ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும் Empty ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்

Post by தமிழ்நேசன்1981 Tue Oct 07, 2014 4:35 am

ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... 01
சித்தமருத்துவர் கு.சிவராமன்
ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும் P28a
அஞ்சறைப்பெட்டி, அந்தக் கால மருத்துவ அறிவியல் நம் கலாசாரத்தோடு ஒட்டிவந்ததன் அடையாளம்! உடல் பற்றிய அறிவும், தாக்கும் நோயின் குறிகுணத்தையும் நம் மூத்தவர்கள் தெளிவாக அறிந்து, வரும்முன் காப்பதையும் உணவே மருந்து என உணவில் மெனக்கிடுவதையும் பண்பாடாக தலைமுறைகளுக்குக் கடத்தியிருந்தனர்.

கைப்பக்குவமான உணவைக்கொண்டும், தோட்டத்தில் எளிய செடி, கொடிகளைவைத்தும் அவர்கள் அன்று வைத்தியம் செய்த வித்தை, இன்று உலகெங்கும் பல மருத்துவ மற்றும் அறிவியலாளர்களால் பெரும் வியப்புடன் பார்க்கப்படுகிறது. இந்த நவீன யுகத்தில், இப்படிப்பட்ட அற்புதமான பாரம்பரிய மருத்துவ அறிவு மெள்ள மெள்ள மறைந்து வருகிறது.

அப்படி மறந்து மறைந்துபோன மருத்துவ அறிவை மீட்டெடுக்கும் ஒரு முயற்சியே, இந்தத் தொடர்.

பாரம்பரியத்தின் எச்சமான பாட்டியும், நவீனத்தின் உச்சமாக இருக்கும் பேத்தியும் நடத்தப்போகும் உரையாடலில் உங்களுக்கான மருத்துவத் தேடலும் கட்டாயம் கலந்திருக்கும்.

வாழையடி வாழையாய் வலம் வந்த, மறந்துபோன மருத்துவக் குறிப்புகள் இனி, உங்கள் வாரிசுகளுக்கும் வற்றாத ஆரோக்கியத்தைத் தரும்.

ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும் P28

''அலாவுதீனோட அற்புத விளக்கா பாட்டி இது? இந்தப் பழைய பெட்டியை இவ்வளவு பத்திரமா வெச்சிருக்கே,' என பாட்டி வைத்திருந்த பெட்டியைப் பார்த்து, பேத்தி கேட்டதும் பாட்டிக்கு முகமெல்லாம் பூரிப்பு.

''இந்தப் பெட்டியைப் பத்திக் கேக்க மாட்டியானு காத்திட்டிருந்தேன் செல்லம். இது நம்ம மண்ணோட அற்புத வரம். தலைமுறை தலைமுறையா நாம பாதுகாத்து வந்த நல்வாழ்வுப் பெட்டி.'

'சாப்பாடு தாளிக்கிற சமாசாரம் எல்லாம் வைச்சிருக்கிற பெட்டிதானே இது?'

'ம்ம்... வெறும் தாளிச்ச பொருட்கள் மட்டுமில்லே... அவசரத்துக்கு உதவும் கைமருந்து; அந்தக் கால ஃபர்ஸ்ட் எய்டு பாக்ஸ் இது.'

''ஓஹோ... அப்போ போன மாசம் பிடிச்ச சளியும் அடுக்குத் தும்மல் மூக்கடைப்பும் இன்னும் என்னைவிட்டுப் போக மாட்டேங்கிறது. உன் அஞ்சறைப்பெட்டி, எனக்கு வைத்தியம் சொல்லுமா பாட்டி?'

''பனிக் காலத்துல அடுக்குத் தும்மல் வர்றது... மூக்கடைச்சுப்போய் நீர் வழியறது... தலைவலி... முகமெல்லாம் அதப்பாய் வீக்கமா இருப்பது... இப்படி ஒண்ணா வர்ற எல்லாப் பிரச்னைகளுக்கும் அந்தக் காலத்துல 'பீனிசம்’னு சொல்வாங்க. இப்போ யாரைப் பார்த்தாலும், 'சைனஸ், சைனஸ்’னு சொல்றாங்களே... கிட்டத்தட்ட அதுதான் பீனிசம்.'

''பாட்டி, அது சைனஸ் இல்லை. சைனஸைட்டிஸ்; முக எலும்பில் உள்ள இயல்பான பதிவுக்கு சைனஸ்னு பெயர். அதுல அழற்சி வந்து நீரேற்றம் ஏற்பட்டு, சளி சேர்ந்து வதைப்பதுதான் சைனஸைட்டிஸ்.'

'சரி... அந்த சைனஸைட்டிஸ் வந்துட்டா... கொஞ்ச காலம் இனிப்பை மறந்திடணும். பால் கூடவே கூடாது. நீர்க் காய்கறிகளையும் தவிர்த்திடணும்.'

'அது என்ன நீர்க் காய்கறிகள் பாட்டி?'

''எந்தக் காயையெல்லாம் கத்தியால வெட்டறப்ப நீர் அதிகம் வருதோ, அதெல்லாம் நீர்க் காய்கறிகள்தான். சுரைக்காய், பூசணிக்காய், தடியங்காய், தக்காளி, பீர்க்கங்காய் இதையெல்லாம் அதிகம் சாப்பிடக் கூடாது. ஆசைப்பட்டு ஒரு வேளை சாப்பிட்டாலும், மிளகுத்தூள் தூவித்தான் சாப்பிடணும்.'

''அப்படின்னா, பால்லகூட மிளகு போட்டுச் சாப்பிடலாம்தானே பாட்டி?'

''ரொம்பவும் அவசியம்னு டாக்டர், பால் குடிக்கச் சொல்லியிருந்தா பரவாயில்லை. மத்தபடி தேவை இல்லைம்மா. அப்படி பால் சாப்பிடறபட்சத்துல அதில் மிளகு, மஞ்சள்தூள், பனங்கற்கண்டு போட்டுக் குடிக்கலாம். ஆனா, இன்னொரு விஷயம், அப்பக்கூட ராத்திரி, விடிகாலையில் சைனஸைட்டிஸ் தொந்தரவு இருக்கிறவங்க பால் சாப்பிடக் கூடாது.'

'சரி பாட்டி... உன் அஞ்சறைப் பெட்டியில இதுக்கு என்ன மருந்து வைச்சிருக்கே?'

''மிளகு இருக்கே...''

''சரி... நான் காலேஜ் போயிட்டு சாயங்காலம் வருவேனாம்... மிளகு பத்தி முழுத் தகவலும் சொல்லுவியாம்...'' என்று பாட்டிக்கு டாடா சொல்லிவிட்டுச் சென்றாள்.

- மருந்து மணக்கும்
-டாக்டர் விகடன்
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும் Empty Re: ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்

Post by தமிழ்நேசன்1981 Tue Oct 07, 2014 4:36 am

ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... 2
சித்தமருத்துவர் கு.சிவராமன்


ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும் P30
காலேஜ் முடிந்து வந்த பேத்தி ஷைலஜாவிடம், ''சூடா... தினை அரிசி உப்புமா செஞ்சுருக்கேன் ஷைலு... சாப்பிடுறியாம்மா?'' என்ற லட்சுமி பாட்டியின் விசாரிப்பைக் காதில் வாங்காத ஷைலு,

''தும்மலும் இருமலுமா என் ஃப்ரெண்ட் படுற அவஸ்தையைப் பார்க்க சகிக்கலை. இந்த மாதிரிப் பிரச்னைக்கு மிளகு நல்லதுன்னு சொன்னியே... நிஜமாவா பாட்டி? மிளகுக்கு அவ்வளவு சக்தி இருக்கா?'' என்று கேட்க... மிளகின் மகிமையை ஆரம்பித்தாள் பாட்டி.

''தென் அமெரிக்காவில் சிலி நாட்டில் இருந்து 'சில்லி’ வர்ற வரைக்கும் இந்த மிளகுதான் நம் உணவுக்குக் காரத்தைத் தந்தது. மிளகு மாதிரியே, சிலி நாட்டுக் காயும் காரச் சுவையைத் தந்ததால்தான் அதுக்கு மிளகாய் (மிளகு + ஆய்)னு நம்ம தமிழ்ப் பெரியவங்க பெயர் வெச்சாங்க. அந்த மிளகு சைனசைட்டிஸ் நோய்க்கு மூலகாரணமான, நம்ம உடம்பில் இருக்கிற பித்தத்தையும் கபத்தையும் சரியாக்கும் அற்புத மருந்து.

நல்ல மிளகைத் தயிரில் போட்டு தொடர்ந்து மூணு நாள் ஊறினதும், தயிர் வற்றும் வரை வெயில்ல வைச்சு எடுத்துக்கணும். அதுக்கு அப்புறம், தினம் தினம் துளசி, இஞ்சிச் சாறு, வேலிப்பருத்தி, தூதுவளைச் சாறுனு மிளகில் ஊற்றி வெயிலில் காயவைச்சு, நல்லா உலர்த்திக்கணும். இந்த மிளகைப் பொடிச்சு, ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டுவைக்கணும். ஒரு கால் ஸ்பூன் இப்படி பாவனம் செஞ்ச மிளகுப் பொடியைத் தேன்ல குழைச்சுக் கொடுக்க ஆரம்பிச்ச ரெண்டு, மூன்று நாள்லேயே சைனசைட்டிஸ் தும்மல் குறைஞ்சிடும். கூடவே சளி இருந்தால், அதுவும் வெளியேறி சுவாசம் சீராகும்.'

''சரி... நீ ஈஸியாச் சொல்லிட்ட... இந்த மூலிகைகளை எங்கே போய் வாங்குறதாம்?'

''இதை உன் ஷாப்பிங் மாலில் வாங்க முடியாது. ஈஸியா வெளியே கிடைக்கக் கூடியதுதான்.'

'சைனஸுக்கு வேற என்ன மூலிகை இருக்கு பாட்டி?'

'சீந்தில்-னு அருமையான மூலிகை ஒண்ணு இருக்கு. இதனோட தண்டை உலர்த்திப் பொடிச்சு சித்த மருத்துவர்கள் செஞ்சு தரும் சீந்தில் சூரணத்தை இரண்டு மண்டலம் வரை சாப்பிட்டால், மூக்கடைப்பு கட்டுப்படும். நோய் எதிர்ப்பாற்றலும் சீராகும். அதிகபட்சப் பித்தத்தைக் குறைச்சு, கபத்தை வெளியேத்தும்.'

'நான்கூட கேள்விப்பட்டு இருக்கேன். சைனசைட்டிஸுக்கு ஆங்கில மருத்துவம் சொல்லும் காரணம், தேவைக்கு அதிகமான நோய் எதிர்ப்பாற்றல் கட்டுப்பாடு இல்லாததுதான்னு சொல்வாங்க. அதை மட்டுப்படுத்திச் சீராக்கும் மருந்தைத்தான் அவங்களும் கொடுப்பாங்களாம்.'

'சீந்தில் தண்டு, சைனசைட்டிஸ் மட்டுமில்லாமல், பல நோய்களுக்கும் பலனளிக்கும். அந்தக் காலத்திலேயே சீந்தில், நெய், இன்னும் சில மூலிகைகளைச் சேர்த்து, ஒரு 'நேசல் டிராப்ஸ்’ பண்ணுவாங்க; சீந்தில் நெய்னு சொல்ற அந்த மூக்குத்துளி மருந்து, பின்னாளில் சைனசைட்டிஸே வராத அளவுக்குப் பலனளிக்குமாம்.'

''இந்த மூக்கடைப்புக்கு வேற என்ன பாட்டி செய்யலாம்?'

'நொச்சி இலையைப் போட்டு ஆவிபிடிக்கலாம். மஞ்சள், சுக்கு இன்னும் சில மூலிகைகளைப் போட்டுச் சித்த வைத்தியர்கள் செய்துதர்ற 'நீர்க்கோவை’ மாத்திரையை நீரில் குழைச்சு நெற்றி, மூக்குத்தண்டு மேல பத்துப் போடலாம்.''

''என் ஃப்ரெண்டுக்கு, தலைக்குக் குளிச்சாலே மூக்கடைப்பு வருது; தலைவலி, சில சமயம் காய்ச்சல்கூட வருதாமே?'

''ஒண்ணு தெரியுமா... தலைக்குக் குளிக்கிற பழக்கம் குறையுறதுதான் இந்த நோய் தலைவிரிச்சு ஆடுறதுக்கு முக்கியக் காரணம். தினசரி தலைக்குக் குளிச்சிட்டுவந்தால் மூக்கடைப்பு நிரந்தரத் தொல்லையாய் மாறாது. ஆனா, ரொம்பத் தீவிரமா மூக்கடைப்பு, காய்ச்சல், பச்சையாய்ச் சளி இருக்கிறப்ப தலைக்குக் குளிக்கக் கூடாது. வாரம் ரெண்டு நாள் மட்டும், சுக்குத் தைலம், நொச்சித் தைலம், பீனிசத் தைலம்னு சித்த மருத்துவர்கள் சொல்லும் தைலத்தை வாங்கி, முதல்ல சில மாசங்கள் தலைக்குத் தேய்ச்சுக் குளிக்கச் சொல்லு. பீனிச நோயும் சரியாகும். சில மாசத்துக்கு அப்புறம் இந்தத் தைல உதவி இல்லாமல் எப்போதுமே அவள் தலைக்குக் குளிக்கலாம்.'

'சூப்பர் பாட்டி... உனக்கு மிளகைத்தான் சுத்திப்போடணும். என் ஃப்ரெண்ட்கிட்ட முதல்ல போய்ச் சொல்லிட்டு வந்து உன் உப்புமாவை ஒரு கை பார்க்கிறேன்'' என்று விரைந்தாள்.

(மருந்து மணக்கும்...)
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும் Empty Re: ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்

Post by தமிழ்நேசன்1981 Tue Oct 07, 2014 4:37 am

ஆறு சுவையும் அஞ்சறைப் பெட்டியும்.. 3
சித்தமருத்துவர் கு.சிவராமன்


ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும் P32
''உன் கைவைத்தியத்தில் எனக்கும், என் ஃப்ரெண்டுக்கும் இருந்த மூக்கடைப்பு, தும்மல் காணாமப்போச்சு! உன் வைத்தியம் சூப்பர் பாட்டி.' ''ஹலோ... மாடர்ன் பேத்தி, உடனே ஐஸ்கிரீம், மில்க்ஷேக்னு கிளம்பிடாதீங்க. என்னதான் கைவைத்தியம் செய்துக்கிட்டாலும், கூடவே உணவுக் கட்டுப்பாடும் கண்டிப்பா இருக்கணும். பால், இனிப்பு, நீர்க் காய்கறி, ஐஸ்கிரீம், மில்க்‌ஷேக், பன்னீர் இதெல்லாம் கொஞ்ச நாளைக்கு வேணாம்.'

''ஓகே ஓகே... ஆமா, என்ன அடுக்களைக்குள்ள சீரகம் வாசனை தூக்குது? ஏதாச்சும் வறுத்துட்டு இருக்கியா?'

''உன் அண்ணனுக்கு ஒரே கேஸ் ட்ரபிள். எப்பப் பாரு, வயிறு வீங்கின மாதிரியே இருக்குனு முனகிட்டே இருக்கான். அதுக்கு சீரகத்தண்ணீர் காய்ச்சப்போறேன்.''

''அட! டிரடிஷனல் மினரல் வாட்டரா?'

''மினரல் வாட்டர் இல்லைடி... மெடிக்கல் வாட்டர். சீரகத்தை 4 ஸ்பூன் எடுத்து, கடாயில் போட்டு, பொன்னிறமா வறுபட்டதும், 2 லிட்டர் தண்ணீரை விட்டுக் காய்ச்சணும். தண்ணீர் தங்கக் கலரா மாறி, சீரகம் மிதந்து வந்ததும் இறக்கிடணும். சாப்பிட்ட உடனே, சீரகத் தண்ணீர் கொஞ்சம் இளஞ்சூடா இருக்கும்போதே குடிக்கணும். சாப்பிட்டதும் நடக்கக்கூட முடியாம, வயிறு ரொம்பவே பருத்து திம்முனு வரும் ஆளுங்களுக்குச் சட்டுனு கேட்கும். அதோட, சாப்பிட்டு முடிக்கிறப்பவே, மோர்ல கொஞ்சம் ஒரு சிட்டிகை பெருங்காயம், சீரகத்தூள் சேர்த்துக் குடிக்கணும். மோர் நேச்சுரல் ஆன்ட்டாசிட். வயித்துப்புண்ணை ஆற்றும். பெருங்காயம் ஒரு கார்மனேட்டிவ். வாயுவை வெளியேற்றும். சீரகம், பெயருக்கேத்த மாதிரி பித்தத்தை நீக்கி அகத்தை சீர்படுத்தும். தெரியுமா?''

''ஹைய்யோ... நீ டாக்டருக்கு எங்க படிச்ச பாட்டி?'

''எல்லாம் எங்க அம்மாக்கிட்டதான். அப்பல்லாம் எங்க அம்மா, மாமியார் எல்லோருமே அவங்க அம்மா, அவங்க பாட்டி மூலமா வழி வழியாத் தெரிஞ்சு வெச்சுக்கிட்டு, அவங்க பிள்ளைங்களுக்கும் பழக்கப்படுத்திடுவாங்க. அஞ்சறைப் பெட்டியே, நோய்களை விரட்டும் முதலுதவிப் பெட்டியாதான் இருந்தது. அப்படி... காலம் காலமா வந்த அறிவுதான் இது. உன்னை மாதிரி காலேஜ் படிக்கிற பொண்ணுங்கதான், இருவத்தி நாலு மணி நேரமும் செல்போன் கையுமால இருக்கீங்க...'

''ஓகே பாட்டி... இனிமே தெனமும் உங்கிட்டதான் ஹெல்த் ரெசிப்பி டியூஷன் எடுத்துக்கப்போறேன். அந்தச் சீரகத்தை, தண்ணியா மட்டுமில்லாம, வேற என்ன மாதிரியா சாப்பிடலாம்..?'

''ஒரு லிட்டர் நல்லெண்ணெயில் 35 கிராம் சீரகத்தைப் போட்டுக் காய்ச்சி, சீரகம் மிதந்து வர்றப்ப, இறக்கிவைச்சிடணும். வாரம் தோறும் இந்த எண்ணெயைத் தலைக்குத் தேய்ச்சிக் குளிச்சேன்னா, மயக்கம், தலைசுற்றல்கூட போகும். நீ அழகுக்காக வளர்க்கிறியே கற்றாழைச் செடி, அந்த ஜெல்லை 150 கிராம் அளவுக்கு எடுத்துக் கழுவிக்கணும். 200 கிராம் சீரகத்தை நல்லா வறுத்துப் பொடிச்சுக்கணும். 150 கிராம் பனைவெல்லத்துல, தேவையான அளவு நீர் விட்டு, பால் சேர்த்து, பாகு மாதிரி காய்ச்சி அதுல கற்றாழைச் சாறு, சீரகத்தூள் எல்லாம் போட்டு, நீர் நல்லா வத்தினதும் லேகியமாகக் கிளறிக்கணும். தினமும் ராத்திரியில் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வந்தால், மலக்கட்டு போகும். ஃபிஷர் எனும் ஆசனவாய் வெடிப்பில் வர்ற எரிச்சலும் சரியாகும். உடல் சூட்டைக் குறைச்சிக் குளிர்ச்சியாக்கிடும்.

நாம சாப்பிடற எல்லா உணவுலேயும் சீரகம் கொஞ்சம் சேர்க்கலாம். அட்டகாசமான அதோட வாசத்துக்கே, பல நோய்கள் கிட்ட நெருங்காது. அதிகப் பித்தத்துல வர்ற தலைவலி, ரத்தக் கொதிப்புக்கும் இது சூப்பர் மருந்து. 2 நாள் கரும்புச் சாறு, அடுத்த 2 நாள் இஞ்சிச் சாறு அதற்கடுத்த ஐந்தாவது ஆறாவது நாள் எலுமிச்சைச் சாறுனு சீரகத்துல ஊத்தி, அதை வெயில்ல காயவைச்சு எடுத்துக்கணும். இதெல்லாமே ஃப்ரெஷ் சாறா இருக்கணும். அப்படிச் செய்த சீரகப் பாவனத்தை, தினமும் அரை ஸ்பூன் சாப்பிட்டால், கொஞ்சம் கொஞ்சமா ரத்தக் கொதிப்பு கட்டுப்பாட்டுல வந்திடும்.'

''அப்டீன்னா, அப்பாவுக்கு இதைக் குடுத்திடலாமே? மருந்தே வேண்டாமே பாட்டி?''

''போடி அவசரக் குடுக்கை... உன் அப்பா, டாக்டர் சொல்லியிருக்கிற மருந்தோட இதையும் சேர்த்துச் சாப்பிட ஆரம்பிச்சா, கொஞ்சம் கொஞ்சமா நல்லா கட்டுப்பாட்டுக்கு வந்திடும். உங்க அப்பாவுக்கு ரத்தக் கொதிப்பு கட்டுப்படணும்னா மருந்து, சீரகப்பாவனம் மட்டும் பத்தாதுடி. நீ ஒழுங்காப் படிக்கணும். உங்க அண்ணன் வேலையில நல்ல பெயர் வாங்கணும். அப்பாவோட ஆபீஸ் டென்ஷன் குறையணும். உன் அப்பன் தினம் வாக்கிங் போகணும். ராத்திரியில் 6 மணி நேரமாவது தூங்கணும். இதெல்லாம் செஞ்சாத்தான்... சீரகமும் சீக்கிரம் வேலை செய்யும். கொதிப்பும் குறையும்.'

''பாட்டி... இனிமேல், உனக்கு சேலை கிடையாது. டாக்டர் கோட்தான் வாங்கித்தரப் போறேன்... சும்மா அசத்துறியே!''

- மருந்து மணக்கும்!
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும் Empty Re: ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்

Post by தமிழ்நேசன்1981 Tue Oct 07, 2014 4:38 am

ஆறு சுவையும் அஞ்சறைப் பெட்டியும் - 4
சளி இருமலுக்கு ஸ்பெஷல் காபி!
சித்த மருத்துவர் கு.சிவராமன்

ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும் P24a
'ஹலோ டாக்டர் பாட்டி! குட்மார்னிங்.. காலையிலேயே கிச்சன்ல என்ன செய்றீங்க?'

''ம்ம். ராத்திரியெல்லாம் உன் அண்ணன் லொக்லொக்குனு இருமிட்டு இருந்தான்... அதுதான் அவனுக்கு 'ஸ்பெஷல் காபி’ போடுறேன் செல்லம்'

'ஸ்பெஷல் காபியா? கூர்க்கில் விளையுதா?'

'ம்ம்... நம்ம வீட்டுத் தோட்டத்தில்தான். இந்த நாட்டுக்கு காபி வந்து 200 வருஷம் ஆயிடுச்சு. அதுக்கு முன்னால் நாம அவங்கவங்க வேலைக்கு ஏத்தமாதிரி 'கஸ்டம் மேட்’ காபிதான் குடிச்சோம்? அந்த ஸ்பெஷல் காபியைத்தான் உங்க அண்ணனுக்கு செஞ்சுட்டு இருக்கேன்...'

'அய்யய்யோ... கஷாயமா பாட்டி?'

'என்ன, 'அய்யய்யோ கஷாயம்?’ நீ உறிஞ்சிக் குடிக்கிற ரசமும் கஷாயம்தான். நீ காலேஜ்ல அரட்டை அடிச்சிட்டே குடிக்கிற டீயும் கஷாயம்தான். எந்த ஒரு தாவரத்தோட நல்ல மருத்துவ குணங்களையும் உடனடியா எடுக்கிற வழி கஷாயம்தான். 'Aqueous decoction’ ன்னு இன்னைக்கு அறிவியல் சொல்றதை, நம்ம முப்பாட்டன் என்னைக்கோ செஞ்சிருக்காங்க தெரியுமா?'

'ஓ... பிரமாதமா மணக்குது இந்த ஸ்பெஷல் காபி..? அப்படி இதுல என்னல்லாம் சேர்த்திருக்கே?'

'வீட்டுக்குப் பின்னால வளர்ற துளசி, கற்பூரவல்லி, தூதுவளைக் கொடி கூடவே, நம்ம வீட்டு சமையல் அறையில் எப்பவும் வெச்சிருக்கிற அதிமதுரம், அரத்தை, மிளகு, பனை வெல்லம்... இதுதான். சளி, இருமல் சட்டுனு போக்கிடும். துளசி, அரத்தையோட வாசமும், கற்பூரவல்லி, மிளகோட காரமும், பனை வெல்லத்தோட சுவையும் சேர்த்துத்தான் இந்த காலை ஸ்பெஷல் பானத்தைத் தயாரிக்கணும். மிளகை ஒன்று ரெண்டாப் பொடிச்சுக்கணும். இதுகூட இலையையெல்லாம் சுத்தமாக் கழுவி, சின்னத் துண்டா நறுக்கிச் சேர்க்கணும். அதிமதுரம், அரத்தையை நீளவாக்கில் நல்லா நசுக்கியும் போடணும்.

''என்ன அளவுல சேர்க்கணும் பாட்டி?''

''இலையெல்லாம் ஒரு கைப்பிடி, அரத்தை, அதிமதுரம் சேர்த்து ஒரு கைப்பிடி, மிளகு ஒரு ஸ்பூன் போட்டு, ரெண்டு டம்ளர் தண்ணீர் வீட்டு, ஒரு டம்ளரா வத்தினதும், கடைசியாக ஒரு ஸ்பூன் பனை வெல்லம் போட்டு சூட்டோட ஆத்திக் குடிக்கணும்.'

'வாவ்... 'இருமலுக்கு சித்தரத்தை.. இதயத்துக்கு செம்பரத்தை’ன்னு முன்னாடி ஒரு ஹைக்கூ கவிதை சொல்லுவியே.. அந்த சித்தரத்தை தானே!'

'ஆமாம்டீ... சித்தரத்தை இருமல் போக்கும். அதிமதுரம் வறட்டு இருமலைத் தணிச்சு, தொண்டையை இதமாக்கும். இருமலுக்கு பின்னாடி, வைரஸ் சேட்டை பண்ணிச்சுன்னா துளசி, அதைக் கட்டுப்படுத்தும். கற்பூரவல்லி தொண்டைப்பகுதியில் உட்கார்ந்துக்கிட்டு, சேட்டை பண்ற பாக்டீரியாவைத் துரத்தும். மிளகு, நம்ம எல்லை ராணுவம் மாதிரி. நோய் எதிர்ப்பாற்றலைக் கொடுக்கும். மொத்தத்துல இந்த காம்பினேஷன் சளி, இருமல் போக்கும் சகலகலாவல்லவன். ரெண்டு வேளை குடிச்சா, மூணே நாள்ல சளி, இருமலையும் போக்கும் இந்த மருந்து.'

'சூப்பர் பாட்டி. எதிர் வீட்டு அக்கா பையன் மூக்கு ஒழுகிட்டு, இருமிக்கிட்டே இருக்கானே... அவனுக்கும் இதைக் குடுக்கலாமா?'

'நேத்தே ரெசிபியை அவகிட்ட சொல்லிட்டேன். ஆனால், அந்த குட்டிப் பயல் கொஞ்ச நாளா மெலிஞ்சிட்டே வர்ற மாதிரி இருக்கு. பிரைமரி காம்ப்ளக்ஸா இருக்குமோனு தோணுது. அதான் குடும்ப டாக்டரை ஒரு எட்டு பார்த்துட்டு வரச் சொல்லியிருக்கேன். குழந்தைங்களுக்கு வருஷத்துக்கு 23 தடவை சளி இருமல் வந்தா பயப்பட வேண்டியதில்லை. ஆனா, மாசம் முழுக்க இருந்தா பிரைமரி காம்ப்ளக்ஸ் இருக்குதானு பார்க்கணும். நிறைய குழந்தைங்களுக்கு சரியா அதைச் சோதிக்காம விட்டுடறாங்க!

'ரொம்ப அப்டேட்டடா இருக்கியே பாட்டி. இந்தப் பிரச்னைக்கு மருந்தோட நாம என்னல்லாம் செய்யணும்?'

''ஆறு மாசம், ஒன்பது மாசம்னு டாக்டர் தர்ற மருந்தோட, குழந்தையோட நோய் எதிர்ப்பாற்றலுக்கு சத்தான உணவும் கொடுக்கணும். வாரம் மூணு நாள் காலையில் சத்துமாவுக் கஞ்சி தரணும். வாரம் ரெண்டு நாள் இரவு, மிளகு ரசம் கொடுக்கணும். மதிய சாப்பாட்டுல தூதுவளை ரசம், மணத்தக்காளி வற்றலும் செஞ்சு கொடுக்கணும். தினம் மாலை நேரத்துல வாழைப்பழம், அப்பப்ப நிலக்கடலை மிட்டாய், பொட்டுக்கடலை, காய்ந்த திராட்சை, தேங்காய்ப்பூ கலந்து, நொறுக்குத்தீனியாக் கொடுக்கணும். வாரத்துக்கு ரெண்டு நாள், ஒரு ஸ்பூன் தேனை எடுத்து, அதில் அஞ்சு மிளகைப் பொடிச்சுப் போட்டு, லேசாகச் சூடு செய்து, ஒரு சங்கு வெந்நீரில் கலந்து இளஞ்சூட்டுடன் குழந்தைக்கு இரவு வேளையில் கொடுக்கணும்.'

''இருமல், சளிக்கு கைகண்ட மருந்துன்னா, அது என் பாட்டி வைத்தியம்தான்!''

(மருந்து மணக்கும்...)
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும் Empty Re: ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்

Post by தமிழ்நேசன்1981 Tue Oct 07, 2014 4:39 am

ஆறு சுவையும் அஞ்சறைப் பெட்டியும் - 5
மாதவிடாய் வலிக்கு வீட்டிலேயே பெயின் கில்லர்!
சித்தமருத்துவர் கு.சிவராமன்

ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும் P38a
'ஷைலு... ஷைலூ... மணி ஏழாகுது... இன்னும் என்ன தூக்கம்? காலேஜுக்குப் போகவேண்டாமா?'

'ம்... ரொம்ப வயித்த வலி... பாட்டி... பீரியட்ஸ் டைம்...'

'அடக் கழுதை... இந்த மாதவிடாய் வலிக்குப் போய் லீவு போடுவியா? எழுந்திரு... நிமிஷத்துல உனக்கு மருந்து எடுத்திட்டு வர்றேன்' என்ற லட்சுமிப் பாட்டியின் கையைப் பிடித்து இழுத்த ஷைலு,

'கிச்சன்ல போய் 'பெயின் கில்லர்’ தயாரிக்கப் போறியா?'

'இது வலியைக் கொல்லும் மாத்திரை இல்லடி பொண்ணே.. வலிக்குக் காரணமான சூதக வாயுவைச் சரிப்படுத்தும் மருந்து. வலி நிவாரணிகள் மாதிரி நெஞ்செரிச்சல், அசிடிட்டி எல்லாம் வராது. அது இருந்தாலும்கூட ஓடிப்போயிடும்' என்று சொல்லிக் கொண்டு தன் அஞ்சறைப்பெட்டியை எடுக்கச் சென்றாள் பாட்டி லட்சுமி.

'அப்படி என்ன நல்ல மருந்து அது? சொல்லேன்'

'ம்ம்... ஒரு ஸ்பூன் கருஞ்சீரகம், ஒரு ஸ்பூன் வெந்தயம், ஒரு ஸ்பூன் பெருஞ்சீரகம் மூணையும் வறுத்துப் பொடிச்சுக்கணும். இதுகூட ஒரு ஸ்பூன் பனை வெல்லப் பொடியைப் போட்டுக் கலந்துக்கணும். இந்தப் பொடியை அரை ஸ்பூன் எடுத்து ரெண்டு வேளை ரெண்டு நாள் சாப்பிட்டு வந்தா அந்த நாளின் வலி எந்த நாளும் வராது.' என்றபடியே, பொடியை நீட்ட, வாயில் போட்ட ஷைலு,

'ஆஹா... நிஜமாவே மணமா, ருசியாதான் இருக்கு. சூப்பர்!'

'இதே பெருஞ்சீரகத்தை, தனியாவையும் சேர்த்து ஒன்றிரண்டாய் இடிச்சு, கஷாயம் போட்டுக் குடிச்சாலும் இந்த வலி போகும். கர்ப்பிணிகளுக்கு எட்டாம் மாசம், ஒன்பதாம் மாசத்துல வர்ற வாயு, அடிவயித்து வலிக்கும் இந்த கஷாயத்தை மருந்தாக் கொடுக்கலாம்.'

'சரி நான் ரெடியாயிடறேன். இன்னிக்கு என்ன மெனு?'

'மாதவிடாய் கால ஸ்பெஷல்தான். உன்னோட டேட் எனக்கு மனப்பாடமா தெரியும். அதனால் ஏற்கனவே செஞ்சு வெச்சாச்சு. உளுந்தஞ்சோறு, எள்ளுத் துவையல். ஸ்நாக்ஸ்க்கு பப்பாளித் துண்டுகள்'

'உளுந்தஞ்சோறு எள்ளுத் துவையல் காம்போ அட்டகாசம்... இப்படி ஒரு காம்பினேஷனை யாரு பாட்டி கண்டுபிடிச்சது?'

'இன்னைக்கு நேத்திக்கு இல்ல.. 2000 வருஷமா இதுதான் நம்ம ஊரு காம்போ கிளாசிக் உணவு. கருப்பு நிற தொலியோட இருக்கிற உளுந்து கருப்பையைப் பலப்படுத்தும். இதுல 'பாலிபீனால்’னு ஒண்ணு இருக்கு. அது நல்ல ஆன்ட்டிஆக்சிடன்ட். அப்புறம் உளுந்து, பெண்களுக்குத் தேவையான ஃபைட்டோ ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனைத் தர்ற புரதமும் இருக்காம்.'

''சத்துக்களைப் பத்தி சரளமா சொல்றீயே... எங்க படிச்ச...?''

''கூகுள்லதான் சர்ச் பண்ணேன்...''

'அசத்திட்ட... இனிமேல் நீ குடுகுடு பாட்டி இல்ல... கூகுள் பாட்டி. ஒரு சந்தேகம்... அண்ணா இதைச் சாப்பிட்டா அவனுக்கு பீரியட் பிரச்னை வந்துடாதா பாட்டி?'

'உன் குசும்புக்கு அளவே இல்லை. இது ஹார்மோன் மாத்திரை போட்டுச் செய்யுற குழம்பு இல்லை. நம் சித்த மருந்தோட சிறப்பு. உன் அண்ணன் ஜிம்முக்குப் போய் டப்பால புரதப்பொடி வாங்கிட்டு வர்றானே... அதைக் காட்டிலும் இந்த உளுந்தங் கஞ்சி பலமடங்கு சத்து. தசையை வலுவாக்கும்.'

'இளைச்சவனுக்கு எள்ளு; கொழுத்தவனுக்கு கொள்ளுன்னு சொல்லுவாங்களே. அப்போ எனக்கு எள்ளுத் துவையலும், அண்ணனுக்கு கொள்ளுத் துவையலுமா பாட்டி...'

'உனக்கு ரொம்பவே லொள்ளு... அவன் காதுல மட்டும் விழுந்ததா 'வள்’ளுன்னு விழுவான். இளைப்புக்கு மட்டுமல்ல, ரத்த சோகைக்கும் எள்ளு பிரமாதமான உணவு. எள்ளுல இரும்புச் சத்தும், கால்சியம் நார்ச்சத்தும்னு சத்துக்கள் நிறைய இருக்கு. மூட்டு வலி, வயிற்று வலியையும் போக்கும். இதுல இருக்கிற தாமிர (காப்பர்) சத்து, ரத்த நாளங்களுக்கும் நுரையீரலுக்கும் நல்லது செய்யும். மெக்னீசிய சத்து, எலும்பை வலுப்படுத்தி, எதிர்ப்பாற்றலை வளர்க்கும். மாதவிடாய் சமயத்துல உடல் சோர்வு, காலில் கிராம்ப்ஸ், வயித்து வலி... எல்லாத்துக்குமே எள்ளுத்துவையல் சூப்பர் மருந்துடீ!'

'யாரு பாட்டி உனக்கு இதெல்லாம் சொல்லிக் கொடுத்தா?' என்றபடியே ஷைலஜா கைகளைக் கழுவ,

'ம்ம்.. எங்க பாட்டியோட பாட்டிக்கும்... பாட்டிகிட்ட இருந்து இப்போ பாட்டனி வாத்தியாருக்கும் சித்த வைத்தியருக்கும் போன விஷயம் பேத்திகளுக்குப் போக மாட்டேங்குதே...'

'உன்கிட்ட பேசிப் பேசியே, எல்லாத்தையும் கத்துக்கிட்டுக் கலக்கப் போறேன்... தாங்க்ஸ் லக்ஸ்... பாட்ஸ்.. வயித்து வலி போயே போச். சாப்பாடும் அமிர்தம்... காலேஜுக்குப் போயிட்டு வர்றேன் பை...'

- மருந்து மணக்கும்.
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும் Empty Re: ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்

Post by ayyasamy ram Tue Oct 07, 2014 6:45 am

ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும் 103459460
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும் Empty Re: ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்

Post by தமிழ்நேசன்1981 Tue Oct 07, 2014 9:20 pm

ஆறு சுவையும் அஞ்சறைப் பெட்டியும் - 6
தோசை மாவில்... தோல் சுருக்கம் மறையும்
சித்த மருத்துவர் கு.சிவராமன்


''என்ன ஷைலு... கால்ல வெந்நீரைக் கொட்டின மாதிரி இப்படி ஓடிட்டே இருக்கியே... பாட்டிகிட்ட பேசப் பிடிக்கலையா..?''

''அய்யோ பாட்டி ஒரு வாரமா எக்ஸாம். அதான் பிஸியாத் திரிஞ்சேன். ஆனா, நீ செஞ்சு தந்த கை மருந்தால பீரிய்ட்ஸ் வலி மிரண்டு ஓடிடுச்சு... ரொம்ப தேங்க்ஸ் பாட்டி.''

''உனக்கு, கைப்பக்குவமா குமரிகளுக்கான லேகியம் ஒண்ணு கிளறிவெச்சிருக்கேன்.''

''என்னது குமரிக்கான லேகியமா... எதுக்கு பாட்டி?''

''மாதவிடாய் வலி தொடர்ந்து வராம இருக்கணும்ல? அதுக்குத்தான். நம்ம புறவாசல் பக்கம் தொட்டியில் வளர்ற சோற்றுக் கற்றாழை மடலுக்குள் இருந்து ஜெல்லை எடுத்து நல்லாப் பிசுபிசுப்பு போகக் கழுவிட்டு, அதில் சீரகம், பூண்டு, பனைவெல்லம் சேர்த்து லேகியமாக் கிளறிக்கணும். இந்த லேகியத்தை தினம் ஒரு ஸ்பூன் ராத்திரி சாப்பிட்டு வந்தா, அடுத்த பீரியட்ஸ் நேரத்துல வலி எடுக்குமோங்கிற பயமே இனி வேண்டாம்.''

''இந்தக் காலத்துல நாங்க அழகுக்காக பூசுற கற்றாழையை, நீங்க அந்தக் காலத்துல ஆரோக்கியத்துக்குப் பயன்படுத்தி இருக்கீங்க... சரிதானே பாட்டி.''

''அப்பல்லாம் வீடுதான் எங்களுக்கு பியூட்டி பார்லர். கத்தாழை மட்டுமில்ல, அழகுக்கு நிறையவே ரெசிப்பிகள் கைவசம் இருக்கு ஷைலு. வறண்டு போன சருமத்துக்கு, தொடர்ந்து கற்றாழைச் சாறைத் தேய்ச்சிட்டு வந்தா, வறண்ட தோலை வனப்பா மாத்திடும். கால் பித்த வெடிப்பில் தொடங்கி, கரப்பான் நோய் வரைக்கும் தோல் கருத்துத் தடிச்சு வறண்டு போயிருந்தாலும், கற்றாழைச் சோற்றை அதன் மேல் தேய்ச்சுட்டு வந்தா, பழைய நிறத்தை மீட்டுக் கொடுக்கும்.'

''இப்போ பெஸ்ட் சன் ஸ்கிரீனே கற்றாழைதான்னு கண்டு பிடிச்சிருக்காங்க. நிறைய எஸ்.பி.எஃப் (SPF) உள்ள சன் ஸ்கிரீனர் போடக் கூடாதாம். சோற்றுக் கற்றாழை ரொம்ப மென்மையான தீங்கு செய்யாத சன் ஸ்கிரீனாம்.'

''சூரிய வெளிச்சம் படுறதே பல நோய்கள் வராமத் தடுக்கத்தான். ஆனா, நீங்க அதுக்குப் போய் ஸ்கிரீன் போடுறீங்களே. அன்னைக்கு காலங்காத்தால கதகளி வேஷம் கட்டினவ மாதிரி நீ முகம் முழுதும் கிரீமைப் பூசிட்டு நின்னியே..?''

''ஓ... அது ஃபேஷியல் பாட்டி! ஃப்ரான்ஸ்ல இருந்து என் ஃப்ரெண்ட் வாங்கிட்டு வந்தா.''

''ஃபேஷியலை ஃப்ரான்ஸ்லருந்துதான் வரவழைக்கணுமா என்ன? கொஞ்சம் ரோஜா இதழ், திருநீற்றுப்பச்சிலை, ஆவாரம் பூ இதை எல்லாம் சேர்த்து ஒரு பங்கும், அதுக்கு சமபங்கு முல்தானி மட்டியும் சேர்த்து நல்லா மாவா அரைச்சுக்கணும். இந்த மாவில் அரை ஸ்பூன் எடுத்து ரோஸ் வாட்டர் இல்லேன்னா மோரில் கலந்து முகத்தில் பூசணும். நல்லாக் கெட்டியாப் பிடிச்சுக்கும். அப்புறம் அரை மணி நேரம் கழிச்சுக் கழுவினா, முகம் என் முகம் மாதிரி பளீர்னு இருக்கும்.''

''என்னது... உன் முகம் மாதிரியா?'

''ம்ம். எனக்கு என்ன குறைச்சல்? எங்கனாச்சும் என் முகத்துல சுருக்கம் தெரியுதானு சொல்லு?'
ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும் P32b
''ஓல்டு இஸ் ஆல்வேஸ் கோல்டுதான் பாட்டி. சரி, முகத்துல இருக்கிற இறந்த செல்களை நீக்கி பளிச்னு வைக்க உன் அஞ்சறைப்பெட்டியில் ஏதாவது இருக்கா?''

''அஞ்சறைப்பெட்டி எதுக்கு? அடுப்பங்கரைக்குள்ள போனாலே போதும். இறந்த செல்லைப் போக்கற 'ஸ்க்ரப்’ நம்ம தோசை மாவுதான் தெரிஞ்சுக்கோ!'

''தோசை மாவா?'

''ஆமா. தோசை மாவுல இருக்கிற குருணைத்தன்மையும், அதில் உள்ள புளிப்பு தரும் நுண்ணுயிரியும் சேர்ந்து கழிவை நீக்கி பொலிவாக்கும் புரோபயாட்டிக். இந்த மாவைப் பூசி கொஞ்சம் நேரம் கழிச்சுக் கழுவினா, ஃப்ரெஷ் பூ மாதிரி முகம் ஜொலிக்கும்.''

''அய்யோ... என்ன சிம்பிள் ஸ்க்ரப். இன்னிக்கு காலேஜ்ல இதுதான் ஹாட் டாப்பிக்.'

''ரெண்டு நாள் முன்னாடி, நான் போன பஸ்ல ஒரு அழகான பெண்ணும் வந்தா. ரொம்ப அழகா இருந்தா. ஆனா, உதட்டுக்கு மேல நிறைய முடி. மீசை மாதிரி, ஆம்பளைத்தனமா இருந்தது. வாயைப் பொத்திக்காத குறையா மூடிட்டே வந்தா. பார்க்கவே ரொம்ப கஷ்டமா இருந்துச்சு பாட்டி. அதுக்கு வைத்தியம் இருக்கா?''

''ஆசை... தோசை... மீசை...! எப்பவும் நான் பேசிட்டிருக்கும்போதே... நீ காலேஜுக்குக் கிளம்பிடுவல்ல... இப்ப என் டேர்ன். என் ஃப்ரெண்ட் சாந்தா வந்திடுவா... நான் கோயிலுக்குக் கிளம்பணும்... வரட்டா?'' என்றபடியே லட்சுமி பாட்டி டாட்டா காட்ட, ஷைலு முகத்தில் புன்னகை!

- மருந்து மணக்கும்...
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும் Empty Re: ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்

Post by தமிழ்நேசன்1981 Tue Oct 07, 2014 9:22 pm

ஆறு சுவையும் அஞ்சறைப் பெட்டியும் - 7
முடி வளர மூலிகை தைலம்!
சித்த மருத்துவர் கு.சிவராமன்


தலைக்குக் குளிச்சு, கூந்தலை கோதிவிடும் பாட்டியை பொறாமையுடன் பார்த்துக் கொண்டிருந்த ஷைலு,

'பாட்டி, பெண்களுக்கும் ஆம்பிளை மாதிரி மீசை வருதே, அதுக்கு வைத்தியம் இருக்கான்னு கேட்டு நாலு நாளாச்சு... என்னை வெறுப்பேத்தணும்னே, இப்படி முடியை விரிச்சுப் போட்டிருக்கியா?'' என்றாள்.

'அடிப் பொண்ணே... கார் கூந்தல் பெண்ணுக்கு அழகு; அதைக் கட்டிக் காப்பது நம் மண்ணின் அழகு...'

'கைப்பக்குவமா மருந்து சொல்லுன்னா, கவிதை மழையா கொட்டுறியே. சரி... முதல்ல... தலைபோற பிரச்னை... தலைமுடிதான். அதுக்கு முதல்ல வைத்தியம் சொல்லு... மீசையைப் பத்தி அப்புறம் யோசிக்கலாம்.'

'தலைமுடி வளர, அதிகம் மெனக்கெடத் தேவையில்லை. கைப்பக்குவமா தைலம் தயாரிச்சு தலைக்குத் தேய்ச்சாலே போதும்.'

'என்ன பண்ணினா, முடி வளரும்னு என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் மண்டைய பிச்சுக்கிட்டு இருக்காங்க... நீ ரொம்ப ஈசியா தைலம்னு சொல்லிட்டே'

'முதல்ல முடிவளர்றதுக்கு உடம்பு நல்லா இருக்கணும். உணவு சத்தானதா இருக்கணும். உள்ளமும் நல்லா இருக்கணும். பித்த உடம்புக்காரர்களுக்கு முடி கொஞ்சம் சீக்கிரமே கொட்டும்; நரைக்கும். உடலில் உஷ்ணம், குடல் புண், வாய்வு, மலச்சிக்கல், அஜீரணக் கோளாறு இருந்தாலோ, ஏதாவது வைரஸ் காய்ச்சல் வந்து போனாலோ, தைராய்டு சுரப்பி குறைவு நோய் இருந்தாலோ முடி கொட்டும்; இளநரையும் வரும். அப்படி இருந்தால் அந்த நோயை முதல்ல பூரணமாகக் குணப்படுத்தணும்.'

''எனக்கு ஒரு நோயுமில்லை. நல்லாத்தானே இருக்கேன். எனக்கு ஏன் முடி கொட்டுது.'

''சாப்பாட்டில் தினமும் கறிவேப்பிலை சேர்த்துக்கணும். காலையில் இரண்டு காய்ஞ்ச அத்திப்பழம், ஒரு பேரீச்சை எடுத்துக்கணும். காலேஜ் பிரேக்கில் மாதுளை, பப்பாளித் துண்டுகள், மதிய உணவுக்கு முன்னால கொஞ்சம் ஊறவைச்ச வெந்தயம், சாயங்காலம் காய்ஞ்ச திராட்சை 10 சாப்பிடணும். முடியும் நல்லா வளரும்; போனஸா ரத்தவிருத்தி ஏற்பட்டு மந்த நிலை போய் மூளையும் சுறுசுறுப்பா இருக்கும்''.

'வைட்டமின், இரும்புச்சத்து மாத்திரை எல்லாம் சாப்பிடுறாங்களே...!''

'அவசியமே இல்லை. அப்படியே சாப்பிட்டாலும், அது மறுநாள் சிறுநீரில் கலந்து கழிப்பறைக்குப் போய் அங்கு வசிக்கிற கரப்பான்பூச்சிக்குத்தான் டானிக்கா இருக்கும். சோகை இருந்தா முடி கொட்டத்தான் செய்யும். அதுக்கு சித்த மருத்துவரைப் பார்த்து, கரிசாலை கற்பம், திரிபலா கற்பம், மாதுளை மணப்பாகு, பாவன கடுக்காய் போன்ற மூலிகைகளில் செய்யற மருந்தை வாங்கிட்டு வந்து, நல்ல தேனில் கலந்து சாப்பிடாலே போதும். கூடவே, வாரத்துக்கு மூணு நாளாவது கீரை சாப்பிடணும். இரும்புச்சத்து அதிகமாகும். வயிற்றையும் பதம் பார்க்காது; மலச்சிக்கலும் வராது. குறிப்பா, முருங்கைக் கீரை முடி வளர்க்கும் கீரை.''
ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும் P22b
''வாய்க்கு ருசியா சாப்பிடறமாதிரி, ஒரு ரெசிப்பி சொல்லேன்.'

''மாதுளை, பெரிய நெல்லி, தர்பூசணி, பீட்ரூட் இதையெல்லாம் நறுக்கி, சாறு எடுத்து கொஞ்சம் வெல்லமோ, தேனோ சேர்த்து ஜூஸா குடிக்கலாம். உடல் சூடு தணிஞ்சு குளிர்ச்சியாயிடும். அதில் கால்சியம், தாது உப்புகள்னு அதிகமான சத்துக்கள் இருக்கு. முடி கொட்டுறதும் ஓரிரு வாரத்திலேயே நின்னு போய், முடி நல்லா வளரும்டி..'

'முடிக்கும் மனசுக்கும் முடிச்சுப் போட்டு பேசினியே.. அது என்ன?''

''பரபரப்பான பதற்றமான மன நிலையும், தூக்கமின்மையும்தான் முடி கொட்டறதுக்கு முக்கிய காரணங்கள். முடிஞ்சவரைக்கும் இதைத் தவிர்க்கணும். மனப்பதற்றம், உளைச்சல் குறைய யோகாசனப் பயிற்சி பெஸ்ட்!''

''ஓகே... ஓகே... தைலம் தயாரிக்கிற முறையைச் சொல்லு... நான் எழுதிக்கணும்.''

'செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய் ரெண்டு லிட்டர் வாங்கிக்கணும். வெள்ளைக் கரிசாலை, குமரி கற்றாழை, கீழாநெல்லி, அவுரி இவை எல்லாத்திலயும் ஒரு படிச்சாறு எடுத்துக்கணும். கூடவே 250 மி.லி. கறிவேப்பிலை சாறு எடுத்து நல்லா பதமா காய்ச்சிக்கணும். முடி வளர மூலிகைத் தைலம் ரெடி. சூட்டு உடம்பா இருந்தா, கொஞ்சம் நெல்லிக்காய்சாறும் சேர்த்துக்கலாம். மூக்கடைப்பு சைனஸைடிஸ் இருக்கிறவங்க, இந்த சாறோடு அகில்கட்டை, சுக்கு போட்டு 500 மி.லி. கஷாயமா செஞ்சு வெச்சுக்கலாம். இந்தத் தைலம் அதுக்கும் மருந்தாயிடும். இந்த மாதிரி செய்த தைலம் தேய்ச்சு குளிச்சால், உடலில் பித்தம் தணியும். வயித்து வலியை உண்டாக்கும் குடல்புண்களையும் கூட சீக்கிரமா ஆற்றிடும். சும்மா மேம்போக்கா, தலைக்கு எண்ணெயை காட்டக் கூடாது; நல்லா தேய்க்கணும். குறைஞ்சது 5 மணி நேரமாவது தலையில் இந்த எண்ணெய் இருக்கணும். ரொம்பத் தலை பிசுபிசுப்பு இருந்தால், சீயக்காய்பொடி தேய்ச்சுக்கலாம்.'' 'மூச்சுவிடாம சொல்லி முடிச்சிட்டியே பாட்டி. இனி, எனக்கு முடி வளர்றது உன் வைத்தியத்திலதான் இருக்கு'' என்றாள் ஷைலு கண் சிமிட்டியபடி!

- மருந்து மணக்கும்...
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும் Empty Re: ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்

Post by தமிழ்நேசன்1981 Tue Oct 07, 2014 9:24 pm

ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்...-8
மீசையை மழிக்க மூலிகை திரெடிங்!
சித்த மருத்துவர் கு.சிவராமன்


பாட்டி... மீசை வளர்றது பத்தி சொல்றேன்னீங்களே!'

'ஆம்பளை மாதிரி டிரெஸ் மட்டும் போட்டுப்பீங்களாம். மீசை மட்டும் ஆம்பளை மாதிரி வளர்ந்தா அசிங்கமா இருக்காம். அதையும் முறுக்கிண்டு போக வேண்டியதுதானே...' என்று ஷைலுவை பாட்டி கலாய்க்க...
ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும் P36a
'வைத்தியத்தை சொல்லச்சொன்னா, இப்படி வம்புக்கு இழுக்கிறியே பாட்டி?'

'சும்மா... கிண்டல் பண்ணேம்மா! கோரைக்கிழங்கு, கஸ்தூரி மஞ்சள் இரண்டும் ஒரு பங்குன்னா, அம்மான் பச்சரிசி அரைப் பங்கு சேர்த்து அரைச்சு பேஸ்ட் ஆக்கிக்கணும். தேவையில்லாத இடத்துல வளர்ற முடி மேல் பூசிக் கழுவிட்டு வந்தால், முடி வலுவிழந்து போய் உதிர்ந்திடும். அதே சமயம் முதல்ல கொஞ்சமா, ஒரு இடத்துல இந்தப் பேஸ்ட்டைப் பூசி பார்த்து, அரிப்பு, தடிப்பு வருதானு செக் பண்ணிக்கணும். ஒரு சிலருக்கு அம்மான் பச்சரிசி அலர்ஜியைத் தந்திடும்.'

'அப்ப, இதுதான் மூலிகை 'திரெடிங்’னு சொல்லு.'

'மீசை தாடி இருக்குன்னா, உடனே அதை நீக்குறதுக்கு முயற்சி பண்றதைவிட, அது வர்றதுக்கான காரணத்தை முதல்ல தெரிஞ்சுக்கணும். ஹார்மோன் பிரச்னையாக்கூட இருக்கலாம். தேவை இல்லாத இடத்துல முடி வளர்ற பெரும்பாலான பெண்களுக்கு பி.சி.ஓ.டி என்ற சினைப்பை நீர்க்கட்டி பிரச்னை இருக்கும். இதைத் தவிர்க்க நிறைய நார்ச்சத்துள்ள காய்கறி, கீரைகள் எடுத்துக்கணும். இனிப்பு உணவுகளைத் தவிர்த்திடணும். தினமும் காலையில் எழுந்ததும், சோற்றுக் கற்றாழையில் இருக்கும் ஜெல் பகுதியை, ஒரு ஸ்பூன் எடுத்து நல்லா பிசுபிசுப்பு போகக் கழுவி வைச்சு, தொடர்ந்து 45 நாள் சாப்பிடணும். பப்பாளி, சோயா, பனீர் கட்டி, தொலி உளுந்து, எள்ளு சேர்ந்த உணவுகளை தினமும் எடுத்துக்கணும்.

'ஆமாம் பாட்டி... சிலருக்கு பீரியட்ஸ் ஒழுங்கா வர மாட்டேங்குது. சிலருக்கோ வந்தா நிற்க மாட்டாம, ரொம்ப சிரமப்படுறாங்க.'

'மாதவிடாய் பிரச்னைக்கு ஒரு ஈஸியான கைவைத்தியம் சொல்றேன் கேளு. சுக்கு, மிளகு, திப்பிலி, சீரகம், கருஞ்சீரகம் இவை எல்லாமும் தனித்தனியா 30 கிராம் அளவுக்கு எடுத்துக்கணும். இதுகூட, 20 கிராம் இந்துப்பு, கடுக்காய் சேர்த்து பொடிச்சு வைச்சுக்கணும். தினமும் காலையும் மாலையும்னு நேரத்துக்கு அரை டீஸ்பூன் தேனில் குழைச்சு சாப்பிட்டு வந்தா, மாதவிடாய் சீராயிடும். சின்ன வெங்காயம், வெள்ளைப்பூண்டு நிறைய சேர்த்துக்கணும். பூண்டு, வெங்காயம் ரெண்டும்தான் நம் உடம்போட ஹார்மோன் சுரப்பிகளைச் சீராக்கும் சூப்பர் மூலிகை உணவு!''

''நிறைய கேர்ள்ஸ், தைராய்டுனு மாத்திரை சாப்பிட்டுக்கிட்டே இருக்காங்க... அவங்க என்ன செய்யணும்?''

''பெண்களுக்கு, தைராய்டு சுரப்பு குறைவா இருந்தாலும், மாதவிடாய் சரியா வராது. எடையும் கூடிப்போயிடும். அவங்க உணவுல கடுகுக் குடும்பத்தைச் சேர்ந்த காய்கறிகளைச் சாப்பிடவே கூடாது. அதாவது, முட்டைகோஸ், சிகப்பு முள்ளங்கி, காலிஃப்ளவர் இதையெல்லாம் தொடவே கூடாது. தைராய்டு கோளத்தைப் பெரிசாக்கிடும்.

புற்றுநோயையே தடுக்கும் ஒரு உணவாக இருக்கும் புரொகோலி கூட, தைராய்டு உள்ளவங்களுக்கு ஆகாது. தைராய்டு குறைவு இருந்தா, தினமும் பிராணாயாமம், விபரீதகரணி, ஹலாசனம், சர்வாங்காசனம்னு சில யோக ஆசனங்களையும், மூச்சுப்பயிற்சியையும் சேர்த்து செய்யணும். ''பாட்டி மாதவிடாய் தள்ளிட்டே போறதுக்கு, ஓவலேஷன் தள்ளுவதும் சில நேரங்களில் நடக்காமலும் இருப்பதும்தான் காரணம்னு படிச்சேன். அதுக்கு என்ன சாப்பிடலாம்?''

''துத்தநாகச்சத்து (க்ஷ்வீஸீநீ) குறைபாடு இருந்தால்கூட ஓவலேஷன் தள்ளிப்போய், மாதவிடாயும் தள்ளிட்டே போகுமாம். அதனால், துத்தநாகச்சத்து நிறைஞ்ச முளைகட்டிய பயறு, பட்டாணி வகைகளை உணவில் சேர்த்துக்கணும். வைட்டமின் பி6 வாழைப்பழம் மூலமாவும், வைட்டமின் டி முட்டை மூலமாவும், வைட்டமின் ஈ பாதாம் மூலமாவும் ஈஸியாக் கிடைச்சிடுது. ஒமேகா சத்தையும், செலினியம் சத்தையும் மீன்கள் தந்திடும். இதையெல்லாம் உணவுல சேர்த்துக்கலாம்.

சித்த மருத்துவத்துல, 'விஷ்ணுகிரந்தி’னு ஒரு மூலிகைப் பொடி இருக்கு. அந்த மூலிகை கருமுட்டை வளர்ச்சிக்குப் பயன்படுதாம். திருமணமாகி, கருத்தரிக்கத் தாமதமான பெண்கள் மருத்துவர் ஆலோசனையோட, இந்த மூலிகையைச் சாப்பிடலாம்!''

''அட! சூப்பர். புரொலாக்டின் ஹார்மோன் அதிகரிச்சு, அதனால சிலசமயம் கருத்தரிக்கத் தாமதமாகும்னு சொல்றாங்களே... அது பத்தி உனக்குத் தெரியுமா பாட்டி?''

''தெரியுமே... ஆனா, அப்புறமா சொல்றேன்டி கண்ணு. பேசிப் பேசி... தொண்டை வறண்டுபோச்சு!''

''இரு... இரு... உனக்கு ஜில்லுனு கிர்ணி ஜூஸ் போட்டுக் கொண்டுவர்றேன்'' என்று ஓடினாள் ஷைலு.

- மருந்து மணக்கும்..
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும் Empty Re: ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்

Post by தமிழ்நேசன்1981 Tue Oct 07, 2014 9:26 pm

ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும் - 9
மூட்டுவலி போக்கும் முடக்கத்தான்!
சித்த மருத்துவர் கு.சிவராமன்


'காத தூரம் நடக்கிறதுக்குள்ள கால் வலி பின்னிப் பெடலெடுக்குதே பாட்டி? உன்னால மட்டும் எப்படி இந்த வயசுலயும் நடந்தே கோயிலுக்கெல்லாம் போயிட்டு வர முடியுது?'

'வயசானாலே கொஞ்சம் மூட்டுவலி வரத்தான் செய்யும். ஆனா, ரொம்ப தொல்லை தர்றதுக்கு முன்னாலேயே, பக்குவமா வைத்தியம் பார்த்துக்குவேன்ல...'

'அது என்ன பக்குவம்... எனக்கும் கொஞ்சம் சொல்லேன்'
ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும் P26
'வயசானாலேயே, மூட்டுக்கு இடையில் இருக்கிற சவ்வு கொஞ்சம் உலர்ந்து, எலும்புகளுக்கு உள்ள இடைவெளி குறைஞ்சு வலி எடுக்க ஆரம்பிச்சிடும். கவனிக்காமல் விட்டால், கால் மெதுவாக வளைஞ்சுகூட போகும். ஆஸ்டியோ ஆர்தரைட்டிஸ்-ங்கிற மூட்டுவலிதான் அது.'

'பென்குயின் பாட்டி... அதான், உன் ஃப்ரெண்ட் பெயின்குயின் மாதிரியே நடப்பாங்களே. கால் வலியினால் தான் அவங்க அப்படி நடக்கிறாங்களா பாட்டி?'

'ஆமா. ஆனா, மூட்டு தேயறதுக்குள்ள முன்ஜாக்கிரதையா நாம் முந்திக்கணும். எடை அதிகரிக்காமப் பார்த்துக்கணும். மாதவிடாய் முடியும் சமயத்துல இருந்தே உணவில் கால்சியம் நிறைய சேர்க்கணும். 'புளி துவர் விஞ்சிக்கின் வாதம்’. அதனால், புளிப்பு சுவையுள்ள வத்தக் குழம்பு, புளியோதரை எல்லாம் கூடாது. வாய்வு தரக் கூடிய உருளைக்கிழங்கு, தரைக்கு அடியில் விளையற கிழங்குகள், காராமணி, கோஸ், இதெல்லாம் குறைவாதான் சேர்த்துக்கணும்.'

'என்ன சேர்க்கலாம். அதை முதல்ல சொல்லுங்க'

'கால்சியம், இரும்புச் சத்துள்ள தானியங்களை கஞ்சி, கூழ், அடை செய்து சாப்பிடலாம். கம்பங் கூழுக்கு மோரும், சின்ன வெங்காயமும் சூப்பர் காம்பினேஷன். உடலுக்கு நன்மை தர்ற புரோ பயாட்டிக் ஆன்டிஆக்சிடன்ட் டானிக்கும் கூட.

முடக்கத்தான் (முடக்கறுத்தான்) கீரை, மூட்டு வலிக்கு ரொம்ப நல்லது. யூரிக் அமிலம் அதிகரித்து வர்ற 'கவுட்’ நோய்க்கு இது கை மேல் பலன்கொடுக்கும். ஆஸ்திரேலியாவில் குயின்ஸ் யுனிவர்சிட்டி ஆராய்ச்சியாளர்கள், முடக்கத்தானில் உள்ள 'தாலைட்ஸ்’ என்ற ரசாயனம் குறிப்பிட்ட விகிதத்தில் யூரிக் ஆசிட்டைக் கரைக்கும் சக்தி படைச்சிருக்கிறதை கண்டுபிடிச்சிருக்காங்க. மூட்டுகளில் எங்கு யூரிக் ஆசிட் இருந்தாலும் அதைக் கரைச்சு, சிறுநீரகத்துக்கு எடுத்துட்டுப் போயிடும். சிறுநீரகம் இதை வெளியேற்றும்போது, சோடியத்தையும், பொட்டாஷியத்தையும் நம் உடம்பிலேயே விட்டுவிடுமாம். இது, ஒருமிக முக்கிய இணையான மாற்றத்தை நம் உடலில் ஏற்படுத்துமாம். இதனால், உடல் சோர்வு ஏற்படாது. மூட்டுகளுக்கு கனிப்பொருள் சக்தியும் அளிக்கிறதாம்.'
ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும் P26a
'முடக்கத்தான் கீரையை எப்படி சாப்பிடணும் பாட்டி?'

''கீரையைத் தண்ணீர்ல போட்டுக் கொதிக்க வைச்சா, அதுல இருக்கிற மருத்துவ சத்துக்கள் அழிஞ்சிடும். பொடியா நறுக்கி, தோசை மாவோட கலந்து, தோசையா செஞ்சு சாப்பிடலாம்.'

'மூட்டுவலி இருக்கிறவங்களுக்கு மலச்சிக்கல் இருக்கும்னு சொல்றாங்களே..?'

'அப்படி இல்லை. ஆனால், மலச்சிக்கல் பிரச்னை இருந்தால், அதை முதல்ல சரி செய்யவேண்டியது ரொம்ப அவசியம். 'விரேசனத்தால் வாதம் தாழும்’னு ஒரு சித்த மருத்துவ மொழி கூட இருக்கு.'

'விரேசனம்னா என்ன பாட்டி?'

'பேதி உண்டாக்க மருந்து கொடுப்பது. நாடி, உடல் வன்மை பார்த்து விளக்கெண்ணெயில் ஆரம்பித்து, பல வகை பேதி மருந்துகளை சித்த மருத்துவர்கள் கொடுப்பாங்க. அதை ஒரு நாள் எடுத்துக்கிட்டா, நல்லா 7 - 10 தடவை பேதி ஆகி, உடலின் வாதத் தன்மை குறைஞ்சிடும். அதுக்குப் பிறகு தகுந்த வைத்தியம் பார்த்துக்கிட்டா, மூட்டுவலி சீக்கிரத்திலேயே குறையும். ஆனால், மருத்துவரோட ஆலோசனை இல்லாமல் இதைச் சாப்பிடக் கூடாது.''

''நீ, தினமும் ராத்திரி, ஒரு பொடியை பால்ல போட்டு சாப்பிடுவியே... அது எதுக்கு பாட்டி?''

'அமுக்கராங்கிழங்கு பொடி. பாலில் வேக வைச்சு தூளாக்கிய பொடி. இந்தப் பொடியைச் சாப்பிட்டால், மூட்டுகளுக்கு இடையே இருக்கிற அழற்சி நீங்கி வலியும் குறையும். கூடவே நொச்சி, தழுதாழை, ஆமணக்கு இலையை, விளக்கெண்ணெய் அல்லது, வாத கேசரி தைலத்தில் நல்லா வதக்கி, மூட்டுக்கு ஒத்தடம் கொடுத்தாலும் வலி சீக்கிரமே போயிடும்.

கால் வலியோட வீக்கம் இருந்தால், முருங்கை இலை, தேங்காய் துருவல், வலம்புரிக்காய், ஓமம், நொச்சித்தழை, ஆமணக்கு இலை, தழுதாழை, இதையெல்லாம் ஒரு காடா துணியில் பொட்டலமாக் கட்டி ஒரு கடாயில், நாராயணத் தைலத்தை லேசாக இளஞ்சூடாக்கி, அதில் இந்த பொட்டலத்தைப் போட்டு, அந்த எண்ணெயில் லேசாய்ப் பிரட்டணும். அதை வைத்து ஒத்தடம் கொடுத்தால் வலியும் போகும்; வீக்கமும் மறையும். ஆவாரை இலை, வேலிப்பருத்தி இலை இரண்டையும் தூளாக்கி, முட்டை வெள்ளைக்கரு (சைவமா இருந்தால் உளுத்தமாவு) கலந்து, மூட்டுல பத்து போட்டு அடுத்தநாள் கழுவினால் வீக்கம் மறைஞ்சிடும். 'ஃப்ரோஸன் ஷோல்டர்’ என பாடாய்ப் படுத்தும் தோள் மூட்டில் வரும் வலிக்குக் கூட இந்த பத்துதான் பெஸ்ட்.'

'பாட்டி நீ வெறும் ஆத்தா இல்லை... ஆர்த்தாஃபிசிஷியன்தான் போ!'

- மருந்து மணக்கும்..
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும் Empty Re: ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum