புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விளையாட்டு செய்தித் துளிகள் Poll_c10விளையாட்டு செய்தித் துளிகள் Poll_m10விளையாட்டு செய்தித் துளிகள் Poll_c10 
85 Posts - 79%
heezulia
விளையாட்டு செய்தித் துளிகள் Poll_c10விளையாட்டு செய்தித் துளிகள் Poll_m10விளையாட்டு செய்தித் துளிகள் Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
விளையாட்டு செய்தித் துளிகள் Poll_c10விளையாட்டு செய்தித் துளிகள் Poll_m10விளையாட்டு செய்தித் துளிகள் Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
விளையாட்டு செய்தித் துளிகள் Poll_c10விளையாட்டு செய்தித் துளிகள் Poll_m10விளையாட்டு செய்தித் துளிகள் Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விளையாட்டு செய்தித் துளிகள் Poll_c10விளையாட்டு செய்தித் துளிகள் Poll_m10விளையாட்டு செய்தித் துளிகள் Poll_c10 
250 Posts - 77%
heezulia
விளையாட்டு செய்தித் துளிகள் Poll_c10விளையாட்டு செய்தித் துளிகள் Poll_m10விளையாட்டு செய்தித் துளிகள் Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
விளையாட்டு செய்தித் துளிகள் Poll_c10விளையாட்டு செய்தித் துளிகள் Poll_m10விளையாட்டு செய்தித் துளிகள் Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
விளையாட்டு செய்தித் துளிகள் Poll_c10விளையாட்டு செய்தித் துளிகள் Poll_m10விளையாட்டு செய்தித் துளிகள் Poll_c10 
8 Posts - 2%
prajai
விளையாட்டு செய்தித் துளிகள் Poll_c10விளையாட்டு செய்தித் துளிகள் Poll_m10விளையாட்டு செய்தித் துளிகள் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
விளையாட்டு செய்தித் துளிகள் Poll_c10விளையாட்டு செய்தித் துளிகள் Poll_m10விளையாட்டு செய்தித் துளிகள் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
விளையாட்டு செய்தித் துளிகள் Poll_c10விளையாட்டு செய்தித் துளிகள் Poll_m10விளையாட்டு செய்தித் துளிகள் Poll_c10 
3 Posts - 1%
Barushree
விளையாட்டு செய்தித் துளிகள் Poll_c10விளையாட்டு செய்தித் துளிகள் Poll_m10விளையாட்டு செய்தித் துளிகள் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
விளையாட்டு செய்தித் துளிகள் Poll_c10விளையாட்டு செய்தித் துளிகள் Poll_m10விளையாட்டு செய்தித் துளிகள் Poll_c10 
2 Posts - 1%
Tamilmozhi09
விளையாட்டு செய்தித் துளிகள் Poll_c10விளையாட்டு செய்தித் துளிகள் Poll_m10விளையாட்டு செய்தித் துளிகள் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விளையாட்டு செய்தித் துளிகள்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jun 10, 2014 5:05 pm

* 37வது தேசிய ஜூனியர் மகளிர் ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப் தொடர் (19 வயதுக்குட்பட்டோர்) கோவையில் இன்று தொடங்குகிறது. இதில் 500க்கும் அதிகமான வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

* பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநில முதல்வராக இருந்தபோது அவரை சந்தித்த இளம் டென்னிஸ் வீராங்கனை அங்கிதா ரெய்னாவின் கோரிக்கையை ஏற்று அவரது பயணச் செலவுகளை அரசே ஏற்கும் என அறிவித்திருந்தார். ‘இந்த உதவி எனக்கு புதிய உத்வேகத்தை கொடுத்தது. ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் நம்பர் 1 வீராங்கனையாக உள்ள நான் விரைவில் உலக தரவரிசையிலும் குற்றிப்பிடத்தக்க இடத்தை பிடிக்க முடியும் என நம்புகிறேன்’ என்று அங்கிதா நன்றி தெரிவித்துள்ளார்.

* தேசிய அளவில் கிராமப்புற விளையாட்டு மேம்பாட்டுக்காக புதிய கொள்கைகள் வகுக்கப்பட்டு, திறமையான இளம் வீரர், வீராங்கனைகளைக் கண்டறிவதற்கான தேர்வுப் போட்டிகள் நடத்தப்படும் என்று விளையாட்டு அமைச்சகம் உறுதி அளித்துள்ளது.

* அயர்லாந்து அணியுடன் இன்று நடக்க உள்ள உலக கோப்பை கால்பந்து பயிற்சி ஆட்டத்தில் களமிறங்க, நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தயாராகி உள்ளது போர்ச்சுகல் அணிக்கு புதிய உற்சாகத்தை அளித்துள்ளது.

* பிரெசில் நாட்டில் நாளை தொடங்க உள்ள உலக கோப்பை கால்பந்து போட்டியின் தொடக்க விழாவில், இடுப்புக்கு கீழே செயலற்ற நிலையில் உள்ள மாற்றுத் திறனாளி ஒருவர் ‘அயர்ன் மேன்’ போன்ற இரும்புக் கவச உடை அணிந்தபடி கால்பந்தை உதைத்து போட்டியை தொடங்கி வைக்க உள்ளதாக பிபா தெரிவித்துள்ளது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jun 10, 2014 5:05 pm

* உலக கோப்பை மகளிர் ஹாக்கி போட்டித் தொடரின் அரை இறுதியில் விளையாட, நெதர்லாந்து அணி தகுதி பெற்றுள்ளது. கியோசெரா ஸ்டேடியத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடந்த லீக் ஆட்டத்தில் அபாரமாக விளையாடிய அந்த அணி 2-0 என்ற கோல் கணக்கில் வென்று அரை இறுதி வாய்ப்பை உறுதி செய்தது.

* உலக கோப்பை கால்பந்து போட்டித் தொடருக்கான பயிற்சி ஆட்டத்தில் ஸ்பெயின் அணி எல் சால்வடார் அணியை நேற்று வீழ்த்தியது. மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டியில் ஸ்பெயின் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. அந்த அணியின் நட்சத்திர வீரர் டேவிட் வில்லா 2 கோல் அடித்து அசத்தினார்.

* மான்ட்ரீல் நகரில் நடக்கும் கனடா கிராண்ட் பிரீ பார்முலா 1 கார் பந்தயத்துக்கான தகுதிச் சுற்றில், மெர்சிடிஸ் அணி வீரர் நிகோ ராஸ்பெர்க் முதலிடம் பிடித்தார். சக வீரர் லூயிஸ் ஹாமில்டன் 2வது இடமும், நடப்பு சாம்பியன் செபாஸ்டியன் வெட்டல் (ரெட் புல் ரேசிங்) 3வது இடமும் பிடித்தனர். நட்சத்திர வீரர் பெர்னாண்டோ அலான்சோ (பெராரி) 7வதாக வந்தார்.

* உலக கோப்பை ஆண்கள் ஹாக்கி தொடரில், ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் இன்று பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை சந்திக்கிறது. இந்த போட்டியில் இந்திய வீரர்கள் தன்னம்பிக்கையுடன் விளையாடி திறமையை நிரூபிக்க வேண்டும் என்று பயிற்சியாளர் டெர்ரி வால்ஷ் வலியுறுத்தி உள்ளார். முதல் 2 லீக் ஆட்டங்களிலும் கடைசி நிமிடத்தில் கோல் விட்டுக் கொடுத்ததால், இந்திய அணி அரை இறுதி வாய்ப்பை பறிகொடுத்தது குறிப்பிடத்தக்கது.

* ‘சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ஐசிசி) இணையாக மற்றொரு அமைப்பை உருவாக்குவோம் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அச்சுறுத்தியதை தொடர்ந்தே, ஐசிசி அமைப்பில் புதிய விதிமுறைகளை அமல்படுத்துவதற்கு ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியங்கள் ஒப்புக் கொண்டன’ என்று பிசிசிஐ செயலர் சஞ்சய் பட்டேல் தெரிவித்துள்ளார்.

* பிரெஞ்ச் ஓபன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் நம்பர் 1 வீரர் ரபேல் நடாலிடம் எதிர்ப்பின்றி சரணடைந்த இங்கிலாந்து வீரர் ஆண்டி மர்ரே, தனது புதிய பயிற்சியாளராக முன்னாள் நட்சத்திர வீராங்கனை அமேலி மவுரெஸ்மோவை (பிரான்ஸ்) நியமித்துள்ளார்.




விளையாட்டு செய்தித் துளிகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jun 10, 2014 5:06 pm

மகளிர் இரட்டையர் பிரிவு டென்னிஸ் தரவரிசையில், இந்திய வீராங்கனை சானியா மிர்சா முதல் முறையாக 6வது இடத்துக்கு முன்னேறி உள்ளார்.ஜிம்பாப்வே வீராங்கனை காரா பிளாக்குடன் இணைந்து விளையாடி வரும் சானியா, பிரெஞ்ச் ஓபன் கால் இறுதியில் நம்பர் 1 ஜோடியான ஷுவாய் பெங் - சூ வெய் ஸை ஜோடியிடம் போராடி தோற்றார். பிரெஞ்ச் ஓபன் நிறைவடைந்த நிலையில், நேற்று வெளியான தரவரிசைப் பட்டியலில் அவர் முதல் முறையாக 6வது இடத்தை பிடித்துள்ளார்.ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் அங்கிதா ரெய்னா 28 இடம் முன்னேறி 262வது இடத்தை பிடித்தார். ஆண்கள் ஒற்றையர் தரவரிசையில் சோம்தேவ் தேவ்வர்மன் 23 இடம் பின்தங்கி 119வது இடத்துக்கு தள்ளப்பட்டார். இரட்டையர் ரேங்கிங்கில் லியாண்டர் பயஸ் 13வது இடத்திலும், ரோகன் போபண்ணா 17வது இடத்திலும் உள்ளனர்.



விளையாட்டு செய்தித் துளிகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 13, 2014 5:28 pm

*அர்ஜென்டினா அணி வீரர்கள் பெலோ ஹரிசான்டே நகரில் நேற்று தீவிர பயிற்சி மேற்கொண்டிருந்தபோது, இருபதுக்கும் மேற்பட்ட ரசிகர்கள் மைதானத்துக்குள் ஊடுருவி நட்சத்திர வீரர் மெஸ்ஸியிடம் ஆட்டோகிராப் வாங்க முண்டியடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தை தொடர்ந்து வீரர்களுக்கான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

*போர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ள உலகில் அதிகம் சம்பாதிக்கும் டாப் 100 விளையாட்டு வீரர்கள் பட்டியலில், இந்தியாவில் இருந்து கிரிக்கெட் அணி கேப்டன் மகேந்திர சிங் டோனி மட்டுமே இடம் பெற்றுள்ளார்.

*மகளிர் ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டி 2016ம் ஆண்டு சிலி நாட்டில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

*ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக் பாஷ் டி20 தொடரில், சிட்னி தண்டர் அணிக்காக விளையாட தென் ஆப்ரிக்க ஆல் ரவுண்டர் ஜாக் காலிஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

*‘உலக கோப்பை போட்டியில் நிறவெறி தலைதூக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். திறமையை வெளிப்படுத்துவதில் மட்டுமே வீரர்கள் கவனம் செலுத்த வேண்டும்’ என்று போப் பிரான்சிஸ் வலியுறுத்தி உள்ளார்.

*ஹாங்காங்கில் நடைபெறும் ஆசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடரின் ஆண்கள் பிரிவு கால் இறுதியில் விளையாட இந்திய அணி தகுதி பெற்றுள்ளது.



விளையாட்டு செய்தித் துளிகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Jun 13, 2014 10:18 pm

விளையாட்டு செய்தித் துளிகள் 1571444738 விளையாட்டு செய்தித் துளிகள் 1571444738 விளையாட்டு செய்தித் துளிகள் 1571444738 



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 16, 2014 2:13 am

* இந்தியா வங்கதேசம் அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி, மிர்பூர் தேசிய ஸ்டேடியத்தில் இன்று பிற்பகல் 12.30க்கு தொடங்குகிறது. வங்கதேச அணி கடைசியாக விளையாடிய 5 ஒருநாள் போட்டிகளிலும் தோற்றுள்ளதால், ரெய்னா தலைமையிலான இந்திய அணியை வீழ்த்தும் முனைப்புடன் களமிறங்குகிறது. இரு அணிகளும் மோதியுள்ள 25 ஒருநாள் போட்டிகளில் இந்தியா 223 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

* இங்கிலாந்து அணியுடனான முதல் டெஸ்டில் இலங்கை அணி அனுபவ வீரர் சங்கக்கரா பொறுப்புடன் விளையாடி சதம் அடித்தார். லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் அவர் முதல் முறையாக சதம் விளாசி உள்ளார். இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 575 ரன் குவித்து டிக்ளேர் செய்த நிலையில், இலங்கை அணியும் சிறப்பாக விளையாடி பதிலடி கொடுத்துள்ளது. அந்த அணி 92 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 309 ரன் எடுத்திருந்தது. சங்கக்கரா 121 ரன், கேப்டன் ஏஞ்சலோ மேத்யூஸ் 14 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

* நியூசிலாந்து அணியுடன் போர்ட் ஆப் ஸ்பெயின் மைதானத்தில் நாளை தொடங்க உள்ள 2வது டெஸ்ட் போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆல் ரவுண்டர் மார்லன் சாமுவேல்ஸ், தொடக்க வீரர் கெய்ரன் பாவெல் இருவரும் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதிலாக பிளாக்வுட், லியான் ஜான்சன் சேர்க்கப்பட்டுள்ளனர்.



விளையாட்டு செய்தித் துளிகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jun 17, 2014 12:39 am

* பிபா உலக கோப்பை கால்பந்து போட்டியில் விளையாடும் வீரர்களில் தங்களின் அபிமான வீரர் யார் என இந்திய பெண் ரசிகர்களிடம் நடத்தப்பட்ட ஒரு கருத்துக் கணிப்பில், அர்ஜென்டினா அணி கேப்டன் லயனல் மெஸ்ஸி முதலிடம் பிடித்துள்ளார்.

* தொடக்க லீக் ஆட்டத்தில் 1-5 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்திடம் மண்ணைக் கவ்வினாலும், நடப்பு சாம்பியன் ஸ்பெயின் அணி இந்த படுதோல்வியில் இருந்து மீண்டு நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறும் என்று அந்த அணியின் செர்ஜியோ ராமோஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

* கால்பந்து களத்தின் உள்ளே நிகழும் நிகழ்வுகளை, குறைந்த அலைவரிசை கொண்ட காந்தப் புலங்களில் முப்பரிமாணத்தில் படம்பிடித்து உடனுக்குடன் காட்சிகளை ஆய்வு செய்யும் வகையில் நவீன தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக கோல் அடிக்கப்பட்டதா இல்லையா என்பதை நடுவர்கள் உறுதி செய்துகொள்ள முடியும்.



விளையாட்டு செய்தித் துளிகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 19, 2014 1:30 am

* துபாயில் நடக்கும் உலக விரைவு செஸ் போட்டியின் 5வது சுற்று முடிவில் இந்திய வீரரும் 5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்றவருமான விஸ்வநாதன் ஆனந்த் 9வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.

* இந்திய அணி முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர், மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் இருவரும் துபாயில் உள்ள எல்ஸ் கோல்ப் கிளப்பின் ஆயுள்கால உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

* மலேசிய அணியுடன் நடந்த கடைசி ஹாக்கி டெஸ்டில் 5-2 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்ற இந்திய மகளிர் அணி 6-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தியது.

* இங்கிலாந்தில் நடைபெற்ற ஒரு கவுன்டி கிரிக்கெட் போட்டியின்போது, பெவிலியனில் வைக்கப்பட்டிருந்த ஒரு டஜன் ஐ-போன்களை ஒருவன் திருடிச் சென்றான். இதைப் பார்த்த வீரர்கள், விளையாட்டை நிறுத்திவிட்டு திருடனை விரட்டிச் சென்று தங்களின் விலை உயர்ந்த ஐ-போன்களை மீட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.




விளையாட்டு செய்தித் துளிகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 23, 2014 3:47 am

* டோனி தலைமையிலான இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக நேற்று இங்கிலாந்து பயணமானது. முதல் டெஸ்ட் டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் ஜூலை 9ம் தேதி தொடங்குகிறது.

* உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டித் தொடர் லண்டனில் இன்று தொடங்குகிறது.

*ஆஸ்திரியன் கிராண்ட் பிரீ பார்முலா 1 கார் பந்தயத்தில் மெர்சிடிஸ் அணி வீரர் நிகோ ராஸ்பெர்க் சாம்பியன் பட்டம் வென்றார். சக மெர்சிடிஸ் வீரர் லூயிஸ் ஹாமில்டன் 2வது இடம் பிடித்தார்.



விளையாட்டு செய்தித் துளிகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 23, 2014 3:49 am


18-வது ஆசிய விளையாட்டு போட்டியை (2019-ம் ஆண்டு) நடத்தும் உரிமையை வியட்நாம் தலைநகர் ஹனோய் பெற்றிருந்தது. இரு மாதங்களுக்கு முன்பு இந்த போட்டியை தங்களால் நடத்த இயலாது என்று கூறி ஹனோய் பின்வாங்கியது.

இந்த நிலையில் இந்த போட்டியை இந்தியா நடத்த ஆர்வம் காட்டி வருகிறது.2019-ம் ஆண்டு ஆசிய விளையாட்டை டெல்லியில் நடத்த விரும்புவதாகவும், உரிமம் கோருவதற்கான விண்ணப்பத்தை அதிகாரப்பூர்வமாக சமர்ப்பிக்க இருப்பதாகவும் இந்திய ஒலிம்பிக் சங்க பொதுச் செயலாளர் ராஜீவ் மேத்தா, ஆசிய ஒலிம்பிக் சங்க தலைவர் ஷேக் அகமது அல்-பஹாத் அல்-சபாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்



விளையாட்டு செய்தித் துளிகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக