ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரலாற்றில் இன்று - அக்டோபர்

+8
M.M.SENTHIL
சிவனாசான்
தமிழ்நேசன்1981
Dr.S.Soundarapandian
M.Saranya
krishnaamma
ayyasamy ram
விமந்தனி
12 posters

Page 10 of 14 Previous  1 ... 6 ... 9, 10, 11, 12, 13, 14  Next

Go down

வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 10 Empty வரலாற்றில் இன்று - அக்டோபர்

Post by விமந்தனி Wed Oct 01, 2014 1:58 pm

First topic message reminder :

வரலாற்றில் இன்று - அக்டோபர்'1

வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 10 TQat2DEsR8O2kyO4OCPd+October-1

கிமு 331 - மகா அலெக்சாண்டர் பேர்சியாவின் மூன்றாம் டாரியஸ் மன்னனை போரில் வென்றான்.

959 - முதலாம் எட்கார் இங்கிலாந்தின் மன்னனாக முடிசூடினான்.

1787 - "சுவோரொவ்" தலைமையில் ரஷ்யர்கள் கின்பேர்ன் என்ற இடத்தில் துருக்கியரைத் தோற்கடித்தனர்.

1788 - நியூவென் ஹியூ வியட்நாமின் மன்னராகத் தன்னை அறிவித்தார்.

1795 - பிரான்ஸ் பெல்ஜியத்தைப் பிடித்தது.

1799 - புதுக்கோட்டை மன்னர் விஜயரகுநாத தொண்டமானால் வீரபாண்டிய கட்டபொம்மன் கைது செய்யப்பட்டான்.

1800 - ஸ்பெயின் லூசியானாவை பிரான்சிடம் தந்தது.

1814 - நெப்போலியனின் தோல்வியை அடுத்து ஐரோப்பாவின் புதிய அரசியல் வரைபடத்தை வரைவதற்காக வியென்னா காங்கிரஸ் கூடியது.

1827 - இவான் பஸ்க்கேவிச் தலைமையில் ரஷ்ய இராணுவம் ஆர்மேனியாவின் தலைநகர் யெரெவானைப் பிடித்தது.

1843 - நியூஸ் ஒஃப் தெ வேர்ல்ட் பத்திரிகை லண்டனில் வெளியிட ஆரம்பிக்கப்பட்டது.

1854 - இந்திய அஞ்சல் துறை ஏற்படுத்தப்பட்டது.

1869 - உலகின் முதல் தபால் அட்டை ஆஸ்திரியாவில் வெளியிடப்பட்டது.

1880 - இந்தியாவுடனான காசுக்கட்டளை இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

1880 - முதலாவது மின் விளக்கு தொழிற்சாலையை தொமஸ் எடிசன் ஆரம்பித்தார்.

1887 - பிரித்தானியரினால் பலூசிஸ்தான் கைப்பற்றப்பட்டது.

1892 - இலங்கையில் இந்திய இரண்டு அணா நாணயம் செல்லுபடியற்றதாக்கப்பட்டது. பதிலாக வெள்ளி நாணயம் அறிமுகமானது.

1895 - பிரெஞ்சுப் படைகள் மடகஸ்காரின் அண்டனனாரிவோ நகரைக் கைப்பற்றினர்.

1898 - ரஷ்யாவின் முக்கிய நகரங்களிலிருந்து யூதர்கள் இரண்டாம் நிக்கலாஸ் மன்னனால் வெளியேற்றப்பட்டனர்.

1910 - லாஸ் ஏஞ்சலீஸ் டைம்ஸ் கட்டடம் பெரும் குண்டுவெடிப்பினால் தகர்க்கப்பட்டது. இதில் 21 பேர் கொல்லப்பட்டனர்.

1918 - முதலாம் உலகப் போர்: அரபுப் படைகள் சிரியாவின் டமாஸ்கஸ் நகரைக் கைப்பற்றினர்.

1931 - ஜோர்ஜ் வாஷிங்டன் பாலம் திறக்கப்பட்டது.

1943 - இரண்டாம் உலகப் போர்: நேப்பில்ஸ் கூட்டுப் படைகளிடம் வீழ்ந்தது.

1949 - மா சே துங்கினால் மக்கள் சீனக் குடியரசு அறிவிக்கப்பட்டது.

1953 - ஆந்திரா மாநிலம் உருவாக்கப்பட்டது.

1960 - சைப்பிரஸ், மற்றும் நைஜீரியா ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றன.

1961 - கிழக்கு மற்றும் மேற்கு கமரூன் ஒன்றுபட்டு கமரூன் சமஷ்டிக் குடியரசு ஆகியது.

1965 - இந்தோனேசியாவில் நிகழ்ந்த கம்யூனிசப் புரட்சி ஜெனரல் சுகார்ட்டோவினால் முறியடிக்கப்பட்டது.

1969 - கொன்கோர்ட் விமானம் முதற்தடவையாக ஒலியின் வேகத்தை மீறியது.

1971 - வால்ட் டிஸ்னி உலகம் புளோரிடாவில் அமைக்கப்பட்டது.

1975 - சிஷெல்ஸ் சுயாட்சியைப் பெற்றது. எலீஸ் தீவுகள் கில்பேர்ட் தீவுகளிலிருந்து பிரிக்கப்பட்டு துவாலு என்ற பெயரைப் பெற்றது.

1977 - பிரேசில் கால்பந்தாட்ட வீரர் பெலே இளைப்பாறினார்.

1978 - துவாலு ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.

1979 - ஐக்கிய அமெரிக்கா பனாமா கால்வாயை பனாமாவுக்கு மீள் அளித்தது.

1982 - சொனி நிறுவனம் முதலாவது குறுந்தட்டு ஒலிபரப்பு சாதனத்தை (CDP-101) வெளியிட்டது.

1992 - விடுதலைப் புலிகள் கட்டைக்காடு இராணுவக் காவலரணைத் தாக்கி பெருந்தொகையான ஆயுதங்களைக் கைப்பற்றினர்.

1994 - பலாவு ஐநாவிடம் இருந்து விடுதலை பெற்றது.

2001 - ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையைத் தகர்க்க தற்கொலைப் படையினர் நடத்திய கார் வெடிகுண்டு தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.

2005 - பாலியில் நடந்த குண்டுவெடிப்பில் 23 பேர் கொல்லப்பட்டனர்.

2006 - பாண்டிச்சேரி மாநிலத்தின் பெயர் புதுச்சேரி என மாற்றம் பெற்றது.


வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 10 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 10 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 10 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down


வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 10 Empty Re: வரலாற்றில் இன்று - அக்டோபர்

Post by விமந்தனி Tue Oct 21, 2014 12:01 am

வரலாற்றில் இன்று - அக்டோபர்' 21

வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 10 CWaE59DBSsuwEBhomIPk+October-21

1520 - பேர்டினண்ட் மகெலன் சிலியில் புதிய நீரிணை ஒன்றைக் கண்டுபிடித்தார். இது பின்னர் மகலன் நீரிணை எனப் பெயர்பெற்றது.

1805 - டிரபல்கார் என்ற இடத்தில் பிரித்தானியப் படைகள், பிரெஞ்சு, மற்றும் ஸ்பானியக் கூட்டுப் படைகளின் கடற்படையை வென்றன. இவ்வெற்றி பிரித்தானியக் கடற்படையை 20ம் நூற்றாண்டு வரை இப்பிராந்தியத்தின் பெரும் கடற்படை வல்லரசாக ஆக்கியது.

1805 - ஊல்ம் என்ற இடத்தில் ஆஸ்திரியா நெப்போலியனின் பெரும் இராணுவத்திடம் சரணடைந்தது. நெப்போலியன் 30,000 பேரைச் சிறைப்பிடித்தான்.

1824 - ஜோசப் ஆஸ்ப்டின் போர்ட்லண்ட் சிமெந்துக்கான காப்புரிமம் பெற்றார்.

1837 - அமெரிக்கப் பழங்குடித் தலைவன் ஒசியோலா கைது செய்யப்பட்டான்.

1854 - புளோரன்ஸ் நைட்டிங்கேல் மற்றும் 38 தாதிகள் கிரிமியன் போர் முனைக்கு அனுப்பப்பட்டனர்.

1861 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்கப் படைகள் கூட்டமைப்பினரிடம் வேர்ஜீனியாவில் தோற்றனர். ஆபிரகாம் லிங்கனின் நெருங்கிய நண்பர் "எட்வேர்ட் பேக்கர்" கொல்லப்பட்டார்.

1876 - யாழ்ப்பாணத்தில் காலரா நோய் வேகமாகப் பரவியது.

1879 - தொமஸ் எடிசன் தனது முதலாவது தொழில் ரீதியான மின்குமிழைப் பரிசோதித்தார். இது 13 மணி நேரம் எரிந்தது.

1892 - உலக கொலம்பியக் கண்காட்சி சிக்காகோவில் அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது. ஆனாலும், கட்டிட வேலைகள் பூர்த்தியடையாத காரணத்தால் இக்கண்காட்சி 1893, மே 1 ஆம் நாளிலேயே பொதுமக்களின் பார்வைக்குத் திறக்கப்பட்டது.

1895 - ஜப்பானியப் படைகளின் முற்றுகையினால் போர்மோசா குடியரசு வீழ்ந்தது.

1944 - கிறகுஜேவாச் படுகொலைகள்: நாசி ஜெர்மனியப் படைகள் 7000 சேர்பியரை படுகொலைச் செய்தனர்.

1944 - இரண்டாம் உலகப் போர்: முதலாவது கமிகசே ஜப்பானிய விமானத் தற்கொலைத் தாக்குதல், அவுஸ்திரேலிய கப்பல் மீது நடத்தப்பட்டது.

1945 - பிரான்சில் முதற்தடவையாக பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.

1966 - வேல்சில் அபெர்ஃபான் என்னும் கிராமத்தில் நிலக்கரி கழிவுகள் அடங்கிய பாறை வீழ்ந்ததில் 116 பாடசாலைச் சிறுவர்கள் உட்பட 144 பேர் கொல்லப்பட்டனர்.

1969 - சோமாலியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் சியாட் பார் பதவியைக் கைப்பற்றினார்.

1983 - நிறைகளுக்கும் அளவைகளுக்குமான 17வது அனைத்துலகக் கருத்தரங்கில், முழுமையான வெற்றிடத்தில், துல்லியமாக 1/299,792,458 வினாடி நேரத்தில் ஒளி செல்லும் பாதையின் நீளமாக ஒரு மீட்டர்
வரையறுக்கப்பட்டது.

1987 - ஈழப்போர்: யாழ்ப்பாணம் மருத்துவமனையில் இந்திய இராணுவத்தினர் சுட்டதில் மருத்துவர்கள், ஊழியர்கள், நோயாளிகள் உட்பட 21 பேர் கோல்லப்பட்டனர்.

1994 - சியோல் நகரில் பாலம் ஒன்று உடைந்து வீழ்ந்ததில் 32 பேர் கொல்லப்பட்டனர்.

2003 - குறுங்கோள் ஏரிசின் படங்கள் எடுக்கப்பட்டன.


வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 10 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 10 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 10 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 10 Empty Re: வரலாற்றில் இன்று - அக்டோபர்

Post by krishnaamma Tue Oct 21, 2014 12:08 am

அஹா................இந்த பாதி ராத்திரி இல், வெளிச்சத்தில் உட்கார்ந்து கொண்டு ....பதிவு போடறோம் என்றால் அதுக்கு காரணம் இவர் தானா? புன்னகை

//1879 - தொமஸ் எடிசன் தனது முதலாவது தொழில் ரீதியான மின்குமிழைப் பரிசோதித்தார். இது 13 மணி நேரம் எரிந்தது.//


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 10 Empty Re: வரலாற்றில் இன்று - அக்டோபர்

Post by விமந்தனி Tue Oct 21, 2014 12:10 am

krishnaamma wrote:அஹா................இந்த பாதி ராத்திரி இல், வெளிச்சத்தில் உட்கார்ந்து கொண்டு ....பதிவு போடறோம் என்றால் அதுக்கு காரணம் இவர் தானா? புன்னகை

//1879 - தொமஸ் எடிசன் தனது முதலாவது தொழில் ரீதியான மின்குமிழைப் பரிசோதித்தார். இது 13 மணி நேரம் எரிந்தது.//
இவரே தான்..... நன்றி விஞ்ஞானியே...... நன்றி நன்றி


வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 10 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 10 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 10 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 10 Empty Re: வரலாற்றில் இன்று - அக்டோபர்

Post by krishnaamma Tue Oct 21, 2014 12:13 am

விமந்தனி wrote:
krishnaamma wrote:அஹா................இந்த பாதி ராத்திரி இல், வெளிச்சத்தில் உட்கார்ந்து கொண்டு ....பதிவு போடறோம் என்றால் அதுக்கு காரணம் இவர் தானா? புன்னகை

//1879 - தொமஸ் எடிசன் தனது முதலாவது தொழில் ரீதியான மின்குமிழைப் பரிசோதித்தார். இது 13 மணி நேரம் எரிந்தது.//
இவரே தான்..... நன்றி விஞ்ஞானியே...... நன்றி நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1098294

எஸ்......எஸ்....எஸ்..........புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 10 Empty Re: வரலாற்றில் இன்று - அக்டோபர்

Post by விமந்தனி Wed Oct 22, 2014 12:00 am

வரலாற்றில் இன்று - அக்டோபர்' 22

வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 10 EH0PosuoRISvmPIX3ztp+October-22

362 - அந்தியோக்கியாவின் "அப்பலோ" ஆலயம் தீப்பற்றி எரிந்தது.

794 - கன்மு பேரரசர் ஜப்பானிய தலைநகரை எய்யன்கியோவுக்கு (தற்போது கியோட்டோ) மாற்றினார்.

1383 - போர்த்துக்கல் மன்னன் முதலாம் பேர்டினண்ட்டின் இறப்பின் பின்னர் ஆண் வாரிசு அற்ற நிலையில் நாட்டில் உள்நாட்டுப் போர் ஆரம்பமானது.

1633 - மிங் வம்சம் டச்சு கிழக்கிந்தியக் கம்பனியுடன் சீனாவின் தெற்கு பூஜியன் கடலில் போரில் ஈடுபட்டு மெரும் வெற்றி பெற்றது.

1692 - மந்திரம் செய்ததற்காக ஐக்கிய அமெரிக்காவில் வழங்கப்பட்ட கடைசி தூக்கு தண்டனை.

1707 - நான்கு பிரித்தானிய கடற்படைக் கப்பல்கள் சிலி தீவுகளில் மூழ்கியதில் ஆயிரக்கணக்கான மாலுமிகள் கொல்லப்பட்டனர்.

1784 - இரசியா அலாஸ்காவின் கோடியாக் தீவில் குடியேற்றமொன்றை அமைத்தது.

1797 - பதிவுச் செய்யப்பட்ட முதலாவது பரசூட் பாய்ச்சல் அன்ட்ரே ஜக்கியுஸ் கர்னெரின் என்பவரால் பாரிஸ் நகருக்கு 3200 அடி மேலாக நிகழ்த்தப்பட்டது.

1844 - பாரிய எதிர்பார்ப்பு: வில்லியம் மில்லரின் படிப்பினைகளைக் பின்பற்றிய மில்லரிய கிறிஸ்தவர்கள் இயேசுவின் இரண்டாம் வருகையும் உலக முடிவையும் எதிர்பார்த்திருந்தனர்.

1866 - பிரேசில், ஆர்ஜென்டீனா, உருகுவேக்கு எதிராக பராகுவே போரில் ஈடுபட்டது.

1875 - ஆர்ஜென்டீனாவுக்கான முதலாவது தொலைத்தொடர்பு இணைப்பு ஏற்படுத்தப்பட்டது.

1877 - ஸ்கொட்லாந்தில் பிளான்டையர் சுரங்க விபத்து, 207 சுரங்கத் தொழிலாளர்கள் இறந்தனர்.

1878 - செயற்கை ஒளிக்கு கீழ் நடைப்பெற்ற முதலாவது ரக்பி போட்டி இங்கிலாந்தின் சால்போட் நகரில் நடைப்பெற்றது.

1924 - பன்னாட்டு டோஸ்ட்மாஸ்டர்ஸ் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.

1943 - இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியின் காசெல் நகரம் மீது பிரித்தானிய விமானப்படை குண்டுவீச்சு நடத்தியதில் 10,000 பேர் கொல்லப்பட்டு 150,000 பேர் வீடுகளை இழந்தனர்.

1944 - இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியின் ஆச்சென் நகரம் நட்பு நாடுகளிடம் வீழ்ந்தது. நட்பு நாடுகளிடம் வீழ்ந்த முதலாவது ஜெர்மன் நகாரம் இதுவாகும்.

1946 - அல்பேனியாவின் கரைக்கு அப்பால் பிரித்தானிய போர்க் கப்பல் கண்ணிவெடியில் சிக்கியதால் 40 பிரித்தானிய கடற்படையினர் கொல்லப்பட்டனர்.

1949 - சோவியத் ஒன்றியம் அதன் முதலாவது அணுகுண்டை வெடிக்கச் செய்தது.

1953 - லாவோஸ், பிரான்சிடம் இருந்து விடுதலை அடைந்தது.

1956 - பாகிஸ்தான், கராச்சியில் கான்கிரீட் கூரைப் பாகம் வீழ்ந்ததில் 48 பேர் பலி.

1957 - வியட்நாம் போர்: ஐக்கிய அமெரிக்காவின் முதல் போர்ச் சாவு.

1960 - மாலி, பிரான்சிடம் இருந்து விடுதலை அடைந்தது.

1964 - பல்கட்சிக் குழு கனடாவின் கொடிக்கான வடிவமைப்பை முடிவுச் செய்தது.

1964 - சான்-போல் சார்ட்ரேக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்காப்பட்டது, எனினும் அவர் அதனைப் பெற்றுக் கொள்ள மறுத்து விட்டார்.

1965 - இந்தியா-பாகிஸ்தான் இடையான இரண்டாம் காஷ்மீர் போர் முடிவுக்கு வந்தது.

1968 - நாசாவின் அப்பல்லோ 7 விண்கலம் பூமியை 163 தடவைகள் சுற்றிய பின்னர் அட்லாண்டிக் கடலில்
பாதுகாப்பாக இறங்கியது.

1970 - துங்கு அப்துல் ரகுமான் மலேசியாவின் பிரதமர் பதவியில் இருந்து விலகினார்.

1987 - ஈழப்போர்: யாழ்ப்பாணம் அராலித் துறையில் இந்திய அமைதிப் படையின் உலங்குவானூர்தி தாக்கியதில் பல பயணிகள் கொல்லப்பட்டனர்.

2001 - PSLV C-மூன்று விண்கலத்தை இந்தியா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

2007 - எல்லாளன் நடவடிக்கை: இலங்கையின் அனுராதபுரம் இலங்கை வான்படைத் தளம் மீது விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் நடத்திய தாக்குதலில் கரும்புலிகள் 21 பேரும், இலங்கை படையினர் 14 பேரும்
கொல்லப்பட்டு பல வானூர்திகள் அழிக்கப்பட்டன.

வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 10 Q5VURw4WTH2S6yZQVnlf+diwali-82v


வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 10 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 10 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 10 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 10 Empty Re: வரலாற்றில் இன்று - அக்டோபர்

Post by krishnaamma Wed Oct 22, 2014 7:39 pm

நன்றி விமந்தனி புன்னகை உங்களுக்கும் என்னுடைய அன்பான தீபாவளி நல் வாழ்த்துகள் புன்னகை அன்பு மலர்

வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 10 FoMDcVtQRVOetOohONTj+images


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 10 Empty Re: வரலாற்றில் இன்று - அக்டோபர்

Post by விமந்தனி Thu Oct 23, 2014 3:29 pm

வரலாற்றில் இன்று - அக்டோபர்' 23

வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 10 NT17wZS1TOaLgPZ2yNSw+October-23

கிமு 4004 - அங்கிலிக்கப் பேராயர் ஜேம்ஸ் உச்சரின் கணிப்பின் படி அகிலம் படைக்கப்பட்டது.

கிமு 42 - மார்க் அந்தோனி, ஆகுஸ்டஸ் ரோமப் பேரரசன் புரூட்டசின் இராணுவத்தை தோற்கடித்தனர். இறுதியில் புரூட்டஸ் தற்கொலை செய்து கொண்டான்.

425 - மூன்றாம் வலன்டீனியன் ஆறாவது அகவையில் ரோமப் பேரரசன் ஆனான்.

1157 - டென்மார்க்கில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது. மன்னன் மூன்றாம் சுவெயின் கொல்லப்பட்டு முதலாம் வால்டிமார் அரசனானான்.

1707 - பெரிய பிரித்தானியாவின் முதல் நாடாளுமன்றம் கூடியது.

1739 - பிரித்தானியப் பிரதமர் ரொபேர்ட் வால்போல் ஸ்பெயின் மீது போரை அறிவித்தார்.

1870 - பிரான்சின் மெட்ஸ் என்ற இடத்தில் இடம்பெற்ற இறுதிப் போரில் பிரஷ்யா வெற்றியடைந்தது.

1906 - அல்பேர்ட்டோ சாண்டோஸ்-டூமொண்ட் பாரிஸ் நகரில் ஐரோப்பாவின் முதலாவது காற்றை விடப் பாரமான வானூர்தியைப் பறக்க விட்டார்.

1911 - முதற்தடவையாக வானூர்தி ஒன்று போரில் பாவிக்கப்பட்டது: இத்தாலிய வானோடி லிபியாவில் இருந்து புறப்பட்டு துருக்கிய இராணுவ நிலைகளை அவதானித்தான்.

1912 - முதலாம் பால்க்கன் போர்: சேர்பியாவுக்கும் ஒட்டோமான் பேரரசுக்கும் இடையில் போர் ஆரம்பமானது.

1915 - நியூயோர்க் நகரில் 25,000-33,000 பெண்கள் வாக்குரிமை கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1917 - லெனின் அக்டோபர் புரட்சிக்கு அழைப்பு விடுத்தார்.

1941 - உக்ரேனின் ஒடேசா நகரில் 19,000 யூதர்கள், ருமேனிய இராணுவ அதிகாரி நிக்கலாய் டெலியானு தலைமையில் ருமேனியா மற்றும் ஜெர்மன் படையினரால் உயிருடன் எரிக்கப்பட்டனர். அடுத்த நாள் மேலும்
10,000 பேர் கொல்லப்பட்டனர்.

1942 - ஐக்கிய அமெரிக்க வான்படையின் தாக்குதலுக்கு அமெரிக்கப் பயணிகள் விமானம் ஒன்று இலக்கானதில் அதில் பயணம் செய்த அனைத்துப் 12 பேரும் கொல்லப்பட்டனர். இறந்தவர்களில் ரால்ஃப்
ரைஞ்சர்என்ற பிரபலமான இசை மேதையும் அடங்குவார்.

1944 - இரண்டாம் உலகப் போர்: மிகப்பெரும் கடற்படைப் போர் பிலிப்பீன்சில் ஆரம்பமாயிற்று.

1944 - இரண்டாம் உலகப் போர்: சோவியத்தின் செம்படைகள் ஹங்கேரியை அடைந்தன.

1946 - ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் முதலாவது கூட்டத்தொடர் நியூயோர்க் நகரில் ஆரம்பமாயிற்று.

1956 - ஹங்கேரியப் புரட்சி, 1956: ஹங்கேரியில் பல்லாயிரக்கணக்கானோர் அரசுக்கு எதிராகவும் சோவியத் ஆக்கிரமிப்புக்கு எதிராகவும் போராட்டம் நடத்தினர். ஹங்கேரியப் புரட்சி நவம்பர் 4இல் நசுக்கப்பட்டது.

1958 - நோவா ஸ்கோசியாவில் சுரங்கம் ஒன்றில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 174 நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்கள் சிக்கினர். இவர்களில் 100 பேர் மட்டும் நவம்பர் 1 வரையில் மீட்கப்பட்டனர்.

1973 - சிரியாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் இடம்பெற்ற யோம் கிப்பூர் போர் ஐநாவின் தலையீட்டை அடுத்து முடிவுக்கு வந்தது.

1983 - லெபனானில் பெய்ரூட் நகரில் அமெரிக்க கடற்படைத் தளத்தில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில்
241 அமெரிக்கக் கடற்படையினர் கொல்லப்பட்டனர். அதே நாளில் இடம்பெற்ற மற்றொரு தாக்குதலில் பிரெஞ்சு இராணுவத்தினர் 58 பேர் கொல்லப்பட்டனர்.

1989 - கம்யூனிச ஹங்கேரியன் மக்கள் குடியரசு, ஹங்கேரியன் குடியரசு எனப் பெயர் மாற்றப்பட்டது.

1991 - ஈழப்போர்: தமிழீழப் போரில் அனாதைகளான பெண் பிள்ளைகளின் மறுவாழ்வுக்காக செஞ்சோலை சிறுவர் இல்லம் ஆரம்பிக்கப்பட்டது.

1998 - இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெட்டனியாகு மற்றும் பாலஸ்தீன தலைவர் யாசர் அரபாத்துக்கும் இடையில் "அமைதிக்காக நிலம்" என்ற உடன்பாடு எட்டப்பட்டது.

2001 - வட அயர்லாந்தில் இடம்பெற்ற அமைதிப் பேச்சுக்களின் பின்னர் ஐரிஷ் குடியரசு இராணுவம் ஆயுதக் களைவில் ஈடுபட்டது.

2001 - அப்பிள் நிறுவனத்தின் ஐப்பொட் வெளியிடப்பட்டது.

2001 - காஷ்மீர் விமானத் தளத்தைப் தகர்க்கும் தீவிரவாதிகளின் தற்கொலைப் படைமுயற்சி முறியடிக்கப்பட்டது. 4 தீவிரவாதிகள் மற்றும் ஒரு ராணுவ வீரர் கொல்லப்பட்டனர்.

2002 - மொஸ்கோவில் நாடக அரங்கு ஒன்றில் செச்னிய தீவிரவாதிகளினால் 700 பேர் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர்.

2004 - பிரேசில் VSB-30 என்ற தனது முதலாவது விண்கப்பலை விண்ணுக்கு ஏவியது.

2004 - வடக்கு ஜப்பானில் நிலநடுக்கம் தாக்கியதில் 35 பேர் கொல்லப்பட்டு 2,200 பேர் படுகாயமடைந்தனர்.

2006 - இலங்கை சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன.


வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 10 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 10 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 10 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 10 Empty Re: வரலாற்றில் இன்று - அக்டோபர்

Post by krishnaamma Thu Oct 23, 2014 6:03 pm

வந்தாச்சா விமந்தினி புன்னகை ................நல்ல பகிர்வுக்கு நன்றி ! அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 10 Empty Re: வரலாற்றில் இன்று - அக்டோபர்

Post by விமந்தனி Thu Oct 23, 2014 9:27 pm

krishnaamma wrote:வந்தாச்சா விமந்தினி புன்னகை ................நல்ல பகிர்வுக்கு நன்றி ! அன்பு மலர்

நன்றி கிருஷ்ணாம்மா. புன்னகை


வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 10 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 10 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 10 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 10 Empty Re: வரலாற்றில் இன்று - அக்டோபர்

Post by அசுரன் Thu Oct 23, 2014 9:36 pm

அரிய பல தகவல்கள் தரும் நண்பருக்கு எனது பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
இனிய தீபாவளி வாழ்த்துகள்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 10 Empty Re: வரலாற்றில் இன்று - அக்டோபர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 10 of 14 Previous  1 ... 6 ... 9, 10, 11, 12, 13, 14  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum