புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பா.ஜ.க. பாசவலை... நழுவி ஓடும் ரஜினி..! Poll_c10பா.ஜ.க. பாசவலை... நழுவி ஓடும் ரஜினி..! Poll_m10பா.ஜ.க. பாசவலை... நழுவி ஓடும் ரஜினி..! Poll_c10 
30 Posts - 50%
heezulia
பா.ஜ.க. பாசவலை... நழுவி ஓடும் ரஜினி..! Poll_c10பா.ஜ.க. பாசவலை... நழுவி ஓடும் ரஜினி..! Poll_m10பா.ஜ.க. பாசவலை... நழுவி ஓடும் ரஜினி..! Poll_c10 
29 Posts - 48%
mohamed nizamudeen
பா.ஜ.க. பாசவலை... நழுவி ஓடும் ரஜினி..! Poll_c10பா.ஜ.க. பாசவலை... நழுவி ஓடும் ரஜினி..! Poll_m10பா.ஜ.க. பாசவலை... நழுவி ஓடும் ரஜினி..! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பா.ஜ.க. பாசவலை... நழுவி ஓடும் ரஜினி..! Poll_c10பா.ஜ.க. பாசவலை... நழுவி ஓடும் ரஜினி..! Poll_m10பா.ஜ.க. பாசவலை... நழுவி ஓடும் ரஜினி..! Poll_c10 
72 Posts - 57%
heezulia
பா.ஜ.க. பாசவலை... நழுவி ஓடும் ரஜினி..! Poll_c10பா.ஜ.க. பாசவலை... நழுவி ஓடும் ரஜினி..! Poll_m10பா.ஜ.க. பாசவலை... நழுவி ஓடும் ரஜினி..! Poll_c10 
50 Posts - 39%
mohamed nizamudeen
பா.ஜ.க. பாசவலை... நழுவி ஓடும் ரஜினி..! Poll_c10பா.ஜ.க. பாசவலை... நழுவி ஓடும் ரஜினி..! Poll_m10பா.ஜ.க. பாசவலை... நழுவி ஓடும் ரஜினி..! Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
பா.ஜ.க. பாசவலை... நழுவி ஓடும் ரஜினி..! Poll_c10பா.ஜ.க. பாசவலை... நழுவி ஓடும் ரஜினி..! Poll_m10பா.ஜ.க. பாசவலை... நழுவி ஓடும் ரஜினி..! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பா.ஜ.க. பாசவலை... நழுவி ஓடும் ரஜினி..!


   
   
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Thu Oct 16, 2014 6:26 pm

பா.ஜ.க. பாசவலை... நழுவி ஓடும் ரஜினி..!
ப.திருமாவேலன், ஓவியம்: பாலா

பா.ஜ.க. பாசவலை... நழுவி ஓடும் ரஜினி..! P124b
'பாட்ஷா’வை தி.மு.க-வும், 'அண்ணாமலை’யை அ.தி.மு.க-வும், 'பாபா’வை பா.ம.க-வும் ஓட்டியதைப்போல 'லிங்கா’ படத்தை ஓட்ட இதோ வந்துவிட்டது பா.ஜ.க. இந்தப் படத்துக்கான செலவு இல்லாத பி.ஆர்.ஓ-வாக வேலைபார்க்கிறார் பா.ஜ.க-வின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்!

தமிழிசையின் அப்பா குமரி அனந்தன் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தபோது, ரஜினியை காங்கிரஸுக்குள் இழுக்கும் படலம் தொடங்கியது. அன்றைய பிரதமரும், அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவருமான நரசிம்மராவை டெல்லிக்கே சென்று சந்தித்தார் ரஜினி. விடாக்கண்டனும் கொடாக்கண்டனுமான ராவ் - ரஜினி சந்திப்பில் எந்தப் பயனும் ஏற்படவில்லை. 'நீங்கள் காங்கிரஸ் கட்சிக்குள் வந்துவிடுங்கள்’ என ராவ் விடுத்த அழைப்பை, ரஜினி ஏற்கவில்லை. இதோ, 20 ஆண்டுகள் கடந்துவிட்டன. குமரி அனந்தனின் மகள் தமிழிசை, பா.ஜ.க-வின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக ஆனதில் இருந்து, ரஜினியை பா.ஜ.க-வில் சேரும்படி அழைப்பு விடுத்துக்கொண்டிருக்கிறார். காட்சி மாறவில்லை; கட்சிதான் மாறி இருக்கிறது.
பா.ஜ.க. பாசவலை... நழுவி ஓடும் ரஜினி..! P124
அன்று ராவ், ரஜினியை டெல்லிக்கு வரவழைத்துப் பேசினார். இன்று மோடி, ரஜினி வீட்டுக்கே வந்து பேசினார். பா.ஜ.க-வின் அகில இந்தியத் தலைவர் அமித்ஷா, தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கிறார். வழக்கம்போல் ரஜினி மௌனமாக இருக்கிறார்.

தமிழ்நாடு அரசியல் சூழ்நிலை, இதற்கு முன் இருந்ததைவிட இப்போது அதிக நம்பிக்கையைக் கொடுத்துள்ளது பா.ஜ.க-வுக்கு. 50 ஆண்டு கால அரசியலில் அசைக்க முடியாத கட்சிகளாக இருந்த தி.மு.க-வும், அ.தி.மு.க-வும் மிகப் பெரிய நெருக்கடிக்குள் சிக்கியுள்ள நேரம் இது. அந்தக் கட்சிகளில் முகமும் முகவரியுமாக இருக்கும் தலைமைப் பீடங்களே, ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ளன. ஒன்றின் பலவீனத்தை இன்னொன்று பலம் ஆக்கிக்கொண்டு வென்ற காலம் பறிபோய்விட்டது. இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்திப் பாயத் தயார் ஆகிறது பா.ஜ.க. அதற்குத் தேவை ஒரே ஒரு மாஸ்க்; அவர்களை ஈர்க்கிறது ரஜினியின் மாஸ்!

வருமானத்துக்கு அதிகமாகச் சொத்துச் சேர்த்த வழக்கில், நான்கு ஆண்டு சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும், சொத்துப் பறிப்புத் தண்டனையும் பெற்று... ஸ்ரீரங்கம் தொகுதி எம்.எல்.ஏ தகுதியை இழந்து, தமிழ்நாட்டு முதலமைச்சர் பொறுப்பையும் பறிகொடுத்து, பெங்களூரு பரப்பன அக்ரஹாராவில் சிறைவைக்கப்பட்டுள்ளார் ஜெயலலிதா. ஜாமீன் வாங்குவதே பெரிய பிரளயம் ஆகிக்கொண்டிருக்கிறது. வழக்கில் இருந்து விடுபடுவது பற்றி யோசிக்கவே முடியவில்லை. ஒருவேளை அடுத்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க வெல்லலாம். ஆனால், அம்மா முதலமைச்சர் ஆக முடியும் என ஆருடம் சொல்ல ஒருவர்கூட முன்வரவில்லை.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வென்ற நரேந்திர மோடி, 'இனி நம்முடைய இலக்கு, அனைத்து மாநிலங்களிலும் பா.ஜ.க. ஆட்சி’ என தன் ஆசையை வெளிப்படுத்தினார். அதனால்தான் சிந்தாந்த வேறுபாடு கொஞ்சமும் இல்லாத சிவசேனாவுடன்கூட கூட்டணி வைக்காமல் மகாராஷ்டிராவில் ஆட்சியைப் பிடிக்க மல்லுக்கு நிற்கிறார். அப்படிப்பட்ட மோடி தமிழ்நாட்டைத் தள்ளிவைப்பாரா?

நாடாளுமன்றத்தில் காங்கிரஸுக்கு அடுத்த தனிப்பெரும் கட்சி என்ற இடத்தில் இருக்கிறது அ.தி.மு.க. 'மூன்றாவது அணி ஆட்சியைப் பிடிக்கும் சூழ்நிலை வருமானால் ஜெயலலிதாதான் பிரதமர்’ என அகில இந்தியத் தலைவர்கள் சிலர் பேசியதை மோடி மறந்திருக்க மாட்டார். 'மோடியா... லேடியா... என்பதுதான் இந்தத் தேர்தல்’ என ஜெயலலிதா செய்த நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரமும் மோடிக்கு என்றும் கசப்பைத் தரக்கூடியது. மே மாதத்தில் மிரட்டிக்கொண்டிருந்த ஜெயலலிதா, அக்டோபரில் இப்படி அகப்பட்டுக்கொள்வார் என மோடியே எதிர்பார்க்கவில்லை.

ஜெயலலிதா மீதான வழக்கின் தீர்ப்பு தேதி அறிவிக்கப்பட்டது முதலே, ரஜினியுடன் உறவுகொண்டாட ஆரம்பித்துவிட்டார் அமித்ஷா. சமீபத்திய சில வாரங்களில் கே.எஸ்.ரவிகுமாரைவிட ரஜினிக்கு அதிகம் போன் செய்தது அமித்ஷாதான்! இது அ.தி.மு.க விவகாரம் என்றால்... தி.மு.க நிலையைப் பற்றி சொல்லவேண்டியது இல்லை. அதற்கு திசையெங்கும் சிக்கல்.

டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடந்துவரும் 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை நவம்பர் 10-ம் தேதி தொடங்கும் என நீதிபதி ஓ.பி.ஷைனி அறிவித்துள்ளார். இது சி.பி.ஐ தாக்கல் செய்த வழக்கு. ஜனவரி இறுதிக்குள் இந்த வழக்கின் தீர்ப்பு வரப்போகிறது. இதே நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தாக்கல் செய்த வழக்கின் குற்றச்சாட்டுப் பதிவு, அக்டோபர் 20-ம் தேதி நடக்க இருக்கிறது. 'கலைஞர் டி.வி-க்கு 200 கோடி ரூபாய் முறையற்ற வழியில் வந்தது’ என்பது இந்தக் குற்றச்சாட்டின் சாராம்சம். ஏர்செல் - மேக்ஸிஸ் சம்பந்தமான வழக்கின் குற்றப் பத்திரிகையும் இதே நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. தனி டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் அமைக்கப்பட்ட விவகாரம், சி.பி.ஐ-யின் பரிசீலனையில் இருக்கிறது. மத்திய தொலைத்தொடர்பு துறையின் முன்னாள் அமைச்சர்களான ஆ.ராசா, தயாநிதி மாறன் ஆகிய இருவரும் இந்த வழக்குகளின் மையப்புள்ளிகள். கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், மகள் கனிமொழி, பேரன் கலாநிதி மாறன் ஆகிய மூவரும் இந்த வழக்கு வலைக்குள் மாட்டிக்கொண்டிருக்கிறார்கள். கலைஞர், சன் ஆகிய இரண்டு டி.வி-களும் இந்த வழக்குக்குள் வந்து போகின்றன. மொத்தத்தில் அறிவாலயம் ஆடித்தான் போயிருக்கிறது. ஜெயலலிதா வழக்கின் தீர்ப்பில் கருணாநிதி அடக்க சிகாமணியாக இருந்ததற்கு இதுதான் காரணம். ஆக, 2015-ம் ஆண்டு முழுக்கவே தி.மு.க-வைப் பொறுத்தவரை சி.பி.ஐ சிறப்பு ஆண்டாக இருக்கப்போகிறது.

இப்படி இரண்டு கட்சிகளும் பாதாளத்தில் போய்க்கொண்டிருக்கும்போது, வேதாளமாக எழப் பார்க்கிறது பா.ஜ.க. இதற்கு தோள்கொடுக்க ரஜினி என்ற விக்கிரமாதித்தன் இல்லாவிட்டால் வீண் என்று பா.ஜ.க-வுக்குத் தெரியும். மோடி தன் வீடு தேடி வந்தபோதும் பிடிகொடுக்காத ரஜினி, இனி அரசியல் ஆசை வசப்படுவாரா என்பதும் சந்தேகமே. 1995-ம் ஆண்டு நிலைமை இப்போது இல்லை என்பதும் ரஜினிக்குத் தெரியும். இப்போது ரஜினிக்கு இன்னும் 20 வயது கூடிவிட்டது மட்டும் அல்ல, உடலும் மனமும் அதைவிடக் கூடுதலாகத் தளர்ந்துவிட்டது என்பதையும் உணர்வார்.

'லிங்கா’ பட ஷூட்டிங்குக்காக மூன்று ரஜினியை வைத்துள்ளார்கள். வேகமான சில காட்சிகளுக்கு டூப் ரஜினிகள்தான் நடிக்க வைக்கப்படுகிறார்கள். மலேசிய மருத்துவமனைக்குப் போய்விட்டு வந்ததை மறுபிறப்பாகத்தான் ரஜினி பார்க்கிறார். உடலும் உற்சாகமும் குறைந்த நேரத்தில் வரும் பா.ஜ.க ரதத்தில் தனியாக மட்டும் அல்ல, யாரும் தூக்கிவிட்டாலுமே ரஜினி ஏறுவது கஷ்டம்தான்.

'அரசியலில் ஜெயிக்கணும்னா, திறமை, புத்திசாலித்தனம், உழைப்பு மட்டும் பத்தாது. சந்தர்ப்பம், சூழ்நிலை, நேரம்... இந்த மூன்றுக்கும் மிகப் பெரிய இடம் உண்டு. அரசியலுக்கு நான் வந்திருக்கணும்னா, 1996-லேயே வந்திருக்கணும். என்னைக் கட்டாயப்படுத்தி வரவைக்க முடியாது. கட்டாயப்படுத்திக் கல்யாணம் பண்ணினா, வாழ்க்கை நல்லாவா இருக்கும்? வரணும்னு நினைச்சா, நாளைக்கே ஏற்பாடு பண்ணிடுவேன். ஆனா, அவன் சொல்லணும்!’ என 'எந்திரன்’ பட ரிலீஸ் நேரத்தில் ரசிகர்களைக் கூட்டிவைத்து ரஜினி சொன்னார். எனவே, ரஜினிக்குத் தெரியும், இது மற்றவர்களுக்குக் கெட்ட நேரமாக இருந்தாலும், தனக்கு நல்ல நேரம் அல்ல என்று!

மேலும், ரஜினி வரும் இடத்தில் விஜயகாந்த் இருக்க மாட்டார். ராமதாஸ், இருக்கவே மாட்டார். வைகோ ஏற்கெனவே இல்லை. எனவே ரஜினியை மட்டும் நம்பி... இருக்கிறதை விட்டுவிட்டுப் பறக்கிறதைப் பிடிக்கப்போகிறதா பா.ஜ.க?

ஆனந்த விகடன்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 16, 2014 7:04 pm

இவங்களுக்கு வேற வேலை யே இல்லையோ??????அவர் பின்னால் போகிறார்கள்??????? சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக