புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓ.பன்னீர்செல்வம் Poll_c10ஓ.பன்னீர்செல்வம் Poll_m10ஓ.பன்னீர்செல்வம் Poll_c10 
284 Posts - 45%
heezulia
ஓ.பன்னீர்செல்வம் Poll_c10ஓ.பன்னீர்செல்வம் Poll_m10ஓ.பன்னீர்செல்வம் Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
ஓ.பன்னீர்செல்வம் Poll_c10ஓ.பன்னீர்செல்வம் Poll_m10ஓ.பன்னீர்செல்வம் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஓ.பன்னீர்செல்வம் Poll_c10ஓ.பன்னீர்செல்வம் Poll_m10ஓ.பன்னீர்செல்வம் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஓ.பன்னீர்செல்வம் Poll_c10ஓ.பன்னீர்செல்வம் Poll_m10ஓ.பன்னீர்செல்வம் Poll_c10 
19 Posts - 3%
prajai
ஓ.பன்னீர்செல்வம் Poll_c10ஓ.பன்னீர்செல்வம் Poll_m10ஓ.பன்னீர்செல்வம் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஓ.பன்னீர்செல்வம் Poll_c10ஓ.பன்னீர்செல்வம் Poll_m10ஓ.பன்னீர்செல்வம் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஓ.பன்னீர்செல்வம் Poll_c10ஓ.பன்னீர்செல்வம் Poll_m10ஓ.பன்னீர்செல்வம் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஓ.பன்னீர்செல்வம் Poll_c10ஓ.பன்னீர்செல்வம் Poll_m10ஓ.பன்னீர்செல்வம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஓ.பன்னீர்செல்வம் Poll_c10ஓ.பன்னீர்செல்வம் Poll_m10ஓ.பன்னீர்செல்வம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓ.பன்னீர்செல்வம்


   
   
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Thu Oct 09, 2014 6:01 pm

ஓ.பன்னீர்செல்வம்
ப.திருமாவேலன், படங்கள்: சொ.பாலசுப்ரமணியன், வீ.சக்தி அருணகிரி


C/o நெம்பர் 1, அம்மா இல்லம்,
பணிவுப் பாதை,
விசுவாசபுரம்(அஞ்சல்),
நன்றியூர்.

அக்ரஹாரத்துக்கும் பன்னீருக்கும் ஏதோ பூர்வகால பந்தம் இருக்கிறது. பெங்களூரு பரப்பன அக்ரஹாராவில் அடித்த தீர்ப்புப் புயல், பெரியகுளம் தெற்கு அக்ரஹாரத்தில் குடியிருந்த ஓ.பன்னீர்செல்வத்தை கோபுரத்துக்குக் கொண்டுபோய்விட்டது. ஓ.பன்னீர், இப்போது இரண்டாவது முறையாக 'ஓகோ பன்னீராக’ உயர்ந்துவிட்டார்

ஸ்ரீவில்லிபுத்தூர் பேச்சியம்மனையும், பெரியகுளம் வீரகாளியம்மனையும், திருவல்லிக்கேணி பார்த்தசாரதியையும், நங்கநல்லூர் ஆஞ்சநேயரையும்விட ஜெயலலிதாவையே கணம்தோறும் தொழுதுவந்தார் பன்னீர். 'நான் வணங்கும் தாயுருவ தெய்வத்தைத் தலைவணங்கி...’ என்றுதான் எப்போதும் தன் பேச்சைத் தொடங்குவார். கடந்த ஜூலை மாதம் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்யும்போது, பன்னீருக்கு வார்த்தைகள் கவிதையாகக் கொட்டின.

'ஏங்கி நிற்கும் ஏழைகளைத் தாங்கி நிற்கும் பூமித் தாயே!
ஈரிலையில் வாழுகிற இன்னொரு கலைமகளே!
உலகம் உள்ள வரை கழகம் நிலைக்கும்!
கழகம் உள்ள வரை உங்கள் புகழ் நிலைக்கும்!
இந்த உயிர் இந்த உடலில் நீடிக்கும் வரை 'அம்மா வாழ்க ’
எனும் ஒற்றை வாசகம் ஓங்கி ஒலிக்கும்!
ஓங்கி ஒலிக்கும்! ’

என பன்னீர், பா பன்னீர் தெளித்தபோது கை வலிக்கக் கைதட்டினார்கள். இன்று மனம் வலிக்க தமிழ்நாடு முதலமைச்சராகப் பதவியேற்றுள்ளார் பன்னீர்.
ஓ.பன்னீர்செல்வம் P38
அரசியல் என்பது, தன் நிழலையே நம்பாமல் உஷாராக இருக்கவேண்டிய இடம். அந்த அரசியல் சூழலில், அதுவும் ஜெயலலிதாவிடம் 13 ஆண்டுகளாக நன்மதிப்பைத் தக்கவைத்துக்கொண்டவர் பன்னீர். இப்போதாவது கடந்த 13 ஆண்டுகள் அனுபவம், 'பன்னீர்தான் நம்பிக்கையானவர்’ என ஆலோசனை அளித்திருக்கும். ஆனால், 2001-ல் மூன்று மணி நேர இடைவேளையில் பன்னீரை ஜெயலலிதா முதலமைச்சர் ஆக்கியதுதான், அதிசயம்.

அப்போது ஜெயலலிதாவின் பதவி பறிக்கப்பட்ட உத்தரவு செப்டம்பர் 21-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் காலை 10.45 மணிக்குப் பிறப்பிக்கப்பட்டது. அடுத்த ஒரு மணி நேரத்தில் கவர்னர் மாளிகைக்குப் போனார் ஜெ. அங்குதான் அவரது வாகனத்தில் இருந்த தேசியக் கொடி கழற்றப்பட்டது. அ.தி.மு.க கொடியோடு போயஸ் கார்டன் வந்தவர், மதியம் 1 மணிக்கு பன்னீரை அழைத்துப் பேசிவிட்டார்.

'நீங்கள்தான் முதலமைச்சர் ஆகப் போகிறீர்கள்?’ என தன் முன்னால் நடுநடுங்கி விதிர்விதிர்த்து உட்கார்ந்திருந்த பன்னீரிடம் ஜெயலலிதா சொன்னபோது, அவருக்குக் காது அடைத்துவிட்டது. அடுத்து அம்மா சொன்னது எதுவும் உள்ளே போகவில்லை.
ஓ.பன்னீர்செல்வம் P38a
'உங்களை நம்பி இந்தப் பதவியை ஒப்படைக்கிறேன்’ என ஜெயலலிதா சொன்னபோது, 'எப்போதும் உங்களுக்கு துரோகம் பண்ண மாட்டேன்’ எனக் கண் கலங்கி, கையெடுத்துக் கும்பிட்டார் பன்னீர். மாலை 6.30 மணிக்கு தலைமைக் கழகத்துக்கு வந்த ஜெயலலிதா, எம்.எல்.ஏ-க்களிடம், 'ஓ.பன்னீர்செல்வத்தை முதலமைச்சராக்க நினைக்கிறேன்’ என்று சொன்னபோது, பலருக்கு பன்னீரின் முகம் கலங்கலாகத்தான் நினைவுக்கு வந்தது. அப்போது அவர் அமைச்சராகி நான்கு மாதங்கள்கூட ஆகவில்லை. மேலும் அமைச்சரவையில் 10-வது இடத்தில் பம்மியபடி இருந்தார். இப்போது போலவே அப்போதும் இளவரசியா, அனுராதாவா, சரோஜாவா எனப் பட்டிமன்றம் நடந்துகொண்டிருந்தபோது, பன்னீரை அலேக்காகத் தூக்கிவைத்தார் ஜெயலலிதா. அன்று இரவே பதவியேற்பு விழா.

கவர்னர் மாளிகையில் இரட்டை ராணிகளாக ஜெயலலிதாவும் சசிகலாவும் கம்பீரமாக உட்கார்ந்திருந்தார்கள். தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பதவியேற்ற பன்னீர், எந்தத் தயக்கமும் இல்லாமல் ஜெயலலிதாவின் காலில் விழுந்து வணங்கினார். அருகில் இருந்த நாற்காலியில் உட்கார்ந்தும் உட்காராமலும் அந்தரத்தில் அமர்ந்திருந்தார்; தரையைப் பார்த்தபடி இருந்தார். 13 ஆண்டுகளுக்கு முன் எப்படி உட்கார்ந்திருந்தாரோ, அதே மாதிரியே கடந்த செப்டம்பர் 27-ம் தேதி தமிழ்நாட்டின் முதலமைச்சராக மீண்டும் இரண்டாம் முறை பதவியேற்றப்போதும் பன்னீர் உட்கார்ந்திருந்தார். அன்று ஜெயலலிதா அருகில் இருந்தார்; இன்று சிறையில் இருக்கிறார். ஆனாலும் அம்மா தன்னைக் கவனித்துக்கொண்டு இருப்பதாக உணர்ந்தவராகவே உட்கார்ந்திருந்தார் அல்லவா... அதுதான் பன்னீர்! பயத்தினால் அல்ல, மனதளவிலேயே அப்படி ஆகிவிட்டார். அதுதான் இரண்டாவது முறையும் முதலமைச்சர் நாற்காலியை, அவருக்கு முன் நகர்த்தி வந்திருக்கிறது.
ஓ.பன்னீர்செல்வம் P38e
பன்னீர்செல்வத்தின் அப்பா, ஒரு விவசாயி. பெரியப்பா பெரியகுளம் பேச்சிமுத்து, பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலேயே ஊர் தலைவராக இருந்தவர். அந்தக் காலத்து தலைவர்கள் இந்த வட்டாரத்துக்கு வரும்போது அவரது வீட்டுக்கு வந்து - போயிருக்கிறார்கள். அந்த ரத்த ஓட்டமும் எம்.ஜி.ஆர் மீதான ரசிப்பு மயக்கமும்தான் பன்னீரை 1972-ல் அரசியலுக்குள் அழைத்து வந்தது. பி.ஏ படித்திருந்தாலும் வேலை தேடிப் போகாமல் சொந்தமாக தென்கரையில் ஒரு பால் பண்ணையும் ஒரு டீக்கடையும் வைத்து, எல்லா வேலைகளையும் செய்து வந்தார் பன்னீர். மாடு கழுவுவதில் இருந்து டீ போடுவது வரை எதையும் விட்டுவைக்கவில்லை. 'அடக்கமான ஆளு’ எனக் கட்சிக்குள் பேர் எடுத்தார்.

அரசியல் பதவிகள் அடுத்தடுத்து அவரை நோக்கி அணிவகுக்க ஆரம்பித்தன. 'கடைக்கோடியில் இருந்தவரை முதலமைச்சர் ஆக்கிவிட்டார் ஜெயலலிதா’ என இன்று பெருமை பேசப்படுகிறது. ஆனால், பன்னீரின் பயணத்தைப் பார்த்தால் இந்த உச்சிப் பதவியை அடைய, கடை நிலையில் இருந்து அவர் முயற்சியாலேயே முன்னேறி வந்ததை உணர முடியும்.

கட்சியில் எம்.ஜி.ஆர் காலத்திலேயே பெரியகுளம் நகரச் செயலாளர்; ஜெயலலிதா முதல்முறை முதலமைச்சர் ஆனபோது மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர்; அதைத் தொடர்ந்து பெரியகுளம் நகரச் செயலாளர்; 1999-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் முடிந்ததும், அப்போதைய மாவட்டச் செயலாளர் சையது கான் நீக்கப்பட்டு, அந்த இடத்தில் பன்னீர் அமர்த்தப்பட்டார். அதன் பிறகு மாநில அரசியல் மாலை சூடியது. கட்சியின் பொருளாளர் ஆனார்.
ஓ.பன்னீர்செல்வம் P38c
நிர்வாகரீதியாகப் பார்த்தால்... பெரியகுளம் நகராட்சித் தலைவர், 2001-ல் வருவாய்த் துறை அமைச்சர், 2001-ல் தமிழகத்தின் முதலமைச்சர், அதன் பிறகு பொதுப்பணித் துறை அமைச்சர், 2006-ல் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், ஜெயலலிதா அந்தப் பதவிக்கு வந்ததும் எதிர்க்கட்சித் துணைத் தலைவர், 2011-ல் நிதி அமைச்சர் மற்றும் அவை முன்னவர், இப்போது தமிழ்நாட்டின் முதலமைச்சர்.

படிநிலை வளர்ச்சிப்படி பன்னீரின் பதவி நீர்மட்டம் கடந்த 20 ஆண்டுகளில் படிப்படியாக உயர்ந்து வந்ததே தவிர, குறையவே இல்லை. அ.தி.மு.க வென்றாலும் தோற்றாலும், இவர் தன் தொகுதியில் வென்று வருகிறார். மூன்றாவது முறையாக தமிழ்நாடு சட்டமன்றத்துக்குள் நுழைந்துள்ளார். தலைமையிடம் நல்ல பேர் வாங்குவதற்காக சென்னையிலேயே சுற்றிக்கொண்டிருப்பவர்கள் தொகுதிகளைக் கவனிப்பது இல்லை. ஆனால், ஒவ்வொரு வாக்காளரையும், மூன்று முறைக்கு மேல் சந்தித்து வாக்கு கேட்கும் வழக்கத்தை பன்னீர் வைத்துள்ளார்.

வாரம்தோறும் சனி, ஞாயிறுகளில் முழுமையாகவே தொகுதிக்குள் வலம்வருவார். எந்தக் குடும்பத்து நிகழ்ச்சியாக இருந்தாலும் பன்னீர் பையில் இருந்து 1,000 ரூபாய் மொய்ப் பணம் போய்விடும். கோரிக்கை நிறைவேறுகிறதோ இல்லையோ, அமைதியாக அதனைக் காதுகொடுத்துக் கேட்டுவிடுவது பழக்கம். நிறைவேறாவிட்டாலும், 'சேர்மன் செய்யணும்னுதான் நினைச்சாரு. நமக்குத்தான் நல்ல நேரம் இல்லை’ என தொகுதிவாசிகள் தங்களை நொந்துகொள்வார்களே தவிர, பன்னீர் மீது பாய மாட்டார்கள். அமைச்சர், முதலமைச்சர் எனப் பளபள பதவிகள் அலங்கரித்தாலும், பலருக்கும் பன்னீர் இன்று வரை 'சேர்மன்’தான். 'சேர்மன் பேசுறேங்க’ என பன்னீருக்கே சில நேரங்களில் வாய் வந்துவிடும். அந்த அளவுக்கு பழசை மறக்காதவர்!
ஓ.பன்னீர்செல்வம் P38d
இவரது அரசியல் பயணத்துக்குத் தடங்கல் இல்லாத பாதையும், திடீர் திருப்பமும் ஏற்படுத்திக்கொடுத்தவர் டி.டி.வி.தினகரன். 1999-ல் தேனி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட வந்த தினகரன் முகத்தில் பன்னீர் பட்டார். பெரியகுளம் நகரசபைக்கு உட்பட்ட பகுதியில் தினகரன் இருந்து வேலை பார்த்தால் எப்படிச் செயல்படுவாரோ, அப்படி உழைத்தார் பன்னீர். பெரியகுளத்தில் இருந்த தனது தம்பி வீட்டை, தினகரன் தங்குவதற்குக் கொடுத்தார். 'அ.தி.மு.க-வில் அம்மா, சின்னம்மாவுக்கு அடுத்து தினகரன்தான்...’ என்ற உச்சத்தில் டி.டி.வி இருந்த நேரம் அது. அப்போது ஓட்டுக் கேட்டு தினகரன் போகும் இடங்களுக்கு எல்லாம் கைகளைக் கட்டிக்கோண்டே அவர் பின்னால் பன்னீர் செல்வார். மறுத்துப் பேசாத மனமும், அதிர்ந்துபேசாத குரலும் பன்னீருக்கு இருந்ததால், சென்னையை நோக்கி பன்னீரை நகர்த்திக்கொண்டு போனார் தினகரன். அ.தி.மு.க-வின் அடுத்த பொதுச் செயலாளர், கட்சி அடுத்து அவரிடம்தான் போகும், கட்சியின் எதிர்காலம் அவர் கையில்தான் இருக்கிறது என்றெல்லாம் எதிர்பார்க்கப்பட்ட தினகரன் எங்கேயோ இருக்க, அவரால் அழைத்துவரப்பட்ட பன்னீர், இரண்டு முறை தமிழ்நாட்டுக்கு முதலமைச்சர் ஆகிவிட்டார்.

'பரணி, தரணி ஆளும்’ என்பது ஜோதிட ஆர்வலர்களின் நம்பிக்கை. அது பன்னீர் விஷயத்தில் பின்னியெடுக்கிறது!

பன்னீர்த் துளிகள்
ஓ.பன்னீர்செல்வம் P38b
1. ஸ்ரீவில்லிபுத்தூரைப் பூர்வீகமாகக்கொண்ட பன்னீரின் குடும்பம், வேலை தேடி பெரியகுளம் பகுதிக்கு இடம்பெயர்ந்தது. ஓட்டக்காரத் தேவர்-பழனியம்மாள் பெற்றோர். உடன்பிறந்தவர்கள் நான்கு சகோதரர்கள்; மூன்று சகோதரிகள்.

2. பெரியகுளம் எட்வர்டு நினைவு நடுநிலைப் பள்ளி, வி.நி.மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றில் 11-ம் வகுப்பு வரை படித்தார். நாகமலை புதுக்கோட்டையில் பி.யூ.சி-யும், உத்தமபாளையம் ஹாஜி ராவுத்தர் கல்லூரியில் பி.ஏ-வும் படித்தார். தமிழகத்தில் அறிஞர் அண்ணாவுக்குப் பிறகு 'முதலமைச்சர்’ பதவியைப் பிடித்த பட்டதாரி பன்னீர்தான்!

3. பன்னீர் தனது நண்பர் விஜயனோடு சேர்ந்து ஆரம்பித்த டீக்கடைக்கு 'பி.வி.கேன்டீன்' என்று பெயர். பி ஃபார் பன்னீர்... வி ஃபார் விஜயன்!

4. மனைவி விஜயலட்சுமி. மூத்த மகன் ரவீந்திரநாத் குமார், இரண்டாவது மகன் ஜெய பிரதீப். இருவரும் அ.தி.மு.க-வில் ஐக்கியம். மகள் கவிதா, மதுரை உயர் நீதிமன்ற அரசு வழக்கறிஞரான கோவில்பட்டி செல்லப்பாண்டியனின் மகன் காசிராஜனைத் திருமணம் செய்துள்ளார்.

5. வாட்ச், மோதிரம் அணிய மாட்டார் பன்னீர். வெளியூர் செல்லும்போது மட்டும் வாட்ச்சை சட்டை பாக்கெட்டில் வைத்துக்கொள்வார்.

6. தனது குலதெய்வக் கோயிலான ஸ்ரீவில்லிபுத்தூர் பேச்சியம்மனை உருகி உருகி வணங்குவார். சென்னையில் இருக்கும்போது பார்த்தசாரதி, ஆஞ்சநேயர் கோயில்களுக்குச் செல்வார்.

7. தினமும் காலையில் நடைப்பயிற்சி. இளமைக் காலத்தில் வாலிபால் ஆட்டம் விருப்ப விளையாட்டு.

8. புல்லட் ஓட்டுவது என்றால், அத்தனை இஷ்டம்!

9. மட்டன் பிரியர். ஆனால், கடந்த ஒன்பது ஆண்டுகளாக அசைவத்தைத் தொடுவது இல்லை!

10. கார் பயணங்களில் எப்போதும் எம்.ஜி.ஆர் பாடல்கள் ஒலிக்க வேண்டும்.

11. ஜோதிடம், வாஸ்து போன்றவற்றில் அதீத நம்பிக்கை உண்டு. நல்ல நேரம் பார்த்துதான் வெளியில் கிளம்புவார்.

12. பாப்பிரெட்டிகுளம் அருகே உள்ள விவசாய நிலம், தென்கரை பால் பண்ணை, பி.வி.கேன்டீன்... ஆகியவை பன்னீரின் ஆரம்ப காலச் சொத்துக்கள். பின்னர் தெற்கு அக்ரஹாரத்தில் இருந்த முன்னாள் அமைச்சர் ராஜா முகமதுவின் வீட்டை, 1997-ம் ஆண்டு வாங்கினார்.

ஆனந்தவிகடன்


avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Thu Oct 09, 2014 6:04 pm

‘அதுதான் உலகம்!’
ஜோ.ஸ்டாலின்


போயஸ் கார்டனில் ஜெயலலிதா எப்படி இருந்தார் என ஊருக்கே தெரியும். பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்தின் 23-ம் எண் அறையில் என்ன செய்துகொண்டிருக்கிறார்?

சசிகலா, சுதாகரன், இளவரசி... ஆகியோருக்கு ஜெயலலிதாவுக்குப் பக்கத்து அறைகள்தான் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால், முதல் வாரத்தில் இரண்டு முறைதான் ஜெ.-சசி சந்திப்பு நடந்துள்ளது. சிறை நிர்வாகம் ஜெயலலிதாவுக்கு எனப் பிரத்யேகமாக பத்மாவதி என்கிற சிறைக் காவலரை நியமித்திருக்கிறது. அவருடன் கன்னட மொழியில் சகஜமாகப் பேசுகிறார் ஜெயலலிதா. பத்மாவதியின் குடும்ப நிலவரம், பின்னணி பற்றியெல்லாம் கேட்டிருக்கிறார். 'அம்மா எல்லா டி.வி-லயும் உங்களைத்தான் காமிக்கிறாங்க. ஒவ்வொண்ணுலயும் ஏதேதோ சொல்றாங்க!’ எனச் சொல்லியிருக்கிறார் பத்மாவதி. 'அதுதான் உலகம்’ என அமைதியாகச் சொன்னாராம் ஜெ.
ஓ.பன்னீர்செல்வம் P30a
ஜெயலலிதாவுக்கான உணவு பெரும்பாலும் வெளியில் இருந்தே வருகின்றது. (சிறப்புச் சலுகை) 'ஆனந்த பவன்’ ஹோட்டலில் இருந்தும் சசிகலாவின் பெங்களூரு உறவினர் வீட்டில் இருந்தும்கூட வருகின்றன. சமீபமாக சென்னை ஹாட் பிரெட்ஸில் இருந்து ரொட்டி மற்றும் ரஸ்க்குகள் வாங்கி பெங்களூருவுக்கு அனுப்பப்படுகின்றன. சிறை நிர்வாகம் தரும் பால், பிரெட் மட்டும் எடுத்துக்கொள்கிறார்.

காலை, மாலை இரண்டு வேளைகளிலும் 15 நிமிடங்கள் தியானத்தில் ஆழ்ந்துவிடுகிறார். தினம் மூன்று ஆங்கில நாளிதழ்கள், இரண்டு தமிழ் நாளிதழ்களை வாசிக்கிறார். சிறை விதிகளின்படி அவர் சீருடைதான் அணிய வேண்டும். ஆனால், சிறை நிர்வாகம் அதில் கண்டிப்பு காட்டவில்லை. 10-க்கு 15 சுற்றளவு கொண்டது ஜெ. இருக்கும் அறை. பாதி வரை சுவர்; அதற்கு மேல் கம்பிகளால் செய்யப்பட்ட கேட். அங்கிருந்து பார்வையாளர்கள் அறைக்கு வருவதற்கு சுமார் 1,500 அடி நடக்க வேண்டும். ஆனால், சிறைக்குச் சென்றதில் இருந்து அந்தத் தூரத்தை நடந்து கடக்கவே இல்லை ஜெ.

சிறை நிர்வாகம் ஜெயலலிதா மீது மென்மையான அணுகு முறையைக் காட்ட, சசிகலா, சுதாகரன், இளவரசி உள்ளிட்ட மற்ற மூவர் மீதும் இறுக்கமான கெடுபிடிகள் காட்டப்படுகின்றன. நீரழிவு நோயால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு காலை, மாலை என இரண்டு வேளைகளிலும் இன்சுலின் போடப்படுகிறது. அதைக் காரணமாகச் சொல்லி, சிறைக்கு வெளியே உள்ள அப்போலோ மருத்துவமனையில் தன்னை அனுமதிக்க வேண்டும் எனக் கேட்டிருக்கிறார் சசி. 'நீங்கள் வீட்டில் இருக்கும்போது இந்த ஊசியைப்போட தினமும் இரண்டு வேளைகளும் மருத்துவமனைக்குச் சென்றீர்களா?’ எனக் கேட்டிருக்கிறார்கள் சிறைக் காவலர்கள். சசிகலா மௌனம் சாதிக்க, அனுமதி மறுத்துவிட்டார்கள்.

உயர் ரத்த அழுத்தம் காரணமாக இரண்டு முறை சுதாகரன் சிறை மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டிருக்கிறார். 'தூக்கம் இல்லாததால் அவரது உடல் சமநிலையை இழந்துவிட்டது. மற்றபடி எந்தப் பிரச்னையும் இல்லை’ எனச் சொல்லி டிரிப்ஸ் ஏற்றி, தூக்கம் வருவதற்கான மருந்துகளைக் கொடுத்திருக்கிறா£ர்கள். இதெல்லாம் தெரிந்தோ என்னவோ, எந்தப் பிரச்னையையும் எழுப்பாமல், எந்தச் சலுகையையும் கோராமல் அமைதியாக இருக்கிறார் இளவரசி.

தமிழகத்தில் செயின்ட் ஜார்ஜ் கோட்டை கிட்டத்தட்ட ஸ்தம்பித்த நிலைதான்! அனுதின அலுவல்கள் அரசுத் துறை செயலாளர்களின் தலைமையில் நடந்துகொண்டிருக்கின்றன. ஆனால், புதிய திட்டங்கள் தொடர்பான அறிக்கைகள் மற்றும் முதலமைச்சரின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த கோப்புகள் எவற்றிலும் புதிய முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இதுவரை கையெழுத்து போடவில்லை.

தலைமைச் செயலகத்தில் அளிக்கும் வாழ்த்துச் செய்திகள் மற்றும் அறிவிப்புகளில் 'முதலமைச்சர் செல்வி. ஜெ.ஜெயலலிதா’ என முழுப் பெயரும் முன்பு குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால், இப்போது வரும் அறிவிப்புகள் மற்றும் வாழ்த்துச் செய்திகளில் 'முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்’ எனப் பெயர் இல்லை. வெறுமனே, 'முதலமைச்சர் வாழ்த்து’ என்றும் 'முதலமைச்சர் அறிவிப்பு’ என்றும் இருகின்றன. அரசு அலுவலகங்களிலும் ஜெயலலிதாவின் படம் அகற்றப்படவில்லை. தமிழக அரசின் விளம்பரங்கள், திரையரங்க செய்திப் படங்கள் அனைத்திலும் ஜெயலலிதாவே காட்சியளிக்கிறார்.

பெங்களூரு ஜெயிலில், ஜெயலலிதாவைச் சந்திக்க கட்சியின் அத்தனை பிரமுகர்களும் முயற்சிக்கிறார்கள். ஆனால், 'ஜாமீன் அனுமதியுடன் வருபவரைத்தான் நான் பார்ப்பேன்’ என சூசகமாக உணர்த்தி, அதில் உறுதியாகவும் இருக்கிறார் ஜெயலலிதா!

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu Oct 09, 2014 7:26 pm

நல்லவர்கள் வாழனும் பல்லாண்டு......

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக