ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெற்றதும்... கற்றதும்...-பாக்கியம் ராமசாமி

4 posters

Go down

பெற்றதும்... கற்றதும்...-பாக்கியம் ராமசாமி Empty பெற்றதும்... கற்றதும்...-பாக்கியம் ராமசாமி

Post by தமிழ்நேசன்1981 Wed Oct 08, 2014 9:49 pm


பெற்றதும்... கற்றதும்...
பாக்கியம் ராமசாமி
சுஜாதா கோவிச்சுக்க மாட்டார் (என்று நம்புகிறேன்)


திருமணத்துக்கு அழைப்பிதழ் கொடுக்க வந்தார் என் உறவுக்காரர் ஒருத்தர். வந்தவர் அழைப்பிதழை மட்டும் நீட்டாமல், அதன்மேல் நாலு அட்சதையையும் (மஞ்சள் அரிசி) வைத்து நீட்டினார். அதை என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை. அதுபற்றி யாரும் எனக்கு சொல்லித் தரவும் இல்லை. எனவே, நானாக யூகித்து, அதை ஜாக்கிரதையாகக் கையில் எடுத்து என் தலையில் கொஞ்சம் போட்டுக் கொண்டேன். பக்கத்திலிருந்த என் மனைவியின் தலையிலும் கொஞ்சம் தூவினேன்.

அவர்கள் போன பிறகு மனைவி என்னிடம், ‘‘அசடாக இருக்கிறீர்களே! அட்சதையை வந்தவர்களின் தலையில் அல்லவா போட வேண்டும், ஆசீர்வதிப்பதுபோல!’’ என்றாள்.

‘‘நீ டபிள் அசடு! வந்தவருக்கு அறுபது வயசுக்கு மேலிருக்கும். எனக்கு நாற்பதுதான். ‘வாழ்த்த வயதில்லை, வணங்குகிறேன்’ கேஸ். நானாவது, அவர்கள் தலையில் அட்சதை போட்டு ஆசீர்வதிப்ப தாவது! உளறாதே!’’ என்றேன்.
பெற்றதும்... கற்றதும்...-பாக்கியம் ராமசாமி P112
மனைவியும் என் வாதத்திலுள்ள நியாயத்தை ஒப்புக்கொண்டு, ‘‘ஒருவேளை, அதை அவர்கள் கையில் கொடுத்து, நம் தலையில் போடச் சொல்லியிருக்கணுமோ?’’ என்றாள்.

இப்படித்தான்... வாழ்க்கையில் பல விஷயங்கள் நமக்குப் புரிபடுவதே இல்லை.

என் சந்தேகங்களை எப்போதும் தீர்த்து வைக்க, இருக்கவே இருக்கிறான் நண்பன் நாராயணன். அவனிடம் இதுபற்றி விசாரித்தேன்.

‘‘பத்திரிகையுடன் வரும் அட்சதையை நீயும் தலையில் போட்டுக்கொள்ளக் கூடாது. வருகிறவர்களின் தலையிலும் போடக் கூடாது. அது ஒரு சமிக்ஞை!’’ என்றான்.

‘‘அதென்ன சமிக்ஞை?’’

‘‘அதாவது, கல்யாணத்தன்று சாப்பாட்டுக்கு அவசியம் வர வேண்டும் என்று அர்த்தம்!’’

‘‘நான்தான் காலை டிபன், மதியச் சாப்பாடு இரண்டுக்குமே தயாராக இருக்கிறேனே! சரி, சாப்பாட்டுக்கு வர வேண்டாம், டிபனுக்கு மட்டும் வந்தால் போதும் என்ற அபிப்ராயம் இருந்தால், அட்சதைக்குப் பதில் பட்டாணிக் கடலை மாதிரி ஏதாவது வைத்துக் கூப்பிடுவார்களா?’’ என்றேன்.

அவனுக்கு பதில் சொல்லத் தெரியவில்லை.

இது மாதிரி சம்பிரதாயங்கள், ரகஸி யார்த்தங்கள் (ரகஸியா என்றதும் ஜொள்ளு விடக் கூடாது!) எனக்குப் புரிவதில்லை.

சில பேர் ஏதேனும் விசேஷத்துக்கு அழைக்க வருவார்கள். குங்குமச் சிமிழை நீட்டிவிட்டுப் பசு மாதிரி தங்கள் நெற்றியை கனிவுடன் நம் அருகே காட்டுவார்கள். குங்குமத்தில் ஒரு துளி நாம் இட்டுக்கொண்டு அவர்களுக்கும் இட்டுவிட வேண்டும் என்று ஒரு சம்பிரதாயம்.

அதுவும், கல்யாணம் ஆகாத பெண்ணாக இருந்தால், நெற்றியில் மட்டுமே இட்டுவிட வேண்டும். வகிட்டில் குங்குமம் தீற்றிக்கொள்வது மணமான பெண்களுக்கு மட்டுமே உரியது.

சில பெண்கள், சடாரென்று ஜாக்கெட் டுக்குள் கையை விட்டு தாலியை வெளியே எடுத்து, இரண்டு கட்டை விரல்களாலும் சரடைப் பிடித்துக் கொள்வார்கள். உடனே நாம், ‘‘ரொம்ப அழகாக இருக்கே? எப்போ பண்ணினது? எங்கே வாங்கினது? எத்தனை பவுன்’’ என்றெல்லாம் அபத்தமாகக் கேட்டுக் கொண்டு இராமல், அவர்களின் மாங்கல் யத்தில் துளி குங்கு மத்தை இடவேண்டும்.

நவராத்திரியின் போது வாழ்கைக்கோ, நடைமுறைக்கோ கிஞ்சித்தும் உபயோகப் படாத சின்னஞ்சிறு கண்ணாடிகள், வாரவே வாராத குட்டி சீப்புகள், அடாஸான கண்ணாடி வளையல்கள் போன்றவற்றை ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டுத் தருவார்கள். அந்தப் பொருள்களை வைத்துகொண்டு என்ன செய்வதென்று தெரியாது. அவற்றைப் பிறத்தியார் தலையில் கட்டவும் முடியாது.

என்ன பொருள் பரிசாகத் தரப்படுகிறது என்று இப்போதெல் லாம் தெரியவே மாட்டேனென்கிறது.எல்லாவற்றுக்கும் மேலே பளபளவென்று ஒரு கிஃப்ட் பேப்பர் சுற்றி, சுலபமாகப் பிரிக்க முடியாதபடி டேப் போட்டு ஒட்டி விடுகிறார்களே!

கடைசியாக என் மனோபுத்திக்கு எட்டாத ஒரே ஒரு சம்பிரதாயத்தைச் சொல்லி முடித்துக்கொள்கிறேன்.

நண்பர் ஒருத்தர் வீட்டு நிச்சயதார்த்த விழா. நானும் நாராயணனும் போயிருந் தோம்.

ஒரு டபரா நிறைய நெல்லும், அதில் ஒரு நாலணாக் காசும் போட்டுக் கொண்டு வந்தார் உறவினர். ‘மடியைப் பிடியுங்கள்’ என்றார்.

பாண்ட் போட்டுக் கொண்டு இருக்கிறவனுக்கு மடியாவது, கிடியாவது!

‘‘என்ன விஷயம்?’’ என்றேன்.

‘‘நெல்லு தர்றது சம்பிரதாயம். இதை நீங்க வீட்டுக்கு எடுத்துட்டுப் போகணும்’’ என்றவர், கைக்குக் கிடைத்த ஒரு காகிதத்தை எடுத்து (அது கசங்கல் மட்டு மல்ல, கிழிசலும்கூட!), நெல்லை அதில் கொட்டி காமாசோமா வென்று சுருட்டி, எங்கள் கையில் திணித்து விட்டார்.

‘‘எதுக்குடா நெல்லு?’’ என்றேன். ‘‘நான் என்ன விவசாயியா? எந்த வயல்ல கொண்டு போய் விதைக்கப் போறேன் இதை? அல்லது, இந்தத் துளி நெல்லைக் குத்தி அரிசி பண்ணிச் சாதம் வடிச்சு சாப்பிட முடியுமா? பொட்டலம் வேறு சிந்தறதேடா!’’ என்று எரிச்சல் பட்டேன்.

‘‘இப்படிக் கொடுக்கிறது ஒரு சம்பிரதாயம். இதைக் கொண்டு பயிர் பண்ணி, நாம் பணக்காரராக ஆக வேண்டும் என்று வாழ்த்துகிறார்கள்’’ என்றான்.

‘‘சரி, நீயே டபுள் பணக்காரன் ஆகிக்கோ! இதைப் பிடி’’ என்று அதை அவனிடம் நைஸாகத் தள்ளிவிடப் பார்த்தேன்.

‘‘அட, நீ வேற! லட்சுமியை அலட்சியப் படுத்தாதே!’’ என்று பயமுறுத்தியவன், ‘‘ஒண்ணு பண்ணு! இதைக் கொண்டு போய் உங்க வீட்டு அரிசி டின்லே போட்டுவிடு’’ என்றான்.

அது நல்ல யோசனையாகப் பட, அப்படியே செய்தேன். நெல் தனியாகத் தெரியப் போகிறதே என்று அரிசி டின்னை பலமாகக் குலுக்கிக் கலக்கி விட்டேன். விளைவு?

‘‘வழக்கமாக இவ்வளவு நெல்லு இருக்காதே அரிசியிலே’’ என்று என் மனைவி, ஒவ்வொரு தடவை சமைக்க அரிசி எடுக்கும்போதும் ஆச்சர்யப்படத் தொடங்கிவிட்டாள்.

அதோடு நிறுத்திக் கொண்டால் பரவா யில்லை. முறத்திலே அப்பப்போ கொஞ்சம் அரிசியைக் கொட்டி, ‘‘இதிலிருக்கிற நெல்லை எல்லாம் கொஞ்சம் பொறுக்கி எடுங்கோ’’ என்று நெல் பொறுக்கும் வேலையை என் தலையில் கட்டிவிட்டாள். ‘பொறுக் கினார் பூமி ஆள்வார்’ என்று நானும் அந்த அரிசி டின் காலியாகிற வரைக்கும் நெல் பொறுக்கிக்கொண்டு இருந்தேன்.

இப்படிப் பெற்றதுகளால் நான் கற்றது என்னவென்றால், எந்தச் சம்பிரதாயமாக இருந்தாலும், அதற்கான விளக்கத்தத்தையும் கூடவே கேட்டுத் தெரிந்துகொண்டு விட வேண்டும்; அப்படி, அது நமக்கு உபத்திரவம் தருவதாக அமையுமே யானால் தாட்சண்யம் இன்றி, பயம் இன்றி, அதை ஒதுக்கி ஓரங்கட்டிவிட வேண்டும் என்பதே!
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

பெற்றதும்... கற்றதும்...-பாக்கியம் ராமசாமி Empty Re: பெற்றதும்... கற்றதும்...-பாக்கியம் ராமசாமி

Post by தமிழ்நேசன்1981 Wed Oct 08, 2014 9:51 pm


பாவம், இந்த மனைவிமார்கள்!

பாக்கியம் ராமசாமி


மூடநம்பிக்கைகள் பலவிதம்! அதிலும், நம்ம ஊர்ப் பெண்மணிகளுக்கென்று... குறிப்பாக, மனைவிமார்களுக்குத் தங்கள் கணவன் பற்றிய மூடநம்பிக்கைகள் ஏராளம். அவற்றில் ஒரு சிலவற்றை இங்கே பார்க்கலாம்.

சமையலறையில் மிக்ஸி அரைத்துக் கொண்டே, ‘என்ன... உங்களைத்தானே?’ என்று கூப்பிட்டால், ஹாலில் பேப்பர் படித்துக் கொண்டு இருக்கும் கணவன் காதில் அந்தச் சத்தம் விழுந்து, அவன் உடனே பேப்பரைத் தூக்கிப் போட்டுவிட்டு எழுந்து வருவான் என்று எதிர்பார்ப்பது.

நகரில் கல்யாண மண்டபங்களின் பெயர்கள், அவை அமைந்துள்ள தெருக்கள், போகும் வழி பற்றியெல்லாம் கணவனுக்கு நன்றாகத் தெரிந்திருக்கும் என்று நம்பி, அவனோடு விசேஷத் துக்குக் கிளம்புவது.
பெற்றதும்... கற்றதும்...-பாக்கியம் ராமசாமி P151
தான் எத்தனை கிளிக் செய்தாலும் ஸ்பார்க் வராத காஸ் லைட்டரில், தன் கணவர் எப்படியாவது ஸ்பார்க் வரவழைத்து விடுவார் என்று நம்பி, காஸ் ஸ்டவ்வை மூட்டித் தரச் சொல்லி லைட்டரை அவனிடம் நீட்டுவது.

பீரோவின் பின்னால் பரக்... பரக் எனச் சத்தம் கொடுத்துக்கொண்டு இருக்கும் மூஞ்சூறு அல்லது எலியை துணி உலர்த்தும் கோலால் கலாட்டா செய்து வெளிப்படுத்தி, எப்படி யாவது சாமர்த்தியமாக விரட்டிவிடுவார் என்று நம்புவது.

தான் வீட்டில் இல்லாத சமயம், புழக் கடைக் கொடியில் காயப் போட்டிருக்கும் துணி களை, மழை வருவதற்கு முன் எடுத்து மடித்து வைப்பார் என்று எதிர்பார்ப்பது. ஆபீஸிலிருந்து ஓட்ட லுக்குப் போனதையும், அங்கு சாப்பிட்ட டிபன் வகையறாக்களையும் வீட்டுக்கு வந்ததும் தன்னிடம் ஒளிக்காமல் சொல்லுவான் என்று அப்பாவியாக நினைப்பது.

எந்தெந்தத் தேதியில் பேப்பர்காரன் பேப்பர் போடவில்லை, வார இதழ்கள் போடவில்லை என்பதற்குச் சரியாகக் கணக்கு வைத்திருந்து, பில் தரும்போது உஷா ராகக் கழித்துக்கொள் வான் என்று தன் கணவனின் புத்திசாலித் தனத்தில் அதீத நம்பிக்கை வைப்பது.

வாங்கி வந்த சாத்துக் குடி, ஆப்பிள் பழங் களின் அசல் விலை யைத்தான் தன்னிடம் கூறுவான் என்று எண்ணுவது.

வீட்டில் எரியாத ட்யூப் லைட்டுகளை அப்படி இப்படித் திருகி என்னமாவது செய்து எரிய வைத்துவிடுவதில் சமர்த்தன் என்றும், ஃப்யூஸ் கட்டையைப் பிடுங்கி ஃப்யூஸ் வயர் போட்டு, போன கரன்ட்டை வரவழைப்ப தில் ஜித்தன் என்றும் சிலாகிப்பது.

நூறு ரூபாய் நோட்டுக் குப் பத்து ரூபாய் நோட்டாக சில்லறை வைத்திருந்து, தான் கேட்டதும் பர்ஸிலிருந்து எடுத்து நீட்டுவார் என்று எதிர்பார்ப்பது.

பி.எஃப். பணத்தில் ஏதாவது லோன் வாங்கியிருக்கிறானா, யாராருக்குக் கடன் திருப்ப வேண்டும் போன்ற தகவலையெல் லாம் தன்னிடம் மறைக்க மாட்டான் என்று எண்ணுவது.

ஆபீஸில் தன் கணவனுக்குக் கீழே இருபது முப்பது பேர் வேலை செய்கிறார்கள் என்றும், அவர்களை யெல்லாம் அவன் ஓட ஓட விரட்டி வேலை வாங்குகிறான் என்றும், அவனைக் கண்டாலே அவர்கள் நடுநடுங்கி, கை கட்டி, வாய் பொத்தி, கப்சிப் ஆகிவிடுவார்கள் என்றும் மனப்பூர்வமாக நம்பி, அதைத் தன் சொந்தக்காரர்களிட மும், சிநேகிதிகளிடமும் சொல்லி, கணவன் பெருமையை மெச்சிக் கொள்வது.
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

பெற்றதும்... கற்றதும்...-பாக்கியம் ராமசாமி Empty Re: பெற்றதும்... கற்றதும்...-பாக்கியம் ராமசாமி

Post by M.M.SENTHIL Wed Oct 08, 2014 10:56 pm

பெற்றதும்... கற்றதும்...-பாக்கியம் ராமசாமி 3838410834 பெற்றதும்... கற்றதும்...-பாக்கியம் ராமசாமி 1571444738


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

பெற்றதும்... கற்றதும்...-பாக்கியம் ராமசாமி Empty Re: பெற்றதும்... கற்றதும்...-பாக்கியம் ராமசாமி

Post by சிவா Thu Oct 09, 2014 1:21 am

பாவம், இந்த மனைவிமார்கள்!

மிகவும் அருமை மற்றும் உண்மை! சிரி சிரி சிரி


பெற்றதும்... கற்றதும்...-பாக்கியம் ராமசாமி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பெற்றதும்... கற்றதும்...-பாக்கியம் ராமசாமி Empty Re: பெற்றதும்... கற்றதும்...-பாக்கியம் ராமசாமி

Post by ayyasamy ram Thu Oct 09, 2014 4:57 am

பெற்றதும்... கற்றதும்...-பாக்கியம் ராமசாமி 3838410834 பெற்றதும்... கற்றதும்...-பாக்கியம் ராமசாமி 3838410834
-
பெற்றதும்... கற்றதும்...-பாக்கியம் ராமசாமி AmMHTPVbRYOzGiMO1Qkm+pakkiam
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84127
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பெற்றதும்... கற்றதும்...-பாக்கியம் ராமசாமி Empty Re: பெற்றதும்... கற்றதும்...-பாக்கியம் ராமசாமி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum