புதிய பதிவுகள்
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 2:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இன்று வள்ளலார் பிறந்த நாள் I_vote_lcapஇன்று வள்ளலார் பிறந்த நாள் I_voting_barஇன்று வள்ளலார் பிறந்த நாள் I_vote_rcap 
84 Posts - 44%
ayyasamy ram
இன்று வள்ளலார் பிறந்த நாள் I_vote_lcapஇன்று வள்ளலார் பிறந்த நாள் I_voting_barஇன்று வள்ளலார் பிறந்த நாள் I_vote_rcap 
75 Posts - 39%
T.N.Balasubramanian
இன்று வள்ளலார் பிறந்த நாள் I_vote_lcapஇன்று வள்ளலார் பிறந்த நாள் I_voting_barஇன்று வள்ளலார் பிறந்த நாள் I_vote_rcap 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
இன்று வள்ளலார் பிறந்த நாள் I_vote_lcapஇன்று வள்ளலார் பிறந்த நாள் I_voting_barஇன்று வள்ளலார் பிறந்த நாள் I_vote_rcap 
7 Posts - 4%
mohamed nizamudeen
இன்று வள்ளலார் பிறந்த நாள் I_vote_lcapஇன்று வள்ளலார் பிறந்த நாள் I_voting_barஇன்று வள்ளலார் பிறந்த நாள் I_vote_rcap 
5 Posts - 3%
i6appar
இன்று வள்ளலார் பிறந்த நாள் I_vote_lcapஇன்று வள்ளலார் பிறந்த நாள் I_voting_barஇன்று வள்ளலார் பிறந்த நாள் I_vote_rcap 
4 Posts - 2%
Srinivasan23
இன்று வள்ளலார் பிறந்த நாள் I_vote_lcapஇன்று வள்ளலார் பிறந்த நாள் I_voting_barஇன்று வள்ளலார் பிறந்த நாள் I_vote_rcap 
2 Posts - 1%
Balaurushya
இன்று வள்ளலார் பிறந்த நாள் I_vote_lcapஇன்று வள்ளலார் பிறந்த நாள் I_voting_barஇன்று வள்ளலார் பிறந்த நாள் I_vote_rcap 
2 Posts - 1%
Karthikakulanthaivel
இன்று வள்ளலார் பிறந்த நாள் I_vote_lcapஇன்று வள்ளலார் பிறந்த நாள் I_voting_barஇன்று வள்ளலார் பிறந்த நாள் I_vote_rcap 
2 Posts - 1%
prajai
இன்று வள்ளலார் பிறந்த நாள் I_vote_lcapஇன்று வள்ளலார் பிறந்த நாள் I_voting_barஇன்று வள்ளலார் பிறந்த நாள் I_vote_rcap 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று வள்ளலார் பிறந்த நாள் I_vote_lcapஇன்று வள்ளலார் பிறந்த நாள் I_voting_barஇன்று வள்ளலார் பிறந்த நாள் I_vote_rcap 
441 Posts - 47%
heezulia
இன்று வள்ளலார் பிறந்த நாள் I_vote_lcapஇன்று வள்ளலார் பிறந்த நாள் I_voting_barஇன்று வள்ளலார் பிறந்த நாள் I_vote_rcap 
320 Posts - 34%
Dr.S.Soundarapandian
இன்று வள்ளலார் பிறந்த நாள் I_vote_lcapஇன்று வள்ளலார் பிறந்த நாள் I_voting_barஇன்று வள்ளலார் பிறந்த நாள் I_vote_rcap 
77 Posts - 8%
T.N.Balasubramanian
இன்று வள்ளலார் பிறந்த நாள் I_vote_lcapஇன்று வள்ளலார் பிறந்த நாள் I_voting_barஇன்று வள்ளலார் பிறந்த நாள் I_vote_rcap 
38 Posts - 4%
mohamed nizamudeen
இன்று வள்ளலார் பிறந்த நாள் I_vote_lcapஇன்று வள்ளலார் பிறந்த நாள் I_voting_barஇன்று வள்ளலார் பிறந்த நாள் I_vote_rcap 
30 Posts - 3%
prajai
இன்று வள்ளலார் பிறந்த நாள் I_vote_lcapஇன்று வள்ளலார் பிறந்த நாள் I_voting_barஇன்று வள்ளலார் பிறந்த நாள் I_vote_rcap 
8 Posts - 1%
Srinivasan23
இன்று வள்ளலார் பிறந்த நாள் I_vote_lcapஇன்று வள்ளலார் பிறந்த நாள் I_voting_barஇன்று வள்ளலார் பிறந்த நாள் I_vote_rcap 
5 Posts - 1%
Karthikakulanthaivel
இன்று வள்ளலார் பிறந்த நாள் I_vote_lcapஇன்று வள்ளலார் பிறந்த நாள் I_voting_barஇன்று வள்ளலார் பிறந்த நாள் I_vote_rcap 
5 Posts - 1%
sugumaran
இன்று வள்ளலார் பிறந்த நாள் I_vote_lcapஇன்று வள்ளலார் பிறந்த நாள் I_voting_barஇன்று வள்ளலார் பிறந்த நாள் I_vote_rcap 
5 Posts - 1%
i6appar
இன்று வள்ளலார் பிறந்த நாள் I_vote_lcapஇன்று வள்ளலார் பிறந்த நாள் I_voting_barஇன்று வள்ளலார் பிறந்த நாள் I_vote_rcap 
4 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று வள்ளலார் பிறந்த நாள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82750
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Oct 05, 2014 6:44 am

இன்று வள்ளலார் பிறந்த நாள் M2bP8ZB2RkmmDRV3PPlv+Tamil_News_large_108482420141005022126

--
''அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி

தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி”

என்னும் மகாமந்திரத்தினை ஆன்மிக உலகிற்கு அருளிய
வள்ளலார் அவதாரம் செய்த ஊர் சிதம்பரம் அருகே மருதூர்;
பிறந்த நாள் 05.10.1823.
-
வேண்டும், வேண்டும்:
-
'கருவிலே திரு' வாய்க்கப் பெற்றவர் வள்ளலார் என்பதற்கு
ஒரு நிகழ்ச்சி: ஒன்பது வயதில் அவரது ஆசிரியர்,
''ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்,
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்,
மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம்,
வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டாம்”

என்று
வகுப்பில் 'உலக நீதி'யைச் சொல்லச் சொல்லியும்,
அவர் சொல்லவில்லை. "ஏன் சொல்லவில்லை?” என்று
ஆசிரியர் கேட்ட போது, "இறைவனிடத்திலே 'வேண்டாம்,
வேண்டாம்' என்று சொல்லிக் கொண்டிருப்பானேன்?
ஏதாவது 'வேண்டும், வேண்டும்' என்று எதை வேண்டலாம்
என எண்ணிக் கொண்டிருந்தேன்” என்றார்.

"நீ வேண்டுமானால் 'வேண்டும், வேண்டும்' எனப் பாடு!”
என்று ஆசிரியர் கட்டளை இட, உடனே

"ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற
உத்தமர்தம் உறவு வேண்டும்,
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்” என்ற பாடலைப் பாடினார்
வள்ளலார்.
-
எப்போதும் வெள்ளை ஆடை உடுத்தி, எல்லாவற்றையும்
துறந்த பற்றற்ற உள்ளத்தோடு, மிக எளிய வாழ்க்கை
நடத்தியவர் வள்ளலார். அவர் ஜாதி, மத வேறுபாடுகளை
கடந்து மக்களுக்காக உருகினார்;

திருவொற்றியூரில் ஒரு வீட்டுத் திண்ணையில் இருந்த
துறவி வேலூர் தோபா சுவாமி என்பவர், அந்த வழியில்
செல்வோரைப் பார்த்து அவர்களது உள்ளத்துப் பண்பை
உணர்ந்து, "இதோ ஒரு நரி போகிறது! ஒரு நாய் போகிறது!
இதோ ஒரு கழுதை போகிறது! ஒரு பன்றி போகிறது!”
என்று சொல்லிக் கொண்டிருப்பாராம். ஒரு நாள் அந்தச் ச
ந்து வழியே இராமலிங்க அடிகள் வரக் கண்ட அந்தத்
துறவியார் முகம் மலர்ந்து,
"இதோ உத்தம மனிதன் போகிறான்!” என்று கூறினாராம்.
-
வள்ளலார் சித்தி அடைந்த நாள் 30.01.1874.
இம் மண்ணுலகில் 51 ஆண்டுகள் நல்ல வண்ணம்
வாழ்ந்து காட்டிய வள்ளலார் இறைவனிடத்தில்
வேண்டிய தேவைகள் மூன்று.. அவை:
-
புண்படா உடம்பு (நோய் இல்லாத உடம்பு),
புரைபடா மனம் (குற்றம் இல்லாத மனம்),
பொய்படா ஒழுக்கம் (பொய் இல்லாத ஒழுக்கம்).
உடம்பு புண்படாது, மனம் புரைபடாது, ஒழுக்கம் பொய்
படாது நடந்து காட்டுவதே வள்ளலார் போற்றிய வாழ்க்கை
நெறி.

- பேராசிரியர் இரா.மோகன்(கட்டுரையிலிருந்து - சில பகுதி)


avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sun Oct 05, 2014 8:29 am

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி

தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

வாழ்க அவர் புகழ்.


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Oct 05, 2014 3:40 pm

நான் இது பற்றி போடலாம் என்று வந்தேன், நீங்க போட்டு விட்டிங்க ராம் அண்ணா  புன்னகை சூப்பருங்க

''அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி”

இன்று வள்ளலார் பிறந்த நாள் RMiorcnPQ8WbYQhnNvyL+download

என்னும் மகாமந்திரத்தினை ஆன்மிக உலகிற்கு அருளிய வள்ளலார் அவதாரம் செய்த ஊர் சிதம்பரம் அருகே மருதூர்; பிறந்த நாள் 05.10.1823. வள்ளலார் ஆறு மாதக் குழந்தையாக இருந்த போது தந்தையார் மறைந்து விட்டார். வள்ளலாரின் மூத்த அண்ணன் சபாபதி புராணச் சொற்பொழிவு செய்து இவரை படிக்க வைத்தார். வள்ளலாருக்குப் படிப்பினில் மனம் பற்றிடவில்லை. பாடம் பயின்று வரும் போதே சென்னையில் உள்ள கந்தசாமி கோவிலுக்குச் சென்றார். அண்ணன் மனம் வருந்தி மனைவியிடம் 'இனி, தம்பிக்கு உணவு தர வேண்டாம்' என்றார்; அண்ணியாரோ, கணவருக்குத் தெரியாமல் பொழுது சாய்ந்த வேளையில் வீட்டின் பின்பக்கம் வரச்சொல்லி வள்ளலாருக்கு உணவு அளித்தார். அழுது கொண்டே அண்ணியார் உணவளித்ததைக் கண்ட வள்ளலார், மனம் மாறி இனி ஒரு தனியறையில் படிப்பதாகக் கூறினார்; வீட்டு மாடியில் கண்ணாடி, மலர், கற்பூரம் முதலியவற்றுடன் சென்று, முருகப் பெருமானை ஆழ்ந்து எண்ணிக் கண்ணீர் மல்கக் கசிந்து உருகினார்; எல்லாக் கல்வியையும் இறைவன் உள்முகத்தில் வள்ளலாருக்கு உணர்த்தினான். எனவே, வள்ளலார் அனைத்தையும் ஓதாமல் உணர்ந்தார்; முழுமையான ஞானம் பெற்றார்.

வேண்டும், வேண்டும்:

'கருவிலே திரு' வாய்க்கப் பெற்றவர் வள்ளலார் என்பதற்கு ஒரு நிகழ்ச்சி: ஒன்பது வயதில் அவரது ஆசிரியர், ''ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம், ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம், மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம், வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டாம்” என்று வகுப்பில் 'உலக நீதி'யைச் சொல்லச் சொல்லியும், அவர் சொல்லவில்லை. "ஏன் சொல்லவில்லை?” என்று ஆசிரியர் கேட்ட போது, "இறைவனிடத்திலே 'வேண்டாம், வேண்டாம்' என்று சொல்லிக் கொண்டிருப்பானேன்? ஏதாவது 'வேண்டும், வேண்டும்' என்று எதை வேண்டலாம் என எண்ணிக் கொண்டிருந்தேன்” என்றார். "நீ வேண்டுமானால் 'வேண்டும், வேண்டும்' எனப் பாடு!” என்று ஆசிரியர் கட்டளை இட, உடனே "ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும், உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்” என்ற பாடலைப் பாடினார் வள்ளலார்.

முதல் சொற்பொழிவு:

உடல்நலக் குறைவு காரணமாக அண்ணனால் சொற்பொழிவு ஆற்றச் செல்ல முடியவில்லை; தம்பியை அனுப்பி வைத்தார். பெரியபுராணத்தின் ஒரு பாடலை மூன்று மணி நேரம் விரிவுரை ஆற்றினார். சொற்பொழிவைக் கேட்டோர், 'மிகவும் அருமை; இவரே தொடர்ந்து சொற்பொழிவு ஆற்ற வேண்டும்' என்று பாராட்டிக் கூறினர். அண்ணன் சபாபதி, படிக்காத தம்பிக்கு இந்த ஆற்றல் எப்படி வந்தது என்று எண்ணி வியந்தார்; வள்ளலாரின் சொற்பொழிவை மறைந்து நின்று கேட்ட பொழுது, 'முருகப் பெருமான் தான் நமக்குத் தம்பியாக வந்துள்ளார்' என்ற முடிவுக்கு வந்தார். ஒன்பதாவது வயதில் இறைவன் வள்ளலாரை ஆட்கொண்டான்; பன்னிரண்டாம் வயதில் அவர் முறையான ஞான வாழ்க்கையைத் தொடங்கினார்.

கருணை நிறைந்த ஞானி:

வள்ளலார் இரக்கம் மிகுந்த நெஞ்சம் உடையவர்; பிறருடைய துன்பங்களைக் கண்டு கசிந்து உருகிக் கண்ணீர் சிந்தும் மென்மையான இயல்பு படைத்தவர். 'வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்' என்று பாடியவர் அவர். 'எனக்கு முத்தி பெற வேண்டும் என்ற இச்சை இல்லை. உலகத்து உயிர்க்கு எல்லாம் இன்பம் செய்வது என் இச்சையாம், எந்தையே' என்பது இறைவனிடம் அவர் செய்யும் விண்ணப்பம். ''அப்பா, நான் வேண்டுதல்கேட்டு அருள்புரிதல் வேண்டும், ஆருயிர்கட்கு எல்லாம்நான் அன்புசெயல் வேண்டும்” என்னும் அவரது வேண்டுகோளில் அவருடைய தூய உள்ளம், - இரக்கமே வடிவான உள்ளம்- புலப்படும்.

எப்போதும் வெள்ளை ஆடை உடுத்தி, எல்லாவற்றையும் துறந்த பற்றற்ற உள்ளத்தோடு, மிக எளிய வாழ்க்கை நடத்தியவர் வள்ளலார். அவர் ஜாதி, மத வேறுபாடுகளை கடந்து மக்களுக்காக உருகினார்; திருவொற்றியூரில் ஒரு வீட்டுத் திண்ணையில் இருந்த துறவி வேலூர் தோபா சுவாமி என்பவர், அந்த வழியில் செல்வோரைப் பார்த்து அவர்களது உள்ளத்துப் பண்பை உணர்ந்து, "இதோ ஒரு நரி போகிறது! ஒரு நாய் போகிறது! இதோ ஒரு கழுதை போகிறது! ஒரு பன்றி போகிறது!” என்று சொல்லிக் கொண்டிருப்பாராம். ஒரு நாள் அந்தச் சந்து வழியே இராமலிங்க அடிகள் வரக் கண்ட அந்தத் துறவியார் முகம் மலர்ந்து, "இதோ உத்தம மனிதன் போகிறான்!” என்று கூறினாராம்.

அருட்பாவின் தனிப்பெருஞ் சிறப்பு:

வள்ளலார் பாடிய 5893 பாடல்கள் 'திருவருட்பா' என்னும் பெயரில் ஆறு திருமுறையாகத் தொகுக்கப் பெற்று வெளிவந்துள்ளன. 'மனுமுறை கண்ட வாசகம்', 'சீவகாருண்ய ஒழுக்கம்' என்னும் உரைநடை நூல்களையும் இயற்றியுள்ளார். எழுத்துலகில் நான்கு நூல்களுக்குத் தனித்தனி சிறப்புகள் உண்டு. முதல் சிறப்பு பகவத் கீதைக்கு; அது மனிதன் கேட்க, கடவுள் சொன்னது. இரண்டாவது சிறப்பு, மாணிக்கவாசகரின் திருவாசகத்திற்கு; இது கடவுள் கேட்க, மனிதன் சொன்னது. மூன்றாவது சிறப்பு, திருவள்ளுவரின் திருக்குறளுக்கு; அது மனிதன் கேட்க, மனிதன் சொன்னது. நான்காவது சிறப்பு வள்ளலாரின் அருட்பாவிற்கு; இது மனிதரிலும் அருளாளர்கள் கேட்க அருளாளர் கூறியது. இப்பண்பு அருட்பாவிற்குப் பெருஞ்சிறப்பைத் தருகிறது என்றார் முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.

ஒழுக்கத்தின் திருவுருவம்:

'அருட்பா' என்ற பெயரால் நூல் வெளியிடப்பெற்ற போது, நீதிமன்றத்தில் அது தவறு என்று ஆறுமுக நாவலரும் அவரைச் சார்ந்தவர்களும் வழக்கு தொடர்ந்தார்கள். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவரும் பாடிய தேவாரம், மாணிக்கவாசர் பாடிய திருவாசகம் ஆகியவைகளே 'அருட்பா' என்னும் பெயருக்கு உரியவை என்பது ஆறுமுக நாவலரின் கொள்கை. ஆயினும், ஒருமுறை நீதிமன்றத்திற்குள் இராமலிங்க சுவாமிகள் நுழைந்த போது, மற்றவர்களோடு சேர்ந்து ஆறுமுக நாவலரும் எழுந்து வணக்கம் செலுத்தினாராம். "அவருடைய பாடல்களை 'அருட்பா' அல்ல என்று மறுத்தேனே தவிர, நான் அவரைக் குறைகூறவில்லையே? அவர் உயர்ந்த சான்றோர்; உண்மையான ஒழுக்கத்தின் திருவுருவம். அதனால் அவரை மதிக்கிறேன், போற்றுகிறேன்!” என்றார் ஆறுமுகநாவலர்.

மூன்று தேவைகள்:

தனது கொள்கைகளையும், நெறிமுறைகளையும் எதிர்பார்த்த அளவிற்கு மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை உணர்ந்த வள்ளலார், 'கடை விரித்தேன் கொள்வார் இல்லை' என மனம் வருந்திக் கூறினார்; தைப்பூச நன்னாளில் சித்தி வளாகத்தில் ஓர் அறைக்குள் சென்று கதவை மூடிக் கொண்டு அருட்பெருஞ் ஜோதி ஆகிய இறைவனோடு இரண்டறக் கலந்து விட்டார். இவ்வாறு அவர் சித்தி அடைந்த நாள் 30.01.1874. இம் மண்ணுலகில் 51 ஆண்டுகள் நல்ல வண்ணம் வாழ்ந்து காட்டிய வள்ளலார் இறைவனிடத்தில் வேண்டிய தேவைகள் மூன்று.

அவை:

புண்படா உடம்பு (நோய் இல்லாத உடம்பு), புரைபடா மனம் (குற்றம் இல்லாத மனம்), பொய்படா ஒழுக்கம் (பொய் இல்லாத ஒழுக்கம்). உடம்பு புண்படாது, மனம் புரைபடாது, ஒழுக்கம் பொய்படாது நடந்து காட்டுவதே வள்ளலார் போற்றிய வாழ்க்கை நெறி.

- பேராசிரியர் இரா.மோகன் எழுத்தாளர், பேச்சாளர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82750
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Oct 05, 2014 4:03 pm

ம பொ சி அவர்கள் எழுதிய
வள்ளல்லார் கண்ட ஒருமைப்பாடு
நூலை படிக்க வாய்ப்பிருந்தால் படித்து சுவைத்து
இன்புறலாம்..
-
இது சாகித்தி அகாதமி வெளியீடு

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக