Latest topics
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19by ayyasamy ram Today at 7:40 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பலகார டிப்ஸ்!
4 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
Re: பலகார டிப்ஸ்!
எந்தெந்தப் பொருட்கள் எங்கெங்கு?!
கிச்சனை இடநெருக்கடி இல்லாமலும், சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள டிப்ஸ்கள் வழங்குகிறார், சமையல்கலை நிபுணர் ஆதிரை வேணுகோபால்.
வாங்கும் டப்பாக்கள் எல்லாம் ஒரே அளவிலோ அல்லது ஒரே டிசைனாகவோ இருந்தால் பார்க்க அழகாக இருக்கும்.
காய்கறி நறுக்கும்போது அடியில் ஒரு பேப்பரை போட்டுக்கொண்டால், சுத்தம் செய்வது எளிதாக இருக்கும்.
25 கிலோ அரிசியை வாங்கிவந்தால், அதை இரண்டு, மூன்று டப்பாக் களில் பிரித்துச் சேமிக் கலாம்.
எண்ணெய் வைக்கும் இடத்துக்கு அருகில் கத்தி, தேங்காய் துருவி, குட்டி ஸ்பூன் போன்றவற்றை வைத்தால், அவசரத் துக்கு தேடும்படி இருக்காது.
அன்றாட தேவைக்கான மளிகை, மசாலா பொருட்களை அடுப்புக்கு இடதுபுறத்தில் வைத்துக்கொள்ளலாம்.
எண்ணெய் கீழே கொட்டி விட்டால், உடனே அதன் மீது கோதுமை அல்லது அரிசி மாவைப் போட்டு, வழித்தெடுத்தால், எண்ணெய் பசை இருக்காது.
அடுப்புக்கு கீழே உள்ள 'சிலாப்’பில், தினமும் பயன்படுத்தும் குக்கர் மற்றும் கடாய்களை முதல் வரிசையில் வைத்துக்கொள்ளலாம். தேவைக்கு மட்டுமே பயன் படுத்தும் மாவு டப்பாக்களை அடுத்த வரிசையில் வைத்துக் கொள்ளலாம்.
முட்டை கீழே விழுந்து உடைந்துவிட்டால் உடனே அதன் மீது உப்பைக் கொட்டினால், வாடை குறைந்துவிடும், சுலபமாக சுத்தம் செய்யலாம். சமையலறையில் நாம் நிற்பதற்கு வலதுபுறத்தில் மிக்ஸி, கிரைண்டர், 'மைக்ரோவேவ் அவன்’ போன்றவற்றை வைத்தால், கையாள சுலபமாக இருக்கும்.
கண்ணாடிப் பொருட்கள், கப் அண்ட் சாஸர் போன்றவற்றை எப்போதும் அடுப்புக்கு எதிர்புறத்தில், மேலேதான் வைக்க வேண்டும். அடுப்பு அருகில் வைத்தால் பிசுபிசுப்பு ஒட்டும். வாட்டர் ப்யூரிஃபையர் வைக்கும்போது, சிங்க் (தொட்டி) அருகிலேயே வைக்க வேண்டும். சமயங்களில் தண்ணீர் நிரம்பினால் சிங்க் வழியாக வெளியேற ஏதுவாக இருக்கும்.
வாட்டர் ப்யூரிஃபையர் வைக்கும்போது, சிங்க் (தொட்டி) அருகிலேயே வைக்க வேண்டும். சமயங்களில் தண்ணீர் நிரம்பினால் சிங்க் வழியாக வெளியேற ஏதுவாக இருக்கும்.
'சிலாப்’களாக இல்லாமல், மாடுலர் கிச்சன்களில் வரிசையாக பல 'டிரா’க்கள் வைத்திருப்பவர்கள், முதல் வரிசையில்... டீ, காபித்தூள், சர்க்கரை போன்ற... காலை எழுந்ததும் தேவைப்படும் பொருட்களை வைத்துக்கொள்ளலாம். இரண்டாவது அடுக்கில்... சாம்பார் பொடி, இட்லி மிளகாய்ப்பொடி, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மசாலா பொருட்கள்; மூன்றாவது அடுக்கில்... பருப்பு வகைகள்; நான்காவது அடுக்கில்... அஞ்சறைப் பெட்டி, அருகிலேயே காய்ந்த மிளகாய் என வைத்துக்கொள்ளலாம். மொச்சை, பட்டாணி போன்ற பயறு வகைகளை ஐந்தாவது அடுக்கில் வைக்கலாம். கடைசி அடுக்கில் அரிசி வகைகளை வைக்கலாம்.
அடுப்புக்கு வலப்புறம் எண்ணெய் கன்டெய் னர்களை வைக்கலாம். சந்தையில் இப்போது பலவிதமான 'ஹூக்’கள் கிடைக்கின்றன. அவற்றை சுவரில் மாட்டி, ஆயில் கன்டெய்னரை மாட்டிவிட்டால், கீழே சிலாப்பில் எண்ணெய் பசைபடும் என்கிற கவலை இல்லை. சுவரில் மாட்ட வசதியில்லை என்றால், சின்ன ஸ்டாண்டு வைத்து, அதில் தடிமனான அட்டை வைத்து, அதன் மீது எண்ணெய் கன்டெய்னரை வைத்துப் பயன்படுத்தலாம். அதை அடிக்கடி மாற்றிக்கொள்ளலாம்.
உப்பு ஜாடிகளில் இரண்டு பச்சை மிளகாய் போட்டு வைக்கலாம். வெறும் கையில் உப்பை எடுத்தால், உப்பில் நீர் கசியும். பச்சை மிளகாய் போட்டு வைத்தால் நீர் கசியாது. வாரம் ஒருமுறை அதனை மாற்றினால் போதுமானது.
துருவிய தேங்காயை காற்றுப்புகாத டப்பாவில் அடைத்து ஃப்ரிட்ஜில் பால் வைக்கும் டிரேயில் வைத்துவிட்டால், 15 நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.
'என் வீட்டு கிச்சனில் நான்தான் ராணி' என்ற நினைப்பு வரவேண்டும். அப்போதுதான் அதன் மீது உரிமையும், அக்கறையும், நன்றாகப் பராமரிக்க வேண்டும் என்ற ஆசையும் வரும்!
-அவள்விகடன்

தமிழ்நேசன்1981- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
Re: பலகார டிப்ஸ்!
கண்ணே அதிரசம் பண்ண ஆசையா!
''வீடே மணமணக்க அதிரசம் சுட்டு, சட்டியில இருந்து எடுக்கும்போதே ஒண்ணு, ரெண்டை கிண்ணத்துல வெச்சு வீட்டுல இருக்குறவுகளுக்கு சூடா கொடுத்துட்டு, அப்புறம் சுட்ட அதிரசத்தை எல்லாம் அண்டாவுல, கூடையில அடுக்கி, தீபாவளி அன்னிக்கு அக்கம்பக்கத்துக்கு கொடுத்துனு... அதிரசம் செய்றதே எங்களுக்கெல்லாம் தீபாவளிதானப்பு!'' என்று சொல்லும் தேனி மாவட்டம், போடியைச் சேர்ந்த கலைச்செல்வி ரமேஷ், தான் தயாரிக்கும் அதிரசங்களை வணிக ரீதியில் பல ஊர்களுக்கும் சப்ளை செய்துகொண்டிருக்கிறார்.
'ம்க்கும், நமக்கெல்லாம் வீட்டுக்கு அதிரசம் செய்யுறதுக்கே திணற வேண்டியிருக்கு. பத்து வருஷமா மெனக்கெட்டாலும், இந்த அதிரசம் பதம் மட்டும் பிடிபடவே மாட்டேங்குது' என்கிறீர்களா? கவலையை விடுங்கள்... கலைச்செல்வயின் கைப்பக்குவத்தைக் கவனியுங்கள்.
தேவையான பொருட்கள் (நான்கு நபர்களுக்கு அதிரசம் செய்ய):
பச்சரிசி - 750 கிராம், வெல்லம் - 500 கிராம், தண்ணீர் - 100 - 150 மில்லி, ஏலக்காய், சுக்கு, நெய் - சிறிதளவு, கடலை எண்ணெய் (அல்லது) ரீஃபைண்டு ஆயில் - ஒரு லிட்டர். (1 படி அல்லது ஒன்றரை கிலோ அரிசிக்கு, ஒரு கிலோ வெல்லம், 200 முதல் 250 மில்லி தண்ணீர் என்கிற கணக்கில் எடுத்துக்கொள்ளவும்).
பச்சரிசியை அலசி 20 நிமிடம் நன்றாக ஊறவைத்து, பின்னர் அரிசியில் ஈரப்பதம் இல்லாதவாறு பருத்தித் துணியில் கொட்டி உலர்த்தவும்.
நன்கு உலர்த்திய அரிசியை ரைஸ் மில்லில் கொடுத்து அதிரசத்துக்கு என்று குறிப்பிட்டுச் சொல்லி, அரைத்து வாங்கவும். அல்லது, வீட்டு உரல்/மிக்ஸி மூலமாக அரிசியில் 75% மாவாகவும், 25% குருணையாகவும் இருக்கும்படி இடித்துக்கொள்ளவும்.
அதிரசம் தயாரிப்பதில் முக்கியமான வேலை, பாகு காய்ச்சுவது. வெல்லத்தை நன்றாக இடித்து, சட்டியில் வைத்து, தண்ணீர் ஊற்றி, காய்ச்சவும். அடிபிடிக்காமல் இருக்க, தொடர்ந்து கிளறி விட்டுக்கொண்டே இருக்கவும். கம்பி பதம் வந்தவுடன் நிறுத்தவும் (பாகைக் காய்ச்சி, ஒரு துளியை தண்ணீர் இருக்கும் ஒரு பாத்திரத்தில் விழும்படி செய்தால், இலகுவாகவும் இல்லாமல், கெட்டியாக இல்லாமல் கம்பி போல நீண்டு விழுந்தால் கம்பி பாகு பதம்).
பொடித்த ஏலக்காய் மற்றும் சுக்கு சேர்க்கவும் (விருப்பத்துக்கு ஏற்ப).
காய்ச்சிய பாகு இளஞ்சூட்டில் இருக்கும்போது, இடித்து வைத்திருக்கும் அரிசி மாவை சிறிது சிறிதாகக் கலக்கவும். கலக்கும்போது கட்டி தட்டாமல் தொடர்ந்து கிளறிவிட்டுக்கொண்டே இருக்க வேண்டியது முக்கியம்.
இந்தப் பாகு, அரிசி மாவுக் கலவையை 7 - 8 மணி நேரம் அப்படியே ஊறவிடவும். இரண்டு நாட்கள் வரைகூட இது கெடாமல் இருக்கும்.
தயாரித்து வைத்திருக்கும் மாவு இறுகியிருக்கும் என்பதால், அதிரசம் செய்வதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன், சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கைகளால் கலந்துகொண்டால், அதிரசம் செய்ய எளிமையாக இருக்கும். கூடவே, லேசாக மாவையும் தூவிக் கலப்பது நல்லது.
இப்படிச் செய்யும்போது, கை படுவதாலும், தண்ணீர் சேர்ப்பதாலும் இந்த மாவை அன்றைக்கே அதிரசம் செய்யப் பயன்படுத்துவது அவசியம். இல்லையென்றால் மாவு அதிகமாகப் புளித்து வீணாகிவிடும்.
மாவை சிறிது எடுத்து உருட்டி, தட்டி, சட்டியில் நன்றாகக் காய்ந்த கடலை எண்ணெய் அல்லது ரீஃபைண்ட் ஆயிலில் விடவும். அப்படித் தட்டும்போது, நெய்/எண்ணெய் தடவிய வாழை இலை அல்லது கனமான பிளாஸ்டிக் கவரில் (ரீஃபைண்டு ஆயில் கவரை கட் செய்து, அதன் உட்புறம்) வைத்துத் தட்டினால், ஒட்டிக்கொள்ளாமல் வரும். வெந்த பதம் பார்த்து அதிரசத்தை எடுக்கவும்.
சுட்ட அதிரசங்களை எண்ணெய் வடியவிட்டு, பாத்திரத்தில் வைக்கவும்.
இவ்வாறு செய்யப்படும் அதிரசம் ஒரு வாரம் வரை மிருதுவாகவும், சுவையாகவும் இருக்கும்!
நன்றி- அவள்விகடன்

சுவையான பகிர்வு நேசன் நன்றி !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பலகார டிப்ஸ்!
அருமை.....எனக்கு மிகவும் பிடிக்கும்.
எங்கம்மா எண்ணையில் பொரிக்காமல் தோசைகல்லில் செய்வார்கள் ....
எங்கம்மா எண்ணையில் பொரிக்காமல் தோசைகல்லில் செய்வார்கள் ....
Re: பலகார டிப்ஸ்!
மேற்கோள் செய்த பதிவு: 1093578ராஜா wrote:அருமை.....எனக்கு மிகவும் பிடிக்கும்.
எங்கம்மா எண்ணையில் பொரிக்காமல் தோசைகல்லில் செய்வார்கள் ....
வாவ் ! நிஜமாகவா? சுவை எப்படி இருக்கும் ராஜா? .....நிஜமாகவே நல்லா இருக்கும்...........நான் கேட்பது பொறிப்பதற்கும் shallow fry என்று சொல்லப்படும் இதற்கும் வித்தியாசம் இருக்குமா?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பலகார டிப்ஸ்!
krishnaamma wrote:வாவ் ! நிஜமாகவா? சுவை எப்படி இருக்கும் ராஜா? .....நிஜமாகவே நல்லா இருக்கும்...........நான் கேட்பது பொறிப்பதற்கும் shallow fry என்று சொல்லப்படும் இதற்கும் வித்தியாசம் இருக்குமா?ராஜா wrote:அருமை.....எனக்கு மிகவும் பிடிக்கும்.
எங்கம்மா எண்ணையில் பொரிக்காமல் தோசைகல்லில் செய்வார்கள் ....
இப்படி தோசை கல்லில் செய்வதை கச்சுவத்தல் என்பார்கள் கிருஷ்ணாம்மா. மொறு, மொறுப்பான சுவையில் ஜோராக இருக்கும்.
நீங்கள் கேட்பது போல இரண்டிற்கும் உள்ள வித்தியாசம், அதிரசத்திற்கு செய்வது போல இதற்கு மெனக்கெட தேவையில்லை. (பாகு பதம் பார்க்கும் டென்ஷன் இல்லை) வைத்திருந்து சாப்பிடமுடியாது - அவ்வளவு தான்.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: பலகார டிப்ஸ்!
மேற்கோள் செய்த பதிவு: 1093632விமந்தனி wrote:krishnaamma wrote:வாவ் ! நிஜமாகவா? சுவை எப்படி இருக்கும் ராஜா? .....நிஜமாகவே நல்லா இருக்கும்...........நான் கேட்பது பொறிப்பதற்கும் shallow fry என்று சொல்லப்படும் இதற்கும் வித்தியாசம் இருக்குமா?ராஜா wrote:அருமை.....எனக்கு மிகவும் பிடிக்கும்.
எங்கம்மா எண்ணையில் பொரிக்காமல் தோசைகல்லில் செய்வார்கள் ....
இப்படி தோசை கல்லில் செய்வதை கச்சுவத்தல் என்பார்கள் கிருஷ்ணாம்மா. மொறு, மொறுப்பான சுவையில் ஜோராக இருக்கும்.
நீங்கள் கேட்பது போல இரண்டிற்கும் உள்ள வித்தியாசம், அதிரசத்திற்கு செய்வது போல இதற்கு மெனக்கெட தேவையில்லை. (பாகு பதம் பார்க்கும் டென்ஷன் இல்லை) வைத்திருந்து சாப்பிடமுடியாது - அவ்வளவு தான்.
இதனுடைய ரெசிப் என்ன விமந்தினி, சொல்லுங்களேன்......செய்து பார்க்கிறேன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கச்சுவத்தல்
புழுங்கல் அரிசி, கடலை பருப்பு - 3:1 என்ற விகிதத்தில் ஊறவைத்து கெட்டியாக அரைக்க வேண்டும். அரைவை பாதியாக இருக்கும் போதே தேவைக்கேற்ப வெல்லம் சேர்த்து அரைக்க வேண்டும். வெல்லம் சேர்த்திருப்பதால் மாவு இளகிவிடும். ஆகவே அதிகம் தண்ணீர் சேர்க்காமல் அரைத்தெடுத்து, சிட்டிகை உப்பு சேர்த்து, வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் குழி கரண்டியில் மாவு எடுத்து ஒவ்வொன்றாக எண்ணெயில் விட்டு எடுக்கவேண்டும்.
இதில் தேங்காய் துருவல், ஏலக்காய் என்று மேலும் இதன் சுவை கூட சேர்த்துக்கொள்ளலாம்.
மாவு புளிக்காத வரையிலும் எண்ணெய் இழுக்காது. மறுநாள் சாப்பிட மிக சுவையாக இருக்கும்.
தீபாவளி அன்று என் பாட்டி (அம்மா-வை பெற்றவர்) இதை மிக முக்கியமாக செய்வார்களாம்.
அப்போதே சாப்பிட, குழிவான தோசைக்கல்லில் ஊத்தாப்பம் போல் மாவை தேய்க்காமல் குண்டாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் விட்டு திருப்பி போட்டு எடுக்கவேண்டும்.
இதில் தேங்காய் துருவல், ஏலக்காய் என்று மேலும் இதன் சுவை கூட சேர்த்துக்கொள்ளலாம்.
மாவு புளிக்காத வரையிலும் எண்ணெய் இழுக்காது. மறுநாள் சாப்பிட மிக சுவையாக இருக்கும்.
தீபாவளி அன்று என் பாட்டி (அம்மா-வை பெற்றவர்) இதை மிக முக்கியமாக செய்வார்களாம்.
அப்போதே சாப்பிட, குழிவான தோசைக்கல்லில் ஊத்தாப்பம் போல் மாவை தேய்க்காமல் குண்டாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் விட்டு திருப்பி போட்டு எடுக்கவேண்டும்.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: பலகார டிப்ஸ்!
மேற்கோள் செய்த பதிவு: 1093919விமந்தனி wrote:புழுங்கல் அரிசி, கடலை பருப்பு - 3:1 என்ற விகிதத்தில் ஊறவைத்து கெட்டியாக அரைக்க வேண்டும். அரைவை பாதியாக இருக்கும் போதே தேவைக்கேற்ப வெல்லம் சேர்த்து அரைக்க வேண்டும். வெல்லம் சேர்த்திருப்பதால் மாவு இளகிவிடும். ஆகவே அதிகம் தண்ணீர் சேர்க்காமல் அரைத்தெடுத்து, சிட்டிகை உப்பு சேர்த்து, வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் குழி கரண்டியில் மாவு எடுத்து ஒவ்வொன்றாக எண்ணெயில் விட்டு எடுக்கவேண்டும்.
இதில் தேங்காய் துருவல், ஏலக்காய் என்று மேலும் இதன் சுவை கூட சேர்த்துக்கொள்ளலாம்.
மாவு புளிக்காத வரையிலும் எண்ணெய் இழுக்காது. மறுநாள் சாப்பிட மிக சுவையாக இருக்கும்.
தீபாவளி அன்று என் பாட்டி (அம்மா-வை பெற்றவர்) இதை மிக முக்கியமாக செய்வார்களாம்.
அப்போதே சாப்பிட, குழிவான தோசைக்கல்லில் ஊத்தாப்பம் போல் மாவை தேய்க்காமல் குண்டாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் விட்டு திருப்பி போட்டு எடுக்கவேண்டும்.
நன்றி விமந்தினி ஆனால் அதிரசத்துக்கு வெறும் அரிசி மட்டும் தான் , இதற்கு கடலை பருப்பும் போடவேண்டி இருக்கு ....இல்லையா?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 1 of 2 • 1, 2
Similar topics
» தீபாவளி பலகார, 'டிப்ஸ்'
» டிப்ஸ் டிப்ஸ் ( பயனுள்ள டிப்ஸ் :-)
» புதினா வாடாமல் தடுக்க... மிருதுவான சப்பாத்தி செய்ய... டிப்ஸ்.. டிப்ஸ்..! #VikatanPhotoCards
» நிமிடங்களில் தக்காளி தொக்கு செய்ய... வாழை இலை எளிதில் வாடுவதைத் தவிர்க்க... டிப்ஸ்.. டிப்ஸ்..! #VikatanPhotoCards
» சூப் செய்யும்போது -(டிப்ஸ்…டிப்ஸ்)

Permissions in this forum:
You cannot reply to topics in this forum