ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 4:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 3:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:02 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:25 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சர‌ஸ்வ‌‌தி பூஜை செய்யும் முறை!

2 posters

Go down

சர‌ஸ்வ‌‌தி பூஜை செய்யும் முறை! Empty சர‌ஸ்வ‌‌தி பூஜை செய்யும் முறை!

Post by krishnaamma Wed Oct 01, 2014 10:16 pm

சர‌ஸ்வ‌‌தி பூஜை செய்யும் முறை! RQ0kP9GfQOOC4S9k9Drt+TN_20141001130856822475

பூஜை செய்ய நல்ல நேரம்: காலை 11 - 12மணி.

சர‌ஸ்வ‌‌தி பூஜைய‌ன்று ‌வீடுக‌ளிலு‌ம், அலுவலக‌ங்க‌ளிலு‌ம் பூஜைக‌ள் செ‌ய்து வ‌ழிபடுவது வழ‌க்க‌ம். அ‌வ்வாறு வ‌ழிபாடு செ‌ய்வத‌ற்கு மு‌ன்பு, வ‌ழிபடு‌ம் இட‌த்தை தூ‌ய்மை‌ப்படு‌த்த வே‌ண்டு‌ம். ச‌ந்தன‌ம், தெ‌ளி‌த்து கு‌ங்கும‌ம் இட வே‌ண்டு‌ம். சர‌ஸ்வ‌தி‌யி‌ன் பட‌த்‌தி‌ற்கு‌ம், படை‌க்க‌ப்பட வே‌ண்டிய பொரு‌ட்களு‌க்கு‌ம் ச‌ந்தன‌ம் தெ‌ளி‌த்து கு‌ங்கும‌ம் இ‌டவு‌ம். பட‌த்‌தி‌ற்கு பூ‌க்க‌ள் வை‌த்து அல‌ங்க‌ரி‌க்க வே‌ண்டு‌ம். அன்னையின் பார்வையில் புத்தகங்களை வைத்து அதன் முன்பாக வாழையிலை விரித்து அதில் படையலுக்காக சமைக்கப்பட்டவைகளை வைக்க வேண்டும்.

சுண்டல், சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, எலுமிச்சை சாதம் போன்றவ‌ற்றை கலைவாணிக்கு நைவேத்தியங்களாகப் படைக்கலாம். வாழை இலையை வைத்து அதில் பொறி, கடலை, அவல், நாட்டு சர்க்கரை, பழங்களை வைக்க வேண்டும். செம்பருத்தி, ரோஜா, வெண்தாமரை மலர்கள் அன்னைக்கு உகந்த மலர்களாகும். இவற்றால் மாலைகள் தொடுத்து அன்னைக்கும், அவள் உறைந்திருக்கும் புத்தகங்களுக்கும் அணிவித்தல் வேண்டும். எதற்கும் விநாயகரே முதலானவர். எனவே மஞ்சளில் பிள்ளையார் பிடித்து பூஜையில் வைத்து விநாயகரை வணங்கிய பின்னரே சரஸ்வதிக்கான பூஜையை ஆரம்பித்தல் வேண்டும். பூஜையில் கலசம் வைத்தும் கலைவாணியை வணங்கலாம்.

கலசம் வைத்து அதில் அம்பிகையை முறைப்படி எழுந்தருளச் செய்து பூஜிப்பதால் கூடுதல் நலன் கிடைக்கும். பூஜையின்போது வீட்டில் உள்ள குழந்தைகள், பெண்கள் உட்பட அனைவரும் கலைவாணிக்குரிய பாடல்களைப் பாடி வணங்கலாம். நவராத்திரி நாட்களில் அன்னையின் அருள்பெற ஒன்பது நாட்களும் விரதமிருந்து பூஜிக்க இயலாதவர்கள் சரஸ்வதி பூஜையன்று மட்டும் அம்மனை பூஜித்து வணங்கினால் போதும். அம்பிகையின் அருள் பூரணமாய் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

நன்றி : தினமலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சர‌ஸ்வ‌‌தி பூஜை செய்யும் முறை! Empty Re: சர‌ஸ்வ‌‌தி பூஜை செய்யும் முறை!

Post by ayyasamy ram Thu Oct 02, 2014 4:03 am

வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்,
வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்;
கொள்ளை யின்பம் குலவு கவிதை
கூறு பாவலர் உள்ளத் திருப்பாள்;
உள்ள தாம்பொருள் தேடி யுணர்ந்தே
ஓதும் வேதத்தின் உள்நின்றொளிர்வாள்;
கள்ள மற்ற முனிவர்கள் கூறும்
கருணை வாசகத்துட்பொருளாவாள். (வெள்ளைத்)

மாதர் தீங்குரல் பாட்டில் இருப்பாள்,
மக்கள் பேசும் மழலையில் உள்ளாள்;
கீதம் பாடும் குயிலின் குரலைக்
கிளியின் நாவை இருப்பிடங் கொண்டாள்;
கோதகன்ற தொழிலுடைத்தாகிக்
குலவு சித்திரம் கோபுரம் கோயில்
ஈதனைத்தின் எழிலிடை யுற்றாள்
இன்ப மே வடி வாகிடப் பெற்றாள். (வெள்ளைத்)

---
>பாரதியார்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83758
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சர‌ஸ்வ‌‌தி பூஜை செய்யும் முறை! Empty Re: சர‌ஸ்வ‌‌தி பூஜை செய்யும் முறை!

Post by krishnaamma Thu Oct 02, 2014 7:48 pm

அன்ன வாகன தத்துவம் : வேதத்தில் சரஸ்வதிக்கு வாகனமாக அன்னம் குறிப்பிடப்பட்டுள்ளது. பாலையும், தண்ணீரையும் கலந்து வைத்தாலும், நீரை விட்டு விட்டு பாலை மட்டும் அருந்தும் அன்னத்தைப் போல, உலகில் நன்மை, தீமை இரண்டும் கலந்திருந்தாலும், தீமையை விடுத்து, நன்மையை மட்டும் மனிதன் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது இதன் தத்துவம். தென்னகத்தில் சரஸ்வதிக்குரிய வாகனம் மயில்.

இதன் தோகையில் வட்டவடிவில் கண்கள் இடம்பெற்றிருக்கும். படிப்பவன், இரு கண்களால் மட்டும் இல்லாமல் ஆயிரமாயிரம் கண்களோடு, புதியவற்றைக்கற்றுத் தெளிய வேண்டும் என்பது இதன் தத்துவம்.அன்னத்தில் இருக்கும் சரஸ்வதியை "ஹம்ஸ வாஹினி' என்றும், மயில் மீதிருக்கும் சரஸ்வதியை "வர்ஹ வாஹினி' என்றும் அழைப்பர். ரவிவர்மா ஓவியங்களில் சரஸ்வதிக்கு மயிலே வாகனமாக உள்ளது.ஐந்து கலைமகள்: மகாசரஸ்வதி, வீணா சரஸ்வதி, வஜ்ர சாரதா, ஆர்ய சரஸ்வதி, வஜ்ர சரஸ்வதி என்னும் ஐந்துவகை கலைமகள் வழிபாடு புத்த
சமயத்தில் இடம் பெற்றுள்ளது. மகாசரஸ்வதி வெண்மை நிறம் கொண்டவள்.

இரு கரங்களிலும் வீணை ஏந்தி, வலதுகரத்தில் அபய முத்திரையும், இடக்கரத்தில் வெண் தாமரையும் இடம் பெற்றிருக்கும். வஜ்ர வீணா சரஸ்வதி கல்வியை வழங்குபவளாக தன் இருகரங்களில் வீணையைத் தாங்கியபடி இருக்கிறாள். வஜ்ர சாரதா இடதுகையில் புத்தகமும், வலதுகையில் தாமரை மலரும் வைத்திருக்கிறாள்.

ஆர்ய சரஸ்வதி வழிபாடு நேபாளத்தில் காணப்படும் வடிவம். வலதுகரத்தில் செந்தாமரை மலரும், இடக்கரத்தில் புத்தகமும் தாங்கி இருக்கிறாள். வஜ்ர சரஸ்வதி மூன்று முகங்களையும், ஆறு கரங்களையும் கொண்டவளாகத் திகழ்கிறாள். இந்த தேவியின் கரங்களில் தாமரை, சுவடி, கத்தி, கபாலம், கரம், கலசம் ஏந்தியிருப்பாள். இவளை புத்தமதத்தினர் "மஜ்ஞúஸ்ரீ'என அழைப்பர்.

சரஸ்வதி பூஜையன்று பக்தியுடன் இந்த வழிபாட்டை படிப்பவர்கள் சரஸ்வதிஅருளால் கல்வி, தொழில் வளர்ச்சி பெறுவர்.

* ஆயகலைகள் அறுபத்து நான்கினையும் அருளும் கலைமகளே! வெண்பளிங்கு போல தூய வடிவம் கொண்டவளே! மணம் கமழ்கின்ற தாமரை போன்ற மலர்க்கரம் பெற்றவளே! நல்லவர் நாவில் குடிகொண்டவளே! உன் திருவடிகளைச் சரணடைகின்றோம்.

* வெண்தாமரை மலரில் வீற்றிருப்பவளே! கவிஞர் பாடும் பாமாலையில் மனம் மகிழ்பவளே! சிருஷ்டிக்கடவுளான பிரம்மதேவனின் துணைவியே! கையில் ஜபமாலை தாங்கியிருப்பவளே! வீணை இசைப்பதில் மனம் மகிழ்பவளே! எங்கள் வாழ்வு மலர நீ துணை நிற்க வேண்டும்.

* வேதம் நான்கினுக்கும் வித்தாக இருப்பவளே! மூங்கில் போன்ற தோள்களைக் கொண்டவளே! வெள்ளை அன்னத்தை வாகனமாக உடையவளே! குயில் போன்ற இனிய குரலும், இளமான் போன்ற சாயலும் கொண்டவளே! உன்னருளால் எங்களுக்கு வாக்கு வன்மை உண்டாக வேண்டும்.

* திருவடியைப் பணிந்தவர்க்கு கலைஞானம் அருளும் சரஸ்வதியே! சகல கலாவல்லியே! வித்தையின் இருப்பிடமே! மேதா விலாசமே!அறியாமை போக்கும் அறிவின் சுடரே! கலைப்பெட்டகமே! வேதநாயகியே! நீயே சிறந்த கல்வியறிவும், அதற்குரிய புகழ்மிக்க வாழ்வும்தந்தருள வேண்டும்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சர‌ஸ்வ‌‌தி பூஜை செய்யும் முறை! Empty Re: சர‌ஸ்வ‌‌தி பூஜை செய்யும் முறை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum