புதிய பதிவுகள்
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 6:53

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 2:07

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:09

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 0:56

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 0:43

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 23:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:14

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 22:45

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 22:29

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 21:30

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 21:24

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 21:21

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 21:20

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 21:19

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 21:19

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 21:18

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 21:18

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 21:16

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:09

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:54

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 18:31

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:08

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 16:23

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 13:02

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:57

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 11:16

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 11:16

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 11:15

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 11:14

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon 4 Nov 2024 - 17:51

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 13:37

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 11:31

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 11:25

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 11:23

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 11:21

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:30

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:28

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:26

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:24

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:22

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:21

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:20

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:19

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:17

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:14

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:13

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:12

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:09

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீதிமன்றங்களும், சட்டங்களும்  ஜெயலலிதாவின் அடிமைகளல்ல! : ராமதாஸ் Poll_c10நீதிமன்றங்களும், சட்டங்களும்  ஜெயலலிதாவின் அடிமைகளல்ல! : ராமதாஸ் Poll_m10நீதிமன்றங்களும், சட்டங்களும்  ஜெயலலிதாவின் அடிமைகளல்ல! : ராமதாஸ் Poll_c10 
24 Posts - 53%
heezulia

14 Posts - 31%
prajai

1 Post - 2%
mohamed nizamudeen

Balaurushya

ஆனந்திபழனியப்பன்

Barushree

nahoor

kavithasankar

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீதிமன்றங்களும், சட்டங்களும்  ஜெயலலிதாவின் அடிமைகளல்ல! : ராமதாஸ் Poll_c10நீதிமன்றங்களும், சட்டங்களும்  ஜெயலலிதாவின் அடிமைகளல்ல! : ராமதாஸ் Poll_m10நீதிமன்றங்களும், சட்டங்களும்  ஜெயலலிதாவின் அடிமைகளல்ல! : ராமதாஸ் Poll_c10 
78 Posts - 73%

14 Posts - 13%

4 Posts - 4%

3 Posts - 3%

2 Posts - 2%

Shivanya

1 Post - 1%

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீதிமன்றங்களும், சட்டங்களும் ஜெயலலிதாவின் அடிமைகளல்ல! : ராமதாஸ்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 4 Oct 2014 - 15:11

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை

’’தமிழ்நாட்டு மக்களின் பணத்தைக் கொள்ளையடித்து வருவாய்க்கு மீறிய வகையில் சொத்துக் குவ ித்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை அளிக்கப்பட்டதை எதிர்த்து அ.தி.மு.க.வினர் நடத்தி வரும் வன்முறைகளும், போராட்டங்களும் எல்லை மீறிக் கொண்டிருக்கின்றன. கட்சித் தலைமைக்கு விசுவாசத்தைக் காட்டுவதாக நினைத்துக் கொண்டு போராட்டம் என்ற பெயரில் அ.தி.மு.க.வினர் அரங்கேற்றும் கேலிக்கூத்துக்கள் நீதித்துறையின் மாண்பை குலைப்பதாக உள்ளன.

ஜெயலலிதாவுக்கு தண்டனை வழங்கப்பட்டதைத் தொடர்ந்து பொதுச்சொத்துக்கள் உள்ளிட்ட பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களைச் சேதப்படுத்திய அ.தி.மு.க.வினர், ஜெயலலிதாவின் பிணை மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டதைக் கூட பொறுத்துக் கொள்ள முடியாமல் சேலம் உள்ளிட்ட நகரங்களில் பேரூந்துகளை அடித்து உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.

ஜெயலலிதா முன் அமைச்சர்களும், கட்சி நிர்வாகிகளும் எப்படி கைகட்டி, வாய்பொத்தி நிற்கிறார்களோ? அதேபோல் சட்டங்களும், நீதிமன்றங்களும் நிற்க வேண்டும் என்று அ.தி.மு.க.வினர் எதிர்பார்க்கின்றனர். அதற்கு மாறாக ஊழலை ஒழிக்கும் நோக்குடன் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா அளித்ததை அ.தி.மு.க.வின் காரியவாதிகளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அதனால் தான் தமிழகம் முழுவதும் வன்முறை வெறியாட்டங்களை நடத்தி வருகின்றனர்.

ஜெயலலிதாவும், அவரது கூட்டாளிகளும் எப்படியெல்லாம் சொத்துக்களைக் குவித்தார்கள் என்பதை நீதிபதி குன்ஹா தமது தீர்ப்பில் விளக்கியுள்ளார். ‘‘ ஜெயலலிதா ஊழல் மூலம் சேர்த்த பணத்தில் ரூ.14 கோடியை நமது எம்.ஜி.ஆர். நாளிதழுக்கான சந்தா என்ற பெயரில் ஜெயா பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்தில் சேர்த்துள்ளார். இந்த பணம் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் பங்குதாரர்களாக உள்ள மற்ற நிறுவனங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டு, அந்த நிறுவனங்களின் பெயரில் சொத்துக்கள் வாங்கிக் குவிக்கப்பட்டிருக்கின்றன.

ஆனால், சந்தா சேர்த்ததற்கான ரசீதுகள் உள்ளிட்ட எந்த ஆவணங்களும் இல்லை. அவையெல்லாம் திருட்டு போய்விட்டது என்று காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டதாக ஜெயலலிதா தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்ட மனு கூட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை’’ என்று தீர்ப்பில் குறிப்பிட்டதன் மூலம் ஊழலை மறைக்க செய்யப்பட்ட பித்தலாட்டங்களை நீதிபதி மைக்கேல் டி குன்ஹா அம்பலப்படுத்தியிருக்கிறார்.

தீர்ப்பின் இன்னொரு பகுதியில்,‘‘ சொத்து வழக்கில் குற்றஞ்சாற்றப்பட்டோரை பங்குதாரர்களாகக் கொண்டு 1991&96 காலத்தில் 18 நிறுவனங்கள் தொடங்கப்பட்டிருக்கின்றன. இந்த காலகட்டத்தில் இவை குறிப்பிடும்படி எந்த வணிகமும் செய்யவில்லை. ஆனால், இவற்றின் பெயரில் தான் பெருமளவில் சொத்துக்கள் வாங்கப்பட்டிருக்கின்றன’’ என்று நீதிபதி கூறியிருக்கிறார். இதற்குப் பிறகும் தீர்ப்புக்கு உள்நோக்கம் கற்பிப்பது மன்னிக்க முடியாத குற்றமாகும்.

ஊழல் வழக்குகளில் முதல்வராக இருந்தவர்களோ அல்லது அரசியல்கட்சித் தலைவர்களோ தண்டனை பெறுவதும், சிறையில் அடைக்கப்படுவதும் இது முதல் முறையல்ல... கர்நாடக முதல்வராக இருந்த எடியூரப்பா மீது 2 ஊழல் வழக்குகளைத் தொடர அம்மாநில மக்கள் நீதிமன்றம் ஆணையிட்டதை தொடர்ந்து 2011 ஆம் ஆண்டு அக்டோபர் 15 ஆம் தேதி கைது செய்யப்பட்டு இப்போது ஜெயலலிதா உள்ள அதே சிறையில், அதே அறையில் 21 நாட்கள் அடைக்கப்பட்டிருந்தார்.

அதேபோல், கர்நாடக அமைச்சராக இருந்த ஜனர்த்தன ரெட்டி 2011ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதி சுரங்க முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு 2 ஆண்டுகளாக ஆந்திர சிறையிலும், கடந்த ஓராண்டாக ஜெயலலிதா இப்போது அடைக்கப்பட்டுள்ள பரப்பன அக்ரகாரம் சிறையிலும் விசாரணைக் கைதியாக உள்ளார். கர்நாடக மாநிலத்திலேயே இவர்கள் முதலமைச்சராகவும், அமைச்சராகவும் இருந்த போதிலும், இவர்கள் மீதான குற்றச்சாற்று இன்னும் நிரூபிக்கப்படவில்லை என்ற போதிலும் இவர்கள் சிறையில் அடைக்கப்பட்டதை எதிர்த்து இவர்களின் கட்சியி னர் எந்தவித போராட்டத்தையும் நடத்தி நீதித்துறையை அச்சுறுத்தவில்லை.

அதேபோல் ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட தலைவர்களும் நீதிமன்றத் தீர்ப்புகளை தலைவணங்கி ஏற்றுக் கொண்டுள்ளனர். கால்நடைத்தீவன ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சரும், பீகார் மாநில முதலமைச்சருமான லாலு பிரசாத்துக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து ராஞ்சி சிறப்பு நீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பர் 30 ம் தேதி தீர்ப்பளித்தது. அதன்பின் 75 நாட்கள் சிறையில் இருந்த லாலு கடந்த டிசம்பர் மாதம் 13 ஆம் தேதி தான் தேர்தல் பிரச்சாரம் செய்வதற்காக விடுதலை செய்யப்பட்டார்.

ஆசிரியர் நியமன ஊழலில் சிக்கி 10 ஆண்டு சிறை தண்டனை பெற்ற ஹரியானா மாநில முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலா கடந்த ஜனவரி 22 ஆம் தேதி முதல் மே 23 ஆம் தேதி வரை 123 நாட்கள் சிறை தண்டனை அனுபவித்த பிறகே பிணை பெற முடிந்தது. அதுவும் 78 வயதான அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்காக இடைக்கால பிணை மட்டுமே வழங்கப்பட்டது. அதற்கு முன் அவர்களுக்கு பிணை மறுக்கப்பட்டபோதெல்லாம் அவர்கள் நிவாரணம் வேண்டி மேல் நீதிமன்றங்களுக்குத் தான் சென்றார்களே தவிர பொதுமக்கள் என்ற பெயரில் கட்சிக்காரர்களைத் திரட்டி போராட்டம் நடத்தவில்லை. சட்டத்தையும், நீதியையும் அவர்கள் மதித்தார்கள்; மிதிக்கவில்லை.

ஜெ யலலிதாவை அப்பழுக்கற்றவர் என்பது போல காட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. உண்மையில் ஊழல் வழக்கில் ஜெயலலிதா தண்டிக்கப்படுவதும் புதிதல்ல. 1996ஆம் ஆண்டில் ஜெயலலிதா மற்றும் அவரது சகாக்கள் மீது மொத்தம் 33 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதில் ஜெயலலிதா மீது மட்டும் சொத்துக்குவிப்பு வழக்கு, நிலக்கரி இறக்குமதி ஊழல் வழக்கு, டான்சி வழக்கு, பிளசன்ட் ஸ்டே வழக்கு, வண்ணத்தொலைக் காட்சிப் பெட்டி ஊழல் வழக்கு, பிறந்த நாள் பரிசு வழக்கு, வருமானவரி கணக்கு தாக்கல் செய்யாத வழக்கு, ஹைதராபாத் திராட்சைத் தோட்ட வருமான வழக்கு, தெற்காசிய விளையாட்டுப் போட்டி விளம்பர வழக்கு, கிரானைட் குவாரி வழக்கு, ஸ்பிக் பங்கு வழக்கு, வெளிநாட்டிலிருந்து பணம் பெற்ற வழக்கு என 12 வழக்குகள் தொடரப்பட்டன. ஏற்கனவே டான்சி வழக்கில் 3 ஆண்டுகளும், கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே வழக்கில் ஓராண்டும் சிறை தண்டனை பெற்றவர் தான் ஜெயலலிதா. பின்னர் எப்படியோ இவ்வழக்குகளில் மேல்முறையீடு செய்து தப்பி விட்டார். மற்ற வழக்குகளையும் தமது செல்வாக்கால் ஒன்றுமில்லாமல் செய்து விட்டார்.

இந்த வழக்குகள் தொடரப்பட்ட போது, வண்ணத்தொலைக்காட்சிப் பெட்டி ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜெயலலிதா 3 வாரங்களுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இப்போது போட்டிப்போட்டுக்கொண்டு போராட்டம் நடத்துபவர்கள் அப்போது அடங்கிக் கிடந்தனர். பல வழக்குகளில் ஜெயலலிதா எப்படியோ விடுதலை ஆன போது அந்த தீர்ப்புகள் நியாயமானவையா? என அ.தி.மு.க.வினரும், அவர்களின் ஆதரவாளர்களும் கருத்துக் கூறவில்லை.

ஆனால், இப்போது ஜெயலலிதாவுக்கு தண்டிக்கப்பட்டதை எதிர்த்து விசாரணை நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹாவில் தொடங்கி உச்சநீதிமன்ற நீதிபதிகள் வரை அனைவர் மீதும் அ.தி.மு.க. அவதூறு பரப்பி வருகிறது. ஒரு தீர்ப்பில் உடன்பாடு இல்லையென்றால் அதற்கு எதிராக முறையிட வேண்டிய இடம் மேல்நீதிமன்றம் தான். ஆனால், சட்டத்தை இயற்றுவதற்கும், அரசியல் சட்டத்தை திருத்துவதற்கும் அதிகாரம் பெற்ற நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களாக உள்ள அ.தி.மு.க.வினரே நீதிமன்றத்தின் தீர்ப்பை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தியுள்ளனர். அ.தி.மு.க. வழக்கறிஞர்கள் கர்நாடக உயர்நீதிமன்ற வளாகத்தில் மறியல் போராட்டம் நடத்தியுள்ளனர்.

கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதிகள் அனைவரும் தாங்கள் அழைத்தால் ஓடிவரும் பணியாளர்கள் என்ற எண்ணத்தில் ஜெயலலிதா மீதான வழக்கை இந்த நேரத்தில் விசாரிக்க வேண்டும்; இப்படித் தான் விசாரிக்க வேண்டும் என்றெல்லாம் நீதிமன்றத்திற்கே அ.தி.மு.க.வினர் கட்டளையிட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஒருகட்டத்தில் அ.தி.மு.க. வழக்கறிஞர்களின் செயல்பாடுகளால் எரிச்சலடைந்து, ‘‘நீதிமன்றத்தை அச்சுறுத்தும் செயல்களில் ஈடுபடாதீர்கள்’’ கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி எச்சரிக்கும் அளவுக்கு நிலைமை மோசமாகியிருக்கிறது. இன்னொருபுறம் தேவையே இல்லாமல் அ.தி.மு.க. வழக்கறிஞர்கள் சென்னை உயர்நீதிமன்றம் அருகில் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தியுள்ளனர்.

அ.தி.மு.க. நாளிதழில் என்னையும், கலைஞர், வைகோ உள்ளிட்ட தலைவர்களையும் கடுமையாக விமர்சித்து கட்டுரைகள் எழுதப்படுகின்றன. கலைஞரின் வீட்டுக்கு அருகில் அ.தி.மு.க.வினர் வன்முறை செய்த நிலையில், அதற்காக கலைஞர் மீதே காவல்துறை வழக்குப்பதிவு செய்திருக்கிறது. நேற்று கூட நெல்லை மாவட்டம் கலிங்கப்பட்டியில் வைகோவின் வீட்டுக்கு அருகில் அ.தி.மு.க.வினர் போராட்டம் நடத்தி வன்முறை செய்துள்ளனர்.

இதற்கு காவல்துறை அதிகாரிகள் துணை போனதுடன் பாதுகாப்பும் அளித்துள்ளனர். கடைசியில் ஊர் மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு அ.தி.மு.க.வினரை அடித்து விரட்டியிருக்கிறார்கள். பெங்களூர் சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து இன்று காலை முதல் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் சென்னை எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் உண்ணாநிலை போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கெல்லாம் மேலாக உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிரான வகையில் புதுவையில் இன்று முழு அடைப்பு போராட்டத்தை அ.தி.மு.க.வினர் நடத்தி வருகின்றனர்.

‘‘நீதிமன்றங்களும், சட்டங்களும் எங்களுக்கு கட்டுப்பட்டவை. நாங்கள் சொல்வதை அவை கேட்க வேண்டும். இல்லாவிட்டால் கேட்கவைப்போம்’’ என்பதைப் போலத்தான் அ.தி.மு.க.வினரின் செயல்பாடுகள் அமைந்துள்ளன. அ.தி.மு.க.வினரின் இந்த அத்துமீறல்களையெல்லாம் தமிழ்நாட்டில் உள்ள பொம்மை அரசு வேடிக்கை பார்க்கலாம். ஆனால், மத்திய அரசும், நீதிமன்றங்களும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது.

எத்தனையோ அத்துமீறல்களை பத்திரிகை செய்திகளின் வாயிலாக அறிந்து தானாக வழக்குத் தொடர்ந்து நீதி வழங்கிய நீதிமன்றங்கள், தமிழகத்தில் அ.தி.மு.க.வினரின் சட்டவிரோத செயல்கள் மற்றும் வன்முறைகள் குறித்து தாங்களாகவே முன்வந்து விசாரிக்க வேண்டும்; சட்டங்கள் மற்றும் நீதிமன்றங்கள் தொடர்பான அதி.மு.க.வினரின் நினைப்பு தவறு என்பதை அவர்களுக்கும், அவர்களின் தலைமைக்கும் புரிய வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.’’

நக்கீரன்

நீதிமன்றங்களும், சட்டங்களும்  ஜெயலலிதாவின் அடிமைகளல்ல! : ராமதாஸ் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sat 4 Oct 2014 - 15:14

ஏதோ முதல்வராகும்னு இப்படி அறிக்கை விட்டிருக்காரு போல இருக்கு.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat 4 Oct 2014 - 15:33

//‘நீதிமன்றங்களும், சட்டங்களும் எங்களுக்கு கட்டுப்பட்டவை. நாங்கள் சொல்வதை அவை கேட்க வேண்டும். இல்லாவிட்டால் கேட்கவைப்போம்’’ என்பதைப் போலத்தான் அ.தி.மு.க.வினரின் செயல்பாடுகள் அமைந்துள்ளன. அ.தி.மு.க.வினரின் இந்த அத்துமீறல்களையெல்லாம் தமிழ்நாட்டில் உள்ள பொம்மை அரசு வேடிக்கை பார்க்கலாம். ஆனால், மத்திய அரசும், நீதிமன்றங்களும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது.
எத்தனையோ அத்துமீறல்களை பத்திரிகை செய்திகளின் வாயிலாக அறிந்து தானாக வழக்குத் தொடர்ந்து நீதி வழங்கிய நீதிமன்றங்கள், தமிழகத்தில் அ.தி.மு.க.வினரின் சட்டவிரோத செயல்கள் மற்றும் வன்முறைகள் குறித்து தாங்களாகவே முன்வந்து விசாரிக்க வேண்டும்//

இப்படி செய்தால் ரொம்ப நல்லா இருக்கும் புன்னகை செய்வாங்களா என்று பொறுத்திருந்து தான் பார்க்கணும் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Sat 4 Oct 2014 - 17:36

krishnaamma wrote://‘நீதிமன்றங்களும், சட்டங்களும் எங்களுக்கு கட்டுப்பட்டவை. நாங்கள் சொல்வதை அவை கேட்க வேண்டும். இல்லாவிட்டால் கேட்கவைப்போம்’’ என்பதைப் போலத்தான் அ.தி.மு.க.வினரின் செயல்பாடுகள் அமைந்துள்ளன. அ.தி.மு.க.வினரின் இந்த அத்துமீறல்களையெல்லாம் தமிழ்நாட்டில் உள்ள பொம்மை அரசு வேடிக்கை பார்க்கலாம். ஆனால், மத்திய அரசும், நீதிமன்றங்களும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது.
எத்தனையோ அத்துமீறல்களை பத்திரிகை செய்திகளின் வாயிலாக அறிந்து தானாக வழக்குத் தொடர்ந்து நீதி வழங்கிய நீதிமன்றங்கள், தமிழகத்தில் அ.தி.மு.க.வினரின் சட்டவிரோத செயல்கள் மற்றும் வன்முறைகள் குறித்து தாங்களாகவே முன்வந்து விசாரிக்க வேண்டும்//

இப்படி செய்தால் ரொம்ப நல்லா இருக்கும் புன்னகை செய்வாங்களா என்று பொறுத்திருந்து தான் பார்க்கணும் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1092776

கண்டிப்பாக அம்மா... அப்படி நடக்குமா ????

கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

நீதிமன்றங்களும், சட்டங்களும்  ஜெயலலிதாவின் அடிமைகளல்ல! : ராமதாஸ் W5td1pX3QFi1kBRhH0I3+Affection
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக