ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரலாற்றில் இன்று - அக்டோபர்

+8
M.M.SENTHIL
சிவனாசான்
தமிழ்நேசன்1981
Dr.S.Soundarapandian
M.Saranya
krishnaamma
ayyasamy ram
விமந்தனி
12 posters

Page 13 of 14 Previous  1 ... 8 ... 12, 13, 14  Next

Go down

வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 13 Empty வரலாற்றில் இன்று - அக்டோபர்

Post by விமந்தனி Wed Oct 01, 2014 1:58 pm

First topic message reminder :

வரலாற்றில் இன்று - அக்டோபர்'1

வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 13 TQat2DEsR8O2kyO4OCPd+October-1

கிமு 331 - மகா அலெக்சாண்டர் பேர்சியாவின் மூன்றாம் டாரியஸ் மன்னனை போரில் வென்றான்.

959 - முதலாம் எட்கார் இங்கிலாந்தின் மன்னனாக முடிசூடினான்.

1787 - "சுவோரொவ்" தலைமையில் ரஷ்யர்கள் கின்பேர்ன் என்ற இடத்தில் துருக்கியரைத் தோற்கடித்தனர்.

1788 - நியூவென் ஹியூ வியட்நாமின் மன்னராகத் தன்னை அறிவித்தார்.

1795 - பிரான்ஸ் பெல்ஜியத்தைப் பிடித்தது.

1799 - புதுக்கோட்டை மன்னர் விஜயரகுநாத தொண்டமானால் வீரபாண்டிய கட்டபொம்மன் கைது செய்யப்பட்டான்.

1800 - ஸ்பெயின் லூசியானாவை பிரான்சிடம் தந்தது.

1814 - நெப்போலியனின் தோல்வியை அடுத்து ஐரோப்பாவின் புதிய அரசியல் வரைபடத்தை வரைவதற்காக வியென்னா காங்கிரஸ் கூடியது.

1827 - இவான் பஸ்க்கேவிச் தலைமையில் ரஷ்ய இராணுவம் ஆர்மேனியாவின் தலைநகர் யெரெவானைப் பிடித்தது.

1843 - நியூஸ் ஒஃப் தெ வேர்ல்ட் பத்திரிகை லண்டனில் வெளியிட ஆரம்பிக்கப்பட்டது.

1854 - இந்திய அஞ்சல் துறை ஏற்படுத்தப்பட்டது.

1869 - உலகின் முதல் தபால் அட்டை ஆஸ்திரியாவில் வெளியிடப்பட்டது.

1880 - இந்தியாவுடனான காசுக்கட்டளை இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

1880 - முதலாவது மின் விளக்கு தொழிற்சாலையை தொமஸ் எடிசன் ஆரம்பித்தார்.

1887 - பிரித்தானியரினால் பலூசிஸ்தான் கைப்பற்றப்பட்டது.

1892 - இலங்கையில் இந்திய இரண்டு அணா நாணயம் செல்லுபடியற்றதாக்கப்பட்டது. பதிலாக வெள்ளி நாணயம் அறிமுகமானது.

1895 - பிரெஞ்சுப் படைகள் மடகஸ்காரின் அண்டனனாரிவோ நகரைக் கைப்பற்றினர்.

1898 - ரஷ்யாவின் முக்கிய நகரங்களிலிருந்து யூதர்கள் இரண்டாம் நிக்கலாஸ் மன்னனால் வெளியேற்றப்பட்டனர்.

1910 - லாஸ் ஏஞ்சலீஸ் டைம்ஸ் கட்டடம் பெரும் குண்டுவெடிப்பினால் தகர்க்கப்பட்டது. இதில் 21 பேர் கொல்லப்பட்டனர்.

1918 - முதலாம் உலகப் போர்: அரபுப் படைகள் சிரியாவின் டமாஸ்கஸ் நகரைக் கைப்பற்றினர்.

1931 - ஜோர்ஜ் வாஷிங்டன் பாலம் திறக்கப்பட்டது.

1943 - இரண்டாம் உலகப் போர்: நேப்பில்ஸ் கூட்டுப் படைகளிடம் வீழ்ந்தது.

1949 - மா சே துங்கினால் மக்கள் சீனக் குடியரசு அறிவிக்கப்பட்டது.

1953 - ஆந்திரா மாநிலம் உருவாக்கப்பட்டது.

1960 - சைப்பிரஸ், மற்றும் நைஜீரியா ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றன.

1961 - கிழக்கு மற்றும் மேற்கு கமரூன் ஒன்றுபட்டு கமரூன் சமஷ்டிக் குடியரசு ஆகியது.

1965 - இந்தோனேசியாவில் நிகழ்ந்த கம்யூனிசப் புரட்சி ஜெனரல் சுகார்ட்டோவினால் முறியடிக்கப்பட்டது.

1969 - கொன்கோர்ட் விமானம் முதற்தடவையாக ஒலியின் வேகத்தை மீறியது.

1971 - வால்ட் டிஸ்னி உலகம் புளோரிடாவில் அமைக்கப்பட்டது.

1975 - சிஷெல்ஸ் சுயாட்சியைப் பெற்றது. எலீஸ் தீவுகள் கில்பேர்ட் தீவுகளிலிருந்து பிரிக்கப்பட்டு துவாலு என்ற பெயரைப் பெற்றது.

1977 - பிரேசில் கால்பந்தாட்ட வீரர் பெலே இளைப்பாறினார்.

1978 - துவாலு ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.

1979 - ஐக்கிய அமெரிக்கா பனாமா கால்வாயை பனாமாவுக்கு மீள் அளித்தது.

1982 - சொனி நிறுவனம் முதலாவது குறுந்தட்டு ஒலிபரப்பு சாதனத்தை (CDP-101) வெளியிட்டது.

1992 - விடுதலைப் புலிகள் கட்டைக்காடு இராணுவக் காவலரணைத் தாக்கி பெருந்தொகையான ஆயுதங்களைக் கைப்பற்றினர்.

1994 - பலாவு ஐநாவிடம் இருந்து விடுதலை பெற்றது.

2001 - ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையைத் தகர்க்க தற்கொலைப் படையினர் நடத்திய கார் வெடிகுண்டு தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.

2005 - பாலியில் நடந்த குண்டுவெடிப்பில் 23 பேர் கொல்லப்பட்டனர்.

2006 - பாண்டிச்சேரி மாநிலத்தின் பெயர் புதுச்சேரி என மாற்றம் பெற்றது.


வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 13 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 13 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 13 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down


வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 13 Empty Re: வரலாற்றில் இன்று - அக்டோபர்

Post by விமந்தனி Wed Oct 29, 2014 12:00 am

வரலாற்றில் இன்று - அக்டோபர்' 29

வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 13 XgX35bSRbvxYEQmwETgf+October-29

969 - பைசண்டைன் படைகள் சிரியாவின் அண்டியோக் நகரைக் கைப்பற்றின.

1422 - ஏழாம் சார்ல்ஸ் பிரான்சின் மன்னனாக முடிசூடினான்.

1618 - ஆங்கிலேய எழுத்தாளரும் நாடுகாண் பயணியுமான சேர் வால்ட்டர் ரேலி இங்கிலாந்தின் முதலாம் ஜேம்சிற்கு எதிராக சூழ்ச்சி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு தலை துண்டிக்கப்பட்டு மரனதண்டனக்குள்ளாக்கப்பட்டார்.

1665 - போர்த்துக்கல் படையினர் கொங்கோ பேரரசைத் தோற்கடித்து அதன் மன்னன் முதலாம் அண்டோனியாவைக் கொன்றனர்.

1859 - ஸ்பெயின் மொரோக்கோ மீது போரை அறிவித்தது.

1863 - சுவிட்சர்லாந்தில் கூடிய 16 நாடுகளின் பிரதிநிதிகள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் அமைக்கத் தீர்மானித்தனர்.

1886 - அன்றைய பிரித்தானிய இந்திய அரசுக்கும், திருவாங்கூர் மன்னருக்கும் இடையே முல்லைப் பெரியாறு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

1901 - ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் வில்லியம் மக்கின்லியைக் கொலை செய்த குற்றத்திற்காக லியோன் சொல்கோஸ் என்பவனுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.

1913 - எல் சல்வடோரில் பெரும் வெள்ளம் காரணமாக ஆயிரக்கணக்கானோர் இறந்தனர்.

1922 - முசோலினி இத்தாலியின் பிரதம மந்திரியானார்.

1923 - ஓட்டோமான் பேரரசு முறிவடைந்ததைத் தொடர்ந்து துருக்கி குடியரசானது.

1929 - "கருப்பு செவ்வாய்" என அழைக்கப்பட்ட இந்நாளில் நியூ யோர்க் பங்குச் சந்தை வீழ்ச்சியடைந்தது. பெரும் பொருளியல் வீழ்ச்சி ஆரம்பமானது.

1948 - "சாஃப்சாஃப்" என்ற பாலஸ்தீனக் கிராமமொன்றில் புகுந்த இஸ்ரேலியர்கள் 70 பாலஸ்தீனர்களைச் சுட்டுக் கொன்றனர்.

1950 - அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் தொடர் வரலாற்றுப் புதினம் முதற் தடவையாக கல்கி
இதழில் வெளிவர ஆரம்பித்தது.


1956 - இஸ்ரேலியப் படைகள் சினாய் தீபகற்பத்தைக் கைப்பற்றி எகிப்தியப் படைகளை சூயஸ் கால்வாய் நோக்கி விரட்டினர்.

1961 - ஐக்கிய அரபுக் குடியரசில் இருந்து சிரியா வெளியேறியது.

1964 - தங்கனிக்கா மற்றும் சன்சிபார் இரண்டும் இணைந்து தன்சானியாக் குடியரசு ஆகியது.

1964 - 565 கரட் (113 கிராம்) "ஸ்டார் ஒஃப் இந்தியா" உட்படப் பல பெறுமதி மிக்க வைரங்கள் நியூ யோர்க் நகரில் உள்ள அமெரிக்க அருங்காட்சியகத்தில் இருந்து திருடப்பட்டன.

1967 - மொண்ட்ரியால் நகரில் 50 மில்லியன் மக்கள் கண்டு களித்த எக்ஸ்போ 67 உலகக் கண்காட்சி முடிவடைந்தது.

1969 - உலகின் முதலாவது ஒரு கணினியில் இருந்து வேறொரு கணினிக்கான தொடுப்பு ARPANET மூலம் இணைக்கப்பட்டது.

1983 - துருக்கியில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 1,300 பேர் கொல்லப்பட்டனர்.

1991 - நாசாவின் கலிலியோ விண்கலம் 951 காஸ்ராவுக்குக் கிட்டவாகச் சென்று சிறுகோள் ஒன்றுக்குக் கிட்டவாக சென்ற முதலாவது விண்கலம் ஆனது.

1998 - டிஸ்கவரி விண்ணோடம் STS-95 என்ற விண்கப்பலுடன் விண்ணுக்கு ஏவப்பட்டது.

1998 - 39 பேருடன் சென்ற துருக்கிய விமானம் ஒன்று குர்தியத் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டது.

1998 - சூறாவளி மிட்ச் ஹொண்ட்டூராசைத் தாக்கியது.

1999 - ஒரிஸாவில் இடம்பெற்ற பெரும் சூறாவளியினால் 10,000 பேர் வரை இறந்தனர். 2.5 மில்லியன் மக்கள் வீடுகளை இழந்தனர்.

2002 - வியட்நாமின் ஹோ ஷி மின் நகரில் பல்பொருள் அங்காடி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 60 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர்.

2005 - டில்லியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 60பேர் வரை கொல்லப்பட்டனர்.


வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 13 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 13 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 13 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 13 Empty Re: வரலாற்றில் இன்று - அக்டோபர்

Post by ayyasamy ram Wed Oct 29, 2014 6:07 am


பிறப்புக்கள்[தொகு]
-
1931 - வாலி, தமிழகக் கவிஞர் (இ. 2013)
1971 - மதிவ் எய்டன், அவுஸ்திரேலியத் துடுப்பாட்ட வீரர்
1981 - ரீமா சென், இந்திய திரைப்பட நடிகை
1985 - விஜேந்தர் குமார், இந்தியக் குத்துச்சண்டை மெய்வல்லுனர்
-
------------------------------------
-
இறப்புகள்[தொகு]
-
2001 - சுந்தா சுந்தரலிங்கம், இலங்கை வானொலி, மற்றும்
பிபிசி தமிழோசை அறிவிப்பாளர்
2007 - லா. சா. ராமாமிர்தம், தமிழ் எழுத்தாளர் (பி. 1916)
-
----------------------------------------------

சிறப்பு நாள்[தொகு]
-
துருக்கி - குடியரசு நாள் (1923)
-
=============================================
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84145
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 13 Empty Re: வரலாற்றில் இன்று - அக்டோபர்

Post by krishnaamma Wed Oct 29, 2014 2:04 pm

வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 13 G7s1zVwZT0CBQYf9eejL+October-29

ரொம்ப அருமையான கதை .....................வரிவரியாக மனப்பாடம் செய்திருக்கோம் .................அந்த வந்தியத்தேவனும் குந்தவை பிராட்டியையும் கூட இருந்து பார்ப்பது போல தோன்றும்................இனி யாருமே அது போல ஒரு அருமையாக எழுதமுடியாது புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 13 Empty Re: வரலாற்றில் இன்று - அக்டோபர்

Post by ayyasamy ram Wed Oct 29, 2014 2:17 pm

அப்படி உருகி உருகி காதல் செய்த வந்தியத்தேவனுக்கு
குந்தவை மூலமாக வாரிசு இல்லை...!
-
எனவே பிற்காலத்தில் அவர் வேறொரு பெண்ணை
மணந்து கொள்கிறார்....!
-
ஜீரணிக்க கடினமான உண்மை..!!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84145
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 13 Empty Re: வரலாற்றில் இன்று - அக்டோபர்

Post by krishnaamma Wed Oct 29, 2014 2:28 pm

ayyasamy ram wrote:அப்படி உருகி உருகி காதல் செய்த வந்தியத்தேவனுக்கு
குந்தவை மூலமாக வாரிசு இல்லை...!
-
எனவே பிற்காலத்தில் அவர் வேறொரு பெண்ணை
மணந்து கொள்கிறார்....!
-
ஜீரணிக்க கடினமான உண்மை..!!
மேற்கோள் செய்த பதிவு: 1100246

அப்படியா???? அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 13 Empty Re: வரலாற்றில் இன்று - அக்டோபர்

Post by ayyasamy ram Wed Oct 29, 2014 2:47 pm

வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 13 IrxCZrftRMaP1APNxjXu+scan0007

--
வல்லவரையன் வந்தியத்தேவன் சோழப் பேரரசின்
கீழ் "வல்லவரையர் நாடு" என்ற சொல்லப்பட்ட
பிரம்மதேசத்தை சுற்றியிருந்த சிறுநாட்டுக்கு மன்னர்.

முதலாம் இராஜராஜன் மற்றும் முதலாம்
இராஜேந்திரனின் படைகளின் மாதண்ட நாயக்கராக
இருந்தவர். முதலாம் இராஜராஜனின் தமக்கையான
குந்தவை பிராட்டியின் கணவரும் ஆவார்.

இவருக்கு குந்தவைதேவியைத் தவிர
இந்தள தேவி மற்றும் மந்தர கௌரவனார் குந்தாதேவியார்
என்னும் மேலும் இரண்டு மனைவிகள் இருந்தனர்
-
பொன்னியின் செல்வன் - நிறைவுக்குப் பிறகு
வந்த சரித்திரத் தொடர்களில், வந்தியத்தேவன்
பங்கு பெறுகிறார்...
-

வேங்கையின் மைந்தன் -அகிலன்
நந்திபுரத்து நாயகி - விக்கிரமன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84145
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 13 Empty Re: வரலாற்றில் இன்று - அக்டோபர்

Post by krishnaamma Wed Oct 29, 2014 2:54 pm

ayyasamy ram wrote:வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 13 IrxCZrftRMaP1APNxjXu+scan0007

--
வல்லவரையன் வந்தியத்தேவன் சோழப் பேரரசின்
கீழ் "வல்லவரையர் நாடு" என்ற சொல்லப்பட்ட
பிரம்மதேசத்தை சுற்றியிருந்த சிறுநாட்டுக்கு மன்னர்.

முதலாம் இராஜராஜன் மற்றும் முதலாம்
இராஜேந்திரனின் படைகளின் மாதண்ட நாயக்கராக
இருந்தவர். முதலாம் இராஜராஜனின் தமக்கையான
குந்தவை பிராட்டியின் கணவரும் ஆவார்.

இவருக்கு குந்தவைதேவியைத் தவிர
இந்தள தேவி மற்றும் மந்தர கௌரவனார் குந்தாதேவியார்
என்னும் மேலும் இரண்டு மனைவிகள் இருந்தனர்
-
பொன்னியின் செல்வன் - நிறைவுக்குப் பிறகு
வந்த சரித்திரத் தொடர்களில், வந்தியத்தேவன்
பங்கு பெறுகிறார்...
-

வேங்கையின் மைந்தன் -அகிலன்
நந்திபுரத்து நாயகி - விக்கிரமன்
மேற்கோள் செய்த பதிவு: 1100260

விவரங்களுக்கு நன்றி ராம் அண்ணா புன்னகை அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 13 Empty Re: வரலாற்றில் இன்று - அக்டோபர்

Post by ayyasamy ram Thu Oct 30, 2014 6:46 am

அக்டோபர் 30
---------------------

-
1485 - ஏழாம் ஹேன்றி இங்கிலாந்தின் மன்னனாக முடிசூடினான்.
-
1502 - வாஸ்கோ ட காமா இரண்டாவது தடவையாக கோழிக்கோடு வந்தார்.
-
1922 - முசோலினி இத்தாலியின் பிரதமர் ஆனார்.
-
1945 - இந்தியா ஐநாவில் இணைந்தது.
-
1961 - சோவியத் ஒன்றியம் 50 மெகாதொன் அளவுள்ள "சார் பொம்பா"
என்ற அணுகுண்டை வெடிக்க வைத்தது. இதுவே இந்நாள் வரை
வெடிக்கப்பட்ட மிகப்பெரிய அணுகுண்டாகும்.
-
1964 - இலங்கையின் மலையகத் தமிழர்களை நாடு கடத்த
உதவிய சிறிமா-சாஸ்திரி உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.
-
பிறப்புக்கள்[தொகு]
1908 - முத்துராமலிங்கத் தேவர், இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (இ. 1963)
1909 - ஹோமி பாபா, இந்திய அணிவியல், இயற்பியல் ஆராய்ச்சியாளர் (இ. 1966)
-
இறப்புகள்[தொகு]
-
1910 - ஹென்றி டியூனாண்ட், செஞ்சிலுவைச் சங்கத்தை
ஆரம்பித்தவர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1828)
1963 - முத்துராமலிங்கத் தேவர், இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (பி. 1908)

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84145
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 13 Empty Re: வரலாற்றில் இன்று - அக்டோபர்

Post by krishnaamma Thu Oct 30, 2014 9:12 pm

நன்றி ராம் அண்ணா புன்னகை .....நல்ல தொகுப்பு !


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 13 Empty Re: வரலாற்றில் இன்று - அக்டோபர்

Post by விமந்தனி Thu Oct 30, 2014 9:55 pm

வரலாற்றில் இன்று - அக்டோபர்' 30

வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 13 MfhCCriFQVCQhztmAoJN+October-30

1485 - ஏழாம் ஹேன்றி இங்கிலாந்தின் மன்னனாக முடிசூடினான்.

1502 - வாஸ்கோ ட காமா இரண்டாவது தடவையாக கோழிக்கோடு வந்தார்.

1831 - ஐக்கிய அமெரிக்காவில் அடிமை கிளர்ச்சி செய்த நாட் டர்னர் வேர்ஜீனியாவில் கைது செய்யப்பட்டான்.

1905 - ரஷ்ய மன்னன் இரண்டாம் நிக்கலாஸ் ரஷ்யாவின் முதலாவது அரசியலமைப்பை அறிவித்து பிரதிநிதிகள் அவையை நிறுவினான்.

1918 - ஒட்டோமான் பேரரசு கூட்டுப் படைகளுடன் உடன்பாட்டுக்கு வந்ததில் மத்திய கிழக்கில் முதலாம் உலகப் போர் முடிவுக்கு வந்தது.

1920 - அவுஸ்திரேலியக் கம்யூனிஸ்ட் கட்சி சிட்னியில் அமைக்கப்பட்டது.

1922 - முசோலினி இத்தாலியின் பிரதமர் ஆனார்.

1925 - ஜோன் லோகி பயர்ட் பிரித்தானியாவின் முதலாவது தொலைக்காட்சி ஒளிபரப்பியை அமைத்தார்.

1941 - மேற்கு உக்ரைனில் 1,500 யூதர்கள் நாசிகளினால் பெல்செக் வதைமுகாமிற்கு அனுப்பப்பட்டனர்.

1945 - இந்தியா ஐநாவில் இணைந்தது.

1961 - சோவியத் ஒன்றியம் 50 மெகாதொன் அளவுள்ள "சார் பொம்பா" என்ற அணுகுண்டை வெடிக்க வைத்தது. இதுவே இந்நாள் வரை வெடிக்கப்பட்ட மிகப்பெரிய அணுகுண்டாகும்.

1961 - ஜோசப் ஸ்டாலினின் உடல் மாஸ்கோவின் கிரெம்லினில் லெனின் நினைவகத்தில் இருந்து அகற்றுவதற்கு முடிவெடுக்கப்பட்டது.

1964 - இலங்கையின் மலையகத் தமிழர்களை நாடு கடத்த உதவிய சிறிமா-சாஸ்திரி உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.

1970 - வியட்நாமில் இடம்பெற்ற பெரும் வெள்ளம் காரணமாக 293 பேர் கொல்லப்பட்டு 200,000 பேர் வீடுகளை இழந்தனர்.

1972 - சிக்காகோவில் இரண்டு பயணிகள் தொடருந்துகள் மோதியதில் 45 பேர் கொல்லப்பட்டனர்.

1973 - ஐரோப்பாவையும் ஆசியாவையும் இணைக்கும் பொஸ்பரஸ் பாலம் துருக்கியின் இஸ்தான்புல் நகரில் அமைக்கப்பட்டது.

1985 - சலேஞ்சர் விண்ணோடம் தனது கடைசி வெற்றிகரமான பயணத்தை ஆரம்பித்தது.

1991 - மத்திய கிழக்கு அமைதி மாநாடு மாட்ரிட் நகரில் ஆரம்பமானது.

1995 - கனடாவில் இருந்து பிரிந்து செல்ல கியூபெக் மாநிலத்தில் எடுக்கப்பட்ட மக்கள் வாக்கெடுப்பு 50.6% to 49.4% என்ற கணக்கில் தோற்கடிக்கப்பட்டது.

2001 - இலங்கைப் பிரதமர் பேசவிருந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டம் அருகே வெடிகுண்டு வெடித்ததில் 4 பேர் இறந்தனர். 15 பேர் காயமடைந்தனர்.

2006 - ஜெனீவாவில் விடுதலைப் புலிகளிக்கும் இலங்கை அரசுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் முறிவடைந்தன.

2006 - பாகிஸ்தானின் எல்லையோரத்தில் கார் பகுதியில் உள்ள மதரசா மீது இராணுவம் நடத்திய தாக்குதலில் 80 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.


வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 13 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 13 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 13 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 13 Empty Re: வரலாற்றில் இன்று - அக்டோபர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 13 of 14 Previous  1 ... 8 ... 12, 13, 14  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum