Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்த வார கவிதை-விகடன் கவிதைகள்
2 posters
Page 1 of 1
இந்த வார கவிதை-விகடன் கவிதைகள்
ராமவாணம் ஒளிரும் கணம் - கவிதை
ஜான் சுந்தர், ஓவியம்: எஸ்.ஏ.வி.இளையபாரதி
சிவப்பு விளக்கொளியில் நின்று
குதிரைகள் உறும
நின்று நடுங்கும் தேர்களின்
பின்னெழும்பும் புகை நடுவே
திடுமெனக் காட்சியளிக்கும்
ஸ்ரீராமச்சந்திரமூர்த்தி
முனைமுறியா பாணங்களை
லாகவமாய் உருவி
சரஞ்சரமாய்த் தொடுக்கிறார்
சுவாசம் முட்டி வரும்
கோபியருக்கு மாத்திரம்
சைக்கிளில் தொங்கும்
அம்பறாத்தூணியிலிருந்து
நறுமணத்தையள்ளி அவர் வழங்க
மன்மதக் கணைகளை
முழக்கணக்கில்
பெற்றுக்கொண்டிருந்தவர்களில் ஒருத்தி
'மூர்த்தியண்ணா எனக்கு ஜாதிப் பூ’ என்ற கணத்தில்
சுங்கம் சிக்னலின் அத்தனை அம்புகளும்
ஒளிர்கிறது ராமர் பச்சையில்!
விகடன்
தமிழ்நேசன்1981- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
Re: இந்த வார கவிதை-விகடன் கவிதைகள்
காத்திருக்கும் திமிங்கிலங்கள் - கவிதை
சமயவேல், ஓவியம்: ஸ்யாம்
பேத்தி சொல்லிவிட்டாள்...
'நாளைக்கு ஒரு நீலத் திமிங்கிலம் படம்
வரைய வேண்டும்’ என.
வெகுகாலத்திற்குப் பிறகு விடிகாலைக் கனவில்
கடலும் வெள்ளமும் சூழ
நீலப்பரப்பில் சிக்கித் தவித்தேன்.
எழுந்தவுடன் சார்ட் பேப்பரை எடுத்து
டேபிளில் விரித்துவைத்து
'தாத்தா இதில் பாதியளவு பெரிய திமிங்கிலம் வரையணும்
மதியம் அப்பா வருவதற்குள் முடித்துவிடுவாயா?’
'அறிவியல் புத்தகத்தில் திமிங்கிலம் இருக்கிறது ஆனால்
புத்தகம் கொண்டுவர மறந்துவிட்டது’ என்றாள்.
'நீ உன் திமிங்கிலத்தையே வரைந்து தா பரவாயில்லை.’
என் திமிங்கிலம் எப்படி இருக்குமாம்
'தாத்தா உன் கம்ப்யூட்டர்ல பாரேன்
நெறையா திமிங்கிலம் இருக்கும்’ என்றாள்.
ரத்திகா போன்ற அன்பான டீச்சர்களின்
அக்கிரமங்கள் பற்றி யோசித்தவாறே
கணினியைத் திறந்தேன்.
ஒரு லட்சம் திமிங்கிலங்கள் இருந்தன
திமிங்கிலங்களின் கடலில்
பென்சிலோடு தத்தளிக்கத் தொடங்கினேன்!
விகடன்
தமிழ்நேசன்1981- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
Re: இந்த வார கவிதை-விகடன் கவிதைகள்
ஏன் பூனை வளர்க்கிறோம்? - கவிதை
மகுடேசுவரன், ஓவியம்: மருது
நம்மில் பலரும்
பூனை வளர்க்கிறோம்.
நாய் வளர்ப்பது காவலுக்கு.
ஆடு, கோழி வளர்ப்பது உணவுக்கு.
பசு, எருமை வளர்ப்பது பாலுக்கு.
காளை வளர்ப்பது காட்டுழவுக்கு.
பயன் கருதி வளர்த்தே
பழகியோர் நாம்.
பூனை வளர்த்து என்ன பயன்?
எலித்தொல்லை என்பீரா?
அதற்கு மாற்று வழியுண்டே.
பூனைக்குச் சந்தை மதிப்புண்டா ?
அதை வளர்த்து விற்க இயலாதே.
அது பால் தருமா?
பால் விற்கும் விலைக்கு
நாம் வாங்கி ஊற்றவேண்டும்.
பாத்திரம் உருட்டும்
முடி உதிர்க்கும்
அது பாட்டுக்கு வரும் போகும்.
பின் ஏன்
பூனை வளர்க்கிறோம்...
கொஞ்சுகிறோம்...
குழந்தையைப்போல் நேசிக்கிறோம்?
ஏனென்றால்
உயிர்களின் மழலையை
நம் உள்ளம் விரும்புகிறது.
நம் காலடியில்
சிற்றுயிரொன்று பணிந்து வாழ்வது
நம் கருணையைப் பெருக்குகிறது.
யார்க்கேனும் உணவிட்டால்
நம் இதயம் நிறைந்துவிடுகிறது.
அபயமளிப்பதில் ஆறுதல் கிடைக்கிறது.
நம் மனம் பல்லுயிரோம்பும் பாங்குடையது.
அந்த வேட்கையை
முடியும் நகமும் முத்து விழிகளும்கொண்ட பூனை
ஏதோ கொஞ்சம் ஆற்றுகிறது.
நாம் பூனை வளர்க்கிறோம்!
விகடன்
தமிழ்நேசன்1981- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
Re: இந்த வார கவிதை-விகடன் கவிதைகள்
ஒரு மண்புழுவின் சரிதம் - கவிதை
கரிகாலன், ஓவியம்: செந்தில்
அலுவலகம் முடிந்து வெளியே வந்த மண்புழு
அண்ணாந்து வானத்தைப் பார்க்கிறது
ஆகாயத்தின் எல்லையற்ற தன்மை
அதற்கு சிறிதளவு நம்பிக்கையைத் தருகிறது
அத்தெம்பில் உடலை லேசாகச் சிலுப்பிக்கொள்ளுகிறது
அதன் சிறிய மூளையில் பகல் முழுதும்
சேகரமான குப்பைகள் சிதறித் தெறிக்கின்றன
வாகனங்கள் அலையாய் எழும் சாலைகள்
அதை வீட்டின் வாசலில் கரையொதுக்குகின்றன
குளியலறைக்குள் நுழையும் அம்மெல்லுடலி
தன் இறுகிய தசைகளை தண்ணீருக்குக் கொடுத்து
தியானித்துக்கிடக்கிறது
அவ்வண்ணமது கண்டடையும் தரிசனங்களில்
அலுவலகக் கசப்புகள் கரைந்தோடுகின்றன
தலைதுவட்டும் துண்டை முகர்ந்துபார்க்கும்
அனிச்சை செயலில் அதன் ஒரு செல் பிளவுறுகிறது
பள்ளிவிட்டு வரும் குட்டி மண்புழுவைப்
பார்க்கும்போது கண்களில் மினுங்குகிறது
அதன் நான்காம் அறிவு
மனைவி கொண்டுவந்து வைக்கும்
ஏலக்காயும் இஞ்சியும் கலந்த ஆவிபறக்கும்
தேநீரை உறிஞ்சுகையில்
சுட்டுக்கொள்கிறது அதன் ஐந்தாவது அறிவு
பிறகு வெகு நேரம்
மாய யதார்த்தத்தில் மிதக்கிறது
நாளை அலுவலகம் செல்ல வேண்டுமே என்பது
நினைவுக்கு வருகையில்
விழித்துக்கொள்கிறது அதன் ஆறாம் அறிவு
அவசரமவசரமாய் சன்னலைச் சாத்தி
கதவைத் தாழிடுகிறது
மிகவும் பாதுகாப்பாயுணரும் மண்புழு
தூங்கிப்போய்விடுகிறது
மறுநாள் காலை
அலுவலகத்தில் ஒப்பமிடும்போதுதான்
ஞாபகத்துக்கு வரும்
அதற்கு ஒரு பெயர் இருப்பது!
விகடன்
தமிழ்நேசன்1981- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
Similar topics
» விகடன் இதழில் ரசித்த கவிதைகள்
» காதல் கவிதைகள் - (விகடன் - போட்டோ கார்டுகள்)
» இந்த வார தத்துவங்கள் -விகடன்
» இந்த வார கழுகார் பதிலகள் -விகடன்
» நாணயம் விகடன் இந்த வாரம்
» காதல் கவிதைகள் - (விகடன் - போட்டோ கார்டுகள்)
» இந்த வார தத்துவங்கள் -விகடன்
» இந்த வார கழுகார் பதிலகள் -விகடன்
» நாணயம் விகடன் இந்த வாரம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|