Latest topics
» பல்சுவை கதம்பம்by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குயில் தந்த பூசணி விதை !
4 posters
Page 1 of 1
குயில் தந்த பூசணி விதை !
குயில் தந்த பூசணி விதை !
தமிழண்ணா, படங்கள் : ஜெயசூர்யா
1,000 ஆண்டுகளுக்கு முன்பு கொரியக் கிராமம் ஒன்றில், அண்ணன் தம்பி இருவர் வசித்துவந்தனர். அண்ணன் பெயர், நோல்பு. தம்பி பெயர் கியூங்பு.
நோல்பு, பெரிய பணக்காரன். ஆனால், பேராசைக்காரன். இரக்கம் இல்லாதவன். எந்த நல்ல குணமும் அவனிடம் இல்லை. தன் தம்பிக்குக்கூட தோட்டத்தில் விளையும் தானியத்தில் கொஞ்சமும் கொடுக்காதவன். தம்பி கியூங்பு, ஏழையாக இருந்தாலும் அடுத்தவருக்கு உதவும் குணம் உள்ளவன்.
ஒரு நாள்... குயில் ஒன்று கால் ஒடிந்து வலியால் துடிப்பதைக் கண்டான் கியூங்பு. உடனே அந்தக் குயிலைத் தன் வீட்டுக்கு எடுத்துச்சென்று, மருந்து போட்டு கவனித்துக்கொண்டான். அதற்கு, உணவும் நீரும் கொடுத்துப் பராமரித்தான்.
குயில் நன்றாகக் குணம் அடைந்ததும், கியூங்புவுக்கு நன்றி சொல்லிவிட்டுப் பறந்துபோனது. தனக்கு உதவி செய்த கியூங்புவுக்கு ஏதாவது ஒரு வகையில் உதவ நினைத்தது. வசந்த காலம் துவங்கியபோது, பூசணி விதை ஒன்றை கியூங்புவிடம் கொடுத்துவிட்டுச் சென்றது.
கியூங்பு, அந்தக் குயில் கொடுத்த விதையைத் தன் வீட்டுக்கு முன்பாக விதைத்தான். பூசணிக்கொடி நன்கு வளர்ந்து பெரிய பெரிய பூசணிகள் காய்த்தன.அந்தப் பூசணிகளைப் பறித்து, ஊர்ச் சந்தையில் விற்க நினைத்தான்.
அன்று இரவு, சமைப்பதற்கு ஒரு பூசணியை எடுத்து வெட்டினான். உள்ளே விதைகளுக்குப் பதிலாக தங்கக் கட்டிகள் இருந்தன. கியூங்புவுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. அடுத்தடுத்த பூசணிகளை வெட்டினான். எல்லாக் காய்களில் இருந்தும் தங்கக் கட்டிகள் கொட்டின.
இப்போது, கியூங்பு தன் சகோதரன் நோல்புவைவிட பெரிய பணக்காரன் ஆகிவிட்டான். சிலருக்கு பணம் வந்துவிட்டால், குணம் மாறிப்போகும். ஆனால், கியூங்பு பணக்காரன் ஆன பிறகும் எளிமையாக இருந்தான். இல்லாதவர்களுக்கு உதவினான்.
திடீர் பணக்காரத் தம்பியின் ரகசியத்தை அறிய நோல்பு விரும்பினான். ‘இது வரை எந்த உதவியும் செய்யாத நாம் போனால், தம்பி பேசுவானா... அப்படியே பேசினாலும் பணக்கார ரகசியத்தைச் சொல்வானா?’ என்ற தயக்கத்துடன் தம்பியின் வீட்டுக்குச் சென்றான்.
திடீரென்று வீடு தேடி வந்த அண்ணனை முக மலர்ச்சியோடு வரவேற்று உபசரித்தான் கியூங்பு. எப்போதுமே வராத அண்ணன், தேடி வந்ததில் மகிழ்ச்சியே. அண்ணனுக்கு விருந்து கொடுத்து நன்கு உபசரித்தான்.
“எல்லாம் சரி தம்பி, உனக்கு எப்படி இவ்வளவு வசதி வந்தது?” என்று கேட்டான் நோல்பு.
கள்ளம் கபடம் இல்லாத கியூங்பு, “அதுவா அண்ணே, எல்லாம் ஒரு குயில் புண்ணியத்தால் வந்தது” என்று சொன்னான்.
“ஆச்சரியமா இருக்கே. குயிலால் எப்படி உன்னைப் பணக்காரன் ஆக்க முடிந்தது?” என்று கேட்டான் நோல்பு.
நடந்த விஷயங்களை அண்ணனிடம் சொன்னான் தம்பி. வீட்டுக்குத் திரும்பிய பேராசைக்கார அண்ணன், கால் ஒடிந்து எங்காவது குயில் விழுந்து கிடக்கிறதா என்று தேட ஆரம்பித்தான்.
பல நாள் தேடியும் கால் ஒடிந்த குயில் தென்படவில்லை. பேராசைக்காரனுக்கு புத்தி நல்ல வழியில் வேலை செய்யாதுதானே. நோல்பு விஷயத்திலும் அப்படித்தான் ஆயிற்று. காட்டுக்குச் சென்று, ஒரு குயிலைப் பிடித்துவந்தான். நன்றாக இருந்த அதன் காலை ஒடித்தான். அது, வலியால் துடித்தது. ஒடித்த குயிலின் காலுக்கு மருந்து போட்டு, அது குணமாகும் நாளை எதிர்பார்த்தான்.
குயிலுக்கு காயம் ஆறியதும் பறந்து போய்விட்டது. நோல்பு வசந்த காலத்துக்காக காத்திருந்தான். வசந்த காலமும் வந்தது. அந்தக் குயிலும் வந்தது.
ஒரு பூசணி விதையை நோல்புவுக்குக் கொடுத்துவிட்டுப் பறந்துபோனது. பேராசைக்கார நோல்பு இதைத்தானே எதிர்பார்த்தான். குயில் கொடுத்த பூசணி விதையை நட்டு வளர்த்தான். பூசணிக் கொடியில் பூசணி காய்க்கத் தொடங்கியது. நோல்பு மகிழ்ச்சி அடைந்தான். பூசணிக்காய்கள் பெரிதாகும் வரை தவிப்போடு காத்திருந்தான்.
ஒருவழியாக, காய்கள் பெரிதானதும் எல்லாவற்றையும் பறித்துவந்து, நடு வீட்டில் வைத்தான். பூசணியை அறுக்கும்போது யாரும் வீட்டுக்குள் வந்துவிடக் கூடாது என்று வீட்டின் எல்லாக் கதவுகளையும் உள்பக்கமாகத் தாளிட்டான். ஜன்னல்களையும் மூடித் தாளிட்டான்.
ஒரு பெரிய கத்தியை எடுத்துவந்து, ஆவலுடன் பூசணியை வெட்டினான். தங்கத்துக்குப் பதிலாக தண்ணீர் கொட்டியது. ஏமாற்றம் அடைந்த நோல்பு, அடுத்த பூசணியையும் வெட்டினான், அதிலிருந்தும் தண்ணீர்தான் கொட்டியது.
‘ஒருவேளை இந்தப் பூசணியில் இருக்குமோ, அந்தப் பூசணியில் இருக்குமோ’ என்று ஒவ்வொரு பூசணியாக எடுத்து, வெறியுடன் வெட்டினான். எல்லாப் பூசணியில் இருந்தும் அருவி போல தண்ணீர் கொட்டியது.
நோபுலுக்கு அப்போதும் புத்தி வரவில்லை. இந்தத் தண்ணீர் எல்லாம் தங்கமாக மாறும் என்று நம்பினான். அவன் கழுத்து அளவுக்கு தண்ணீர் வந்துவிட்டது. இப்போது, நோல்புவுக்கு உயிர் பயம் வந்தது. ‘தப்பித்தோம் பிழைத்தோம்’ என்று வீட்டுக் கதவைத் திறந்தான். ஆற்று வெள்ளத்தில் அடித்துவரப்பட்ட மரக்கட்டை போல வெளியே வந்து விழுந்தான். வீட்டில் இருந்த செல்வம் எல்லாம் பூசணியில் இருந்த தண்ணீரால் அடித்துச் செல்லப்பட்டது.
நோல்பு ஏழையாகிப் போனான். சாப்பிடக்கூட பணம் இல்லை. தம்பியைப் பார்க்க வெட்கப்பட்டு, ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்தான்.
அண்ணன் நோல்பின் நிலையைக் கேள்விப்பட்டு, தம்பி கியூங்பு வருத்தப்பட்டான். அண்ணனைச் சந்தித்து, தன்னிடம் இருந்த தங்கத்தைப் பகிர்ந்து கொடுத்தான். தம்பியின் பாசத்தால் நோல்பு மனம் திருந்தினான். இப்போது, அந்தக் கிராமத்தில் இருவருமே எல்லோருக்கும் உதவும் பாசம் மிக்க சகோதரர்கள்.
சுட்டி விகடன்

தமிழ்நேசன்1981- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
Re: குயில் தந்த பூசணி விதை !
பேரு மாறிப்போச் !
சரண்யாவுக்கு பெயர் மாற்றி விளையாடும் விளையாட்டு மிகவும் பிடிக்கும். தன் தோழிகள் வீட்டுக்குச் சென்றால்... அவள் பெயரை மாற்றி், தோழி பெயரை வைத்துக்கொள்வாள். இவள் பெயரைத் தோழிக்குக் கொடுத்துவிடுவாள். அப்படித்தான், ஒருநாள் குழலி வீட்டில் பெயர் மாற்றி விளையாடிக் கொண்டிருந்தபோது, குழலியின் பெற்றோர் வெளியே கிளம்பியதால், அவசர அவரமாக குழலியைக் கூட்டிச் சென்றுவிட்டார்கள். குழலியுடன் சரண்யாவின் பெயரும் சென்றுவிட்டது. ‘குழலி’ என்ற பெயர் நன்றாக இருந்ததால், சரண்யாவும் சந்தோஷமாகத் தன் வீட்டை நோக்கி நடந்தாள்.
அவள் வீட்டை அடைய ஒரு மலையைக் கடக்க வேண்டும். அப்போது, ஒரு கறுப்புக் குதிரை எதிரே வந்தது. அந்தக் குதிரையிடம், அது செல்லும் பக்கமாகத் தன்னையும் ஏற்றிச்செல்லுமாறு கேட்டாள். சரி என ஒப்புக்கொண்டது குதிரை.
“உன் பெயர் என்ன?” என்று குழலி பெயரில் இருந்த சரண்யா கேட்க, “ப்ளாக் பியூட்டி... கறுப்பழகி” என்றது குதிரை. “ஓ... அன்னா சீவல் எழுதிய, ‘கறுப்பு அழகி’ நாவலில் வரும் குதிரை நீதானா?” என வியந்தவள், ‘‘சரி, நாம பெயரை மாற்றிக்கொள்வோமா?” என்று கேட்டாள்.
‘குழலி’ என்ற பெயரைக் குதிரைக்கும் ‘கறுப்பழகி’யைத் தனக்கும் எடுத்துக்கொண்டாள்.
குதிரை வேறு பக்கம் சென்றதால், இறங்கி நடக்க ஆரம்பித்தாள். தன் பின்னால் ஒருவர் பின்தொடர்வதைக் கவனித்தாள். ரொம்ப உயரமாக, பயங்கர வலிமை வாய்ந்தவராக இருந்தார் அவர்.
‘‘மாமா, எனக்கு கால் வலிக்கி்றது கொஞ்சம் தூக்கிக்கொண்டு செல்கி்றீர்களா?” என்றாள் தைரியமாக.
அவரும் சரி என்றார். ‘‘உங்க பெயர் என்ன மாமா?” என்றாள். “கோலியாத்” என்றார் அவர்.
‘‘டேவிட் வீழ்த்திய கோலியாத் நீங்கள்தானா?’’ என்றவள், தன் வழக்கமான வேலையைச் செய்தாள். கறுப்பழகி பெயரை கோலியாத் கொஞ்சம் தயக்கத்துடன் பெற்றுக்கொண்டு, தனது பெயரைக் கொடுத்தார்.
ஒரு வீராங்கனை போல கம்பீரமாக வீடு சேர்ந்தாள். அவள் அம்மா, மாலை உணவு கொடுத்தாள். சுவையாக இருந்தது. வழக்கத்துக்கு மாறாக நிறையச் சாப்பிட்டாள். “சரண்யா, நீயேவா இதை எல்லாம் சாப்பிட்டே?” என்று அம்மா வியந்தாள்.
“ஹா... ஹா... ஹா... நான் சரண்யா இல்லை, நான் கோலியாத்” என்று நடந்ததை விவரித்தவள், திடீரென சரண்யா பெயர் வேண்டும் என்றாள்.
ஆனால், அந்தப் பெயர் இப்போது குழலியிடம் இருக்கி்றது. இருட்டத் துவங்கிவிட்டதால், சிறுமியின் தாயே குழலி வீட்டுக்குச் சென்று பெயர் மாற்றி வருவதாகத் தெரிவித்தாள். ஆனால், குழலியின் பெயர் குதிரையிடமும், குதிரையின் பெயர் அந்தப் பெரிய வீரனிடமும் இருக்கி்றது அல்லவா?
அதனால், தாயின் பெயரான ‘அன்பரசி’யை மகளுக்குக் கொடுத்துவிட்டு, கோலியாத் பெயரை எடுத்துக்கொண்டு கிளம்பினார்.
அந்த வீரனை வழியில் சந்தித்தாள். வீட்டில் இருந்து எடுத்துவந்த பழங்களை அவனுக்குக் கொடுத்துவிட்டு, பெயர்களை மாற்றிக்கொண்டாள். இருட்டிவிட்டதால் தானும் துணைக்கு வருவதாகச் சொன்னான் கோலியாத்.
கறுப்புக் குதிரையைத் தேடிச்சென்றார்கள். அது ஒரு மரத்தின் நிழலில் நின்றது. மெள்ள அதன் முதுகில் வருடி, அதற்கும் சில பழங்களைக் கொடுத்துவிட்டு, குழலியின் பெயரை வாங்கினார். ‘‘வாங்க, வேகமாக குழலி வீட்டுக்குப் போகலாம். என் மீது அமருங்கள்’’ என்றது கறுப்பழகி. குழலியின் வீட்டை அடைந்தபோது, குழலியும் அவளுக்குத் தன் பெயர் வேண்டும் என அழுதுகொண்டிருந்தாள். சரண்யாவின் அம்மா, அங்கே சென்று பெயரை மாற்றினார். நன்றாக இருட்டத் துவங்கியது.
கறுப்பழகியும் கோலியாத்தும், சரண்யாவின் அம்மாவை அவர் வீட்டுக்கு அழைத்துச்சென்றனர். வாசலிலேயே காத்திருந்த மகள், தன் பெயரை அம்மாவிடம் இருந்து பெற்றுக்கொண்டதும் மிகவும் மகிழ்ந்தாள்.
வணக்கம் சொல்லிவிட்டு, கறுப்பழகியும் கோலியாத்தும் விடைபெற்றனர்.

ம்..............நல்லா இருக்கு நேசன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: குயில் தந்த பூசணி விதை !
அருமையான கதைகள்! அனைத்தையும் என்னுடைய kindle -ற்கு மாற்றிவிட்டேன் என் குழந்தைகள் படிக்க உபயோகப்படும் நன்றி!
Narayanan C- புதியவர்
- பதிவுகள் : 11
இணைந்தது : 13/06/2014
Re: குயில் தந்த பூசணி விதை !
அருமையான கதைகள்..
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
M.Saranya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
Similar topics
» நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும் பூசணி விதை
» சன் டிவிக்கு லாபம் தந்த ரஜினி; நஷ்டம் தந்த ஜெயலலிதா!
» வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் !
» இது பூசணி அடை பூக்கும் நேரம்!
» சாம்பல் பூசணி ஜூஸ்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum