ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குயில் தந்த பூசணி விதை !

4 posters

Go down

குயில் தந்த பூசணி விதை ! Empty குயில் தந்த பூசணி விதை !

Post by தமிழ்நேசன்1981 Tue Oct 07, 2014 6:24 pm

குயில் தந்த பூசணி விதை !
தமிழண்ணா, படங்கள் : ஜெயசூர்யா

குயில் தந்த பூசணி விதை ! Ch56
1,000 ஆண்டுகளுக்கு முன்பு கொரியக் கிராமம் ஒன்றில், அண்ணன் தம்பி இருவர் வசித்துவந்தனர். அண்ணன் பெயர், நோல்பு. தம்பி பெயர் கியூங்பு.

நோல்பு, பெரிய பணக்காரன். ஆனால், பேராசைக்காரன். இரக்கம் இல்லாதவன். எந்த நல்ல குணமும் அவனிடம் இல்லை. தன் தம்பிக்குக்கூட தோட்டத்தில் விளையும் தானியத்தில் கொஞ்சமும் கொடுக்காதவன். தம்பி கியூங்பு, ஏழையாக இருந்தாலும் அடுத்தவருக்கு உதவும் குணம் உள்ளவன்.

ஒரு நாள்... குயில் ஒன்று கால் ஒடிந்து வலியால் துடிப்பதைக் கண்டான் கியூங்பு. உடனே அந்தக் குயிலைத் தன் வீட்டுக்கு எடுத்துச்சென்று, மருந்து போட்டு கவனித்துக்கொண்டான். அதற்கு, உண‌வும் நீரும் கொடுத்துப் பராமரித்தான்.

குயில் நன்றாகக் குணம் அடைந்ததும், கியூங்புவுக்கு நன்றி சொல்லிவிட்டுப் பறந்துபோனது. தனக்கு உதவி செய்த கியூங்புவுக்கு ஏதாவது ஒரு வகையில் உதவ நினைத்தது. வசந்த காலம் துவங்கியபோது, பூசணி விதை ஒன்றை கியூங்புவிடம் கொடுத்துவிட்டுச் சென்றது.

கியூங்பு, அந்தக் குயில் கொடுத்த விதையைத் தன் வீட்டுக்கு முன்பாக விதைத்தான். பூசணிக்கொடி நன்கு வளர்ந்து பெரிய பெரிய பூசணிகள் காய்த்தன.அந்தப் பூசணிகளைப் பறித்து, ஊர்ச் சந்தையில் விற்க நினைத்தான்.

அன்று இரவு, சமைப்பதற்கு ஒரு பூசணியை எடுத்து வெட்டினான். உள்ளே விதைகளுக்குப் பதிலாக தங்கக் கட்டிகள் இருந்தன. கியூங்புவுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. அடுத்தடுத்த பூசணிகளை வெட்டினான். எல்லாக் காய்களில் இருந்தும் தங்கக் கட்டிகள் கொட்டின.

இப்போது, கியூங்பு தன் சகோதரன் நோல்புவைவிட பெரிய பணக்காரன் ஆகிவிட்டான். சிலருக்கு பணம் வந்துவிட்டால், குணம் மாறிப்போகும். ஆனால், கியூங்பு பணக்காரன் ஆன பிறகும் எளிமையாக இருந்தான். இல்லாதவர்களுக்கு உதவினான்.

திடீர் பணக்காரத் தம்பியின் ரகசியத்தை அறிய நோல்பு விரும்பினான். ‘இது வரை எந்த உதவியும் செய்யாத நாம் போனால், தம்பி பேசுவானா... அப்படியே பேசினாலும் பணக்கார ரகசியத்தைச் சொல்வானா?’ என்ற தயக்கத்துடன் தம்பியின் வீட்டுக்குச் சென்றான்.
குயில் தந்த பூசணி விதை ! Ch56a
திடீரென்று வீடு தேடி வந்த அண்ணனை முக மலர்ச்சியோடு வரவேற்று உபசரித்தான் கியூங்பு. எப்போதுமே வராத அண்ணன், தேடி வந்ததில் மகிழ்ச்சியே. அண்ணனுக்கு விருந்து கொடுத்து நன்கு உபசரித்தான்.

“எல்லாம் சரி தம்பி, உனக்கு எப்படி இவ்வளவு வசதி வந்தது?” என்று கேட்டான் நோல்பு.

கள்ளம் கபடம் இல்லாத கியூங்பு, “அதுவா அண்ணே, எல்லாம் ஒரு குயில் புண்ணியத்தால் வந்தது” என்று சொன்னான்.

“ஆச்சரியமா இருக்கே. குயிலால் எப்படி உன்னைப் பணக்காரன் ஆக்க முடிந்தது?” என்று கேட்டான் நோல்பு.

நடந்த விஷயங்களை அண்ணனிடம் சொன்னான் தம்பி. வீட்டுக்குத் திரும்பிய பேராசைக்கார அண்ணன், கால் ஒடிந்து எங்காவது குயில் விழுந்து கிடக்கிறதா என்று தேட ஆரம்பித்தான்.

பல நாள் தேடியும் கால் ஒடிந்த குயில் தென்படவில்லை. பேராசைக்காரனுக்கு புத்தி நல்ல வழியில் வேலை செய்யாதுதானே. நோல்பு விஷயத்திலும் அப்படித்தான் ஆயிற்று. காட்டுக்குச் சென்று, ஒரு குயிலைப் பிடித்துவந்தான். நன்றாக இருந்த‌ அதன் காலை ஒடித்தான். அது, வலியால் துடித்தது. ஒடித்த குயிலின் காலுக்கு மருந்து போட்டு, அது குணமாகும் நாளை எதிர்பார்த்தான்.
குயில் தந்த பூசணி விதை ! Ch56b
குயிலுக்கு காயம் ஆறியதும் பறந்து போய்விட்டது. நோல்பு வசந்த காலத்துக்காக காத்திருந்தான். வசந்த காலமும் வந்தது. அந்தக் குயிலும் வந்தது.

ஒரு பூசணி விதையை நோல்புவுக்குக் கொடுத்துவிட்டுப் பறந்துபோனது. பேராசைக்கார நோல்பு இதைத்தானே எதிர்பார்த்தான். குயில் கொடுத்த பூசணி விதையை நட்டு வளர்த்தான். பூசணிக் கொடியில் பூசணி காய்க்கத் தொடங்கியது. நோல்பு மகிழ்ச்சி அடைந்தான். பூசணிக்காய்கள் பெரிதாகும் வரை தவிப்போடு காத்திருந்தான்.

ஒருவழியாக, காய்கள் பெரிதானதும் எல்லாவற்றையும் பறித்துவந்து, நடு வீட்டில் வைத்தான். பூசணியை அறுக்கும்போது யாரும் வீட்டுக்குள் வந்துவிடக் கூடாது என்று ‌வீட்டின் எல்லாக் கதவுகளையும் உள்பக்கமாகத் தாளிட்டான். ஜன்னல்களையும் மூடித் தாளிட்டான்.

ஒரு பெரிய கத்தியை எடுத்துவந்து, ஆவலுடன் பூசணியை வெட்டினான். தங்கத்துக்குப் பதிலாக தண்ணீர் கொட்டியது. ஏமாற்றம் அடைந்த நோல்பு, அடுத்த பூசணியையும் வெட்டினான், அதிலிருந்தும் தண்ணீர்தான் கொட்டியது.

‘ஒருவேளை இந்தப் பூசணியில் இருக்குமோ, அந்தப் பூசணியில் இருக்குமோ’ என்று ஒவ்வொரு பூசணியாக எடுத்து, வெறியுடன் வெட்டினான். எல்லாப் பூசணியில் இருந்தும் அருவி போல தண்ணீர் கொட்டியது.

நோபுலுக்கு அப்போதும் புத்தி வரவில்லை. இந்தத் தண்ணீர் எல்லாம் தங்கமாக மாறும் என்று நம்பினான். அவன் கழுத்து அளவுக்கு தண்ணீர் வந்துவிட்டது. இப்போது, நோல்புவுக்கு உயிர் பயம் வந்தது. ‘தப்பித்தோம் பிழைத்தோம்’ என்று வீட்டுக் கதவைத் திறந்தான். ஆற்று வெள்ளத்தில் அடித்துவரப்பட்ட மரக்கட்டை போல‌ வெளியே வந்து விழுந்தான். வீட்டில் இருந்த செல்வம் எல்லாம் பூசணியில் இருந்த தண்ணீரால் அடித்துச் செல்லப்பட்டது.

நோல்பு ஏழையாகிப் போனான். சாப்பிடக்கூட பணம் இல்லை. தம்பியைப் பார்க்க வெட்கப்பட்டு, ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்தான்.

அண்ணன் நோல்பின் நிலையைக் கேள்விப்பட்டு, தம்பி கியூங்பு வருத்தப்பட்டான். அண்ணனைச் சந்தித்து, தன்னிடம் இருந்த தங்கத்தைப் பகிர்ந்து கொடுத்தான். தம்பியின் பாசத்தால் நோல்பு மனம் திருந்தினான். இப்போது, அந்தக் கிராமத்தில் இருவருமே எல்லோருக்கும் உதவும் பாசம் மிக்க சகோதரர்கள்.



சுட்டி விகடன்
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

குயில் தந்த பூசணி விதை ! Empty Re: குயில் தந்த பூசணி விதை !

Post by தமிழ்நேசன்1981 Tue Oct 07, 2014 6:26 pm

பேரு மாறிப்போச் !

குயில் தந்த பூசணி விதை ! Ch66a
சரண்யாவுக்கு பெயர் மாற்றி விளையாடும் விளையாட்டு மிகவும் பிடிக்கும். தன் தோழிகள் வீட்டுக்குச் சென்றால்... அவள் பெயரை மாற்றி், தோழி பெயரை வைத்துக்கொள்வாள். இவள் பெயரைத் தோழிக்குக் கொடுத்துவிடுவாள். அப்படித்தான், ஒருநாள் குழலி வீட்டில் பெயர் மாற்றி விளையாடிக் கொண்டிருந்தபோது, குழலியின் பெற்றோர் வெளியே கிளம்பியதால், அவசர அவரமாக குழலியைக் கூட்டிச் சென்றுவிட்டார்கள். குழலியுடன் சரண்யாவின் பெயரும் சென்றுவிட்டது. ‘குழலி’ என்ற பெயர் நன்றாக இருந்ததால், சரண்யாவும் சந்தோஷமாகத் தன் வீட்டை நோக்கி நடந்தாள்.

அவள் வீட்டை அடைய ஒரு மலையைக் கடக்க வேண்டும். அப்போது, ஒரு கறுப்புக் குதிரை எதிரே வந்தது. அந்தக் குதிரையிடம், அது செல்லும் பக்கமாகத் தன்னையும் ஏற்றிச்செல்லுமாறு கேட்டாள். சரி என ஒப்புக்கொண்டது குதிரை.

“உன் பெயர் என்ன?” என்று குழலி பெயரில் இருந்த சரண்யா கேட்க, “ப்ளாக் பியூட்டி... கறுப்பழகி” என்றது குதிரை. “ஓ... அன்னா சீவல் எழுதிய, ‘கறுப்பு அழகி’ நாவலில் வரும் குதிரை நீதானா?” என வியந்தவள், ‘‘சரி, நாம பெயரை மாற்றிக்கொள்வோமா?” என்று கேட்டாள்.


‘குழலி’ என்ற பெயரைக் குதிரைக்கும் ‘கறுப்பழகி’யைத் தனக்கும் எடுத்துக்கொண்டாள்.

குதிரை வேறு பக்கம் சென்றதால், இறங்கி நடக்க ஆரம்பித்தாள். தன் பின்னால் ஒருவர் பின்தொடர்வதைக் கவனித்தாள். ரொம்ப உயரமாக, பயங்கர வலிமை வாய்ந்தவராக இருந்தார் அவர்.

‘‘மாமா, எனக்கு கால் வலிக்கி்றது கொஞ்சம் தூக்கிக்கொண்டு செல்கி்றீர்களா?” என்றாள் தைரியமாக.

அவரும் சரி என்றார். ‘‘உங்க பெயர் என்ன மாமா?” என்றாள். “கோலியாத்” என்றார் அவர்.

‘‘டேவிட் வீழ்த்திய கோலியாத் நீங்கள்தானா?’’ என்றவள், தன் வழக்கமான வேலையைச் செய்தாள். கறுப்பழகி பெயரை கோலியாத் கொஞ்சம் தயக்கத்துடன் பெற்றுக்கொண்டு, தனது பெயரைக் கொடுத்தார்.

ஒரு வீராங்கனை போல கம்பீரமாக வீடு சேர்ந்தாள். அவள் அம்மா, மாலை உணவு கொடுத்தாள். சுவையாக இருந்தது. வழக்கத்துக்கு மாறாக நிறையச் சாப்பிட்டாள். “சரண்யா, நீயேவா இதை எல்லாம் சாப்பிட்டே?” என்று அம்மா வியந்தாள்.
குயில் தந்த பூசணி விதை ! Ch66b
“ஹா... ஹா... ஹா... நான் சரண்யா இல்லை, நான் கோலியாத்” என்று நடந்ததை விவரித்தவள், திடீரென சரண்யா பெயர் வேண்டும் என்றாள்.
ஆனால், அந்தப் பெயர் இப்போது குழலியிடம் இருக்கி்றது. இருட்டத் துவங்கிவிட்டதால், சிறுமியின் தாயே குழலி வீட்டுக்குச் சென்று பெயர் மாற்றி வருவதாகத் தெரிவித்தாள். ஆனால், குழலியின் பெயர் குதிரையிடமும், குதிரையின் பெயர் அந்தப் பெரிய வீரனிடமும் இருக்கி்றது அல்லவா?

அதனால், தாயின் பெயரான ‘அன்பரசி’யை மகளுக்குக் கொடுத்துவிட்டு, கோலியாத் பெயரை எடுத்துக்கொண்டு கிளம்பினார்.

அந்த வீரனை வழியில் சந்தித்தாள். வீட்டில் இருந்து எடுத்துவந்த பழங்களை அவனுக்குக் கொடுத்துவிட்டு, பெயர்களை மாற்றிக்கொண்டாள். இருட்டிவிட்டதால் தானும் துணைக்கு வருவதாகச் சொன்னான் கோலியாத்.
குயில் தந்த பூசணி விதை ! Ch66c
கறுப்புக் குதிரையைத் தேடிச்சென்றார்கள். அது ஒரு மரத்தின் நிழலில் நின்றது. மெள்ள அதன் முதுகில் வருடி, அதற்கும் சில பழங்களைக் கொடுத்துவிட்டு, குழலியின் பெயரை வாங்கினார். ‘‘வாங்க, வேகமாக குழலி வீட்டுக்குப் போகலாம். என் மீது அமருங்கள்’’ என்றது கறுப்பழகி. குழலியின் வீட்டை அடைந்தபோது, குழலியும் அவளுக்குத் தன் பெயர் வேண்டும் என அழுதுகொண்டிருந்தாள். சரண்யாவின் அம்மா, அங்கே சென்று பெயரை மாற்றினார். நன்றாக இருட்டத் துவங்கியது.

கறுப்பழகியும் கோலியாத்தும், சரண்யாவின் அம்மாவை அவர் வீட்டுக்கு அழைத்துச்சென்றனர். வாசலிலேயே காத்திருந்த மகள், தன் பெயரை அம்மாவிடம் இருந்து பெற்றுக்கொண்டதும் மிகவும் மகிழ்ந்தாள்.

வணக்கம் சொல்லிவிட்டு, கறுப்பழகியும் கோலியாத்தும் விடைபெற்றனர்.


சுட்டி விகடன்
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

குயில் தந்த பூசணி விதை ! Empty Re: குயில் தந்த பூசணி விதை !

Post by krishnaamma Tue Oct 07, 2014 7:03 pm

ம்..............நல்லா இருக்கு நேசன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

குயில் தந்த பூசணி விதை ! Empty Re: குயில் தந்த பூசணி விதை !

Post by Narayanan C Mon Oct 13, 2014 2:21 pm

அருமையான கதைகள்! அனைத்தையும் என்னுடைய kindle -ற்கு மாற்றிவிட்டேன் என் குழந்தைகள் படிக்க உபயோகப்படும் நன்றி!
Narayanan C
Narayanan C
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 11
இணைந்தது : 13/06/2014

Back to top Go down

குயில் தந்த பூசணி விதை ! Empty Re: குயில் தந்த பூசணி விதை !

Post by M.Saranya Mon Oct 13, 2014 2:35 pm

அருமையான கதைகள்..


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

குயில் தந்த பூசணி விதை ! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

குயில் தந்த பூசணி விதை ! Empty Re: குயில் தந்த பூசணி விதை !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum