ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி

3 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 2 Empty வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி

Post by தமிழ்நேசன்1981 Mon Oct 13, 2014 9:01 pm

First topic message reminder :

ஈகரை உறவுகளே...
நான் சமீபமாக நூலத்திலிருந்து எடுத்துவந்த நூல்
கவிஞர் வாலி எழுதிய வள்ளுவம் என்ற நூல் ஆகும்
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 2 100-00-0000-561-2_b-01

இதில் திருக்குறளுக்கு வசன கவிதை நடையில்
புது வடிவம் கொடுத்திருக்கிறார்..வாலி அவர்கள்

நான் ரசித்தவை....நீங்களும் ரசிக்க இந்த திரி..
திரி கொளுத்தியாயிற்று...உங்கள் ஆதரவை வேண்டி...தமிழ்நேசன் புன்னகை
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down


வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 2 Empty Re: வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி

Post by தமிழ்நேசன்1981 Tue Oct 14, 2014 9:35 am

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.



அடி; முடி;
அற்றவன் –
அடி…

சிந்தையில் ஏந்துவார் – ஜன்ம
சமுத்திரம் நீந்துவார்!

அவ்வாறு –
அடி; முடி;
அற்றவன்-
அடி…

நினையாத அயலார் –
நீந்திட இயலார்;
ஏற்பார் கடல்; மீட்டும் –
எடுப்பார் உடல்!
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 2 Empty Re: வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி

Post by M.Saranya Tue Oct 14, 2014 9:47 am

அற்புதம் நண்பரே !!!!

இந்த திரியை இனிதே தொடர வாழ்த்துக்கள் .


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 2 W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 2 Empty Re: வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி

Post by ayyasamy ram Tue Oct 14, 2014 10:20 am

வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 2 3838410834
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 2 Empty Re: வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி

Post by தமிழ்நேசன்1981 Tue Oct 14, 2014 5:29 pm

வான்சிறப்பு
அதிகாரம் 2


வான்நின்று  உலகம்  வழங்கி  வருதலால்
தான்அமிழ்தம்  என்றுணரற்  பாற்று.



மழையை –
மழையென  மொழிதல்  பிழை;  அதனை –
சாவா  திருக்க  சகத்துக்  குதவும்
மூவா  மருந்தென  அழை!

நிலம்  என்னும்
நேரிழை – நிலைத்து
நிற்கக்  காரணம்
நீரிழை;
நேரிழையைக் காக்கும்
நீரிழையை –
நிலத்துக்  கனுப்புதல்
நிறங்  கறுத்த…

மஞ்சுப்  பொதி – எனும்
பஞ்சுப்  பொதி!
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 2 Empty Re: வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி

Post by தமிழ்நேசன்1981 Tue Oct 14, 2014 5:30 pm

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.


மழை - ஒரு
மகத்தான சொல்;
மற்றவர்க்கும் - அதன்
மகத்துவம் சொல்!

உலகோர் –
உண்ணும்…

ஆகாரத்திற்கு அதுவே
ஆதார மாகும்; அங்ஙனம்
ஆதார மான அதுவே
ஆகார மாகும்!

நீருணவு;
சோறுணவு; என –
ஈருணவாய்
இருப்பது மழை!

அதை
ஏத்திப் பிழை;
ஏத்தாதிருப்பது பிழை!
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 2 Empty Re: வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி

Post by தமிழ்நேசன்1981 Tue Oct 14, 2014 5:31 pm

விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி.



அது ஒன்றும்
அரிச்சந்திரன் அல்ல -
பருவ மழையைப்
பொய்க்காது என்று சொல்ல!

அது –
வார்த்தை தவறியதுண்டு; அதனால்
உயிர்கள் தவறியதுண்டு!

உலக
உருண்டையை –
குடிக்கக்
குவளைநீர் உதவாத…

கடல் சூழ்ந்து
கண்டபலன் யாது? பசி –
குடல் சூழ்ந்து
குடைந்தெடுக்கும் போது!
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 2 Empty Re: வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி

Post by தமிழ்நேசன்1981 Tue Oct 14, 2014 5:31 pm

ஏரின் உழாஅர் உழவர் புயலென்னும்
வாரி வளங்குன்றிக் கால்.




வருஷா வருஷம் – வானம்
வருஷிப்பதுதான் - உழவர்க்கு
வருஷாந்திர வரும்படி;

விழுந்து விழுந்து - வானத்தை
வேண்டி வேண்டி நிற்பர் – அந்த
வரும்படி விடாது வரும்படி!

வானம் வற்றிப்போய்
வரவர…
நீர்வரத்து
நின்று போனால் – வயலுக்கு
ஏர்வரத்தும்
நின்றுபோகும்!
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 2 Empty Re: வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி

Post by தமிழ்நேசன்1981 Tue Oct 14, 2014 5:32 pm

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய் மற்றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.



மழைக்கும் மண்ணுக்கும்
மனத்தாங்கல் வந்து…

உறவு
விட்டுப் போகும்;
ஊர்
கெட்டுப் போகும்;
பயிர் பச்சை
பட்டுப் போகும்!

மழையே மண்ணோடு -
மறுபடி சமரசம் ஆகி…

விட்ட -
உறவையும்;
கெட்ட -
ஊரையும்;
பட்ட -
பயிர் பச்சையையும்…

சரி செய்யும்; அங்ஙனம் –
செய்வதற்காய்ப் பெய்யும்!
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 2 Empty Re: வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி

Post by தமிழ்நேசன்1981 Tue Oct 14, 2014 5:32 pm

விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண் பரிது.



வானம் என்னும்
ஊர் விட்டு
நிலம் வரவேண்டும் - ஒரு
நீர்ச் சொட்டு!

இல்லையேல் -
இந்த…

பூமியில் – சிறு
புல் லெழாது;
புல் லெழாத பூமியில் –
நெல் லெழாது;

புல்லும் நெல்லும் –
புறப்படா சோகம்…

சொல்ல நினைப்பினும் –
சொல் லெழாது!
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 2 Empty Re: வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி

Post by தமிழ்நேசன்1981 Tue Oct 14, 2014 5:33 pm

நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்.





விண்ணீர் மேகம்
வாரியிடம் வாங்கிய –
தண்ணீர்க் கடனைத்
திருப்பித் தராவிடில்…

ஆகும்
அரை கடல் –
கங்குலும் பகலும்
குரை கடல்!
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 2 Empty Re: வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum