புதிய பதிவுகள்
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
17 -வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - 2014  Poll_c1017 -வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - 2014  Poll_m1017 -வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - 2014  Poll_c10 
91 Posts - 67%
heezulia
17 -வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - 2014  Poll_c1017 -வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - 2014  Poll_m1017 -வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - 2014  Poll_c10 
27 Posts - 20%
mohamed nizamudeen
17 -வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - 2014  Poll_c1017 -வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - 2014  Poll_m1017 -வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - 2014  Poll_c10 
5 Posts - 4%
prajai
17 -வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - 2014  Poll_c1017 -வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - 2014  Poll_m1017 -வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - 2014  Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
17 -வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - 2014  Poll_c1017 -வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - 2014  Poll_m1017 -வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - 2014  Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
17 -வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - 2014  Poll_c1017 -வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - 2014  Poll_m1017 -வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - 2014  Poll_c10 
2 Posts - 1%
Barushree
17 -வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - 2014  Poll_c1017 -வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - 2014  Poll_m1017 -வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - 2014  Poll_c10 
2 Posts - 1%
Tamilmozhi09
17 -வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - 2014  Poll_c1017 -வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - 2014  Poll_m1017 -வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - 2014  Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
17 -வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - 2014  Poll_c1017 -வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - 2014  Poll_m1017 -வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - 2014  Poll_c10 
1 Post - 1%
sram_1977
17 -வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - 2014  Poll_c1017 -வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - 2014  Poll_m1017 -வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - 2014  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
17 -வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - 2014  Poll_c1017 -வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - 2014  Poll_m1017 -வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - 2014  Poll_c10 
145 Posts - 74%
heezulia
17 -வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - 2014  Poll_c1017 -வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - 2014  Poll_m1017 -வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - 2014  Poll_c10 
27 Posts - 14%
mohamed nizamudeen
17 -வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - 2014  Poll_c1017 -வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - 2014  Poll_m1017 -வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - 2014  Poll_c10 
8 Posts - 4%
prajai
17 -வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - 2014  Poll_c1017 -வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - 2014  Poll_m1017 -வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - 2014  Poll_c10 
5 Posts - 3%
ஜாஹீதாபானு
17 -வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - 2014  Poll_c1017 -வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - 2014  Poll_m1017 -வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - 2014  Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
17 -வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - 2014  Poll_c1017 -வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - 2014  Poll_m1017 -வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - 2014  Poll_c10 
3 Posts - 2%
Barushree
17 -வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - 2014  Poll_c1017 -வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - 2014  Poll_m1017 -வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - 2014  Poll_c10 
2 Posts - 1%
kavithasankar

Karthikakulanthaivel
17 -வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - 2014  Poll_c1017 -வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - 2014  Poll_m1017 -வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - 2014  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

17 -வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - 2014

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 05, 2014 3:16 am

17 -வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - 2014  Incheon_2014_Asian_Games_logo.svg

நகரம்: இஞ்சியோன், தென் கொரியா
குறிக்கோள் வசனம்: பன்மயம் இங்கே ஒளிர்கிறது
நிகழ்வுகள்: 36 விளையாட்டுகளில் 439 போட்டிகள்
துவக்க விழா : செப்டம்பர் 19
நிறைவு விழா : அக்டோபர் 4
முதன்மை அரங்கம் : இஞ்சியோன் ஆசியட் முதன்மை விளையாட்டரங்கம்

2014 ஆசிய விளையாட்டுப் போட்டிகள், அலுவல்முறையாக XVII ஆசியட், செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 4, வரை தென் கொரியாவில் இஞ்சியோனில் நடைபெறுகிறது. ஆசியாவில் ஆசிய ஒலிம்பிக் மன்றத்தால் (OCA) கட்டுப்படுத்தப்படும் மிகப்பெரும் பல்விளையாட்டுப் போட்டியாகும். 36 விளையாட்டுகளில் 439 போட்டிகள் நடத்தப்பட இருக்கின்றன.

ஏப்ரல் 17, 2007 அன்று இந்தியாவின் டில்லிக்கு எதிராக இஞ்சியோன் இந்தப் போட்டிகளை ஏற்று நடத்தும் உரிமையை வென்றுள்ளது. சியோல் (1986), புசான் (2002) நகரங்களை அடுத்து ஆசிய விளையாட்டுக்களை நடத்தும் தென் கொரியாவின் மூன்றாவது நகரமாகும்.

இந்த விளையாட்டுப் போட்டிகளை நடத்திட இரண்டு நகரங்கள் ஏலத்தில் பங்கேற்றன; இந்தியாவின் டில்லியும் தென் கொரியாவின் இங்கியோனும் தங்கள் முறையான ஏல மனுக்களை டிசம்பர் 2, 2006இல் கத்தாரின் தோகாவில் அளித்தன.

இந்த மனுக்கள் மீதான வாக்கெடுப்பு ஆசிய ஒலிம்பிக் குழுவின் பொதுக்குழுக் கூட்டத்தில் ஏப்ரல் 17, 2007 அன்று குவைத்தின் மரியோட் தங்கும் விடுதியில் நடந்தது. வாக்கெடுப்பிற்கு சற்று முன்னதாக தென் கொரியா, இந்த விளையாட்டுக்களில் இதுவரை பதக்கம் எதுவும் வெல்லாத நாடுகளுக்கு விளையாட்டு வசதிகளையும் பயிற்சிகளையும் கூட்டும் வகையில் $20 மில்லியன் நிதி தருவதாகவும் அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் கட்டணமின்றி பயணச்செலவையும் தங்கும் வசதிகளையும் செய்து தருவதாகவும் சமர்பித்தது. யாருமறியா வண்ணம் அனைத்து 45 உறுப்பினர்களும் வாக்களித்தனர். இந்த வாக்கெடுப்பில் இங்கியோன் வென்றது. வாக்கு எண்ணிக்கைகள் அலுவல்முறையாக அறிவிக்கப்படாவிடினும் இங்கியோன் 32–13 வாக்குகளில் வென்றதாக தகவல் வெளியானது.

அப்போதைய இந்திய விளையாட்டுத்துறை அமைச்சர் மணிசங்கர் அய்யர், டில்லி இந்த விளையாட்டுப் போட்டிகளை ஏற்று நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இவரது கருத்துக்களே டில்லி ஏலத்தில் தோற்றதற்கான முதன்மைக் காரணமாக இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் கூறினார்.

டில்லியின் மாசுநிலையும் போக்குவரத்து நெரிசலும் பிற காரணங்களாக அமைந்தன. இங்கியோனின் கடைசிநேர நிதி உதவியும் இத்தோல்விக்கு காரணமாக அமைந்தது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 05, 2014 3:18 am

ஆசிய விளையாட்டு: இந்திய டென்னிஸ் அணி அறிவிப்பு

புதுடில்லி: இந்தியாவின் பயஸ், சானியா மிர்சா அடங்கிய ஆசிய போட்டிக்கான 12 பேர் கொண்ட இந்திய டென்னிஸ் அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

தென் கொரியாவில் உள்ள இன்ச்சியானில் ஆசிய விளையாட்டு வரும் செப்.19 முதல் அக்.4 வரை நடக்கிறது. இதற்கான 12 பேர் கொண்ட இந்திய டென்னிஸ் அணியை தேர்வுக்குழு தலைவர் அனில் துபார் வெளியிட்டார்.

இதில் ஆண்களுக்கான அணிக்கு சீனியர் வீரர் லியாண்டர் பயஸ் கேப்டனாக உள்ளார். தவிர, கடந்த ஆசிய போட்டியில் இரண்டு தங்கம் வென்ற சோம்தேவ் (தனிநபர், இரட்டையர்), ஒரு தங்கம் கைப்பற்றிய சனம் சிங்கும் (இரட்டையர்) இந்த அணியில் இடம் பெற்றுள்ளனர்.

பயசுடன் யார்:

இளம் வீரர்களான சாகித் மைனேனி, யூகி பாம்ப்ரி முதல் முறையாக இத்தொடரில் பங்கேற்கவுள்ளனர். இரட்டையர் பிரிவில் பயசுடன் விளையாடப்போவது போபண்ணாவா அல்லது மைனேனியா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சமீபத்தில் இரண்டு ஐ.டி.எப்., தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற தமிழக வீரர்கள் ராம்குமார் ராமநாதன், ஜீவன் நெடுஞ்செழியன் ஆகியோருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

அன்கிதாவுக்கு இடம்:

பெண்கள் பிரிவை சானியா மிர்சா தலைமை தாங்குகிறார். இவர் கடந்த தொடரில் தனிநபர் (வெண்கலம்), கலப்பு இரட்டையர் (வெள்ளி) இரண்டு பதக்கம் வென்றார். ஒற்றையர் பிரிவில் இளம் வீராங்கனை அன்கிதா ரெய்னாவும் கலந்து கொள்ளவுள்ளார். பிரார்த்தனா தாம்ப்ரே, சேனகாதேவி, நடாசா, ரிஷிகாவும் உள்ளனர்.

மாற்று வீரர்களாக திவிஜ் சரண், சுவேதா ராணி இடம் பெற்றுள்ளனர்.

17 -வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - 2014  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 08, 2014 10:10 pm

ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான பயிற்சி ஒத்திவைப்பு: மேரி கோம் கடும் அதிருப்தி

ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான குத்துச்சண்டை பயிற்சி ஒத்திவைக்கப்பட்டதால் முன்னணி வீராங்கனை மேரி கோம் கடும் அதிருப்தியும் கோபமும் அடைந்துள்ளார்.

ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றவரும், 5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்றவருமான மேரி கோம் ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான பயிற்சிக்காக, தனது சொந்த மாநிலமான மணிப்பூரில் இருந்து பாட்டியாலாவுக்கு வந்துள்ளார்.

இதேபோல் டெல்லியில் இருந்து மற்ற குத்துச்சண்டை வீராங்கனைகள் இன்று காலை ஒரு பஸ்சில் ஏறி வந்துகொண்டிருந்தனர். அப்போது நாளை நடைபெற உள்ள பயிற்சி ஒத்தி வைக்கப்பட்டதாக தகவல் கிடைத்ததையடுத்து அவர்கள் பாதியில் திரும்ப முடிவு செய்தனர்.

காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்றவர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க, குத்துச்சண்டை போட்டிகளை நிர்வாகம் செய்யும் இந்திய ஒலிம்பிக் சங்க அடாக் கமிட்டி பயிற்சியை தள்ளி வைக்க முடிவு செய்துள்ளது. ஆனால், அனைத்து வீரர்களுக்கும் குறித்த நேரத்திற்குள் தகவல் தெரிவிக்க தவறிவிட்டனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த மேரி கோம், திடீரென பயிற்சியை ரத்து செய்ததால் விரக்தியடைந்திருப்பதாக கூறினார். அடாக் கமிட்டி முன்கூட்டியே தங்களுக்கு தகவல் தெரிவிக்காதது ஏன்? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

“காமன்வெல்த் பதக்கம் வென்றவர்கள் மீது நான் நிறைய மரியாதை வைத்திருக்கிறேன். ஆனால், எங்களுக்கு உடனடியாக தகவல் தெரிவித்திருக்க வேண்டும். இது நல்லதல்ல; தொழில் அவமதிப்பு. பயிற்சிக்காக மனதளவில் தயாராகாவிட்டால் குத்துச்சண்டை வீரருக்கு அது சிறந்த சூழ்நிலையாக இருக்காது” என்றும் மேரி கோம் குறிப்பிட்டார்.

17 -வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - 2014  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 21, 2014 1:33 am

ஆசிய விளையாட்டுப் போட்டி: பி பிரிவில் இந்திய ஹாக்கி அணி

ஆசிய விளையாட்டுப் போட்டியில், ஹாக்கி பிரிவில் பாகிஸ்தான் அணி இடம்பெற்றுள்ள பி பிரிவில் இந்திய ஆடவர் அணி இடம்பெற்றுள்ளது.

ஆடவர் ஹாக்கியில், கடந்த முறை இரண்டாவதாக இடம்பிடித்த மலேசியா, தென்கொரியா, ஜப்பான், பங்களாதேஷ், சிங்கப்பூர் ஆகிய நாடுகள் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளன. பி பிரிவில் பாகிஸ்தான், சீனா, ஓமன், இலங்கை ஆகிய அணிகளுடன் இந்திய அணி இடம்பெற்றுள்ளது.

மகளிர் பிரிவில் கடந்த முறை தங்கப்பதக்கம் வென்ற சீனா, மலேசியா, தாய்லாந்து ஆகிய அணிகளுடன் இந்திய அணி ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளது. பி பிரிவில் தென்கொரியா, ஜப்பான், கஜகஸ்தான், ஹாங்காங் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. 17-ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தென்கொரியாவின் இஞ்சியோன் நகரில் அடுத்த மாதம் 19-ஆம் தேதி தொடங்கி அக்டோபர் மாதம் நான்காம் தேதி வரை நடைபெறுகிறது.

17 -வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - 2014  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 21, 2014 10:33 pm

ஆசிய ஹாக்கி: ஒரே பிரிவில் இந்தியா, பாகிஸ்தான்

ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஹாக்கி பிரிவில் இந்தியாவும், பாகிஸ்தானும் ஒரே பிரிவில் இடம்பெற்றுள்ளன. 17-வது ஆசிய விளையாட்டுப் போட்டி வரும் செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 4 வரை தென் கொரியாவின் இன்சியோன் நகரில் நடைபெறவுள்ளது. இதில் ஹாக்கிப் போட்டியில் இந்தியா உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கின்றன. அதற்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. எனினும் போட்டி நடைபெறும் தேதி குறித்த விவரம் தெரிவிக்கப்படவில்லை. அது விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் பி பிரிவில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான், இந்தியா, சீனா, ஓமன், இலங்கை ஆகிய அணிகளும், ஏ பிரிவில் மலேசியா, தென் கொரியா, ஜப்பான், வங்கதேசம், சிங்கப்பூர் ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன. மகளிர் பிரிவில் இந்திய அணி ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளது. அதே பிரிவில் நடப்பு சாம்பியன் சீனா, மலேசியா, தாய்லாந்து ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. பி பிரிவில் தென் கொரியா, ஜப்பான், கஜகஸ்தான், ஹாங்காங் சீனா ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.

இந்தப் போட்டியின் இரு பிரிவுகளிலும் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிகள் 2016-ல் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க நேரடித் தகுதி பெறும்.

17 -வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - 2014  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 27, 2014 9:50 pm

ஆசிய விளையாட்டு: விஜேந்தர் விலகல்

புதுடில்லி: காயம் காரணமாக ஆசிய விளையாட்டில் இருந்து இந்திய குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் விலகினார்.

கடந்த 2010 ஆசிய விளையாட்டு குத்துச்சண்டை போட்டியில் ‘மிடில் வெயிட்’ பிரிவில் தங்கம் வென்றவர் இந்தியாவின் விஜேந்தர் சிங். சமீபத்தில் முடிந்த கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில், இவரது இடது கை தசை நாரில் காயம் ஏற்பட்டது.

இதைப் பொருட்படுத்தாமல் பங்கேற்ற விஜேந்தர் வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினார். இந்த காயம் குணமடையாத நிலையில், குத்துச்சண்டை போட்டியில் இருந்து காலவரையின்றி விலகினார். இதனால், வரும் செப்., 19ல் இன்ச்சியானில் துவங்கவுள்ள ஆசிய விளையாட்டில் பங்கேற்க மாட்டார்.

இதுகுறித்து விஜேந்தர் சிங் கூறியது:

பயிற்சிக்கு பிறகு காயத்தில் இருந்து மீண்டு விடலாம் என்று நினைத்தேன். ஆனால், எனது கையை சரியாக அழுத்திப் பிடிக்கமுடியவில்லை. இதிலிருந்து மீள்வதற்கு இப்போதைக்கு ஓய்வு எடுப்பது தான் சரியான வழி என, டாக்டர்கள் அறிவுரை செய்தனர்.

இதற்கு எத்தனை காலம் ஆகும் என்று சரியாகத் தெரியவில்லை. இருப்பினும், விரைவில் சரியாகி விடும் என நம்புகிறேன். டாக்டர்கள் மற்றும் ‘பிசியோதெரபிஸ்ட்’ பாட்டியாலா மையத்தில் எப்போதும் இருப்பர்.

இதனால், இங்கேயே தொடர்ந்து பயிற்சியில் ஈடுபடுவேன். எனக்கு மாற்று வீரராக வருபவர், சிறப்பாக செயல்பட்டு பதக்கம் வெல்வார் என்று நம்புகிறேன்.

இவ்வாறு விஜேந்தர் சிங் கூறினார்.

17 -வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - 2014  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 27, 2014 10:18 pm

ஆசிய விளையாட்டு போட்டிக்கு மேரி கோம் தகுதி: பயிற்சி ஆட்டத்தில் ஜங்ராவை வென்றார்

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் விளையாடுவதற்கு தகுதி பெற முடியாமல் போன இந்தியாவின் முன்னணி குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், இஞ்சியோனில் நடைபெற உள்ள ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார்.

ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான பயிற்சி மற்றும் வீரர், வீராங்கனைகள் தேர்வு பாட்டியலாவில் நடைபெற்று வந்தது. நேற்று நடைபெற்ற பயிற்சி போட்டியின்போது அபாரமாக விளையாடிய மேரி கோம், சோனியாவை முதலில் வீழ்த்தினார். அதன்பின்னர் பிங்கி ஜங்ராவையும் வென்றார். இதனால் அவர் ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு தேர்வு பெற்றார்.

இது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக கூறிய மேரி கோம், இதற்காக கடினமாக உழைத்திருப்பதாகவும், நிறைய தியாகம் செய்திருப்பதாகவும் கூறினார். ரசிகர்கள் மற்றும் நலன்விரும்பிகளின் நல்லாதரவால் இந்த பயிற்சி போட்டிகளில் வெற்றி பெற முடிந்ததாகவும் அவர் கூறினார்.

5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற மேரி கோம், லண்டனில் 2012ல் நடந்த ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்று வரலாற்று சாதனை படைத்தார். அதன்பின்னர் பித்தப்பை அறுவை சிகிச்சை, மற்றும் 3-வது ஆண் குழந்தை பிறந்ததையடுத்து நீண்ட காலம் போட்டிகளில் கலந்துகொள்ளாமல் இருந்தார். அதன்பின்னர் தீவிரமான பயிற்சிகளில் ஈடுபட்டு வந்த அவர் இப்போது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ள தகுதி பெற்றுள்ளார்.

கிளாஸ்கோவில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டிக்கான பயிற்சி போட்டியின்போது மேரி கோமை வீழ்த்திய பிங்கி, அந்த தொடரில் வெண்கலம் வென்றது குறிப்பிடத்தக்கது.

17 -வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - 2014  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 08, 2014 9:41 pm

ஆசிய போட்டியில் கலந்து கொள்ள அனுமதி கிடைக்காததால் சீனாவில் இந்திய கால்பந்து அணி தவிப்பு

ஆசிய விளையாட்டுப் போட்டி வரும் 19-ந்தேதி முதல் அடுத்த மாதம் 4-ந்தேதி வரை தென்கொரியாவில் நடைபெறுகிறது. இதில் இந்திய கால்பந்து அணியும் கலந்து கொள்ள இருக்கிறது.

தற்போது சீனாவில் இருக்கும் இந்திய அணி, மத்திய அரசின் அனுமதி இல்லாததால் தென்கொரியா செல்லாமல் சீனாவில் தவித்துக்கொண்டிருக்கிறது.

“கால்பந்து அணி சீனாவில் உள்ள ஷாங்காயில் மத்திய அரசின் அனுமதிக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அனுமதி கிடைத்தால் நாளை தென்கொரியா செல்ல திட்டமிட்டுள்ளது. அனுமதி கிடைக்காதது இளம் கால்பந்து அணிக்கு வேதனையான அனுபவம். இது இந்திய கால்பந்து அணிக்கான நல்ல விளம்பரமும் அல்ல” என்று இந்திய கால்பந்து பெடரேசன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்திய கால்பந்து பெடரேசன் தலைவர் பிரபுல் பட்டேல் கடந்த வாரம் மந்திய விளையாட்டுத்துறை மந்திரி சர்பானந்தா சுனோவாலை சந்தித்தார். அப்போது தென்கொரியாவில் நடைபெறும் ஆசிய கோப்பை போட்டியில் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணி கலந்து கொள்ள அனுமதி வழங்க முயற்சி எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இதற்கிடையே, கால்பந்து அணி உள்பட 5 விளையாட்டுகளுக்கு அனுமதி வழங்க தேவையில்லை என்று விளையாட்டுத்துறை அதிகாரிகள் அத்துறை மந்திரியான சோனோவாலுக்கு பரிந்துரைத்தனர். இதை இவர் கண்டிப்பாக கடை பிடிக்கும்போது கால்பந்து, கூடைப்பந்து, கைப்பந்து, டேபிள் டென்னிஸ், செபக் தக்ரா (கிக் வாலிபால்) ஆகிய அணிகள் பங்கேற்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய ஒலிம்பிக் சங்கம் 935 வீரர்களின் பட்டியலை மத்திய விளையாட்டுத்துறைக்கு அனுப்பி வைத்தது. ஆனால் மத்திய அரசு 700 வீரர்களை மட்டுமே அனுப்ப திட்டமிட்டுள்ளது. சரியாக விளையாட அணிகளை அனுப்ப மத்திய விளையாட்டுத்துறை விரும்பாததால் கால்பந்து அணிக்கு அனுமதி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

17 -வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - 2014  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 09, 2014 10:48 pm

ஆசிய விளையாட்டுப் போட்டி : இந்தியா சார்பில் 516 வீரர்கள் பங்கேற்பு

டெல்லி: ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா சார்பில் 516 விளையாட்டு வீரர்கள் பங்கேற்க உள்ளனர். செப்டம்பர் 19-ம் தேதி தென்கொரியாவின் இன்ஜியான் நகரில் 17-வதுஆசிய விளையாட்டுப் போட்டிகள் துவங்க உள்ளன. இந்த போட்டிக்கு ஒலிம்பிக் சங்கம் 679 வீரர்களை அனுப்ப மத்திய அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது. பரிந்துரைக்கப்பட்ட 670 வீரர்களில் 516 வீரர்களுக்கு மட்டுமே ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. மேலும் ஒலிம்பிக் சங்கம் பரிந்துரைத்திருந்த 283 அதிகாரிகளில் 163 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

28 பிரிவுகளில் பங்கேற்பு:

இந்தியா தடகளம் உட்பட 28 வகையான விளையாட்டுகளில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தியா தடகளம் உட்பட 28 வகையான விளையாட்டுகளில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நீச்சல், வில்வித்தை, பேட்மிண்டன், கோல்ஃப், கூடைப்பந்து, குத்துச்சண்டை, கால்பந்து, சைக்கிள் பந்தயம், குதிரையேற்றம், ஜிம்னாஸ்டிக்ஸ், ஹேண்ட்பால், ஹாக்கி, ஜுடோ, கபடி, துப்பாக்கிச் சுடுதல், துடுப்பு படகு போட்டி, செபக்தக்ரா, ஸ்குவாஷ், டேக்வாண்டோ, டேபிள் டென்னிஸ், டென்னிஸ், வாலிபால், மல்யுத்தம், வுஷூ, பளுதூக்குதல், பாய்மரப்படகு போட்டி உள்ளிட்ட விளையாட்டுகளில் இந்தியா பங்கேற்கிறது.

17 -வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - 2014  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 09, 2014 11:01 pm

ஆசிய விளையாட்டு போட்டி மலேசிய கபடி அணி பதக்கம் வெல்லும் பயிற்சியாளர் நம்பிக்கை

17 -வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - 2014  201409090123496970_Malaysian-kabaddi-teamMedal-winsCoachTrust_SECVPF17–வது ஆசிய விளையாட்டு போட்டி தென் கொரியாவில் உள்ள இன்சியோனில் வருகிற 19–ந் தேதி முதல் அக்டோபர் 4–ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் ஆண்கள் கபடியில் 8 அணிகள் கலந்து கொள்கின்றன. அவை இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், தாய்லாந்து, வங்காளதேசம் ஆகிய அணிகளும், ‘பி’ பிரிவில் ஈரான், தென் கொரியா, ஜப்பான், மலேசியா ஆகிய அணிகளும் இடம் பிடித்துள்ளன. ஆசிய விளையாட்டு போட்டிக்கான மலேசிய ஆண்கள் அணி மற்றும் அடுத்த ஆசிய போட்டிக்கு தயாராகும் வகையில் மலேசிய பெண்கள் கபடி அணிகள் சென்னை வந்து இருந்தன. 15 நாட்கள் சென்னையில் தங்கி இருந்த அந்த இரு அணிகளும் தமிழ்நாட்டில் உள்ள முன்னணி அணிகளுடன் பயிற்சி ஆட்டத்தில் விளையாடின. பயிற்சி முடிந்து மலேசிய திரும்புவதற்கு முந்தைய நாளில் மலேசிய அணிகளுக்கு வழியனுப்பு விழா சென்னையில் நடந்தது. இதில் வீரர்–வீராங்கனைகள் மற்றும் நிர்வாகிகளுக்கு தமிழ்நாடு கபடி சங்க பொதுச்செயலாளர் ஷபியுல்லா, சென்னை மாவட்ட கபடி சங்க செயலாளர் கோல்டு ராஜேந்திரன் மற்றும் நிர்வாகிகள் நினைவு பரிசு வழங்கி வாழ்த்தினார்கள்.

பின்னர் மலேசிய ஆண்கள் கபடி அணியின் பயிற்சியாளர் பழனி அளித்த பேட்டியில், ‘ஆசிய விளையாட்டு போட்டியில் மலேசிய கபடி அணி இதுவரை பதக்கம் வென்றதில்லை. இந்த முறை அரை இறுதிக்கு தகுதி பெறுவது எங்கள் இலக்காகும். அரை இறுதிக்கு முன்னேறி விட்டால் வெண்கலப்பதக்கம் உறுதியாகி விடும். எங்களுக்கு இந்தியா, ஈரான் ஆகிய அணிகளை சமாளிப்பது தான் கடினம். மற்ற அணிகளை வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. தமிழகத்தில் நாங்கள் ஆடிய பயிற்சி ஆட்டங்களில் 2 ஆட்டத்தில் வெற்றி கண்டோம். 7 ஆட்டத்தில் தோல்வி கண்டோம். இருப்பினும் இந்த பயிற்சியின் மூலம் பயனுள்ள நுணுக்கங்களை எங்கள் வீரர்கள் கற்று கொண்டுள்ளனர். குறிப்பாக கன்னியாகுமரி மாவட்ட அணிக்கு எதிரான ஆட்டத்தில் ரைடில் புள்ளிகளை ஈட்டுவது எப்படி என்பதை துல்லியமாக உணர்ந்தோம். தமிழ்நாடு கபடி சங்கம் எங்களுக்கு சிறப்பான வசதிகளை செய்து கொடுத்தது. எங்கள் அணியில் இடம் பிடித்துள்ள வீரர்களில் பெரும்பாலானவர்களின் மூதாதையர்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் தான். இதனால் எங்களுக்கு இங்கு தங்கி பயிற்சி பெறுவதில் சிரமமில்லை. தொடர்ந்து தமிழ்நாடு கபடி சங்கத்துடன் நல்ல உறவை பேண விரும்புகிறோம்’ என்றார்.

17 -வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - 2014  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக