ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கத்திமுனையில் கையெழுத்து... நோயாளியின் உரிமைகள் என்ன?

Go down

கத்திமுனையில் கையெழுத்து... நோயாளியின் உரிமைகள் என்ன? Empty கத்திமுனையில் கையெழுத்து... நோயாளியின் உரிமைகள் என்ன?

Post by Powenraj Sat Oct 11, 2014 7:42 pm

நோயாளியை அறுவை சிகிச்சை கூடத்திற்கு அனுப்பி வைத்துவிட்டு பதட்டத்துடன் வராந்தாவில் நடைப்போட்டுக் கொண்டிருக்கும் உறவினர்களிடம், ஒரு நர்ஸ் ஓடி வந்து ஆங்கிலத்தில் எழுதப்பட்டு இருக்கும் ஒரு படிவத்தைக் கொடுத்து அவசர கதியில் கையெழுத்து வாங்கி சென்று விடுகிறார். ஆனால், அந்த படிவத்தில் என்ன எழுதப்பட்டு இருக்கிறது என்பதை முன்கூட்டியே நோயாளியின் உறவினர்களுக்கு விளக்கி சொன்ன பிறகுதான், அவர்களிடம் இருந்து கையெழுத்து வாங்க வேண்டும் என்று சட்டம் சொல்கிறது. ஆனால் இன்று அவை முறையாக கடைப்பிடிக்கப்படுவது இல்லை.
இன்றைய மருத்துவத்துறையின் நிலையைப் பற்றி சொல்கிறார் மருத்துவரும், சமூக ஆர்வலருமான புகழேந்தி.
கத்திமுனையில் கையெழுத்து... நோயாளியின் உரிமைகள் என்ன? CfZvc1I
‘‘நவீன மருத்துவத்தின் தந்தை என அழைக்கப்படும் சர்.வில்லியம் ஆஸ்லர் இவ்வாறு குறிப்பிட்டு இருக்கிறார் ‘ஒரு மருத்துவரின் அறிவு, நோயாளிகளின் துணையோடுதான் வளர்கிறது’ என்று. மேலும் அவர், ‘நோயாளிகளின் சந்தேகங்களை நீக்குவது மருத்துவர்களின் கடமையே அன்றி அது பிச்சை அல்ல!’ என்றும் கூறியிருக்கிறார்.

அவர் சொன்னபடி எல்லாம் இப்போது நடப்பதே இல்லை. ஒரு மருத்துவர் தன்னிடம் வரும் நோயாளியிடம் அவருக்கு இருப்பது என்ன வியாதி, அது எதனால் வந்தது போன்ற தகவல்களை எல்லாம் அவசியம் தெரிவிக்க வேண்டும். ‘இந்த நோய்க்கு ஊசி போட்டால் இப்படி நடக்கும்பா!, மாத்திரை சாப்பிட்டால் இப்படி நடக்கும்பா!’ என்பது போன்ற தகவல்களை எல்லாம் முன்கூட்டியே நோயாளியிடம் தெரிவித்துவிட்டு, சிகிச்சை முறைகளை தேர்ந்தெடுக்கும் உரிமையை நோயாளியின் வசமே விட்டுவிட வேண்டும். இதைத்தான் காந்திஜி, ‘என் உடம்பின் மீது என்னைவிட வேறு யார் அதிக அக்கறைக் கொள்வார்’ என்று கேட்டார். இதையேத்தான் மருத்துவ விதிகளும் சொல்கிறது. ஆனால் அவைகளும் இன்று பின்பற்றப்படுவது இல்லை.

ஒருவருக்கு டைபாய்டு வந்திருக்கிறது என்றால், அது எப்படி அவருக்கு வந்தது, இதை எப்படி நாம் சரி செய்யப்போகிறோம் என்பது பற்றியும், இதற்கு மருத்துவத்தில் எத்தனை வழிமுறைகள் இருக்கிறது என்பது குறித்தும்  மருத்துவர் அந்த நோயாளியிடம் மனம் விட்டு பேச வேண்டும். ஆனால் பெரும்பாலான மருத்துவர்கள் இதை செய்வது இல்லை. பல இடங்களில் மருத்துவர்கள் சொல்வதைத்தான் நோயாளிகள் கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள். இன்னும் சில மருத்துவர்கள், ‘நீ டாக்டரா? நான் டாக்டரா?’ என நோயாளிகளிடமே சண்டைக்குப் போகிறார்கள்.

ஒருவருக்கு அன்ஸ்தீஸியா மருந்து கொடுக்கும்போது, நோயாளிக்கு சரியான அளவில் கொடுக்கப்பட வேண்டும், அளவு கூடினாலோ குறைந்தாலோ, தொந்தரவு. சரி ஒரு மருத்துவர் சரியான அளவைப் பரிந்துரைக்கிறார் என்று கொள்வோம். ஆனால் மருந்து கொடுக்கும் செவிலியர் ஒருவேளை அளவை மாற்றிக் கொடுத்து விட்டால்? இதை எப்படி ஆபரேஷன் தியேட்டருக்கு வெளியில் காத்திருக்கும் உறவினர்கள் கிராஸ் செக் செய்து கொள்வது?

இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் பதில் கிடைக்கும் வகையில் சட்டத்தில் திருத்தங்கள் வேண்டும். ஒருவருக்கு டைபாய்டு காய்ச்சல் வந்தால் முதல் வாரத்தில் ரத்தப் பரிசோதனை செய்யக்கூடாது, இரண்டாவது வாரம்தான் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். காரணம் முதல் வார பரிசோதனையில் முழுமையான தகவல்கள் கிடைக்காது. ஆனால், இந்த நடைமுறைகூட பெரும்பாலான இடங்களில் கடைப்பிடிக்கப்படுவது இல்லை. நோயாளியின் அபய நிலையைப் பலர் பயன்படுத்திக்கொள்ளத்தான் பார்க்கிறார்கள். எப்படி ஒரு மோட்டலில் அவன் வைத்ததுதான் விலை எனும் நிலை இருக்கிறதோ, அதுபோலவே மருத்துவத்துறையும் இன்று ஆகிவிட்டது. அவர்கள் நோயாளிகளின் வருகையை தக்க வைத்துக்கொள்வதைதான் குறிக்கோளாக வைத்து இருக்கிறார்கள்.

வெளிநாடுகளில் ஒருவருக்கு ஆன்டிபயாடிக் மருந்துகள் கொடுக்க வேண்டும் என்றாலே முறையான விளக்கங்கள் கொடுக்கப்பட வேண்டும். இங்கு அப்படி நடைமுறை இல்லை. இந்தியாவில் காரணம் இல்லாமல் ஆன்டிபயாடிக் கொடுக்கும் வழக்கம் 60 சதவிகிதம் இருப்பதாக ஒரு புள்ளி விவரம் சொல்கிறது. வெளிநாடுகள் போல இங்கும் அந்த அளவிற்கு மருத்துவ சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும். அதேசமயம் நோயாளிகள் மேலும் தவறுகள் இருக்கிறது. உங்களுக்கு என்னென்ன பிரச்னைகள் இருக்கின்றது  என்பதை மருத்துவர்களிடம் மறைக்காமலும், அதேசமயம் தெளிவாகவும் சொல்லுங்கள். சீக்கிரம் குணப்படுத்துங்கள் என்று மருத்துவரை வற்புறுத்தாதீர்கள்; உங்கள் அவசரத்தை மருத்துவர்கள் தவறாகப் பயன்படுத்தக் கூடும்.
இந்த குழப்பங்கள் அனைத்திற்கும் மருத்துவ சட்டங்களில் திருத்தங்கள் கொண்டு வருவதன் மூலமும், அதுகுறித்து மக்களுக்கு போதிய விழிப்புணர்வு அளித்தலின் மூலமும்தான் தீர்வு காணமுடியும்’’ என்றார்.

நோயாளிகளுக்கு இருக்கும் உரிமைகள்

சரி பொதுவாக ஒரு நோயாளிக்கு என்னென்ன உரிமைகளும் கடமைகளும் இருக்கிறது? என சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் குமாரதேவனிடம் கேட்டோம். ''நோயாளியை மனிதனாகத்தான் பார்க்க வேண்டும். அவரது இனம், மதம், பாலினம், மொழி போன்றவற்றில் வேற்றுமை பாராட்டப்படக் கூடாது.
பாதுகாப்பான மற்றும் பொருத்தமான சிகிச்சையைப் பெறுவது நோயாளியின் உரிமை.

மருத்துவரிடம் தனக்கு இருப்பது என்ன நோய், அது எதனால் வந்தது, அது தரும், தரப்போகும் பாதிப்புகள் என்ன என்பதை எல்லாம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். சிகிச்சை அளிக்கும் மருத்துவர், செவிலியர்களின் பெயர், அவர்களின் கல்வித் தகுதி போன்றவற்றை கேட்கலாம். இதைத் தெரிந்து கொள்வதில் நோயாளிக்கு தயக்கமும், மருத்துவருக்கு ஈகோவும் வேண்டாம். மருத்துவரின் பரிந்துரையை ஏற்று என்ன மாதிரியான சிகிச்சை பெறலாம் என்ற முடிவை எடுக்கும் உரிமையும் நோயாளிக்கு உண்டு.

பாதுகாப்பான சூழ்நிலையில் எந்தவித மன உளைச்சலும், பாலியல் தொந்தரவுகளும் இல்லாமல் சிகிச்சை பெறுவது, சிகிச்சையில் திருப்தி இல்லை எனில் வேறு ஒரு மருத்துவரை நாடிச் செல்லலாம். அப்போது ‘என் பேஷன்ட்தான் எனக்கு மட்டும்தான்’ என்கிற ரீதியில் மருத்துவர்கள் பேசமுடியாது. அதேபோல டிஸ்சார்ஜ் செய்யும் நேரத்தை தேர்ந்தெடுக்கும் உரிமையும் நோயாளிக்கு இருக்கிறது.
கத்திமுனையில் கையெழுத்து... நோயாளியின் உரிமைகள் என்ன? B0Bd5Zy
மருத்துவரின் கடமைகள்

நோயாளிக்கு அளிக்கப்பட உள்ள சிகிச்சை தொடர்பாக, மிகவும் எளிமையாக புரியும் வகையில் விளக்கிக்கூறிய பிறகே, அதுதொடர்பான மருத்துவ அனுமதி படிவத்தில் நோயாளியிடம் கையெழுத்து பெற வேண்டும். அதைவிடுத்து ஆபரேஷனுக்காக கையில் கத்தியை எடுத்தப் பிறகு ஒரு செவிலியரை அனுப்பி கையெழுத்து வாங்கி வரும் பிஸினஸ் கூடாது. பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளைப் பற்றியும், அந்த மருந்துகளை எடுத்துக்கொள்ளும்போது கடைப்பிடிக்க வேண்டிய உணவு முறைகள் பற்றியும் நோயாளிக்கு சொல்லப்பட வேண்டும்.

சிகிச்சை அமைப்பிலோ அல்லது சிகிச்சைத் துறையிலோ ஏதேனும் மாற்றம் இருந்தால் அதுகுறித்து நோயாளிக்கு முன்கூட்டியே விளக்கமாக தெரிவிக்க வேண்டும். சிறுநீரக சிகிச்சைக்கு சென்ற ஒருவருக்கு, இதய நோயும் இருப்பதும் தெரியவந்து, அதற்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்றால், நோயாளிக்கு முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். ஒரு மருத்துவமனையில் சில மருத்துவ வசதி குறைபாடுகள் இருந்து, அதற்காக நோயாளியை வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டால் அதுகுறித்து முன்கூட்டியே நோயாளிக்கு தெரிவிக்க வேண்டும்.

சிகிச்சை தொடர்பான ஆவணங்களைக் கேட்டு பெறும் உரிமை நோயாளிக்கு இருக்கிறது. சிகிச்சையில் ஏதேனும் புது பரிசோதனை முயற்சிகள் இருந்தால் அதுகுறித்து நோயாளியிடம் தெளிவாக விளக்கி அவரது ஒப்புதல் பெற வேண்டும். விஞ்ஞானிகளின் எலியாக நோயாளியைப் பயன்படுத்திவிடக் கூடாது. அறுவை சிகிச்சை செய்யும்முன் அது பற்றியும் அதில் இருக்கும் சாதக பாதகங்கள் குறித்தும் நோயாளிக்கு தெரிவிக்கப்படவேண்டும். ஒருவேளை நோயாளி மயக்க நிலையில் இருந்தாலோ அல்லது வேறு ஏதேனும் மருத்துவக் காரணங்களால் சுய நினைவின்றி இருந்தாலோ நோயாளியின் நெருங்கிய உறவினர் ஒருவரிடம் இதுபற்றி சொல்லி ஒப்புதல் பெற வேண்டும்.

சிகிச்சையின்போது உயிரிழப்பு ஏற்பட்டு, அதில் சந்தேகமும் இருந்தால் இறந்தவரின் உடலை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தச்சொல்லி, அதன் முடிவுகளின் நகல்களையும் ஒட்டுமொத்த சிகிச்சை தொடர்பான ஆவணங்களின் நகல்களையும் கேட்டுபெற, இறந்தவரின் நெருங்கிய உறவினருக்கு உரிமை உள்ளது. புகார்கள் எதுவும் இருப்பின் சட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு முன்பாக சிகிச்சையளித்த மருத்துவரிடம் கலந்துரையாடலாம். மருத்துவமனையில் ஏதேனும் பாதிப்புகள் இருந்தால் மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் அளிக்கும் உரிமை இருக்கிறது. இந்த உரிமைகளில் ஏதாவது ஒன்று இரண்டு மறுக்கப்பட்டாலும் பாதிக்கப்பட்டவர்கள் தாராளமாக நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம்.

நோயாளிகளுக்கான கடமைகள்

உங்களைப் பற்றியும், உங்களுக்கு இருக்கும் பழக்க வழக்கங்கள், ஒவ்வாமை, இதற்கு முன்பு எடுத்துக்கொண்ட சிகிச்சை முறைகள் குறித்து சிகிச்சை தொடங்கும் முன்பே மருத்துவரிடம் தெரிவித்துவிட வேண்டும். ஏதோ ராணுவ ரகசியம் ரேஞ்ச்க்கு மூடி மறைக்காதீர்கள்.

உங்களது முழுப்பெயர், முகவரி போன்ற விபரங்களை சரியாக குறிப்பிடவேண்டும். சிகிச்சை முறை பற்றி மருத்துவர் சொல்வது புரியவில்லை என்றால் திரும்பவும் கேட்க கூச்சமேப்படாதீர்கள்.

சிகிச்சையின்போது  முன்கூட்டியே அறிவிக்கப்படாத மாற்றங்கள் ஏதேனும் ஏற்பட்டால் உடனே மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும். இதில் தயக்கமும் பயமும் தேவையில்லாதது. மருத்துவர் அறிவுறுத்தும் சிகிச்சை முறைகளை கவனமாக கையாளுதல், உங்களது சிகிச்சை வரலாற்றைப் பத்திரமாக வைத்திருத்தல், சிகிச்சை தொடர்பான முடிவு எடுக்கும்போது அதில் பங்குபெறுதல் ஆகியவைகளும் நோயாளிகளின் பொறுப்பு.

முன்கூட்டியே சிகிச்சைக்கான உத்தேச கட்டணம் குறித்து  தெரிந்துகொள்ளலாம். பணம் புரட்டுவதற்கு வசதியாகவும் கடைசி நேர ஏமாற்றத்தை தவிர்க்கவும் உதவும்.

சிகிச்சை தொடர்பான மருந்து சீட்டுக்களையும் பில் கட்டிய ரசீதுகளையும் மற்ற ஆவணங்களையும் பத்திரமாக வைத்திருங்கள். ஒருவேளை நீங்கள் நீதிமன்ற படிகள் ஏற வேண்டி இருந்தால் அவை உங்களுக்கு கை கொடுக்கும்'' என்றார்.

நன்றி-விகடன்


நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum