ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலையா.. பயம் வேண்டாம் !

3 posters

Go down

சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலையா.. பயம் வேண்டாம் ! Empty சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலையா.. பயம் வேண்டாம் !

Post by தமிழ்நேசன்1981 Mon Oct 06, 2014 9:21 pm

(ப்ரீ -Pre ) டயாபடீஸா.. பயம் வேண்டாம்
டாக்டர் கருணாநிதி


உலக அளவில் சர்க்கரை நோயாளிகள் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு இரண்டாவது இடம். (ப்ரீ) டயாபட்டீஸ் என்று சொல்லப்படும் 'சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலை’யில் இருப்பவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் மட்டும்  7.72 கோடிப் பேர் என்ற அதிர்ச்சித் தகவலை வெளியிட்டிருக்கிறது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில். (ப்ரீ) டயாபடீஸ் பற்றிய பல்வேறு சந்தேகங்களை சர்க்கரை நோய் நிபுணர் கருணாநிதியிடம் கேட்டோம்.

'சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலை என்றால் என்ன?'

'பொதுவாக, ஒருவருக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு சாப்பிடுவதற்கு முன் 100 முதல் 125 mg/dl என்ற அளவிலும், உணவு உட்கொண்ட பிறகு 140 முதல் 199 mg/dl என்ற அளவிலும் இருந்தால், அவர் (ப்ரீ) டயாபடீஸ் நிலையில் உள்ளார். அதாவது, எதிர்காலத்தில் சர்க் கரை நோய் வருவதற்கான சாத்தியங்கள் அவருக்கு அதிகம் என்று அர்த்தம்.'

'ப்ரீ டயாபடீஸ் யாருக்கு எல்லாம் வர வாய்ப்புள்ளது?'

'அதிக உடல் எடை இருப்பவர்கள், குறிப்பாக பி.எம்.ஐ மதிப்பில் 25க்கு மேல் இருப்பவர்கள், கர்ப்ப காலத்தில் சர்க்கரை நோய் (Gestational Diabetes) வந்தவர்கள், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், இதய நோய் உள்ளவர்கள், உடல் உழைப்பின்றி, அதிக கலோரி உணவு உண்ணுபவர்கள் (Sedentary type) ஆகியோருக்கு (ப்ரீ) டயாபடீஸ் வரலாம். இவர்கள் தாங்களாகவே முன்வந்து மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சர்க்கரைப் பரிசோதனை செய்துகொள்வது நல்லது.'

'(ப்ரீ) டயாபடீஸ் இருக்கிறது என்பதை எப்படி அறிவது?'

'சர்க்கரை நோய்க்கான சோதனை மூலம் அறியலாம். காலையில் உணவு சாப்பிடுவதற்கு முன்பும், உணவு உட்கொண்ட பின்னர் 2 மணி நேரம் கழித்தும் செய்யப்படும் ரத்தப் பரிசோதனை மூலம் கண்டறியலாம். சிலர் ரத்தப் பரிசோதனை செய்வதற்கு ஓரிரு நாட்களுக்கு முன்பிருந்தே, சர்க்கரை, எண்ணெய் சேர்த்த உணவுகளைத் தவிர்த்து விட்டு, பரிசோதனையின்போது, சர்க்கரையின் அளவு குறைவு எனக் காண்பிக்க விரும்புகிறார்கள். இது தவறு. இவர்களுக்காகவே, தற்போது ஹெச்.பி.ஏ.1சி (HbA1c) என்ற பரிசோதனை இருக்கிறது. கடந்த மூன்று மாதங்களில் நம் சராசரியான சர்க்கரையின் அளவு என்ன என்பதை அது தெளிவாக விளக்கிவிடும். (ப்ரீ) டயாபடீஸ் வந்தவர்கள் இந்தப் பரிசோதனையை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கண்டிப்பாக செய்து கொள்ளவேண்டும். இதன் மூலம் நமது உடலில் சர்க்கரையின் அளவைத் துல்லியமாகத் தெரிந்துகொண்டு, அதற்கேற்ப செயல்படலாம்.'

'(ப்ரீ) டயாபடீஸ் வந்தவர்கள் செய்ய வேண்டியவை, தவிர்க்க வேண்டியவை என்ன?'

''(ப்ரீ) டயாபடீஸ் பிரச்னை உள்ளவர்களுக்கு மாத்திரைகள் தரப்படுகின்றன ஆனால் அவற்றை எடுத்துக் கொள்ளாமல், 'உணவுக் கட்டுப்பாடு, உடல் எடைக் கட்டுப்பாடு’ போன்ற வாழ்க்கை முறை மாற்றங்களைச் செய்வதன் மூலம் சர்க்கரை நோய்க்கான வாய்ப்பைத் தவிர்க்கலாம். மருத்துவர் மற்றும், ஊட்டச்சத்து நிபுணரின் ஆலோசனை பெற்று உணவுப் பழக்கத்தை மாற்றிக்கொள்ள வேண்டும். சீரான இடைவெளியில் குறைந்த கலோரி கொண்ட உணவுகளை சாப்பிட வேண்டும்.  பதப்படுத்தப்பட்ட, பாக்கெட் செய்யப்பட்ட சிப்ஸ் முதலான கொழுப்புச் சத்துள்ள பொருட்கள், சர்க்கரை மட்டுமின்றி இனிப்புப் பதார்த்தம் உண்ணுவதையும் குறைத்துக்கொள்ள வேண்டும். நார்ச் சத்து மிகுந்த உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ளவேண்டும். மாவுச்சத்துள்ள உணவுகளை குறைத்துக்கொள்ள வேண்டும். தாமதமாக உணவு உட்கொள்வது, உணவைத் தவிர்ப்பது கட்டாயம் கூடாது. இரவில் உறங்குவதற்கு  இரண்டு  மணி நேரம் முன்பே மிதமான உணவைச் சாப்பிட வேண்டும். ஒரு நாளைக்கு டீ/காபி 2 கப் அளவுக்கு மேல் அருந்தக் கூடாது. தினமும் 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம். வாரத்துக்கு 5 நாட்களாவது முறையான நடைப்பயிற்சி அவசியம். பயிற்சியாளர், மருத்துவர் பரிந்துரை இன்றி கடினமான பளு தூக்கும் உடற்பயிற்சிகளைத் தவிர்க்க வேண்டும்.  பொதுவாக (ப்ரீ) டயாபடீஸ் வந்தவர்களுக்கு இதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.எனவே, மனக்கவலையைத் தவிர்த்து உணவுப்பழக்கம், உடற்பயிற்சி, தூக்கம் ஆகியவற்றை முறையாகக் கடைப்பிடித்தால், (ப்ரீ) டயாபடீஸிலிருந்து நார்மல் நிலைக்கு வரலாம்.  இதய நோய்கள் வராமலும் தடுக்கலாம்.'

பு.விவேக் ஆனந்த்


Last edited by krishnaamma on Mon Oct 06, 2014 9:45 pm; edited 3 times in total (Reason for editing : .)
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலையா.. பயம் வேண்டாம் ! Empty Re: சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலையா.. பயம் வேண்டாம் !

Post by krishnaamma Mon Oct 06, 2014 9:27 pm

நேசன், 'ப்ரீ ' (Pre ) என்பது , Free என்பது போல தெரிகிறது புன்னகை இது போல பிராக்கெட் இல் போடுங்களேன் புன்னகை
.
.
அருமையான பகிர்வு நேசன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலையா.. பயம் வேண்டாம் ! Empty Re: சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலையா.. பயம் வேண்டாம் !

Post by தமிழ்நேசன்1981 Mon Oct 06, 2014 9:42 pm

krishnaamma wrote:நேசன், 'ப்ரீ ' (Pre ) என்பது , Free என்பது போல தெரிகிறது புன்னகை இது போல பிராக்கெட் இல் போடுங்களேன் புன்னகை
.
.
அருமையான பகிர்வு நேசன் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1093296

புன்னகை ஆமாம்...நானும் இப்போதான் கவனித்தேன்...நிறைய இடத்தில் ப்ரீ..வந்துள்ளது இப்போது அடைத்துவிட்டேன் ப்ரீயை.... இந்த காலத்தில் வியாதிகள் மட்டுமே ஃப்ரீயா கிடைக்கிறது புன்னகை குறிப்பிட்டதிற்கு நன்றிகள் அம்மா.... நன்றி
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலையா.. பயம் வேண்டாம் ! Empty Re: சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலையா.. பயம் வேண்டாம் !

Post by krishnaamma Mon Oct 06, 2014 9:44 pm

தமிழ்நேசன்1981 wrote:
krishnaamma wrote:நேசன், 'ப்ரீ ' (Pre ) என்பது , Free என்பது போல தெரிகிறது புன்னகை இது போல பிராக்கெட்  இல் போடுங்களேன் புன்னகை
.
.
அருமையான பகிர்வு நேசன் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1093296

புன்னகை ஆமாம்...நானும் இப்போதான் கவனித்தேன்...நிறைய இடத்தில் ப்ரீ..வந்துள்ளது இப்போது அடைத்துவிட்டேன் ப்ரீயை.... இந்த காலத்தில் வியாதிகள் மட்டுமே ஃப்ரீயா கிடைக்கிறது புன்னகை  குறிப்பிட்டதிற்கு நன்றிகள் அம்மா.... நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1093301

இப்படி இல்லை நேசன் , நான் போடறேன் பாருங்கோ !.....Pre என்று போட சொன்னேன், இப்போ நீங்க மாற்றி ய தலைப்பும் நல்லா இருக்கு புன்னகை சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


Last edited by krishnaamma on Mon Oct 06, 2014 9:46 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலையா.. பயம் வேண்டாம் ! Empty Re: சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலையா.. பயம் வேண்டாம் !

Post by ராஜா Mon Oct 06, 2014 9:45 pm

"சர்க்கரை வியாதிக்கு முந்தைய நிலை " என்ற வாக்கியமே கட்டுரையின் பொருளை எடுத்துரைக்கிறதே அப்புறம் எதற்கு "ப்ரீ" புன்னகை தமிழ்நேசன்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலையா.. பயம் வேண்டாம் ! Empty Re: சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலையா.. பயம் வேண்டாம் !

Post by தமிழ்நேசன்1981 Mon Oct 06, 2014 9:58 pm

ராஜா wrote:"சர்க்கரை வியாதிக்கு முந்தைய நிலை " என்ற வாக்கியமே கட்டுரையின் பொருளை எடுத்துரைக்கிறதே அப்புறம் எதற்கு "ப்ரீ" புன்னகை தமிழ்நேசன்
மேற்கோள் செய்த பதிவு: 1093305

அட...இது எனக்கு தோணாம போச்சே...எல்லாம் அவசரத்தில் வந்த கவனக்குறைவுதான்...திருத்தியதற்கு நன்றி அண்ணா... புன்னகை
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலையா.. பயம் வேண்டாம் ! Empty Re: சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலையா.. பயம் வேண்டாம் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum