புதிய பதிவுகள்
» கல்லா கடவுளா...
by ayyasamy ram Today at 10:37 am

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 10:33 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அலிஷா பூமிக்குத் திரும்புவாரா? Poll_c10அலிஷா பூமிக்குத் திரும்புவாரா? Poll_m10அலிஷா பூமிக்குத் திரும்புவாரா? Poll_c10 
98 Posts - 49%
heezulia
அலிஷா பூமிக்குத் திரும்புவாரா? Poll_c10அலிஷா பூமிக்குத் திரும்புவாரா? Poll_m10அலிஷா பூமிக்குத் திரும்புவாரா? Poll_c10 
54 Posts - 27%
Dr.S.Soundarapandian
அலிஷா பூமிக்குத் திரும்புவாரா? Poll_c10அலிஷா பூமிக்குத் திரும்புவாரா? Poll_m10அலிஷா பூமிக்குத் திரும்புவாரா? Poll_c10 
21 Posts - 11%
mohamed nizamudeen
அலிஷா பூமிக்குத் திரும்புவாரா? Poll_c10அலிஷா பூமிக்குத் திரும்புவாரா? Poll_m10அலிஷா பூமிக்குத் திரும்புவாரா? Poll_c10 
9 Posts - 5%
T.N.Balasubramanian
அலிஷா பூமிக்குத் திரும்புவாரா? Poll_c10அலிஷா பூமிக்குத் திரும்புவாரா? Poll_m10அலிஷா பூமிக்குத் திரும்புவாரா? Poll_c10 
7 Posts - 4%
prajai
அலிஷா பூமிக்குத் திரும்புவாரா? Poll_c10அலிஷா பூமிக்குத் திரும்புவாரா? Poll_m10அலிஷா பூமிக்குத் திரும்புவாரா? Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
அலிஷா பூமிக்குத் திரும்புவாரா? Poll_c10அலிஷா பூமிக்குத் திரும்புவாரா? Poll_m10அலிஷா பூமிக்குத் திரும்புவாரா? Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
அலிஷா பூமிக்குத் திரும்புவாரா? Poll_c10அலிஷா பூமிக்குத் திரும்புவாரா? Poll_m10அலிஷா பூமிக்குத் திரும்புவாரா? Poll_c10 
2 Posts - 1%
Barushree
அலிஷா பூமிக்குத் திரும்புவாரா? Poll_c10அலிஷா பூமிக்குத் திரும்புவாரா? Poll_m10அலிஷா பூமிக்குத் திரும்புவாரா? Poll_c10 
2 Posts - 1%
cordiac
அலிஷா பூமிக்குத் திரும்புவாரா? Poll_c10அலிஷா பூமிக்குத் திரும்புவாரா? Poll_m10அலிஷா பூமிக்குத் திரும்புவாரா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அலிஷா பூமிக்குத் திரும்புவாரா? Poll_c10அலிஷா பூமிக்குத் திரும்புவாரா? Poll_m10அலிஷா பூமிக்குத் திரும்புவாரா? Poll_c10 
225 Posts - 52%
heezulia
அலிஷா பூமிக்குத் திரும்புவாரா? Poll_c10அலிஷா பூமிக்குத் திரும்புவாரா? Poll_m10அலிஷா பூமிக்குத் திரும்புவாரா? Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
அலிஷா பூமிக்குத் திரும்புவாரா? Poll_c10அலிஷா பூமிக்குத் திரும்புவாரா? Poll_m10அலிஷா பூமிக்குத் திரும்புவாரா? Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
அலிஷா பூமிக்குத் திரும்புவாரா? Poll_c10அலிஷா பூமிக்குத் திரும்புவாரா? Poll_m10அலிஷா பூமிக்குத் திரும்புவாரா? Poll_c10 
18 Posts - 4%

5 Posts - 1%
JGNANASEHAR
அலிஷா பூமிக்குத் திரும்புவாரா? Poll_c10அலிஷா பூமிக்குத் திரும்புவாரா? Poll_m10அலிஷா பூமிக்குத் திரும்புவாரா? Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

அலிஷா பூமிக்குத் திரும்புவாரா?

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Thu Oct 16, 2014 6:43 pm

அலிஷா பூமிக்குத் திரும்புவாரா?
எஸ்.கலீல்ராஜா

அலிஷா கார்சன்... 13 வயது அமெரிக்கச் சிறுமி. இப்போது அமெரிக்கப் பிரபலமாக இருக்கும் அலிஷா, இன்னும் சில வருடங்களில் அகில உலகப் பிரபலம் ஆகிவிடுவார். அப்போதைய தலைமுறை மாணவர்கள், 'செவ்வாய்க் கிரகத்தில் கால் பதித்த முதல் பெண், அலிஷா கார்சன்’ என நெஞ்சில் குத்திக் குத்தி மனப்பாடம் செய்யலாம். அல்லது டேப்லெட்டில் லைவ் வீடியோ பார்த்து லைக்கிட்டு 'குட் டே அலிஷா’ என கமென்ட்டலாம்.

சிலர் பிறக்கும்போதே ஐ.க்யூ லெவல் எகிறிப் பிறப்பார்களே... அப்படி ஒரு பெண் அலிஷா. 'நான் விண்வெளி வீராங்கனையாக வேண்டும்’ என அலிஷா சொன்னபோது அவளுக்கு வயது... மூன்று! பள்ளியில் இப்போது செவன்த் கிரேடு படிக்கும் அலிஷா தன் பாடத் திட்டங்களோடு சேர்ந்து விண்வெளி தொடர்பான பாடங்கள், ஸ்பானிஷ், பிரெஞ்சு, சைனீஸ்... மொழிகளையும் கற்றுக்கொண்டுவிட்டாள்.

நாசா நடத்திய உலக விண்வெளிப் பயிற்சி முகாம் ஒன்றுக்குத் தேர்வான ஒரே பெண் இவர்தான். நாசாவின் விண்வெளி ஆராய்ச்சிகளில் பங்கேற்க வேண்டும் என்றால், அதன் விதவிதமான துறைகள் அளிக்கும் பயிற்சிகளில் 'டிஸ்டிங்ஷனோடு’ தேறியிருக்க வேண்டும். அப்படி... மொத்தம் 14 துறைகள் அளித்த பயிற்சிகள் அனைத்திலும் அலிஷா 'அவுட்ஸ்டேண்டிங்’ மாணவி.
அலிஷா பூமிக்குத் திரும்புவாரா? P28a

Latest News

காவல் நிலைய துப்பாக்கிச் சூடு சம்பவம்: சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவு!

வியாழன், அக்டோபர் 16, 2014
புரட்டாசி 30, ஜய வருடம்

ஆனந்த விகடன்
/
22 Oct, 2014
/
அலிஷா பூமிக்குத் திரும்புவாரா?

A- A A+

Previous Article
Next Article

4
Bookmark
Print
Print
Email

அலிஷா பூமிக்குத் திரும்புவாரா?
எஸ்.கலீல்ராஜா

அலிஷா கார்சன்... 13 வயது அமெரிக்கச் சிறுமி. இப்போது அமெரிக்கப் பிரபலமாக இருக்கும் அலிஷா, இன்னும் சில வருடங்களில் அகில உலகப் பிரபலம் ஆகிவிடுவார். அப்போதைய தலைமுறை மாணவர்கள், 'செவ்வாய்க் கிரகத்தில் கால் பதித்த முதல் பெண், அலிஷா கார்சன்’ என நெஞ்சில் குத்திக் குத்தி மனப்பாடம் செய்யலாம். அல்லது டேப்லெட்டில் லைவ் வீடியோ பார்த்து லைக்கிட்டு 'குட் டே அலிஷா’ என கமென்ட்டலாம்.

சிலர் பிறக்கும்போதே ஐ.க்யூ லெவல் எகிறிப் பிறப்பார்களே... அப்படி ஒரு பெண் அலிஷா. 'நான் விண்வெளி வீராங்கனையாக வேண்டும்’ என அலிஷா சொன்னபோது அவளுக்கு வயது... மூன்று! பள்ளியில் இப்போது செவன்த் கிரேடு படிக்கும் அலிஷா தன் பாடத் திட்டங்களோடு சேர்ந்து விண்வெளி தொடர்பான பாடங்கள், ஸ்பானிஷ், பிரெஞ்சு, சைனீஸ்... மொழிகளையும் கற்றுக்கொண்டுவிட்டாள்.

நாசா நடத்திய உலக விண்வெளிப் பயிற்சி முகாம் ஒன்றுக்குத் தேர்வான ஒரே பெண் இவர்தான். நாசாவின் விண்வெளி ஆராய்ச்சிகளில் பங்கேற்க வேண்டும் என்றால், அதன் விதவிதமான துறைகள் அளிக்கும் பயிற்சிகளில் 'டிஸ்டிங்ஷனோடு’ தேறியிருக்க வேண்டும். அப்படி... மொத்தம் 14 துறைகள் அளித்த பயிற்சிகள் அனைத்திலும் அலிஷா 'அவுட்ஸ்டேண்டிங்’ மாணவி.

'எல்லாம் சரி... அதற்காக 13 வயது சிறுமியை செவ்வாய்க் கிரகத்துக்குத் தனியாக அனுப்ப முடியுமா என்ன?’ இப்போது நாசாவிடம் இருக்கும் அதிகபட்சத் தொழில்நுட்பத்தின் மூலம் ஒரு ரோபோவை செவ்வாயில் இறக்கிவிட்டு, இங்கிருந்து ரிமோட்டில் ஆணைகள் பிறப்பித்து இயங்கச் செய்யலாம். அதை மீண்டும் பூமிக்கு அழைத்து வர முடியாது. ஆனால், 2033-ல் மனிதனை செவ்வாயில் இறக்கும் அளவுக்கு தொழில்நுட்ப வளர்ச்சி பெற்றிருக்கும் நாசா, அப்போதுதான் அலிஷாவை செவ்வாய்க்கு அனுப்புமாம்!

மனிதனை செவ்வாய்க்கு அனுப்புவதற்கு எகிடுதகிடாக செலவுகள் எகிறும். நிலா என்றால் பரவாயில்லை. பக்கத்திலேயே இருக்கிறது. செவ்வாயோ எக்கச்சக்க தூரம். செலவு ஒரு பக்கம். அதைவிட சவால், பயணிக்கும் மனிதனின் மனநிலை. கிட்டத்தட்ட ஒரு வருடம் இருளான விண்வெளியில் தனிமையில் ஒரு கேப்சூலில் (விண்வெளி ஓடம்) பயணிக்க வேண்டும். அவருக்குத் தேவையான உணவு, தண்ணீர் அதில் இருக்க வேண்டும். தனிமை, அமைதி, சூழந்திருக்கும் பேரிருள் ஆகியவற்றால் அந்த மனிதனின் மனநிலை பாதிக்கப்படலாம். அதைச் சமாளிக்கப் பயிற்சியளிக்க வேண்டும். ரோபோ என்றால், பலூன்களின் உதவியோடு செவ்வாயின் தரையில் 'தடால்... புடால்’ என மோதி தரையிறக்கிவிடலாம். ஆனால், மனிதனை அப்படி இறக்க முடியுமா? சரி... கஷ்டப்பட்டு செவ்வாயில் இறக்கிவிடலாம் ஓ.கே. அவனை/அவளை திரும்ப எப்படி பூமிக்கு மீண்டும் அழைத்துவருவது? அங்கிருந்து கிளம்பி வர, இங்கிருந்து அனுப்பிவைத்ததைப்போல ரிட்டர்ன் ராக்கெட் வேண்டும். பூமியின் ஈர்ப்பு விசையைவிட செவ்வாயின் ஈர்ப்பு விசை அதிகம். எனவே, பூமியில் இருந்து கிளம்பியதைவிட செவ்வாயில் இருந்து அதிவேகமாகக் கிளம்ப வேண்டும். அதற்கு எரிபொருள் வேண்டும்; அதையும் பூமியில் இருந்தே எடுத்துச் செல்ல வேண்டும். நிலவின் வட்டப்பாதையில் ராக்கெட்டை நிலைநிறுத்தி, ஆம்ஸ்ட்ராங்க் திரும்ப வந்ததுபோல, செவ்வாயில் இருந்து திரும்பினாலும், மீண்டும் ஒரு வருடப் பயணம். அதற்கு தேவையான உணவு, தண்ணீர் வேண்டும். நிலா பூமியைச் சுற்றி வருகிறது. ஆனால் செவ்வாய் சூரியனைச் சுற்றி வருகிறது. காலமும், தூரமும் மாறிக் கொண்டே இருக்குமே? அதையும் கணக்கிட வேண்டும். எவ்வளவு பெரிய வேலை?
அலிஷா பூமிக்குத் திரும்புவாரா? P28
சரி... செவ்வாய்க்குச் சென்ற ஆளைத் திரும்ப அழைத்தால்தானே இவ்வளவு அக்கப்போர். 'ஒன் வே ட்ரிப்’ போல இறக்கி மட்டும் விட்டுவிட்டு ஆராய்ச்சி செய்தால்? 1998-ல் இந்த ஐடியாவையும் யோசித்தார்கள் விஞ்ஞானிகள். அதன்படி பூமியில் இருந்து கிளம்பும் ஆளிடம் பத்திரத்தில் கையெழுத்து வாங்கிவிடுவார்கள். அவருடைய குடும்பத்துக்கு பெருந்தொகை செட்டில் செய்யப்படும். உலக வரலாற்றில் 'முதல் செவ்வாய் மனிதன்’ என்ற புகழ் கிடைக்கும். ஆனால் அதை அனுபவிக்க முடியாது. செவ்வாயில் இறங்கி ஆராய்ச்சி செய்ய வேண்டும். திரும்பி பூமிக்கு வர முடியாது. கேப்சூலில் இருக்கும் உணவும் தண்ணீரும் தீரும் வரை உயிர் வாழ்ந்துகொள்ளலாம். பின் மாஸ்க்கைக் கழற்றி செவ்வாயில் இருந்து சொர்க்கமோ, நரகமோ போய்ச் சேரலாம். புவியின் முதல் மனிதன் மாதிரி அவர் செவ்வாயின் முதல் ஆதாம் அல்லது ஏவாள் ஆகலாம். ஆனால், 'முடிந்த அளவு ஆளை திரும்பக் கூட்டிவரும் வேலையைப் பார்ப்போம்’ எனக் குரல் வர, திட்டத்தை அப்படியே பெண்டிங்கில் வைத்துவிட்டார்கள்.

'செவ்வாயில் மனிதன்’ திட்டத்துக்கு இத்தனை பிரச்னைகள் ஓடிக்கொண்டிருக்க, நாசாவின் தேர்வுகளை அநாயசமாக எழுதி, செல்லப் பிள்ளை ஆகிவிட்டாள் அலிஷா. அளப்பறிய ஐ.க்யூ-வாலும் ஆர்வத்தாலும், நாசா அவளைக் கிட்டத்தட்ட தத்தெடுத்துக்கொண்டுவிட்டது. 'பங்கி ஜம்பிங், ஸ்கை டைவிங், ஸ்கூபா டைவிங்... எல்லாம் கத்துகிட்டு வா’ என நாசா விஞ்ஞானிகள் அசைன்மென்ட் கொடுக்கும் அளவுக்கு இப்போது அலிஷா அங்கே டார்லிங். இன்னும் 20 வருடங்கள் கழித்து, அலியாவுக்கு 33 வயது ஆகியிருக்கும். கிட்டத்தட்ட நாசாவின் 'மிக அனுபவசாலி’ விண்வெளி ஆராய்ச்சியாளர் ஆகியிருப்பார். அதனால், அப்போது அலிஷாவை செவ்வாய்க்கு அனுப்ப, இப்போதே பரிந்துரைக்கிறார்கள் பல விஞ்ஞானிகள். அது தொடர்பான பரபரப்பைக் கண்டுகொள்ளாமல், விண்வெளி தொடர்பான பயிற்சிகள், ரோபோட்டிக்ஸ் பாடங்கள் என செம பிஸியாக வலம்வருகிறார் அலிஷா!

அடுத்துவரும் 20 வருடங்கள் எந்தப் பஞ்சாயத்தும் இல்லாமல், மூன்றாம் உலகப் போர் எதுவும் மூளாமல், எல்லாம் சுபமாக நடந்து, அலிஷாவை செவ்வாய்க்கு அனுப்ப நாசா முடிவு எடுக்கும்பட்சத்தில், மில்லியன் டாலர் கேள்வி ஒன்று தொக்கி நிற்கும். அது, அலிஷாவை பூமிக்குத் திரும்ப அழைத்துக்கொள்வதா... இல்லை செவ்வாய்க் கிரகத்திலேயே இறக்கிவிட்டுவிடுவதா?!’

ஆனந்த விகடன்

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Thu Oct 16, 2014 6:53 pm

வங்கக் கடலில் தங்கக் கனவு!
நா.சிபிச்சக்கரவர்த்தி, படங்கள்: கே.ராஜசேகரன்

பரபர சென்னைத் துறைமுகத்தின் இன்னொரு பக்கம்... அலையோசையைத் தவிர அத்தனை அமைதி. பாய்மரப் படகுகள் அலைகளுக்கு இசைவாக அசைந்துகொண்டிருக்க, உற்சாகப் பறவைகளாக இருந்தனர் வர்ஷா கௌதம், ஐஸ்வர்யா நெடுஞ்செழியன் இருவரும். ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மகளிர் பிரிவில் வெண்கலம் வென்ற சாதனைத் தமிழ்ப் பெண்கள். சர்வதேச செய்லிங் போட்டிகளில் இந்தியப் பெண்கள் வென்ற முதல் பதக்கம் இது!

தங்கள் பாய்மரத்தின் கயிறுகளை இறுக்கிக்கொண்டே பேசினார் வர்ஷா... ''இதுதான் எங்க செல்லம்... பேரு '49ERFX’. இந்த வகைப் படகில்தான் ஒலிம்பிக்கில் செய்லிங் போட்டிகள் நடத்துவாங்க. அதனால்தான் இந்த வருஷ ஆரம்பத்தில் இருந்தே இந்தப் படகில் பயிற்சிகள் ஆரம்பிச்சுட்டோம். அடுத்து எங்க இலக்கு ஒலிம்பிக்கில் பதக்கம்!'' என்று வர்ஷா சொல்ல, ''ஆங்ரி பேர்டு மாதிரி அவசர பேர்டு நீ. முதலில் நம்மைப் பத்தி கொஞ்சம் சொல்லிடலாம்!'' என்று ஆரம்பிக்கிறார் ஐஸ்வர்யா.
அலிஷா பூமிக்குத் திரும்புவாரா? P76a
''நான் எம்.ஓ.பி வைஷ்ணவா கல்லூரியில் சோஷியாலஜி படிக்கிறேன். 18 வயசு. வர்ஷாவுக்கு 16 வயசு. ஓப்பன் ஸ்கூலில் ப்ளஸ் டூ படிக்கிறா. எங்களுக்கு செய்லிங் அறிமுகம் ஆனதும், நாங்க ஒருத்தருக்கு ஒருத்தர் அறிமுகம் ஆனதும் செம ஜாலி ஸ்டோரி. எட்டு வருஷங்களுக்கு முன்னாடி வர்ஷாவோட பக்கத்து வீட்டுக்காரங்க செய்லிங் விளையாடப் போவாங்களாம். இவள் சேட்டை தாங்க முடியாம, அவங்ககூட அனுப்பிவெச்சிருக்காங்க. 'அந்த விளையாட்டை வேடிக்கை பார்க்கவே இவ்ளோ ஜாலியே இருக்கே... விளையாடினா எப்படி இருக்கும்?’னு அவளும் கத்துக்க ஆரம்பிச்சிருக்கா. நான் அஞ்சாவது படிக்கும்போது செய்லிங் பயிற்சியில் சேர்ந்தேன். அப்ப வர்ஷா எனக்குப் பழக்கம் இல்லை.

'செய்லிங்’கில் எடுத்ததும் கடலில் இறக்கிவிட மாட்டாங்க. சில வாரங்கள் தியரி கிளாஸ். அதில் படகின் அமைப்பு, பாகங்கள், கடலின் தன்மை, காற்றின் வேகம்னு அடிப்படை விஷயங்கள் கத்துக்கொடுத்தாங்க. அப்புறம் ஒரு குட்டிப் படகைக்கொண்டு பயிற்சியாளர் அடிப்படைப் பயிற்சிகள் கத்துக்கொடுத்தார்'' என்று ஐஸ்வர்யா சொல்லிக்கொண்டிருக்க, ''நம்ம ரெண்டு பேரும் பார்ட்னர் ஆன கதையை நான்தான் சொல்வேன்!'' எனத் தானாகவே என்ட்ரி கொடுக்கிறார் வர்ஷா.

'' 'கேம்ப்’பில் பார்த்தா 'ஹலோ’ சொல்லிக்கிற அளவுக்குத்தான் எங்களுக்குள் ஆரம்பத்தில் பழக்கம். மூணு வருஷம் முன்னாடி ஐரோப்பாவில் இருந்து பீட்டர் கான்வேங்கிற பயிற்சியாளர், தமிழ்நாட்டுக்கு வந்தார். நாங்க ரெண்டு பேரும் பாய்மரப் படகை ஓட்டுறதைப் பார்த்துட்டு, 'நீங்க தனித்தனியா படகு ஓட்டி எவ்வளவு சாதிப்பீங்கனு தெரியலை. ஆனா, ரெண்டு பேரும் சேர்ந்து படகு ஓட்டினா, மெடல் நிச்சயம்’னு சொன்னார். சொன்னதோடு, அவரே எங்களுக்குப் பயிற்சியும் கொடுத்தார். அதுதான் திருப்புமுனை. தினமும் கடலில் பயிற்சி. காலையில் கடலுக்குள் போனா, சாயங்காலம்தான் கரைக்கு வருவோம். நாங்க பண்ண சின்னச்சின்னத் தப்புகளைக் கண்டுபிடிச்சு, எங்களை டியூன் பண்ணிக்கிட்டே இருந்தார் எங்க கோச்!'' என்று வர்ஷா சொல்லிக்கொண்டிருக்கும்போதே, அங்கு கையில் வெள்ளைப் பூண்டுகளோடு வருகிறார் கோச் பீட்டர். ''ரெண்டு பேரும் கடலே கதின்னு இருக்கிறதால சளி பிடிச்சிருக்கு. அதுக்கு பெஸ்ட் ஆன்ட்டிபயாடிக் பூண்டுதான்!'' என்பவர் தன் கைகளாலேயே பூண்டை உரித்துக் கொடுத்துச் சாப்பிடச் சொல்கிறார். முகம் கோணி கஷ்டப்பட்டு இருவரும் சாப்பிட்டு முடித்த பின், ''பேசி முடிச்சிட்டு சீக்கிரம் கடலுக்கு வாங்க'' என உத்தரவு போட்டுவிட்டுக் கிளம்புகிறார்.
அலிஷா பூமிக்குத் திரும்புவாரா? P76b
''இப்படித்தான் சின்னச் சின்ன விஷயங்களில்கூட ரொம்ப அக்கறை காட்டுவார் எங்க கோச். பீட்டர் சார் எங்களுக்குப் பயிற்சி கொடுக்க ஆரம்பிச்ச 2011-ம் வருஷம், சிட்னி போட்டியில் பரிசை ஜஸ்ட் மிஸ் பண்ணினோம். 'உலகத்தின் ஒவ்வொரு கடலும் ஒரு கேரக்டர். நிறைய நாடுகளுக்குப் பயணிச்சு போட்டிகளில் கலந்துக்கங்க. அப்பதான் வெரைட்டியான அனுபவம் கிடைக்கும்’னு எங்களை உற்சாகப்படுத்திட்டே இருப்பார்!'' எனப் பூரிக்கிறார் ஐஸ்வர்யா.

''இது காஸ்ட்லியான விளையாட்டு. இந்தப் படகோட விலை 21 லட்சம். ஒரு படகு வாங்குறதும், அதைப் பராமரிக்கிறதும் செலவு பிடிக்கிற விஷயம். வெளிநாட்டுப் போட்டிகளுக்குப் போகும்போது, படகை எடுத்துட்டுப் போறதும் ரொம்ப செலவு பிடிக்கும். அதனால ஐரோப்பாவில் எங்களுக்குனு சொந்தமா ஒரு படகு வாங்கி வெச்சிருக்கோம். அங்கே எந்தப் போட்டினாலும் அதை எடுத்துட்டுப் போவோம்'' என்கிற வர்ஷா, ''பயிற்சிக்கு நேரம் ஆச்சு. கோச் திட்டுவார். நாங்க முன்னாடி போறோம். நீங்க பின்னாடி ஒரு படகில் ஃபாலோ பண்ணுங்க!'' என்று கிளம்பிவிட்டார்.

'படகில் ஃபாலோவா?’ என எங்களுக்கு அள்ளு கிளம்பியது!

பாய்மரத்தில் இந்தியக் கொடி அச்சடிக்கப்பட்டிருக்க, உடம்பை வளைத்து பாய் மரத்தைத் திருப்பி அதிவேகமாகப் படகைச் செலுத்துகிறார்கள். ஒரு கட்டத்தில் வீசும் காற்றின் வேகம் அதிகரிக்க, படகு தண்ணீரில் மிதக்காமல் தாவித் தாவி பறக்க ஆரம்பிக்கிறது. அலைகளின் தாக்குதலுக்குத் தாக்குப்பிடிக்க முடியாமல் ஐஸ்வர்யா இரண்டு முறை கடலில் விழுந்து, அடுத்த கணமே தாவி படகில் ஏறினார். அரை மணி நேரம் படகைச் செலுத்தியவர்கள் ரிலாக்ஸ் பண்ண, எங்கள் படகுக்கு வந்தார்கள்.
அலிஷா பூமிக்குத் திரும்புவாரா? P76
''இப்படித்தாங்க விளையாடுவோம். படகைத் தயார் செய்யவே ஒரு மணி நேரம் பிடிக்கும். அங்கே இருந்து கடலுக்குள் வர ஒரு மணி நேரம் ஆகும். காலையில் வந்தால் திரும்ப கரைக்கு வந்து படகைப் பிரிச்சு, எடுத்துவைக்க சாயங்காலம் ஆகும். மூணு வருஷமா இதே வேலைதான் எங்களுக்கு!'' என்கிறார் வர்ஷா மூச்சுவாங்க.

''கடல் அலைகளின் வேகம், காற்றின் போக்கு எல்லாத்தையும் கணிச்சுத்தான் பாய்மரத்தை இயக்கணும். வீசும் காற்றின் உதவியோடு, அதே காற்றை எதிர்த்து படகைச் செலுத்தணும். இந்த விளையாட்டில் இதுதான் இலக்கு என குறிப்பிட்ட தூரம் எதுவும் கிடையாது. வீசும் காற்றின் வேகத்துக்கு ஏற்ப 30 நிமிஷம், 40 நிமிஷம்னு நேரம் ஃபிக்ஸ் பண்ணுவாங்க. அதுக்குள்ள இரண்டு லேப் சுற்றி வரணும். குறைந்தது 10 கிலோமீட்டர் வேகத்துல காத்து அடிச்சாதான் போட்டியே நடத்துவாங்க. இங்கே உள்ள காற்று, தண்ணீரில் பிராக்டீஸ் பண்ணிட்டு வெளிநாடு போகும்போது புதுக் காத்து, புதுத் தண்ணீர்னு திணற வேண்டியிருக்கும். அதனால போட்டி நடக்கிற ஒரு வாரத்துக்கு முன்னாடியே அங்கே போய் பயிற்சி எடுப்போம். மெரினா பீச்சில் பயிற்சி எடுக்கும்போது நிறைய டால்பின்கள் எங்க கூடவே துள்ளிக் குதிச்சு டிராவல் பண்ணி உற்சாகப்படுத்தும். அமெரிக்காவின் சான் ஃபிரான்சிஸ்கோவில் ஒரு போட்டியில் நானும் ஒரு பையனும் செய்லிங் பண்ணினோம். அப்போ புயல் காத்து வீச ஆரம்பிச்சதும் படகு கவிழ்ந்து, என் கை ஒரு கம்பிக்கு நடுவில் மாட்டிக்கிச்சு. என்கூட செய்லிங் பண்ணின பையன்தான் காப்பாத்தினான். சின்ன லெவல் ஆபத்துக்கள் இருந்தாலும் ரொம்பவே சுவாரஸ்மான விளையாட்டு!'' என்று த்ரில் டிரெய்லர் ஓட்டுகிறார் ஐஸ்வர்யா.

''ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெண்கலம்தான் ஜெயிக்க முடிஞ்சது. ஆனா, ரெண்டு நாட்களில் 10 ஆயிரம் கி.மீ பயணிச்சு, ஜெட்லாக் பிரச்னைகளைக் கடந்து, உள்ளூர் பயிற்சியே இல்லாம வெண்கலம் ஜெயிக்க முடியும்னா, பக்கா பிளான் பண்ணி முழு மூச்சோடு பயிற்சியெடுத்தா ஒலிம்பிக்கில் தங்கம் ஜெயிக்கலாம்னு தன்னம்பிக்கை அதிகம் ஆகியிருக்கு. ரெண்டு வருஷம் மட்டும் காத்திருங்க... ஒலிம்பிக் மெடலோடு இன்னொரு பேட்டி தட்டலாம்!'' என நம்பிக்கைக் குரலில் சொல்கிறார்கள் தோழிகள்.

ஆமோதிப்பதுபோல ஆர்ப்பரிக்கின்றன வங்காள விரிகுடா அலைகள்!

ஆனந்த விகடன்

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Oct 16, 2014 11:17 pm

அலிஷா பூமிக்குத் திரும்புவாரா? 3838410834 அலிஷா பூமிக்குத் திரும்புவாரா? 3838410834 அலிஷா பூமிக்குத் திரும்புவாரா? 103459460
M.M.SENTHIL
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.M.SENTHIL

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Fri Oct 17, 2014 5:04 pm

நல்ல பதிவுகள்...

கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

அலிஷா பூமிக்குத் திரும்புவாரா? W5td1pX3QFi1kBRhH0I3+Affection
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக