புதிய பதிவுகள்
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:09

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:33

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:21

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:18

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:55

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணைய அழற்சி அறிகுறிகளை அறிவோம்! Poll_c10கணைய அழற்சி அறிகுறிகளை அறிவோம்! Poll_m10கணைய அழற்சி அறிகுறிகளை அறிவோம்! Poll_c10 
123 Posts - 76%
heezulia
கணைய அழற்சி அறிகுறிகளை அறிவோம்! Poll_c10கணைய அழற்சி அறிகுறிகளை அறிவோம்! Poll_m10கணைய அழற்சி அறிகுறிகளை அறிவோம்! Poll_c10 
19 Posts - 12%
Dr.S.Soundarapandian
கணைய அழற்சி அறிகுறிகளை அறிவோம்! Poll_c10கணைய அழற்சி அறிகுறிகளை அறிவோம்! Poll_m10கணைய அழற்சி அறிகுறிகளை அறிவோம்! Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
கணைய அழற்சி அறிகுறிகளை அறிவோம்! Poll_c10கணைய அழற்சி அறிகுறிகளை அறிவோம்! Poll_m10கணைய அழற்சி அறிகுறிகளை அறிவோம்! Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
கணைய அழற்சி அறிகுறிகளை அறிவோம்! Poll_c10கணைய அழற்சி அறிகுறிகளை அறிவோம்! Poll_m10கணைய அழற்சி அறிகுறிகளை அறிவோம்! Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கணைய அழற்சி அறிகுறிகளை அறிவோம்! Poll_c10கணைய அழற்சி அறிகுறிகளை அறிவோம்! Poll_m10கணைய அழற்சி அறிகுறிகளை அறிவோம்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
கணைய அழற்சி அறிகுறிகளை அறிவோம்! Poll_c10கணைய அழற்சி அறிகுறிகளை அறிவோம்! Poll_m10கணைய அழற்சி அறிகுறிகளை அறிவோம்! Poll_c10 
1 Post - 1%
Pampu
கணைய அழற்சி அறிகுறிகளை அறிவோம்! Poll_c10கணைய அழற்சி அறிகுறிகளை அறிவோம்! Poll_m10கணைய அழற்சி அறிகுறிகளை அறிவோம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணைய அழற்சி அறிகுறிகளை அறிவோம்! Poll_c10கணைய அழற்சி அறிகுறிகளை அறிவோம்! Poll_m10கணைய அழற்சி அறிகுறிகளை அறிவோம்! Poll_c10 
288 Posts - 77%
heezulia
கணைய அழற்சி அறிகுறிகளை அறிவோம்! Poll_c10கணைய அழற்சி அறிகுறிகளை அறிவோம்! Poll_m10கணைய அழற்சி அறிகுறிகளை அறிவோம்! Poll_c10 
46 Posts - 12%
mohamed nizamudeen
கணைய அழற்சி அறிகுறிகளை அறிவோம்! Poll_c10கணைய அழற்சி அறிகுறிகளை அறிவோம்! Poll_m10கணைய அழற்சி அறிகுறிகளை அறிவோம்! Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
கணைய அழற்சி அறிகுறிகளை அறிவோம்! Poll_c10கணைய அழற்சி அறிகுறிகளை அறிவோம்! Poll_m10கணைய அழற்சி அறிகுறிகளை அறிவோம்! Poll_c10 
8 Posts - 2%
prajai
கணைய அழற்சி அறிகுறிகளை அறிவோம்! Poll_c10கணைய அழற்சி அறிகுறிகளை அறிவோம்! Poll_m10கணைய அழற்சி அறிகுறிகளை அறிவோம்! Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
கணைய அழற்சி அறிகுறிகளை அறிவோம்! Poll_c10கணைய அழற்சி அறிகுறிகளை அறிவோம்! Poll_m10கணைய அழற்சி அறிகுறிகளை அறிவோம்! Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கணைய அழற்சி அறிகுறிகளை அறிவோம்! Poll_c10கணைய அழற்சி அறிகுறிகளை அறிவோம்! Poll_m10கணைய அழற்சி அறிகுறிகளை அறிவோம்! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கணைய அழற்சி அறிகுறிகளை அறிவோம்! Poll_c10கணைய அழற்சி அறிகுறிகளை அறிவோம்! Poll_m10கணைய அழற்சி அறிகுறிகளை அறிவோம்! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கணைய அழற்சி அறிகுறிகளை அறிவோம்! Poll_c10கணைய அழற்சி அறிகுறிகளை அறிவோம்! Poll_m10கணைய அழற்சி அறிகுறிகளை அறிவோம்! Poll_c10 
3 Posts - 1%
Barushree
கணைய அழற்சி அறிகுறிகளை அறிவோம்! Poll_c10கணைய அழற்சி அறிகுறிகளை அறிவோம்! Poll_m10கணைய அழற்சி அறிகுறிகளை அறிவோம்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணைய அழற்சி அறிகுறிகளை அறிவோம்!

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sat 18 Oct 2014 - 11:15

கணைய அழற்சி
அறிகுறிகளை அறிவோம்!
பா.பிரவீன் குமார்

கணைய அழற்சி அறிகுறிகளை அறிவோம்! P47

கணையம் என்ற பெயரைக் கேட்டாலே, ''கணையமா... அது எங்கே இருக்கு?'' என்றுதான் யோசிப்போம். செரிமான மண்டலத்தின் மிக முக்கியமான உறுப்பு கணையம். இது பாதிக்கப்பட்ட பின்னரே, பலரும் இதன் அபாயத்தை உணர்கிறோம்.

உணவு செரிமான மண்டலத்தில், இரைப்பைக்குக் கீழே அமைந்திருக்கும் வால் போன்ற ஓர் உறுப்பு, கணையம். இதில்தான் உணவு செரிமானத்துக்குத் தேவையான என்சைம்கள் இன்சுலின் ஆகியவை சுரக்கின்றன. செரிமானத்தின்போது, கணையத்தில் இருந்து சுரக்கப்படும் என்சைம், கணைய நாளம் வழியாக முன் சிறுகுடலில் போய் கலக்கிறது. இந்த என்சைம் அங்கே செரிவுற்றதாக மாறி உணவுப் பொருள் செரிக்க உதவுகிறது. நோய்த்தொற்று உள்ளிட்ட காரணங்களால் கணையம் வீக்கம் அடைவதையே கணைய அழற்சி என்கிறோம்.

கணைய அழற்சியின்போது, இந்த என்சைம், கணையத்தில் தேங்கி இருக்கும்போது, செரிவுற்றதாக மாறுவதால், கணைய செல்கள் அரிக்கப்படுகின்றன. கணையத்தில் ஏற்படக்கூடிய பாதிப்பை, உடனடி பாதிப்பு, நீண்ட நாள் பாதிப்பு என்று பிரிக்கலாம். சாதாரண பாதிப்பு என்றால் மருந்து மாத்திரைகள் மூலம் சரிப்படுத்திவிடலாம். மிகமோசமான நிலையில் இருந்தால், அது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடக்கூடும்.

உடனடி பாதிப்புக்கான அறிகுறிகள்

மார்புக்குக் கீழ், வயிற்றின் மேல் பகுதியில் வலி ஏற்பட்டு முதுகு வரை பரவுதல்

சாப்பிட்ட பிறகு மேல் வயிற்று வலி அதிகரிப்பு

காய்ச்சல்

குமட்டல், வாந்தி

வயிற்றைத் தொட்டால் கடுமையாக வலிக்கும்

படுத்தால் வயிற்று வலி அதிகரிக்கும். முன்பக்கம் சாய்ந்தால் வலி குறையும்.

அழற்சிக்கான காரணங்கள்

மது, சிகரெட், போதைப் பொருள் உபயோகிப்பது

கிருமித் தொற்று

பித்தப்பை கல்

விபத்தினால் வயிற்றில் காயம் ஏற்படுவது

சில வகை மருந்துகள் தரும் பக்க விளைவு

கணையத்தில் நீர்க்கட்டி

மரபியல்

விஷக் கடி

ரத்தத்தில் டிரைகிளசரைட் அளவு அதிகரிப்பு

கணையப் புற்றுநோய்

அழற்சி தீவிரமடைவதன் அறிகுறிகள்

கடுமையான மேல் வயிற்று வலி

உடல் எடையைக் குறைக்க முயற்சிக் காமலே எடைகுறைதல்

எண்ணெய் பசையுடனும் நாற்றத்துடனும் மலம் வெளியேறுதல்

டாக்டரை எப்போது பார்க்க வேண்டும்?

மேல் வயிற்றில் வலி வந்தால், உடனடியாக டாக்டரை அணுகி ஆலோசனை பெறுங்கள். வலி தீவிரம் ஆகும் வரை காத்திருக்க வேண்டாம்.

விகடன்

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sat 18 Oct 2014 - 11:22

’பல்’ கொஞ்சம் கவனம், எப்போதும் புன்னகை!
பிரேமா நாராயணன், படங்கள்: ச.இரா.ஸ்ரீதர்

வாழ்வின் பாதிப் பிரச்னைகளை சரிசெய்வதும், உறவுகளுக்குள் சிறு பிரச்னை என்றால், முதலில் அடிவாங்குவதும் புன்னகைதான். 'உறவுகளில் மட்டுமல்ல, உடலுக்குள்ளே பிரச்னை என்றால் கூட புன்னகைக்குத்தான் முதலில் டேமேஜ்’ என்கிறது பல் மருத்துவம். பற்களை சரியாகக் கவனித்துக் கொண்டாலே, தோல் நோய் முதல் இதயநோய் வரை தப்பித்துவிடலாம்'' என்று அக்கறையாக எச்சரிக்கிறார் டாக்டர் ஜமுனா உதயராஜா.

பல்லுல ஒரு பிரச்னையும் இல்லை, வலிக்கக்கூட இல்லை, ஆனாலும் அந்த டாக்டர் எதுக்காக உங்களைப் பார்க்க சொன்னார்?'' என்கிற கேள்விகளோடு வருபவர்களைத் தொடர்ந்து சந்திக்கிறார் டாக்டர் ஜமுனா.

'போன வாரம் ஒரு லேடி என்கிட்ட வந்தாங்க. உடல் முழுக்க அரிப்பு, தடிப்பு வந்து ரெண்டு வாரமா கஷ்டப்படுறதா சொன்னாங்க. 'பூரான் கடிச்ச மாதிரியே இருக்கு டாக்டர், அலர்ஜிக்கு மாத்திரை சாப்பிட்டும் சரியாகலை’னு புலம்பினாங்க. தோல் டாக்டர் அவங்களுக்கு பிரச்னை தோல்ல இல்லை, பல்லுலதான்னு தெரிஞ்சு என்னிடம் அனுப்பிருந்தார். தோல் அரிப்புக்கு எதுக்காக பல் டாக்டர்னு அவங்களுக்குப் புரியலை.

அவர் வாயை டெஸ்ட் செய்தபோது, சில இடங்களில் ஈறில் வீக்கமும், ரத்தக் கசிவும் இருந்தது. பற்களைத் தாங்கிப் பிடிக்கும் எலும்பு அடர்த்தி குறைந்தும் இரண்டு கடைவாய்ப் பற்களின் வேர்ப் பகுதியில் ஆழமான சொத்தையும் இருந்தது தெரிந்தது. நான்கு கடைவாய்ப் பற்கள் எலும்பின் ஆழத்தில் கோணலாகவும் இருந்தது. ஆனால் அவருக்கு இதுவரை பல் வலி இல்லாததால், இந்தப் பிரச்னை தெரியவில்லை. ஈறில் இருந்து ரத்தம் வந்ததை அவர் பெரிய விஷயமாகக் கருதவில்லை. அந்தப் பெண்ணுக்கு வாயில் நோய்த்தொற்று ஏற்பட்டிருப்பதால்தான் உடல் அரிப்பு ஏற்பட்டிருந்தது. இரண்டு வாரங்களில், அவரது பல் தொற்றுக்கு சிகிச்சை முடிந்து, அவரது பல் பிரச்னைகள் சரி செய்யப்பட்டதும் அவரது தோல் பிரச்னை தானாகவே சரியாகிவிட்டது. பல்லில் ட்ரீட்மென்ட் எடுத்தா, தோல் நோய் எப்படி சரியாப் போகும்னு நம்ப முடியாமத்தான் இங்க இருந்து போனாங்க'' என்று சிரிக்கிறார் டாக்டர் ஜமுனா.

உடல் ஆரோக்கியத்தில், வாய் சுகாதாரம் மிக முக்கியம். பற்கள், ஈறுகளில் பிரச்னை என்றால், உடலின் பல்வேறு பகுதி களையும் பாதிப்புக்கு உள்ளாக்கிவிடும். எல்லாப் பிரச்னைக்கும் வேர், பல்லாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால் பற்களை சுத்தமாக வைத்திருப்பதும், அடிக்கடி பரிசோதிப்பதும், பெரிய பிரச்னைகளைத் தவிர்க்கும்!

பல்லைப் பார்த்துச் சொல்லி விடலாம்!

பல் கூச்சம் பல் சொத்தையினாலும் எனாமல் போவதாலும் ஏற்படும். ஈறுகளில் ரத்தக்கசிவு மற்றும் வீக்கம் ஈறுகளில் அழுக்கு சேர்வதால் வரும் வாய் துர்நாற்றம் ஈறு நோய்கள் மற்றும் வயிற்றில் ஏதேனும் பிரச்னை.

பல்லால் வருமே பாதிப்பு!

சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு, பற்களில் அல்லது ஈறுகளில் பிரச்னை இருந்தால், ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும். பல் பிரச்னையை சரிசெய்தால், சர்க்கரை குறைய வாய்ப்பு இருக்கிறது.

கடைவாய்ப் பற்கள் சொத்தையாகவோ, கோணலாகவோ இருந்து, அவை பிடுங்கப்படுவது சமயங்களில் தலைவலிக்குத் தீர்வாக அமையலாம்.

பல் மற்றும் ஈறு நோய் உள்ளவர்களுக்கு, ரத்தத்தில் கிருமிகள் அதிகரிப்பதால், 'சப் அக்யூட் பாக்டீரியல் எண்டோகார்டிட்டிஸ்’ (Sub Acute Bacterial Endocarditis) என்ற இதயநோய் வருவதற்கு அரிதாக வாய்ப்பு உள்ளது.

காரணம் தெரியாத மூட்டுவலிக்கும், கண்களின் பிரச்னைக்கும் பற்கள் பல நேரங்களில் காரணமாக இருக்கலாம்.

கர்ப்பிணி பெண்கள், குறைப் பிரசவத்தைத் தவிர்க்க, பல் டாக்டரைப் பார்த்து சிகிச்சை எடுப்பது அவசியம்.

பல் துலங்க பளிச்’ டிப்ஸ்

வாய் சுகாதாரத்துக்கு மிகவும் முக்கியம், பல் துலக்குதல். முடிந்தால், ஒவ்வொரு முறையுமே சாப்பிட்டதும் துலக்குதல் மிகவும் நல்லது.

பல் துலக்கும்போது, மேலிருந்து கீழாகத் துலக்கவேண்டும். இடவலமாகத் தேய்க்கக் கூடாது.

ஓவர் பிரஷ்ஷிங்’ கூடாது. எனாமல் போய்விடும். ஒன்று அல்லது இரண்டு நிமிடங்கள் துலக்கினால் போதுமானது.

பல்லிடுக்கில் ஏதாவது சிக்கிக்கொண்டால், எதையாவது வைத்துக் குத்தாமல், ஃப்லாஸ்’ எனப்படும் நூல் கொண்டு சுத்தம்செய்யவேண்டும்.

மென்பானங்கள், இனிப்புப் பண்டங்கள், பல்லில் ஒட்டிக்கொள்ளும் உணவுப் பொருட்கள், சாக்லேட், ஐஸ்கிரீம் போன்றவற்றைத் தவிர்த்து, நிறைய காய்கறி, பழங்கள் சாப்பிடவேண்டும்.

விகடன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக