்டத்தை கடந்துவிட்டால், அறுவை சிகிச்சையைத் தாங்கும் தகுதியுடன் உடல் இருக்கிறதா என்கிற ஆய்வுக்குப் பிறகு, மூட்டு மாற்று அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப் படும்.
எவ்வளவு செலவு?
பொதுவாக ஒன்றரை லட்சம் முதல் மூன்று லட்சம் வரை செலவாகக்கூடிய இந்த மூட்டு மாற்று அறுவை சிகிச்சையை, அரசு வழங்கும் காப்பீட்டுத் திட்டத்தின் மூலமாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இலவசமாகவும் செய்துகொள்ளலாம். இந்த மாற்று மூட்டின் ஆயுட்காலம் 20 - 25 ஆண்டுகள்தான். பிறகு, இதேபோன்றதொரு அறுவை சிகிச்சை செய்துகொள்ளலாம்'' என்று எளிதாக விஷயங்களைப் புரியவைத்தார் டாக்டர் வேல்முருகன்.
மிக அதிக வேலைக்கும், மிகக் குறைந்த வேலைக்கும் குட்பை; சத்தான உணவுக்கும் மிதமான உடற்பயிற்சிக்கும் வெல்கம். இந்த எளிய ஃபார்முலா... மூட்டு வலியை விரட்டும் என்றால், ஃபாலோ பண்ணலாம்தானே?!
நன்றி:டாக்டர் விகடன்

Powenraj- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
Re: மிரட்டும் மூட்டு வலி... விரட்டுவது எப்படி?
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: மிரட்டும் மூட்டு வலி... விரட்டுவது எப்படி?
மூட்டுவலிக்கு வேலை செய்யவும் கூடாது, வேலை செய்யாமல் இருக்கவும் கூடாது - சிறந்த மருத்துவ அட்வைஸ்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மிரட்டும் மூட்டு வலி... விரட்டுவது எப்படி?
மேற்கோள் செய்த பதிவு: 1097174சிவா wrote:மூட்டுவலிக்கு வேலை செய்யவும் கூடாது, வேலை செய்யாமல் இருக்கவும் கூடாது - சிறந்த மருத்துவ அட்வைஸ்!
'வரும்......ஆனா வராது' ....போல இருக்கே சிவா இது ஹா....ஹா...ஹா............
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மிரட்டும் மூட்டு வலி... விரட்டுவது எப்படி?
மேற்கோள் செய்த பதிவு: 1097184krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1097174சிவா wrote:மூட்டுவலிக்கு வேலை செய்யவும் கூடாது, வேலை செய்யாமல் இருக்கவும் கூடாது - சிறந்த மருத்துவ அட்வைஸ்!
'வரும்......ஆனா வராது' ....போல இருக்கே சிவா இது ஹா....ஹா...ஹா............
மிக அதிக வேலைக்கும், மிகக் குறைந்த வேலைக்கும் குட்பை;
இதுக்கு நான் கூறியதுதானே அக்கா அர்த்தம்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மிரட்டும் மூட்டு வலி... விரட்டுவது எப்படி?
மேற்கோள் செய்த பதிவு: 1097189சிவா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1097184krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1097174சிவா wrote:மூட்டுவலிக்கு வேலை செய்யவும் கூடாது, வேலை செய்யாமல் இருக்கவும் கூடாது - சிறந்த மருத்துவ அட்வைஸ்!
'வரும்......ஆனா வராது' ....போல இருக்கே சிவா இது ஹா....ஹா...ஹா............மிக அதிக வேலைக்கும், மிகக் குறைந்த வேலைக்கும் குட்பை;
இதுக்கு நான் கூறியதுதானே அக்கா அர்த்தம்!
ஆமாம் சிவா சுமாரா வேலை செய்யணுமா...............இல்ல வேலையை சுமாரா செய்யணுமா?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» தூக்கமின்மை ஏன்? விரட்டுவது எப்படி!!!
» கால் மூட்டு வலி
» வயதானவர்கலுக்கு மூட்டு வலி (மூட்டு தேய்மானம்)
» மூட்டு வலி (மூட்டு தேய்மானம்)
» மூட்டு வலி (மூட்டு தேய்மானம்)
» கால் மூட்டு வலி
» வயதானவர்கலுக்கு மூட்டு வலி (மூட்டு தேய்மானம்)
» மூட்டு வலி (மூட்டு தேய்மானம்)
» மூட்டு வலி (மூட்டு தேய்மானம்)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum