புதிய பதிவுகள்
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எலி கிலி! இளவரசி அலற...சசிகலா சிரிக்க... Poll_c10எலி கிலி! இளவரசி அலற...சசிகலா சிரிக்க... Poll_m10எலி கிலி! இளவரசி அலற...சசிகலா சிரிக்க... Poll_c10 
120 Posts - 76%
heezulia
எலி கிலி! இளவரசி அலற...சசிகலா சிரிக்க... Poll_c10எலி கிலி! இளவரசி அலற...சசிகலா சிரிக்க... Poll_m10எலி கிலி! இளவரசி அலற...சசிகலா சிரிக்க... Poll_c10 
19 Posts - 12%
Dr.S.Soundarapandian
எலி கிலி! இளவரசி அலற...சசிகலா சிரிக்க... Poll_c10எலி கிலி! இளவரசி அலற...சசிகலா சிரிக்க... Poll_m10எலி கிலி! இளவரசி அலற...சசிகலா சிரிக்க... Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
எலி கிலி! இளவரசி அலற...சசிகலா சிரிக்க... Poll_c10எலி கிலி! இளவரசி அலற...சசிகலா சிரிக்க... Poll_m10எலி கிலி! இளவரசி அலற...சசிகலா சிரிக்க... Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
எலி கிலி! இளவரசி அலற...சசிகலா சிரிக்க... Poll_c10எலி கிலி! இளவரசி அலற...சசிகலா சிரிக்க... Poll_m10எலி கிலி! இளவரசி அலற...சசிகலா சிரிக்க... Poll_c10 
3 Posts - 2%
Pampu
எலி கிலி! இளவரசி அலற...சசிகலா சிரிக்க... Poll_c10எலி கிலி! இளவரசி அலற...சசிகலா சிரிக்க... Poll_m10எலி கிலி! இளவரசி அலற...சசிகலா சிரிக்க... Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
எலி கிலி! இளவரசி அலற...சசிகலா சிரிக்க... Poll_c10எலி கிலி! இளவரசி அலற...சசிகலா சிரிக்க... Poll_m10எலி கிலி! இளவரசி அலற...சசிகலா சிரிக்க... Poll_c10 
1 Post - 1%
Guna.D
எலி கிலி! இளவரசி அலற...சசிகலா சிரிக்க... Poll_c10எலி கிலி! இளவரசி அலற...சசிகலா சிரிக்க... Poll_m10எலி கிலி! இளவரசி அலற...சசிகலா சிரிக்க... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எலி கிலி! இளவரசி அலற...சசிகலா சிரிக்க... Poll_c10எலி கிலி! இளவரசி அலற...சசிகலா சிரிக்க... Poll_m10எலி கிலி! இளவரசி அலற...சசிகலா சிரிக்க... Poll_c10 
285 Posts - 77%
heezulia
எலி கிலி! இளவரசி அலற...சசிகலா சிரிக்க... Poll_c10எலி கிலி! இளவரசி அலற...சசிகலா சிரிக்க... Poll_m10எலி கிலி! இளவரசி அலற...சசிகலா சிரிக்க... Poll_c10 
46 Posts - 12%
mohamed nizamudeen
எலி கிலி! இளவரசி அலற...சசிகலா சிரிக்க... Poll_c10எலி கிலி! இளவரசி அலற...சசிகலா சிரிக்க... Poll_m10எலி கிலி! இளவரசி அலற...சசிகலா சிரிக்க... Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
எலி கிலி! இளவரசி அலற...சசிகலா சிரிக்க... Poll_c10எலி கிலி! இளவரசி அலற...சசிகலா சிரிக்க... Poll_m10எலி கிலி! இளவரசி அலற...சசிகலா சிரிக்க... Poll_c10 
8 Posts - 2%
prajai
எலி கிலி! இளவரசி அலற...சசிகலா சிரிக்க... Poll_c10எலி கிலி! இளவரசி அலற...சசிகலா சிரிக்க... Poll_m10எலி கிலி! இளவரசி அலற...சசிகலா சிரிக்க... Poll_c10 
5 Posts - 1%
Balaurushya
எலி கிலி! இளவரசி அலற...சசிகலா சிரிக்க... Poll_c10எலி கிலி! இளவரசி அலற...சசிகலா சிரிக்க... Poll_m10எலி கிலி! இளவரசி அலற...சசிகலா சிரிக்க... Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
எலி கிலி! இளவரசி அலற...சசிகலா சிரிக்க... Poll_c10எலி கிலி! இளவரசி அலற...சசிகலா சிரிக்க... Poll_m10எலி கிலி! இளவரசி அலற...சசிகலா சிரிக்க... Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
எலி கிலி! இளவரசி அலற...சசிகலா சிரிக்க... Poll_c10எலி கிலி! இளவரசி அலற...சசிகலா சிரிக்க... Poll_m10எலி கிலி! இளவரசி அலற...சசிகலா சிரிக்க... Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
எலி கிலி! இளவரசி அலற...சசிகலா சிரிக்க... Poll_c10எலி கிலி! இளவரசி அலற...சசிகலா சிரிக்க... Poll_m10எலி கிலி! இளவரசி அலற...சசிகலா சிரிக்க... Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
எலி கிலி! இளவரசி அலற...சசிகலா சிரிக்க... Poll_c10எலி கிலி! இளவரசி அலற...சசிகலா சிரிக்க... Poll_m10எலி கிலி! இளவரசி அலற...சசிகலா சிரிக்க... Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எலி கிலி! இளவரசி அலற...சசிகலா சிரிக்க...


   
   
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Wed Oct 15, 2014 6:07 pm

சென்னையை தவிர்த்து, கொடநாட்டுக்கு அடுத்தபடியாக ஜெயலலிதா அதிக நாட்கள் சென்று தங்கியது பரப்பன அக்ரஹாராவாகத்தான் இருக்கும்! 'அம்மா... அம்மா...’ என்று உருகித்தவித்த அரசியல்வாதிகளின் வருகை குறைந்து ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரின் உறவினர்கள் வருகை அதிகமாகியிருக்கிறது.



செல்ஃபி வித் பரப்பன அக்ரஹாரா!


'பரப்பன அக்ரஹாரா...’ பெங்களூரில் உள்ள இந்த இடம் இப்போது கர்நாடக மக்களைவிட தமிழக மக்களுக்கு நன்கு பரிச்சயம் ஆகிவிட்டது. ஜெயலலிதாவை விசாரித்த நீதிமன்றம், இப்போது அடைக்கப்பட்டிருக்கும் சிறை வளாகம் அனைத்தையும் அ.தி.மு.க நிர்வாகிகள் வியப்புடன் பார்த்து வருகிறார்கள். ஒவ்வொருவரும் 'இதுதான் அம்மாவை விசாரிச்ச கோர்ட்டாம். அந்த மாடிக் கட்டடத்துலதான் அம்மா இருக்காங்களாம்...’ என்று ஒருவருக்கொருவர் பேசிக் கொள்கிறார்கள். அது மட்டுமல்லாமல், செக்போஸ்ட் அருகே இருக்கும் பரப்பன அக்ரஹாரா காவல் நிலையத்தின் பெயர் பலகை தெரிவது மாதிரி நின்று செல்ஃபி எடுத்துக் கொள்கிறார்கள்.

முன்னாளே முன்னாலே...

ஜெயலலிதாவின் அமைச்சரவையில் இருந்து பதவி பறிக்கப்பட்ட சில முன்னாள் அமைச்சர்கள் சிறை வாசலில் இருந்து நகர்வதே இல்லை. தினமும் காலையில் தூங்கி எழுந்து குளித்துவிட்டு வந்தால், மாலைப்பொழுது சாய்ந்த பிறகுதான் ஹோட்டலுக்குக் கிளம்புகிறார்கள். செங்கோட்டையன், முன்னாள் சபாநாயகர் ஜெயக்குமார், பச்சைமால், மாதவரம் மூர்த்தி, முனுசாமி, நயினார் நாகேந்திரன் ஆகியோரை எந்த நேரத்தில் சென்றாலும் சிறை வாசலில் பார்க்கலாம். ''அம்மா வெளியே வரும் வரைக்கும் நாங்க யாரும் ஊருக்குத் திரும்பிப்போகக் கூடாதுன்னு முடிவு பண்ணியிருக்கோம். அமைச்சர்கள் தங்கள் பணிகளைக் கவனிக்க வேண்டியிருப்பதால், அவர்கள் சென்னைக்குப் போவதும் பெங்களூரு வருவதுமாக இருக்கிறார்கள். எங்களுக்கு அம்மா இருக்கும் இடமே கோயில். அவங்களை இங்கே விட்டுட்டு நாங்க எங்கே போக முடியும் சொல்லுங்க...'' என்று வருத்தத்துடன் கேட்கிறார் முன்னாள் அமைச்சர் ஒருவர். ஜெயலலிதா வெளியே வந்ததும் எப்படியும் தங்களுக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்பது மட்டும்தான் இவர்களின் ஒரே நம்பிக்கை.

'தீராத பகை!’

காலம்காலமாக தீராத பகைகொண்ட பங்காளிகள்கூட குடும்பத்தில் ஏதாவது பெரிய பிரச்னை ஏற்பட்டால் ஒன்று கூடிவிடுவார்கள். ஆனால், அரசியல் கட்சிகளில் அதெல்லாம் நடக்காதுபோல! அ.தி.மு.க-வின் முன்னாள் அமைச்சரான கே.பி.முனுசாமியும் உயர் கல்வித் துறை அமைச்சர் பழனியப்பனும் தனித்தனி கோஷ்டிகளாகவே பிரிந்து நிற்கிறார்கள். முனுசாமி நின்றிருந்ததைப் பார்த்த அமைச்சர் பழனியப்பன் அந்தப் பக்கம்கூட திரும்பவில்லை. 'அம்மாவே வந்தாலும் இவங்க சண்டையைத் தீர்க்க முடியாது!’ என்று புலம்பியபடி சென்றனர் கட்சிக்காரர்கள். 11-ம் தேதி காலையில் இருந்தே முனுசாமியும், பழனியப்பனும் சிறை வளாகத்தில்தான் இருந்தனர். மாலை கிளம்பும் வரை ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளவே இல்லை.

இளவரசி அலற... சசிகலா சிரிக்க...

பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலைக்குள் ஒரு கோடி ரூபாய் செலவில் பேக்கரி மிஷின்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் தினமும், பிரெட், பிஸ்கட், ஜாம், கேக் போன்ற பொருட்கள் கைதிகளால் தயாரிக்கப்படுகின்றன. இதில் வேஸ்டேஜ் ஆகும் பொருட்களைச் சாப்பிட்டு எலிகள் ஏகத்துக்கும் கொழுத்துள்ளன. அவை, சிறையில் உள்ள கைதிகளை எதுவும் செய்வதில்லை. கைதிகளும், சாப்பிட்டதுபோக மிஞ்சும் உணவை எலிகளுக்கு வைத்துவிடுவார்களாம். அதனால், சர்வ சாதாரணமாக எலிகள் வருவதும் போவதுமாக இருக்கின்றன. சில நாட்களுக்கு முன்பு இளவரசி தன் அறையில் இருந்து வெளியே வரும்போது ஓர் எலியை மிதித்துவிட்டாராம். இதில் பயந்துபோன அவர், அலறித்துடித்து கத்தியபடி அறைக்குள் ஓடியிருக்கிறார். இதைக் கவனித்த சசிகலா வாய்விட்டு சிரித்திருக்கிறார். இந்த விஷயங்களை ஜெயலலிதாவிடமும் சசிகலா சொல்லிச் சிரித்ததாக சொல்கிறார்கள். 'அது விநாயக பெருமானோட வாகனம்தானே... நம்மை எதுவும் செய்யாது!’ என்று சொன்னாராம் ஜெயலலிதா.

ஊதுவத்தியும் உருட்டலை... ப்ரூஃப்பும் பார்க்கலை!

விசாரணைக் கைதிகளாகச் சிறைக்குச் செல்லும் கைதிகளின் ஹிஸ்டரி கார்டில் சிறைக்குள் அவர்கள் செய்யும் பணி பற்றி குறிப்பிடத் தேவையில்லை. ஆனால், தண்டனைக் கைதிகளாகச் சிறைக்குள் செல்பவர்களுக்கு என்ன பணி ஒதுக்கப்பட்டுள்ளது என்பதைக் கட்டாயம் ஹிஸ்டரி கார்டில் குறிப்பிட வேண்டும். அவர்களின் தண்டனைக் காலத்தைக் குறைப்பதோடு, நன்னடத்தைக்கும் அதுதான் சான்று அளிக்கும். பரப்பன அக்ரஹாரா சிறையில் கைதிகளுக்கு 25 சிறு தொழில்கள் இருக்கின்றன. சமையல் வேலைகளில் சப்பாத்தி உருட்டுதல் தொடங்கி, நூலக உதவியாளர் பணி, டைலரிங், கார்பன்ஸ் வொர்க், தச்சு வேலை, கூடை பின்னுதல், தோட்டத்தில் களை எடுத்தல், பேக்கரி, மெழுகுவத்தி தயாரித்தல், ஊதுவத்தி உருட்டுதல், பொம்மை தயாரித்தல் போன்ற பணிகள் அடக்கம். அதன் அடிப்படையில்தான் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி ஆகிய மூன்று பேர் ஊதுவத்தி உருட்டும் பணியில் இருப்பதாகவும், சுதாகரன் பிரின்டிங் பிரஸில் ப்ரூஃப் பார்ப்பதாகவும் முதலில் செய்தி பரவியது. இதுபற்றி பேசிய டி.ஐ.ஜி ஜெயசிம்ஹா, 'ஜெயலலிதா உள்ளிட்ட நால்வருக்கும் நீண்டகாலத் தண்டனை கைதி இல்லை என்பதால் இதுவரை வேலை எதுவும் ஒதுக்கவில்லை. ஜெயலலிதா சிறைக்குள் அடைக்கப்பட்டதில் இருந்து இதுவரை யாரையும் சந்திக்கவே இல்லை!’ என்று உறுதியாகச் சொல்லியிருக்கிறார்.

'குமாரி ஜெயலலிதா ஹெல்த் கண்டிஷன் ஸ்டேபுள்!’


பத்திரிகையாளர்களின் கூப்பிட்ட குரலுக்கு ஓடிவந்து ஜெயில் அப்டேட்களைச் சொல்லும் ஒரே ஆபீஸர் சிறைத் துறை டி.ஐ.ஜி ஜெயசிம்ஹா. தினமும் மூன்று வேளையும் மறக்காமல் பத்திரிகையாளர்களுக்குப் பேட்டி கொடுப்பதை இவர் வாடிக்கையாகவே வைத்திருக்கிறார். எந்தப் பேட்டியாக இருந்தாலும் முதலில், ''குமாரி ஜெயலலிதா ஹெல்த் கண்டிஷன் ஸ்டேபுள்'' என்றுதான் ஆரம்பிக்கிறார். ஜெயலலிதா காலையில் என்ன சாப்பிட்டார் என்பதில் தொடங்கி எதையும் அவர் மறைப்பதில்லை. தினமும் செய்தித்தாள்களிலும், டி.வி-யிலும் ஜெயசிம்ஹா பேட்டிகளைப் படித்தும், பார்த்தும் கடுப்பாகிவிட்டாராம் ஜெயலலிதா. 'எனக்கு கோர்ட் தண்டனை கொடுத்திருக்கிறது. அதனால் நான் சிறையில் இருக்கிறேன். நீங்கள் அடிக்கடி இங்கே வரக்கூடாது. எனக்கு எதாவது தேவைப்பட்டால் நான் கூப்பிடுகிறேன்’ என்று ஜெயசிம்ஹாவிடம், ஜெயலலிதா கோபப்பட்டதாகவும் சொல்கிறார்கள். ஆனால் ஜெயசிம்ஹாவோ, 'அவங்க இருக்கிறது என்னோட கட்டுப்பாட்டில் இருக்கும் ஜெயில். என்னை வரக்கூடாது என்று அவங்க எப்படிச் சொல்லலாம்? நான் அவங்களுக்குக் கீழே வேலை செய்யுற ஆபீஸர் இல்லை’ என்று சொல்லி வருகிறாராம்.

'அத்தை ஏன் எங்களைப் புரிஞ்சுக்க மாட்டேங்குறாங்க...’

ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமாரின் மகள் தீபாவும், மகன் தீபக்கும் குடும்பத்தோடு பெங்களூரு சௌத் எண்ட் சர்கில் ஏரியாவில் உள்ள அவரது சின்ன பாட்டியும், ஜெயலலிதாவின் சித்தியுமான வித்யா வீட்டில் தங்கியுள்ளனர். ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டதில் இருந்து அவர்கள் இருவரும் அங்கேதான் இருக்கிறார்கள். தினமும் சிறைக்கு வரும் தீபாவை பாதுகாப்பு அதிகாரிகள் சிறை வளாகத்துக்குள்கூட அனுமதிக்காமல் செக்போஸ்ட்டுடன் திருப்பி அனுப்பிவிடுகிறார்கள். இதனால் தீபா ரொம்பவே நொந்து போயிருக்கிறார். 'நாங்க என்ன தப்பு செய்தோம். அத்தை நல்லா இருக்கும்போது பார்க்கப்போனா உதவிக்காக வந்துட்டாங்கன்னு நினைக்கலாம். இந்தச் சூழ்நிலையிலும் எங்களைப் பார்க்காமல் தவிர்ப்பது மனசுக்கு வேதனையாக இருக்கு. என் சொந்த ரத்தம் உள்ளே இருக்கு. என்னால உள்ளே போக முடியலை. தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும்னு சொல்லுவாங்க இல்லையா... என்னால அத்தை உள்ளே போனதுல இருந்து சாப்பிட முடியலை... தூங்க முடியலை... எங்ககிட்ட பேசாம இருந்தாலும் அத்தை நல்லா இருக்காங்க என்ற செய்தி சந்தோஷமா இருந்துச்சு. ஜெயிலுக்குள்ள அவங்க எப்படி இருப்பாங்கன்னு நினைச்சாலே நெஞ்சு வெடிக்குது. அத்தை ஏன் எங்களைப் புரிஞ்சுக்க மாட்டேங்குறாங்க...’ என்று தன் சின்ன பாட்டி வித்யாவிடம் சொல்லி அழுதிருக்கிறார் தீபா.

அ.தி.மு.க வழக்கறிஞர்களுக்கு கண்டனம்!

சிறையில் இருக்கும் ஜெயலலிதா உட்பட நான்கு பேருக்கும் பெயில் கேட்டு தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்ற நீதிபதி ரத்னகலா கடந்த 1-ம் தேதி பெயில் கொடுக்காமல் சாதாரண பெஞ்சுக்கு மாற்றினார். பிறகு, 7-ம் தேதி உயர் நீதிமன்ற நீதிபதி சந்திரசேகரா பெயில் மனுவை நிராகரித்தார். அந்தச் சமயங்களில் சென்னையில் இருந்து வந்திருந்த வழக்கறிஞர்கள் கர்நாடக உயர் நீதிமன்ற வளாகத்திலேயே நீதிமன்றத்துக்கு எதிராகவும், நீதிபதிகளுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டங்கள் செய்தனர். இதைக் கண்டித்து கடந்த 11-ம் தேதி கர்நாடக பார் கவுன்சில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய கர்நாடக உயர் நீதிமன்ற பார் கவுன்சில் தலைவர் பி.பி.ஹெட்ஜுவும், துணைத் தலைவர் அனில் குமாரும் தமிழக வழக்கறிஞர்களுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்ததுடன் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யவும் ஆலோசித்து வருகிறார்கள்.

'அம்மா... நாங்க இருக்கோம்மா!’

பரப்பன அக்ரஹாரா பேருந்து நிறுத்தத்தில் அமைக்கப்பட்டுள்ள மெயின் செக்போஸ்ட் வழியாக அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்கள் உள்ளிட்ட சில வி.ஐ.பி-க்கள் மட்டுமே சிறையின் நுழைவாயிலுக்குச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். மற்றவர்கள் தடுத்து நிறுத்தப்படுகிறார்கள். சிறையின் பின்புறம் நமது புகைப்படக்காரர் சென்று வேறு சில கோணங்களில் சிறையின் படங்களை எடுத்திருந்தார். அதைக் கடந்த இதழில் வெளியிட்டு இருந்தோம். அதன்பிறகு இடத்தைத் தேடி அ.தி.மு.க-வினர் படையெடுக்க ஆரம்பித்துவிட்டனர். ஜெயிலுக்குப் பின்பக்கத்தில் நின்றபடி, 'அம்மா... நாங்க இருக்கோம்மா... அம்மா வாழ்க... அம்மா வாழ்க...’ என்றெல்லாம் கோஷம் போட்டுள்ளனர். இதனால் போலீஸாரின் பாதுகாப்பு இப்போது சிறை வளாகத்தைச் சுற்றிலும் பலப்படுத்தப்பட்டு உள்ளது.

ஜெயலலிதாவின் முதன்மை பாதுகாப்பு அதிகாரியாக இருந்த பெருமாள்சாமி, சில நாட்களுக்கு முன்பு சிறை வளாகத்துக்கு வந்தார். அவரிடம் பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீஸார் செக்போஸ்ட்டில் தீவிர விசாரனைக்குப் பிறகே உள்ளே அனுமதித்தனர். 'அம்மா வெளியில இருந்தவரைக்கும் அவரு நம்மை நெருங்கவிட மாட்டாரு... இப்போ அவரோட நிலைமையைப் பாருங்க..’ என்று கமென்ட் அடித்தார் முன்னாள் அமைச்சர் ஒருவர்.

எலி கிலி! இளவரசி அலற...சசிகலா சிரிக்க... P12
கடந்த திங்கள்கிழமை மதியம் 3 மணியளவில் பரப்பன அக்ரஹாரா பஸ் ஸ்டாப்பில் புதிய ஸ்பிளிட் ஏ.சி-யுடன் ஒருவர், யாரையோ செல்லில் தொடர்புகொள்ள முயற்சித்தபடி இருந்தார். அவரிடம் விசாரித்தபோது, பெங்களூரு டேனரி ரோட்டில் உள்ள ஒரு தனியார் ஏ.சி பொருத்தும் நிறுவனத்தில் இருந்து வருவதாகவும், தன்னுடைய பெயர் ஷெரிஃப் என்றும் சொன்னார். அடுத்து அவர் சொன்னதுதான் அதிர்ச்சி ரகம். ''தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை வைத்திருக்கும் அறைக்கு ஏ.சி பொருத்துவதற்காக என்னை வரச் சொன்னார்கள். நேற்றே அந்த அறையைப் பார்வையிட அழைத்துச் சென்றார்கள். இன்றைக்கு வந்து ஏ.சி பொருத்தித் தருமாறு சிறையில் உள்ள அசிஸ்டென்ட் இன்ஜினீயர் ஜெயராமன் சொன்னார். அதற்காகத்தான் வந்தேன். இப்போது போன் செய்தால் அவருக்கு கால் போகலை!'' என்றவரிடம், ''நேற்றைக்கு நீங்கள் சென்றபோது அந்த அறையில் யார் இருந்தார்கள்... அது தனி அறையா? உள்ளே என்னென்ன வசதிகள் இருக்கின்றன?'' என்று கேட்டோம்.

''அது கைதிகளுக்கான அறை இல்லை. பெண்கள் சிறையில் உள்ள ஒரு மருத்துவமனை கட்டடம். அதில் உள்ள ஓர் அறையில்தான் ஜெயலலிதா உள்ளிட்ட மூன்று பேர்களும் இருக்கிறார்கள். மூவருக்கும் தனித்தனி கட்டில்கள் மெத்தையுடன் போடப்பட்டிருக்கின்றன. ஒரு டேபிள், ஒரு சேர் இருக்கிறது. அதில் உட்கார்ந்தபடிதான் ஜெயலலிதா புத்தகங்கள் படித்துக்கொண்டிருக்கிறார். அவர் டேபிள் மீது நிறைய புத்தகங்கள் இருக்கின்றன. அப்புறம் ஒரு டி.வி இருக்கிறது. அதில் தூர்தர்ஷன் சேனல்தான் ஓடியது. அந்த அறையில் ஏர்கூலர் இருந்தது. அது போதுமானதாக இல்லையென்றுதான் ஸ்பிளிட் ஏ.சி பொருத்தச் சொல்லியிருக்கிறார்கள்'' என்று சொல்லிவிட்டு நகர்ந்துகொண்டார் ஷெரிஃப்.

''ஜெயலலிதா, கைதிகளுக்கான சிறையில் அடைக்கப்பட்டால் இதுமாதிரியான வசதிகளை செய்து தரமுடியாது என்பதால்தான் அவரை மருத்துவமனை அறையில் தங்கவைக்கப்பட்டு அங்கு ஏ.சி பொருத்தும் வேலைகள் நடக்கிறது'' என்கிறார்கள் சிறை வட்டாரத்தில்.



16 மெழுகுவத்திகள்!

ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் 16 நாட்கள் ஆகின்றன. இதை நினைவுபடுத்தும் வகையில் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர்,

16 மெழுகுவத்திகளுடன் வந்திருந்தார். அவரோடு வந்த 16 பேர்களின் கைகளிலும் மெழுகுவத்தியைக் கொடுத்து ஜெயிலை நோக்கி நீட்டியபடி நின்றனர். இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் ஒன்றுகூடி நடத்தும் சர்வமத பிரார்த்தனையும் சிறை வாசலில் நடக்கிறது. பெங்களூரில் உள்ள சனீஸ்வரன் கோயிலில் பள்ளி மாணவிகளை வைத்து சிறப்புப் பூஜையும், யாகமும் நடத்தப்பட்டுள்ளன.

விகடன்.காம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 15, 2014 6:18 pm

இன்னும் இரண்டு நாட்கள் தானே, நன்கு ஓய்வெடுத்துவிட்டு வரட்டும்!



எலி கிலி! இளவரசி அலற...சசிகலா சிரிக்க... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Oct 15, 2014 6:28 pm

நான்கு வருடங்கள் உள்ளே இருக்கனுமோன்ற கிலி பிடித்திருக்க இந்த எலி என்ன செஞ்சுடப் போவுது




M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Oct 15, 2014 10:39 pm

அடிச்சது கோடி - உன்ன
எலி என்ன செய்யும் லேடி



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக