ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:46

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29

நிகழ்நிலை நிர்வாகிகள்

மருத்துவத்துக்கான நோபல் பரிசு – 3 பேர் பகிர்ந்து கொள்கின்றனர்

Go down

 மருத்துவத்துக்கான நோபல் பரிசு – 3 பேர் பகிர்ந்து கொள்கின்றனர் Empty மருத்துவத்துக்கான நோபல் பரிசு – 3 பேர் பகிர்ந்து கொள்கின்றனர்

Post by சிவா Wed 8 Oct 2014 - 0:07



இந்த ஆண்டு மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இம்முறை 3 பேர் இப்பரிசை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

மனித மூளையில் உள்ள அணுக்களின் (செல்) செயல்பாடு குறித்து இவர்கள் மூவரும் ஆய்வு செய்துள்ளனர். இந்த ஆராய்ச்சியின் வழி பல்வேறு வியத்தகு விஷயங்களைக் கண்டறிந்தமைக்காக இந்த உயரிய பரிசு கிடைத்துள்ளது.

நம்மைச் சுற்றியுள்ள இடத்தின் வரைபடத்தை மூளை உருவாக்கும் விதம் மற்றும் சிக்கலான சூழ்நிலையில் அதற்கேற்ப நம்மை எப்படி வழிநடத்திச் செல்கிறது? என்பதை ஆய்வின் மூலம் மூவரும் விளக்கி உள்ளனர்.

இங்கிலாந்து வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கரான ஜோன் ஓ கேஃபே, நோர்வேயைச் சேர்ந்த தம்பதியரான மே பிரிட் மற்றும் எட்வர்ட் மோசர் ஆகியோரே நோபல் மருத்துவத் துறை பரிசுக்குரிய சாதனையாளர்கள்.

 மருத்துவத்துக்கான நோபல் பரிசு – 3 பேர் பகிர்ந்து கொள்கின்றனர் 10646682_747298505343249_5462608357291459277_n
(இடமிருந்து வலம் – மருத்துவத் துறை நோபல் பரிசு பெற்ற எட்வர்ட் மோசர், ஜோன் ஓ கீஃப், மே-பிரிட் மோசர்)

மனித மூளைக்குள்ளும் ஒரு ‘ஜிபிஎஸ்’ (GPS) – அதாவது வழிகாட்டும் உணர்வு – உள்ளது என்றும், இதன் மூலமே மனிதர்களால் எங்கு உள்ளோம், எங்கு செல்கிறோம், எப்படிச் செல்லப் போகிறோம்? என்பதைக் கண்டறிய முடிகிறது என்பதே இவர்களது ஆராய்ச்சியின் மையக் கருவாகும்.

எலி காட்டிய வழி

ஜோன் கேஃபே தற்போது லண்டனில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் நரம்பியல் துறையின் இயக்குநராக உள்ளார். கடந்த 1971 முதல் இவர் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார்.

ஒரு குறிப்பிட்ட அறையில் ஆய்வுக்காக ஒரு எலியை விட்டபோது, அதன் மூளையில் உள்ள ஹிப்போகேம்பஸ் என்ற குறிப்பிட்ட பகுதியில் உள்ள ஒரு நரம்பணு மட்டும் எப்போதுமே செயல்பட்டு கொண்டிருப்பதை அவர் கண்டறிந்தார்.

அந்த எலி, அறையின் வெவ்வேறு பகுதிக்கு நகரும்போது, அதன் மூளையின் மற்ற நரம்பணுக்களும் செயல்படத் தொடங்கியதை அவரால் கண்டறிய முடிந்தது. இந்த அணுக்கள் உள்ள பகுதிகளை ஒருங்கிணைத்தபோது, அந்த எலி இருந்த அறையின் வரைபடம் போல் காட்சியளித்தது.

இந்தக் கண்டுபிடிப்பே இன்று அவர் நோபல் பரிசு பெற வித்திட்டது எனலாம்.
மனிதர்களும், விலங்குகளும் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு பயணம் செய்வதில் மூளையின் பங்களிப்பு என்ன என்பது தொடர்பிலான இவரது ஆய்வின் முடிவுகள் நமக்குப் பல்வேறு ஆச்சரியமூட்டும் தகவல்களை தெரிவிக்கின்றன.

தம்பதிகளின் ஆய்வு சாதனை

மற்ற இரு சாதனையாளர்களான மே – பிரிட் மோசர் தம்பதியர் நோர்வேயில் உள்ள அறிவியல் மையத்தில் பணியாற்றுகிறார்கள். மூளையின் ஹிப்போ கேம்பஸ் பகுதியின் செயல்பாடு குறித்து இருவரும் ஜோன் கேஃபேயிடம் இருந்துதான் முதலில் கற்று அறிந்தனர்.

இதையடுத்து பத்து ஆண்டுகளுக்குப் ஜோன் கேஃபே போலவே மூளை அணுக்களின் செயல்பாடுகள் குறித்து இருவரும் தீவிரமாக ஆராய்ச்சி செய்தனர். இதன் முடிவில் விலங்குகளின் ‘நகர்தல்’ குறித்த அரிய விஷயங்களைக் கண்டுபிடித்தனர்.

மொத்தத்தில் மனித மூளையால் பல்வேறு பாதைகளை, வழித்தடங்களை எவ்வாறு நினைவில் வைத்திருக்க முடிகிறது? எப்படி ஒரு பாதையை அடிப்படையாக வைத்து பயணம் மேற்கொள்ள முடிகிறது?

தூக்கம் மற்றும் கனவுகளுக்கும் மனித மூளைக்கும் உள்ள தொடர்பு என்ன? மூளையின் செயல்பாட்டிற்கு இவற்றின் பங்களிப்பு என்ன? என்பன போன்ற எண்ணற்ற கேள்விகளுக்கு விடைகாண இந்த 3 சாதனையாளர்களும் வழிவகுத்திருக்கிறார்கள்.

மருத்துவ நோபல் பரிசுக்குரிய 1.1 மில்லியன் டாலர் பரிசுத்தொகையில் பாதி ஜோன் ஓ கேஃபேக்கு வழங்கப்படும். மீதித் தொகை நோர்வே தம்பதியருக்கு வழங்கப்படுகிறது.

மனித மூளை உலகின் மிகப்பெரிய ஆச்சரியம் என்றால், இந்த சாதனையாளர்களும் மனித இனத்தின் ஆச்சரியக் குறிகளே!


 மருத்துவத்துக்கான நோபல் பரிசு – 3 பேர் பகிர்ந்து கொள்கின்றனர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics
» சுவீடன் விஞ்ஞானிக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு
»  ஸ்டெம் செல்' ஆராய்ச்சியில் சாதனை படைத்த ஜப்பான், பிரிட்டன் நிபுணர்களுக்கு நோபல் பரிசு
» வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு: விருது பெறும் மூன்று பேர் யார் தெரியுமா?
» ஆங் சான் சூகிக்கு வழங்கப்பட்ட நோபல் பரிசு திரும்பப் பெறப்படமாட்டாது: நோபல் கமிட்டி தகவல்
» பொருளியலுக்கான நோபல் பரிசு... நோபல் பரிசே அல்ல!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum