ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னுடைய 26000வது பதிவு :) - இட ஒதுக்கீட்டை இப்படியும் மாற்றியமைக்கலாம்!

+7
விமந்தனி
T.N.Balasubramanian
prabatneb
M.Saranya
Aarthi Krishna
சிவா
krishnaamma
11 posters

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Go down

என்னுடைய  26000வது  பதிவு :) - இட ஒதுக்கீட்டை இப்படியும் மாற்றியமைக்கலாம்! Empty என்னுடைய 26000வது பதிவு :) - இட ஒதுக்கீட்டை இப்படியும் மாற்றியமைக்கலாம்!

Post by krishnaamma Sat Oct 04, 2014 12:58 am

என்னுடைய பதிவுகள் எல்லாமே எங்களுடைய பேச்சு வழக்கில் இருக்கும், இது உங்க எல்லாருக்குமே தெரியும், என்றாலும் இந்த பதிவை அப்படி போடாமல் முடிந்த அளவு செந்தமிழில் போடறேன். புன்னகை ஏன்னா விஷயம் அப்படிப்பட்டது.

எனக்கு ரொம்ப நாளா 2 விஷயம் பற்றி பேசணும் என்கிற எண்ணம் இருந்து கொண்டே இருந்தது......அதை இங்கு பேசலாமா கூடாதா என்று நினைத்து நினைத்து தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தேன். கொஞ்ச நாள் முன் நம் பிரதமர் ஒரு வெப்சைட் ஓபன் செய்து அதில் எப்படிப்பட்ட சஜிஷனும் தரலாம் என்று போட்டிருந்தார், அதை நான் பார்த்தேன்...முதலில் அதில் போடலாம் என்று நினைத்தேன்........ஆனால் அதில் நம் விவரங்கள் எல்லாம் தரவேண்டி இருந்தது.............அப்புறம் தேடிவந்து என்னை அடித்தால்???????????? அது தான் அங்கு போடலை............அப்புறம் இங்கு ஏன் ? என்று நீங்கள் கேட்பது எனக்கு கேட்கிறது..............இங்கு எனக்கு எதுவும் ஆகாதுபுன்னகை .அதுதான் நீங்கள் எல்லாம் இருக்கிறீர்களே? என்னை காப்பாற்ற மாட்டீர்களா? அது தான் தைரியமாய் இங்கு பதிவு போடுகிறேன்.புன்னகை

1. நம் நாடு சுதந்திரம் பெற்று 60 வருடங்களுக்கு மேல் ஆகியும், இன்னும் பல விஷயங்களில் முன்னேறாமல் இருக்கிறோம். எனக்கு 'பளிச்' என்று தென்படுவது முதலில் 'இடஒதுக்கிடு' தான். நான் இதை ரொம்ப மேலோட்டமாக பார்க்க ஆசைப்படுகிறேன். இந்த இடஒதுக்கிடு என்பதே முன்னேறாத மக்கள் முன்னேறவேண்டும் என்பதற்காகத்தானே? அப்படி எத்தனை பேருடைய ஜாதிகள் முன்னேறிவிட்டது? இவர்களும் 'மாய்ந்து மாய்ந்து' ஒதுக்கிடு செய்கிறார்கள்....ஆனால் யாரும் முன்னேறலை.......காமெடி யாக இல்ல? இதற்கு என்ன காரணம் என்று யாராவது யோசித்தார்களா? இதைப்பற்றி எனக்கு தோன்றியதைத்தான் இங்கு எழுத வந்தேன்.

இடஒதுக்கிடு கூடாது என்று நான் சொல்ல வரலை.............ரொம்ப கீழ் மட்டத்தில் இருப்பவர்களுக்கு தங்களுக்கு அரசாங்கத்தில் இருந்து இவ்வளவு உதவிகள் கிடைக்கிறது என்று தெரியவே இல்லை. அப்படி வைத்திருக்கிறார்கள். அதாவது, இன்று பார்த்தால் கிட்டத்தட்ட எல்லா ஜாதிகளுக்குமே   சங்கங்கள் இருக்கின்றன, அவர்கள் ஏன் இப்படிப்பட்ட மக்களுக்கு எடுத்து சொல்லி உதவக் கூடாது   என்று எனக்கு தோன்றும். யோசித்துப்பார்த்ததில், ஒருசிலரே மீண்டும் மீண்டும் அவர்களின் ஜாதிகளுக்கு தரப்படும் இடஒடுக்கீட்டை தொடர்ந்து பெற்று வருகிறார்கள், இவர்கள் நகர்ந்தால் தானே மற்றவர் அந்த சலுகைகளை பெறமுடியும் என்று எனக்கு தோன்றியது........... .  

அதாவது, கடைக்கோடி இந்தியன் வரை தனக்கு உரிய உரிமையை பெறவேண்டுமானால் ...ஏற்கனவே சலுகை பெற்றவர்கள் நகர்ந்து கொள்ள வேண்டும்............அப்படி செய்தால் தான் ஒருநாள் இல்லாவிட்டால் ஒருநாள் எல்லோருக்கும் இந்த சிறப்பு சலுகைகள் சென்று சேரும்.........குறைந்த பக்ஷம் அடுத்த 50 ஆண்டுகளிலாவது............அதற்கு என்ன செய்யவேண்டும்? அதை யோசிக்காமல் நான் எழுத உட்காரவில்லை..........

ஒரு குறிப்பிட்ட சமுகத்திற்கு இடஒதுக்கிடு இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம்...........அதை அவர் ஒரே ஒருமுறை மட்டுமே தன் வாழ்நாளில் பயன் படுத்த வேண்டும். அதாவது, அதை அவை நர்சரி இல் சேரும்போதும் பயன் படுத்தலாம்......டாக்டருக்கு சேரும்போதும் பயன்படுத்தலாம்.....இல்லை காத்திருந்து வேலை இல் சேரும்போதும் பயன் படுத்தலாம்............அவ்வளவுதான்.

இப்படி அவர் உபயோகப்படுத்தியதும், அவரின் birth  certificate  இல் ஒரு முத்திரை போட்டுவிடவேண்டும். இப்படி செய்வதால் அவர் மீண்டும் இந்த இடஒடுக்கீட்டை பயன் படுத்த முடியாது............இது மற்றவர்கள் முன்னுக்கு வர உதவும். இப்படியே போனால் நான் சொன்னது போல அடுத்த 50 வருடத்திலாவது நாம் நாடு உருப்பதும்.......இல்லா விட்டால் .........நடுவில் இருக்கும் சில பேர் மட்டும் நன்றாக கொழித்துக்கொண்டு, அவர்களின் மக்களின் கண்ணிலே அவர்களே மண்ணை போட்டுக்கொண்டு........ரொம்ப கவனமாக தங்கள் குடும்பத்துக்கே எல்லாவற்றையும் பெற்றுக் கொண்டு ...அது தங்களைத்தாண்டி கீழே உள்ள மக்களுக்கு போகாமல் பார்த்துக்கொண்டு காலம் கழிப்பார்கள்.

ரொம்ப சிக்கலான நேரத்தில் இருக்கவே இருக்கிறார்கள் முன்னேறிய மக்கள் என்று சொல்லப்படுகிறவர்கள்...............அவர்களை தாக்கி 2 அறிக்கை விட்டால் போதும், தன் கீழ் உள்ள மக்களை அடக்க புன்னகை இது தான் இப்பொழுது நடக்கிறது.............

ரொம்ப பெரிய அறிவாளிகள் எல்லாம் இருக்கிறார்கள் நம் நாட்டில்' நான் சொல்வது ஒரு சின்ன 'பொறி' தான் இதை ஊதி பெரிதாக்கினால் நம் நாட்டுக்கு நல்லது புன்னகை மக்கள் நலம் அடைவார்கள்.

2. இரண்டாவது, மேலே சொன்ன ஜாதியே இல்லாமல் செய்வது. அது எப்படி என்று பார்ப்போம். 70 களில் சொன்னார்கள் -

"இப்போது காதல் கல்யாணங்கள் பெருகிவிட்டன எனவே எதிர் வரும் காலத்தில் ஜாதிகள் இல்லாமல் போகும்"

என்று புன்னகை 40 -45 வருடங்கள் ஆகிவிட்டன..ஆனால் ஜாதிகள்?????????????அன்று 20 இருந்திருந்தால் இன்று 200 இருக்கிறது சோகம் ஜாதி மாறி கல்யாணங்கள் நடந்ததால் ஜாதி ஒழியவில்லை மாறாக அதிகமாகி விட்டது  ...........கல்யாண வெப்சைட் அல்லது பிள்ளை வேண்டும் பெண் வேண்டும் என்று வரும் விளம்பரங்களில் பாருங்கள் எவ்வளவு ஜாதிகள் இருக்கிறது என்று. இந்த கலப்பு கல்யாணம் செய்து கொண்டவர்கள் கூட அப்பாவின் ஜாதி இல் தேடுகிரார்கள்    ..............அப்போது மட்டும் ஜாதி நினைவுக்கு வருமா? சரி இதற்கு என்ன செய்யலாம்?

முதலில் எல்லோரும் அவர்களின் கல்யாணத்தை அது எப்படி செய்து கொண்டதாக இருந்தாலும் 'பதிவு செய்யவேணும்' என்கிற சட்டம் கட்டாயம் கொண்டுவர வேண்டும். அப்படி செய்து கொள்ளும்போது, செய்து கொள்ளும் தம்பதிகள் வேறு வேறு ஜாதிகளாக இருந்தால், அங்கேயே அப்போதே அவர்களின் கல்யாண sartificate இல் MIXED என்று போட்டு கொடுத்துவிடவேண்டும். அயல் நாடுகளுக்கு வேலைக்கு செல்லும்போது நாம் நம்முடைய மற்ற certificate களுடன் கண்டிப்பாக கல்யாண certificate ம் தரவேண்டும்; கல்யாண போட்டோ வும் தரவேண்டும். அதுபோல இங்கும் கொண்டுவரவேண்டும் .

எனவே. கல்யாண நாள் முதல் அவர்களின் ஜாதி யாருக்கும் தெரியாது. அப்படி செய்வதால், அவர்களின் குழந்தைகளின் படிப்பின் போதும் இதே MIXED தான் , நாளை கல்யாணம் வரும்போது, வரன் பார்க்க இதே MIXED என்று மட்டும் பார்த்து செய்தால் போதுமானதாக இருக்குமே. இப்படி செய்வதால், பல ஜாதிகள் ஒழிந்து சிலவாக குறையும்.

அவ்வளவுதான் .....எனக்கு தோன்றியதை எழுதிவிட்டேன் ........ படித்தது விட்டு திட்டவேண்டாம்............புன்னகை


Last edited by krishnaamma on Sat Oct 04, 2014 6:34 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

என்னுடைய  26000வது  பதிவு :) - இட ஒதுக்கீட்டை இப்படியும் மாற்றியமைக்கலாம்! Empty Re: என்னுடைய 26000வது பதிவு :) - இட ஒதுக்கீட்டை இப்படியும் மாற்றியமைக்கலாம்!

Post by சிவா Sat Oct 04, 2014 1:15 am

இடஒதுக்கிடு என்பதே முன்னேறாத மக்கள் முன்னேறவேண்டும் என்பதற்காகத்தானே? அப்படி எத்தனை பேருடைய ஜாதிகள் முன்னேறிவிட்டது? இவர்களும் 'மாய்ந்து மாய்ந்து' ஒதுக்கிடு செய்கிறார்கள்....ஆனால் யாரும் முன்னேறலை

முதல் அடியே சாட்டையடி! அதானே, இன்னும் யாருமே முன்னேறவில்லையா? அப்படி முன்னேறியிருந்தால் இன்னும் எதற்கு இடஒதுக்கீடு?

இன்று பார்த்தால் கிட்டத்தட்ட எல்லா ஜாதிகளுக்குமே சங்கங்கள் இருக்கின்றன, அவர்கள் ஏன் இப்படிப்பட்ட மக்களுக்கு எடுத்து சொல்லி உதவக் கூடாது

ஹலோ, நாங்க ஜாதிச்சங்கம், ஜாதிக் கட்சி ஆரம்பிக்கிறதே, அந்த ஜாதி மக்களிடம் பிடுங்கித் தின்பதற்காகத்தான், எங்கள் கொள்கை அப்படி இருக்கும்பொழுது நாங்கள் எப்படி உதவி செய்வது?

கடைக்கோடி இந்தியன் வரை தனக்கு உரிய உரிமையை பெறவேண்டுமானால் ...ஏற்கனவே சலுகை பெற்றவர்கள் நகர்ந்து கொள்ள வேண்டும்

ஒருமுறை ஓசியில் தின்று பழகிவிட்டால், அப்புறமும் அதைத்தானே நாங்கள் எதிர்பார்ப்போம், எனவே இது எங்களால் இயலாத காரியம்!

அவர்களின் குழந்தைகளின் படிப்பின் போதும் இதே MIXED தான் , நாளை கல்யாணம் வரும்போது, வரன் பார்க்க இதே MIXED என்று மட்டும் பார்த்து செய்தால் போதுமானதாக இருக்குமே

இந்த ஜாதிக்குக் கட்சி ஆரம்பித்தால் அதற்கு நான் தான் தலைவராக இருப்பேன் என்பதை இப்பொழுதே ஆணித்தரமாகக் கூறிக் கொள்கிறேன்!

இடஒதுக்கீடு என்று கொள்ளையடிக்கும் கூட்டத்திற்கு நல்ல கருத்தைக் கூறியுள்ளீர்கள் அக்கா! ஆனால் இவற்றை ஏற்றுக் கொள்ளத்தான் யாரும் தயாராக இல்லை என்பது தான் உண்மை! வாங்கிப் பழக்கப்பட்டவர்கள் அதை எப்படி விட்டுக் கொடுப்பார்கள்!


என்னுடைய  26000வது  பதிவு :) - இட ஒதுக்கீட்டை இப்படியும் மாற்றியமைக்கலாம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

என்னுடைய  26000வது  பதிவு :) - இட ஒதுக்கீட்டை இப்படியும் மாற்றியமைக்கலாம்! Empty Re: என்னுடைய 26000வது பதிவு :) - இட ஒதுக்கீட்டை இப்படியும் மாற்றியமைக்கலாம்!

Post by krishnaamma Sat Oct 04, 2014 9:51 am

//இந்த ஜாதிக்குக் கட்சி ஆரம்பித்தால் அதற்கு நான் தான் தலைவராக இருப்பேன் என்பதை இப்பொழுதே ஆணித்தரமாகக் கூறிக் கொள்கிறேன்! //

எனக்கு ஒன்றும் அப்ஜக்க்ஷன் இல்லை சிவா ஜாலி ஜாலி ஜாலி

//இடஒதுக்கீடு என்று கொள்ளையடிக்கும் கூட்டத்திற்கு நல்ல கருத்தைக் கூறியுள்ளீர்கள் அக்கா! ஆனால் இவற்றை ஏற்றுக் கொள்ளத்தான் யாரும் தயாராக இல்லை என்பது தான் உண்மை! வாங்கிப் பழக்கப்பட்டவர்கள் அதை எப்படி விட்டுக் கொடுப்பார்கள்!//

ஊதும் சங்கை ஊதிடுவொம் சிவா, விடியும்போது விடியட்டும்............சரி பிரதமர் வெப்சைட் க்கு இதை அனுப்பிடட்டா? புன்னகை
.
.
.

ஊக்கத்துக்கும், சாட்டையடி பின்னுட்டத்துக்கும் நன்றி சிவா புன்னகை சூப்பருங்க நன்றி அன்பு மலர்
.
.
நம் நண்பர்களின் கருத்துக்களுக்கு  காத்திருப்போம்   ! ரிலாக்ஸ்
.
.
ஒரு சின்ன வேண்டுகோள் சிவா................இந்த smilies  எல்லாம் ரொம்ப பழசாகிவிட்டது.....வேற புதுசா போடுங்களேன்.............. அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

என்னுடைய  26000வது  பதிவு :) - இட ஒதுக்கீட்டை இப்படியும் மாற்றியமைக்கலாம்! Empty Re: என்னுடைய 26000வது பதிவு :) - இட ஒதுக்கீட்டை இப்படியும் மாற்றியமைக்கலாம்!

Post by Aarthi Krishna Sat Oct 04, 2014 1:46 pm

மிக அருமையான பதிவு அம்மா..என்னுடைய  26000வது  பதிவு :) - இட ஒதுக்கீட்டை இப்படியும் மாற்றியமைக்கலாம்! 3838410834  இது மாதிரி நடந்தால் நம் நாடு உருப்பட்டுவிடும்.ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி
Aarthi Krishna
Aarthi Krishna
பண்பாளர்


பதிவுகள் : 92
இணைந்தது : 08/08/2012

Back to top Go down

என்னுடைய  26000வது  பதிவு :) - இட ஒதுக்கீட்டை இப்படியும் மாற்றியமைக்கலாம்! Empty Re: என்னுடைய 26000வது பதிவு :) - இட ஒதுக்கீட்டை இப்படியும் மாற்றியமைக்கலாம்!

Post by M.Saranya Sat Oct 04, 2014 3:08 pm

மிகவும் அருமையான பதிவு அம்மா!!!
நீங்கள் கூறிய இரண்டு கருத்துக்களும் பெரும்பாலான மக்களின் உள்ளத்தில் எழும் கேள்விகளே !!!
ஆனால் யாரும் கேட்க மாட்டார்கள்....
நீங்கள் கேட்டுவிட்டீர்கள்.

[quote="krishnaamma"]என்னுடைய பதிவுகள் எல்லாமே எங்களுடைய பேச்சு வழக்கில் இருக்கும், இது உங்க எல்லாருக்குமே தெரியும், என்றாலும் இந்த பதிவை அப்படி போடாமல் முடிந்த அளவு செந்தமிழில் போடறேன். புன்னகை ஏன்னா விஷயம் அப்படிப்பட்டது.

அம்மா நீங்கள் இவ்வாறு அழகு தமிழில் சிந்திப்பதே ஆச்சரியமாக உள்ளது....

மொழிப்பற்று, மதப்பற்று இருக்கும் வரை ஜாதிப்பற்றும் நிலைத்து நிற்கும்....

கலப்பு திருமணங்கள் திருமணம் வரை மட்டுமே ஜாதியை மறுக்கின்றன. ஆனால் குழந்தைகள் என்று வரும்போது கண்டிப்பாக ஏதாவதொரு ஜாதியை கடைபிடிக்கின்றனர்....


நீங்கள் கூறியவாறு இடஒதுக்கீடு அரசாங்கத்தால் நடத்தப்படும் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு நிறுவங்களுக்கு மட்டுமே பொருந்தும்...

ஆனால் இன்று எல்லாமே தனியார் மயமாகி வருகிறது.. நாமும் தனியார் கல்வி நிறுவனங்களையே  நாடுகிறோம்.அதனால் பலபேருக்கு சலுகை கிடைப்பதில்லை...

ஆகவே ஒரே ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் முறை வர வேற்க  தகுந்தது.... :நல்வரவு:  :நல்வரவு:

இட ஒதுக்கீடு பிரச்சனையால் பல பேருக்கு உரிய உயர் கல்வி கிடைப்பதில்லை இது ஒரு பெரிய குறை ...
தகுதியின் அடிப்படையில் உயர் கல்வி மற்றும் வேலை வழங்கப்பட வேண்டும்.

ஆனால் இடையில் இந்த ஜாதியும் மற்றும் ஊழலும் இருக்கும் வரை எதுவுமே ஒழுங்காக நடைபெறாது....
உங்களின் மேலான கருத்துக்களை தாரளமாக நீங்கள் நமது நாட்டின் பிரதமரின் இணையத்தில் பதிவிடலாம் ....


வாழ்த்துக்கள் அம்மா!!!
நமது வாழ்க்கை சீராக வேண்டுமெனில் இந்த மாற்றம் அவசியமானது...

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

என்னுடைய  26000வது  பதிவு :) - இட ஒதுக்கீட்டை இப்படியும் மாற்றியமைக்கலாம்! Empty Re: என்னுடைய 26000வது பதிவு :) - இட ஒதுக்கீட்டை இப்படியும் மாற்றியமைக்கலாம்!

Post by krishnaamma Sat Oct 04, 2014 5:56 pm

Aarthi Krishna wrote:மிக அருமையான பதிவு அம்மா..என்னுடைய  26000வது  பதிவு :) - இட ஒதுக்கீட்டை இப்படியும் மாற்றியமைக்கலாம்! 3838410834  இது மாதிரி நடந்தால்  நம் நாடு உருப்பட்டுவிடும்.ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

தேங்க்ஸ் ஆர்த்தி , பொறுமையாய் படித்து பதில் போட்டிருக்கியே சூப்பர் மா புன்னகை அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

என்னுடைய  26000வது  பதிவு :) - இட ஒதுக்கீட்டை இப்படியும் மாற்றியமைக்கலாம்! Empty Re: என்னுடைய 26000வது பதிவு :) - இட ஒதுக்கீட்டை இப்படியும் மாற்றியமைக்கலாம்!

Post by krishnaamma Sat Oct 04, 2014 6:16 pm

M.Saranya wrote:மிகவும் அருமையான பதிவு அம்மா!!!
நீங்கள் கூறிய இரண்டு கருத்துக்களும் பெரும்பாலான மக்களின் உள்ளத்தில் எழும் கேள்விகளே !!!
ஆனால் யாரும் கேட்க மாட்டார்கள்....
நீங்கள் கேட்டுவிட்டீர்கள்.


அம்மா நீங்கள் இவ்வாறு அழகு தமிழில் சிந்திப்பதே ஆச்சரியமாக உள்ளது....


மொழிப்பற்று, மதப்பற்று இருக்கும் வரை ஜாதிப்பற்றும் நிலைத்து நிற்கும்....

கலப்பு திருமணங்கள் திருமணம் வரை மட்டுமே ஜாதியை மறுக்கின்றன. ஆனால் குழந்தைகள் என்று வரும்போது கண்டிப்பாக ஏதாவதொரு ஜாதியை கடைபிடிக்கின்றனர்....


நீங்கள் கூறியவாறு இடஒதுக்கீடு அரசாங்கத்தால் நடத்தப்படும் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு நிறுவங்களுக்கு மட்டுமே பொருந்தும்...

ஆனால் இன்று எல்லாமே தனியார் மயமாகி வருகிறது.. நாமும் தனியார் கல்வி நிறுவனங்களையே  நாடுகிறோம்.அதனால் பலபேருக்கு சலுகை கிடைப்பதில்லை...

ஆகவே ஒரே ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் முறை வர வேற்க  தகுந்தது.... :நல்வரவு:  :நல்வரவு:

இட ஒதுக்கீடு பிரச்சனையால் பல பேருக்கு உரிய உயர் கல்வி கிடைப்பதில்லை இது ஒரு பெரிய குறை ...
தகுதியின் அடிப்படையில் உயர் கல்வி மற்றும் வேலை வழங்கப்பட வேண்டும்.

ஆனால் இடையில் இந்த ஜாதியும் மற்றும் ஊழலும் இருக்கும் வரை எதுவுமே ஒழுங்காக நடைபெறாது....
உங்களின் மேலான கருத்துக்களை தாரளமாக நீங்கள் நமது நாட்டின் பிரதமரின் இணையத்தில் பதிவிடலாம்
....


வாழ்த்துக்கள் அம்மா!!!
நமது வாழ்க்கை சீராக வேண்டுமெனில் இந்த மாற்றம் அவசியமானது...

மேற்கோள் செய்த பதிவு: 1092795



நன்றி சரண்யாபுன்னகை

எதுக்கு ஆச்சர்யம் சரண்யா? .........எனக்கு தமிழ் என்றால் உயிர் ...........நான் +2 வில் தமிழ் தான் எடுத்து படித்தேன்......பிறகு குரூப் மா றும்படி ஆனது.................எங்க அப்பாவிடம் 2 பீரோ நிறைய தமிழ் புத்தகங்கள்.................பல அபூர்வ புத்தகங்கள் இருந்தது........அதை படிக்கும் ஆசை இல் நான் தமிழ் படிக்க சேர்ந்தேன்..............பதினெண் கீழ்கணக்கு  கூட அப்பா வாங்கி வைத்துவிட்டார் நான் படிக்க..................அப்புறம் என் படிப்பு மாறிப்போச்சு.............என்றாலும், நான் கல்யாணம் ஆகி தனியே போனதும்  அப்பாக்கும்  தாத்தாவுக்கும்   ( மாமனார் புன்னகை ) குறைந்தது வாரத்துக்கு 3 லெட்டர் போட்டுவிடுவேன்..........அப்போதெல்லாம் என் கடிதங்களை படிப்பதற்கே ஒரு ரசிகர் வட்டம் உண்டு என்று அவர்கள் இருவருமே சொல்வார்கள்...............

" எங்களைவிட உன் லேட்டர்க்கு இங்கு காத்திருப்பவர்கள் அதிகம், எனவே,தவறாமல் லெட்டெர் போடவும்" என்று பதில் போடுவார்கள் புன்னகை...அதேபோல் செந்தமிழில் எழுதுவதை விட பேச்சு வழக்கில் எழுது, நீயே பக்கத்தில் உட்கார்ந்து பேசுவது போல இருக்கு," என்று கேட்டுக்கொண்டதால்............( தாத்தா சாகும் வரை நான் எப்போ அவரை பார்க்கப்போனாலும் ரொம்ப சந்தோஷப்படுவார், பக்கத்தில் உட்கார்ந்து பேசிக்கொண்டே இருக்க சொல்வார்.............ம்ம்ம்....அது ஒரு காலம் ..அழுகை அழுகை அழுகை ) .............இன்று  வரை அதையே பின் பற்றுகிறேன்.................

உங்களுக்கு படிக்க கஷ்டமாக இருந்தால் சொல்லுங்கள், நடையை செந்தமிழுக்கு  மாற்றிடலாம்  புன்னகை அன்பு மலர்
.
அதேபோல பிரதமருக்கு அனுப்பிடறேன் புன்னகை


Last edited by krishnaamma on Mon Oct 06, 2014 12:26 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

என்னுடைய  26000வது  பதிவு :) - இட ஒதுக்கீட்டை இப்படியும் மாற்றியமைக்கலாம்! Empty Re: என்னுடைய 26000வது பதிவு :) - இட ஒதுக்கீட்டை இப்படியும் மாற்றியமைக்கலாம்!

Post by prabatneb Sat Oct 04, 2014 8:00 pm

அருமையான பதிவு. நல்ல கருத்துக்கள். நம் நாடு முன்னேற இதில் சில வழிகளை முயற்சி செய்து பார்க்கலாம்.
prabatneb
prabatneb
பண்பாளர்


பதிவுகள் : 201
இணைந்தது : 04/04/2011

Back to top Go down

என்னுடைய  26000வது  பதிவு :) - இட ஒதுக்கீட்டை இப்படியும் மாற்றியமைக்கலாம்! Empty Re: என்னுடைய 26000வது பதிவு :) - இட ஒதுக்கீட்டை இப்படியும் மாற்றியமைக்கலாம்!

Post by krishnaamma Sat Oct 04, 2014 8:14 pm

prabatneb wrote:அருமையான பதிவு. நல்ல கருத்துக்கள். நம் நாடு முன்னேற இதில் சில வழிகளை முயற்சி செய்து பார்க்கலாம்.
மேற்கோள் செய்த பதிவு: 1092842

நன்றி பிரபா ! நன்றி அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

என்னுடைய  26000வது  பதிவு :) - இட ஒதுக்கீட்டை இப்படியும் மாற்றியமைக்கலாம்! Empty Re: என்னுடைய 26000வது பதிவு :) - இட ஒதுக்கீட்டை இப்படியும் மாற்றியமைக்கலாம்!

Post by T.N.Balasubramanian Sun Oct 05, 2014 5:26 pm

உங்கள் கட்டுரை படித்தேன் . நன்றாக உள்ளது .
பின்னூட்டங்கள் பலர் இட்டுள்ளனர் . அவைகளையும் படிக்கவேண்டும்
எந்தன் கருத்துகள் .
இட ஒதுக்கீடு டாக்டர் அம்பேத்கர் , சட்ட வல்லுநர் , இந்திய பாராளுமன்ற சட்டதிட்டங்களை
வழி வகுத்தவர் , அவர்களால் தாழ்த்தப்பட்ட ஜாதியினர் ,மேம்பட , வகுக்கப்பட்ட வழிமுறைகள் .
சட்டம் கொண்டு வந்த சமயம் , உண்மையிலேயே நடைமுறையில் தாழ்த்தப்பட்ட ஜாதியினர்
இருந்தனர் .அவர்கள் முன்னேற /அவர்கள் ஜாதியை முன்னிலை கொண்டுவர , சட்டம் ஒன்றை உருவாக்கினார் .அதன் படி .அது 50 ( அல்லது அதை விட குறைவா ,என்று நினைவு இல்லை) ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும். ஏன் 50 ஆண்டு .? சட்டம் இயற்றிய அந்த ஆண்டே
பிறக்கும் தா.ப .ஜா .குழந்தைகள் , சலுகைகள் பெற்று , 20/25 ஆண்டுகளுக்கு பிறகு பிறக்கும்
அவர்கள் குழந்தைகளும் சலுகைகள் பெற்று முன்னேற , போதிய அளவு , இந்த 50 ஆண்டு
கால அவகாசம் .
அரசும் முன்னேற்றி இருக்கவேண்டும் . தா.ப.ஜா . முன்னேறி இருக்கவேண்டும் .

அரசியல் கட்சிகள் தங்கள் ஓட்டுகளை தங்க வைக்க , செய்த /செய்கின்ற உத்திகளால் இவை
இன்று நிரந்தரம் ஆகிவிட்டது .
தாபஜா முன்னேற இல்லை சொல்ல முடியாது . முன்னேறி இருக்கிறார்கள் . இலவசமாக
சில சலுகைகள் அனுபவிக்க முடியும் என்றால் , அனுபவிக்கலாமே என்பது மனித குணம் .
(உதாரணமாக அரசு டிவி /மிக்ஸ்சி கொடுத்த போது காரில் வந்து ,queue வில் நின்று , இலவசங்களை
பெற்றவர்களும் உண்டு) .
தகுதியை மறந்து/மறைத்து பெறும் இட ஒதுக்கீடு சலுகைகள் , நாட்டிற்கு நன்மை பயக்காது .
சலுகையை அனுபவித்தவர்களுக்கும் நன்மை பயக்காது .(உம் ) அயல்நாட்டு வேலை / கல்லூரி சேர்க்கைகள் தேர்ச்சி பெற முடிவதில்லை . தேர்ச்சி பெற்றாலும் சமாளிக்க .முடிவதில்லை .
தேர்வு முறையில் , தகுதி உள்ளவர்களை தேர்ந்து எடுத்து , அவசியம் இருக்கும் எனில் , நிதி உதவி (subsidy ) செய்து , முன்னேற வைக்கலாம் .அதுவும் , அவர்கள் நிலைமைக்கேற்ப ,நிதி உதவி .80% முதல் 10%வரை நிதி உதவி .
அரசு டிவி /மிக்ஸ்சி கொடுத்த போது கூட 30 % (towards packing and transportation ) 70% subsidy என்று கூறி இருந்தால் எவ்வளவு பேர் டிவி /மிக்ஸ்சி வாங்கி இருப்பார்கள் . பணம் கொடுக்கவேண்டும் எனில் , அவசியமானவர்கள் மட்டுமே சலுகை விலையில் வாங்கி இருப்பார் .
இலவசம் இலவசம் என்று கொடுத்தே சமூகத்தை வளரவிடாமல் கெடுத்து விட்டனர் .என்னை கேட்டால் இட ஒதுக்கீடே வேண்டாம் . தேவை அறிந்து நிதி உதவி அளித்தால் போதும் .

இடஒடுக்கீடால் பாதிக்கப்பட்ட ,(எனக்கு தெரிந்த ) ஒரு சம்பவத்தை உங்களுடன் பகிர்கிறேன்
தேர்வு முறையில் ,முதலிடம் ,ரெண்டாமிடம், மூன்றாமிடம் , என மூவர் பெயர் .மூன்றாமிடம் ஒரு தாபஜா . முதலிடம் & மூன்றாமிடம் பதவி உயர்வு பெற்றனர் . ரெண்டாமிடம் காரணம் கேட்டபோது ,அரசு விதிமுறைகள் ,கொடுக்கவேண்டிய கட்டாயம் .ரெண்டு பதவிகளுக்கு கொடுத்துள்ளோம் . ஒரே ஒரு பதவிதான் இருக்கிறது என்றால் ,அப்போதும் மூன்றாமிடத்திற்கு தான் கொடுத்து இருப்போம். அரசு விதிமுறை என்றனர் .
இட ஒதுக்கீடு செய்த அநீதி என்று உரக்க கூறமுடியுமா ? மனதிற்குள் புழுங்கிகொள்ளத்தான் வேண்டும் .

இடஒதுக்கீடு எல்லா விஷயத்திலும் பயன்படுத்த முடியுமா ?
முடியாது --விஷய ஞானம் , தேர்ச்சி பெற்றவர்களை தான் நாடுகிறோம் .
எந்த அரசியல்வாதியும் தனக்கு இதய சஸ்திர சிகிச்சைக்கு , இடஒதுக்கீடு முறையில்
டாக்டர்களை தேர்ந்து எடுக்கமாட்டார்கள் .
மக்களை ஏமாற்றுவதற்கு / அவர்கள் முன்னேறாமல் இருந்தால்தான் தாங்கள் வாழமுடியும் ,
அரசியல் பண்ணமுடியும் -பணம் சேர்க்கமுடியும் என்கின்ற சுயநலத்தால் , அரசியல்வாதிகள்
கையாளுகிற கபட நாடகம் .
மக்களை முன்னேற்ற வேண்டுமெனில் , இலவசங்களை தவிர்த்து ,தேவை அறிந்து ,தேவைகளை
பூர்த்தி செய்யவேண்டும் .
ஜாதிகள் இல்லா சமூகத்தை உருவாக்க முயற்சிக்காமல் , புது புது ஜாதிகளை உருவாக்கி ,சமூகத்தை கெடுப்பதில் உடன்பாடு இல்லை .

இடஒதுக்கீடு என்ற திட்டத்தை ஒதுக்க வேண்டிய காலம் வந்தால்தான் ,
வல்லமைக்கு முதலிடம் கொடுத்தால்தான் நாடு முன்னேறமுடியும் என்று எண்ணுகிறேன் .
முதலிடம் வகிக்கும் நாடுகளில் , இது மாதிரி ஒதுக்கீடு முறைகள் இருப்பதாக தெரியவில்லை .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35038
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

என்னுடைய  26000வது  பதிவு :) - இட ஒதுக்கீட்டை இப்படியும் மாற்றியமைக்கலாம்! Empty Re: என்னுடைய 26000வது பதிவு :) - இட ஒதுக்கீட்டை இப்படியும் மாற்றியமைக்கலாம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum