புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விண்டோஸ் 10  Poll_c10விண்டோஸ் 10  Poll_m10விண்டோஸ் 10  Poll_c10 
107 Posts - 49%
heezulia
விண்டோஸ் 10  Poll_c10விண்டோஸ் 10  Poll_m10விண்டோஸ் 10  Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
விண்டோஸ் 10  Poll_c10விண்டோஸ் 10  Poll_m10விண்டோஸ் 10  Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
விண்டோஸ் 10  Poll_c10விண்டோஸ் 10  Poll_m10விண்டோஸ் 10  Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
விண்டோஸ் 10  Poll_c10விண்டோஸ் 10  Poll_m10விண்டோஸ் 10  Poll_c10 
7 Posts - 3%
prajai
விண்டோஸ் 10  Poll_c10விண்டோஸ் 10  Poll_m10விண்டோஸ் 10  Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
விண்டோஸ் 10  Poll_c10விண்டோஸ் 10  Poll_m10விண்டோஸ் 10  Poll_c10 
2 Posts - 1%
Barushree
விண்டோஸ் 10  Poll_c10விண்டோஸ் 10  Poll_m10விண்டோஸ் 10  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
விண்டோஸ் 10  Poll_c10விண்டோஸ் 10  Poll_m10விண்டோஸ் 10  Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
விண்டோஸ் 10  Poll_c10விண்டோஸ் 10  Poll_m10விண்டோஸ் 10  Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விண்டோஸ் 10  Poll_c10விண்டோஸ் 10  Poll_m10விண்டோஸ் 10  Poll_c10 
234 Posts - 52%
heezulia
விண்டோஸ் 10  Poll_c10விண்டோஸ் 10  Poll_m10விண்டோஸ் 10  Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
விண்டோஸ் 10  Poll_c10விண்டோஸ் 10  Poll_m10விண்டோஸ் 10  Poll_c10 
30 Posts - 7%
mohamed nizamudeen
விண்டோஸ் 10  Poll_c10விண்டோஸ் 10  Poll_m10விண்டோஸ் 10  Poll_c10 
18 Posts - 4%
T.N.Balasubramanian
விண்டோஸ் 10  Poll_c10விண்டோஸ் 10  Poll_m10விண்டோஸ் 10  Poll_c10 
18 Posts - 4%
prajai
விண்டோஸ் 10  Poll_c10விண்டோஸ் 10  Poll_m10விண்டோஸ் 10  Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
விண்டோஸ் 10  Poll_c10விண்டோஸ் 10  Poll_m10விண்டோஸ் 10  Poll_c10 
2 Posts - 0%
Barushree
விண்டோஸ் 10  Poll_c10விண்டோஸ் 10  Poll_m10விண்டோஸ் 10  Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
விண்டோஸ் 10  Poll_c10விண்டோஸ் 10  Poll_m10விண்டோஸ் 10  Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
விண்டோஸ் 10  Poll_c10விண்டோஸ் 10  Poll_m10விண்டோஸ் 10  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விண்டோஸ் 10


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 14, 2014 2:48 am

விண்டோஸ் 10  E_1413102776ஒரு வழியாக, மைக்ரோசாப்ட் நிறுவனம், தன் அடுத்த விண்டோஸ் இயக்க முறைமையை அளித்து, நம்மை திடீர் மகிழ்ச்சியில் தள்ளியுள்ளது. பல மாதங்களாகவே, விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கு மாற்றாக, புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஒன்றைத் தர வேண்டிய கட்டாயத்திற்கு மைக்ரோசாப்ட் தள்ளப்பட்டது. என்னதான், சின்ன சின்ன மாற்றங்களைத் தன் விண்டோஸ் 8 சிஸ்டத்தில் அறிவித்தாலும், மக்கள் முழுமையாக அதனை ஏற்றுக் கொள்ள மறுத்தனர். எனவே, தாங்கள் தொடர்ந்து விரும்பும் சில வசதிகளுடன், நவீன தொழில் நுட்பத்தின் அடிப்படையில் புதிய விண்டோஸ் சிஸ்டம் கிடைக்கும் என எதிர்பார்த்தனர்.

மைக்ரோசாப்ட் நிறுவனமும் "Windows Threshold" என்ற குறியீட்டுப் பெயரில், வாடிக்கையாளர்களின் அனைத்து எதிர்ப்பார்ப்புகளையும் உள்ளடக்கிய புதிய விண்டோஸ் சிஸ்டத்தினை வடிவமைப்பதில் இறங்கியது. இது குறித்து பல புதிய தகவல்கள் கசிந்தன. அனைவரும் இது விண்டோஸ் 9 அல்லது வேறு ஒரு பெயரில் (WindowsTH ("Windows Threshold"), Windows X, Windows One) என வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில், சென்ற மாத இறுதியில், மைக்ரோசாப்ட் தன் புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை ''விண்டோஸ் 10'' என்ற பெயருடன் வெளியிட்டது. இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டவர்களுக்கு, அங்கு தரப்படும் வை பி இணைப்பைப் பயன்படுத்தத் தேவையான பாஸ்வேர்ட் “Windows2015” என அறிவிக்கப்பட்டது. அதனால், அனைவரும், வர இருக்கும் விண்டோஸ் சிஸ்டம் பெயர் விண்டோஸ் 2015 எனவே எண்ணி இருந்தனர். ஆனால், ''விண்டோஸ் 10'' என எதிர்பாராத பெயர் அறிவிக்கப்பட்டது. இதில், விண்டோஸ் 7 மற்றும் 8 சிஸ்டங்களில் உள்ள, வாடிக்கையாளர்களால் சிறந்தது என்று ஏற்றுக் கொள்ளப்பட்ட அனைத்து வசதிகளும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.

இந்த அறிமுக விழா, இதுவரை, கடந்த 20 ஆண்டுகளில், விண்டோஸ் அறிமுகப்படுத்தப்பட்ட விழாக்களுக்கு மாறான முறையில் இருந்தது. இந்த விழாவில் நமக்குக் கிடைத்த புதிய தகவல்களை இங்கு பார்க்கலாம்.

ஏன் விண்டோஸ் 10?

இந்த புதிய வெளியீட்டிற்கு, இயற்கையான தொடர் எண்ணாக 9 தான் இருந்திருக்க வேண்டும். இதனை வடிவமைத்த குழுவின் தலைவரான டெர்ரி மையர்சன் பேசுகையில், இது கடந்த கால விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களின் தொடர்ச்சி அல்ல. முற்றிலும், முற்றிலும், புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டமாகும். எனவே தான், தொடர் எண்ணாக இல்லாமல் விண்டோஸ் 10 என இது பெயர் சூட்டப்பட்டுள்ளது என்று அறிவித்தார். இது பெர்சனல் கம்ப்யூட்டர்கள் மற்றும் சர்வர்கள் மட்டுமின்றி, இணையத்துடன் தொடர்பு கொள்ளக் கூடிய அனைத்து சாதனங்களிலும் (வீட்டு பொருட்கள் உட்பட), பெர்சனல் கம்ப்யூட்டர், டேப்ளட் பி.சி., எக்ஸ் பாக்ஸ், க்ளவ்ட் இயக்க சாதனங்கள் என அனைத்திலும் இயங்கக் கூடியதாக இருக்கும். எனவே தான், முந்தைய விண்டோஸ் சிஸ்டங்களிலிருந்து வேறுபட்டதாக இதற்கு விண்டோஸ் 10 எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

ஒரே மேடையும் வேறுபாடான அனுபவமும்

வெவ்வேறு தன்மையுள்ள, இயக்கம் கொண்ட அனைத்து சாதனங்களிலும் விண்டோஸ் 10 இயங்கினாலும், பயனாளர்களைப் பொறுத்த வரை வேறுபட்ட அனுபவத்தினையே இந்த சிஸ்டம் தரும். மொபைல் போன், டேப்ளட் பி.சி.க்கள் மற்றும் பெர்சனல் கம்ப்யூட்டர்களுக்கென வெவ்வேறு இடைமுகங்களை (Interfaces) இந்த சிஸ்டத்திற்கென, தனி குழு வடிவமைத்து வருகிறது. ஒரே ஸ்டோர் தரும் ஒரே கட்டமைப்பு இயக்கமாக இருந்தாலும், வாடிக்கையாளர்கள் தங்கள் சாதனங்களுக்கேற்ப அனுபவத்தினைப் பெறுவார்கள். இதுவரை மைக்ரோசாப்ட் தந்ததில் இதுவே, அனைத்தையும் அரவணைத்து இயங்கும் சிஸ்டமாக இருக்கும்.

நிறுவனங்களின் எதிர்பார்ப்பு

விண்டோஸ் 10 மூலம், தன் நிறுவன வாடிக்கையாளர்களை, குறிப்பாக பெரிய அளவில் தங்கள் நிறுவன நிர்வாக நடவடிக்கைகளில் விண்டோஸ் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை மைக்ரோசாப்ட் நிறைவேற்றியுள்ளது. விண்டோஸ் 8 மூலம் பலத்த ஏமாற்றத்தைச் சந்தித்தவர்கள் இந்த நிறுவனங்கள் தான். இது மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு அதிர்ச்சியையும், இழப்பையும் கொடுத்தது. எனவே தான், விண்டோஸ் 10 மூலம் இவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதில் மைக்ரோசாப்ட் அதிக முயற்சிகளை எடுத்து, புதிய சிஸ்டத்தினை வடிவமைத்துள்ளது. இந்த பெரிய நிறுவனங்களுக்கான தேவைகளை நான்கு பிரிவுகளில் நிறைவேற்றியுள்ளது. தங்கள் கம்ப்யூட்டர்களின் இயக்க முறைமையினை மேம்படுத்துகையில், நிறுவனங்கள், புதிய முறைமை தங்கள் நிறுவன ஊழியர்களுக்கு, நன்றாகப் பழகிய ஒன்றாகவே இருக்க வேண்டும்; ஏற்கனவே இயங்கிய முறைமைக்கு எந்த விதத்திலும் இணைவாக, இசைவாக இல்லாமல் இருக்கக் கூடாது. புதிய முறைமையினால், கூடுதல் திறன் கிடைக்க வேண்டும். உற்பத்தி திறன் அதிகரிக்க வேண்டும். மேலும், நிர்வாகத்தில் புதியதாக உருவாகி வரும் திறன்களை வளர்ப்பதாக இருக்க வேண்டும். மொபைல் ஸ்மார்ட் போன் மற்றும் டேப்ளட் பி.சி.க்கள் வழியாக நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்வதில், புதிய சிஸ்டம் துணையாக இருக்க வேண்டும். புதிய சாதனங்களோடு, பழைய சர்வர்கள் மற்றும் பெர்சனல் கம்ப்யூட்டர்களுடனும் இது இணைவாகச் செயல்பட வேண்டும்.

விண் 7 மற்றும் 8 மேம்பாடு

இந்த புதிய விண்டோஸ் 10 சிஸ்டம், விண்டோஸ் 7 மற்றும் 8 பயன்படுத்துவோர் எளிதாக அப்கிரேட் செய்திடும் வகையில் தரப்படுகிறது. இந்த இரண்டு சிஸ்டம் பயன்படுத்துவோர் என்ன என்ன எதிர்பார்க்கின்றனரோ, அவை அனைத்தையும் தருவதில் விண்டோஸ் 10 முயற்சி செய்துள்ளது. விண்டோஸ் 7 பயன்படுத்துவோர், ஸ்டார்ட் மெனு, டாஸ்க்பார் மற்றும் டெஸ்க்டாப் வசதிகளைப் பெறுவார்கள். விண்டோஸ் 8 பயன்படுத்துபவர்கள், அது தொடு உணர் திரையாகவோ, அது இல்லாமலோ இருந்தாலும், ஸ்டார்ட் ஸ்கிரீன் பெறுவார்கள். டச் இண்டர்பேஸ் மேம்படுத்தப்பட்டு, வாடிக்கையாளர்கள் புரிந்து கொள்ளும் வகையில் எளிதாக்கப்படும். விண்டோஸ் 10ல், உலகளாவிய தேடலை இணையம் வழி மேற்கொள்ள தேடல் கட்டம் தரப்படுகிறது.

வழக்கமாக புதிய சிஸ்டங்கள் உருவாக்கப்படுகையில் பில்ட் எண் (Build number) ஒன்று அதற்கு வழங்கப்படும். விண் 10 சிஸ்டம் காட்டப்படுகையில் அது 9841 ஆக இருந்தது. முழுமையாக வெளிவரும்போது இதுவாக இருக்கலாம்; அல்லது வேறாக இருக்கலாம்.

சில சிறிய புதிய வசதிகள்

அப்ளிகேஷன்களை அப்படியே தள்ளி வைத்திட Snap என்னும் டூல் தரப்பட்டது. இது மேம்படுத்தப்பட்டு, Snap Assist UI என்ற பெயரில், அப்ளிகேஷன்களை அடுத்த திரைக்குத் தள்ளிவைக்கும் எளிய வேலையை மேற்கொள்ளும் வகையில் தரப்பட்டுள்ளது. கட்டளைப் புள்ளி (command prompt) வழியேயும், நாம் இதுவரை பரவலாகப் பயன்படுத்தும் ஷிப்ட் கட்டளைகள் மற்றும் CTRL + C போன்றவற்றை மேற்கொள்ளலாம்.

கைவிடப்படும் டூல்கள்

Charms டூல் நீக்கப்பட்டு, அதன் இடத்தில் புதிய யூசர் இண்டர்பேஸ் வழங்கப்பட்டுள்ளது. இதே போல Switcher டூல் இல்லாமல் போனாலும், விண் 8ல், இடது புறத்திலிருந்து ஸ்வைப் செய்கையில், ALT + TAB க்கான செயல்பாட்டினைப் பெறலாம்.

புதிய டூல்

விண்டோஸ் 8ல், மெட்ரோ மற்றும் வழக்கமான டெஸ்க்டாப் இடைமுகத்திற்கும் நம்மால் எளிதாக மாற்றிக் கொள்ள முடிந்தது. இதனை Continuum என்ற டூல் மூலம், அனைத்து வகை சாதனங்களிலும் இந்த மாற்றத்தினை எளிதாக மேற்கொள்ளும் வகையில் மைக்ரோசாப்ட் தந்துள்ளது.

ஒன்றுக்கு மேற்பட்ட டெஸ்க்டாப்

ஒரே நேரத்தில், ஒன்றுக்கு மேற்பட்ட டெஸ்க்டாப்பினை அமைத்து இயக்க, விண்டோஸ் 10 சிஸ்டம் வழி தருகிறது. ஒவ்வொரு டெஸ்க்டாப்பிலும், நமக்குத் தேவைப்படும் பல அப்ளிகேஷன் புரோகிராம்களை, ஒரே நேரத்தில் இயக்கலாம். இதனால் வேலை விரைவில் முடியும்.

விண்டோஸ் 10 சிஸ்டத்தின் தொழில் நுட்ப முன் சோதனைக்கான பதிப்பினை மைக்ரோசாப்ட் பொதுமக்களுக்காக வெளியிட்டுள்ளது. இதனை http://preview.windows.com/ என்ற முகவரியில் பெற்றுக் கொள்ளலாம். பெற்று, இன்ஸ்டால் செய்து, பயன்படுத்திப் பார்க்கலாம். பன்னாடுகளில் இருந்து கிடைக்கும், பின்னூட்டங்களின் அடிப்படையில், விண்டோஸ் 10 இயக்க முறைமை சீர் செய்யப்பட்டு, பொதுமக்களுக்குக் கிடைக்கும்.

அநேகமாக, அடுத்த ஆண்டின் நடுவில், இது பொதுமக்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது விண்டோஸ் 8 பயன்படுத்துவோருக்கு, விண்டோஸ் 10 இலவசமாகக் கிடைக்குமா என்பதற்கான விடையை, மைக்ரோசாப்ட் நிறுவன நிர்வாகிகள் எவரும் கூறவில்லை. ஆனால், விண்டோஸ் வாடிக்கையாளர்கள் இதனை எதிர்பார்க்கின்றனர். ஆப்பிள் நிறுவனம் தன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை இலவசமாகத் தந்து வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.

அதே போல, விண்டோஸ் 10 க்கான விலை குறித்தும், இன்னும் எந்த அறிவிப்பும் வரவில்லை.



விண்டோஸ் 10  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 14, 2014 2:49 am

விண்டோஸ் 10 க்கான ஹார்ட்வேர்

விண்டோஸ் 10 தொழில் நுட்ப முன்னோட்டக் கருத்தரங்கில், விண்டோஸ் 10 இயக்க முறைைமயைப் பயன்படுத்த, ஒரு கம்ப்யூட்டரில் தேவையான ஹார்ட்வேர் தேவைகள் என்ன என்ன என்று, தெளிவாக அறிவிக்கப்படவில்லை. ஆனால், மைக்ரோசாப்ட் நிறுவன வல்லுநர் ஷா (Frank Shaw) தன் ட்விட்டர் பக்கத்தில் (https://twitter.com/fxshaw/statuses/517091005167075328), விண்டோஸ் 8க்கான ஹார்ட்வேர் தேவைகளே இதற்கும் போதும் என அறிவித்துள்ளார். எனவே, விண்டோஸ் 8 சிஸ்டம் கொண்டுள்ள பெர்சனல் கம்ப்யூட்டர், லேப்டாப் ஆகியவையே, விண்டோஸ் 10 பதித்து இயங்கவும் போதுமானதாக இருக்கும். இதனால், தற்போது கம்ப்யூட்டர் புதியதாய் வாங்கிடத் திட்டமிடுபவர்கள், விண்டோஸ் 10 சிஸ்டம் வரட்டும் எனக் காத்திருக்க வேண்டியதில்லை.

மேலும், விண் 8 கட்டணம் செலுத்தி வாங்கியவருக்கு, விண் 10 இலவசமாகவே கிடைக்கும் எதிர்பார்ப்பும் மக்களிடம் உள்ளது.

விண்டோஸ் 8.1 சிஸ்டம் இயங்கத் தேவையான ஹார்ட்வேர் தேவைகளை இங்கு பட்டியலிடலாமா!

ப்ராசசர்: ஒரு கிகா ஹெர்ட்ஸ் அல்லது கூடுதல் வேகத்தில் இயங்கும் ப்ராசசர்; இது PAE, NX, and SSE2 ஆகியவற்றை சப்போர்ட் செய்திட வேண்டும்.

ராம் நினைவகம்:
32 பிட் என்றால், குறைந்தது 1 ஜி.பி. 64 பிட் என்றால், குறைந்தது 2 ஜி.பி.

ஹார்ட் டிஸ்க் இடம்: 32 பிட் என்றால், குறைந்தது 16 ஜி.பி. 64 பிட் கம்ப்யூட்டருக்கு 20 ஜி.பி.

கிராபிக்ஸ் கார்ட்: Microsoft DirectX 9 கிராபிக்ஸ் WDDM ட்ரைவருடன்.

மேலே தரப்பட்டுள்ளவை மிக மிகக் குறைவானவையே. இப்போது ஹார்ட் டிஸ்க் குறைந்தது 500 ஜி.பி. என்ற அளவில் தான் கிடைத்து பொருத்தப்படுகிறது.

மைக்ரோசாப்ட், குறைந்த அளவினை நினைவூட்டியதன் மூலம், விண்டோஸ் 7 இயங்கும் கம்ப்யூட்டர்களும், விண்டோஸ் 10க்கு மாறிக் கொள்ளலாம் என்று அறிவுறுத்துகிறது. விண்டோஸ் 7 சிஸ்டம் இயங்க, அதில் உள்ள ப்ராசசர் PAE, NX, and SSE2 ஆகியவற்றை சப்போர்ட் செய்திடத் தேவையில்லை.



விண்டோஸ் 10  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 14, 2014 2:50 am

விண்டோஸ் 10: அப்ளிகேஷன்கள் மற்றும் டெஸ்க்டாப் இடையே

முன்பு வெளியான விண்டோஸ் இயக்க முறைமைகளில், கம்ப்யூட்டர்களில் இயங்கும் பல்வேறு அப்ளிகேஷன்களுக்கிடையே சென்று, தேவையான அப்ளிகேஷனைத் தேர்ந்தெடுக்க, , ALT + TAB ("Windows Flip"), WINKEY + TAB ("Switcher," "Windows Flip 3D") ஆகியவை பயன்பட்டன. விண்டோஸ் 10 இயக்க முறைமையில், இவை தொடர்ந்து கிடைக்கின்றன. ஆனால், சற்று மேம்படுத்தப்பட்டு எளிமைப்படுத்தப் பட்டுள்ளன.

முதன் முதலில், விண்டோஸ் சிஸ்டத்தில், அப்ளிகேஷன்களுக்கிடையே சென்று வர ALT + TAB பயன்படுத்தப்பட்டது. விஸ்டாவில் இது Windows Flip என மாற்றப்பட்டது. (அநேகமாக, பலர் இதனை மறந்திருப்பார்கள்) பின்னர், ஆல்ட் கீயை அழுத்திக் கொண்டு, டேப் கீ அழுத்த, அப்ளிகேஷன்களின் சிறிய படம் காட்டப்பட்டது. தேவையான படம் திரையில் கிடைக்கும்போது, கீகளை விலக்க, அப்ளிகேஷன் திரையின் முன்பகுதிக்கு வரும்.

விண்டோஸ் 8 சிஸ்டத்தில், இதற்குப் (Windows Flip) பதிலாக, மைக்ரோசாப்ட், திரையின் இடது மூலையிலிருந்து ஸ்வைப் செய்திடும் வசதியைக் கொடுத்தது. படிப்படியாக ஸ்வைப் செய்கையில், நமக்குத் தேவையான அப்ளிகேஷன் கிடைக்கும்போது, அதனைப் பெற்று பயன்படுத்தலாம்.விண்டோஸ் 10 முறைமையில், ALT + TAB கீ போர்ட் ஷார்ட் கட் முன்பு போலவே செயல்படுகிறது. ஆனால், அப்ளிகேஷன்களுக்கான சிறிய படங்கள், சற்றுப் பெரியதாகக் காட்டப்படுகின்றன. விண்டோஸ் 8ல் தரப்பட்ட, இதற்கான (ALT + TAB) Switcher இடைமுகம் ALT + TABக்கான பணியை மேற்கொள்ளவில்லை. அதற்குப் பதிலாக, WINKEY + TAB போல செயல்படுகிறது. இந்த மாற்றத்தினை படிப்படியாக இங்கு காண்போம்.

விண்டோஸ் விஸ்டாவில், ALT + TAB க்குப் பதிலாக, மைக்ரோசாப்ட் WINKEY + TAB என்ற ஷார்ட் கீ செயல்பாட்டினை அறிமுகப்படுத்தியது. விஸ்டாவின் வேகமான செயல்பாட்டினால், இந்த வசதியை Windows Flip 3D என மைக்ரோசாப்ட் பெயரிட்டது.

விண்டோஸ் 8ல், இந்த Windows Flip 3D டூல் நீக்கப்பட்டது. இதற்குப் பதிலாக, Switcher மற்றும் முனையிலிருந்து ஸ்வைப் செய்திடும் வழி தரப்பட்டது. விண்டோஸ் கீயை அழுத்திக் கொண்டு, டேப் கீயை அழுத்தினால், ஸ்விட்சர் இடைமுகம் (Switcher UI) ஒரு பாப் அப் விண்டோவினைத் தரும். தொடர்ந்து டேப் கீயை அழுத்த, இயங்கிக் கொண்டிருக்கும் மாடர்ன் (டெஸ்க்டாப் அல்ல, Modern அப்ளிகேஷன்கள் கிடைக்கும். இது சற்று சிரமத்தை வாடிக்கையாளர்களுக்குத் தந்தது.

விண்டோஸ் 10 முறைமையில் இது மாற்றப்பட்டுள்ளது. விண்டோஸ் 10ல், WINKEY + TAB கீகளை அழுத்தினாலோ, அல்லது திரையின் இடது பக்கம் இருந்து ஸ்வைப் செய்தாலோ, உங்களுக்குப் புதிய Task View கிடைக்கும். கீகளை விட்டுவிட்டால், இது அப்படியே திரையில் காட்டப்படும். இயங்கிக் கொண்டிருக்கும் அப்ளிகேஷன்களுக்கான படங்கள் மட்டுமின்றி, டெஸ்க்டாப்பிற்கான படமும் கிடைக்கும். எனவே, எதனை வேண்டுமானாலும், நாம் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். மேலே சொல்லப்பட்டது, விண்டோஸ் 10 தரும் பல புதிய எளிய டூல்களில் ஒன்றுதான். இது போல இன்னும் நிறைய மாற்றங்களை விண் 10 தர இருக்கிறது. வரும் வாரங்களில் அவற்றைப் பார்க்கலாம்.



விண்டோஸ் 10  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 14, 2014 2:51 am

விண்டோஸ் 10: ஸ்டார்ட் மெனு மற்றும் ஸ்டார்ட் ஸ்கிரீன்

விண்டோஸ் 8 சிஸ்டத்தில் ஸ்டார்ட் மெனு இல்லாததுதான், ஒரு பெரிய குறையாக விண்டோஸ் வாடிக்கையாளர்கள் உணர்ந்தனர். உலகெங்கும் இருந்து இதற்கு எதிர்ப்பு வந்தது. தற்போது, விண்டோஸ் 10ல் இரண்டும் வழங்கப்படுகிறது. டாஸ்க் பார் மற்றும் ஸ்டார்ட் மெனு, மீண்டும் முழு செயல்பாட்டுடன் தரப்பட்டுள்ளது.

வழக்கமான பெர்சனல் கம்ப்யூட்டர்களில், சிஸ்டம் ஸ்டார்ட் மெனுவுடன் பூட் ஆகித் தொடங்கும். இதிலிருந்து, டெஸ்க்டாப் காலியான இடத்தில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில், ஸ்டார்ட் ஸ்கிரீன் பெற ஆப்ஷன் கிடைக்கும்.

டேப்ளட் பி.சி. போன்ற சாதனங்களில், மாறா நிலையில் விண்டோஸ் 10, ஸ்டார்ட் ஸ்கிரீன் உடன் தொடங்கும். இதிலிருந்து, ஸ்டார்ட் மெனு செல்லும் ஆப்ஷன் கொண்ட விண்டோ, முன்பு போல ரைட் கிளிக் செய்தால் கிடைக்கும் மெனுவில் கிடைக்கும். இவற்றில் எந்த பிரிவிற்கு மாறினாலும், அடுத்து விண்டோஸ் பூட் செய்யப்படுகையில், ஏற்கனவே மாறா நிலையில் அமைக்கப்பட்ட ஸ்டார்ட் மெனு அல்லது ஸ்டார்ட் ஸ்கிரீன் உடன் தான், விண்டோஸ் 10 திறக்கப்படும்.

கம்ப்யூட்டர் மலர்




விண்டோஸ் 10  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Oct 14, 2014 9:07 am

விண்டோஸ் 10  3838410834 :நல்வரவு:

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Oct 14, 2014 12:33 pm

அருமையான கட்டுரை தல ,

விண்டோஸ் 7 மற்றும் 8 சிஸ்டங்களில் உள்ள, வாடிக்கையாளர்களால் சிறந்தது என்று ஏற்றுக் கொள்ளப்பட்ட அனைத்து வசதிகளும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.

உண்மை தான் தல , நேற்று தான் Techincal Preview இன்ஸ்டால் பண்ணி பார்த்தேன் , virtual machine லேயே மிக வேகமாக இயங்கியது. அநேகமாக windows 7 pro க்கு அடுத்து மைக்ரோசொப்டின் வெற்றிகரமான இயங்குதளமாக இது இருக்குமென்பது எனது கணிப்பு புன்னகை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 14, 2014 4:38 pm

HP Pavilion dv4-1201tx Special Edition - இதில் விண்டோஸ் 10 இண்ஸ்டால் செய்யலாமா தல! வாங்கி பல வருடங்கள் ஆகிவிட்டதே!

விண்டோஸ் 8 நன்றாக இயங்கியது, மீண்டும் விண்டோஸ் 7 க்கே வந்துவிட்டேன்!



விண்டோஸ் 10  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Oct 14, 2014 5:46 pm

சிவா wrote:HP Pavilion dv4-1201tx Special Edition - இதில் விண்டோஸ் 10 இண்ஸ்டால் செய்யலாமா தல! வாங்கி பல வருடங்கள் ஆகிவிட்டதே!

விண்டோஸ் 8 நன்றாக இயங்கியது, மீண்டும் விண்டோஸ் 7 க்கே வந்துவிட்டேன்!
மேற்கோள் செய்த பதிவு: 1096309

1GHz Processor , 2GB RAM இருந்தால் போதுமென சொல்லியுள்ளார்கள் தல ,

முதலில்
Vmware Workstation இதை தரவிறக்கி (500MB வரும்) உங்கள் கணினியில் நிறுவி கொள்ளுங்கள் , பிறகு இதனுள் நீங்க விண்டோஸ் 10 நிறுவி பயன்படுத்தி பாருங்கள் நன்றாக இருந்தால் அதன் பிறகு கணினியின் இயங்குதளத்தை மாற்றிகொள்ளலாம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 14, 2014 6:45 pm

verification email இதுவரை வரவில்லையே தல! எப்படி தரவிறக்குவது!



விண்டோஸ் 10  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
gilmakvp
பண்பாளர்

பதிவுகள் : 71
இணைந்தது : 20/12/2008

Postgilmakvp Wed Oct 15, 2014 12:37 am

விண்டோஸ் 10  3838410834 விண்டோஸ் 10  103459460 விண்டோஸ் 10  1571444738

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக